Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts
சூரியன் மேற்கில் உதிக்கும் சாத்தியகூறுகள் இருப்பதாக நாஸா விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர்
NASA Confirms Possibility of Sun Rising From the West
இஸ்லாம் மார்க்கம் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட மார்க்கம் என்று முஸ்லிமல்லாதவர்கள் சிலர் கருதுகிறார்கள்.

ஆனால், இஸ்லாம் மார்க்கம் அகில உலகையும் படைத்த இறைவனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வழியாக வழங்கப்பட்டது என்று முஸ்லிம்கள் நம்பி வருகின்றனர்.

முஸ்லிம்கள் கண்மூடித்தனமாக இவ்வாறு நம்புவதில்லை. தக்க காரணங்களின் அடிப்படையில் தான் இஸ்லாம் இறைவனால் வழங்கப்பட்ட மார்க்கம் என்று நம்புகின்றனர்.

இந்த மார்க்கத்தை நிச்சயம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சுயமாகக் கற்பனை செய்து உருவாக்கியிருக்க முடியாது என்பதற்கு திருக்குர்ஆன் முதன்மையான சான்றாக உள்ளது.

எதிர்காலத்தில் நிகழவுள்ள பல செய்திகளைத் திருக்குர்ஆன் முன் கூட்டியே அறிவித்திருப்பதை நடுநிலையோடு சிந்திப்பவர்கள் இதை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதர் கூறியிருக்கவே முடியாது என்ற முடிவுக்கு வருவார்கள்.

அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிர்காலத்தில் நிகழவுள்ள பல நிகழ்ச்சிகளை முன்னரே அறிவித்துள்ளனர். அவர்கள் அறிவித்தவாறு அவை அப்படியே நிறைவேறி வருவதை சிந்திப்பவர்கள் - இதை இறைவன் புறத்திலிருந்து தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்திருக்க வேண்டும் என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்வார்கள்.

நாம் வாழும் இப்பூமி உற்பட முழுப் பிரபஞ்சமுமே அழிந்து மீண்டும் ஒரு மிக மிக மிகப் பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை (மஹ்ஷர்) அல்லாஹ் உருவாக்கி மனிதனை வாழவைப்பான் என்பது இஸ்லாத்தின் கொள்கை.

இப்பிரபஞ்ம் அழிவது எப்போது என்பது திட்டவட்டமாகத் தெரியாவிடினும் அது நடைபெறுவதற்கு முன்பு சில அடையாளங்கள் நிகழும் என்பதனையும் அவை எவை என்பதனையும் இஸ்லாம் குறிப்பிட்டுள்ளது. அதில் மிக முக்கியமானவொன்றுதான் கிழக்கிலிருந்து உதித்துவரும் சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதாகும்.

கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கில் உதிக்கும் வரை யுக முடிவு நாள் வராது. அவ்வாறு உதிக்கும் போது யாரேனும் நம்பிக்கை கொண்டால் அந்த நம்பிக்கை பயன் தராது. அதைத் தான் இவ்வசனத்தில் (6:158) அல்லாஹ் கூறுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) விளக்கியுள்ளனர். (புகாரி 6506, 6535, 7121)

சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதைச் சாதாரணமான ஒன்றாகக் கருதி விடக் கூடாது. அதனால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவையாக இருக்கும்.
பூமி சூரியனைச் சுற்றி வருவதால் இரவு பகல் ஏற்படுகிறது என்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம்.  இத்தகைய பூமியில் கிழக்கே உதித்து வரும் சூரியன் மேற்கே உதிக்க வேண்டுமானால் பூமி தன் சுழற்சியை திடீரென நிறுத்தி உடனே எதிர்த்திசையில் சுழல வேண்டும். அப்போது தான் மேற்கில் சூரியன் உதிக்க முடியும்.
சூரியனிலிருந்து பூமி 14,96,80,000 km தூரத்தில் அமைந்துள்ளது.அத்தோடு பூமி செக்கனுக்கு 18 மைல் வேகத்தில்சூரியனைச் சுற்றிவருகின்றது. அத்தோடு அது தன்னைத்தானேயும் கிழக்கு மேற்காகச் சுற்றிவருகின்றது. இதன்போதே சூரியன் கிழக்கில் உதிப்பதாக நாம் காண்கின்றோம்.

மணிக்கு 80 km வேகத்தில் பிரயாணித்துக்கொண்டிருக்கும் ஒரு பேருந்து ஒரேயடியாக நிறுத்தப்பட்டு மீண்டும் அதேவேகத்தில் பின்னோக்கிச் சென்றால் அதனுள் இருக்கும்  மனிதர்களின் நிலை என்னவாக இருக்கும். இதேபோன்றுதான் இப்பூமியும் தற்போது சுழலும் அதுவேகத்தில் மேற்கு கிழக்காகச் சுழன்றாலும். இதனால் பூமியின் தட்டுகள் குலுங்கி,கட்டிடங்கள் தகர்ந்து விழும். மலைகள் இடம்பெயர்ந்து, பூகம்பங்கள் மற்றும் சுனாமி தோன்றி பலத்த சேதங்கள்தான் விளையும்.

 சமீப நாஸா ஆய்வுகள் இவ்வாறு  கூறுகின்றன. அனைத்துக் கிரகங்களிலும் கிழக்கில் தோன்றி மேற்கில் மறையும் சூரியன் வெள்ளிக் கிரகத்தில் மட்டும் மேற்கில் தோன்றி கிழக்கில் மறைவதாக நாஸா விஞ்ஞனிகள் கூறுகின்றர்.

நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம் (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா? குர்ஆன் 41:53.

சிந்தனையாளர்களும், அறிஞர்களும் திருக்குர்ஆனை ஆழமாகச் சிந்தித்தால் இன்னும் எண்ணற்ற அதிசயங்களைத் திருக்குர்ஆனில் நிச்சயம் காண்பார். திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அறிவியல் உண்மைகளும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறும் வசனங்களும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புக்களும் இஸ்லாம் இறைவன் புறத்திலிருந்து அருளப்பட்ட மார்க்கம் என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
References:
http://www.youtube.com/watch?v=_cE32VjiTXI
http://www.siasat.com/english/news/nasa-confirms-possibility-sun-rising-west
http://onlinepj.com/books/varu-mun-uraitha-islam/


அடிக்கடி நாம் கணவனின் தேவைகளை மனைவி புரிந்து நடக்கவேண்டும் என அங்கலாய்க்கின்றோம். மனைவி நல்ல ஆடைகளை அணிந்து, கவலை மறந்து சிரித்து, அன்பாக அணுகி தனது கனவுகளை நனவாக்க வேண்டுமென்று கணவன்மார் நினைக்கின்றனர். ஆனால் மனைவி விரும்பும் கணவனாக தான் இருக்கின்றேனா? என்பதை எம்மில் பலர் சிந்தித்ததுண்டா? ]

''...அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை...'' (அல்குர்ஆன் 2:187)

கணவன் மனைவி இருவரும் ஒருவரில் மற்றவர் பரிபூரண நம்பிக்கை வைத்து இரண்டறக் கலந்து விடுகின்றனர். அனைவரிடமும் மறைக்கக்கூடிய விடயங்களைக் கூட, தமக்கிடையே பகிர்ந்து கொள்வர். இதனாலேயே மறைக்கக் கூடிய ஆடையை கணவன், மனைவி உறவுக்கு உவமையாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. தம்பதியரிடையேயான அந்தரங்க விடயங்களை கணவன் தற்பெருமைக்காக பகிரங்கப்படுத்துவதனால், கணவன் மீதான நம்பிக்கை இழப்பும் உளவியல் ரீதியான பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இதனை மேலும் வலியுறுத்தி நபியவர்களும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

''மறுமையில் அல்லாஹ்விடத்தில் மிக மோசமான மனிதன், தனது மனைவியோடு உறவு கொண்டு விட்டு, அவளது இரகசியத்தைப் பரப்புபவன் ஆவான்.'' (அறிவிப்பர்: அபூசயீத் அல்குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்-2832)]

''பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் பெண்கள்(வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ(பலவந்தமாக) நிமிர்த்திக் கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே நீடிக்கும். ஆகவே பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்''
(ஸஹீஹுல் புஹாரி: 5186)

இன்றைய காலகட்டத்திலே இயந்திரமாய் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதனுக்கு இல்லற வாழ்வே இன்பத்தையளித்து சமூகத்தோடு இயைபுபட்டு வாழக்கூடிய நிலையை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் இணையும் தம்பதிகளின் புரிந்துணர் வின்மையின் காரணமாக பல குடும்பங்கள் பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பதைக் காணலாம். ஆகையால் கணவனும் மனைவியும் தமது கடமைகளை செவ்வனே நிறைவேற்றும் போது மணவாழ்வு மகிழ்ச்சியளிக்கும்;;. இங்கு நாம் கணவனின் கடமைகள் சிலவற்றை நோக்குவோம்.

1. கணவன் வீட்டில் நுழையும் போது சலாம் கூறுதல்.
அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இது பற்றிக் கூறுகையில் ''நீங்கள் இறை நம்பிக்கை(ஈமான்) கொள்ளாத வரை சொர்க்கம் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை(முழுமையான) இறை நம்பிக்கையாளர்களாக ஆக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயற்படுத்தினால் ஒருவரையொருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 93)

மேற்படி நபிமொழி யிலிருந்து கணவன் மனைவி விரும்பும் பாசமும் நேசமும் உருவாவதற்கு அடிக்கடி சலாம் கூறிக்கொள்வது சிறந்த வழியாகும். குறிப்பாக பாசத்திற்காக ஏங்கும் தம்பதிகள் இவ் அடிப்படை சுன்னாவை நடைமுறைப் படுத்துவதன் மூலம் இல்லறம் இனிக்க வாழலாம்.

