யார் இந்த நித்தியானந்தா?
இணையங்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு
கதவைத் திற காற்று வரும் என்ற தலைப்பில் பிரபல ஆன்மிக தலைவர் சுவாமி பரமஹம்ச நித்யானந்தாவின் போதனைகள் குறுகிய காலத்தில் பிரபலமானவை. இவரை நிஜ சாமியார் என நினைத்து பல தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் இவரது உரைகள் மற்றும் கட்டுரைகளை வெளியிட்டு வந்தன.வெறும் 32 வயதே ஆகும் நித்தியானந்தாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். இப்போது தனது செயல் மூலம் அவரை நம்பிய மக்களையும் ஊடகங்களையும் நித்யானந்தா அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.">தமிழகத்தின் திருவண்ணாமலையில் பிறந்த நித்தியானந்தாவுக்கு கர்நாடகத்திலும், தமிழகத்திலும் ஆசிரமங்கள் உள்ளன. இவரின் குடும்பம் ஒரு சாதாரண விவசாய குடும்பம்.இவரின் அப்பா ஒரு கூலி தொழிலாளி. பன்னிரெண்டாம் வகுப்பு வரை இவர் அரசு பள்ளியிலையே படித்து உள்ளார்.அதன் பின் அருணை பொறியியல் கல்லூரியில் சேர்ந்து உள்ளார்.ஆரம்ப காலங்களில் இவருக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவராகவே சுற்றி உள்ளார்.கல்லூரியில் சேர்ந்த முதல் இவரை கல்லூரியில் பார்ப்பதை விட ஆலயங்களில் மட்டுமே அதிகம் பார்க்க முடிந்ததாம் என்பது மேலதிக தகவல்.
மாநிலத்தில் இவருக்கு ஏராளமான பக்தர்கள் உண்டு. பெங்களூரில் மைசூர் சாலையில் உள்ள பிடுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் நித்யானந்த தியான பீடம் என்ற பிரபலமான ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இது தான் தலைமையகமும் கூட.
உலகம் முழுவதும் 33 நாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளை துவக்கி ஆன்மிக பணிகள் ஆற்றி வருவதாக மக்கள் மத்தியில் அறியப்பட்டவர். பல தரப்பினர் மத்தியிலும் பிரபலமான இவர் ஆங்கிலம் மற்றும் தமிழில் வசீகரமாக பேசுவதிலும், எழுதுவதிலும் வல்லவர்.
இந்நிலையில் நித்யானந்தா தமிழ் நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் காட்சியை பிரபல தமிழ் தொலைக்காட்சி சேனல் " சன் டிவி " ஒளிபரப்பியதை தொடர்ந்து பொது மக்களுக்கு அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சுவாமி பரமஹம்ச நித்யானந்தா தியான பீடம் என்ற பெயரில் சாமியார் ஏற்படுத்தியுள்ள ஆசிரம கட்டமைப்பின் தலைமையகம் பெங்களூருக்கு வெளியே மைசூர் சாலையில் அமைந்துள்ளது. இதன் கிளைகள் இந்தியாவின் அனைத்து பெருநகரங்களிலும் செயல்படுகின்றன.
33 நாடுகளில் 1200 மையங்களுடன் இயங்கும் அவரது தியானபீடங்களில் ஏராளமானவர்கள் தங்கி பயிற்சி பெறுகின்றனர். கல்லூரிகளில் பல பாடத் திட்டங்கள் இருப்பது போல நித்யானந்தா தியான பீடங்களிலும் பல தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கென கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது.
தமிழகத்திலும் பிரபலமானவர் நித்யானந்த சுவாமி. இவர் பிறந்த ஊர் திருவண்ணாமலைதான். பிறந்த பத்தாவது நாளில் அவருக்கு ஜாதகம் கணிக்க அழைக்கப்பட்ட ஜோதிடர், குழந்தையின் கிரகசாரங்களை பார்த்து அதிசயித்து, பின்னாளில் அவர் ராஜ சன்னியாசியாக திகழ்வார் என்று கூறினாராம்.
1978ம் ஆண்டு பிறந்த நித்யானந்தாவின் உண்மையான பெயர் ராஜசேகரன். ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி ஆகியோரை மானசீக குருவாக கொண்டு வளர்ந்த ராஜசேகரன், 12 வயதிலேயே குண்டலினி சக்தியை எழுப்பும் ஆற்றல் பெற்றதாக அவரது வாழ்க்கை வரலாறு சொல்கிறது. இமயமலையில் உள்ள ஒரு பெரிய சாமியார் அவருக்கு பரமஹம்ச நித்யானந்தா என பெயரிட்டதாக தியானபீடத்தின் இணையதளம் கூறுகிறது.
