1431 ஆண்டு கால இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களில் பெரும்பகுதியினர் இஸ்லாமிய மார்க்கத்திற்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை என்பதை வரலாறு நெடுக காண முடிகிறது. இது இன்று வரை தொடர்கதையாகவே இருக்கிறது.
மார்க்கத்தை விளங்காத மக்கள் செய்த துரோகத்தைக் காட்டிலும் விளங்கி புரிந்து கொண்ட ஆட்சியாளர்களும் அறிஞர்களும் தான் அதிகளவில் துரோகம் இழைத்துள்ளனர். இது உலகம் முழுவதும் நடந்து வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் தான் துனீஸியாவில் நடந்துள்ள சம்பவங்கள். இஸ்லாமிய வரலாற்றில் மிகப்பெரும் பாரம்பர்யத்திற்கு சொந்தமான நாடுதான் துனீஸியா. வடஆப்ரிக்காவில் மத்தியத் தரைக்கடலின் கரையோர இஸ்லாமிய நாடுகளில் ஒன்று. அரபியில் “மகரிப்” என சூரியன் மறையும் இடம் என்றழைக்கப்படும் நாடுகளான லிபியா, துனீஸியா, அல்ஜீரியா, மொரோக்கோ ஆகிய நாடுகளில் துனீஸியாவும் ஒன்று. கடந்த இரண்டு மாத காலமாக துனீஸியா மக்கள் அங்கு நடைபெற்று வரும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர். என்ன நடந்தது? 1987 ஆம் ஆண்டு முதல் ஜைய்னுல் ஆபீதின் பின் அலி என்பவர் துனீஸியாவின் அதிபராக இருந்தார். இஸ்லாமிய நாடுகளில் யார் ஆட்சி பொறுப்பிற்கு வந்தாலும் அவர் தங்களுக்கு அடிமைப்பட்டவராக இருந்தால் மட்டும் தான் அவரை ஆட்சியில் நீடிக்க விடுவோம் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்படும் வல்லு£றுகளான அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகள் துனீஸிய அதிபர் பின்அலி தங்களுக்கு அடிமை போல செயல்படுவதைக் கண்டு பூரித்துப் போய் அதிபர் பின்அலியின் அடாவடித்தனம் அனைத்தையும் கண்டும் காணாமல் இருந்தனர். 27 ஆண்டு கால பின் அலியின் ஆட்சியில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரான மேற்கத்திய கலாச்சாரத்தையும் பண்பாட்டினையும் வலிந்து மக்களிடம் திணிக்கும் சர்வாதிகாரியாக ஆட்சி செய்தார்.
முதலில் பின்அலி அடிப்படையில் தான் ஒரு முஸ்லிம் என்பதையும் இஸ்லாமிய பாரம்பர்யமிக்க நாட்டின் ஆட்சியாளன் என்பதையும் மறந்து இஸ்லாத்தை துனீஸியாவிலிருந்து அகற்றிட தேவையான அனைத்து நடவடிக்கையும் சட்டப்பூர்வமாக்கினார். ஒன்றரை கோடி மக்கள் தொகையைக் கொண்ட துனீஸியாவில் 99 விழுக்காடு சன்னி முஸ்லிம்கள். மாலிகி மத்ஹபைப் பின்பற்றுகின்றனர். சிறிய அளவில் காரிஜியாக்கள் எனும் எதிர் புரட்சியாளர்களும் உள்ளனர். இப்படி முஸ்லிம்கள் நிறைந்த நாட்டில் பொதுச் சட்டத்தில் ஃபிரென்ஞ்சிவில் சட்டத்தைப் புகுத்தி பெருவாரியான முஸ்லிம்களை குடும்ப இயலில் ஷரிஅத்திலிருந்து விலகிட வைத்தார். இன்றும் துனிஸியாவில் பாகப்பிரிவினை இஸ்லாமிய அடிப்படையில் நடைபெறுவது கிடையாது. அதேபோல பலதார மணத்திற்கு தடைச்சட்டம் இயற்றிய ஒரே முஸ்லிம் நாடு துனீஸியா தான். விவாகரத்திற்கு கடுமையான தடைகள். பெண்கள் ஹிஜாப் அணிய சட்டரீதியான தடை. தொழுகை முடிந்தவுடன் பள்ளிவாசலை பூட்ட வேண்டும். பொது இடங்களில் தொழுகை நடத்த தடை. இஸ்லாமிய கலாச்சாரத்தோடு வாழும் ஆண்கள் காவல்துறையால் துன்புறுத்தப்பட்டனர். வலுக்கட்டாயமாக தாடியை மழிக்க வைக்கப்பட்டனர். இஸ்லாமிய அடிப்படையில் இயக்கங்கள் நடத்த தடை என்று 27 ஆண்டுகளாக துனீஸிய மக்களை அடக்கி வைத்துக் கொண்டிருந்தார் அதிபர் பின் அலி. ஒரு முஸ்லிம் ஆட்சியாளராலேயே முஸ்லிம்கள் இஸ்லாத்தை விட்டு விலக நேரந்தது. மேலும் இவரது கண்மூடித்தனமாக மேற்கத்திய அடிமைத்தனமும் பொருளாதார கொள்கையில் இவர் பின்பற்றிய மேற்கத்திய வழிமுறையும் பின் அலியின் மனைவி முதல் ஒட்டு மொத்த குடும்பமும் சேர்ந்து அடித்த கொள்ளையின் காரணமாகவும் துனீஸியாவின் பொருளாதாரம் நசிந்தது. வேலை இல்லாத் திண்டாட்டம் எல்லை மீறிச் சென்றது. உணவுப் பொருட்களின் கட்டுக்கடங்காத விலையேற்றம், லஞ்சம், ஊழல், மனித உரிமை மீறல்கள், நசிந்துபோன வாழ்க்கை தரம் என்று மக்கள் விழி பிதுங்கி நின்றனர். இந்த நேரத்தில் தான் துனீஸியாவின் ‘சித்திபஅசித்’ என்ற நகரில் காய்கறி கடைவைத்திருந்த பட்டதாரி முகம்மது பவுசி என்ற 24 வயது இளைஞன் காவல்துறையின் அட்டூழியம் தாங்காமல் தற்கொலை. செய்து கொண்டான். செய்தி துனீஸியா முழுவதும் பரவியது. காத்துக் கொண்டிருந்த மக்கள் வெடித்துக் கிளம்பி தெருக்களில் அரசிற்கு எதிராக போராட்டத்தை தொடங்கினர். மேலும் தற்கொலைகள் நடந்தன. காவல்துறை மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். புரட்சி மேலும் தீவிரமாகியது. துனீஸியாவில் உள்ள 90 விழுக்காடு வழக்கறிஞர்களும் போராட்டத்தில் குதித்தனர். பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டவுடன் அவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.
உலகம் முழுவதிலுமிருந்த மனித உரிமை அமைப்புகள் பின் அலியை கடுமையாக விமர்சித்தன. கருத்துச் சொல்லும் எல்லோரையும் ஒடுக்க நினைத்தார். அல்ஜஸீரா தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தடை, இணைய தளத்திற்கு தடை என்று எல்லாம் செய்து பார்த்தார். மக்கள் புரட்சி மேலும் தீவிரமாகியது. இறுதியாக தங்கள் எஜமானர்களான அமெரிக்கா மற்றும் ஃபிரான்ஸிடம் கெஞ்சிப் பார்த்தார். அவர்கள் எப்போதும் “நன்றி” உள்ளவர்கள் அல்லவா! அவர்களும் சரியான சமயத்தில் பின்அலியை கழற்றிவிட்டனர். கையில் கிடைத்த தங்க கட்டிகளுடன் புகழிடம் தேடி புறப்பட்ட பின் அலியின் விமானத்தை தரையிறங்கிட ஃபிரான்ஸ் அரசு அனுமதி தரவில்லை. வேறு வழியில்லாமல் சவூதி அரேபியாவில் தற்போது தஞ்சம் அடைந்துள்ளார். பின்அலி புறப்படும் முன் அவரது ஆதரவாளர்களை வைத்து அமைத்த தற்காலிக அரசையும் எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். துனீஸியாவில் ஏற்பட்டுள்ள இந்த மக்கள் புரட்சி அருகில் உள்ள நாடுகளுக்கும் பரவி வருகிறது. அல்ஜீரியா, ஜோர்டான், எகிப்து போன்ற நாடுகளில் வேலை இல்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, உணவுப் பொருள் தட்டுப்பாட்டின் காரணமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உலகில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தின் மேம்பாட்டிற்காக இறைவன் இஸ்லாமிய நாடுகளில் வழங்கிய வளங்களை ஒருசிலர் மட்டும் கொள்ளையடித்து வருகின்றனர். இந்த கொள்ளையர்களுக்கு பாதுகாப்பளித்து அவர்களோடு சேர்ந்து கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள். இதன் காரணமாக 57 இஸ்லாமிய நாடுகளில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. இஸ்லாத்திற்கு துரோகம் செய்யும் முஸ்லிம் ஆட்சியாளர்களின் நடவடிக்கை தொடர்கிறது. தீர்வு எப்போது?
Posted by
Unknown
Labels:
புரட்சி
இஸ்லாமிய திருமணங்களை வீடியோ எடுப்பது இன்று சர்வ சாதரணமாகிவிட்டது. இதனால் ஏற்படும் விபரீதங்களை யாரும் உணர்வதில்லை. இதுகுறித்து ஒரு எச்சரிக்கை ரிப்போட். இது அனைத்து சமுதாய மக்களுக்கும் பொருந்தும். எனவே நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
முன்னதாக அதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் சனிக்கிழமையன்று சந்திப்பு நடத்திவிட்டு வெளியில் வந்த மமகவின் ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லா அதிமுகவுடன் தொகுதிப் பங்கிடு முடிவடைந்துவிட்டது. ஞாயிற்றுக் கிழமயன்று ஜெயலலிதாவின் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் செய்யப்படும் என்று கூறியிருந்தார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை எதிர்த்து கூட்டணியில் இருந்து விலகி, 4 தொகுதிகளில் போட்டியிட்ட மமகவிற்கு அதிமுக 2 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதாக செய்திகள் வெளியானது மமக தொண்டர்களிடம் சோர்வை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் மமகவிற்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும் புதுவை சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு இடம் அளிக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா உறுதி அளித்தார்
Posted by
Unknown
Labels:
TMMK
லிபியாவில் 42 வருடங்களாக அதிபராக இருக்கும் முஆம்மர் கடாபிக்கு எதிராக மக்கள் நடத்தும் புரட்சி 4 வது நாளாக தீவிரமடைந்துள்ளது. கடாபி உடனே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரபு நாடான துனீஷிய மக்கள் எழுச்சியால் அதிபர் பின் அலி நாட்டை விட்டு ஓடிய பின்னர் அரபு நாடுகளில் மக்கள் அதிபர்களுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். துனூஷியாவைத் தொடர்ந்து எகிப்தில் நடந்த மக்கள் புரட்சியில் 32 ஆண்டுகள் தொடர்ந்து அதிபராக இருந்த முபாரக் பதவி விலகினார்.
இதனைத் தொடர்ந்து, அரபு நாடுகளான ஓமன், பெஹ்ரைன் போன்ற நாடுகளில் அதிபர்களுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் பட்டியலில் வட ஆப்பிரிக்க நாடான லிபியாவும் இணைந்துள்ளது. அங்கு மக்கள் 42 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் முஆம்மருக்கு எதிராக தொடர்ந்து 4 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர் பதவியை விட்டு விலகாவிட்டால் நாட்டைவிட்டு துரத்தப்படுவார் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முஆம்மிர் அரசு மக்கள் எழுச்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்க முயற்சி செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லிபிய மக்கள் புரட்சியில் ஏற்பட்ட கலவரத்தில் இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ளனர்.
