லிபியா அருகே அமெரிக்கா தயாராக நிறுத்தி வைத்திருந்த விமானந்தாங்கி போர் கப்பல்களில் இருந்து புறப்பட்ட போர் விமானங்கள் லிபியா மீது சரமாரியாக குண்டுகளை வீசின. கப்பலில் இருந்து ஏவுகணைகளும் வீசப்பட்டன. அமெரிக்காவுடன் இங்கிலாந்து, பிரான்சு நாடுகளும் சேர்ந்து லிபியா மீது தாக்குதலை நடத்தின. 41 ஆண்டுகளாக தொடர்ந்து பதவியில் இருக்கும் கடாபிக்கு எதிராக மக்கள் திரண்டனர். ஆனால் மக்கள் புரட்சிக்கு அடிபணியாத கடாபி அவர்கள் மீது அடக்கு முறைகளை கையாண்டார். போராட்டக்காரர்கள் மீது ராணுவ தாக்குதல்கள் நடத்தப்பட்டன. புரட்சி படையினர் 4 நகரங்களை கைப்பற்றி இருந்தனர். அந்த நகரங்கள் மீது போர் விமானங்கள் மூலம் குண்டுவீசி 3 நகரங்களை ராணுவம் மீட்டது. இன்னொரு முக்கிய நகரமான பென்காசி நகரத்தை பிடிக்கவும் விமான தாக்குதல் நடந்து வந்தது. ராணுவ தாக்குதலில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். எனவே ராணுவ தாக்குதலை நிறுத்தும்படி ஐ.நா. சபை அதிபர் கடாபியை கேட்டுக் கொண்டது. அதே போல அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளும் கடாபிக்கு வேண்டுகோள் விடுத்தன. ஆனால் கடாபி இதை ஏற்கவில்லை. தொடர்ந்து ராணுவ தாக்குதலை நடத்தி வந்தார்.இதையடுத்து நேற்று முன்தினம் ஐ.நா. பாதுகாப்பு சபை கூடி இதுபற்றி ஆலோசனை நடத்தியது. அப்போது லிபியா பொதுமக்களை காப்பாற்ற ராணுவ நடவடிக்கை எடுக்க ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அமெரிக்கா, லிபியா மீது தாக்குதல் நடத்த தயாரானது. இது தொடர்பாக இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி, போன்ற நட்பு நாடுகளுடன் ஆலோசனை நடத்தியது. நிலைமை மோசமானதை தொடர்ந்து கடாபி போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்தார். ஆனாலும் பென்காசி நகரை மீட்க தொடர்ந்து ராணுவ தாக்குதல் நடந்து வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, லிபியா மீது திடீர் போர் தொடுத்தது. லிபியா அருகே அமெரிக்கா விமானந்தாங்கி போர் கப்பல்களை தயாராக நிறுத்தி வைத்திருந்தது. அதில் இருந்து புறப்பட்ட போர் விமானங்கள் லிபியா மீது சரமாரியாக குண்டுகளை வீசின. கப்பலில் இருந்து ஏவுகணைகளும் வீசப்பட்டன. அமெரிக்காவுடன் இங்கிலாந்து, பிரான்சு நாடுகளும் சேர்ந்து லிபியா மீது தாக்குதலை நடத்தின. தலைநகரம் திரிபோலி, மற்றும் பென்காசி, சிர்ட், பிசரதா, சுவாரா ஆகிய நகரங்களிலும் குண்டுகள் வீசப்பட்டன. இவை தவிர லிபியா படைகள் முகாமிட்டுள்ள பல்வேறு இடங்களிலும் தாக்குதல் நடந்தன. மொத்தம் 20 இடங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன.லிபியாவை சுற்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி, கனடா நாடுகளில் 25 போர் கப்பல்கள் மற்றும் நீர் மூழ்கி கப்பல்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அவற்றில் இருந்து 110 ஏவுகணைகள் லிபியா மீது ஏவப்பட்டன. லிபியா மீது முதல் முதலில் பிரான்சு விமானம் தான் குண்டு வீசியது. அதை தொடர்ந்து மற்ற நாட்டு விமானங்கள் குண்டு வீசின. குண்டு வீச்சில் லிபியாவின் ஏராளமான ராணுவ டாங்கிகள், பீரங்கிகள், கவச வாகனங்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா கூட்டுப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதை லிபியா மறுத்து உள்ளது. அமெரிக்க கூட்டு படைகள் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் 48 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 150 பேர் காயமடைந்து உள்ளனர் என்று லிபியா அறிவித்து உள்ளது. அமெரிக்கா போர் தொடுத்ததும் அதிபர் கடாபி வானொலியில் செய்தி ஒன்று வெளியிட்டார். அவர் கூறும் போது மேற்கத்திய நாடுகள் நமது நாட்டில் தங்கள் காலனியாக அடிமைப்படுத்த போர் தொடங்கி உள்ளன. இதை மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்றார். அமெரிக்கா கூட்டு படைகள் தாக்குதல் தொடர்வதை வரவேற்கும் வகையில் புரட்சி படையினர் தெருக்களில் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். லிபியா மீது அமெரிக்கா கூட்டு படைகள் தாக்கியதற்கு இந்தியா, சீனா, மற்றும் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
Posted by Unknown Labels:
தமிழக சட்டப்பேரவை 2011 தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் 10 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக எஸ்.டி.பி.ஐ. அறிவித்துள்ளது. அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற முஸ்லிம் அமைப்பின் அரசியல் பிரிவு தேசிய கட்சியான எஸ்.டி.பி.ஐ, புதுவை உட்பட தமிழகத்தில் 10 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளது. இதுக்குறித்து அக்கட்சின் தமிழகத் தலைவர் தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில், "முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு, வக்புவாரிய சொத்துக்களை முறைப்படுத்துவது, உலமா நலவாரியத்திற்கு அதிக நிதிகளை ஒதுக்குவது போன்ற கோரிக்கைகளைச் சம்பந்தப்பட்ட கட்சிகள் சரியான முறையில் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், எஸ்.டி.பி.ஐ.-ன் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐ. 10 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளது. எஸ்.டி.பி.ஐ கட்சி வெற்றி தோல்வியைக் குறித்து கவலைப்படாமல் இந்நாட்டினுடைய நலன், ஒடுக்கப்பட்ட சமுதாயமான முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றம், முஸ்லிம் சமுதாயத்தின் அதிகார பிரதிநிதித்துவம், ஒடுக்கப்பட்ட சமுதாயமான தலித்துக்கள் மற்றும் பழங்குடியினருடைய அரசியல் அதிகாரத்தின் நலனைக் கவனத்தில் கொண்டு போராட்ட அரசியலை மேற்கொள்ளக்கூடிய அரசியல் கட்சியாக விளங்குகிறது" என்று கூறியுள்ளார். தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐ போட்டியிட முடிவெடுத்துள்ள 10 தொகுதிகளில் 6 தொகுதிகளின் பட்டியலையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது. 1. கடையநல்லூர் (நெல்லை மாவட்டம்) 2. இராமநாதபுரம் 3. பூம்புகார் (நாகை மாவட்டம்) 4. தொண்டமுத்தூர் (கோவை மாவட்டம்) 5. துறைமுகம் (சென்னை) 6. நிரவி திருப்பட்டினம் (புதுச்சேரி)
Posted by Unknown
"எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு சட்டசபை தேர்தலில் ஆதரவு அளிக்கப்படும்" என இந்திய தவ்ஹீத் ஜமாத் ட்ரஸ்ட் அமைப்பின் மாநில தலைவர் பாக்கர் நெல்லையில் பேட்டியளித்தார்.

இதுகுறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் முஸ்லிம்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட எங்களது கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளுக்குச் சட்டசபை தேர்தலில் ஆதரவு அளிக்கப்படும். முஸ்லீம் சமுதாயம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏமாற்றப்பட்டு வருகிறது. கல்வி, வேலை வாய்ப்பில் 3.5 சதவீதம் ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும். மத்திய அரசில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதற்குத் தமிழகத்தில் ஆதரவு தெரிவிக்கும் கட்சிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாத் ஆதரவு அளிக்கும்.
வக்பு வரிய சொத்துக்கள் ஆக்கிரமிப்பு பிடியில் உள்ளது. இதனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய கோரிக்கைகளைத் தேர்தல் வாக்குறுதியாக ஏற்கும் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும். இதற்காக வரும் 15ம் தேதி சென்னையில் செயற்குழுக்கூட்டம் நடக்கிறது. இதன்பின்பு எங்களின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் சேக்அப்துல்கபூர், மாவட்ட தலைவர் அலி முகம்மது, மாவட்ட துணை தலைவர் முகம்மது முனீர் ஆகியோர் உடனிருந்தனர்.
Posted by Unknown
ஆழ்கடலில் அலைகளும் இருள்களும்
24:40 வசனத்தில் கடலைப் பற்றிக் குறிப்பிடும் போது ஆழ் கடலில் இருள்களும், அலைகளும் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இவ்விரண்டும் மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பை உள்ளடக்கி நிற்கின்றன.ஒருவன் கடலுக்குள் மூழ்கும் போது ஆழம் செல்லச் செல்ல இருள்கள் அதிகரித்துக் கொண்டே சென்று முடிவில் தன்கையையே கண் முன்னால் கொண்டு வந்தால் அதை அவனால் காண முடியாத அளவுக்குக் கடுமையான இருள்கள் இருக்கும் என்று இவ்வசனம்

கூறுகின்றது.பட்டப் பகலில் கடல் மீது விழும் சூரிய ஒளி, சிறிது சிறிதாகக் குறைந்து காரிருள் ஏற்படுகின்றது என்று விஞ்ஞானிகள் இன்று கண்டறிந்துள்ளனர். சூரியனின் வெளிச்சத்தில் ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு வண்ணங்கள் உள்ளன.சூரிய ஒளியின் ஒவ்வொரு நிறத்தின் அலை வேகம் வேறுபடுவதால் கடலில் ஒவ்வொரு குறிப்பிட்ட தொலைவில் ஒவ்வொரு நிறமாகத் தடுக்கப்படுகிறது. சிவப்புக் கதிர் கடலில் 15 மீட்டர் வரை தான் செல்லும். 15 மீட்டர் ஆழத்திற்கு மேல் சென்றால் சூரியனின் ஆறு வண்ணங்கள் தான் தெரியும். அங்கே சிவப்பான பொருட்களை மட்டும் காண முடியாத அளவுக்கு ஒரு இருள் ஏற்படுகின்றது.

இப்படி ஒவ்வொரு தொலைவிலும் ஒவ்வொரு வண்ணம் தடுக்கப்படும் போது அந்த ஒளியைப் பொறுத்த வரை ஒரு இருள் ஏற்படுகிறது. எந்த இடத்தில் அனைத்து வண்ணங்களும் முழுமை யாகத் தடுக்கப்படுகின்றதோ அந்த இடத்துக்குநிகரான இருள் வேறு எதுவும் இருக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். கடலுக்குள் ஆயிரம் மீட்டர் செல்லும் போது கண்கள் தடுமாறுகின்றன. இறுதியில் நிறங்கள் அடியோடு மறைந்து விடுகின்றன. பூமியின் மேற்பரப்பில் வரும் இரவுகளை என்னால் கருப்பு என்று கூற முடியாது. அந்த அளவுக்கு இருளைக் கடல் அடைந்து விடுகிறது' அமெரிக்க ஆய்வாளர் பீப் என்பவர் கூறுகிறார்.இருள்களில் பல படித்தரங்கள் உள்ளன என்பதும், பூமியின் மேற் பரப்பில் இரவில் ஏற்படும் இருளை விட, பட்டப் பகலில் 1000 மீட்டர் ஆழத்தில் கடலுக்குள் சென்றால் கடுமையான இருள் ஏற்படும் என்றும் கண்டறியப் பட்டுள்ளது.தமது வாழ்நாளில் கடல் பயணமே செய்யாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 1000 மீட்டர் ஆழத்திற்குச் சென்று அந்த இருள்களை அனுபவித்து உணர்ந்தவர் போல் இந்த வசனத்தைக் கூறியிருப்பது, குர்ஆன் இறை வேதம் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது. மேலும் இவ்வசனத்தில் கடலின் ஆழத்திலும் அலைகள் இருப்பதாகக் கூறப்படுவதிலும் அறிவியல் உண்மை இருக்கின்றது. இந்த வசனம் அருளப் பட்ட காலம் முதல் இந்த நூற்றாண்டு வரை ஆழ்கடலுக்கு உள்ளே அலைகள் இருப்பதை மனிதன் கண்டறியவில்லை. சுனாமியால் ஜப்பான் போன்ற நாடுகள் பாதிக்கப்பட்ட போது, ஒருபனை மரத்தின் உயரத்திற்கு அலைகள் எழும்புவதைக் கண்டனர். பூமியின் மேற்பரப்பில் உள்ள அலைகள் அதிக தூரத்திற்குச் செல்ல முடியுமே தவிர பனை மர உயரத்திற்கு மேலே செல்ல முடியாது என்பதால் இது குறித்து மேலும் ஆய்வுகளை மேற்கொண்டனர். இவை கடலுக்கு மேற்புறம் இருந்து பார்த்தால் தெரியாதவாறு கடலுக்கு அடியில் அலைகள் ஏற்படுகின்றன. மணிக்கு 500 மைல்கள் வேகத்தில் பயணிக்கும் சக்தி படைத்த இந்த அலைகள் கடற்கரைப் பகுதிகளை நெருங்கியதும் மோதி பயங்கரமாக ஆக்கிரமித்து அப்பகுதியில் உள்ளவற்றை அழிக்கின்றன. சுனாமி அலைகள் சுமார் 50 அடி உயரம் வரை எழும்பி கடற்கரையைக் ஒட்டியுள்ள நிலப்பரப்பில் சுமார் ஒரு மைல் தொலைவு வரை கடல்நீரை வீசி அடிக்கும் சக்தி படைத்தவை. தற்போது நம் நாட்டுக் கடற்கரையைத் தாக்கிய சுனாமி அலைகள் சுமார் 25 அடி உயரம் எழும்பியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். கடற்கரைக்கு அருகில் கடல் பூகம்பங்கள் நிகழ்ந்தால் சுனாமி அலைகள் சுமார் 10 நிமிடம் கரையைத் தாக்கும் அபாயம் உள்ளது. கடலின் ஆழத்திலும் பிரமாண்ட மான அலைகள் உள்ளன. அந்த அலைகள், தரையிலிருந்து விமானம் கிளம்புவது போல் சீறிக் கிளம்புவதால் தான் பனை மர உயரத்திற்கு அது மேல் நோக்கி வர முடிகின்றது என்று கண்டுபிடித்தனர்.ஆழ் கடலுக்கு உள்ளேயும் பேரலை கள் உள்ளன என்ற இந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னதன் மூலம் திருக்குர்ஆன் இறைவேதம் என்பது மேலும் நிரூபணமாகின்றது.

