இஸ்லாமியர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டடில் உள்ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு மிகவும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது என்று சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். “நாங்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தை மிக முக்கிமானதாக கருதி வருகிறோம். எங்களது கட்சியின் (தேர்தல்) அறிக்கையை நிறைவேற்றுவதில் நாங்கள் முழுக்கவனம் செலுத்தி வருகிறோம். அதற்க்காக நான் எப்போதுமே இதை வலியுறுத்தி வருகிறேன்… காங்கிரஸ் தலைமை இந்த விவகாரத்தில் முனைப்புடன் உள்ளது. இதில் சிறுதும் சந்தேகம் இல்லை.” என்று பி.டி.ஐக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். ரங்கநாதன் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை நிறைவேற்றுவதில் அரசின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார். ரங்கநாதன் மிஸ்ரா கமிஷன் அறிக்கை, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு அளிக்க பரிந்துரை செய்துள்ளது. இந்த அறிக்கை கடந்தஆண்டே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் இது வரை எந்த நிலை பாடும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றிய டைம் ஆஃப் இந்தியாவின் ஆங்கில செய்தி http://timesofindia.indiatimes.com/india/Govt-considering-reservation-for-Muslims-through-OBC-route/articleshow/6226550.cms
Posted by
Unknown
Labels:
TNTJ
கடந்த 24.25.2010 அன்று சென்னை தியாகராயர் அரங்கத்தில் வைத்து சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவையினருக்கும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் இடையிலான இரண்டாவது விவாதம் அதிக எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மிகவும் பரபரப்பாக ஆரம்பமாகியது.
இறைவனுக்கு உருவம் உண்டா? என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் அல்லாஹ்வையே கடுமையாக விமர்சித்து தான் அல்லாஹ்வின் எதிரி என்பதை பகிரங்கமாக வீடியோவில் பதிவு செய்த அப்துல்லாஹ் ஜமாலி இந்த விவாதத்திலாவது உரிய ஆதாரத்தை முன்வைத்து வாதிடுவார் என்று அரங்கில் கூடியிருந்தவர்கள் எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்தார்கள்.
விவாதத்தின் இருதியாய் மாறிய ஜமாலியின் ஆரம்பம்.
ஷிர்க் எனும் இணைவைத்தல் மற்றும் பித்அத் செய்பவர்கள் யார்? என்ற தலைப்பில் சரியாக காலை 10.30 மணிக்கு விவாதம் ஆரம்பமாகியது.
முதலாவதாக பேச ஆரம்பித்த சகோதரர் பி.ஜெ அவர்கள் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உள்ளிட்ட சுன்னத் வல் ஜமாத் ஐக்கியப் பேரவையைச் சேர்ந்தவர்களும் அவருடைய கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பவர்களும் தெளிவான இணைவைத்தலில் ஈடுபடுவதால் அவர்கள் அனைவரும் முஷ்ரிக்குகள் தான் என்பதை மிகத் தெளிவாக மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து பேச ஆரம்பித்த அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் பி.ஜெ சொன்னதைப் போல் தான் முஷ்ரிக் என்பதற்கு தானே ஆதாரத்தைக் காட்டி பி.ஜெ அவர்கள் சொன்னதை ஆமோதித்தார் ஜமாலியுடைய முதல் வாதமே விவாதத்தின் கடைசியாக மாறியது என்பதுதான் விவாதத்தின் ஹைலைட்.
தான் முஷ்ரிக் என்பதை நிரூபித்த ஜமாலியின் முதல் கேள்வி.
உலகில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் பல மொழிகளில் பல கோரிக்கைகளை முன்வைத்தாலும் அவை அனைத்தையும் பிரித்தறிந்து அவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் பதில் கொடுக்கக் கூடிய ஆற்றல் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரம் தான் இருக்கிறது. ஆனால் அப்துல்லாஹ் ஜமாலியும் சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவை என்று சொல்லிக் கொள்பவர்களும் இந்த அதிகாரம் நல்லடியார்கள் என அவர்களால் நம்பப் படுபவர்களுக்கும் இருப்பதாக நம்பி ஏற்றுக் கொண்டிருப்பதால் அவர்கள் அணைவரும் இணைவைத்தல் எனும் ஷிர்க்கை செய்து முஷ்ரிக்காக மாறிவிட்டார்கள் என சகோதரர் பி.ஜெ அவர்கள் தெளிவாகக் கூறினார்.