Posted by
Unknown
Labels:
போராட்டம்
ஆந்திராவை பிரித்து தனி மாநிலம் அமைக்ககோரி தெலுங்கானாவில் கடந்த சில ஆண்டுகளாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் தனி மாநிலம் அமைப்பது பற்றி ஆராய்ந்த ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி, தெலுங்கானா அமைப்பது பற்றி 6 அம்ச பரிந்துரைகளை கூறி இருந்தது. இதை தெலுங்கானா ஆதரவாளர்கள் ஏற்கவில்லை. இந்நிலையில் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கானாவில் உள்ள அரசு ஊழியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள். இதனால் தெலுங்கானா பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தும் வெறிச்சோடின. அரசு பணிகள் எதுவும் நடைபெறாததால் தெலுங்கானா ஸ்தம்பித்தது. அங்கு அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Posted by
Unknown
Labels:
போராட்டம்
புதுடெல்லி, பிப்.18- அயோத்தியில் பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி கரசேவகர்களால் இடித்துத் தள்ளப்பட்டது. இந்த வழக்கில் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 20 பேர் மீது மசூதி இடிப்புக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனை விசாரித்த சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் கடந்த 2001இல் அத்வானி உள்ளிட்ட தலைவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது. இதனை எதிர்த்து ஐக்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஐக்கோர்ட்டும் கீழ்கோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்து கடந்த ஆண்டு மே20ந்தேதி தீர்ப்பளித்தது. இந்நிலையில் தற்பொழுது சி.பி.ஐ. இன்று அத்வானி உள்ளிட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இன்று மேல் முறையீடு செய்துள்ளது. தற்பொழுது பல்வேறு ஊழல் பிரச்சினைகளில் மத்திய அரசு சிக்கித்தவித்து வருகிறது. இந்நிலையில் சி.பி.ஐ. அத்வானி மீது மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Posted by
Unknown
Labels:
பாபர் மசூதி
கருணாநிதி, எடியூரியப்பா மற்றும் சவான்! ஊழலில் யார் பெரிய வல்லுனர்?
காங்கிரஸின் பாரபட்ச பிரச்சினையாக்கி வரும் முறை: மாநில முதன் மந்திரிக்கு, தன்னுடைய அதிகாரத்தில் / இச்சைக்கேற்ற முறையில், குறிப்பிடபட்டுள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப, நிலத்தை ஒதுக்கீடு செய்யலாம். குறிப்பாக, ஒரு மாநிலத்தில், அவ்வாறு காலி மனை ஒதுக்கீட்டின் முறையில் பெறுவதாக இருந்தால், வேறெங்கும் சொந்தமாக மனையோ, வீடோ இருக்கக் கூடாது. வாங்கிய நிலத்தை வேறொருவருக்கும் விற்க்கக்கூடாது இப்படி சரத்துகள் இருக்கும். அவ்வாறுத்தான், சுதந்திரம் கிடைத்ததிலிருந்து, எல்லா மாநில முதன்மந்திரிகள் செய்து வருகிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் அல்லாத கட்சி என்று வரும் போது மட்டும், ஆளும் அல்லது அதிகாரத்தைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, தனது ஊழலை மறைக்க மற்றவர்களது இத்தகைய நில ஒதுக்கீடு விஷயத்தை பிரச்சினையாக்கி வருகிறது.
மஹாராஷ்ட்ரத்தில் நடந்தது: மஹாராஷ்ட்ரத்தில், கார்கிலில் உயிர் துறந்த தியாகிகளுக்கு என்று ஒதுக்கப் பட்ட, நிலத்தில், மற்றவர்கள், குறிப்பாக கோடீஸ்வரர்கள், அரசியல்வாதிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் என்று பலர் ஒதுக்கீட்டின் கீழ், அந்த இடத்தில் அடுக்கு மாடி வீடு கட்டி, பலன் பெற்றானர். அதுதான், அங்கு, பிரச்சினையாகி, ஊழலாக விஸ்வரூபம் எடுத்தது. முதன் மந்திரி, சவான் ராஜினானமா செய்தார்.
கர்நாடகத்தில் நடந்தது: கருநாடககத்திலும், அவ்வாறே, ஒவ்வொரு முதல் மந்திரியும் நிலத்தை தனக்கு வேண்டியவர்களுக்கு ஒதுக்கீடு செய்து வந்துள்ளனர். அதன்படியே, எடியூரியப்பா, தனது மகனுக்கு நிலத்தை அரசு ஒதுக்கீட்டின் முறையில் கொடுத்தார். பிரச்சினை வந்ததும் / பிரச்சினையாக்கியதும், நிலம் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், காங்கிரஸ் அங்கு பிரச்சினையாக்கியுள்ளது. ஊழல் பிரச்சினை, முதன்மந்திரி-கவர்னர் பிரச்சினையாகி விட்டது,
தமிழகத்தில் நடந்தது: தமிழகத்திலும், கருணாநிதி அவ்வாறே செய்துள்ளார். இருப்பினும் காங்கிரஸ் இங்கு கண்டு கொள்ளாவில்லை. கவர்னர் சுஜித் சிங் பர்னாலா, மிகவும் வேண்டப்பட்ட நண்பர், ஆகையால், எந்த பிரச்சினையும் இல்லை. கே.ஜி.பாலகிருஷ்ணனின் குமாச்தாவிற்கு, வீட்டுமனை ஒதுக்கினாலும், ஜாஃபர் சேட் அல்லது வேறு எந்த அதிகாரிக்கு ஒதுக்கினாலும் யாரும் ஒன்றும் கேட்க முடியாது. சுப்ரமணியம் சுவாமி, இப்பிரச்சினையை எழுப்பியதும், எடியூரியப்பாவைப் போன்றே, முன்பு, ஜெயலலிதா, யார்-யாருக்கெல்லாம், ஒதுக்கீடு செய்தார், என்ற படியலைப் படித்துக் காட்டினார்.
இக்கால அரசியல்வாதிகள் சமநீதி சமத்துவவான்கள் அல்லர்: உண்மையில், இந்த அரசியல்வாதிகள் ஒன்றும், நியாயவன்கள், தர்மவான்கள், நீதிக்குக் கட்டுப்பட்டவர்கள் இல்லை. அவ்வாறு, இருந்திருந்தால், நிச்சயமாக, மனுநீதி சோழன் போல, தன் மகன் என்ரும் பாராமல், தேர் ஏற்றித்தான் கொன்றிருப்பான். ஆனால், இவர்களோ, தமது சுற்றத்தார்களுக்கு, வேண்டியவர்களுக்கு என்ரு வரும்போது, மற்றவர்காஇக் கொல்லவும் தயாராக இருக்கிறார்கள். ஆக, இவர்களிடத்தில் நியாயத்தை, தர்மத்தை எதிர்பார்க்க முடியாது.
காங்கிரஸின் ஊழல் ஆட்சி-மறைக்கும் போக்கு: ஆனால், வெட்கங்கெட்ட காங்கிரஸ், இதையும் வைத்துக் கொண்டு அரசியல் செய்கிறது. காங்கிரஸ் அல்லாத மாநிலங்களில், ஏதாவது பிரச்சினை கிளப்பிவிட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பதே குறிக்கோளாக, அத்தகைய வேலையை சேய்து வருகின்றது. அதகு, அரசு எந்திரங்கள். ஊடகங்கள் முதலிய, தாராள்மாக ஒத்துழைக்கின்றன. இங்குதான், அந்த வித்தியாசம் காட்டப் படுகிறது. காங்கிரஸுக்கு ஒரு பிரச்சினை வந்துவிட்டால், உடனே அதை திசைத் திருப்ப, வேறு பிரச்சினையை எடுத்து வரும் அல்லது உருவாக்கும். அதன்படித்தான், ஸ்பெக்ட்ரம் ஊழல், காமம்வெல்த் ஊழல், ஆதர்ஸ ஊழல், போஃபோர்ஸ் ஊழல்,என தொடர்ந்து ஊழலில் நாறி அசிங்கப்பட்ட் போதுதான், இத்தகைய வேலையை ஆரம்பித்துள்ளது.
Posted by
Unknown
Labels:
ஊழல்
2ஜி ஊழல் விசாரணையின் அடுத்தகட்டமாக தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக ராஜ்ய சபா உறுப்பினருமான கனிமொழியிடம் சிபிஐ விசாரணை நடத்த இருப்பதாக தெரிய வந்துள்ளது. டிபி ரியல்டி நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவிக்கு சுமார் 240 கோடி பணம் சென்றது குறித்து கலைஞர் டிவின் பங்குதாரர் என்ற முறையில் கனிமொழியிடமும், கலைஞர் டிவியின் தலைமை அதிகாரி சரத் குமாரிடமும் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்து கேள்விகளை அனுப்பியுள்ளது.
2ஜி ஊழல் விவகாரத்தில் நாட்டின் பெரிய நிறுவனங்களான டாடா, ரிலையன்ஸ் போன்றவை விசாரணைக்குள்ளாகியிருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன் ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானியிடம் சிபிஐ விசாரணை செய்தது. விரைவில் ரத்தன் டாடாவிடமும் விசாரணை செய்யப்படலாம் என்ற பேச்சு இருக்கும் நிலையில், கனிமொழியிடம் விசாரிக்க இருப்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல என சிபிஐ கருதுகிறது.
Posted by
Unknown
Labels:
ஊழல்
சி.பி.ஐ உண்மையில் உதவுகிறதா, ரெய்ட் நடத்துகிறதா? எங்கள் கணக்குகளை சோதனையிடலாம் என்று கலைஞர் டிவி சொன்னவுடன், சி.பி.ஐ. ரெய்ட் நடத்துகிறதாம்! அதாவது “வாங்க, வாங்க”, என்று இவர்கள் அழைத்ததும், வந்து விட்டார்களாம்! உண்மையில் யெய்ட் நடத்துவதாக இருந்தால், இப்ப்டி நேரம், காலம் பார்த்தா ரெய்ட் நடத்துவார்கள்? ஏதோ சொல்லிவிட்டு வந்தது போல இருக்கிறது. இல்லை, அரசியல் ரீதியில், “பார், உனது த்லைமை அலுவலகத்திலேயே நுழைந்து விட்டேன், என்னை ஒன்றும் செய்ய முடியாது”, என்று சோனியா கருணாநிதியை மிரட்டிப் பார்க்கிறாரோ என்னமோ?
கணக்குகளை சோதனையிடுவதற்கும், சரிபார்ப்பதற்கும் வித்தியாசம் இல்லையா என்ன?: இதில் தமிழில் கணக்குகளை சரிபார்க்கலாம்[1] என்று வேறு போட்டிருக்கிறார்கள்! கணக்குகளை சோதனையிடுவதற்கும், சரிபார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. சர்பார்க்கும் வேலை சி.பி.ஐக்குக் கிடையாது, அதை அந்த கமெனியின் ஆடிட்டர்கள் செய்வார்கள். இருப்பினும் காங்கிரஸ் பீரோ ஆஃப் இன்வெஷ்டிகேஸன் என்ற நிலையில், அவ்வாறு, கூட்டணிக் கட்சிக்கு உதவி செய்திருக்கலாம்[2]. அவ்வாறே, கிண்டலாக, இந்த ஊடகங்கள் அறிவித்திருக்கலாம்! சரத்குமார், வி. கே. சாக்ஸேனா, ஜெயின் முதலியோரிடம் விசாரணை நடத்தப் பட்டது. குற்றஞ்சாட்டப்படுவதற்கு சாதகமாக உள்ள ஆவணங்களும் பரிமுதல் செய்யப்பட்டதாக ஊடகங்கள் அறிவிக்கின்றன. காலை ஆறு மணிக்கு இந்த யெய்ட் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது[3].