பெயர் மாற்றத்துக்கு பின்னர் ஈரோட்டில் காவிரி நதிக்கரையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவந்த அவர், அங்கிருந்து பெங்களூரு சென்று ஆசிரமம் நிறுவினார். பிரம்மச்சரிய விரதத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்று மக்களுக்கு போதித்து வரும் நித்யானந்தா ஒரு தமிழ் நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகள் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த இடம் வீடா அல்லது ஆசிரமத்தின் ஓர் அறையா என்பது தெரியவில்லை. நடிகையும் சாமியாரும் படுசகஜமாக பேசிக் கொண்டு உல்லாசத்தில் ஈடுபடுவதை பார்க்கும்போது இது நீண்டகால பழக்கம் என்று தெரிகிறது. ஒருநாள் புடவையில் வரும் நடிகை அடுத்தநாள் சுடிதாரில் வருகிறார். கட்டிலில் சாமியாரும் அவரும் நெருக்கமாக இருக்கிறார்கள்.
புனிதமான காவி உடை தரித்து மக்களுக்கு அருளாசி வழங்கியும் பத்திரிகைகளில் தொடர் எழுதியும் நல்வழி போதிக்கும் சாமியாரின் உல்லாச லீலைகள், இத்தனை காலமாக அவரை நம்பிய பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சுவாமி-நித்யானந்தா-ஆசிரமம்-சூறை
சுவாமி நித்யானந்தா ஒரு நடிகையுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட காட்சிகளை தனியார் தொலைக்காட்சியில் பார்த்த பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து தமிழகம், புதுச்சேரி முழுவதும் உள்ள அவரது ஆசிரமத்தை அடித்து நொறுக்கினர்.
திருவண்ணாமலையில் நித்யானந்தர் ஆசிரமம் முன் மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சிவபாபு தலைமையில் அக்கட்சியினர் திடீரென நித்யானந்தருக்கு எதிராகக் குரல் எழுப்பினர். அவரது பேனரையும் சிலர் கிழிக்க முயன்றனர்.
இதற்கிடையில் நித்யானந்தா ஆசிரமத்துக்குள் அத்துமீறி நுழைந்த இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் சிவபாபு, ஆசிரமத்தை மூடும்படி அங்கிருந்த நிர்வாகிகளுடன் தகராறு செய்ததாக தெரிகிறது. இதையொட்டி அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் நித்யானந்தா சாமியார் ஆசிரமம் அமைத்துள்ளதால் அங்கும் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட இந்து முன்னணித்தலைவர் டி.எஸ்.சங்கர் கூறுகையில், ''நித்யானந்தரின் சுயரூபம் வெளியாகி விட்டது.அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். ஆசிரமத்தை பூட்டுவோம்'' என்றார்.
கோவையில் பேருந்து நிலையம் அருகே நித்யானந்தா உருவ படத்தை இந்து மக்கள் கட்சியினர் கிழித்து எறிந்து அவருக்கு எதிராக முழக்கமிட்டனர்.
கடலூரில் வண்டிப்பாளையத்தில் உள்ள நித்யானந்தா பீடம் அருகே அவரது உருவப்படம் எரிக்கப்பட்டது. பெயர் பலகையையும் அழித்தனர்.
இதுபோல் விழுப்புரம் மோகினிப்பாளையத்திலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை சாய்பாபா காலனியில் உள்ள ஆசிரமத்திலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் ஏம்பலத்தில் உள்ள ஆசிரமத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள் சுவாமி நித்யானந்தாவின் பேனர்களை அடித்து நொறுக்கினர். ஆசிரமத்தில் உள்ள அலுவலகத்துக்கு சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.
கூரையினால் வேயப்பட்டிருந்த ஆசிரமம் முழுவதும் அடித்து நொறுக்கி தரைமட்டாக்கினர். இதேபோல் கானாந்தோப்பு பகுதியில் பக்தர்களால் வைக்கப்பட்டிருந்த அவரது பேனர் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
அம்பலமாகும் நித்தியானந்தா லீலைலகள் - அரசியல் பழிவாங்கல் காரணமா?