2. வாயில் துர்வாடை வீசா வண்ணம் பல்துலக்குவதன் மூலம் சுகந்தத்தைப் பேணுதல்.
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் முதலில் பல்துலக்குவார்கள்'' (நூல்: முஸ்லிம் 424) கணவனின் வருகையை எதிர்பார்த்திருந்த மனைவி அவனை முகமலர்ச்சியுடன் வரவேற்கும் வேளை, கணவனின் வாயில் இருந்து வரும் துர்வாடை அவளை முகம் சுளிக்கச் செய்கின்றது. ஆகையால் பல்துலக்கி வாயை சுத்தம் செய்வதானது இல்லறத்தை செழிப்பாக்கும்.

3. மனைவியை விஷேட பெயர் கொண்டு அழைத்தல்.
அன்னை ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். ''அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு நாள் என்னிடம்) ஆயிஷ் இதோ(வானவர்) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் உனக்கு ஸலாம் உரைக்கிறார் என்று சொன்னார்கள்.'' (நூல்: புஹாரி-3768, முஸ்லிம்-4837)

நல்ல வார்த்தைகளுக்கும் வசீகரிக்கும் தன்மை உண்டு. ஆகையால், அழகிய பெயர் கொண்டு அழைப்பது மனைவியை மகிழ்விக்கும் வித்தைகளில் ஒன்றாகும். இந்நடைமுறை புதுமணத் தம்பதியினர்களிடம் காணப்பட்டாலும் காலப்போக்கில் இது வழக்கொழிந்து செல்கின்றது.

5. மனைவியின் உதவிகளை வரவேற்றல், நன்றி செலுத்ததல்.
இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''யார் மனிதர்களுக்கு நன்றி செலுத்தவில்லையோ அவர் அல்லாஹ்வக்கு நன்றி செலுத்தமாட்டார்'' என்று கூறினார்கள். (நூல்: அஹ்மத்-7313) உங்களின் மனைவியரின் உதவிகளுக்கு நன்றி கூறிப் பாராட்டும்போது மென்மேலும் உங்கள் மனைவியின் பாசமும், பரிவும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

6. வீட்டுப் பணிகளில் பங்கேற்றல்.

காலத்தின் தேவை அதிகரித்துவர இல்லத்து பணிகளும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. முன்னொரு காலத்தில் தமது அன்றாட வேலைகளுக் கப்பால் பலமணி நேரம் ஓய்வெடுத்து திக்ர், குர்ஆன், திலாவத் மற்றும் ஸலவாத் ஓதுதல் போன்ற உபரியான வணக்கங்களில் எமது பெண்கள் ஈடுபட்டுவந்துள்ளனர்.

ஆனால், இன்று எங்கு பார்த்தாலும் ''பிஸி, மற்றும் நேரம் இல்லை'' போன்ற குரல்களே ஒலிக்கின்றன. ஒரு இல்லத்தரசியைப் பொறுத்தவரை திருமணம் முடித்தது முதல் பேரப்பிள்ளை காணும்வரை அளப்பரிய பணிகளைச் செய்து வருகின்றாள்.
வீட்டுச்சுத்தம், துணிதுவைத்தல், பிள்ளைப் பராமரிப்பு, சமைத்தல் என அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதற்குள் கணவனுக்காக செய்கின்ற பணிகளும் ஏராளம். ஆனால் கணவன்மார்களில் பலர் அற்பவிடயங்களுக்கெல்லாம் மனைவி மீது சீற்றம் கொள்கின்றனர். எமது முன்மாதிரி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றி ஆயிஷா அவர்கள் தரும்
விவரணம் இதோ :

''பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது இல்லத்துப் பணியின் பங்குபற்றி வினவப்பட்டபோது,

நபியவர்கள் தமது துணியைத் தைப்பவராகவும் காலணியை சீர்செய்பவர்களாகவும் ஏனைய ஆண்கள் தமது வீடுகளில் செய்வதையெல்லாம் தாங்களும் செய்பவர்களாக இருந்தார்கள்.'' (நூல்: அஹ்மத்- 24346, இப்னுஹிப்பான்-5155)

7. எடுத்ததெற்கெல்லாம் குறை காண்பதைத் தவிர்த்தல்.
''இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை(முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும், மற்றொரு
குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளக்கூடும் என பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' நூல்: முஸ்லிம்-2915.

இன்று சில ஆண்கள் தான் சந்திக்கும் அனைத்துப் பெண்களிடமும் உள்ள எல்லாப் பண்புகளும் தன் மனைவியிடமும் ஒன்று சேர அமைந்திருக்க வேண்டுமென ஒப்பீட்டாய்வு செய்கின்றனர். அவள் மேற்கொள்ளும் பல பெறுமதியான பணிகளைக் கூட கண்டுகொள்வதில்லை.
''நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன''. (அல்குர்ஆன் 30:21)

அடிக்கடி நாம் கணவனின் தேவைகளை மனைவி புரிந்து நடக்கவேண்டும் என அங்கலாய்க்கின்றோம். மனைவி நல்ல ஆடைகளை அணிந்து, கவலை மறந்து சிரித்து, அன்பாக அணுகி தனது கனவுகளை நனவாக்க வேண்டுமென்று கணவன்மார் நினைக்கின்றனர். ஆனால் மனைவி விரும்பும் கணவனாக தான் இருக்கின்றேனா? என்பதை எம்மில் பலர் சிந்தித்ததுண்டா?

01. அல்லாஹ் தனக்கென பங்கு வைத்ததைப் பொருந்திக் கொள்ளல்.
கவர்ந்திழுத்து கட்டுப்படுத்தல், கணவன் தான் தவறு செய்யும் போது, தன்மானம் பாராது தன் தவறுக்காக வருந்துதல் போன்ற விடயங்களால் தம்பதியருக்கிடையில் புரிந்துணர்வு
அதிகரிக்கும்.

02. மனைவியின் பாசத்தைப் புதுப்பித்துக் கொள்ளல்.

மகிழ்ச்சிமிக்க திருமண வாழ்க்கை உட்பட அனைத்து அம்சங்களுக்கும் பாசமே முக்கிய காரணியென்ற வகையில், இஸ்லாம் அனுமதித்த வழிகளில் மனைவியின் அன்பை அதிகரிக்க,
கணவன் முயற்சியெடுத்தல் வேண்டும். கனிவான வார்த்தைகளைப் பேசுதல், உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் செல்லல், அன்பளிப்புகள் கொடுத்தல், சுற்றுலாக்கள் செல்லுதல் போன்ற
இன்னோரன்ன அம்சங்கள் மூலமே இருவருக்கிடையிலான பாசமும் பரிவும், நேசமும் நெருக்கமும் அதிகரிக்கின்றது.

03. கருத்து முரண்பாடு ஏற்படும் போது உருவாகும் பிரச்சினைகளைப் பொருட் படுத்தாதிருத்தல்.
எந்த வினாடியிலும், எந்தக் காரணியாலும் கருத்து முரண்பாடு ஏற்படுவதற்கு அதிக சாத்தியமுள்ள இடம் வீடு. கருத்துக்கள் முரண்படுவதென்பது ஓர் இயற்கையான அம்சம். எல்லா நோய்க்கும் மருந்துண்டு, எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வுண்டு என்பார்கள். ஆகையால், கணவன், மனைவியரிடையே இவ்வாறான கருத்து முரண்பாடு ஏற்படும்; போது, இஸ்லாம் கூறும் பொறுமை, ஆறுதலான உரையாடல், அமைதி விவாதம் போன்றவற்றின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதால் குடும்பத்தில் குழப்பங்கள் குறைந்து, சந்தோசம் நிலைக்கின்றது. இதுபற்றி எமது தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.

''பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.ஏனெனில், பெண்கள்(வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ(பலவந்தமாக) நிமிர்த்திக் கொண்டே போனால் அதை நீ ஒடித்தேவிடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே, பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.'' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஸஹீஹுல் புஹாரி 5186)

04. இல்லற இரகசியங்களைப் பாதுகாத்தல்.
''...அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை...'' (அல்குர்ஆன் 2:187)

கணவன் மனைவி இருவரும் ஒருவரில் மற்றவர் பரிபூரண நம்பிக்கை வைத்து இரண்டறக் கலந்து விடுகின்றனர். அனைவரிடமும் மறைக்கக்கூடிய விடயங்களைக் கூட, தமக்கிடையே பகிர்ந்து கொள்வர். இதனாலேயே மறைக்கக் கூடிய ஆடையை கணவன், மனைவி உறவுக்கு உவமையாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. தம்பதியரிடையேயான அந்தரங்க விடயங்களை கணவன் தற்பெருமைக்காக பகிரங்கப்படுத்துவதனால், கணவன் மீதான நம்பிக்கை இழப்பும் உளவியல் ரீதியான பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இதனை மேலும் வலியுறுத்தி நபியவர்களும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

''மறுமையில் அல்லாஹ்விடத்தில் மிக மோசமான மனிதன், தனது மனைவியோடு உறவு கொண்டு விட்டு, அவளது இரகசியத்தைப் பரப்புபவன் ஆவான்.'' (அறிவிப்பர்: அபூசயீத் அல்குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்-2832)

05. மனைவி மீது அடக்குமுறைகளைக் கையாளாது நிர்வகித்தல்,
''சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அழ்ழாஹ்வின் பாதுகாவல்மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று(மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்.'' (அல்குர்ஆன் 4:34)

மேற்படி கணவன் மனைவியை நிர்வகிப்பவன் என்பதனால் அடக்கியாள்பவன், பெருமைக்குரியவன் என ஊரார் புகழ வேண்டுமென்பது பொருளாகாது. மாறாக கனிவுதரும் வார்த்தைகளால் தன் துணைவியைக் கவர்ந்திழுத்து கட்டுப்படுத்தல், கணவன் தான் தவறு செய்யும் போது, தன்மானம் பாராது தன் தவறுக்காக வருந்துதல் போன்ற விடயங்களால் தம்பதியருக்கிடையில் புரிந்துணர்வு அதிகரிக்கும்.


source: http://dharulathar.com/
Posted by Unknown Labels:

கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளன.
எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.

நமது இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல! மேற்கத்திய கலாச்சாரத்தை இங்கும் கடைபிடிக்கின்றனர்,

இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதரண விஷயம் என்பதையும் தாண்டி ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு கவுரவமான விஷயமாக மாறி விட்டது.

உங்க லவ்வரோட பேர டைப் பண்ணி அப்டி எஸ்.எம் எஸ் அனுப்பு இப்டி எஸ்.எம்.எஸ் அனுப்பு ஒரு எஸ்.எம்.எஸ் க்கு 3 ரூபாய் என்று கூறி காதலர் தினம் என்ற பெயரில் இளைஞர்களிடமிருந்து பணத்தை அபகரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.

இஸ்லாமிய இளைஞர்களும் இளைஞிகளும் இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் விழுந்து விடுகின்றனர்.

இதற்கெல்லாம் காரணம் காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கள் மற்றும் அசிங்கங்கள் பற்றிய விழிப்புணர்வும் இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற அறிவும் நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும், இல்லாமையே.

“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6243

தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை.

ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.

திருமணத்திற்கு முன்பு பெண்ணைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முகீரத் இப்னு ஷுஃபா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்” என்று கூறினார்கள்.
(நூல்: நஸயீ 3183)

மேற்கூரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.

ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.

விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.

பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.

செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.

செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.

ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.

ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.

பிள்கைளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதை நிறுத்தினால் பிப்வரி 14 உங்கள் பிள்ளையின் கற்பு பறிபோகும் நாளமாக மாறாமல் தடுக்கலாம்.

இந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குலைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.

இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு காதல் விகாரத்தில் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை 217 (தினமணி 8-5-2010).

என்றாவது அம்மா நேசிக்காததால் மகன் தற்கொலை என்ற செய்தியை கேள்வி பட்டுள்ளோமா? கிடையாது!

ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை அல்லது காதலியின் முகத்தில் ஆசி ஊற்றினான் ( திருச்சி சம்பவம்) போன்ற செய்திகளை நிறைய கேள்விபட்டிருப்போம்.

மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர். (உம்: தொழிலதிபர் குடுபத்துடன் தற்கொலை)

பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?

வீட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள்.

ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?

தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.

இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை” அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.

இப்படி உயிர் கொல்லியாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழ்த்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.

இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூடசமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.

இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொண்ண லவ் பண்ணிக்கவா’ என்று கேட்டால் ”டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்ச கொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள்.

ஏன் காதலித்தவர்களே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள்.

அவ்வளவு ஏன்?, ஒரு பெண்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேம் காதலித்தால் முதலில் சண்டைக்கு போவான்.

அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பரவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்கறையோடு நடந்து கொள்ளுங்கள்!

சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14 ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பரிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!

பிப்ரவரி 14 ஆம் தேதியும் டிசம்பர் 1 ஆம் தேதியும் நம்மை பொறுத்வரை ஒன்று தான். எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோய்க்காக டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அறிவிக்கப்பட்டு அதில் எஸ்ட்ஸ் பற்றிய விழிப்புர்ணபு பிரச்சாரம் செய்யப்டுகின்றது(தனி நாள் ஒதுக்காமல் அனைத்து நேரங்களிலும் நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் என்பதே நமது நிலை).

அதே போன்று தான் பிப்ரவரி 14 ல் காதல் கொண்டாட்டங்கள் நடைபெறாமல் தடுக்க காதல் எனும் உயிர் கொல்லி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட வேண்டும். அன்று மட்டும் இல்லாம் எல்லா நேரங்களிலும் இந்த வழிப்புணர் பிரச்சாரங்கள் மக்களிடையே செய்யப்பட வேண்டும்.
Posted by Unknown Labels:
முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!! எச்சரிக்கை – கவனம் – உஷார்

பிள்ளை பெறுவது பெரிதல்ல! அதைப் பேணி வளர்ப்பது தான் பெரிது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இன்று நாம் நமது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்புகிறோம்.

காலையில் செல்லும் பிள்ளைகள் மாலையில் திரும்புகின்றனர். தினமும் பள்ளிக்குப் போய் படித்து விட்டு வருகின்றனர் என்று நாம் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

யாரேனும் ஒரு பள்ளி மாணவி, யாருடனோ ஓடி விட்டாள் என்று தகவல் வரும் போது, நம் பிள்ளை அப்படியெல்லாம் போகாது; நம் பிள்ளை தங்கக் கட்டி என்று ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் மீது தளராத நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

பிள்ளைகள் மீது இப்படி ஒரு நம்பிக்கை வைத்திருப்பதில் தவறில்லை. இருக்க வேண்டியது தான். ஆனால் தன் பிள்ளைகளின் நடவடிக்கை மீது ஒரு கண் வைக்காமல் இருப்பது, கவனிக்காமல் இருப்பது மிகப் பெரிய ஆபத்தை வரவழைத்து விடுகின்றது.

குறிப்பாக இன்றைய காலத்து சினிமாக் கலாச்சாரம் மாணவ, மாணவியரைப் பல தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றது.
பள்ளி விட்டு வந்ததும் நமது பிள்ளைகள் பாடம் படிப்பதை விட்டு விட்டு, படம் பார்க்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். சீரியல்களின் பிடியில் கட்டுண்டு இருக்கும் நாம் டி.வி.யைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது நமது பிள்ளைகளும் சேர்ந்தே பார்க்கின்றனர்.

நம்மால் அந்தப் பிள்ளைகளைத் தடுக்க முடிவதில்லை.
நம் வீட்டிலோ, வெளியிலோ ஆண், பெண் இருவர் கட்டிப் புரளும் காட்சிகளைப் பார்க்க முடியாது. குளிக்கும் பெண்கள் கூட ஆபாசமாகக் குளிப்பது கிடையாது.

ஆனால் இந்த சினிமாக் காட்சிகளில் படுக்கையறைக் காட்சிகள், ஆபாசக் குளியல் காட்சிகள் அப்பட்டமாக அப்படியே காட்டப்படுகின்றன. இந்தக் காட்சிகளைத் தான் டி.வி.களில் பெற்றோர், பிள்ளைகள் என அனைவரும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தையும் டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்றன. இதையும் பெற்றோர் சேர்ந்து கொண்டு தான் பார்க்கின்றனர். விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகின்றனர். உடனே பெற்றோர்கள் பிள்ளைகளைத் திட்டுகின்றனர். அவர்கள் தேர்வில் தோற்றதற்குத் தாங்களும் ஒரு காரணம் என்பதைப் பெற்றோர்கள் வசதியாக மறந்து விடுகின்றனர்.

செல்லப் பிள்ளைக்கு ஒரு செல்போன் பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும். இது பிள்ளைகளின் படிப்பைப் பாழாக்குவதன் காரணத்தால் தான் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் போன்ற இடங்களில் பாட நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதற்குத் தடை செய்துள்ளனர். செல்போன்களால் படிப்பு பாழாகின்றது என்பதற்கு இது சிறந்த சான்றாகும்.

செல்போன்கள் இவ்வாறு படிப்பை மட்டும் பாழாக்கவில்லை. அவர்களுடைய ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.
செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்களின் பட்டியலில் சிலவற்றை உங்கள் பார்வைக்குத் தந்திருக்கிறோம்.

1. நீலப்படங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அவை நம்முடைய பிள்ளைகளின் செல்போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டு, பரிமாறவும் படுகின்றன.

2. அழகான மாணவிகள் அவ்வப்போது நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ படம் எடுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு பல மாணவர்களின் பார்வைக்கு விருந்தாகப் படைக்கப்படுகின்றன.

3. SMS (Short Message Service) என்பது இப்போது Sex Message Service ஆக மாறி விட்டது. அந்த அளவுக்கு ஆபாசச் செய்திகள் இதில் பரிமாறப்படுகின்றன.

4. தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள்: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன. ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.

அண்மையில் நம்முடைய ரகசிய கண்காணிப்புக் குழுக்கள் மூலம், மகளிர் பள்ளிக்கூடங்கள் மற்றும் கோச்சிங் சென்டர்களைக் கண்காணித்ததில் பல அதிர்ச்சி தரும் செய்திகள் கிடைத்துள்ளன.