சென்னைவாசிகளுக்கேத் தெரியாத ரெய்ட்! கனிமொழியை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, அவ்வாறு தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினாராம்[4]. பாவம் சென்னைவாசிகளுக்கும் தெரியாது தான்! அவ்வழியாக சென்று கொண்டிருந்தவர்கள் கூட கண்டு கொள்ளவில்லை. வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அலுவலகங்களுக்கு செல்பவர்களும் சென்று கொண்டிருந்தனர். பிரஸ் என்று இரண்டு வண்டிகள் அண்ணா அறிவாலயம் அர்கில் நிற்பதையும், போலீஸார் வாசலில் நிற்பதையும் கூட யாரும் வித்தியாசமாக எடுத்துக் கொள்ளவில்லை!
கனிமொழி மற்ற பங்குதாரர்களிடம் விசாராணை நடக்குமா? மற்ற கம்பெனிகள் விஷயத்தில், அந்தந்த கம்பெனிகளின் மானேஜிங் டைரக்டர் வரவழைக்கப் பட்டு, விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. அதே போல கனிமொழி மற்ற கலைஞர் டிவி பங்குதாரர்களிடம் விசாராணை நடக்குமா என்று கேள்விக் கணை எழுப்பப்பட்டுள்ளாது.
கலைஞர் டிவியில் ரெய்ட் நடக்கிறதாம்! 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சி அலுவலகங்களில் மத்திய புலனாய்வு அமைப்பினர் (சிபிஐ) இன்று 18-02-2011 அதிரடி சோதனை நடத்தியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது[5]. நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2ஜி ஊழலில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகம் கூறிவந்த நிலையில் அத்தொலைக்காட்சி அலுவலகங்களில் இந்த திடீர் சோதனை நடைபெற்றுள்ளது. கலைஞர் தொலைக்காட்சியின் குறிப்பிட்ட நிதிப் பரிவர்த்தனைகள் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
எங்கள் கணக்குகளை சிபிஐ சரி பார்க்க ஆட்சேபனை இல்லை-கலைஞர் தொலைக்காட்சி[6]: சிபிஐக்கோ, வருமான வரித்துறைக்கோ எந்தவிதமான சந்தேகமும் இருக்குமானால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆவணங்களையும், கணக்குகளையும் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதிலே எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று அந்தத் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10-2-2011 அன்று நான் விடுத்த அறிக்கையில், 2007- 2008ம் ஆண்டில் மத்திய தொலை தொடர்பு துறையால் ஒதுக்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை விவகாரத்திற்கும், 2009ம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் சினியூக் நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட கடன் பரிவர்த்தனைக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.
கடனாக பாவிக்கப் பட்டுத் திருப்பிக் கொடுத்தாகி விட்டது: சினியூக் நிறுவனத்திடம் இருந்து கடனாகப் பெற்ற ரூ.200 கோடியை கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தினால் திருப்பித்தரப் பட்டுவிட்டது. அந்தத் தொகைக்கான வட்டியாக ரூ.31 கோடி கொடுக்கப்பட்டது என்றும், அந்த பரிவர்த்தனை முழுவதும் வருமான வரித் துறைக்கு தெரியப்படுத்தப்பட்டு, அதற்கான வரியும் முறையாக செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தேன். இதற்கு பிறகும் இந்த கடன் பரிவர்த்தனை குறித்து மத்திய புலனாய்வுத்துறை நீதி மன்றத்திலே குறிப்பிட்டுள்ளது. எனவே மத்திய புலனாய்வுத் துறைக்கோ, வருமான வரித்துறைக்கோ எந்தவிதமான சந்தேகமும் இருக்குமானால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆவணங்களையும், கணக்குகளையும் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதிலே எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று கூறியுள்ளார்.
Posted by
Unknown
Labels:
ஊழல்
மதுவுக்கு அடிமையோ இல்லையோ, கோலாவுக்கு அடிமை என்கிறவர்கள் பலருண்டு.
கொகா கொலாவின் தனித்தன்மை வாய்ந்த ருசி எந்த சூழ்நிலையிலும் சுவைத்து பருகும் மனநிலையை மக்களிடம் கொண்டுவந்துவிட்டது. பொதுவாக நீங்களும் கொகா கோலாவுக்கு அடிமையாக இருக்கலாம்.
இதன் ருசியை உருவாக்கும் மதிநுட்பம், கொகாகோலா நிறுவன ஊழியர்களுக்கு மாத்திரமே தெரிந்த இரகசியம்! ஆனால், இப்போது This American Life's எனும் சஞ்சிகை, கொகாகோலாவில் சேர்க்கப்படும் இராசயனங்களுக்கான துல்லியமான கலவைவிகிதம் எழுதப்பட்ட புத்தக பக்கம் ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1979ம் ஆண்டு Atlana Journal - Constitution எனும் புத்தகத்தில் இக் கலவைவிகிதம் எழுதப்பட்டுள்ளது. இதை அப்படியே படம்பிடித்திருந்த த அமெரிகன் லைஃப் இப்புகைப்படத்தை வெளியாக்கியதிலிருந்து கொகா கோலாவை இனி உங்கள் வீடுகளிலும் நீங்களே செய்யலாம் எனும் தொணியில் ஊடகங்கள் போட்டி போட்டு எழுத தொடங்கிவிட்டன.
ஆனால், கொகா கோலாவின் பசிபிக் மக்கள் தொடர்பாளர் சுசிஸே க்ரம்டொன், இந்த செய்தியை முற்றாக நிராகரிக்கிறார். கொகா கோலாவின் இராசயனக்கலவை விகிதத்தில் ஒரு இரகசியமும் இல்லை. கொகா கோலாவில் அடங்கிய பொருட்கள் என்னென்ன என்பதை நீங்கள் வாங்கும் எமது உற்பத்தி பொருட்களின் லேபல்களிலேயே பார்க்கலாம். சும்மா, இதற்காக நேரம் செலவிடாதீர்கள் என்கிறார்.
எனினும் எந்தெந்த விகிதத்தில் கலவை துல்லியமாக கலக்கப்படுகிறது என்பதற்கான விபரங்கள், இரகசிய இடமொன்றில் பாதுகாக்கப்படுகிறது. கோலா கடந்து வந்த பாதை பற்றிய சுவடுகளில் அதற்கு ஒரு தனியிடம் உண்டு என இன்னமும் பொதுவான கருத்துக்கள் உலவுகின்றன.
கொகா கோலா தனது 125 வது ஆண்டு பூர்த்தியை இவ்வருடம் கொண்டாடுகிறது. 1886ம் ஆண்டு, ஜோன் பெம்பெர்டொன் எனும் மருத்துவ இசாயனவியலாளரால் கொகா கோலாவுக்கான வித்தியாசமான ருசி முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
இன்று 200க்கு மேற்பட்ட நாடுகளில் கொகா கோலா அமோக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சரி இதெல்லாம் இருக்கட்டும்.. அந்த இரகசிய கலவை தான் என்ன? என்கிறீர்களா இதோ.. இது தான் 'Merchandise 7x' என இது அழைக்கப்படுகிறது
The secret recipe
Fluid extract of Coca 3 drams USP Citric acid 3 oz Caffeine 1oz Sugar 30 (it is unclear from the markings what quantity is required) Water 2.5 gal Lime juice 2 pints 1 qrt Vanilla 1oz Caramel 1.5oz or more to colour
7X flavour (use 2oz of flavour to 5 gals syrup): Alcohol 8oz Orange oil 20 drops Lemon oil 30 drops Nutmeg oil 10 drops Coriander 5 drops Neroli 10 drops Cinnamon 10 drops
Posted by
Unknown
Labels:
கோலா
அதிமுக கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, புதிய தமிழகம், நாடாளும் மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, குடியரசு கட்சி, பார்வார்டு பிளாக், மூவேந்தர் முன்னணி கழகம் ஆகிய கட்சிகள் உள்ளன.
இந்த கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள சில கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.
மனித நேய மக்கள் கட்சி, டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் கார்த்திக் தலைமையிலான நாடாளும் மக்கள் கட்சிக்கு அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கி உள்ளதாக தெரிகிறது.
டாக்டர் சேதுராமன் தலைமையிலான மூவேந்தர் முன்னணி கழகம், செ.கு. தமிழரசன் தலைமையில் உள்ள இந்திய குடியரசு கட்சி, பி.வி.கதிரவன் பொதுச் செயலாளராக உள்ள அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுக்கும் தலா ஒரு சீட் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுபற்றிய அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ம.தி.மு.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க. மேலிடத்தில் ஆலோசனை நடத்தி வருகிறது.
அ.தி. மு.க. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு பெரும்பாலும் முடிவடைந்து விட்டதாகவும் வரும் 18ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 1 தொகுதி ஒதுக்கியதால் மட்டும் அந்தக் கூட்டணியை விட்டு வெளியேறிய மனிதநேய மக்கள் கட்சி, சட்டமன்றத் தேர்தலில் 2 தொகுதிகளுடன் திருப்தி அடையுமா என்பது போகப்போகத் தெரியும்.
Posted by
Unknown
Labels:
TMMK
அடிக்கடி நாம் கணவனின் தேவைகளை மனைவி புரிந்து நடக்கவேண்டும் என அங்கலாய்க்கின்றோம். மனைவி நல்ல ஆடைகளை அணிந்து, கவலை மறந்து சிரித்து, அன்பாக அணுகி தனது கனவுகளை நனவாக்க வேண்டுமென்று கணவன்மார் நினைக்கின்றனர். ஆனால் மனைவி விரும்பும் கணவனாக தான் இருக்கின்றேனா? என்பதை எம்மில் பலர் சிந்தித்ததுண்டா? ]
''...அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை...'' (அல்குர்ஆன் 2:187)
கணவன் மனைவி இருவரும் ஒருவரில் மற்றவர் பரிபூரண நம்பிக்கை வைத்து இரண்டறக் கலந்து விடுகின்றனர். அனைவரிடமும் மறைக்கக்கூடிய விடயங்களைக் கூட, தமக்கிடையே பகிர்ந்து கொள்வர். இதனாலேயே மறைக்கக் கூடிய ஆடையை கணவன், மனைவி உறவுக்கு உவமையாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. தம்பதியரிடையேயான அந்தரங்க விடயங்களை கணவன் தற்பெருமைக்காக பகிரங்கப்படுத்துவதனால், கணவன் மீதான நம்பிக்கை இழப்பும் உளவியல் ரீதியான பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இதனை மேலும் வலியுறுத்தி நபியவர்களும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
''மறுமையில் அல்லாஹ்விடத்தில் மிக மோசமான மனிதன், தனது மனைவியோடு உறவு கொண்டு விட்டு, அவளது இரகசியத்தைப் பரப்புபவன் ஆவான்.'' (அறிவிப்பர்: அபூசயீத் அல்குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்-2832)]
''பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் பெண்கள்(வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ(பலவந்தமாக) நிமிர்த்திக் கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே நீடிக்கும். ஆகவே பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்'' (ஸஹீஹுல் புஹாரி: 5186)
இன்றைய காலகட்டத்திலே இயந்திரமாய் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதனுக்கு இல்லற வாழ்வே இன்பத்தையளித்து சமூகத்தோடு இயைபுபட்டு வாழக்கூடிய நிலையை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் இணையும் தம்பதிகளின் புரிந்துணர் வின்மையின் காரணமாக பல குடும்பங்கள் பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பதைக் காணலாம். ஆகையால் கணவனும் மனைவியும் தமது கடமைகளை செவ்வனே நிறைவேற்றும் போது மணவாழ்வு மகிழ்ச்சியளிக்கும்;;. இங்கு நாம் கணவனின் கடமைகள் சிலவற்றை நோக்குவோம்.
