Showing posts with label சீனா. Show all posts
Showing posts with label சீனா. Show all posts

சீனா: சிங்கியாங் (Xinjiang) என்பது மக்கள் சீனக் குடியரசில் உள்ள ஒரு Uyghur  (முஸ்லிம்) தன்னாட்சிப் பகுதி ஆகும். இதுவே சீனாவின் மாகாணங்களில் மிகப்பெரியது; இதன் பரப்பளவு 16 லட்சம் சதுர கி.மீ. முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையினோராக உள்ள இப்பகுதிரசியா, மங்கோலியா, இந்தியா, பாகிஸ்தான், கசாக்ஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் பொதுவான எல்லைகளைக் கொண்டுள்ளது.
பொருளாதாரம்
2008 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 60 பில்லியன் டொலராகவும் சராசரி தனிநபர் உற்பத்தி 2864 டொலராகவும் இருந்தது. மேலும் இம்மாகாணம் தாதுக்களும் எண்ணெய் வளமும் நிறைந்ததாகும்.
வரலாறு
1949 இல் 95 சதவீதம் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இப்பிரதேசம் மீது சீனா படையெடுத்து ஆக்கிரமித்து கொண்டது. பின்னரான காலப்பகுதியில் பல நூறு இராணுவ கிராமங்களை அங்கு உருவாக்கி ஹன் இனச் குடும்பங்களை குடியமர்த்தியது, அவை காலபோக்கில் சீனர்களை கொண்ட குடியேற்ற கிராமங்களாக உருவெடுத்தன. இப்போது 2 கோடி மக்கள் தொகை கொண்ட சிங்கியாங்கில் 57 சதவீதம் முஸ்லிம்கள், 41 சதவீதம் ஹன் இனச் சீனர்கள் வாழ்கின்றனர்.
வீகர்(முஸ்லிம்)களின் சுயாட்சிக்கான போராட்டங்களை சீன அரசுகள் தொடர்ந்து ஒடுக்கி வந்திருக்கின்றன. இதனால் பலர் வெளியேறி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள்தான் வெளியில் இருந்து கொண்டு பிரச்சினைகளை தூண்டுவதாக சீனா குற்றம்சாட்டி வருகிறது.
சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் முஸ்-ம்கள். ஆனால் ஜின்ஜியாங்கில் பெரும்பாலான மக்கள் முஸ்லிம்கள் என்றபோதிலும், தலைநகர் உரூம்கிலில் 90 சதவீதம் பேர் சீனாவைச் சேர்ந்த ஹான் இனத்தவர்கள். தலைநகர் ஜனத்தொகை 20,30,000.
தலைநகர் உரூம்கியில் முஸ்லிம் களுக்கும் ஹான்களுக்கும் நடந்த மோத¬ல் 156 பேர் கொல்லப்பட்டனர். 828 பேர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து இரண்டாவதாக காஷ்கர் நகரத்திலும் கலவரத் தீ மூண்டது. வெளிநாடு வாழ் வீகர்களின் தகவல் தொடர்புகளை துண்டிப்பதற்காக அனைத்து மின் தகவல் இணையங்களையும் சீன அரசு துண்டித்தது..
கடந்த ஆண்டு திபெத்தில் தலைநகர் லாசாவில் புத்த பிட்சுகள் அமைதியாக பேரணி நடத்தியபோதும், இதுபோல் ஒரு கலவரம் வெடித்தது. அந்த சம்பவத்திற்கு 22 பேர் பலியானார்கள். தலாய்லாமா தான் வெளியில் இருந்து தூண்டிவிடுகிறார் என்று சீனா குற்றம்சாட்டியது. அதை அவர் மறுத்தார். மத்திய ஆசியாவின் 8 நாடுகளை எல்லையாகக் கொண்ட ஜின்ஜியாங்கில் பெட்ரோல், எரிவாயு உள்ளிட்ட கனிம வளங்கள் மிகுதியாக உள்ளன. எனவே சீன பொருளாதாரத்தின் தூணாகவும் ஜின்ஜியாங் விளங்கு கிறது. தற்போது அங்கு விடுதலை விருப்பம் வீகர் மத்தியில் தலைதூக் கியுள்ளது. சமீபத்திய வருடங்களில் வலுக் கட்டாயமாக குடியமர்த் தப்பட்ட ஹான் இனத்தினர், படிப்படியாக வீகர்களை அவர்களது தாய் மண்ணில் இருந்து விரட்டியதாக குற்றம்சாட்டப்படுகிறது.