நடிகையுடன் உல்லாசகமாக சுவாமி நித்தியானந்த இருந்த காட்சிகள், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதைத் தொடர்ந்து , ஆத்திரம் அடைந்த பொது மக்கள், தமிழகத்திலும், புதுச்சேரியிலும் உள்ள அவரது ஆசிரமங்களை முற்றுகையிட்டுத் தாக்கி வருவதாகத் தெரியவருகிறது.
திருவண்ணாமலையில், நித்யானந்தர் ஆசிரமம் முன்பாக கூடிய மக்கள், நித்யானந்தருக்கு எதிராகக் குரல் எழுப்பியதுடன் அவரது பேனரையும் கிழித்தனர். ஆசிரமத்துக்குள் அத்துமீறி நுழைந்த இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் சிவபாபு, ஆசிரமத்தை மூடும்படி அங்கிருந்த நிர்வாகிகளுடன் தகராறு செய்ததாகவும், இதனால் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது இவ்வாறிருக்க நித்தியானந்தரைக் கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கைகைள் எழுந்துள்ளன. ''நித்யானந்தரின் சுயரூபம் வெளியாகி விட்டது.அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். ஆசிரமத்தை பூட்டப்பட வேண்டும்'' என திருவண்ணாமலை மாவட்ட இந்து முன்னணித்தலைவர் டி.எஸ்.சங்கர் தெரிவித்திருக்கின்றார். இது போன்று தமிழகத்தின் பல பாகங்களிலும் மக்கள் ஆர்ப்பாட்டங்களைச் செய்து வருவதாக அறியப்படுகிறது.
'சன்' தொலைக்காட்சிச் செய்திகளில் சாமியாரின் சல்லாப விடீயோக் காட்சிகள் காட்டப்பட்டதும், அதில் சாமியாரின் முகம் தெளிவாகத் தெரிவதனாலும், சாமியாரின் போலிமுகம் காட்டப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம் அத்தனை தெளிவாக அக்காட்சியினைப் படம் பிடித்தவர்களும் சரி, ஒளிபரப்பியவர்களும் சரி, ஏன் நடிகையின் முகத்தை மறைத்தார்கள் எனக் கேள்வியும் சந்தேகமும் எழுந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இதன் பின்னணியில் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல்கள் இருக்கலாம் எனவும், இதற்ககாகவே இந்த நடிகையை வைத்து சாமியாரை வலையில் வீழ்த்தியிருக்க வேண்டும் அல்லது எடுக்கப்ட்ட வீடியோவில் இருக்கும் நடிகையின் முகத்தைக் காட்டினால், அந்த நடிகை ஆத்திரத்தில் சாமியார் தவிர, தன்னடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் எனப் பெரிய பட்டியலை வெளியிட்டு விடக் கூடும், அப்படி வெளியிடப்படும் பட்டியலில் அரசியல் பிரமுகங்கள் இருந்துவிடக் கூடும் என்ற அச்சமும் காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நடிகை புவனேஸ்வரி விவகாரத்தில் தீவிரம் காட்டிய ஊடகங்கள், அந்தப் பிரச்சனையால் திரையுலகத்துடன் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் அடக்கி வாசிப்பதாகவும் சொல்லப்படுகிறது. எது எப்படியென்றாலும், வெளுத்துப் போயிருப்பது சாமியாரின் முகம் மட்டுமல்ல, தமிழகத்தின் பிரபல ஊடகங்களது முகங்களும்தான் என்கின்றார்கள்,இந்தச் செய்தியில் வெறுப்படைந்துள்ள மக்கள்.
சாமியாருக்குப் பிரபலம் தேடித் தந்த பிரபல வாரப் பத்திரிகை ஒன்றில் , அவர் எழுதிய தொடருக்கு "கதவைத் திற காற்று உள்ளே வரட்டும்" என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றிரவு 'சன்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வீடியோக்காட்சிகளால், ஊடகத் தலைப்புச் செய்திக்குள் வந்திருப்பவர் சாமியார் நித்தியானந்தா.
நித்யானந்தாவின் செக்ஸ் லீலைகள் : நெருங்கிய நடிகைகள் பட்டியல் நீள்கிறது!
பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்த சாமியார் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொதிப்படைந்த பக்தர்கள், பல நகரங்களிலும் உள்ள அவரது ஆசிரமங்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பல இடங்களில் நித்யானந்தரின் உருவப் படங்களை செருப்பால் அடித்து கொளுத்தினர். திடீரென நித்யானந்தா தலைமறைவானது பரபரப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நித்யானந்தாவின் ஆசிரமங்களுக்கு பல நடிகைகள் வந்து சென்றுள்ளனர். பழம் பெரும் கதாநாயகியின் சகோதரி, அவரது மகள் ஆகியோரும் நடிகைகள். சகோதரி மகள் நடிகைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் நித்யானந்தாவை சந்தித்துள்ளார். அப்போது அவருடன் நடிகைக்கு தொடர்பு ஏற்பட்டது. நித்யானந்தாவுக்கு நடிகைகளுடன் தொடர்பு ஏற்பட இவர் முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. ஆசிரமத்துடன் தொடர்புடைய நடிகைகளின் பட்டியலில் சினிமாவிலிருந்து தற்போது ஒதுங்கியிருக்கும் நடிகைகள், நடித்து வருபவர்கள், திருமணமானவர்கள் என பலர் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவருமே நித்யானந்தாவுடன் நெருங்கி பழகியுள்ளனர். ஹீரோயினாக நடித்து பிறகு சீரியலில் நடித்தும், அங்கிருந்தும் காணாமல் போன யுவ நடிகை, சின்னப்பூவாய் மெல்லப்பேசும் நடிகை என பலருக்கு நித்யானந்தா ஆசிரமத்துடன் தொடர்பு உள்ளது. விஷயம் வெளியானதால் அந்த நடிகைகள் கலக்கத்தில் உள்ளனர்.
நிர்மலமான நடிகை
நித்யானந்தாவிடம் பல சினிமா நடிகைகள் தொடர்பு வைத்துள்ளனர். அவர்களில் ஒருவர் நடிகை ராகசுதா. இவர், தமிழில், ராமராஜன் ஜோடியாக ‘தங்கத்தின் தங்கம்’, நெப்போலியன் நடித்த ‘தமிழச்சி’, ‘தம்பி’, ‘அம்முவாகிய நான்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். நடிகை கே.ஆர்.விஜயாவின் தங்கை மகளான இவர், யோகா வகுப்புகளுக்கு சென்று வந்தார். சென்னையில் நித்யானந்தா நடத்திய யோகா வகுப்புக்கு சென்று வந்த அவர், நித்யானந்தாவை பார்த்த உடனேயே அவர் காலில் விழுந்து வணங்கினாராம். அதிலிருந்து, அவருடைய ஆசிமரத்தில் சேர்ந்து சன்னியாசி ஆனார். மைசூரிலுள்ள இவரது ஆசிரமத்தில், சுவாமி நிர்மலானந்தா என்ற பெயரில் சில வருடங்களாக யோகா கற்றுக்கொடுத்து வருகிறார் ராகசுதா. இவர்தான் சாமியாருக்கு பல நடிகைகளை அறிமுகப்படுத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் பல முன்னாள் நடிகைகள் மற்றும் டிவி நடிகைகளும் அடங்குவர் என்றும் விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
மோசடி புகார்கள் குவிகின்றன
ஆசிரமம் அமைந்துள்ள இடத்திற்கு வந்திருந்த அதே ஏரியாவைச் சேர்ந்த பாபு என்பவர் கூறும்போது, “நித்தியானந்தா பீடம் 2003ம் ஆண்¢டு வாக்கில் அமைக்கப்பட்டது. இதற்காக இப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் மிரட்டி, நிலங்கள் குறைந்த விலையில் வாங்கப்பட்டன. சில பகுதிகளில் அடுத்தவர் நிலங்களையும் ஆக்கிரமித்தனர்’’ என்றார்.
சந்தனக்கட்டை மீட்பு: நித்யானந்தாவின் ஆசிரமத்தில் நேற்று மதியம் வனத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். டி.சி.எப். ஆசிரமத்தில் சுமார் 60 முதல் 80 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சாமியார் புலித்தோல் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதுகுறித்தும் வனத்துறை விசாரணை செய்து வருகிறது.
80 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஆசிரமத்தின் உள்ளே 8 முதல் 10 கட்டிடங்கள் உள்ளன. சில கட்டிடங்கள் வெளிநாட்டு பக்தர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர தியானம் செய்வதற்கு குடிசை வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 3 குடிசைகள் நேற்று தீவைத்து கொளுத்தப்பட்டன. போராட்டக்காரர்கள் அதை கொளுத்தினார்களா? அல்லது ரகசிய ஆவணங்களை அழிக்கும் முயற்சியா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
நித்யானந்தா தலைமறைவு!