1. கணவன் வீட்டில் நுழையும் போது சலாம் கூறுதல். அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இது பற்றிக் கூறுகையில் ''நீங்கள் இறை நம்பிக்கை(ஈமான்) கொள்ளாத வரை சொர்க்கம் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை(முழுமையான) இறை நம்பிக்கையாளர்களாக ஆக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயற்படுத்தினால் ஒருவரையொருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 93)
மேற்படி நபிமொழி யிலிருந்து கணவன் மனைவி விரும்பும் பாசமும் நேசமும் உருவாவதற்கு அடிக்கடி சலாம் கூறிக்கொள்வது சிறந்த வழியாகும். குறிப்பாக பாசத்திற்காக ஏங்கும் தம்பதிகள் இவ் அடிப்படை சுன்னாவை நடைமுறைப் படுத்துவதன் மூலம் இல்லறம் இனிக்க வாழலாம்.
2. வாயில் துர்வாடை வீசா வண்ணம் பல்துலக்குவதன் மூலம் சுகந்தத்தைப் பேணுதல். அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் முதலில் பல்துலக்குவார்கள்'' (நூல்: முஸ்லிம் 424) கணவனின் வருகையை எதிர்பார்த்திருந்த மனைவி அவனை முகமலர்ச்சியுடன் வரவேற்கும் வேளை, கணவனின் வாயில் இருந்து வரும் துர்வாடை அவளை முகம் சுளிக்கச் செய்கின்றது. ஆகையால் பல்துலக்கி வாயை சுத்தம் செய்வதானது இல்லறத்தை செழிப்பாக்கும்.
3. மனைவியை விஷேட பெயர் கொண்டு அழைத்தல். அன்னை ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். ''அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு நாள் என்னிடம்) ஆயிஷ் இதோ(வானவர்) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் உனக்கு ஸலாம் உரைக்கிறார் என்று சொன்னார்கள்.'' (நூல்: புஹாரி-3768, முஸ்லிம்-4837)
நல்ல வார்த்தைகளுக்கும் வசீகரிக்கும் தன்மை உண்டு. ஆகையால், அழகிய பெயர் கொண்டு அழைப்பது மனைவியை மகிழ்விக்கும் வித்தைகளில் ஒன்றாகும். இந்நடைமுறை புதுமணத் தம்பதியினர்களிடம் காணப்பட்டாலும் காலப்போக்கில் இது வழக்கொழிந்து செல்கின்றது.
5. மனைவியின் உதவிகளை வரவேற்றல், நன்றி செலுத்ததல். இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''யார் மனிதர்களுக்கு நன்றி செலுத்தவில்லையோ அவர் அல்லாஹ்வக்கு நன்றி செலுத்தமாட்டார்'' என்று கூறினார்கள். (நூல்: அஹ்மத்-7313) உங்களின் மனைவியரின் உதவிகளுக்கு நன்றி கூறிப் பாராட்டும்போது மென்மேலும் உங்கள் மனைவியின் பாசமும், பரிவும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
6. வீட்டுப் பணிகளில் பங்கேற்றல்.
காலத்தின் தேவை அதிகரித்துவர இல்லத்து பணிகளும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. முன்னொரு காலத்தில் தமது அன்றாட வேலைகளுக் கப்பால் பலமணி நேரம் ஓய்வெடுத்து திக்ர், குர்ஆன், திலாவத் மற்றும் ஸலவாத் ஓதுதல் போன்ற உபரியான வணக்கங்களில் எமது பெண்கள் ஈடுபட்டுவந்துள்ளனர்.
ஆனால், இன்று எங்கு பார்த்தாலும் ''பிஸி, மற்றும் நேரம் இல்லை'' போன்ற குரல்களே ஒலிக்கின்றன. ஒரு இல்லத்தரசியைப் பொறுத்தவரை திருமணம் முடித்தது முதல் பேரப்பிள்ளை காணும்வரை அளப்பரிய பணிகளைச் செய்து வருகின்றாள். வீட்டுச்சுத்தம், துணிதுவைத்தல், பிள்ளைப் பராமரிப்பு, சமைத்தல் என அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதற்குள் கணவனுக்காக செய்கின்ற பணிகளும் ஏராளம். ஆனால் கணவன்மார்களில் பலர் அற்பவிடயங்களுக்கெல்லாம் மனைவி மீது சீற்றம் கொள்கின்றனர். எமது முன்மாதிரி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றி ஆயிஷா அவர்கள் தரும் விவரணம் இதோ :
''பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது இல்லத்துப் பணியின் பங்குபற்றி வினவப்பட்டபோது,
நபியவர்கள் தமது துணியைத் தைப்பவராகவும் காலணியை சீர்செய்பவர்களாகவும் ஏனைய ஆண்கள் தமது வீடுகளில் செய்வதையெல்லாம் தாங்களும் செய்பவர்களாக இருந்தார்கள்.'' (நூல்: அஹ்மத்- 24346, இப்னுஹிப்பான்-5155)
7. எடுத்ததெற்கெல்லாம் குறை காண்பதைத் தவிர்த்தல். ''இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை(முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும், மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளக்கூடும் என பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' நூல்: முஸ்லிம்-2915.
இன்று சில ஆண்கள் தான் சந்திக்கும் அனைத்துப் பெண்களிடமும் உள்ள எல்லாப் பண்புகளும் தன் மனைவியிடமும் ஒன்று சேர அமைந்திருக்க வேண்டுமென ஒப்பீட்டாய்வு செய்கின்றனர். அவள் மேற்கொள்ளும் பல பெறுமதியான பணிகளைக் கூட கண்டுகொள்வதில்லை. ''நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன''. (அல்குர்ஆன் 30:21)
அடிக்கடி நாம் கணவனின் தேவைகளை மனைவி புரிந்து நடக்கவேண்டும் என அங்கலாய்க்கின்றோம். மனைவி நல்ல ஆடைகளை அணிந்து, கவலை மறந்து சிரித்து, அன்பாக அணுகி தனது கனவுகளை நனவாக்க வேண்டுமென்று கணவன்மார் நினைக்கின்றனர். ஆனால் மனைவி விரும்பும் கணவனாக தான் இருக்கின்றேனா? என்பதை எம்மில் பலர் சிந்தித்ததுண்டா?
01. அல்லாஹ் தனக்கென பங்கு வைத்ததைப் பொருந்திக் கொள்ளல். கவர்ந்திழுத்து கட்டுப்படுத்தல், கணவன் தான் தவறு செய்யும் போது, தன்மானம் பாராது தன் தவறுக்காக வருந்துதல் போன்ற விடயங்களால் தம்பதியருக்கிடையில் புரிந்துணர்வு அதிகரிக்கும்.
02. மனைவியின் பாசத்தைப் புதுப்பித்துக் கொள்ளல்.
மகிழ்ச்சிமிக்க திருமண வாழ்க்கை உட்பட அனைத்து அம்சங்களுக்கும் பாசமே முக்கிய காரணியென்ற வகையில், இஸ்லாம் அனுமதித்த வழிகளில் மனைவியின் அன்பை அதிகரிக்க, கணவன் முயற்சியெடுத்தல் வேண்டும். கனிவான வார்த்தைகளைப் பேசுதல், உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் செல்லல், அன்பளிப்புகள் கொடுத்தல், சுற்றுலாக்கள் செல்லுதல் போன்ற இன்னோரன்ன அம்சங்கள் மூலமே இருவருக்கிடையிலான பாசமும் பரிவும், நேசமும் நெருக்கமும் அதிகரிக்கின்றது.
03. கருத்து முரண்பாடு ஏற்படும் போது உருவாகும் பிரச்சினைகளைப் பொருட் படுத்தாதிருத்தல். எந்த வினாடியிலும், எந்தக் காரணியாலும் கருத்து முரண்பாடு ஏற்படுவதற்கு அதிக சாத்தியமுள்ள இடம் வீடு. கருத்துக்கள் முரண்படுவதென்பது ஓர் இயற்கையான அம்சம். எல்லா நோய்க்கும் மருந்துண்டு, எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வுண்டு என்பார்கள். ஆகையால், கணவன், மனைவியரிடையே இவ்வாறான கருத்து முரண்பாடு ஏற்படும்; போது, இஸ்லாம் கூறும் பொறுமை, ஆறுதலான உரையாடல், அமைதி விவாதம் போன்றவற்றின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதால் குடும்பத்தில் குழப்பங்கள் குறைந்து, சந்தோசம் நிலைக்கின்றது. இதுபற்றி எமது தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.
''பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.ஏனெனில், பெண்கள்(வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ(பலவந்தமாக) நிமிர்த்திக் கொண்டே போனால் அதை நீ ஒடித்தேவிடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே, பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.'' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஸஹீஹுல் புஹாரி 5186)
04. இல்லற இரகசியங்களைப் பாதுகாத்தல். ''...அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை...'' (அல்குர்ஆன் 2:187)
கணவன் மனைவி இருவரும் ஒருவரில் மற்றவர் பரிபூரண நம்பிக்கை வைத்து இரண்டறக் கலந்து விடுகின்றனர். அனைவரிடமும் மறைக்கக்கூடிய விடயங்களைக் கூட, தமக்கிடையே பகிர்ந்து கொள்வர். இதனாலேயே மறைக்கக் கூடிய ஆடையை கணவன், மனைவி உறவுக்கு உவமையாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. தம்பதியரிடையேயான அந்தரங்க விடயங்களை கணவன் தற்பெருமைக்காக பகிரங்கப்படுத்துவதனால், கணவன் மீதான நம்பிக்கை இழப்பும் உளவியல் ரீதியான பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இதனை மேலும் வலியுறுத்தி நபியவர்களும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
''மறுமையில் அல்லாஹ்விடத்தில் மிக மோசமான மனிதன், தனது மனைவியோடு உறவு கொண்டு விட்டு, அவளது இரகசியத்தைப் பரப்புபவன் ஆவான்.'' (அறிவிப்பர்: அபூசயீத் அல்குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்-2832)
05. மனைவி மீது அடக்குமுறைகளைக் கையாளாது நிர்வகித்தல், ''சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அழ்ழாஹ்வின் பாதுகாவல்மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று(மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்.'' (அல்குர்ஆன் 4:34)
மேற்படி கணவன் மனைவியை நிர்வகிப்பவன் என்பதனால் அடக்கியாள்பவன், பெருமைக்குரியவன் என ஊரார் புகழ வேண்டுமென்பது பொருளாகாது. மாறாக கனிவுதரும் வார்த்தைகளால் தன் துணைவியைக் கவர்ந்திழுத்து கட்டுப்படுத்தல், கணவன் தான் தவறு செய்யும் போது, தன்மானம் பாராது தன் தவறுக்காக வருந்துதல் போன்ற விடயங்களால் தம்பதியருக்கிடையில் புரிந்துணர்வு அதிகரிக்கும்.
source: http://dharulathar.com/
Posted by
Unknown
Labels:
இஸ்லாம்
கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளன. எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.
நமது இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல! மேற்கத்திய கலாச்சாரத்தை இங்கும் கடைபிடிக்கின்றனர்,
இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதரண விஷயம் என்பதையும் தாண்டி ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு கவுரவமான விஷயமாக மாறி விட்டது.