பருவமடைந்த பெண் பிள்ளைகள் சர்வ சாதாரணமாக வாலிபர்களுடன் செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாறுகின்றனர்.
பல சந்து பொந்துகளில் சந்திப்புகளும் நடைபெறுவதை அறிய முடிந்தது.

ஏற்கனவே வீட்டில் இருக்கும் கன்னிப் பெண்களும், திருமணமான பெண்களும் செல்போன் செக்ஸில் பலியாகி அந்நிய ஆடவருடன் ஓடிப் போகும் கொடுமை ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதையே நம்மால் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கும் போது, பள்ளிக்கூடம் செல்லும் பருவ வயதுப் பிள்ளைகள் பற்றிய இந்த அதிர்ச்சித் தகவல் நம்முடைய இரத்தத்தை உறைய வைக்கின்றது.

இந்த அதிர்ச்சித் தகவலைத் தெரிந்து கொள்ளும் பெற்றோர்கள் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக் கீழே தருகிறோம்.

தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன் கொடுக்காமல் இருத்தல்.
ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.

செல்போன் இல்லாவிட்டாலும் பள்ளி செல்கின்ற ஆண், பெண் பிள்ளைகளின் அனைத்து நடவடிக்கைகளின் மீதும் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள். உங்களது பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்’ என்ற ஹதீஸ் எல்லோருக்கும் பொருத்தமானது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு பொறுப்புதாரிகள். ஆண்கள் தமது கட்டுப்பாட்டுக்குக் கீழுள்ள குடும்பத்தினருக்கு பொறுப்பாளர்கள்.

எனவே, ஒவ்வொருவரும் தமது பொறுப்புக்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.‘நீங்கள் உங்கைளயும், உங்கள் குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்’
என்று அல்குர்ஆன் கூறுவைத நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். நரக நெருப்பின் விறகுகளாக நாம் மாறிவிடாதிருக்க அல்லாஹ் எமக்கு அருள்பாலிக்க வேண்டும். இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றுகின்ற மக்களாக நாம் மாறுவதற்கு அல்லாஹ்வின் உதவியை வேண்டி நிற்போம்.

இவ்வுலகில் - நாகரிகத்தையும், கவுரவத்தையும், அந்தஸ்தையும் விட. மானம், மரியாதையும். ஈமானும் இறையச்சமும்தான் முக்கியம்.
அல்லாஹ். அர்ரஹ்மான் நம் அனைவரையும். மானக்கேடான விஷயத்தில் இருந்து பாதுகாத்து, ஈமானோடு வாழவைத்து முஸ்லிமாக மரணிக்க செய்வானாக! ஆமீன்.
சிந்திப்போம் செயல்படுவோம்.

நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319 3456)
Posted by Unknown Labels:
இந்தியாவிலேயே மிகப் பெரிய பள்ளிவாசல்

கேரளாவின் கோழிகோட்டில் சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 ஏக்கர் பரப்பளவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.இத்தகவலை அதன் கட்டடக்கலை வடிவமைப்பாளர் ரியாஸ் முகம்மது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அடுத்த 5 மாத காலத்திற்குள் இதற்கான கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் பள்ளிவாசல் கட்டி முடிக்கப்படவுள்ளதாம் .

முகலாயர் கால கட்டடப் பாணியில் அமைக்கப்படவிருக்கும் இந்தப் பள்ளிவாசலில் ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் தொழுகை நடத்தலாம் என்றும் அவர் கூறினார்.மேலும், கருத்தரங்கு நடத்துவதற்கான ஆடிட்டோரியம் மற்றும் பெரிய நூலகமும் பள்ளிவாசல் வளாகத்தி்ல் கட்டப்படும் என்றும், 1000 பேர் தங்குவதற்கான வசதிகளும் செய்யப்படும்.
Posted by Unknown Labels:
தமிழக தேர்தலும் கழகங்களும் ஜமாத்களும் ஓர் பார்வை!

தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வர இருப்பதினால் தேர்தல் வேலைகளும் அரசியல் கட்சிகளின் கூட்டணி அமைக்கும் வேலைகளும் மும்முரமாக உள்ளன. கட்சிகள் சீட்டிற்காக அணிமாறும் காட்சிகளும் அரங்கேற ஆரம்பித்து விட்டன. இஸ்லாமிய இயக்கங்களும், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் தங்களுடைய அரசியல் களத்தின் வேலைகளையும் தொடங்க ஆரம்பித்து விட்டனர். த.மு.மு.க வின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி அ.தி.மு.க வுடனும் முஸ்லிம் லீக் தி.மு.க வுடனும் கூட்டு சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம்களின் தாய் கழகமான முஸ்லிம்லீக் வழக்கம்போல் ஒன்றோ அல்லது இரண்டோ சீட்டுகளை மட்டும் பெற்றுக்கொண்டு திமுகவின் தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நிற்கலாம்!. அல்லது தங்களின் சின்னத்தில் போட்டியிடலாம்!. இது இக்கட்சிக்கு ஆரோக்கியமான வளர்ச்சியல்ல!. முழுகட்சியையும் அது திமுக விடம் அடகு வைத்து பல வருடங்கள் ஆகிவிட்டன!.

இதற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் ஒன்பது அல்லது பத்து என்று சீட்டுகளை பேரம்பேசி வாங்குவதும், பா.ம.க போன்ற கட்சிகள் எல்லாம் முப்பது சீட்டுக்களை பேரம்பேசி (டிமான்ட்வைத்து) வாங்கும் அளவிற்கு குறுகிய காலங்களில் அசூர வளர்ச்சியடைந்து விட்டார்கள்!. ஆனால் சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இருந்து வரும் முஸ்லிம்லீக் கட்சி, தன் பிறை சின்னத்தின் மறுபக்கமான “தேய்பிறையாகவே” இருந்து வருகின்றது!. முன்பு தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சியாக இருந்த ஒரு மாபெரும் கட்சி இன்று, பாராளுமன்றத்திற்கு ஒரே ஒரு சீட்டை மட்டும் பெற்றுக்கொண்டு அதிலும் சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தன்மானத்தை இழந்து நிற்கின்றது. சமீபத்தில் கூட நடைபெற்ற முஸ்லிம்லீக் கட்சி நடத்திய மாநாட்டிற்கு கூடிய கூட்டத்தினை கண்டால், நமக்கே பிரமிப்பாக இருக்கின்றது.! இவ்வளவு செல்வாக்கை வைத்துகொண்டு இக்கட்சி ஏன் மேலும் மேலும் வளர்ச்சிபெற முடியாமல் திணறுகின்றது என்று நம்மால் கணிக்க முடியவில்லை!.

மேலும் மனிதநேய மக்கள் கட்சி சுமார் பதினேழு தொகுதிகளில் தங்களுக்கு வெற்றிபெறும் அளவிற்கு செல்வாக்கு உள்ளதாக கண்டறிந்து பொதுக்குழுவில் அந்த தொகுதியையும் அறிவித்தனர். இருந்தும் இவர்கள் மூன்று முதல் ஐந்து சீட்டுகளை மட்டுமே பெற்றுக்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. எத்தனை எத்தனை இஸ்லாமிய இயக்கங்கள் வந்தாலும் இன்னும் ஒன்றிற்கும் இரண்டிற்கும் அல்லது ஏதோவொரு குறிப்பிட்ட கோரிக்கையை நிறைவேற்றினாலே, “சமுதாய ஓட்டு அத்துனையும் உங்களுக்கே” என்று பேரம் பேசி, சமுதாயத்தினை அடகுவைக்கும் அவலநிலை மாறவேண்டும்!. நம்மின் பலத்தினை நாமே கேவலமாக எடைபோடுவதும் சரியல்ல!.

இந்திய தவ்ஹீது ஜமாத்தும் போட்டியிடப் போவதாக தெரியவில்லை!. ஆனால் ஆதரவை, அல்லது பிரச்சாரத்தினை மட்டும் இவர்கள் செய்வார்கள் என்றே தோன்றுகின்றது. நிச்சயமாக த.த.ஜ அணிக்கு மாற்றமான அணியில் இவர்கள் இடம்பெறுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்!. இப்படியே நாம் இக்கரைக்கு அக்கறை என்று முடிவெடுப்பதிலேயே அணைத்து இயக்கங்களும் தங்களை முன்னிலைப் படுத்துகின்றன.

மேலும் மானம் காக்குமா ம.ம.க?. என்று ஒருபுறம் இக்கட்சியை 18 சீட்டுகள் பெறவேண்டும் என்று தூண்டுவதும், பின் சேலத்தில் நடைபெற்ற த.த.ஜ பொதுக்குழுவில் ம.ம.க எங்கு நின்றாலும் தோற்கடிப்போம் என்று சீண்டுவதும், மாறுவேடம் போடுவதும் சமுதாய இயக்கமான த.த.ஜ விற்கு அழகல்ல!. ஒன்று இவர்கள் போட்டியிடவேண்டும்!. இல்லையென்றால் களத்தில் இருக்கும் இஸ்லாமிய இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அதுவும் இல்லையென்றால் அமைதியாக இருந்துவிட்டு செல்லவேண்டும். த.த.ஜ - தமுமுக விற்க்கு இடையே உள்ள ஈகோ மற்றும் பொறாமை காரணமாக சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை கிடைக்கவிடாமல் செய்வதற்க்கு ஆயிரமாயிரம் காரணம் கூறினாலும், இன்று நமக்கு உள்ள அரசியல் அதிகார தேவைக்கு அது உதவாது!. மாறாக அது நம்மை மேலும் வலுவிழக்கவே செய்யும்!.