SOURCE LINK PLS CLICK : onlinepj.com


Posted by Unknown
ஹூஸ்டன்:அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி (82). இந்துமத சாமியாரான இவர் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தென்மேற்கு ஆஸ்டின் நகரில் 200 ஏக்கரில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இவரை “சுவாமிஜி” என்று பக்தர்கள் அன்புடன் அழைக்கின்றனர். இவர் மீது 2 பெண்கள் செக்ஸ் புகார் கூறி இருந்தனர். அவர்கள் இருவரும் ஆசிரமத்தில் வளர்ந்தவர்கள். “டீன்ஏஜ்” பருவத்தில் இருந்தபோது, அதாவது கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சாமியார் பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி இவர்களுடன் “செக்ஸ்” உறவில் ஈடுபட்டதாக புகார் செய்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு விசாரணை ஹூஸ்டன் மாவட்ட கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சார்லஸ் ராம்சே குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி சுவாமிக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், ரூ.90 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.




Posted by Unknown
மேற்குவங்க மாநிலத்தில் ஏப்ரல் 18-ம் தேதியில் இருந்து மே 10-ம் தேதி வரை நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் கட்சி மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து உள்ளது. 294 சட்டமன்ற தொகுதிகள் உள்ள அம்மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து 100 தொகுதிகள் வரை பெற வேண்டும் என மாநில தலைவர்கள் தெரிவித்திருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், கருணாநிதியைப் போலவே மம்தாவும் 60-க்கு மேல் தரமுடியாது என்று அடமாகக் கூறிவருகிறாராம். மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களையும், மாவட்டத் தலைவர்களையும் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று சந்தித்து காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.


காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து மாவட்ட தலைவர்களுடன் மேற்குவங்க மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான ஷகீல் அகமது நேற்று 3 மணி நேரத்துக்கும் மேல் ஆலோசனை நடத்தினார்.திரிணமூல் காங்கிரஸுடன் அதிகாரப்பூர்வமற்ற வகையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தொகுதிப் பங்கீடு குறித்த முறைப்படியான பேச்சுவார்த்தை இன்று தொடங்கவில்லை என மேற்குவங்க மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் ஷகீல் அகமது தெரிவித்தார். "ஒரு வாரத்தில் பேச்சுவார்த்தைகள் தொடங்கலாம்" என்றார் அவர். இந்த நிலையில் "தங்கள் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 58, 60 தொகுதிகளுக்கு மேல் வழங்கப்பட வாய்ப்பில்லை" என திரிணமூல் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.



Posted by Unknown Labels:

சீனா என்று பொதுவாக அழைக்கப்படும் சீன மக்கள் குடியரசு கிழக்காசியாவிலுள்ள நாடாகும். ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக பரப்பளவின்படி மூன்றாவது பெரிய நாடாகும். 1,306,313,812 மக்கள் வாழும் சீனா, உலகில் சனத்தொகை கூடிய நாடுகளில் முதலிடம் வகிக்கிறது. சீன பெருஞ்சுவர் இந்நாட்டின் இயலுமையையும் தொன்மையையும் கூறி நிற்கிறது. சீனாவின் தலைநகர் பீஜிங் ஆகும். கடந்த 30 ஆண்டு காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த ஒரு குழந்தை திட்டம், வரும் காலங்களில் விலக்கி கொள்ளப்பட உளளது. அரசின் இந்த முடிவால் சீன மக்கள் சந்தோஷமடைந்துள்ளனர்.சீன அரசு தன்னுடைய நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக ஒரு குழந்தை திட்டத்தை கடந்த 1970ஆம் ஆண்டுகளில் கொண்டு வந்தது. ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றால் பெற்றோர்களுக்கு தகுந்த தண்டனை மற்றும் சலுகைகள் ரத்து போன்றவை கடுமையாக பின்பற்றப்பட்டது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்ட போதிலும் சட்டம் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த சட்டத்தை முடிவுக்கு கொண்ட வரப்போவதாக நேஷனல் கமிட்டி ஆப் பாப்புலேசன் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் துணை இயக்குனர் வாங்க்யூகிங் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளில் முதலில் பெண் குழந்தை பிறந்தால் அவர்கள் இரண்டாவது குழந்தை பெற அனுமதிக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார். இவ்வமைப்பின் மற்றொரு இணை இயக்குனரான ஜாங்லீ என்பவர் கூறுகையில் ஒரு குழந்தை திட்டத்தால் இளைஞர் மற்றும் வயதானவர்களின் இடையேயான எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாகவும் தெரிவித்தார்.கடந்த 2009ஆம் ஆண்டில் உள்ள வயதானவர்களின் எண்ணிக்கை 8.5 சதவீதமாக இருப்பது வரும் 2030 ஆண்டுகளில் 17.5 சதவீதமாக அதிகரிக்க கூடும் என்று அரசு அஞ்சுவதே ஒரு குழந்தை திட்டத்தை மாற்றி அமைப்பதன் நோக்கமாகும்

Posted by Unknown Labels:
உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் 100ஆவது சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த 10 வருட காலமாக இஸ்ரேலியச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு குழந்தைகளின் தாயான இமான் கஸ்ஸாவி (வயது 35) எனும் பலஸ்தீன் பெண்மணியை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கஸ்ஸாவி 2001 மார்ச் 8 ஆம் திகதி இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கடத்திச் செல்லப்பட்டு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு வழக்குமன்றத்தினால் 13 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார் என சிறைக் கைதிகள் நலன்கள் தொடர்பான பலஸ்தீன் அமைச்சகத்தின் பேச்சாளர் ரியாத் அல் அஷ்கார் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் ஒரே சமயத்தில் கடத்திச் செல்லப்பட்ட நான்கு பலஸ்தீன் பெண்களுள் கஸ்ஸாவியும் ஒருவர். இவர்களின் கணவர்களும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைச்சாலைகளில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. கஸ்ஸாவி கடத்திச் செல்லப்பட்டு 5 மாதங்களின் பின் அவரது கணவர் ஷாஹிர் அஸ்ஹாவும் ஆக்கிரமிப்புப் படையினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். அவர்களின் குழந்தைகள் ஸமாஹ் (வயது 12), ஜிஹாத் (வயது 13) ஆகிய இருவரும் கடந்த 10 வருடகாலமாகத் தமது தாய்வழிப் பாட்டியிடம் வளர்ந்து வருகின்றனர்.

மிக நீண்ட காலமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறையிலே மிகக் கடுமையான சித்திரவதைகளை எதிர்கொள்ள நேர்ந்த காரணத்தால் தலை, வயிறு மற்றும் மூட்டுக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கஸ்ஸாவி தொடர்ச்சியான உடல் உபாதைகளை அனுபவித்து வருகின்றார்.