உங்க லவ்வரோட பேர டைப் பண்ணி அப்டி எஸ்.எம் எஸ் அனுப்பு இப்டி எஸ்.எம்.எஸ் அனுப்பு ஒரு எஸ்.எம்.எஸ் க்கு 3 ரூபாய் என்று கூறி காதலர் தினம் என்ற பெயரில் இளைஞர்களிடமிருந்து பணத்தை அபகரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
இஸ்லாமிய இளைஞர்களும் இளைஞிகளும் இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் விழுந்து விடுகின்றனர்.
இதற்கெல்லாம் காரணம் காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கள் மற்றும் அசிங்கங்கள் பற்றிய விழிப்புணர்வும் இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற அறிவும் நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும், இல்லாமையே.
“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6243
தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை.
ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.
திருமணத்திற்கு முன்பு பெண்ணைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். முகீரத் இப்னு ஷுஃபா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்” என்று கூறினார்கள். (நூல்: நஸயீ 3183)
மேற்கூரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.
ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.
விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.
பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.
செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.
செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.
தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.
ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.
ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.
பிள்கைளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதை நிறுத்தினால் பிப்வரி 14 உங்கள் பிள்ளையின் கற்பு பறிபோகும் நாளமாக மாறாமல் தடுக்கலாம்.
இந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குலைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.
இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு காதல் விகாரத்தில் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை 217 (தினமணி 8-5-2010).
என்றாவது அம்மா நேசிக்காததால் மகன் தற்கொலை என்ற செய்தியை கேள்வி பட்டுள்ளோமா? கிடையாது!
ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை அல்லது காதலியின் முகத்தில் ஆசி ஊற்றினான் ( திருச்சி சம்பவம்) போன்ற செய்திகளை நிறைய கேள்விபட்டிருப்போம்.
மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர். (உம்: தொழிலதிபர் குடுபத்துடன் தற்கொலை)
பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?
வீட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள்.
ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?
தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.
இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை” அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.
இப்படி உயிர் கொல்லியாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழ்த்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.
இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூடசமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.
இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொண்ண லவ் பண்ணிக்கவா’ என்று கேட்டால் ”டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்ச கொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள்.
ஏன் காதலித்தவர்களே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள்.
அவ்வளவு ஏன்?, ஒரு பெண்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேம் காதலித்தால் முதலில் சண்டைக்கு போவான்.
அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பரவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்கறையோடு நடந்து கொள்ளுங்கள்!
சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14 ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பரிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!
பிப்ரவரி 14 ஆம் தேதியும் டிசம்பர் 1 ஆம் தேதியும் நம்மை பொறுத்வரை ஒன்று தான். எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோய்க்காக டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அறிவிக்கப்பட்டு அதில் எஸ்ட்ஸ் பற்றிய விழிப்புர்ணபு பிரச்சாரம் செய்யப்டுகின்றது(தனி நாள் ஒதுக்காமல் அனைத்து நேரங்களிலும் நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் என்பதே நமது நிலை).
அதே போன்று தான் பிப்ரவரி 14 ல் காதல் கொண்டாட்டங்கள் நடைபெறாமல் தடுக்க காதல் எனும் உயிர் கொல்லி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட வேண்டும். அன்று மட்டும் இல்லாம் எல்லா நேரங்களிலும் இந்த வழிப்புணர் பிரச்சாரங்கள் மக்களிடையே செய்யப்பட வேண்டும்.
Posted by
Unknown
Labels:
இஸ்லாம்
முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!! எச்சரிக்கை – கவனம் – உஷார்
பிள்ளை பெறுவது பெரிதல்ல! அதைப் பேணி வளர்ப்பது தான் பெரிது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இன்று நாம் நமது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்புகிறோம். காலையில் செல்லும் பிள்ளைகள் மாலையில் திரும்புகின்றனர். தினமும் பள்ளிக்குப் போய் படித்து விட்டு வருகின்றனர் என்று நாம் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம். யாரேனும் ஒரு பள்ளி மாணவி, யாருடனோ ஓடி விட்டாள் என்று தகவல் வரும் போது, நம் பிள்ளை அப்படியெல்லாம் போகாது; நம் பிள்ளை தங்கக் கட்டி என்று ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் மீது தளராத நம்பிக்கை வைத்திருக்கின்றனர். பிள்ளைகள் மீது இப்படி ஒரு நம்பிக்கை வைத்திருப்பதில் தவறில்லை. இருக்க வேண்டியது தான். ஆனால் தன் பிள்ளைகளின் நடவடிக்கை மீது ஒரு கண் வைக்காமல் இருப்பது, கவனிக்காமல் இருப்பது மிகப் பெரிய ஆபத்தை வரவழைத்து விடுகின்றது. குறிப்பாக இன்றைய காலத்து சினிமாக் கலாச்சாரம் மாணவ, மாணவியரைப் பல தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றது. பள்ளி விட்டு வந்ததும் நமது பிள்ளைகள் பாடம் படிப்பதை விட்டு விட்டு, படம் பார்க்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். சீரியல்களின் பிடியில் கட்டுண்டு இருக்கும் நாம் டி.வி.யைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது நமது பிள்ளைகளும் சேர்ந்தே பார்க்கின்றனர். நம்மால் அந்தப் பிள்ளைகளைத் தடுக்க முடிவதில்லை. நம் வீட்டிலோ, வெளியிலோ ஆண், பெண் இருவர் கட்டிப் புரளும் காட்சிகளைப் பார்க்க முடியாது. குளிக்கும் பெண்கள் கூட ஆபாசமாகக் குளிப்பது கிடையாது. ஆனால் இந்த சினிமாக் காட்சிகளில் படுக்கையறைக் காட்சிகள், ஆபாசக் குளியல் காட்சிகள் அப்பட்டமாக அப்படியே காட்டப்படுகின்றன. இந்தக் காட்சிகளைத் தான் டி.வி.களில் பெற்றோர், பிள்ளைகள் என அனைவரும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தையும் டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்றன. இதையும் பெற்றோர் சேர்ந்து கொண்டு தான் பார்க்கின்றனர். விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகின்றனர். உடனே பெற்றோர்கள் பிள்ளைகளைத் திட்டுகின்றனர். அவர்கள் தேர்வில் தோற்றதற்குத் தாங்களும் ஒரு காரணம் என்பதைப் பெற்றோர்கள் வசதியாக மறந்து விடுகின்றனர்.
செல்லப் பிள்ளைக்கு ஒரு செல்போன் பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும். இது பிள்ளைகளின் படிப்பைப் பாழாக்குவதன் காரணத்தால் தான் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் போன்ற இடங்களில் பாட நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதற்குத் தடை செய்துள்ளனர். செல்போன்களால் படிப்பு பாழாகின்றது என்பதற்கு இது சிறந்த சான்றாகும். செல்போன்கள் இவ்வாறு படிப்பை மட்டும் பாழாக்கவில்லை. அவர்களுடைய ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன. செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்களின் பட்டியலில் சிலவற்றை உங்கள் பார்வைக்குத் தந்திருக்கிறோம். 1. நீலப்படங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அவை நம்முடைய பிள்ளைகளின் செல்போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டு, பரிமாறவும் படுகின்றன. 2. அழகான மாணவிகள் அவ்வப்போது நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ படம் எடுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு பல மாணவர்களின் பார்வைக்கு விருந்தாகப் படைக்கப்படுகின்றன. 3. SMS (Short Message Service) என்பது இப்போது Sex Message Service ஆக மாறி விட்டது. அந்த அளவுக்கு ஆபாசச் செய்திகள் இதில் பரிமாறப்படுகின்றன. 4. தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள்: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன. ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன. அண்மையில் நம்முடைய ரகசிய கண்காணிப்புக் குழுக்கள் மூலம், மகளிர் பள்ளிக்கூடங்கள் மற்றும் கோச்சிங் சென்டர்களைக் கண்காணித்ததில் பல அதிர்ச்சி தரும் செய்திகள் கிடைத்துள்ளன.
பருவமடைந்த பெண் பிள்ளைகள் சர்வ சாதாரணமாக வாலிபர்களுடன் செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாறுகின்றனர். பல சந்து பொந்துகளில் சந்திப்புகளும் நடைபெறுவதை அறிய முடிந்தது.
ஏற்கனவே வீட்டில் இருக்கும் கன்னிப் பெண்களும், திருமணமான பெண்களும் செல்போன் செக்ஸில் பலியாகி அந்நிய ஆடவருடன் ஓடிப் போகும் கொடுமை ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதையே நம்மால் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கும் போது, பள்ளிக்கூடம் செல்லும் பருவ வயதுப் பிள்ளைகள் பற்றிய இந்த அதிர்ச்சித் தகவல் நம்முடைய இரத்தத்தை உறைய வைக்கின்றது. இந்த அதிர்ச்சித் தகவலைத் தெரிந்து கொள்ளும் பெற்றோர்கள் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக் கீழே தருகிறோம். தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன் கொடுக்காமல் இருத்தல். ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர். செல்போன் இல்லாவிட்டாலும் பள்ளி செல்கின்ற ஆண், பெண் பிள்ளைகளின் அனைத்து நடவடிக்கைகளின் மீதும் முழுக் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள். உங்களது பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்’ என்ற ஹதீஸ் எல்லோருக்கும் பொருத்தமானது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு பொறுப்புதாரிகள். ஆண்கள் தமது கட்டுப்பாட்டுக்குக் கீழுள்ள குடும்பத்தினருக்கு பொறுப்பாளர்கள். எனவே, ஒவ்வொருவரும் தமது பொறுப்புக்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.‘நீங்கள் உங்கைளயும், உங்கள் குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ என்று அல்குர்ஆன் கூறுவைத நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். நரக நெருப்பின் விறகுகளாக நாம் மாறிவிடாதிருக்க அல்லாஹ் எமக்கு அருள்பாலிக்க வேண்டும். இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றுகின்ற மக்களாக நாம் மாறுவதற்கு அல்லாஹ்வின் உதவியை வேண்டி நிற்போம்.
இவ்வுலகில் - நாகரிகத்தையும், கவுரவத்தையும், அந்தஸ்தையும் விட. மானம், மரியாதையும். ஈமானும் இறையச்சமும்தான் முக்கியம். அல்லாஹ். அர்ரஹ்மான் நம் அனைவரையும். மானக்கேடான விஷயத்தில் இருந்து பாதுகாத்து, ஈமானோடு வாழவைத்து முஸ்லிமாக மரணிக்க செய்வானாக! ஆமீன். சிந்திப்போம் செயல்படுவோம்.
நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319 3456)
Posted by
Unknown
Labels:
இஸ்லாம்
இந்தியாவிலேயே மிகப் பெரிய பள்ளிவாசல்
கேரளாவின் கோழிகோட்டில் சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 ஏக்கர் பரப்பளவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.இத்தகவலை அதன் கட்டடக்கலை வடிவமைப்பாளர் ரியாஸ் முகம்மது செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அடுத்த 5 மாத காலத்திற்குள் இதற்கான கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் பள்ளிவாசல் கட்டி முடிக்கப்படவுள்ளதாம் .
முகலாயர் கால கட்டடப் பாணியில் அமைக்கப்படவிருக்கும் இந்தப் பள்ளிவாசலில் ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் தொழுகை நடத்தலாம் என்றும் அவர் கூறினார்.மேலும், கருத்தரங்கு நடத்துவதற்கான ஆடிட்டோரியம் மற்றும் பெரிய நூலகமும் பள்ளிவாசல் வளாகத்தி்ல் கட்டப்படும் என்றும், 1000 பேர் தங்குவதற்கான வசதிகளும் செய்யப்படும்.
