2ஜி ஊழல் விசாரணையின் அடுத்தகட்டமாக தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக ராஜ்ய சபா உறுப்பினருமான கனிமொழியிடம் சிபிஐ விசாரணை நடத்த இருப்பதாக தெரிய வந்துள்ளது. டிபி ரியல்டி நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவிக்கு சுமார் 240 கோடி பணம் சென்றது குறித்து கலைஞர் டிவின் பங்குதாரர் என்ற முறையில் கனிமொழியிடமும், கலைஞர் டிவியின் தலைமை அதிகாரி சரத் குமாரிடமும் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்து கேள்விகளை அனுப்பியுள்ளது.
2ஜி ஊழல் விவகாரத்தில் நாட்டின் பெரிய நிறுவனங்களான டாடா, ரிலையன்ஸ் போன்றவை விசாரணைக்குள்ளாகியிருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன் ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானியிடம் சிபிஐ விசாரணை செய்தது. விரைவில் ரத்தன் டாடாவிடமும் விசாரணை செய்யப்படலாம் என்ற பேச்சு இருக்கும் நிலையில், கனிமொழியிடம் விசாரிக்க இருப்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல என சிபிஐ கருதுகிறது.
Posted by
Unknown
Labels:
ஊழல்
0 comments:
Post a Comment