மதுவுக்கு அடிமையோ இல்லையோ, கோலாவுக்கு அடிமை என்கிறவர்கள் பலருண்டு.

கொகா கொலாவின் தனித்தன்மை வாய்ந்த ருசி எந்த சூழ்நிலையிலும் சுவைத்து பருகும் மனநிலையை மக்களிடம் கொண்டுவந்துவிட்டது. பொதுவாக நீங்களும் கொகா கோலாவுக்கு அடிமையாக இருக்கலாம்.

இதன் ருசியை உருவாக்கும் மதிநுட்பம், கொகாகோலா நிறுவன ஊழியர்களுக்கு மாத்திரமே தெரிந்த இரகசியம்! ஆனால், இப்போது This American Life's எனும் சஞ்சிகை, கொகாகோலாவில் சேர்க்கப்படும் இராசயனங்களுக்கான துல்லியமான கலவைவிகிதம் எழுதப்பட்ட புத்தக பக்கம் ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1979ம் ஆண்டு Atlana Journal - Constitution எனும் புத்தகத்தில் இக் கலவைவிகிதம் எழுதப்பட்டுள்ளது. இதை அப்படியே படம்பிடித்திருந்த த அமெரிகன் லைஃப் இப்புகைப்படத்தை வெளியாக்கியதிலிருந்து கொகா கோலாவை இனி உங்கள் வீடுகளிலும் நீங்களே செய்யலாம் எனும் தொணியில் ஊடகங்கள் போட்டி போட்டு எழுத தொடங்கிவிட்டன.

ஆனால், கொகா கோலாவின் பசிபிக் மக்கள் தொடர்பாளர் சுசிஸே க்ரம்டொன், இந்த செய்தியை முற்றாக நிராகரிக்கிறார்.
கொகா கோலாவின் இராசயனக்கலவை விகிதத்தில் ஒரு இரகசியமும் இல்லை. கொகா கோலாவில் அடங்கிய பொருட்கள் என்னென்ன என்பதை நீங்கள் வாங்கும் எமது உற்பத்தி பொருட்களின் லேபல்களிலேயே பார்க்கலாம். சும்மா, இதற்காக நேரம் செலவிடாதீர்கள் என்கிறார்.

எனினும் எந்தெந்த விகிதத்தில் கலவை துல்லியமாக கலக்கப்படுகிறது என்பதற்கான விபரங்கள், இரகசிய இடமொன்றில் பாதுகாக்கப்படுகிறது. கோலா கடந்து வந்த பாதை பற்றிய சுவடுகளில் அதற்கு ஒரு தனியிடம் உண்டு என இன்னமும் பொதுவான கருத்துக்கள் உலவுகின்றன.

கொகா கோலா தனது 125 வது ஆண்டு பூர்த்தியை இவ்வருடம் கொண்டாடுகிறது. 1886ம் ஆண்டு, ஜோன் பெம்பெர்டொன் எனும் மருத்துவ இசாயனவியலாளரால் கொகா கோலாவுக்கான வித்தியாசமான ருசி முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

இன்று 200க்கு மேற்பட்ட நாடுகளில் கொகா கோலா அமோக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சரி இதெல்லாம் இருக்கட்டும்.. அந்த இரகசிய கலவை தான் என்ன? என்கிறீர்களா இதோ.. இது தான் 'Merchandise 7x' என இது அழைக்கப்படுகிறது

The secret recipe

Fluid extract of Coca 3 drams USP
Citric acid 3 oz
Caffeine 1oz
Sugar 30 (it is unclear from the markings what quantity is required)
Water 2.5 gal
Lime juice 2 pints 1 qrt
Vanilla 1oz
Caramel 1.5oz or more to colour

7X flavour (use 2oz of flavour to 5 gals syrup):
Alcohol 8oz
Orange oil 20 drops
Lemon oil 30 drops
Nutmeg oil 10 drops
Coriander 5 drops
Neroli 10 drops
Cinnamon 10 drops
Posted by Unknown Labels:

0 comments:

Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.