Posted by
Unknown
Labels:
இஸ்லாம்
சூனியம் - ஒரு பார்வை
விஞ்ஞான வளர்ச்சிகள் அதிகரித்துள்ள இன்றைய காலத்திலும் மக்கள் மத்தியில் மூட நம்பிக்கைகள் அதிகமாகவே காணப்படுகின்றன. மக்கள் சிந்திக்கத் தவறியதன் விளைவாக மூட நம்பிக்கைகளில் மூழ்கி ஒவ்வொருவரும் தம்மைத்தாமே அழித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி மக்களை அழித்துக் கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகளில் ஒன்றுதான் 'சூனியம்' என்பதும்.
ஒருவன் மற்றொருவனுக்கு சூனியம் செய்துவிட்டால் போதும், அந்த சூனியத்தின் மூலமாக அவனைக் கொல்லவோ, கை கால்களை முடக்கவோ, தீராத நோய்களை உண்டாக்கவோ முடியும் என்று மக்கள் நம்புகின்றனர். இன்னும் சூனியத்தால் பல அற்புதங்கள் செய்ய முடியும் என்றும் நம்புகின்றனர்.
இவர்கள் நம்புவது போன்று சூனியத்தால் எதையும் செய்ய முடியும் என்றிருப்பின், தமக்குப் பிடிக்காத ஒரு சாரார் மற்றொரு சாராரை சூனியம் செய்து கொன்று விடலாமல்லவா? ஏன் கத்தி களையும், தடிகளையும் பெரும் ஆயுதங்களையும் தூக்கிக் கொண்டு கலவரம் செய்து கச்சேரி செல்ல வேண்டும்? சரி, குறைந்த பட்சம் சூனியம் செய்பவர்கள் அவர்களின் தொழிலிற்கு இடைறாக இருப்போரையாவது கொன்று சூனியத்தின் சக்தியை நிரூபிக்கலா மல்லவா?
பலர் சூனியத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அது ஏன்? எப்படி? என்று நமக்குச் சந்தேகம் எழுவது எதார்த்தமானதே.! இதை நாம் நன்றாக அறிந்து கொண்டால் இவ்வாறு ஏற்படும் சந்தேகங்களைத் தவிர்க்கலாம்.
சூனியம் என்பது மனதைக் குழப்பும் ஒரு கலை, இந்த கலையைச் செய்வதால் அவர்கள் மனக்குழப்பத்திற்கு உள்ளாகி சூனியத்தின் பெயரால் ஒவ்வொருவரும் தமக்குத்தாமே பாதிப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்களே தவிர, உண்மையில் எவ்விதப் பாதிப்பையும் சூனியம் ஏற்படுத்துவதில்லை.
ஒரு மனிதன் நன்றாகவே இருப்பான். அவனுக்கு எந்தக் குறையும் இருக்காது. அவனிடம் எவனாவது உனக்கு இன்ன ஆள் சூனியம் செய்து விட்டான் என்று மட்டும் கூறிவிட்டால் போதும், அவன் தன் மனதில் பல கற்பனைகளை வளர்த்து குழப்பமடைந்து தனக்கு ஏதோ நிகழப்போகிறது என்று எண்ணும் காரணத்தால் இவனாகவே பல பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கிறான்.
உண்மையை அறிய வேண்டுமானால் மூட நம்பிக்கையில் மூழ்கியிருக்கும் ஒருவனைச், சோதிப்பதற்காக உனக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று சொல்லிப் பாருங்களேன்! அன்று முதலே அவன் அதிர்ச்சியில் அலைவதைக் காண்பீர்கள்.
சூனியம் மனிதனுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சுத்தப் பொய். இதைத் தெளிவாக தெரிந்தும் கூட மார்க்க அறிஞர்கள் என்று பெருமையடித்துக் கொள்பவர்கள் தகடு, தாயத்து, முட்டையில் எழுதுதல், அஸ்மா வேலைகள் என்று மக்களை ஏமாற்றுகின்றனர். இறைவனுடைய பாதையைவிட்டும் மக்களை வழிதவறச் செய்கின்றனர். இந்த லெப்பைகள் தங்கள் தொப்பைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக மனித இனத்தை வழிகெடுப்பதைப் பார்க்கும் சிலர் இஸ்லாத்திலும் மூட நம்பிக்கைகள் உண்டு என்று எண்ணுகிறார்கள். அவர்கள் நன்கு தெரிந்து கொள்ளட்டும், இஸ்லாத்தில் மூட நம்பிக்கை என்பது கடுகளவும் கிடையாது. இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் காலத்திற்குப் பின்பு åதர்கள் தங்கள் கைச்சரக்குகளை முஸ்லிம் மக்கள் மத்தியில் புகுத்தியதன் காரணமாகத்தான் முஸ்லிம்கள் மத்தியில் மூட நம்பிக்கைகள் வளர்ந்தன.
ஒவ்வொருவரும் தம் விருப்பத்திற்கு ஏற்பச் சட்டங்களை வளைத்துக் கொள்வது இஸ்லாமியச் சட்டமாகவோ கொள்கையாகவோ ஆகிவிடாது. இறைவனால் கொடுக்கப்பட்ட குர்ஆன் கூறுவதும்; அவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் வாழ்ந்து காண்பித்த வாழ்க்கை முறையும் தான் இஸ்லாம் என்பதைத் தெரிந்து கொள்ளட்டும்.
சூனியம் செய்து மூட நம்பிக்கைகளை உண்டாக்கி வழி கெடுப்பது அழிவை உண்டாக்கும் ஏழு பாவங்களில் ஒன்று என்று இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
சூனியம் என்பது ஒரு கலை தானே, அதை ஏன் இஸ்லாம் தடைசெய்கிறது என்று நமக்குச் சந்தேகம் எழலாம். நன்மையான செயல்களை உண்டாக்கும் கலை என்றால் அதை இஸ்லாம் நிச்சயம் தடை செய்திருக்காது. ஆனால் சூனியக்கலை மக்களை இறை நிராகரிப்பிற்கு இழுத்துச் செல்வதாலும் மக்கள் ஏமாற்றப்படுவதா லும் இஸ்லாம் அதைத் தடை செய்கிறது.
கண்களை ஏமாற்றுவதே சூனியம்
மூஸா(அலை) அவர்களை எதிர்ப்பதற்காக பிர்அவ்ன் சூனியக் காரர்களை ஒன்று திரட்டினான். அவர்கள் செய்த சூனியம் எந்த அளவிற்கு இருந்தது என்பதை இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
(அவர்கள் எறிந்த) கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் சூனியத்தால் (பாம்புகளாகி) நெளிந்தோடுவது போல் அவருக்கு மூஸா(அலை) தோன்றியது. (அல்குர்ஆன் 20.66)
அந்த சூனியக்காரர்கள் எறிந்த கயிறுகளும், தடிகளும் பாம்புகளாக மாறவில்லை; பாம்புகள் போன்று தான் காட்சியளித்தன என்று இறைவன் தெளிவாகக் கூறுகின்றான். இந்த வசனத்தில் இறைவன்''யுகய்யலு'', என்ற வார்த்தையைப் பயன்படுத்தி யுள்ளான். இல்லாத ஒன்றை இருப்பது போன்று காண்பித்தல், மாயையை ஏற்படுத்துதல் என்பது இதன் பொருளாகும்.
சூனியம் (ஸிஹ்ர்) என்ற கலையின் மூலம் இல்லாத ஒன்றை இருப்பது போன்று காண்பிக்க முடியும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அப்படியானால் அதைக் கொண்டு ஏதும் தீங்கு செய்ய முடியுமா என்ற ஐயம் வரலாம்.
சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெறமாட்டான். (அல்குர்ஆன் 20.69)
''கணவன் மனைவி இடையே பிரிவினையை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது.'' (அல்குர்ஆன் 2.102)
என்னதான் சூனியம் செய்தாலும் அல்லாஹ்வின் நாட்டமின்றி யாருக்கும் எவ்விதத் தீங்கும் செய்ய முடியாது என்பது இந்த வசனத்தின் மூலம் தெளிவாகிறது. அப்படியே அது தீங்கு செய்தாலும் மனதில் குழப்பத்தை உண்டாக்கி, கணவன் மனைவிக் கிடையே பிரிவினையைத்தான் உண்டு பண்ண முடியுமே தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என்பதையும் இந்த வசனத்தில் இறைவன் தெளிவாக்கி விட்டான்.
ஷைத்தான் மனிதனை வழிகெடுக்க ஏற்படுத்திய சசூழ்ச்சிகளில் ஒன்றுதான் சூனியம் என்ற உண்மையை விளங்கிக் கொண்டால் குழப்பம் ஏற்படாது.
நீ என்னைக் கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால் (ஆதமின் சந்ததியினரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன். பின்பு நிச்சயமாக நான் அவர்கள் முன்பும், அவர்கள் பின்பும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (வழிகெடுப்பதற்கான அனைத்து முறைகளையும் கையாண்டு அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலானோரை (உனக்கு) நன்றி செலுத்துபவர்களாக காணமாட்டாய் என்று (இப்லீஸ்) கூறினான். (அல்குர்ஆன் 7:16,17)
உன் கண்ணியத்தின் மீது ஆணையாக, அவர்களில் அந்தரங்கச் சுத்தியான உன் அடியார்களைத் தவிர நிச்சயமாக அவர்கள் யாவரையும் நான் வழிகெடுப்பேன் என்றும் (இப்லீஸ்) கூறினான்.
(அதற்கு) அதுவே உண்மை; உண்மையையே நானும் கூறுகிறேன். நிச்சயமாக உன்னைக் கொண்டும், உன்னைப் பின்பற்றுவோர்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நான் நிரப்புவேன் என்று இறைவன் கூறினான். (அல்குர்ஆன் 38:82-85)
மனிதனை வழிகெடுத்து நரகத்தில் சேர்ப்பதற்கான வழிகள் என்னவெல்லாம் இருக்கின்றனவோ அவை அனைத்தையும் ஷைத்தான் கையாண்டு வழிகெடுப்பான் என்பதும் அதற்கு இறைவனும் அவனுக்கு அனுமதி கொடுத்து விட்டான் என்பதும் மேற்காணும் வசனங்களின் மூலம் நமக்குத் தெளிவாகிறது.
இன்று ஷைத்தான் பல வழிகளிலும் மனிதனுடைய உள்ளத்தில் ஊடுருவி வழிகெடுத்துக் கொண்டிருக்கின்றான். அவற்றில் ஒன்று தான் சூனியம் என்பது.
ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள் தாம் மனிதர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்தனர். (அல்குர்ஆன் 2:102)
ஷைத்தான் சூனியத்தைக் கற்றுக் கொடுத்து அந்த சூனியக்காரர்களுக்கு அவன் உதவி செய்யும் காரணத்தால்தான் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி கணவர் மனைவியிடையே பிரிவினையை உண்டாக்க முடிகிறது.
மனதில் குழப்பத்தை உண்டாக்குவதில் ஷைத்தான் மிகத் தீவிரமானவன், திறமையானவன்!
எனினும் (ஆதம், ஹவ்வா ஆகிய) அவ்விருவருக்கும் மறைந்திருக்கும் அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்.