முஸ்லிம் லீக் நின்றாலும் பிடிக்காது. ம.ம.க நின்றாலும் பிடிக்காது. ஆனால் நாங்களும் நிற்க மாட்டோம் என்று அடம்பிடிப்பது எந்தவகையில் நியாயம் என்று சமுதாய நலனை முன்னிலைப் படுத்தும் த.த.ஜ சிந்திக்கவேண்டும். உங்களுக்கிடையே உள்ள ஈகோவை எல்லாம் தேர்தலில் காண்பித்து நம் சமுதாயத்தின் பிரதி நிதித்துவத்தினை அடைய விடாமல் தடுப்பதை சிந்திக்கவேண்டும். அல்லது தேர்தலில் நாங்கள் நிற்கமாட்டோம் என்ற நிலைபாட்டில் இருந்து மாறி, தேர்தல் களம் கண்டு, முஸ்லிம்களின் பிரதிநிதியாக சட்டமன்றம் சென்று, நம் சமுதாய தேவைகளை நிறைவேற்றவேண்டும். அதுதான் ஒரு சிறந்த இயக்கத்திற்கு முன்னுதாரணமாக இருக்கும். அரசியல் வேண்டாம் என்றால் தேர்தலில் பிரச்சாரமும் செயக்கூடாது!. எந்த ஓட்டுப்பொறுக்கி அரசியல் வாதிகளையும் சந்திக்கக்கூடாது!.

மேலும் ஜமாத், இயக்கம் போன்ற அடைமொழிகளுடன் சிறிய சிறிய பத்துக்கும் மேற்பட்ட இன்னபிற இஸ்லாமிய இயக்கங்களும் அவர்கள் மனதிற்கு என்ன தோன்றியதோ, அதையே ஆதாரமாக வைத்து பணத்தினை மட்டும் பெற்றுக்கொண்டு தேர்தல் வேலைகள் செய்வதும் ஆரோக்கிய மானதல்ல!.

இந்த இயக்கங்கள் அனைத்தும் ஒன்றினைந்தாலே திமுக. அதிமுக காங்கிரஸ் என்று ஏதாவதொரு பெரிய அரசியல் கட்சியுடன் நாமும் முப்பது அல்லது நாற்பது தொகுதிகள் என்று பேரம்பேசி அதை இஸ்லாமிய இயக்கங்களுக்குள் பகிர்ந்துகொள்ளலாம். இது சாத்தியமா என்றால் ஒரே இறைவனை ஏற்றுக்கொண்ட நம்மால் சாத்தியமே!. இதுபோன்ற ஒரு முடிவை நாம் எட்டாதவரை இன்னும் பத்து தேர்தல்கள் வந்தாலும், இரண்டு மூன்று என்று மட்டுமே முஸ்லிம் சட்டமன்ற உறுபினர்களை சட்டமன்றத்தில் காணலாம். மேலும் தேர்தல் முடிந்தபிறகு ஆஹா பார்த்தீர்களா?. 234 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரே ஒரு முஸ்லிம்!. ஒரு அமைச்சர் கூட இல்லை!. இஸ்லாமியர்களின் நிலையை முன்னேற்ற சச்சார் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தவேண்டும் என்று போராட்டம் செய்து என்ன பயன்?.

தேசிய அளவிலும் நம்மை வழிநடத்த ஒரு வலிமையான இஸ்லாமிய இயக்கமோ அரசியல் கட்சியோ இல்லை!. அதற்கு முதலில் மாநிலம் தழுவிய அணைத்து இஸ்லாமிய இயக்கங்களும் முதலில் மாநில அளவில் ஒன்றினைய வேண்டும்!. பின் ஒன்றிணைந்த இக்கட்சிகள் தேசிய அளவில் பாராளுமன்ற தேர்தலில் ஒரணியில் நின்றால், எம்பி தொகுதியையும் நம் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் பெறமுடியும். ஆனால் செய்வார்களா?. இதுவே நம் அரசியல் உரிமையை பெற சரியான வழிமுறையாக இருக்க முடியும். முஸ்லிம்களின் ஓரணி என்ற கோட்பாடே நம் அரசியல் தீர்வுக்கு வழிவகையாகும். பின் நமக்கு சச்சார் கமிட்டியும் தேவை இல்லை!. சாச்சா கமிட்டியும் தேவை இல்லை!. நம்மை நாமே மாற்றிக்கொள்ளாத வரை நமக்கு எந்த அரசியல் கட்சியும் உரிமையை வழங்க முன்வராது!.

கடந்த தேர்தலில் கூட அணைத்து இஸ்லாமிய இயக்கங்களும் சென்னையில் ஒன்று கூடி ஒரே கூட்டணியில் நிற்பது என்று முடிவெடுத்து கடைசியில் ஆளுக்கொரு திசையில் வழக்கம்போலவே சென்றுவிட்டனர். ஆக அரசியியலில் நமக்கு எதிரிகள் வேறு யாரும் அல்ல! நமக்கு நாமே எதிரிகள்!!.

முஸ்லிம் சமுதாயத்தின் ஜமாத்/லீக்/கழகம்/பேரவை மற்றும் இத்யாதிகள்:
1. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
2. இந்திய தேசியலீக்
3.தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்
4. தமிழ் மாநில தேசிய லீக் (அல்தாப்)
5. தமிழ் மாநில முஸ்லிம் லீக்(ஷேக் தாவூத்)
6. தமிழ்நாடு முஸ்லிம் லீக் (தாவுத் மியக்கான்
7. தமிழ்நாடு மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் (சலிமுத்தீன்)
8. மமக(மனிதநேய மக்கள் கட்சி) என்ற “முஸ்லிம் பாமகா
9. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
10. இஸ்லாமிய இலக்கியக் கழகம்
11. இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம்
12. முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம்
13. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்
14. மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் (பாலை ரபீக்)
15. ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம் (சென்னை ஹமீத்)
16. ஜனநாயக மக்கள் கட்சி
17. இந்திய தேசிய மக்கள் கட்சி
18. இந்திய தேசிய மக்கள் கட்சி (குத்புதீன் ஐபக்)
19. தேசியலீக் கட்சித
20. இந்திய தவ்ஹீது ஜமாத்
21. இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்ட்
22. மறுமலர்ச்சி தவ்ஹீத் ஜமாஅத் (இணையதளம்)
23. ஜமாத் இ இஸ்லாமி
24. ஜமாத்துல் உலமா
25. ஷரியத் பாதுகாப்பு பேரவை
26. இஸ்லாமிய இலக்கிய பேரவை
27. பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா
28. எஸ்.டி.பி.ஐ -சோசியல் டெமோகிராடிக் பார்ட்டி ஆப் இந்தியா
29. பாரதிய முஸ்லிம் பார்ட்டி (சித்தீக்)
30. மில்லி கவுன்ஸில்
31. மஜ்லிஸே முஷாவரத்
32. ஜம்மியத்துல் உலமா இ ஹிந்த்
33. தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன்
34. முஸ்லிம் தனியார் சட்டவாரியம்
35. ஜம்மியத்துல் உலாமா (அர்ஷத் மதனி)
36. தமிழக முஸ்லிம் தொண்டு இயக்கம்
37. சிறுபான்மை புரட்சி இயக்கம் (லியாகத்அலிக்கான்)
38. சென்னை சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் கூட்டமைப்பு
39. தமிழ்நாடு சுன்னத்வல் ஜமாஅத் ஐக்கிய பேரவை
(ஷேஹூ அப்துல்லாஹ் ஜமாலி)

ஏம்பா, இனி நாமதான் மிச்சம்!. நாமளும் பிச்சை எடுப்பதை விட்டுவிட்டு “பக்கீர்ஷா லீக்/ பேரவை/ ஜமாத்/ கழகம்” என்று ஆரம்பிச்சா என்ன?.
இயக்கத்திற்கு மட்டும் குறையில்லை!. மற்றும் இங்கு குறிப்பிட மறந்து விட்டது பத்திற்கு மேல் இருக்கும்!. இந்தியா முழுமைக்கும் உள்ள நம் எதிரி இயக்கங்களின் எண்ணிக்கை இதில் பாதி கூட இல்லை!. ஆனால் தமிழ்நாட்டளவில் மட்டும் நாம் கண்ட அமைப்புகளின் என்னிக்கையை கண்டீர்களா?.

இந்திய மக்கள் தொகையைப்போல் எண்ணிக்கையில் அதிகமாகவே உள்ளது நம் இயக்கங்கள்!. ஆனால் ஊட்டச்சத்து இல்லாமல்தான் சவளைப் பிள்ளையாக நாம் இருக்கின்றோம். முதலில் இந்த சமுதாய இயக்கத்திற்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்கும் நிலைதான் தற்போது உள்ளது.சிந்திப்பார்களா!
Posted by Unknown Labels:
கண்ணியமிக்க ரமளானில் கடைசிப்பத்தில் நாமெல்லாம் இருந்து வருகின்றோம். ரமளான் பிறை 27 என்றாலே சட்டென்று நம் நினைவுக்கு வருவது லைலத்துல் கத்ர் உடைய இரவுதான். பொதுவாகவே மற்ற நாட்களை விட ரமளானில் பள்ளிகளில் கூட்டம் நிரம்பி வழியும். அதிலும் பிறை 27 வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். மக்கள் வெள்ளத்தால் பள்ளிவாசலே திக்குமுக்காடிப் போய்விடும்.

