தமிழக சட்டப்பேரவை 2011 தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் 10 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக எஸ்.டி.பி.ஐ. அறிவித்துள்ளது. அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற முஸ்லிம் அமைப்பின் அரசியல் பிரிவு தேசிய கட்சியான எஸ்.டி.பி.ஐ, புதுவை உட்பட தமிழகத்தில் 10 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளது. இதுக்குறித்து அக்கட்சின் தமிழகத் தலைவர் தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு, வக்புவாரிய சொத்துக்களை முறைப்படுத்துவது, உலமா நலவாரியத்திற்கு அதிக நிதிகளை ஒதுக்குவது போன்ற கோரிக்கைகளைச் சம்பந்தப்பட்ட கட்சிகள் சரியான முறையில் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், எஸ்.டி.பி.ஐ.-ன் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐ. 10 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளது.
எஸ்.டி.பி.ஐ கட்சி வெற்றி தோல்வியைக் குறித்து கவலைப்படாமல் இந்நாட்டினுடைய நலன், ஒடுக்கப்பட்ட சமுதாயமான முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றம், முஸ்லிம் சமுதாயத்தின் அதிகார பிரதிநிதித்துவம், ஒடுக்கப்பட்ட சமுதாயமான தலித்துக்கள் மற்றும் பழங்குடியினருடைய அரசியல் அதிகாரத்தின் நலனைக் கவனத்தில் கொண்டு போராட்ட அரசியலை மேற்கொள்ளக்கூடிய அரசியல் கட்சியாக விளங்குகிறது" என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐ போட்டியிட முடிவெடுத்துள்ள 10 தொகுதிகளில் 6 தொகுதிகளின் பட்டியலையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது.
1. கடையநல்லூர் (நெல்லை மாவட்டம்)
2. இராமநாதபுரம்
3. பூம்புகார் (நாகை மாவட்டம்)
4. தொண்டமுத்தூர் (கோவை மாவட்டம்)
5. துறைமுகம் (சென்னை)
6. நிரவி திருப்பட்டினம் (புதுச்சேரி)
Posted by
Unknown
0 comments:
Post a Comment