மேற்குவங்க மாநிலத்தில் ஏப்ரல் 18-ம் தேதியில் இருந்து மே 10-ம் தேதி வரை நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் கட்சி மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து உள்ளது. 294 சட்டமன்ற தொகுதிகள் உள்ள அம்மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து 100 தொகுதிகள் வரை பெற வேண்டும் என மாநில தலைவர்கள் தெரிவித்திருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், கருணாநிதியைப் போலவே மம்தாவும் 60-க்கு மேல் தரமுடியாது என்று அடமாகக் கூறிவருகிறாராம். மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களையும், மாவட்டத் தலைவர்களையும் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று சந்தித்து காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து மாவட்ட தலைவர்களுடன் மேற்குவங்க மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான ஷகீல் அகமது நேற்று 3 மணி நேரத்துக்கும் மேல் ஆலோசனை நடத்தினார்.திரிணமூல் காங்கிரஸுடன் அதிகாரப்பூர்வமற்ற வகையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தொகுதிப் பங்கீடு குறித்த முறைப்படியான பேச்சுவார்த்தை இன்று தொடங்கவில்லை என மேற்குவங்க மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் ஷகீல் அகமது தெரிவித்தார். "ஒரு வாரத்தில் பேச்சுவார்த்தைகள் தொடங்கலாம்" என்றார் அவர். இந்த நிலையில் "தங்கள் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 58, 60 தொகுதிகளுக்கு மேல் வழங்கப்பட வாய்ப்பில்லை" என திரிணமூல் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Posted by
Unknown
Labels:
தேர்தல்
0 comments:
Post a Comment