கண்ணியமும் மகத்துவமும் மிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...

(இந்த அல்குர்ஆனை) மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படி தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும்இ ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வெரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)

கண்ணியமிக்க ரமளானில் கடைசிப்பத்தில் நாமெல்லாம் இருந்து வருகின்றோம். ரமளான் பிறை 27 என்றாலே சட்டென்று நம் நினைவுக்கு வருவது லைலத்துல் கத்ர் உடைய இரவுதான். பொதுவாகவே மற்ற நாட்களை விட ரமளானில் பள்ளிகளில் கூட்டம் நிரம்பி வழியும். அதிலும் பிறை 27 வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். மக்கள் வெள்ளத்தால் பள்ளிவாசலே திக்குமுக்காடிப் போய்விடும்.

காரணம் அன்று தான் ஆயிரம் மாதங்களை விட சிறந்த லைலத்துல் கத்ர் உடைய இரவு என்று பரவலாக மக்களிடையே நம்பிக்கை நிலவி வருகின்றது. பல ஹஜ்ரத் மார்களும் பிறை 27 தான் லைலத்துல் கத்ர் என்று சொல்லி வருகின்றனர். சில அறிஞர்கள் பிறை 27 ல் இல்லை என்று மறுத்தாலும்,'பெரும்பாலான சான்றோர்களின் கருத்து' என்று சொல்லி மழுப்பி வருவதை பார்க்கின்றோம்.

லைலத்துல் கத்ர் இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்த கண்ணியமும்,மகத்துவமும் மிக்க இரவு என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. ஆனால் பிறை 27ல் தான் என்று குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ ஆதாரப்பூர்வமாக காட்ட முடியாது. மாறாக ரமளான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் (பிறை 21, 23, 25, 27, 29) ஆகிய இந்த ஐந்து இரவுகளில் அமைந்திருக்கலாம் என்பது தான் ஹதிஸ்களிலிருந்து பெறப்படும் உண்மையாகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். லைலத்துல் கத்ர் இரவை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் நீங்கள் தேடுங்கள். அறிவிப்பவர் :ஆயிஷh(ரலி) ஆதாரம் : புஹாரி

ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் மக்களிடம் வந்தார்கள். அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடி கொண்டிருந்தனர். அவர்களுடன் iஷத்தான் இருந்தான். எனவேஇ அதை நான் மறந்து விட்டேன். எனவே அதைக் கடைசிப் பத்து நாட்களில் தேடுங்கள். அறிவிப்பவர் : அபுஸயித் (ரலி) ஆதாரம் : முஸ்லிம்,அஹ்மத்

மேற்கண்ட ஹதீஸ் மூலம் இரண்டு சகோதரர்களுக்கு மத்தியில் ஏற்படும் சண்டை ஆயிரம் மாதங்களைவிட சிறந்த அந்த இரவு மறக்கடிக்கப்படும் அளவுக்கு அல்லாஹ்விடம் மிகுந்த கோபத்திற்குறியது என்பதை புரிந்து கொண்டு சண்டை சச்சரவுகளை விட்டும் தவிர்ந்து கொள்ளவேண்டும்.

எனவே இந்த லைலத்துல் கத்ர் இரவை கடைசிப்பத்தில் ஒற்றைப்படை இரவில் தேடுவதே மிகச்சிறந்ததாகும். அதையே நபி(ஸல்) அவர்கள் செய்து காட்டியும்இ வலியுறுத்தியும் உள்ளார்கள்.

இஃதிகாப்

ரமளானின் கடைசிப்பத்து நாட்களும் பள்ளிவாசலிலேயே தங்கியிருக்கும் இஃதிகாப் எனும் வணக்கத்தை நபியவர்கள் செய்து காட்டியுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப்பத்து நாட்களில் அவர்கள் மரணிக்கும் வரை இஃதிகாப் இருந்துள்ளார்கள். அறிவிப்பவர் : ஆயிஷh(ரலி) ஆதாரம் : புஹாரி, முஸ்லிம், அஹ்மத்

நபி(ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினால் சுப்ஹ் தொழுது விட்டு தமது இஃதிகாப் இருக்குமிடம் சென்றுவிடுவார்கள். அறிவிப்பவர் : ஆயிஷh(ரலி) ஆதாரம் : புஹாரி, முஸ்லிம், அஹ்மத், திர்மிதி, அபுதாவுத், இப்னுமாஜா

ஒற்றை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதை முன்பே நாம் அறிந்தோம். எனவே ஃபஜ்ரு தொழுதவுடன் இஃதிகாப் இருக்கத் துவங்குவார்கள் என்பது 21ம் நாள் ஃபஜ்ராக இருக்க முடியாது. அப்படி இருந்தால் அந்த இரவு அவர்களுக்குத் தவறி போயிருக்கும். 20ம் நாள் ஃபஜ்ரு தொழுது விட்டு இஃதிகாப் இருப்பார்கள் என்று விளங்குவதே பொருத்தமாகத் தெரிகின்றது.

ரமளானின் கடைசிப்பத்து நாட்களில் இஃதிகாப் இருக்க நாடியபோது அதற்கென கூடாரம் அமைக்க உத்தரவிட்டார்கள். அவ்வாறே அமைக்கப்பட்டது. இது முந்தைய ஹதிஸின் தொடராகும். பள்ளிவாசலில் இஃதிகாப் இருப்பதற்காக ஒரு கூடாரம் அமைத்துக் கொள்ளலாம் என்பதை இந்த ஹதிஸ் விளக்குகின்றது. ஆயினும் இது பொதுவான அனுமதியல்ல. அல்லாஹ்வின் தூதருக்கு மட்டுமே உரியதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை இந்த ஹதிஸின் அடுத்தப் பகுதி விளக்குகின்றது.

உடனே ஜைனப்(ரலி) அவர்கள் ஒரு கூடாரம் அமைக்க உத்தரவிட்டார்கள். அது அமைக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் சிலரும் அவ்வாறு உத்தர விட்டனர். அவ்வாறே அமைக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ரு தொழுது விட்டு பார்த்தபோது பல கூடாரங்கள் போடப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது அவர்கள்இ இவர்கள் நன்மையை தான் நாடுகிறார்களா? எனக் கேட்டு விட்டு தமது கூடாரத்தை பிரிக்குமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே பிரிக்கப்பட்டது.

நபி(ஸல்) அவர்கள் தமது கூடாரத்தை பிரித்து இஃதிகாபை விட்டதும் இவ்வாறு கூடாரங்கள் அமைப்பதில் அவர்களுக்கு இருந்த அதிருப்தியைதான் காட்டுகிறது.

நபி(ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்கும் போது மனிதனின் அவசியத் தேவை(மலஜலம் கழித்தல்) க்காக தவிர வெளியில் செல்ல மாட்டார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) ஆதாரம் : புஹாரி, முஸ்லிம், அஹ்மத்

இஃதிகாப் இருப்பவர் நோயாளியை விசாரிக்காமல் இருப்பதும்இ ஜனாஸாவில் பங்கெடுக்காமலிருப்பதும்இ மனைவியை தீண்டாமலும்இ அணைக்காமல் இருப்பதும்இ அவசியத்தேவையை முன்னிட்டே தவிர வெளியே செல்லாமலிருப்பதும் நபிவழியாகும். அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) ஆதாரம் : அபூதாவூத் இவற்றையெல்லாம் பேணி இஃதிகாப் இருக்கவேண்டும்.

லைலத்துல் கத்ரின் அமல்கள்

லைலத்துல் கத்ர் இரவுக்கென்று விசேஷமான தொழுகையோஇ பிரத்தியேகமான வணக்கமோ ஹதிஸ்களில் காணப்படவில்லை. ஆனாலும்இ நம்மில் பலர் நின்று வணங்க வேண்டும் என்பதால் நபி(ஸல்) அவர்கள் கற்று தராதவைகளை மார்க்கம் எனும் பெயரில் செய்து வருகின்றனர். அதில் ஒன்று தான் தஸ்பிஹ் தொழுகை எனும் வணக்கமாகும்.

அதாவது, முதல் ரக்அத்தில் ஸனா ஓதியவுடன் 15 தடவை ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். பின்னர் கிராஅத் ஒதிய பிறகு ருகூவுக்கு முன்னர் நிலையில்இ ருகூவில்இ பின்னர் நிலையில்இ ஸஜ்தாவில்இ இருப்பில் இப்படி 10 தடவையாக 4 ரக்அத்களில் மொத்தம் 300 தடவை ஓதி தொழுவது தான் தஸ்பிஹ் தொழுகை. இத்தொழுகையை வாழ்நாளில் ஒரு முறையாவது தொழ வேண்டும் என வலியுறுத்தியும் உள்ளனர் நம் மௌலவிகள்.

மேலும் இத்தொழுகை தொடர்பாக பல அறிவிப்புகள் இருந்தாலும் அவை அத்தனையும் ஆதாரமற்ற பலவீனமான அறிவிப்புகளாகும். அவற்றின் தரத்தை அறிந்து அதனை விட்டு விடுவது தான் அறிவுடைமையாகும்.