அதை எதிர்த்து குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தான் முஷ்ரிக் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஜமாலியோ தான் முஷ்ரிக் அல்ல என்று நிரூபிப்பதை விட்டு விட்டு உலகில் உள்ள அணைவரும் ஒரே நேரத்தில் பல மொழிகளில் பல கோரிக்கைகளை முன்வைத்தாலும் அவை அணைத்தையும் பிரித்தறிந்து அவர்கள் அணைவருக்கும் ஒரே நேரத்தில் பதில் கொடுக்கக் கூடிய ஆற்றல் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரம் தான் இருக்கிறது.என்பதற்கு ஆதாரம் என்ன? என்று கேள்வி கேட்டு அல்லாஹ்வின் ஆற்றலிலேயே சந்தேகத்தை எழுப்பி அல்லாஹ் அல்லாதவர்களுக்கும் இந்த அதிகாரம் இருப்பதாக ஒத்துக் கொண்டு தான் முஷ்ரிக் தான் என்பதை முதல் வாதத்திலேயே ஒத்துக் கொண்டார்.
ஜமாலி தவ்ஹீத் ஜமாத்தின் மேல் வைத்த குற்றச் சாட்டுக்களும் பி.ஜெயின் பதில்களும்.
உலகில் உள்ள அணைவரும் ஒரே நேரத்தில் பல மொழிகளில் கேட்டாலும் அணைத்தையும் பிரித்தறிந்து அவர்கள் அணைவருக்கும் பதில் தரக்கூடிய ஆற்றல் அல்லாஹ்வுக்கு மாத்திரம் தான் உண்டு என்றால் தசாவதானி ஒரே நேரத்தில் 10 வேலைகளை செய்கிறான் சதாவதானி ஒரே நேரத்தில் 100 வேலைகளை செய்கிறான் இதுவெல்லாம் அல்லாஹ்வுக்கு ஒப்பாகாதா? என்று பி.ஜெயை நோக்கி ஜமாலி கேள்வியைத் தொடுத்தார்.
அதற்கு பதில் அளித்த பி.ஜெ தசாவதானி என்பவன் ஒரே நேரத்தில் 10 காரியங்களை செய்வதும் சதாவதானி ஒரே சந்தர்பத்தில் 100 காரியங்களில் ஈடுபடுவதும் பிறப்பில் உருவாவதோ அல்லது இயற்கையோ கிடையாது மாறாக அது பயிற்சியின் மூலம் பெற்றுக் கொள்வது அப்படி ஒருவர் ஒரே நேரத்தில் 10 அல்லது 100 காரியங்களை செய்வதால் ஒன்றும் அவர் கடவுளாகவோ அல்லது கடவுளின் தன்மைகள் பெற்றவராகவோ மாற முடியாது.
ஒரு வாதத்திற்கு அப்படி வைத்துக் கொண்டாலும் தசாவதானி சதாவதானி என்றவர்களின் பட்டியலில் ஒரே ஒரு முஸ்லிம் தான் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் மற்றவர்கள் அணைவரும் மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் தான்.
ஒருவன் தசாவதானியாக அல்லது சதாவதானியாக இருப்பதால் அவன் அவ்லியாதான் என்று நீங்கள் கூறினால் மாற்று மதத்தை சேர்ந்தவர்களைத்தான் அந்தப் பட்டியலில் அதிகமாக இடம் பிடிக்கச் செய்யவேண்டி வரும் என்பதை தெளிவாக எடுத்துச் சொன்னார். ஜமாலியின் அத்தமற்ற கேள்விகளும் பீ.ஜெயின் ஆணித்தரமான பதில்களும். முதலாவதாக தவ்ஹீத் ஜமாத்தும் அதன் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்களும் முஷ்ரிக்குகள் எனும் இணைவைப்பாளர்கள் என்று உங்கள் நிலைப்பாட்டை நீங்கள் தெரிவித்துள்ளீர்கள் அதற்கு என்ன ஆதாரம் என பி.ஜெ ஜமாலி யைப் பார்த்து கேள்வியை முன்வைத்தார்.
