சி.பி.ஐ உண்மையில் உதவுகிறதா, ரெய்ட் நடத்துகிறதா? எங்கள் கணக்குகளை சோதனையிடலாம் என்று கலைஞர் டிவி சொன்னவுடன், சி.பி.ஐ. ரெய்ட் நடத்துகிறதாம்! அதாவது “வாங்க, வாங்க”, என்று இவர்கள் அழைத்ததும், வந்து விட்டார்களாம்! உண்மையில் யெய்ட் நடத்துவதாக இருந்தால், இப்ப்டி நேரம், காலம் பார்த்தா ரெய்ட் நடத்துவார்கள்? ஏதோ சொல்லிவிட்டு வந்தது போல இருக்கிறது. இல்லை, அரசியல் ரீதியில், “பார், உனது த்லைமை அலுவலகத்திலேயே நுழைந்து விட்டேன், என்னை ஒன்றும் செய்ய முடியாது”, என்று சோனியா கருணாநிதியை மிரட்டிப் பார்க்கிறாரோ என்னமோ?
கணக்குகளை சோதனையிடுவதற்கும், சரிபார்ப்பதற்கும் வித்தியாசம் இல்லையா என்ன?: இதில் தமிழில் கணக்குகளை சரிபார்க்கலாம்[1] என்று வேறு போட்டிருக்கிறார்கள்! கணக்குகளை சோதனையிடுவதற்கும், சரிபார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. சர்பார்க்கும் வேலை சி.பி.ஐக்குக் கிடையாது, அதை அந்த கமெனியின் ஆடிட்டர்கள் செய்வார்கள். இருப்பினும் காங்கிரஸ் பீரோ ஆஃப் இன்வெஷ்டிகேஸன் என்ற நிலையில், அவ்வாறு, கூட்டணிக் கட்சிக்கு உதவி செய்திருக்கலாம்[2]. அவ்வாறே, கிண்டலாக, இந்த ஊடகங்கள் அறிவித்திருக்கலாம்! சரத்குமார், வி. கே. சாக்ஸேனா, ஜெயின் முதலியோரிடம் விசாரணை நடத்தப் பட்டது. குற்றஞ்சாட்டப்படுவதற்கு சாதகமாக உள்ள ஆவணங்களும் பரிமுதல் செய்யப்பட்டதாக ஊடகங்கள் அறிவிக்கின்றன. காலை ஆறு மணிக்கு இந்த யெய்ட் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது[3].
சென்னைவாசிகளுக்கேத் தெரியாத ரெய்ட்! கனிமொழியை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, அவ்வாறு தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினாராம்[4]. பாவம் சென்னைவாசிகளுக்கும் தெரியாது தான்! அவ்வழியாக சென்று கொண்டிருந்தவர்கள் கூட கண்டு கொள்ளவில்லை. வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அலுவலகங்களுக்கு செல்பவர்களும் சென்று கொண்டிருந்தனர். பிரஸ் என்று இரண்டு வண்டிகள் அண்ணா அறிவாலயம் அர்கில் நிற்பதையும், போலீஸார் வாசலில் நிற்பதையும் கூட யாரும் வித்தியாசமாக எடுத்துக் கொள்ளவில்லை!
கனிமொழி மற்ற பங்குதாரர்களிடம் விசாராணை நடக்குமா? மற்ற கம்பெனிகள் விஷயத்தில், அந்தந்த கம்பெனிகளின் மானேஜிங் டைரக்டர் வரவழைக்கப் பட்டு, விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. அதே போல கனிமொழி மற்ற கலைஞர் டிவி பங்குதாரர்களிடம் விசாராணை நடக்குமா என்று கேள்விக் கணை எழுப்பப்பட்டுள்ளாது.
கலைஞர் டிவியில் ரெய்ட் நடக்கிறதாம்! 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சி அலுவலகங்களில் மத்திய புலனாய்வு அமைப்பினர் (சிபிஐ) இன்று 18-02-2011 அதிரடி சோதனை நடத்தியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது[5]. நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2ஜி ஊழலில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகம் கூறிவந்த நிலையில் அத்தொலைக்காட்சி அலுவலகங்களில் இந்த திடீர் சோதனை நடைபெற்றுள்ளது. கலைஞர் தொலைக்காட்சியின் குறிப்பிட்ட நிதிப் பரிவர்த்தனைகள் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
எங்கள் கணக்குகளை சிபிஐ சரி பார்க்க ஆட்சேபனை இல்லை-கலைஞர் தொலைக்காட்சி[6]: சிபிஐக்கோ, வருமான வரித்துறைக்கோ எந்தவிதமான சந்தேகமும் இருக்குமானால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆவணங்களையும், கணக்குகளையும் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதிலே எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று அந்தத் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10-2-2011 அன்று நான் விடுத்த அறிக்கையில், 2007- 2008ம் ஆண்டில் மத்திய தொலை தொடர்பு துறையால் ஒதுக்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை விவகாரத்திற்கும், 2009ம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் சினியூக் நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட கடன் பரிவர்த்தனைக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.
கடனாக பாவிக்கப் பட்டுத் திருப்பிக் கொடுத்தாகி விட்டது: சினியூக் நிறுவனத்திடம் இருந்து கடனாகப் பெற்ற ரூ.200 கோடியை கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தினால் திருப்பித்தரப் பட்டுவிட்டது. அந்தத் தொகைக்கான வட்டியாக ரூ.31 கோடி கொடுக்கப்பட்டது என்றும், அந்த பரிவர்த்தனை முழுவதும் வருமான வரித் துறைக்கு தெரியப்படுத்தப்பட்டு, அதற்கான வரியும் முறையாக செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தேன். இதற்கு பிறகும் இந்த கடன் பரிவர்த்தனை குறித்து மத்திய புலனாய்வுத்துறை நீதி மன்றத்திலே குறிப்பிட்டுள்ளது. எனவே மத்திய புலனாய்வுத் துறைக்கோ, வருமான வரித்துறைக்கோ எந்தவிதமான சந்தேகமும் இருக்குமானால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆவணங்களையும், கணக்குகளையும் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதிலே எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று கூறியுள்ளார்.
Posted by
Unknown
Labels:
ஊழல்
0 comments:
Post a Comment