ஆதாரப்பூர்வமாக இல்லாத ஹதீஸ்களின் அடிப்படையில் செய்யும் அமல்கள் எந்த ஒரு நன்மையையும் பெற்றுத்தராது என்பதை கருத்தில் கொண்டு இப்படிப்பட்ட அமல்களை விட்டுவிடுவதே சால சிறந்தது.

மார்க்கத்தில் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளின் அடிப்படையில் செய்பவர்களைப்பற்றி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நம்மால் ஏவப்படாத செயலை மார்க்கம் என்ற பெயரில் எவரேனும் செய்வார்களேயானால் அது நிராகரிப்படும். அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) ஆதாரம் : முஸ்லிம்

மேலும் நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்... வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வார்த்தை. நடைமுறையில் சிறந்தது என்னுடைய நடைமுறை. மார்க்கம் என்ற பெயரில் புதிதாக உருவாகும் ஒவ்வொரு செயல்களும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகில் கொண்டு சேர்க்கும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) ஆதாரம் : புஹாரி

ஒருசிலர், நன்மையான காரியம் தானே. செய்தால் என்ள தவறு. அதை ஏன் தடுக்கிறீர்கள்? என்று கேட்கின்றார்கள். அவர்களுக்கான ஒரே பதில், மார்க்கம் என்ற பெயரில் நபி(ஸல்) அவர்கள் எதைக்கொண்டு வந்தார்களோ, எதை போதித்தார்களோ அவை மட்டும்தான் கியாமத் நாள் வரை வரும் அனைத்து மக்களுக்கும். மாறாக புதிதாக சேர்ந்த அனைத்து பழக்கங்களும் பித்அத் ஆகும். இதை பற்றியே நபி(ஸல்) அவர்கள் தன் இறுதி ஹஜ்-ல் ஹஜ்ஜத்துல் விதாவில் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

அவ்வாறு கூறுபவர்களுக்கு மேற்கண்ட நபி(ஸல்) அவர்களின் பொன்மொழியே போதுமானதாகும். மேலும் இத்தகைய சிறப்புவாய்ந்த லைலத்துல் கத்ர் உடைய இரவுகளில் நின்று வணங்கியும்இ குர்ஆன் ஓதியும்இ திக்ரு செய்தும் நம்முடைய அமல்களை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். வீணான பேச்சுக்கள்இ சண்டை சச்சரவுகள் இவற்றை அறவே தவிர்துக்கொண்டு இறைவனிடம் அதிகமதிகம் பாவமன்னிப்பு கோர வேண்டும். ரமளானுடைய நாட்களில் கேட்கவேண்டிய துஆ ஒன்றை நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள்.

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

அல்லாஹும்ம இன்னக்க அஃப்வன் துஹிப்புல் அஃப்வ பஅஃபு அன்னி

பொருள் : யா அல்லாஹ்! நீயே பாவங்களை மன்னிக்கக்கூடயவன். மன்னிப்பதை விரும்புபவன். (ஆகவே) என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக!!

மேற்கண்ட துஆவை நாம் அதிகமதிகம் ஒதி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடி கண்ணியமிக்க ரமளானின் மகத்துவமிக்க லைலத்துல் கத்ர் உடைய இரவுகளை அடைய முயற்சி செய்யவேண்டும். இந்த வருடம்தான் நம்முடைய கடைசி ரமளான் என்ற உள்ளச்சத்தோடு துஆ செய்வோமேயானால், அதுவே நம்முடைய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பதற்கு போதுமாதாகும். அப்படிப்பட்ட நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக!
Posted by Unknown Labels:

துபாய்,ஆக31:பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்த பிரபல மார்க்க அறிஞர் உமர் ஃபெனல்பாரின் உரையை கேட்ட 122 பெண்கள் உள்ளிட்ட 125 பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்தவர்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக அங்கீகரித்துள்ளனர்.

துபாய் டூரிஸம் அண்ட் கமர்ஷியல் மார்கட்டிங் துறையின் கீழ் அல்த்வாரில் உமர் ஃபெனல்பாரின் உரைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிலிப்பைன்ஸில் இவருடைய உரையைக்கேட்டு ஒரேநாளில் 99 பேர் இஸ்லாத்தை தழுவியதுதான் சாதனையாக இருந்தது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்தவர்களை இந்நிகழ்ச்சிக்கு அழைத்து வந்ததில் பெரும் பங்குவகித்தது ஐக்கிய அரபு அமீரகத்தைச் சார்ந்த பெண்மணிகளாவர்.


செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
Posted by Unknown Labels:
இன்றைய சூழ்நிலையில் நமது சமதாயம் விழிப்புணர்வுடன் இருக்க பல்வேறு இணையதளத்திலும் , ஈமெயிலிலும் வந்த பல செய்தி/ கட்டுரைகளை இங்கே சமர்ப்பித்துள்ளோம். இதனை அனைவருக்கும் எத்தி வைக்க இறைவனுக்காக கேட்டுக்கொள்கிறோம்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில், பயிலும் நமது இஸ்லாமிய சகோதரிகளிடம் கனிவாகப்பேசி, காதல் வயப்படுத்தி காபிர்களாக ஆக்க வேண்டும். வாழ்வை நாசமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கயவர் கூட்டங்கள் நீண்ட சதியின் அடிப்படையில் செயல்பட்டு வருவது தாங்கள் அறிந்த ஒன்றே. தற்பொழுது இந்த சதிவேலை பெருகி வருகின்றது என்பதனை ஒரு எச்சரிக்கையாக உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம். சமீபத்தில் இந்து முன்ணனி தலைவர் இராமகோபாலன் "ஒரு முஸ்லிம் பெண்னை காதலித்து, ஹிந்துவாக்கி மணம் புரியும் ஆணுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு" என அறிவித்துள்ளான். அத்துடன் எப்படி முஸ்லிம் பெண்களை தங்கள் காதல் வலையில் வீழ்த்தி அவர்களின் கற்பை சூறையாடுவது என்ற பயிற்சியும் இந்து இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் என்றுமில்லாத வகையில் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது.



இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து இதுவரை நமது கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மட்டும் பல முஸ்லிம் பெண்கள மாற்று மத ஆண்களுடன் ஓடிப்போய் இந்துவாக மதம் மாறி திருமண ம் முடித்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இதற்கு இந்து அமைப்புக்களும், ஓட்டைகள் பல கொண்ட நமது சட்டமும் துனை போகின்றது.
முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும் , நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்தாமல் உடனே செய்ய வேண்டும்.
இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள் :
1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்க தவறுவது.
2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.
3. மொபைல் போனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவனிக்காமல் இருப்பது.
4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.
5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது.
6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது.
7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் இஸ்ட்டப்படி உரிய கண்கானிப்பின்றி வாழ அனுமதிப்பது
8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது.
நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:-
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:
இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆன்: 24:37)
நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆன் 33:32)
1.அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.
2.ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
3.தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்.
4.வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனiவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது.
5.பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கித் தற வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது.
6.வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், கடைகாரர் என யாருக்கும் தர வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை தர வேண்டாம்.
7.தெரியாத எண்களில் இருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளாச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துன்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள். ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர், தந்தை, அல்லது உறவினர் அன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்பக்களோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே.
8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மர்களை பற்றியோ அல்லது குடும்பததினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள் மிக் கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே.
9. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும், பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன் , பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இழகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயனத்தை நீங்கள் துவங்கி விட்டீர்கள் என்று அர்த்தம்.
10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி என்களை தராதீர்கள், அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என் அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நன்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்னிற்கு தூன்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.
11. தோழிகள் துனைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நன்பர்களுடன் நீங்கள் வெளியே செலவதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன.
12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம்.முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெரிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்த விடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
13. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் - இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்.
14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முiறாயன ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும், செக்ஸியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்.
15. வட்டிக்கு வாங்குவது. தவணை முறையில் வாங்குவது (பைனான்ஸ்) போன்வற்றை தவிருங்கள்,
அந்நியருடன் ஓடிப்போகும் அல்லது ஓடிப்போன பெண்களின் நிலை :
பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் மார்க்க ஞானமில்லாததாலும், தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காவி கூட்டத்தால் பயிற்றுவிக்கப்பட்ட காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும், உரவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள்.
ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றால். இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவிக்கும் அந்த காவி காமுகன் பின்னர் இவளை தங்கள் கூட்டத்தினருக்கு இரையாக்குகின்றான். அவளது கர்ப்பை சுவைத்தபின்னர் சக்கையான இவள் தூக்கி வீசப்படுகின்றாள். இறுதியல் இளமையும், செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றால்.
இவள் நம்பிச் சென்ற காவி காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான் ஏனென்றால் இவனுக்கு இந்து முன்னனி போன்ற அமைப்புகள் ஒரு முஸ்லிம் பெண்னிற்கு 1 லட்சம் என்றும் எந்த போலிஸ் கேஸ் ஆனாலும் பார்த்தும் விடுகின்றார்கள். ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உரவினர்களை துறந்து சென்ற பெண்ணின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்.
இது போன்ற காமுகர்களின் இச்சைக்கு ஆளாகி கணவனின் செல்வத்தோடும், நகைகளோடும் குழந்தைகளை கூட விட்டு விட்டு ஓடிப்போகும் பெண்னின் நிலை...???