அதற்கு குர்ஆனிலிருந்தும் நபிகள் நாயகத்தின் பொன் மொழிகளிலிருந்தும் ஆதாரத்தை எடுத்து தனது குற்றச் சாட்டை மெய்ப்படுத்த வேண்டிய ஜமாலியோ நகைச்சுவையை உண்டு பண்ணும் ஒர் ஆதாரத்தை முன் வைத்தார்.
ஜமாலியின் ஆதாரக் கிரந்தங்களாகிய உணர்வுப் பத்திரிக்கையும் அல்ஜன்னத்தும்.
தவ்ஹீத் ஜமாத்தினர் இணைவைக்கின்றனர் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டதற்கு உணர்வுப் பத்திரிக்கையில் இரத்த தானம் செய்வீர் மனித உயிர் காப்பீர் என இரத்ததானத்தை வழியுறுத்தி செய்யப் பட்டிருந்த விளம்பரத்தை ஆதாரமாக காட்டிய ஜெமாலி அவர்கள்
உயிரைத் தருவதும் அதனை எடுப்பதும் இறைவனின் அதிகாரத்தில் உள்ளது அப்படியிருக்க இரத்ததானம் செய்து உயிர் காக்கும் படி விளம்பரம் செய்து மக்களிடம் கேட்பது இணைவைப்பதாகும்.
இப்படி விளம்பரம் செய்தததினால் தவ்ஹீ;த் ஜமாத் இணைவைத்த விட்டது அது போல் 1988 காலப்பகுதியில் வெளியான அல்ஜன்னத் பத்திரிக்கையில் குழந்தையில்லாத தம்பதியினருக்கு ஒரு வைத்தியர் ஆலோசனைகளும் மருந்தும் தருகிறார் என்று ஒரு விளம்பரம் வெளியிடப் பட்டிருந்தது அதை எடுத்துக் காட்டிய ஜமாலி அவர்கள் குழந்தைப் பாக்கியத்தைத் தருபவன் இறைவன் அப்படியிருக்க நீங்கள் எப்படி குறிப்பிட்ட மருத்துவரிடம் செல்லும் படி பத்திரிக்கையில் விளம்பரம் செய்வீர்கள் இதுவும் ஷிர்க் எனும் இணைவைத்தலாகும்.என வாதிட்டார் ஜமாலி.
அப்துல்லாஹ் ஜமாலியும் அவர் சார்ந்திருக்கும் சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவையினரும் அவர்களின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டிருப்பவர்களும் முஷ்ரிக்குகள் என்ற மிகப் பெரிய குற்றச்சாட்டை பி.ஜெ வைத்து அதனை ஆதாரத்துடன் நிருவியும் காட்டியுள்ளார்.
ஆனால் நாங்கள் முஷ்ரிக்குகள் அல்ல என்று நிருவ வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஜமாலியோ கோமாலித்தனமாக தனது நிலைப்பாட்டிற்கு ஆதாரமாக உணர்வுப் பத்திரிக்கையையும் அல்ஜன்னத்தையும் காட்டியது அவர்கள் தரப்பில் பார்வையாளர்களாக வந்தவர்களையே முகம் சுழிக்க வைத்து விட்டது.
# அல்லாஹ்விடம் கேட்டால் எப்படி கிடைக்குமோ அது போல ஒரே நேரத்தில் உலகில் எத்தனை பேர் கேட்டாலும் கூகுல் இணையத்தளம் தேவையானதை உடனே தேடித்தருகிறது.இப்படி தேடித்தருவதால் (Google)கூகுலைப் பயன் படுத்துவது ஷிர்க் என்றாகிவிடுமா என கொஞ்சம் கூட சிந்தனையற்ற சிறுபிள்ளைத் தனமான கேள்வியை பி.ஜெயிடம் ஜமாலி கேட்டார்.