ஆதம்(அலை) அவர்களையே ஆட்டிப் பார்த்த அவனுக்கு, பிற மனிதர்களை வழிகெடுப்பது ஒன்றும் கடினமல்ல. பிறருடைய உள்ளத்தில் ஊசலாட்டம் செய்வது, அவனுக்கு இலகுவான செயல்! அந்த அடிப்படையில் சூனியத்தின் மூலம் மனிதர்களுடைய உள்ளங்களில் ஊசலாட்டத்தை உண்டு பண்ணி அவர்களைக் கோவில், தர்கா, போன்ற இடங்களுக்கோ அல்லது சூனியக்காரன் வசிக்கும் இடத்திற்கோ இழுத்துச் சென்று இறைமறுப்பாளர்களாக ஆக்கி தன் இலட்சியத்தில் வெற்றி காண்கிறான்.
இதை அறியாத மக்கள் அவனுடைய அச்சசூழ்ச்சிக்குள்ளாகி தங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்கின்றனர். ஷைத்தானுடைய சூழ்ச்சி எப்படி இருப்பினும் உண்மையான இறை நல்லடியார்களிடம் அது செல்லாது என்பதையும் 38:33 வது வசனத்தில் இறைவன் தெரிவிக்கின்றான்.
''சூனியம், ஷைத்தானின் சூழ்ச்சிகளில் ஒன்று'' நல்லடியார்களிடம் ஷைத்தானுடைய சூழ்ச்சி செல்லாது என்றால் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு ஏன் சூனியத்தால் பாதிப்பு ஏற்பட்டது என்ற ஐயம் இப்போது நமக்கு வந்திருக்கும்.
ஆம்! இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மை தான். அதன் விளைவாக அவர்கள், தாம் செய்த வேலையைச் செய்யவில்லை என்றும், தாம் செய்யாத ஒன்றைச் செய்தது போன்றும் எண்ணிக்கொண்டு சிறிது காலம் மனத்தடுமாற்றத்தில் இருந்தார்கள். தாம் சூனியம் செய்யப்பட்டிருந்ததும் அவர்களுக்குத் தெரியவில்லை. அல்லாஹ் தான் வானவர்கள் மூலம் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தான். அதற்கு தீர்வையும் கூறினான் என்பதை நாம் புகாரியில் இடம் பெற்றுள்ள ஹதீஸின் வாயிலாக அறிகின்றோம்.
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. அதன் காரணமாக அவர்கள், தாம் செய்யாத ஒரு செயலைச் செய்திருப்பதாக அவர்களுக்கு(குறுகிய காலத்தில்) மாயை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி.
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் தாம் செய்யாத செயலைச் செய்தது போன்று மாயை ஏற்படும் அளவிற்கு அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இறுதியில் ஒருநாள் அவர்கள் பிரார்த்தனை செய்த வாறு இருந்தார்கள். அதன் பிறகு : ''என்(மீது செய்யப்பட்டுள்ள சசூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ, அதை எனக்கு அல்லாஹ் அறிவித்து விட்டதை நீ அறிவாயா? என்னிடம் (கனவில்) இரண்டு நபர் (இருவானவர்களான ஜிப்ரயிலும் மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரயில்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயில்) என் கால்மாட்டில் அமர்ந்தார்.
ஒருவர் மற்றொருவரிடம் ''இந்த மனிதரை பீடித்துள்ள நோய் என்ன'' என்று கேட்டார். மற்றொருவர்(ஜிப்ரீல்) ''இவருக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது'' என்று பதிலளித்தார். அதற்கு அவர் ''இவருக்கு சசூனியம் செய்தது யார்?'' என்று கேட்டார் .அவர்(பதிலுக்கு) ''லபீத் இப்னு அஃஸம் (என்னும் åதன்)'' என்று பதிலளித்தார். ''(அவன் சூனியம் வைத்தது) எதில்?'' என்று அவர்(மீக்காயில்) கேட்க அதற்கு, ''சீப்பிலும், (இவரது) முடியிலும், ஆண்(பேரிச்சம்) பாளையின் உறையிலும்'' என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், ''அது எங்கே இருக்கிறது'' என்று கேட்க, ''(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில் '' என்று பதிலளித்தார்கள் என்று, இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறிவிட்டு அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்த போது என்னிடம், ''அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன'' என்று கூறினார்கள். நான், ''அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்தி விட்டான்.(அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே(சூனியக்கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பிவிடும் என்று நான் அஞ்சினேன்'' என்று பதிலளித்தார்கள். பிறகு அந்தக் கிணறு தூர்க்கப்பட்டு விட்டது. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்ததும் அது நிகழ்ந்ததும் உண்மையென்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவாக்குகின்றன. ஆனால் அது ஏன் நிகழ்ந்தது என்பதைச் சிந்திக்கத் தவறி இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கே சூனியம் பாதித்துவிட்டது என்றால் அது நம்மை விட்டு வைக்குமா என்று மட்டும் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் இச்சம்பவத்தின் மூலம் இறைவன் நமக்கு ஏராளமான படிப்பினைகளைத் தந்துள்ளான். நாம் அவற்றைக் கவனிக்க வேண்டும்.
1. சூனியம் என்பது மனத்தடுமாற்றத்தை ஏற்படுத்துவதைத் தவிர வேறொன்றும் செய்துவிடாது.
2. இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களும் மனிதர்தான். அவர்கள் இறைத்தன்மையைப் பெற்றவரோ, வானவர்களின் பண்புகளைப் பெற்றவரோ இல்லை. இறைத்தூதர் என்பதால் மனிதர்களில் உயர்ந்தவர் என்ற சிறப்புதான் அவர்களுக்கு உண்டு.
3. ஒருவன் மற்றொருவனுக்கு, சூனியம் செய்துவிட்டால், அதை சசூனியம் செய்யப்பட்டவன் அறிந்து கொள்ள முடியாது அல்லது மற்றொரு சூனியக்காரனிடம் சென்று கேட்டாலும் அவனும் அதை அறிந்திருக்க முடியாது. அப்படி யாரும் அறிந்து கொள்ள முடியும் என்றிருப்பின் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள்தான் முதலில் அதை அறிந்திருக்க முடியும். அவர்களுக்கே அல்லாஹ்தான் தன் வானவர்கள் மூலமாக அறிவித்தான். ஒருவன் மற்றொருவனுக்கு சூனியம் செய்துவிட்டான் என்பதை சசூனியம் செய்தவனும் அல்லாஹ்வும் மட்டுமே அறிய முடியும். எனவேதான் சூனியம் செய்யப்பட்டிருப்போமோ என்று எவரும் குழப்பமடைய வேண்டிய அவசியமில்லை.
4. அப்படியே தனக்கு சூனியம் செய்யப்பட்டதை ஒருவன் அறிந்து கொண்டாலும், அதற்கான தீர்வு உலகத்தில் எங்கும் கிடையாது. அல்லாஹ்விடத்தில் மட்டுமே இருக்கிறது. எனவே அவனிடமே பாதுகாப்பு தேட வேண்டும். சூரத்துல் ஃபலக், சூரத்துன்னாஸ் ஆகிய அத்தியாயங்களை அருளி இறைவன் தன்னிடம் மட்டுமே ஒவ்வொரு தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுமாறு இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கும் அவர்கள் சமுதாயத்தினருக்கும் கட்டளை யிட்டுள்ளான்.
இறைவன் காட்டித்தந்துள்ள, தீர்வை விட்டு விட்டு நாம் நமது விருப்பத்திற்கு இணங்கி கோவில், தர்கா போன்ற இடங்கள் சென்று தீர்வைத் தேடினாலோ மற்றொரு சூனியக்காரனிடம் சென்று தீர்வைக் கேட்டாலோ நிச்சயம் வெற்றி பெற முடியாது. மறுமையிலும் இறைவனிடம் தண்டனை கிடைக்கும் என்பதில் ஏதும் ஐயமில்லை.
வானவர்கள்தான் மனிதர்கள் மத்தியில் சூனியத்தை பரப்பினார்கள் என்றும் ஒரு கதை கட்டி விடப்பட்டுள்ளது. இது யூதர்களின் நாச வேலையில் ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வானவர்கள் ஒரு போதும் சூனியத்தைப் பரப்பவில்லை என்ற விஷயத்தை 2:102 வசனத்தின் விளக்கவுரைகளை நன்றாகக் கவனிக்கும் போது நம்மால் கண்டு கொள்ள முடியும். இந்த அளவிற்கு பெரும் குழப்பத்தை உண்டாக்கி மக்களைக் கெடுக்கும் சூனியத்தை எவன் செய்கின்றானோ அவன் தனக்குத்தானே அழிவைத் தேடிக் கொள்கிறான். இப்பெரும் பாவத்திலிருந்து இறைவன் மனித இனத்தைக் காப்பானாக!
ஆக்கம்
M.M.அப்துல் காதிர் உமரி
"அந்த ஏழு பாவங்கள்"
Posted by
Unknown
Labels:
சூனிய சமுதாயம்,
தாஜ்ஜாலிசம்
தமிழக தேர்தலும் கழகங்களும் ஜமாத்களும் ஓர் பார்வை!
தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வர இருப்பதினால் தேர்தல் வேலைகளும் அரசியல் கட்சிகளின் கூட்டணி அமைக்கும் வேலைகளும் மும்முரமாக உள்ளன. கட்சிகள் சீட்டிற்காக அணிமாறும் காட்சிகளும் அரங்கேற ஆரம்பித்து விட்டன. இஸ்லாமிய இயக்கங்களும், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் தங்களுடைய அரசியல் களத்தின் வேலைகளையும் தொடங்க ஆரம்பித்து விட்டனர். த.மு.மு.க வின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி அ.தி.மு.க வுடனும் முஸ்லிம் லீக் தி.மு.க வுடனும் கூட்டு சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம்களின் தாய் கழகமான முஸ்லிம்லீக் வழக்கம்போல் ஒன்றோ அல்லது இரண்டோ சீட்டுகளை மட்டும் பெற்றுக்கொண்டு திமுகவின் தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நிற்கலாம்!. அல்லது தங்களின் சின்னத்தில் போட்டியிடலாம்!. இது இக்கட்சிக்கு ஆரோக்கியமான வளர்ச்சியல்ல!. முழுகட்சியையும் அது திமுக விடம் அடகு வைத்து பல வருடங்கள் ஆகிவிட்டன!.
இதற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் ஒன்பது அல்லது பத்து என்று சீட்டுகளை பேரம்பேசி வாங்குவதும், பா.ம.க போன்ற கட்சிகள் எல்லாம் முப்பது சீட்டுக்களை பேரம்பேசி (டிமான்ட்வைத்து) வாங்கும் அளவிற்கு குறுகிய காலங்களில் அசூர வளர்ச்சியடைந்து விட்டார்கள்!. ஆனால் சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இருந்து வரும் முஸ்லிம்லீக் கட்சி, தன் பிறை சின்னத்தின் மறுபக்கமான “தேய்பிறையாகவே” இருந்து வருகின்றது!. முன்பு தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சியாக இருந்த ஒரு மாபெரும் கட்சி இன்று, பாராளுமன்றத்திற்கு ஒரே ஒரு சீட்டை மட்டும் பெற்றுக்கொண்டு அதிலும் சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தன்மானத்தை இழந்து நிற்கின்றது. சமீபத்தில் கூட நடைபெற்ற முஸ்லிம்லீக் கட்சி நடத்திய மாநாட்டிற்கு கூடிய கூட்டத்தினை கண்டால், நமக்கே பிரமிப்பாக இருக்கின்றது.! இவ்வளவு செல்வாக்கை வைத்துகொண்டு இக்கட்சி ஏன் மேலும் மேலும் வளர்ச்சிபெற முடியாமல் திணறுகின்றது என்று நம்மால் கணிக்க முடியவில்லை!.
