லிபியாவில் 42 வருடங்களாக அதிபராக இருக்கும் முஆம்மர் கடாபிக்கு எதிராக மக்கள் நடத்தும் புரட்சி 4 வது நாளாக தீவிரமடைந்துள்ளது. கடாபி உடனே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரபு நாடான துனீஷிய மக்கள் எழுச்சியால் அதிபர் பின் அலி நாட்டை விட்டு ஓடிய பின்னர் அரபு நாடுகளில் மக்கள் அதிபர்களுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். துனூஷியாவைத் தொடர்ந்து எகிப்தில் நடந்த மக்கள் புரட்சியில் 32 ஆண்டுகள் தொடர்ந்து அதிபராக இருந்த முபாரக் பதவி விலகினார்.
இதனைத் தொடர்ந்து, அரபு நாடுகளான ஓமன், பெஹ்ரைன் போன்ற நாடுகளில் அதிபர்களுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் பட்டியலில் வட ஆப்பிரிக்க நாடான லிபியாவும் இணைந்துள்ளது. அங்கு மக்கள் 42 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் முஆம்மருக்கு எதிராக தொடர்ந்து 4 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர் பதவியை விட்டு விலகாவிட்டால் நாட்டைவிட்டு துரத்தப்படுவார் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முஆம்மிர் அரசு மக்கள் எழுச்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்க முயற்சி செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லிபிய மக்கள் புரட்சியில் ஏற்பட்ட கலவரத்தில் இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ளனர்.
Posted by
Unknown
Labels:
போராட்டம்
0 comments:
Post a Comment