வீகர்களின் ஆயுதப் புரட்சி சீனாவுக்கு பெரிய தலைவலியாக இருந்து வந்தது. 2001ல் அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டபோது உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளை அமெரிக்கா பட்டியல் போட்டது. அப்போது சீனா கேட்டுக் கொண்டதன் பேரில் ஜின்ஜியாங் கில் இருந்து செயல்படும் கிழக்கு துருக்கி இஸ்லாமிய இயக்கத்தையும்  (தீவிரவாத இயக்கமாக) அமெரிக்கா பட்டியலிட்டது.
அமெரிக்கா நடத்திவரும் பயங்கரவாதப் போருக்கு சீனாவின் ஆதரவைப் பெறவேண்டி அமெரிக்கா இதை செய்ததாகக் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் அல்காயிதாவிற்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா இறங்கியபோது, அங்கு நான்கு வீகர் முஸ்லிம்களை அமெரிக்க ராணுவம் கைது செய்தது. பின்னர் வீகர் முஸ்லிம் நான்கு பேரையும் விடுவித்தது. ஜின்ஜியாங்கில் வீகர் முஸ்லிம்கள் நசுக்கப்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைக் குழு குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அடிப்படை ஆதாரமின்றி சீனாவின் வேண்டு கோளை ஏற்று எந்த இயக்கத்தையும் தடை செய்யக் கூடாது என்றும் அறிவுறுத் தியிருக்கிறது. திபெத்தைப் போன்று ஜின்ஜியாங் முஸ்¬ம்களின் சமய வழிபாட்டு உரிமையும் கடின ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்கிறார் மனித உரிமை கண்காணிப்பகத்தின் இயக்குனர் பிராட் ஆடம்ஸ்.
வீகர்களை பலவீனப்படுத்த சீன அரசு சொந்த செலவில் ஹான்களை அதிகப் படியாக குடியேற்றி வருகிறது. ஜின்ஜியாங் மாகாணத்தில் அமைதியான வழியில் இஸ்லாமிய நெறிகளை பரப்பி வருவோரையும் தீவிரவாதிகள் என சீனா கூறுகிறது. அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிந்தைய உலக சூழலை சீனா தோதாகப் பயன்படுத்திக் கொள்கிறது.
ஜின்ஜியாங் முஸ்லிம்கள் வன்முறை, தண்டம், சிறை மற்றும் சித்திரவதைக்கு மத்தி யில்தான் இறைவணக்கத்தில் ஈடுபடுகின்றனர். திபெத்திலும் இதே நிலைதான் கிழக்குப் பகுதிகளான திபெத்தையும் ஜின்ஜியாங்கையும் சீன பகுதியோடு இணைத்துக் கட்ட அதிகப்படியான பொருட்செலவில் ஹானர்களை இரு பகுதிக்குமாக அனுப்பி வைக்கிறது சீன அரசு.
முஸ்லிம் மார்க்க அறிஞர்களை கைது செய்கிறது. குர்ஆனின் வசனங்களையும் தணிக்கை செய்கிறது என்றெல்லாம் மனித உரிமை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த அறிக்கை 114 பக்கங்களைக் கொண்டுள்ளது.
.இதற்கு முன்னரும் இதுபோன்ற வீகர் எழுச்சி ஏற்பட்டு பின்னர் அடக்கப்பட்டிருக்கிறது. சோசலிஸம் பற்றி அதிகம் பேசும் கம்யூனிஸ்டு கள் மனித உரிமைகளுக்கும் சுயாட்சிக்கும் எதிரான அடக்குமுறைகளைக் கையாள் வது வியப்பான விஷயமல்ல. கொள்கை கோட்பாடு எதுவாக இருந்தாலும் அதிகார வர்க்கத்திற்கு ஒரு ஆபத்து ஏற்படும் என்றால் அடக்குமுறை ஏவப்படும்.காஷ்மீர்லும் இதுதான் நடக்கிறது. கிழக்கு சீனாவிலும் இதுதான் நடக்கிறது.

Score:  Wikipedia, Britannica & CRI-China

Posted by Unknown Labels:
Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.