சூரியன் மேற்கில் உதிக்கும் சாத்தியகூறுகள் இருப்பதாக நாஸா விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர்
NASA Confirms Possibility of Sun Rising From the West
இஸ்லாம் மார்க்கம் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட மார்க்கம் என்று முஸ்லிமல்லாதவர்கள் சிலர் கருதுகிறார்கள்.ஆனால், இஸ்லாம் மார்க்கம் அகில உலகையும் படைத்த இறைவனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வழியாக வழங்கப்பட்டது என்று முஸ்லிம்கள் நம்பி வருகின்றனர்.
முஸ்லிம்கள் கண்மூடித்தனமாக இவ்வாறு நம்புவதில்லை. தக்க காரணங்களின் அடிப்படையில் தான் இஸ்லாம் இறைவனால் வழங்கப்பட்ட மார்க்கம் என்று நம்புகின்றனர்.
இந்த மார்க்கத்தை நிச்சயம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சுயமாகக் கற்பனை செய்து உருவாக்கியிருக்க முடியாது என்பதற்கு திருக்குர்ஆன் முதன்மையான சான்றாக உள்ளது.
அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிர்காலத்தில் நிகழவுள்ள பல நிகழ்ச்சிகளை முன்னரே அறிவித்துள்ளனர். அவர்கள் அறிவித்தவாறு அவை அப்படியே நிறைவேறி வருவதை சிந்திப்பவர்கள் - இதை இறைவன் புறத்திலிருந்து தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்திருக்க வேண்டும் என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்வார்கள்.
நாம் வாழும் இப்பூமி உற்பட முழுப் பிரபஞ்சமுமே அழிந்து மீண்டும் ஒரு மிக மிக மிகப் பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை (மஹ்ஷர்) அல்லாஹ் உருவாக்கி மனிதனை வாழவைப்பான் என்பது இஸ்லாத்தின் கொள்கை.
இப்பிரபஞ்ம் அழிவது எப்போது என்பது திட்டவட்டமாகத் தெரியாவிடினும் அது நடைபெறுவதற்கு முன்பு சில அடையாளங்கள் நிகழும் என்பதனையும் அவை எவை என்பதனையும் இஸ்லாம் குறிப்பிட்டுள்ளது. அதில் மிக முக்கியமானவொன்றுதான் கிழக்கிலிருந்து உதித்துவரும் சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதாகும்.
கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கில் உதிக்கும் வரை யுக முடிவு நாள் வராது. அவ்வாறு உதிக்கும் போது யாரேனும் நம்பிக்கை கொண்டால் அந்த நம்பிக்கை பயன் தராது. அதைத் தான் இவ்வசனத்தில் (6:158) அல்லாஹ் கூறுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) விளக்கியுள்ளனர். (புகாரி 6506, 6535, 7121)
சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதைச் சாதாரணமான ஒன்றாகக் கருதி விடக் கூடாது. அதனால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவையாக இருக்கும்.
பூமி சூரியனைச் சுற்றி வருவதால் இரவு பகல் ஏற்படுகிறது என்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். இத்தகைய பூமியில் கிழக்கே உதித்து வரும் சூரியன் மேற்கே உதிக்க வேண்டுமானால் பூமி தன் சுழற்சியை திடீரென நிறுத்தி உடனே எதிர்த்திசையில் சுழல வேண்டும். அப்போது தான் மேற்கில் சூரியன் உதிக்க முடியும்.
சூரியனிலிருந்து பூமி 14,96,80,000 km தூரத்தில் அமைந்துள்ளது.அத்தோடு பூமி செக்கனுக்கு 18 மைல் வேகத்தில்சூரியனைச் சுற்றிவருகின்றது. அத்தோடு அது தன்னைத்தானேயும் கிழக்கு மேற்காகச் சுற்றிவருகின்றது. இதன்போதே சூரியன் கிழக்கில் உதிப்பதாக நாம் காண்கின்றோம்.
மணிக்கு 80 km வேகத்தில் பிரயாணித்துக்கொண்டிருக்கும் ஒரு பேருந்து ஒரேயடியாக நிறுத்தப்பட்டு மீண்டும் அதேவேகத்தில் பின்னோக்கிச் சென்றால் அதனுள் இருக்கும் மனிதர்களின் நிலை என்னவாக இருக்கும். இதேபோன்றுதான் இப்பூமியும் தற்போது சுழலும் அதுவேகத்தில் மேற்கு கிழக்காகச் சுழன்றாலும். இதனால் பூமியின் தட்டுகள் குலுங்கி,கட்டிடங்கள் தகர்ந்து விழும். மலைகள் இடம்பெயர்ந்து, பூகம்பங்கள் மற்றும் சுனாமி தோன்றி பலத்த சேதங்கள்தான் விளையும்.
சமீப நாஸா ஆய்வுகள் இவ்வாறு கூறுகின்றன. அனைத்துக் கிரகங்களிலும் கிழக்கில் தோன்றி மேற்கில் மறையும் சூரியன் வெள்ளிக் கிரகத்தில் மட்டும் மேற்கில் தோன்றி கிழக்கில் மறைவதாக நாஸா விஞ்ஞனிகள் கூறுகின்றர்.
நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம் (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா? குர்ஆன் 41:53.
சிந்தனையாளர்களும், அறிஞர்களும் திருக்குர்ஆனை ஆழமாகச் சிந்தித்தால் இன்னும் எண்ணற்ற அதிசயங்களைத் திருக்குர்ஆனில் நிச்சயம் காண்பார். திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அறிவியல் உண்மைகளும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறும் வசனங்களும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புக்களும் இஸ்லாம் இறைவன் புறத்திலிருந்து அருளப்பட்ட மார்க்கம் என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
References:
http://www.youtube.com/watch?v=_cE32VjiTXI
http://www.siasat.com/english/news/nasa-confirms-possibility-sun-rising-west
http://onlinepj.com/books/varu-mun-uraitha-islam/
0 comments:
Post a Comment