சூனிய சமுதாயம்-04
THE KABBALAH வும் பண்டைய எகிப்தும்.
பண்டைய எகிப்தின் மாய மந்திரக்காரர்கள்.
பண்டைய எகிப்து உலகின் மிக பழமைவாய்ந்த நாகரீகங்களில் ஒன்றாகும்.அதிக கெடுபிடிகள் அடக்குமுறைகள் நிறைந்த இந்த நாகரீகம் பாரோக்களால் ஆளப்பட்டு வந்தது.இன்றும் பண்டைய எகிப்தியர்களால் அடிமைகளைக் கொண்டு கட்டப்பட்ட பிரமிட்டுகள் சிறப்பு வாய்ந்த நினைவுச்சின்னங்கலாக பிரம்மாண்டமாக காட்சிதருகிறது.அன்றைய எகிப்தை ஆண்ட பாரோக்கள் தங்களை கடவுளின் பிரதிநிதிகள் என அழைத்து கொண்டு மக்களுக்கு தங்களை வணங்கும்படி ஆணையும் பிறப்பித்தார்கள்.
பண்டைய எகிப்து பற்றிய தகவல்களைப் பெற எமக்கு அவர்களால் எழுதப்பட்ட கல்வெட்டுகள் உதவியாக இருந்தாலும் அவை அந்நாட்டின் அதிகாரபூர்வமான வரலாற்றாசிரியர்களால் எழுதப்பட்டதால் அவற்றின் உண்மைத் தன்மை கேள்விக்குரியாதாக உள்ளது.முஸ்லிகளாகிய எங்களுக்கு நம் திருக் குரான் இந்த சமுதாயம் பற்றி நிறைய தகவல்களைக் கூறுகிறது.
மூஸா நபியவர்களின் வரலாற்றைக் கூறும் திருமறை எகிப்தின் ஆட்சி பற்றியும் அதன் நடைமுறைகளையும் பேசுகிறது.திருக் குரானின் வசனங்கள் மூலம் எகிப்தின் ஆட்சியில் இரு முக்கியமான கூறுகள் காணப்பட்டதாக நமக்கு தெரிய வருகிறது.
பரோக்களின் ஆலோசனை சபை எகிப்திய பாரோக்களின் ஆட்சியில் கணிசமான அளவு தாக்கம் செலுத்தி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.பாரோக்கள் ஒரு விடயத்தை செய்ய முன் அவர்களின் ஆலோசனை சபையின் ஆலோசனைகளை செவிமடுத்தே செயற்பட்டு வந்துள்ளனர்.
திருக் குரானின் 7 வது அத்தியாயம் இப்படிக் கூறுகிறது
“ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்” என்று மூஸா கூறினார்."
“அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதுவும்) கூறாமலிருப்பது என்மீது கடமையாகும்; உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருக்கிறேன் - ஆகவே இஸ்ரவேலர்களை என்னுடன் அனுப்பிவை” (என்றும் அவர் கூறினார்)."
அதற்கு அவன், “நீர் அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருப்பீரானால் - நீர் உண்மையாளராக இருப்பின் அதைக் கொண்டுவாரும்” என்று கூறினான்.
அப்போது (மூஸா) தம் கைத்தடியை எறிந்தார் - உடனே அது ஒரு பெரிய பாம்பாகி விட்டது.
மேலும் அவர் தம் கையை வெளியில் எடுத்தார் - உடனே அது பார்ப்பவர்களுக்குப் பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தது.
ஃபிர்அவ்னின் சமூகத்தாரைச் சேர்ந்த தலைவர்கள், “இவர் நிச்சயமாக திறமைமிக்க சூனியக்காரரே!” என்று கூறினார்கள்.
(அதற்கு, ஃபிர்அவ்ன்), “இவர் உங்களை, உங்களுடைய நாட்டை விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே (இதைப்பற்றி) நீங்கள் கூறும் யோசனை யாது?” (என்று கேட்டான்.)
அதற்கவர்கள், “அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணையைக் கொடுத்து விட்டு, பல பட்டிணங்களுக்குச் (சூனியக்காரர்களைத்) திரட்டிக்கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக!
“அவர்கள் சென்று சூனியத்தில் வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்” என்று கூறினார்கள்.
அவ்வாறே ஃபிர்அவ்னிடத்தில் சூனியக்காரர்கள் வந்தார்கள். அவர்கள், “நாங்கள் (மூஸாவை) வென்றுவிட்டால், நிச்சயமாக எங்களுக்கு அதற்குரிய வெகுமதி கிடைக்குமல்லவா?” என்று கேட்டார்கள்.
அவன் கூறினான்: “ஆம் (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்). இன்னும் நிச்சயமாக நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்.”
( 7 அத்தியாயம் 104 முதல் 114 வரை )
திருக் குரானின் இந்த வசனங்களை நாம் கவனிக்கும் போது அங்கு பிரவ்ன் மூஸா (அலை ) அவர்களுக்கு சவால் விட தனது ஆலோசனை சபையிடம் ஆலோசனை கேட்பதையும் அதற்கு அந்த சபை சில ஆலோசனைகளை வழங்குவதையும் நம்மால் கவனிக்க முடியும்.இந்த ஆலோசனை சபை பற்றி நாம் எகிப்திய கல்வெட்டு ஆதாரங்களில் தேடும் போது அதில் இந்த சபை இரு கூறுகளைக் கொண்டதாக அவை குறிப்பிடுகிறது.
பாரோக்களின் படைகளின் உயர் அதிகாரிகள். மதகுருக்கள்
இந்த இரு கூறுகளில் பண்டைய எகிப்திய நாகரீகத்தில் மதகுருக்களுக்கு ஒரு அதி உயர் அந்தஸ்து கொடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த விடயம் பற்றி நாம் இன்னும் ஆழமாக ஆராயும் போது,திருக் குர்ஆன் இந்த மதகுருக்களை மந்திரவாதிகள் என அழைக்கிறது.பண்டைய எகிப்து மக்களிடையே மதகுருமார்களுக்கு இரகசிய சக்தி காணப்படுவதாக ஒரு நம்பிக்கை காணப்பட்டது.மக்களிடையே காணப்பட்ட இந்த நம்பிக்கை அவர்களுக்கு எகிப்திய சமூகத்தில் ஒரு உயரிய அந்தஸ்தையும் ஆட்சியில் தாக்கம் செலுத்தவும் ஒரு சந்தர்பத்தை கொடுத்தது.எகிப்திய கல்வெட்டுகள் இவர்களை "Priests of Amon" என அழைக்கிறது.இவர்கள் மாயமந்திர தந்திரங்களை கற்பதில் அதிகளவு ஆர்வம் காட்டியுள்ளார்கள்.அதுபோல் வானியல் கணிதவியல் மற்றும் புவியியல் போன்ற அறிவியல்துறை சார்ந்த விடயங்களிலும் இவர்களின் கவனம் இருந்ததாக பண்டைய எகிப்திய கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன ஒரு இரகசிய கொள்கைகள் இன்றும் தாக்கம் செலுத்த முடியுமா ???
ARTICLE FROM TAMILKHILAFA.BLOGSPOT.COM
Posted by
Unknown
Labels:
சூனிய சமுதாயம்,
தாஜ்ஜாலிசம்
0 comments:
Post a Comment