முஸ்லிம்களுக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் தீர்மானம்



சென்னை: நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி பரிந்துரைப்படி, மத்திய அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னையில் நடந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் தீர்மானம் நிடைவேற்றப்பட்டது.

தனி இட ஒதுக்கீடு

ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையின்படி, முஸ்லிம்களுக்கு 10 சதவீத தனி இட ஒதுக்கீடு சட்டமாக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சென்னை பல்லவன் இல்லம் அருகில் இருந்து தீவுத்திடலை நோக்கி பேரணி நடைப்பெற்றது.


இந்த பேரணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பக்கீர் முகமத் அல்தாஃபி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் எம்.அப்துல் ஹமீது முன்னிலை வகித்தார். பொருளாளர் முகமத்சாதிக் பேரணியை தொடங்கி வைத்தார்.


இந்த பேரணியில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான அமைப்பின் தொண்டர்களும்,இஸ்லாமிய பெண்களும் குழந்தைகளும் கலநது கொண்டனர்.

மாநாடு

அதனை தொடர்ந்து, மாலை 5 மணிக்கு ’ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு என்ற தலைப்பில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநாடு தீவு திடலில் தொடங்கியது.

இரண்டு அமர்வுகளாக நடைபபெற்ற இந்த மாநாட்டிற்கு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் எம்.அப்துல் ஹமீது, மேலான்மை குழு தலைவர் எம்.ஷம்சுல்லுஹா ரஹ்மானி ஆகியோர் தலைமை தாங்கினார். தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் என்.பக்கீர் முகமது அல்தாஃபி முன்னிலை வகித்தார். மாநாட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி தவ்ஹீத் ஜமாஅத் நிறுவனர் பி.ஜைனுல் ஆபிதீன் சிற்ப்புரையாற்றினார்.


தவ்ஹீத் ஜமாஅத் செயலாளர் எம்.முகமது தவ்பீக்,துனை பொதுச்செயலாளர் எஸ்.கலீல் ரசூல், செயலாள்ர் கே.அப்துல் ஜப்பார் ஆகியோர் மாநாட்டு தீர்மானங்கள் வாசித்தனர். முன்னதாக, மாநாட்டு குழு தலைவர் சைபுல்லா ஹாஜா வரவேற்றார். இறுதியில் தவ்ஹீத் ஜமாஅத் துனைத்தலைவர் ஆர்.ரஹ்மத்துல்லா நன்றி கூறினார். இந்த மாநாட்டில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். பெண்களும் குழந்தைகளும் அதிகளவில் வந்திருந்தனர்.


மாநாட்டில் மொத்தம் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கிய தீர்மானங்கள் விவரம் வருமாறு:-


கடந்த 60ஆண்டு காலமாக கல்வியிலும்,வேலைவாய்ப்பிலும் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு மத்திய அரசு பணியில் 10 சதவீத தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.


ஜ.ஜ.டி., ஜ.ஜ.எம்., ஜ.ஜ.எஸ்சி., உள்பட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீடு கிடைத்திடும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும்.

மத்திய அரசின் ராணுவம்,உளவு உள்பட பாதுகாப்புதுறைகளிலும் இதேபோல் மாநில அரசின் காவல் மற்றும் உளவுத்துறையிலும் முஸ்லிம்களுக்கு 20 சதவீத இடஒடுக்கீடு வழங்க வேண்டும்.

தனித்தொகுதி

தலித் மக்களுக்கு தனிதொகுதிகள் இருப்பதுபோல் உள்ளாட்சி, சட்டமன்றம், பாராளுமன்றம், மாநிலங்களவை, மேல்-சபை அனைத்திலும் 10 சதவீத தொகுதிகளை முஸ்லிம் தனித்தொகுதிகளாக அறிவிக்க வேண்டும்.

உத்தரப் பிரதேசத்தில் இருப்பதைப் போல அனைத்து மாநிலங்களிலும் முஸ்லிம் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும்.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜூலை 4 மாநாடு புகைப்படங்கள் தொகுப்பு







இவர்களைப் பார்த்தால் ஒருநாள் நிகழ்ச்சி முடிந்தது என்று சோர்ந்து போகும் கூட்டமாக தெரியவில்லை. கொடுக்க‌வில்லை என்றால் எடுத்துக் கொள்வோம், என்ற‌ உறுதி ஒவ்வொருடைய‌ க‌ண்களில் இருந்து தெரிகிற‌து.
Posted by Unknown Labels:

0 comments:

Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.