கொதிப்படைந்த பக்தர்கள், பல நகரங்களிலும் உள்ள அவரது ஆசிரமங்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பல இடங்களில் நித்யானந்தரின் உருவப் படங்களை செருப்பால் அடித்து கொளுத்தினர். திடீரென நித்யானந்தா தலைமறைவானது பரபரப்பை அதிகரித்துள்ளது. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் நித்யானந்த தியான பீடம் என்ற ஆசிரமம் நடத்தி வருபவர் பரமஹம்ச நித்யானந்தா (31). தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை உள்பட பல நகரங்களிலும் இவரது ஆசிரமங்கள் உள்ளன. உலகின் பல நகரங்களுக்கும் சென்று சொற்பொழிவுகள் ஆற்றி வந்தார். இந்நிலையில், பிரபல நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருக்கும் படுக்கை அறை வீடியோ காட்சிகள் நேற்று வெளியாயின. இது பெரும் பரபரப்பையும் பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை பொதுமக்கள் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் நேற்று இரவு முற்றுகையிட்டனர். ஆசிரமத்துக்கு உடனே சீல் வைக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். பதற்றம் அதிகரித்ததால், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சிவபாபு கைது செய்யப்பட்டார். ஆசிரமத்தில் தங்கியிருந்த 45 ஊழியர்கள் நேற்று நள்ளிரவு நித்யானந்தாவின் பேனர்கள், போஸ்டர்களை ஆவேசமாக கிழித்து எறிந்துவிட்டு வெளியேறினர். ஆசிரமத்தை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சொந்த ஊரான தி.மலையில் ஆசிரமம் அமைக்க நித்யானந்தா ஆசைப்பட்டார். இதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு பவழக்குன்று மலையை ஆக்கிரமிக்க முயன்றுள்ளார். அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், 2 ஆண்டுகளுக்கு முன்பு கிரிவலப்பாதையில் உள்ள நிருதிலிங்கம் அருகே 3 ஏக்கர் பரப்பில் ஆசிரமம் அமைத்தார். அங்கு அவர் தங்க சொகுசு அறையுடன் கட்டிடம் கட்டப்பட்டது. திருவண்ணாமலைக்கு வரும்போது அங்குதான் தங்குவார். கடந்த ஜனவரி 8ம் தேதி பிறந்தநாள் விழாவை இங்கு விமரிசையாக கொண்டாடியுள்ளார்.
இதுதொடர்பாக தி.மலை மாவட்ட இந்து முன்னணி தலைவர் டி.எஸ்.சங்கர் கூறுகையில், ‘‘ஆடம்பர வாழ்க்கை வாழும் நித்யானந்தர் கிரிவலப்பாதையில் ஆசிரமம் கட்டக் கூடாது என்று ஏற்கனவே கூறினோம். அவரது சுயரூபம் தற்போது அம்பலமாகியுள்ளது. அவரை உடனே கைது செய்ய வேண்டும். தி.மலைக்குள் அவரை இனி விடமாட்டோம்’’ என்றார். புதுச்சேரி வில்லியனூர் ஏம்பலத்தில் உள்ள நித்யானந்தர் ஆசிரமத்தை பொதுமக்கள் சூறையாடினர். ஜன்னல்கள், விளக்குகள், மின்விசிறிகள் அடித்து நொறுக்கப்பட்டன. சாமியார் பேனரை தீவைத்து கொளுத்தி செருப்பால் அடித்தனர். பதற்றம் அதிகரித்ததால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி பஸ் ஸ்டாண்டில் இந்து முன்னணி அமைப்பினர் மாநில பொதுச்செயலாளர் முருகையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நித்யானந்தாவை கைது செய்து சொத்துக்களை முடக்க வேண்டும் என்று மக்கள் கோஷம் எழுப்பினர்.
கடலூர் வண்டிப்பாளையத்தில் உள்ள ஆசிரமத்தில் பேனர்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. கடலூர் மோகினிபாலம் பகுதியில் ஆசிரமத்தின் பெயர்பலகையை பொதுமக்கள் தார்பூசி அழித்தனர். நெல்லை டவுனில் உள்ள நித்யானந்தர் தியான மையத்தில் நித்யானந்தா படத்துடன் கூடிய டிஜிட்டல் பேனர், போஸ்டர்களை நிர்வாகிகளே கிழித்து எறிந்தனர். இந்த மையத்தில் சில மாதம் முன்பு அவர் ஆன்மீக உரையாற்றியுள்ளார். சீர்காழி சட்டநாதபுரம் மனோன்மணியம் நகரில் நித்யானந்த பீடத்தை அவர் சமீபத்தில் திறந்துவைத்தார். இங்கு தினமும் பஜனை, தியானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. டிவியில் ஆபாச காட்சிகளை பார்த்த மக்கள் ஆவேசமடைந்து நித்யானந்தா படங்கள், பேனர்களை நேற்று இரவு தீ வைத்து கொளுத்தினர்.