மேலும் மனிதநேய மக்கள் கட்சி சுமார் பதினேழு தொகுதிகளில் தங்களுக்கு வெற்றிபெறும் அளவிற்கு செல்வாக்கு உள்ளதாக கண்டறிந்து பொதுக்குழுவில் அந்த தொகுதியையும் அறிவித்தனர். இருந்தும் இவர்கள் மூன்று முதல் ஐந்து சீட்டுகளை மட்டுமே பெற்றுக்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. எத்தனை எத்தனை இஸ்லாமிய இயக்கங்கள் வந்தாலும் இன்னும் ஒன்றிற்கும் இரண்டிற்கும் அல்லது ஏதோவொரு குறிப்பிட்ட கோரிக்கையை நிறைவேற்றினாலே, “சமுதாய ஓட்டு அத்துனையும் உங்களுக்கே” என்று பேரம் பேசி, சமுதாயத்தினை அடகுவைக்கும் அவலநிலை மாறவேண்டும்!. நம்மின் பலத்தினை நாமே கேவலமாக எடைபோடுவதும் சரியல்ல!.
இந்திய தவ்ஹீது ஜமாத்தும் போட்டியிடப் போவதாக தெரியவில்லை!. ஆனால் ஆதரவை, அல்லது பிரச்சாரத்தினை மட்டும் இவர்கள் செய்வார்கள் என்றே தோன்றுகின்றது. நிச்சயமாக த.த.ஜ அணிக்கு மாற்றமான அணியில் இவர்கள் இடம்பெறுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்!. இப்படியே நாம் இக்கரைக்கு அக்கறை என்று முடிவெடுப்பதிலேயே அணைத்து இயக்கங்களும் தங்களை முன்னிலைப் படுத்துகின்றன.
மேலும் மானம் காக்குமா ம.ம.க?. என்று ஒருபுறம் இக்கட்சியை 18 சீட்டுகள் பெறவேண்டும் என்று தூண்டுவதும், பின் சேலத்தில் நடைபெற்ற த.த.ஜ பொதுக்குழுவில் ம.ம.க எங்கு நின்றாலும் தோற்கடிப்போம் என்று சீண்டுவதும், மாறுவேடம் போடுவதும் சமுதாய இயக்கமான த.த.ஜ விற்கு அழகல்ல!. ஒன்று இவர்கள் போட்டியிடவேண்டும்!. இல்லையென்றால் களத்தில் இருக்கும் இஸ்லாமிய இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அதுவும் இல்லையென்றால் அமைதியாக இருந்துவிட்டு செல்லவேண்டும். த.த.ஜ - தமுமுக விற்க்கு இடையே உள்ள ஈகோ மற்றும் பொறாமை காரணமாக சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை கிடைக்கவிடாமல் செய்வதற்க்கு ஆயிரமாயிரம் காரணம் கூறினாலும், இன்று நமக்கு உள்ள அரசியல் அதிகார தேவைக்கு அது உதவாது!. மாறாக அது நம்மை மேலும் வலுவிழக்கவே செய்யும்!.
முஸ்லிம் லீக் நின்றாலும் பிடிக்காது. ம.ம.க நின்றாலும் பிடிக்காது. ஆனால் நாங்களும் நிற்க மாட்டோம் என்று அடம்பிடிப்பது எந்தவகையில் நியாயம் என்று சமுதாய நலனை முன்னிலைப் படுத்தும் த.த.ஜ சிந்திக்கவேண்டும். உங்களுக்கிடையே உள்ள ஈகோவை எல்லாம் தேர்தலில் காண்பித்து நம் சமுதாயத்தின் பிரதி நிதித்துவத்தினை அடைய விடாமல் தடுப்பதை சிந்திக்கவேண்டும். அல்லது தேர்தலில் நாங்கள் நிற்கமாட்டோம் என்ற நிலைபாட்டில் இருந்து மாறி, தேர்தல் களம் கண்டு, முஸ்லிம்களின் பிரதிநிதியாக சட்டமன்றம் சென்று, நம் சமுதாய தேவைகளை நிறைவேற்றவேண்டும். அதுதான் ஒரு சிறந்த இயக்கத்திற்கு முன்னுதாரணமாக இருக்கும். அரசியல் வேண்டாம் என்றால் தேர்தலில் பிரச்சாரமும் செயக்கூடாது!. எந்த ஓட்டுப்பொறுக்கி அரசியல் வாதிகளையும் சந்திக்கக்கூடாது!.
மேலும் ஜமாத், இயக்கம் போன்ற அடைமொழிகளுடன் சிறிய சிறிய பத்துக்கும் மேற்பட்ட இன்னபிற இஸ்லாமிய இயக்கங்களும் அவர்கள் மனதிற்கு என்ன தோன்றியதோ, அதையே ஆதாரமாக வைத்து பணத்தினை மட்டும் பெற்றுக்கொண்டு தேர்தல் வேலைகள் செய்வதும் ஆரோக்கிய மானதல்ல!.
இந்த இயக்கங்கள் அனைத்தும் ஒன்றினைந்தாலே திமுக. அதிமுக காங்கிரஸ் என்று ஏதாவதொரு பெரிய அரசியல் கட்சியுடன் நாமும் முப்பது அல்லது நாற்பது தொகுதிகள் என்று பேரம்பேசி அதை இஸ்லாமிய இயக்கங்களுக்குள் பகிர்ந்துகொள்ளலாம். இது சாத்தியமா என்றால் ஒரே இறைவனை ஏற்றுக்கொண்ட நம்மால் சாத்தியமே!. இதுபோன்ற ஒரு முடிவை நாம் எட்டாதவரை இன்னும் பத்து தேர்தல்கள் வந்தாலும், இரண்டு மூன்று என்று மட்டுமே முஸ்லிம் சட்டமன்ற உறுபினர்களை சட்டமன்றத்தில் காணலாம். மேலும் தேர்தல் முடிந்தபிறகு ஆஹா பார்த்தீர்களா?. 234 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரே ஒரு முஸ்லிம்!. ஒரு அமைச்சர் கூட இல்லை!. இஸ்லாமியர்களின் நிலையை முன்னேற்ற சச்சார் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தவேண்டும் என்று போராட்டம் செய்து என்ன பயன்?.
தேசிய அளவிலும் நம்மை வழிநடத்த ஒரு வலிமையான இஸ்லாமிய இயக்கமோ அரசியல் கட்சியோ இல்லை!. அதற்கு முதலில் மாநிலம் தழுவிய அணைத்து இஸ்லாமிய இயக்கங்களும் முதலில் மாநில அளவில் ஒன்றினைய வேண்டும்!. பின் ஒன்றிணைந்த இக்கட்சிகள் தேசிய அளவில் பாராளுமன்ற தேர்தலில் ஒரணியில் நின்றால், எம்பி தொகுதியையும் நம் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் பெறமுடியும். ஆனால் செய்வார்களா?. இதுவே நம் அரசியல் உரிமையை பெற சரியான வழிமுறையாக இருக்க முடியும். முஸ்லிம்களின் ஓரணி என்ற கோட்பாடே நம் அரசியல் தீர்வுக்கு வழிவகையாகும். பின் நமக்கு சச்சார் கமிட்டியும் தேவை இல்லை!. சாச்சா கமிட்டியும் தேவை இல்லை!. நம்மை நாமே மாற்றிக்கொள்ளாத வரை நமக்கு எந்த அரசியல் கட்சியும் உரிமையை வழங்க முன்வராது!.
கடந்த தேர்தலில் கூட அணைத்து இஸ்லாமிய இயக்கங்களும் சென்னையில் ஒன்று கூடி ஒரே கூட்டணியில் நிற்பது என்று முடிவெடுத்து கடைசியில் ஆளுக்கொரு திசையில் வழக்கம்போலவே சென்றுவிட்டனர். ஆக அரசியியலில் நமக்கு எதிரிகள் வேறு யாரும் அல்ல! நமக்கு நாமே எதிரிகள்!!.
முஸ்லிம் சமுதாயத்தின் ஜமாத்/லீக்/கழகம்/பேரவை மற்றும் இத்யாதிகள்: 1. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2. இந்திய தேசியலீக் 3.தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் 4. தமிழ் மாநில தேசிய லீக் (அல்தாப்) 5. தமிழ் மாநில முஸ்லிம் லீக்(ஷேக் தாவூத்) 6. தமிழ்நாடு முஸ்லிம் லீக் (தாவுத் மியக்கான் 7. தமிழ்நாடு மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் (சலிமுத்தீன்) 8. மமக(மனிதநேய மக்கள் கட்சி) என்ற “முஸ்லிம் பாமகா 9. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 10. இஸ்லாமிய இலக்கியக் கழகம் 11. இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம் 12. முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம் 13. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் 14. மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் (பாலை ரபீக்) 15. ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம் (சென்னை ஹமீத்) 16. ஜனநாயக மக்கள் கட்சி 17. இந்திய தேசிய மக்கள் கட்சி 18. இந்திய தேசிய மக்கள் கட்சி (குத்புதீன் ஐபக்) 19. தேசியலீக் கட்சித 20. இந்திய தவ்ஹீது ஜமாத் 21. இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்ட் 22. மறுமலர்ச்சி தவ்ஹீத் ஜமாஅத் (இணையதளம்) 23. ஜமாத் இ இஸ்லாமி 24. ஜமாத்துல் உலமா 25. ஷரியத் பாதுகாப்பு பேரவை 26. இஸ்லாமிய இலக்கிய பேரவை 27. பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா 28. எஸ்.டி.பி.ஐ -சோசியல் டெமோகிராடிக் பார்ட்டி ஆப் இந்தியா 29. பாரதிய முஸ்லிம் பார்ட்டி (சித்தீக்) 30. மில்லி கவுன்ஸில் 31. மஜ்லிஸே முஷாவரத் 32. ஜம்மியத்துல் உலமா இ ஹிந்த் 33. தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன் 34. முஸ்லிம் தனியார் சட்டவாரியம் 35. ஜம்மியத்துல் உலாமா (அர்ஷத் மதனி) 36. தமிழக முஸ்லிம் தொண்டு இயக்கம் 37. சிறுபான்மை புரட்சி இயக்கம் (லியாகத்அலிக்கான்) 38. சென்னை சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் கூட்டமைப்பு 39. தமிழ்நாடு சுன்னத்வல் ஜமாஅத் ஐக்கிய பேரவை (ஷேஹூ அப்துல்லாஹ் ஜமாலி)
ஏம்பா, இனி நாமதான் மிச்சம்!. நாமளும் பிச்சை எடுப்பதை விட்டுவிட்டு “பக்கீர்ஷா லீக்/ பேரவை/ ஜமாத்/ கழகம்” என்று ஆரம்பிச்சா என்ன?. இயக்கத்திற்கு மட்டும் குறையில்லை!. மற்றும் இங்கு குறிப்பிட மறந்து விட்டது பத்திற்கு மேல் இருக்கும்!. இந்தியா முழுமைக்கும் உள்ள நம் எதிரி இயக்கங்களின் எண்ணிக்கை இதில் பாதி கூட இல்லை!. ஆனால் தமிழ்நாட்டளவில் மட்டும் நாம் கண்ட அமைப்புகளின் என்னிக்கையை கண்டீர்களா?.
இந்திய மக்கள் தொகையைப்போல் எண்ணிக்கையில் அதிகமாகவே உள்ளது நம் இயக்கங்கள்!. ஆனால் ஊட்டச்சத்து இல்லாமல்தான் சவளைப் பிள்ளையாக நாம் இருக்கின்றோம். முதலில் இந்த சமுதாய இயக்கத்திற்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்கும் நிலைதான் தற்போது உள்ளது.சிந்திப்பார்களா!
Posted by
Unknown
Labels:
இஸ்லாம்
|
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.
|