அமைச்சகப் பேச்சாளர் அஷ்கார் கருத்துரைக்கையில், இஸ்ரேலிய சட்டத்தில் கணவன் - மனைவி ஆகிய இருவருமே சிறையில் உள்ள நிலையில் 6 மாதங்களுக்கு ஒருதடவை பரஸ்பரம் தனிப்பட்ட முறையில் சந்தித்துக் கொள்வதற்கான அனுமதி இருக்கின்ற போதிலும், கடந்த 10 வருட காலத்தில் மேற்படி கைதிகள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள ஒருதடவை கூட வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும் இது சர்வதேச மனித உரிமை விழுமியங்களுக்கு முற்றிலும் மாற்றமான கடும்போக்காகும் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தன்னுடைய இரு குழந்தைகளைச் சந்திக்கும் போதுகூட இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகத்தினால் வெறும் நாற்பது நிமிட நேரமே அந்தத் தாய்க்கு வழங்கப்பட்டுள்ளது.

எந்தவிதமான நியாயமான காரணமும் இன்றி ஓர் இளம் தாயாரை மிக நீண்ட காலமாகத் தன்னுடைய இரண்டு குழந்தைகளிடமிருந்து பிரித்து சிறையில் அடைத்துவைத்துள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகத்தின்மீது அழுத்தம் செலுத்தி, மேற்படி அப்பாவிப் பலஸ்தீன் பெண்மணியைத் துரிதமாக விடுவிப்பதில் உரிய கவனம் எடுக்குமாறு கோரிக்கை விடுத்து சிறைக்கைதிகள் நலன்கள் தொடர்பான பலஸ்தீன் அமைச்சகம் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களிடம் மனு சமர்ப்பித்துள்ளது.

( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )





Posted by Unknown Labels:
“காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 63 சீட் கேட்பது நியாயமா?’ என ஆவேசமாக கேள்வி எழுப்பி, மத்திய அமைச்சரவையில் இருந்துதி.மு.க., வில குகிறது என்று அறி வித்த கருணாநிதி, இரண்டே நாளில் தன் முடிவை மாற் றிக் கொண்டார். காங்கிரஸ் கேட்ட 63 சீட்களை தர ஒப்புக்கொண் டார். அமைச்சர்களின் ராஜினாமா நாடக மும் முடிவுக்கு வந்தது.
“தி.மு.க., அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை பிரத மரிடம் திங்கள் கிழமை காலையில் அளிப்பர்’ என்று தி.மு.க., ஏற்கனவே அறிவித்து இருந்தது. தி.மு.க.,வைச் சேர்ந்த ஆறு அமைச்சர்களும் நேற்று காலை டில்லி வந்திறங்கினர். அனைத்து அமைச்சர்களும் நேரடியாக அமைச்சர் அழகிரியின் இல்லத் திற்கு விரைந்தனர். அங்கிருந்து அனைவரும் ஒன்றாக சேர்ந்து பிரதமரை சந்திக்கச் செல்வர் என்றும் கூறப்பட்டது. அதற்காக பிரதமரிடம் நேரம் கேட்கப்பட்டிருப்பதாகவும், காலை 11 மணி யளவில் பிரதமர் நேரம் ஒதுக்கியிருப்பதாகவும் தகவல் வெளி யானது. பார்லிமென்ட் நடந்து கொண்டிருப்பதால் அங்கு, பிரதமர் அலுவலகம் எதிரே நிருபர்கள் குவிந்தனர். திடீரென நிலைமை மாறியது.

மத்திய ஊழல் ஆணையத்தின் தலைவராக தாமஸ் நியமிக்கப் பட்ட விவகாரம் குறித்து பார்லிமென்டில் அறிக்கை தாக்கல் செய் வதில் பிரதமர் வட்டாரங்கள் பிசியாக இருந்ததால் இந்த சந்திப்பு நடைபெற வாய்ப்பில்லாமல் போகவே, மறுபடியும் பரபரப்பும், சஸ்பென்சும் தொடர்ந்து கொண்டே இருந்தது. மதியம் 12 மணி யளவில் பார்லிமென்டில் பிரணாப் முகர்ஜியை தி.மு.க., தரப்பி லிருந்து அமைச்சர் ஒருவர் மட்டும் வந்து சந்தித்து விட்டு போனார். அவர் சென்ற சில நிமிடங்களில், பிரணாப் முகர்ஜியின் அறை க்கு உள்துறை அமைச்சர் சிதம்பரம் வந்தார். அங்கு, குலாம் நபி ஆசாத், அகமது படேல் ஆகியோரும் உடன் இருக்க மீண்டும் ஆலோசனை தொடர்ந்தது. அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்புக்கு பிறகு வெளியில் வந்த சிதம் பரம், எதுவுமே கூறாமல் சென்றார். குலாம் நபி ஆசாத்தோ, “பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை; முட்டுக்கட்டை நீடிக்கிறது’ என்று மட்டும் கூறிவிட்டு சென்றார்.

இப்படி அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் எதுவுமே எந்தவொரு அறிகுறியையும் காட்டாமலேயே நடந்து கொண்டிருந்ததால், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை யூகிக்க கூட முடியாத அளவுக்கு மிகுந்த பரபரப்பும், சஸ்பென்சும் நீடித்தபடி இருந்தது. பின்னர் 4 மணியளவில் முதல்வர் கருணாநிதியை நிதியமை ச்சர் பிரணாப் முகர்ஜி, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். சென்னையில் இதை உறுதிப்படுத்திய துணை முதல்வர் ஸ்டாலின், “மேலும் ஒரு நாள் கால அவகாசம் காங்கி ரஸ் கேட்டிருப்பதாக அறிவித்தார். இதையடுத்து, பரபரப்பு தற்கா லிகமாக முடிவுக்கு வந்தது.

துணை முதல்வரின் அறிவிப்பையடுத்து, நேற்று நாள் பூராவும் அழகிரி வீட்டில் ராஜினாமா கடிதங்களோடு காத்திருந்த தி.மு.க., அமைச்சர்கள், பிரதமருடனான சந்திப்பு நிகழ்ச்சியை கைவிட் டனர். காங்கிரசுக்கு தி.மு.க., 60 தொகுதிகள் வரை தருவதற்கு ஒப்புக் கொண்டது. பா.ம.க., தரப்பில் இருந்து 3 தொகுதிகள் வரை விட்டுக் கொடுத்து மொத்தம் 63 தொகுதிகளாக அளித்து சுமுக மான ஒரு முடிவை எடுத்து, இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், தி.மு.க., – காங் கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டு பிரச்னைக்கு இன்று இறுதி முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கன வே இடங்கள் அறிவிக்கப்பட்ட வேறு கட்சிகளிடம் இருந்து, ஒரு சில இடங்களைக் குறைப்பது குறித்து தி.மு.க.,ஆலோசனை நடத்தி வருகிறது.

முதல்வர் கேட்ட கேள்வி: கடந்த 5ம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: காங்கிரசுக்கு 60 இடங்கள் கொடுக்க தி.மு.க., ஒப்புக் கொண்ட நேரத்திலே, பா.ம.க.,விற்கு 31 இடங் கள், வி.சி.,க்கு 10 இடங்கள், கொங்கு முன்னேற்றக் கழகத்திற்கு ஏழு இடங்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு மூன்று இடங் கள், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு இடம் என, தி.மு.க.,விற்கு 122 இடங்கள் தான் எஞ்சியிருந்தன. இந்நிலை யில், காங்கிரஸ் 60 இடங்கள் போதாதென்று 63 இடங்கள் கேட் பதும், அதுவும் எந்தெந்த இடங்கள் என்று அவர்கள் கேட்ப தையெல்லாம் கொடுக்க வேண்டும் என்பதும் முறைதானா என்ப தை அந்தக் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும்.