சென்னையில் 15க்கும் அதிகமான இடங்களில் அவரது சீடர்கள் ஆசிரம கிளை வைத்து தியான வகுப்புகள், ஆன்மீக நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தி வந்துள்ளனர். நேற்று இரவோடு இரவாக அனைத்து இடங்களில் இருந்த போர்டுகள், பேனர்கள் அகற்றப்பட்டன. பல இடங்களில் ஆசிரம கிளைகள் பூட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், செக்ஸ் லீலை காட்சிகள் வெளியானதை தொடர்ந்து, நித்யானந்தா திடீரென தலைமறைவாகிவிட்டார். ஆசிரம நிர்வாகிகள் செல்போனில் அவரை தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை.
நித்தியானந்தா தலைமறைவாகிவிட்டார்:கமிஷ்னர்!
பரமஹம்ச நித்தியானந்தா சாமியார் பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாச லீலைகளில் ஈடுபட்டிருக்கும் வீடியோ வெளியானது. இதையடுத்து நாடெங்கிலும் நித்தியானந்தாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நேற்று சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ராம.சிவசங்கர், சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்தார். மேலும் பல வழக்கறிஞர்களூம் புகார் கொடுத்தனர். இந்நிலையில் இன்று சென்னை காவல்துறை ஆணையர், ’’வழகறிஞர்களின் புகாரை ஏற்று நித்தியானந்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’என்று தெரிவித்தார். நித்தியானந்தா தலைமறைவாகிவிட்டார் என்பது உண்மை’’என்றும் தெரிவித்தார்.
நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பதாக கூறப்படும் நபர் நான் இல்லை நித்தியானந்தா மறுப்பு
நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது போன்று வெளியாகியுள்ள வீடியோவில் இடம் பெற்றிருப்பது சுவாமி நித்தியானந்தா இல்லை என்று அவரது மடம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக நேற்று சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் நித்தியானந்தாவின் ஆசிரமம் சார்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.
அதில், நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் இருப்பது போன்ற வீடியோக்களையும், படங்களையும் பிரசுரிக்க பத்திரிகைகளுக்கு தடை விதிக்கக் கோரப்பட்டது.
அந்த மனுவில், எனக்கு 17 நாடுகளில் 45 லட்சம் பக்தர்கள் உள்ளனர். இலவச மருத்துவ முகாம்கள், கல்வி உள்ளிட்டவற்றை அளித்து வருகிறேன்.
இந்த நிலையில், எனது மடத்தில் புகுந்து விட்ட பிரேமானந்தா என்கிற லெனின் கருப்பன் என்பவர்தான் எனது புகழைக் கெடுக்கும் வகையில், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடிகையுடன் நான் இருப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை சன் டிவி திரும்பத் திரும்ப ஒளிபரப்பி வருகிறது.
அதில் இருப்பது நான் அல்ல. எனவே இந்த வீடியோவையும், புகைப்படங்களையும் சன் டிவி, தினகரன், தமிழ் முரசு, நக்கீரன் ஆகியோர் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி மாணிக்கவாசகர், தடை விதிக்க மறுத்து விட்டார். மேலும், வழக்கை மார்ச் 8ம் தேதிக்கு ஒத்திவைத்த அவர் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
நித்தியானந்தாவின் ஆசிரமம் விளக்கம்...
இதற்கிடையே, நித்தியானந்தாவின் ஆசிரம இணையதளம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், எங்களுக்கு எதிராக நடந்த கூட்டுச் சதி, கிராபிக்ஸ் வேலைகள், வதந்திகள் ஆகியவைதான் இந்த செய்திகளின் பின்னணியில் உள்ளதாக கருதுகிறோம்.
இதை எதிர்த்து சட்டப்பூர்வமான நடவடிக்கைளுக்குத் தயாராகி வருகிறோம்.
சுவாமிஜியின் அருள் பெற்ற லட்சக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து சுவாமிஜி மீது அன்புடன் உள்ளனர். இதற்கு மேல் இந்த விவகாரத்திற்கு விளக்கம் அளிக்கத் தேவையில்லை.
இருப்பினும், இந்த சிக்கலான நேரத்தி்ல் உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமிஜியின் பின் நிற்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
Posted by
Unknown
Labels:
நித்யானந்தா
0 comments:
Post a Comment