பெண்களே, மாணவிகளே, உங்கள் கற்பை சூறையாடி உங்களை நாசப்படுத்தி விபச்சாரியாக்கி, உங்கள் சமூகத்தை அவமானப்படுத்துவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட காமுகர்கள் உங்கள் முன் காதல் என்று வேஷம் போட்டு கபட நாடகம் ஆடுவர்கள் ஏமாந்து விட வேண்டாம்!!. பெற்றேர்களே, கணவன்மார்களே, நீங்களும் சற்று சிந்திப்பீர், வெள்ளம் கரைகடந்தபின் கதறாமல், இப்போதே அணைபோட திட்டமிடுவீர், உங்கள் பெண்பிள்ளைகளை கண்காணியுங்கள்.
சிந்திப்பீர் செயல்படுவீர்;!! சூழச்சிகளை நாம் சூழ்ச்சிகளால் வெல்வோம்!!
முஸ்லிம்கள் ஒருபோதும் முட்டாளாக இருக்க முடியாது!!
சிந்திக்க சொல்லும் மார்க்கம் இஸ்லாம்!! இஸ்லாத்தை வீட்டில் போதியுங்கள்....
Posted by Unknown Labels:

நபிமார்களுக்குப் பிறகு அவர்களின் சீரிய தெண்டுகளை அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின நேசர்கள் செய்தார்கள். அறியாமை இருளில் மூழ்கிக் கிடற்த சமுதாயத்தைத் தட்டி எழுப்பினார்கள். இவர்களின் உயரிய போதனைகளால் உறங்கிக் கிடந்த சமுதாயம் உணர்வு பெற்றது. இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் எழுச்சி பெற்றனர். ஏராளமானோர் நேர் வழி பெற்றனர்.

அதற்காக அவ்லியாக்கள் என்னும் அந்த இறை நேசச் செல்வர்களை நாம் போற்ற வேண்டும். கண்ணியப்படுத்த வேண்டும். அவர்களைப் போற்றுவது கண்ணியப்படுத்துவது என்பதெல்லாம், அவர்கள் வாழ்ந்த முறைப்படி நாமும் வாழ்வதும், அவர்கள் பேணி நடந்த நபி வழியை நாமும் பேணி நடப்பதும் தான்.அதை விட்டு விட்டு அவர்களின் கப்ருகளின் மீது கட்டடம் கட்டி, கந்தூரி என்ற பெயரில் ஆண்டு தோறும் கல்லறைகளுக்கு விழா எடுப்பதும், அர்ச்சனையும் ஆராதனையும் செய்வதும், நேர்ச்சை என்ற பெயரில் சமாதிகளை நாடிச் சென்று முடி எடுப்பதும், காணிக்கை செலுத்துவதும், உரூஸ் என்ற பெயரில் பாட்டுக் கச்சேரியும் பரத்தையர் நாட்டியமும் நடத்தி கண்டு களிப்பதும், சந்தனக் கூடு என்ற பெயரில் சமாதிகளுக்கு சந்தனத்தில் அபிஷேகம் செய்வதும், இவைகள் யாவுமே அந்த இறை நேசர்களை கேவலப் படுத்தும் செயல்களே தவிர கண்ணியப்படுத்தும் செயல்கள் அல்ல.

'எனது கப்ரைத் திருவிழா நடத்தும் இடமாக ஆக்கி விடாதீர்கள்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கிறார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத்)

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்திலேயே விழா நடத்துவது கூடாது என்றிருக்க அவ்லியாக்களின் கப்ருகளில் ஆண்டு தோறும் விழா நடத்துவது எவ்வளவு பெரிய பாவம் என்பதை உணர வேண்டும்.

அவ்லியாக்களின் சமாதிகளுக்குப் பூமாலை போடுவதும், போர்வை வாங்கிப் போர்த்துவதும், உண்டியலில் காணிக்கை போடுவதும், பாவச் செயல்களில் உள்ளவை. பூமாலையாலும் போர்வையாலும் அந்தப் புனிதர்களுக்கு என்ன பிரயோஜனம்? உண்டியலில் போடும் காணிக்கையால் அந்த உத்தமர்களுக்கு என்ன பயன்? இறை நேசர்கள் பெயரால் இடைத் தரகர்கள் அல்லவா கொள்ளை அடிக்கிறார்கள்?

யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக. அவர்கள் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்களாக்கி விட்டனர். அறிவிப்பவர்: அபூஹூiரா(ரலி) ஆதாரம் : முஸ்லிம்)

நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்கள் ஆக்கி விட்டவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்திருக்க, அவ்லியாக்களின் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்குவது எவ்வளவு பெரிய பாவம்?

பெண்கள் கப்ருஸ்தான்களுக்குச் செல்வதை பெருமானார் (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டிக்கிறார்கள். தர்காக்களுக்குப் பெண்கள் அறவே செல்லக் கூடாது.ஏனெனில் தர்காக்களும் கப்ருஸ்தான்கள் தான்.

கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தனர். (அறிவிப்பவர்: அபூ ஹூரைரா(ரலி) ஆதாரம்: அஹ்மத், திர்மிதி)

தர்காக்களுக்குச் செல்லும் பெண்கள் சபிக்கப் பட்டவர்கள். தம் குடும்பப் பெண்களை தர்காக்களுக்கு அழைத்துச் செல்லும் ஆண்கள் மாபெரும் குற்றவாளிகள் என்பதில் சந்தேகமில்லை.
Posted by Unknown Labels:


மும்பை:பிரிட்டனை தொடர்ந்து தற்போது கனடாவிலும் டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.டாக்டர் ஜாகிர் நாயக் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள டாக்டர் ஜாகிர், பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதை தொடர்ந்து, தான் வெளி உறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை இத்தடைகளை அகற்ற உதவுமாறு கேட்டுக்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.

கனடா தேசிய பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள அந்த செய்தியில், பிரபல இந்திய முஸ்லீம் பேச்சாளர் ஒருவர் கடந்த வாரம் பிரிட்டனில் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இனி கனடாவிலும் அவர் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, டாக்டர் ஜாகிர் நாயக் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்தார். தன் வீடியோ கேசட் ஒன்றை செய்தியாளர்களிடம் ஒப்படைத்த நாயக், தன் கருத்துக்கள் திரித்து எடுத்துக் கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனைத் தொடர்ந்து கனடாவிலும் தான் தடை செய்யப்படுள்ளதற்கு அரசியல் பின்னணிகள் தான் காரணம் என்று நாயக் மேலும் விளக்கினார். வரும் வாரங்களில் ஐ.ஆர்.எப். நிகழ்ச்சி ஒன்று கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், டாக்டர் ஜாகிர் நாயக் தடை செய்யப்பட்டுள்ளது கனடா முஸ்லீம்களிற்கு மட்டுமல்லாமல் மற்ற மதத்தார்களையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
Posted by Unknown Labels:

லண்டன் : உலக அமைதிக்காக பிரபல இந்திய இஸ்லாமிய பிராசரகர் ஜாகிர் நாயக் வருடந்தோறும் பீஸ் எனும் பெயரில் கருத்தரங்கத்தை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடத்தி வருகிறார். அப்படி ஒரு மாநாடு கடந்த வாரம் லண்டனில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் ஜாகிர் நாயக் மறைமுகமாக தீவிரவாதத்திற்கு துணை போவதாக கூறி இங்கிலாந்து அரசாங்கம் அவருக்கு தடை விதித்திருந்ததை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.

தற்போது அக்கருத்தரங்குக்கு வருகை தரவிருந்த பல இஸ்லாமிய பிராசரகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. குறிப்பாக தென் ஆப்பிரிக்காவிலிருந்து அரீப் இஸ்லாம் எனும் பிரசாரகருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அது போல் கனடாவை சேர்ந்த தற்போது கத்தாரில் வசிக்கும் பிரபல இஸ்லாமிய பிராசரகரான பிலால் பிலிப்ஸூம் லண்டன் விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜாகிர் நாயக்குக்காவது வருவதற்கு முன் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் தான் கடந்த சனிக்கிழமை காலை 8 மணிக்கு விமான நிலையத்தில் இறங்கியதாகவும் பின் காலை 11 மணிக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் கூறினார். மேலும் தங்களின் அமைதிக்கான மாநாட்டை தடை செய்வதன் மூலம் அவ்வெற்றிடத்தை தீவிர போக்குடையவர்கள் ஆக்கிரமிப்பதிற்கு இவர்களே காரணமாக இருக்கிறார்கள்.

தங்கள் கால்களை தாங்களே சுட்டு கொள்வதாக சொன்ன பிலால் பிலிப்ஸ் ஒரு விதத்தில் இதுவும் நன்மைக்கே என்றும் இவர்கள் வெறுத்த போதிலும் இறைவன் தன் ஒளியை பூரணமாக்கி வைப்பான் என்றும் கூறினார். இது குறித்து கருத்து தெரிவித்த ஒரு இணைய தள நிபுணர் கூகுள் தேடலில் ஜாகிர் நாயக் மற்றும் பீஸ் மாநாடு அதிகம் பார்க்கப்படுவதற்கும் இஸ்லாத்தை குறித்த தேடல்கள் இணையத்தில் அதிகரிப்பதற்குமே இது உதவும் என்று கூறினார்.
Posted by Unknown Labels:
Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.