இதுவரை ஒதுக்கப்பட்ட தொகுதிகள்: தற்போதைய நிலையில், ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு 52 தொகுதிகளை தி.மு.க., ஒதுக்கிவிட்டது. மீதமுள்ள 182 தொகுதிகளில் காங்கிரசுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கினாலும், தி.மு.க., வசம் மீதமிருப்பது 122 தொகு திகள் தான். எனவே, 63 தொகுதிகளை காங்கிரசுக்கு விட் டுக் கொடுத்தால், தனிப்பெரும்பான்மை பெற 118 எம்.எல்.ஏ.,க்கள் தேவை என்ற நிலையில், தி.மு.க.,வால் 119 தொகுதிகளில் தான் போட்டியிட வேண்டியிருக்கும். இதன் காரணமாகவே, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒரு சிலவற்றை திரு ம்பப் பெற்று, காங்கிரசை கூட்டணியில் தக்க வைத்துக் கொள்ள தி.மு .க., முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.

பா.ம.க., ……………………………………………. 31

விடுதலை சிறுத்தைகள் …………………………… 10

கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் …………….. 7

முஸ்லிம் லீக்( தி.மு.க) ………………………3

மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ………………… 1

( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Posted by Unknown Labels:
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுக எம்.பி. கனிமொழி, கைது செய்யப்பட்ட முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் மனைவி ஆகியோரிடம் விரைவில் சிபிஐ விசாரணை நடத்தும் என்று தெரிகிறது.

அநேகமாக வரும் மார்ச் 15ம் தேதி இந்த விசாரணை நடக்கும் என்று சிபிஐ தரப்பில்
உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக நீரா ராடியாவிடமும் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற ஸ்வான் நிறுவனத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள பல்வாவின் டிபி ரியாலிட்டி நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு கடனாக ரூ.214 கோடி கொடுத்தது. இது தொடர்பாக கனிமொழியிடம் சிபிஐ விசாரணை நடத்தும் என்று தெரிகிறது.

இந்தப் பணத்தை கலைஞர் தொலைக்காட்சி ரூ. 31 கோடி வட்டியோடு திரும்பத் தந்துவிட்டது. ஆனால், எதற்காக கலைஞர் தொலைக்காட்சிக்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் பல்வாவின் நிறுவனம் ரூ. 214 கோடி தந்தது என்பது சிபிஐ எழுப்பும் கேள்வியாகும்.

அதே போல பல்வேறு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கிக் தந்ததற்காக ராசாவுக்குக் பல்லாயிரம் கோடி ரூபாய் லஞ்சமாகக் கிடைத்ததாகவும், அதை மொரீஷியர், சிங்கப்பூர் உள்பட 10 நாடுகளில் தனது மனைவி பரமேஸ்வரியி்ன் பெயரிலான கணக்குகளில் முடக்கியுள்ளதாகவும் சிபிஐ கருதுகிறது. இது குறித்து அவரிடமும் விசாரணை நடக்கலாம் என்று தெரிகிறது.

மேலும் ரியல் எஸ்டேட் நிறுவனமான யூனிடெக் நிறுவனம் 2007ம் ஆண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற விண்ணப்பித்தபோது, அந்த நிறுவனத்துக்கு டாடா குழுமத்தின் ரியல் எஸ்டேட் நிறுவனமான டாடா ரியாலிடி அண்ட் இன்பிராஸ்டிரக்சர் ரூ.1600 கோடி கடன் கொடுத்து உதவியது. எதற்காக போட்டி தொலைபேசி சேவை நிறுவனத்துக்கு டாடா நிறுவனம் கடனுதவி தந்தது என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் ஸ்வான் டெலிகாம் மூலமாக டாடா நிறுவனம் தனக்கு கூடுதலான ஸ்பெக்ட்ரத்தை வளைத்துப் போட்டதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்த விஷயத்தில் பேரம் நடத்தியவர் நீரா ராடியா என்பதால் அவரிடம் சிபிஐ மீண்டும் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

மேலும் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அன்னிய செலாவணி சட்டத்தை மீறியுள்ளனவா என்பதை அறிய அமலாக்கப் பிரிவு (Enforcement directorate) இந்த தொலைத் தொடர்பு நிறுவனங்களின் நிதி ஆதாரம் குறித்து விவரம் கேட்டு சைப்ரஸ், நார்வே உள்ளிட்ட 8 நாடுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இதற்கிடையே ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற தகுதியற்ற நிறுவனங்களின் பட்டியலையும் சிபிஐ தயாரித்து வருகிறது. அந்த நிறுவனங்கள் திட்டமிட்டு மோசடி செயலில் ஈடுபட்டனவா என்பது குறித்த ஆய்வும் நடக்கிறது.

இந்த விவகாரத்தில் மார்ச் 31ம் தேதிக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தயாளு அம்மாளிடமும் விசாரணை?:

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக கலைஞர் டிவியின் அதிகபட்ச பங்குகளை வைத்திருக்கும் முதல்வரின் மனைவி தயாளு அம்மாளிடமும் சிபிஐ விசாரணை மேற்கொள்ளும் என தகவல்கள் பரவியுள்ளன.
கலைஞர் தொலைக்காட்சியில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகளும், மகள் கனிமொழிக்கு 20 சதவீத பங்குகளும் உள்ளன.

பிரச்சனைக்கு தொகுதிகள் காரணமல்ல..காங்கிரஸ்:

இந் நிலையில் திமுக மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறுவதற்கு தொகுதிகள் ஒதுக்கீடுப் பிரச்சனை காரணமல்ல என்று அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

காங்கிரஸ் 63 இடங்களைக் கேட்பதாகவும், கேட்கும் தொகுதிகள் தரப்பட வேண்டும் என்றும் கோருவதாகவும் திமுக குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், பிரச்சனை அதுவல்ல என்று டெல்லி பத்திரிக்கையாளர்களிடம் காங்கிரஸ் தரப்பு மறுத்து வருகிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தனது குடும்பத்தினரை சிபிஐ விசாரிக்கக் கூடாது என்ற திமுக தலைமையின் கோரிக்கையைப் பிரதமர் அலுவலகம் நிராகரித்து விட்டதும், இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் பேச முடியாத வகையில், ராகுல் காந்தி தரப்பு முட்டுக் கட்டை போட்டதும் தான் திமுகவின் கோபத்துக்குக் காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

நீதிமன்ற நெருக்கடியால் அடுத்த சில நாட்களில் கனிமொழி மட்டுமன்றி கலைஞர் தொலைக்காட்சியின் முதலீட்டாளர் என்ற வகையில் முதல்வரின் மனைவி தயாளு அம்மாளையும் சிபிஐ கேள்வி கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதால் தான் திமுக இந்த முடிவுக்கு வந்துள்ளது. தொகுதிப் பங்கீட்டில் பிரச்சனையை உருவாக்கி அதை ஒரு காரணத்தை வைத்து கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டால், பின்னர் தங்களை சிபிஐ விசாரணை செய்தால், கூட்டணியிலிருந்து விலகியதால் காங்கிரஸ் தங்களை பழி வாங்குவதாகக் கூறிக் கொண்டு அனுதாபம் தேடிக் கொள்ளலாம் என திமுக நினைக்கிறது என்கிறார்கள் டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில்.

