டெல்லி:முஸ்லிம்களை கவுரவப்படுத்தும் வகையில் சிறப்பாக அவர்களுக்கு எதுவும் செய்துவிடவில்லை மாறாக சச்சார் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துவதும், முஸ்லிம்களின் இடஒதுக்கீடும் அவர்களின் ஜனநாயக உரிமை' என்பதாக மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராஷ்ட்ரிய முக்தி மோர்ச்சா தொடர்ந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது.மத்திய அரசு அளித்த அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;'முஸ்லிம் சமுதாயம் ஒரு மோசமான இருலுலகில் வாழ்வதை சச்சார் கமிட்டி தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. இடஒதுக்கீடு போன்ற நடைவடிக்கைகளின் மூலம்தான் முஸ்லிம் சமுதாயம் முன்னேற்றம் அடையும்.இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிடில்,அச்சமுதாயம் மீண்டும் பின்னுக்குத் தள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.இந்தியாவின் ஒட்டு மொத்த முன்னேற்றத்திற்கு முஸ்லிம்களின் முன்னேற்றம் அவசியம் என்று கூறியுள்ள மத்திய அரசு,இதன்படி இடஒதுக்கீடு மத்தியில் ஆளும் அரசின் கடமை என்பதாக குறிப்பிட்டுள்ளது.முஸ்லிம் சமுதாயம் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், இது முஸ்லிம்களின் உரிமையே தவிர அவர்களை அரசு கவுரவிக்கவில்லை என்பததாகவும் கூறியுள்ளது.இடஒதுக்கீடு தற்போது நிலவும் சூழலில் நிறைவேற்றப்படவில்லை என்றால், இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் முஸ்லிம்களின் நிலைமைகளுக்கும் இன்று நிலவும் இடைவெளியை என்றைக்கும் பூர்த்தி செய்ய இயலாது என்றும் கூறியுள்ளது.இடஒதுக்கீடு அல்லாமல் முஸ்லிம்கள் அதிகம் வாழும் சுமார் 90 நகரங்களில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன்படி, முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அடிப்படை வசதிக்கூட இல்லாத நகரங்களில் Multi-Sectoral development Program என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் 14 பக்கங்களைக் கொண்ட அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.ராஷ்ட்ரிய முக்தி மோர்ச்சா, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு புறம்பானது என்றும் முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டும் இச்சிறப்பு அளிக்கப்படுவது அரசியல் சட்டங்களுக்கு எதிரானது என்று கூறி மனு ஒன்றை தாக்கல் செய்தது.இதனைத் தொடர்ந்துதான் மத்திய அரசு இப்பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.
Posted by Unknown Labels:

0 comments:

Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.