இதனால் தான் திமுகவுடன் காங்கிரஸ் தரப்பு பேச்சு நடத்தாமல் உள்ளது. வெறும் தொகுதிப் பங்கீடு பிரச்சனை என்றால் உடனே பேசித் தீர்வு கண்டிருக்க முடியும். இங்கு பிரச்சனை தொகுதிகள் அல்ல.. ஸ்பெக்ட்ரம் விசாரணை தான் என்கிறார்கள்.

Posted by Unknown Labels:


ஸ்பெக்ட்ரம் பிரச்சனையால் ஏற்பட்ட கசப்புணர்வு மற்றும் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ள திமுக, மத்திய கூட்டணி அரசிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் காங்கிரசுக்கு 60 இடங்கள் வரை ஒதுக்க திமுக முன் வந்தும், அக்கட்சி 63 இடங்களை கேட்பதாகவும், அதுவும் தாங்கள் கேட்கிற தொகுதிகளையெல்லாம் தர வேண்டும் என்றும் கேட்பதாகவும், இது நியாயம்தானா? என்றும் கருணாநிதி நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார்.
 

மேலும் சனிக்கிழமை (இன்று) மாலை நடைபெற உள்ள திமுக உயர் நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றும் கருணாநிதி அதில் கூறியிருந்தார்.
 

இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி அந்தரத்தில் ஊசலாடும் நிலை ஏற்பட்டது.
 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் 'பிரச்சனை தீர்ப்பாளர்' பிரணாப் முகர்ஜியை டெல்லியில் இன்று செய்தியாளர்கள் சந்தித்து திமுக - காங்கிரஸ் கூட்டணி நிலை பற்றி கேட்டனர்.
 

அதற்கு பதிலளித்த அவர் கூட்டணி தொடர்வதாகவும், எல்லை பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என்றும் கூறினார்.
 

"எங்களது அரசியல் உறவு குறித்து நான் உறுதி கூறுகிறேன்.சில நேரங்களில் எங்களுக்கிடையே சில பிரச்சனைகள் இருந்தன.பிரச்சனையை உருவாக்கும் திறமை எங்களுக்கு உள்ளது.அதே சமயம் அதை தீர்க்கும் திறமையும் உள்ளது; தீர்க்கப்படும்" என்று பிரணாப் கூறினார்.
 

இதனால் கூட்டணி முறியாது என்றே கருதப்பட்டது.
 

ஆனால் காங்கிரஸ் சற்றும் எதிர்பாராத முடிவை எடுத்து, அக்கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது திமுக.
 

பரபரப்பான சூழ்நிலையில் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் கூடிய திமுக உயர் நிலை செயல்திட்டக் குழு கூட்டத்திற்கு பின்னர், காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக்கொள்ளும் அறிவிப்பை வெளியிட்டது.
 

மேலும் மத்திய கூட்டணி அரசிலிருந்தும் விலகுவதாக அறிவித்த திமுக, பிரச்சனையின் அடிப்படையில் மன்மோகன் சிங் அரசுக்கு ஆதரவளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
 

அதிமுக கூட்டணியும் முடிவாகி விட்ட நிலையில், காங்கிரஸ் தற்போது போக்கிடம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 

ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை வைத்து இதுநாள் வரை தண்ணிக்காட்டி வந்த காங்கிரஸ் கட்சிக்கு திமுக சரியான ஆப்பு வைத்துவிட்டதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

அதே சமயம் காங்கிரஸ் கூட்டணியை முறித்துக்கொண்டதற்கான விளைவுகளையும் திமுக சந்திக்க வேண்டும்.அதனை சந்திக்க திமுக தயாராகிவிட்டதாகவே தெரிகிறது.


Posted by Unknown Labels:
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள அத்வானிக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சி.பி.ஐ. பா.ஜ.க. தலைவர்கள் அத்வானி, உமாபாரதி மற்றும் சிவசேனா தலைவர் பால்தாக்கரே உள்பட 21 பேர் மீது குற்றம் சாட்டியது. இது தொடர்பாக சி.பி.ஐ. ரேபரேலியில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் அத்வானி மீதான குற்றச் சாட்டுக்களை ஏற்க மறுத்த ரேபரேலி நீதிமன்றம் சி.பி.ஐ. மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது. சிபிஐயின் மனுவை அலாகாபத் உயர் நீதிமன்றமும் நிராகரித்தது.
இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜ.க. தலைவர்கள் சதி செய்துள்ளதாக கூறி சி.பி.ஐ. உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் இந்த மனு மீதான விசாரணைக்கு பதில் அளிக்குமாறு பா.ஜ.க. தலைவர்கள் அத்வானி, உமாபாரதி மற்றும் சிவசேனா தலைவர் பால்தாக்கரே ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
Posted by Unknown Labels:

அதிமுக கூட்டணியில் நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி உடன்பாட்டை ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் இருவரும் இணைந்து வெளியிட்டனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத கால இடைவெளி மட்டுமே இருக்கும் நிலையில், கட்சிகளிடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியாகவே இருந்து வருகிறது.

காங்கிரஸ் மற்றும் தேமுதிக ஆகியவை எந்தக் கூட்டணியில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், இன்று தென் மாவட்ட திமுக செயலாளர் அழகிரி, "விஜயகாந்த் என் நண்பர்; அவர் ரோசக்காரர். அதிமுகவில் அவர் இணைய மாட்டார்" என்று அதிரடி பேட்டி வழங்கியிருந்தார்.

இந்நிலையில், இன்று இரவு போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவை நடிகர் விஜயகாந்த் நேரில் சந்தித்துப் பேசினார். இருவருக்குமிடையிலான பேச்சு வார்த்தையின் முடிவில்,அதிமுக தேமுதிக இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. இதன்படி, அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை ஜெயலலிதா மற்று விஜயகாந்த் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

இதன்மூலம் விஜயகாந்தின் தேமுதிக, அதிமுக கூட்டணியில் இடம்பெறுவது உறுதியாகிவிட்ட நிலையில், காங்கிரஸ் தலைமையிலான மூன்றாம் அணி அமைவது சாத்தியமில்லை என்று தெரிகிறது. விரைவிலேயே காங்கிரஸ் மற்றும் திமுகவிடையே கூட்டணி பேச்சு வார்த்தை ஒருமுடிவுக்கு எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

          
Posted by Unknown Labels:


சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்கு 80 இடங்கள் தர வேண்டும் என்று திமுகவிடம் காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.

திமுக, காங்கிரஸ் கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் நேற்று முதல் முறையாக சந்தி்த்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
திமுக குழுவில் துணை முதலமைச்சரும், பொருளாளருமான மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் உயர்நிலை செயல் திட்ட குழு உறுபபினர் அமைச்சர் பொன்முடி ஆகியோரும் காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், நாமக்கல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
லண்டனில் சுற்றுப் பயணத்தில் இருந்த ஸ்டாலின் சென்னை திரும்பியதையடுத்து நேற்று இந்தக் குழுவினர் சந்தித்தனர்.
அண்ணா அறிவாலயத்தில் மாலையில் நடந்த பேச்சுவார்த்தையில் அகில இந்திய பொதுச் செயலாளர் ராகுல் காந்தி 30+30+30 என்ற பார்முலாப்படி 90 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், மாநில அரசியல் நிலைமை, பிற கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய இடங்களை மனதில் கொண்டு 80 இடங்களை காங்கிரஸ் நிச்சயம் எதிர்பார்ப்பதாகவும் திமுகவிடம் காங்கிரஸ் ஐவர் குழு கோரியது.
மேலும் ஆட்சியில் பங்குபெறவும் காங்கிரஸ் விரும்புவதாகவும் குழுவினர் தெரிவித்தனர்.
ஆனால், காங்கிரசுக்கு 60 இடங்கள் வரை தர தயாராக இருப்பதாக திமுக குழுவினர் தெரிவித்ததாகத் தெரிகிறது. ஆட்சியில் பங்கு குறித்து தேர்தலுக்குப் பின் பேசலாம் என்றும் அவர்களிடம் திமுக கூறியதாகத் தெரிகிறது.
ஆரம்பத்தில் இருந்தே திமுக கூட்டணி வேண்டாம் என்ற நிலையில் உள்ள வாசன் தரப்பு, ஆட்சியில் பங்கு கோர வேண்டும், அதிக இடங்கள் பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, காங்கிரஸ் கட்சித் தரப்பில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்ற விருப்பதைத் தெரிவித்துள்ளோம். பேச்சு விவரங்களை இரு கட்சிகளின் மேலிடங்களுக்கும் தெரிவிப்போம். அவர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு, ஓரிரு நாள்களில் இரண்டாம் கட்டப் பேச்சு நடக்கும் என்றார்.
மு.க.ஸ்டாலின் கூறுகையில், பேச்சுவார்த்தை சுமுகமாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஓரிரு நாளில் அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவு எட்டப்படும் என்றார்.
அடுத்த சில நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என இரு கட்சி வட்டாரங்களும் தெரிவித்தன.
இதையடுத்து தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், தமிழகம் வந்து முதல்வருடன் தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 48 இடங்களில் போட்டியிட்டு 34 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.
ஆட்சியில் பங்கு-சோனியா முடிவு செய்வார்-வாசன்:
இந் நிலையில் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் பேசிய வாசன், கடந்த 2004ம் ஆண்டில் தொடங்கி, மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல்கள் எனப் பல தேர்தல்களை வெற்றிகரமாகச் சந்தித்து வரும் கூட்டணி திமுக-காங்கிரஸ் கூட்டணி.
கட்சியின் அகில இந்தியத் தலைமை மற்றும் மாநிலத் தலைமை எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில்தான் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் யூகங்களுக்கே இடமில்லை.
தமிழகத்தில் ஆட்சியில் காங்கிரஸ் பங்கேற்பதா, இல்லையா என்பதை கட்சித் தலைவர் சோனியா காந்திதான் முடிவு செய்வார். தமிழகத்தைக் கடந்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்த திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி பல்வேறு வகையான நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது. இதைத்தான் எங்கள் கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய பலமாக கருதுகிறோம்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தைப் பொருத்தவரை அது தொடர்பான அனைத்து விஷயங்களையும் மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆகையால், அந்த விவகாரத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை என்றார்.
Posted by Unknown Labels:

சூனிய சமுதாயம்-04
 THE KABBALAH வும் பண்டைய எகிப்தும்.
பண்டைய எகிப்தின் மாய மந்திரக்காரர்கள்.

பண்டைய எகிப்து உலகின் மிக பழமைவாய்ந்த நாகரீகங்களில் ஒன்றாகும்.அதிக கெடுபிடிகள் அடக்குமுறைகள் நிறைந்த இந்த நாகரீகம் பாரோக்களால் ஆளப்பட்டு வந்தது.இன்றும் பண்டைய எகிப்தியர்களால் அடிமைகளைக் கொண்டு கட்டப்பட்ட பிரமிட்டுகள் சிறப்பு வாய்ந்த நினைவுச்சின்னங்கலாக பிரம்மாண்டமாக காட்சிதருகிறது.அன்றைய எகிப்தை ஆண்ட பாரோக்கள் தங்களை கடவுளின் பிரதிநிதிகள்  என அழைத்து கொண்டு மக்களுக்கு தங்களை வணங்கும்படி ஆணையும் பிறப்பித்தார்கள். 
பண்டைய எகிப்து பற்றிய தகவல்களைப் பெற எமக்கு அவர்களால் எழுதப்பட்ட கல்வெட்டுகள் உதவியாக இருந்தாலும் அவை அந்நாட்டின் அதிகாரபூர்வமான வரலாற்றாசிரியர்களால் எழுதப்பட்டதால் அவற்றின் உண்மைத் தன்மை கேள்விக்குரியாதாக உள்ளது.முஸ்லிகளாகிய எங்களுக்கு நம் திருக் குரான் இந்த சமுதாயம் பற்றி நிறைய தகவல்களைக் கூறுகிறது. 

மூஸா நபியவர்களின் வரலாற்றைக் கூறும் திருமறை எகிப்தின் ஆட்சி பற்றியும் அதன் நடைமுறைகளையும் பேசுகிறது.திருக் குரானின் வசனங்கள் மூலம் எகிப்தின் ஆட்சியில் இரு முக்கியமான கூறுகள் காணப்பட்டதாக நமக்கு தெரிய வருகிறது.
  
பரோக்களின் ஆலோசனை சபை எகிப்திய பாரோக்களின் ஆட்சியில் கணிசமான அளவு தாக்கம் செலுத்தி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.பாரோக்கள் ஒரு விடயத்தை செய்ய முன் அவர்களின் ஆலோசனை சபையின் ஆலோசனைகளை செவிமடுத்தே செயற்பட்டு வந்துள்ளனர்.

திருக் குரானின் 7 வது அத்தியாயம் இப்படிக் கூறுகிறது
   
“ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்” என்று மூஸா கூறினார்."

“அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதுவும்) கூறாமலிருப்பது என்மீது கடமையாகும்; உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருக்கிறேன் - ஆகவே இஸ்ரவேலர்களை என்னுடன் அனுப்பிவை” (என்றும் அவர் கூறினார்)."

அதற்கு அவன், “நீர் அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருப்பீரானால் - நீர் உண்மையாளராக இருப்பின் அதைக் கொண்டுவாரும்” என்று கூறினான்.

அப்போது (மூஸா) தம் கைத்தடியை எறிந்தார் - உடனே அது ஒரு பெரிய பாம்பாகி விட்டது.

மேலும் அவர் தம் கையை வெளியில் எடுத்தார் - உடனே அது பார்ப்பவர்களுக்குப் பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தது.

ஃபிர்அவ்னின் சமூகத்தாரைச் சேர்ந்த தலைவர்கள், “இவர் நிச்சயமாக திறமைமிக்க சூனியக்காரரே!” என்று கூறினார்கள்.

(அதற்கு, ஃபிர்அவ்ன்), “இவர் உங்களை, உங்களுடைய நாட்டை விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே (இதைப்பற்றி) நீங்கள் கூறும் யோசனை யாது?” (என்று கேட்டான்.)

அதற்கவர்கள், “அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணையைக் கொடுத்து விட்டு, பல பட்டிணங்களுக்குச் (சூனியக்காரர்களைத்) திரட்டிக்கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக!

“அவர்கள் சென்று சூனியத்தில் வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்” என்று கூறினார்கள்.

அவ்வாறே ஃபிர்அவ்னிடத்தில் சூனியக்காரர்கள் வந்தார்கள். அவர்கள், “நாங்கள் (மூஸாவை) வென்றுவிட்டால், நிச்சயமாக எங்களுக்கு அதற்குரிய வெகுமதி கிடைக்குமல்லவா?” என்று கேட்டார்கள்.

அவன் கூறினான்: “ஆம் (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்). இன்னும் நிச்சயமாக நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்.”
 ( 7 அத்தியாயம் 104 முதல் 114 வரை )

 திருக் குரானின் இந்த வசனங்களை நாம் கவனிக்கும் போது அங்கு பிரவ்ன் மூஸா (அலை ) அவர்களுக்கு சவால் விட தனது ஆலோசனை சபையிடம் ஆலோசனை கேட்பதையும் அதற்கு அந்த சபை சில ஆலோசனைகளை வழங்குவதையும் நம்மால் கவனிக்க முடியும்.இந்த ஆலோசனை சபை பற்றி நாம் எகிப்திய கல்வெட்டு ஆதாரங்களில் தேடும் போது அதில் இந்த சபை இரு கூறுகளைக் கொண்டதாக அவை குறிப்பிடுகிறது.
பாரோக்களின் படைகளின் உயர் அதிகாரிகள். மதகுருக்கள் 

இந்த இரு கூறுகளில் பண்டைய எகிப்திய நாகரீகத்தில் மதகுருக்களுக்கு ஒரு அதி உயர் அந்தஸ்து கொடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த விடயம் பற்றி நாம் இன்னும் ஆழமாக ஆராயும் போது,திருக் குர்ஆன்  இந்த மதகுருக்களை மந்திரவாதிகள் என அழைக்கிறது.பண்டைய எகிப்து மக்களிடையே மதகுருமார்களுக்கு இரகசிய சக்தி காணப்படுவதாக ஒரு நம்பிக்கை காணப்பட்டது.மக்களிடையே காணப்பட்ட இந்த நம்பிக்கை அவர்களுக்கு எகிப்திய சமூகத்தில் ஒரு உயரிய அந்தஸ்தையும் ஆட்சியில் தாக்கம் செலுத்தவும் ஒரு சந்தர்பத்தை கொடுத்தது.எகிப்திய கல்வெட்டுகள் இவர்களை "Priests of Amon" என அழைக்கிறது.இவர்கள் மாயமந்திர தந்திரங்களை கற்பதில் அதிகளவு ஆர்வம் காட்டியுள்ளார்கள்.அதுபோல் வானியல் கணிதவியல் மற்றும் புவியியல் போன்ற அறிவியல்துறை சார்ந்த விடயங்களிலும் இவர்களின் கவனம் இருந்ததாக பண்டைய எகிப்திய கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.


 பண்டைய எகிப்திய மதகுருமார்களின் கொள்கைக்கும் இன்றைய பயங்கர இரகசிய சமுதாயமான பிரீமேசனரிக்கும் இடையேயான தொடர்பு என்ன ???
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன ஒரு இரகசிய கொள்கைகள் இன்றும் தாக்கம் செலுத்த முடியுமா ???
ARTICLE FROM TAMILKHILAFA.BLOGSPOT.COM    


சுவிட்சர்லாந் நாட்டில் மஸ்ஜிதுகளில் கட்டப்படும் மினாராக்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தலைமை வகித்த சுவிஸ் நாட்டின் அரசியல் தலைவர் டானியல் ஸ்ட்ரீக் – Daniel Streich- சுவிஸ் நாட்டில் மினாராக்கள் கட்டுவதை தடை செய்ய முழு காரணமாக இருந்த சுவிஸ் மக்கள் கட்சியின் முக்கிய உறுப்பினர் இஸ்லாத்தை தழுவியதாக செய்திகள் வெளிவந்தன எனிலும் அதுபற்றிய மாறுபட்ட கருத்துகள் வெளிவந்தமையால் அந்த செய்தியை நாம் உடனடியாக தரவில்லை ஆனால் இப்போது .அவர் நேரடியாக சுவிட்சர்லாந் அரச தொலை காட்சியில் தோன்றி தான் இஸ்லாத்தை ஏற்றத்தையும் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்

இஸ்லாத்தை ஏற்றமைகான காரணத்தை இவர் இப்படி குறிபிடுகின்றார் “Islam offers me logical answers to important life questions, which, in the end, I never found in Christianity,”- நான் கிறிஸ்தவத்தில் ஒரு போதும் காணாத வாழ்க்கை பற்றிய மிகவும் முக்கியமான வினாக்களுக்கு இறுதியாக இஸ்லாம் தர்கா ரீதியான பதில்களை எனக்கு தந்துள்ளது என்று கூறியுள்ளார் -

இவரை பற்றி சுவிட்சர்லாந் அரச தொலை காட்சி இப்படி கூறியுள்ளது He was a true SVPer and Christian. He read the Bible and regularly went to church. Now Daniel Streich, military instructor and community council member, reads the Qur’an, prays five times a day and goes to a mosque! இவர் உண்மையான SVP உறுபினராகவும், வழமையாக கிறிஸ்தவ ஆலையத்துக்கு செல்பவராகவும் , பைபிளை படிபவராகவும் இருந்த Daniel Streich என்ற இராணுவ கற்கைக்கான விரிவுரையாளர் , சமூக கவுன்சில் உறுப்பினர் இப்போது மஸ்ஜிதுக்கு செல்கிறார் , ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் தொழுகிறார் , அல் குர்ஆன் படிக்கிறார் என்று குறிபிடுகிறது

இவர் சுவிட்சர்லாந்தில் மினாராக்கள் கட்டுவதை தடைச் செய்ய வேண்டுமென்றூம், மஸ்ஜிதுகளை பூட்டவேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தை வழி நடாத்தியவர் இவரின் மாற்றம் முழு மேற்கு நாடுகளிலும் பெரும் அதிர்வு அலைகளை எழுப்பி வருகின்றது என்பதுடன் இவருடன் இணைந்து இஸ்லாத்துக்கும் , முஸ்லிம்களுக்கும் எதிரான பிரச்சாரம் செய்த கட்சியின் உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்திருபதாக தெரிவிக்க படுகின்றது

சுவிட்சர்லாந் நாட்டில் 4 இலச்சம் முஸ்லிம்கள் வாழ்வதாக சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய அமைப்பு கூறுகின்றது ஆனால் சுவிட்சர்லாந்தின் 2000 ஆண்டின் மக்கள் தொகை பதிவு 311000 என்று கூறுகின்றது இங்கு 100 கும் அதிகமான் மஸ்ஜிதுகள் இருகின்றன எனிலும் 4 மஸ்ஜிதுகள் மாத்திரம் மினாராகளை கொண்டுள்ளது .

நாடு முழுவதும் ஸ்ட்ரீக் நடத்திய மினாராக்களுக்கெதிரான பிரச்சாரம் இஸ்லாத்திர்கெதிரான மக்களின் எதிர்ப்பை அதிகரித்தது. தனது கடந்த கால நடவடிக்கைகளுக்காக வெட்கப்படுவதாகவும், ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த மஸ்ஜித் கட்டுவதற்கு தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக் தெரிவித்துள்ளார் .

சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் மினாராக்களை தடைச்செய்வது குறித்து விருப்ப வாக்கெடுப்பில் சுவிஸ் நாட்டவர்கள் மினாராக்களை தடைச் செய்ய ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்பத்தில் இஸ்லாத்தை கடுமையாக எதிதவர்களால் தான் இஸ்லாம் அதிகம் வளர்ந்துள்ளது என்பதும் இஸ்லாத்தின் எதிரியாக இருந்தவர்கள்தான் அதிகம் இஸ்லாத்தை வளர்க்கும் பணிக்கு தமை அற்பணித்தார்கள் என்பதும் இஸ்லாமிய வரலாறு
Posted by Unknown Labels:
Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.