கூகுல்(Google) செர்ச் என்ஜினைப் பொருத்தவரை ஒரே நேரத்தில் பலர் கேட்டாலும் தேடித்தருகிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள் அது தேடித்தரும் முறையை முதலில் புரிந்து கொள்ளுங்கள் கூகுல் செர்ச் என்ஜின் ஒவ்வொரு மைக்ரோ பாயின்டுக்கும் பலரைக் கொண்டு இயக்கப் படுகிறது.அதனால் தான் நாம் கேட்கும் போது அது உடனே தேடித் தருகிறது.
அப்படியே அதனை இயக்குவதற்கு ஆட்கள் இல்லாமலயே அது இயங்கினால் கூட உங்கள் கேள்வியில் அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
அல்லாஹ் ஒருவருக்கு எதையாவது கொடுத்தால் அது யாருடைய கண்ணுக்கும் தெரியாது ஆனால் அல்லாஹ் அவர்கள் கேட்டதற்கு தெளிவாக பதில் கொடுப்பான்.
ஆனால் கூகுல் செர்ச் என்ஜினில் ஏதாவது ஒன்றை தேடும் போது தேடுபவரின் கண்ணுக்கும் அது தெரிகிறது அதே போல் அது தேடிக் கொடுப்பதும் கண்ணுக்குத் தெரிகிறது.அதனால் கூகுல் செர்ச் என்ஜினில் தேடுவதை யாரும் இணை வைத்தல் என்று சொல்ல முடியாது என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார் பி.ஜெ. சென்னையில் சிக்க வைத்த களியக்காவிலை ஒப்பந்தம். # வெளியில் பல இடங்களில் வலிமார்கள் என்று நம்பப்படுபவர்களிடம் கேட்டால் அல்லாஹ் எப்படி பிரித்தறிந்து உதவுவானோ அப்படி உதவுவார்கள் என பேசித்திரிந்த ஜமாலி சென்னை விவாதத்தில் நாம் அப்படி சொல்ல வில்லை அல்லாஹ்வின் இடத்தில் அவர்களை வைக்கவில்லை என வாதிட்டார்.
ஆனால் களியக்காவிலையில் நடந்த விவாதத்திற்கு போட்ட ஒப்பந்தத்திலோ ஒரே நேரத்தில் எத்தனை பேர் எத்தனை மொழிகளில் கேட்டாலும் எங்கிருந்து அழைத்தாலும் அதனை பிரித்தறிந்து அவற்றுக்கு பதில் கொடுக்கும் ஆற்றல் வலிமார்கள் என நம்பப் படுபவர்களுக்கு இருப்பதாக ஒப்பந்தம் போட்டு அதில் அப்துல்லாஹ் ஜமாலி இது தனது தரப்பு நிலைப்பாடு என கொட்டை எழுத்தில் கையெழுத்தும் போட்டுள்ளார்.
ஆனால் இந்த விவாதத்திலோ தான் அப்படி எங்கும் கூறவில்லை என வாதிட பி.ஜெ அவர்களோ களியக்காவிலை விவாத ஒப்பந்தத்தை எடுத்துக் காட்டியதும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி ஒரே நேரத்தில் எத்தனை பேர் எந்த மொழியில் கேட்டாலும் அவற்றை பிரித்தறிந்து பதில் கொடுக்கும் அதிகாரம் வலிமார்களுக்கு இருப்பதாக தான் கூறுவதாக சொல்ல ஆரம்பித்தார்.
பி.ஜே அவர்களோ அப்படியானால் விவாதத்தின் ஆரம்பத்திலிருந்து இதுவரை சொல்லிக் கொண்டிருந்தது உங்கள் நிலைப்பாடா அல்லது களியக்காவிலையில் சொன்னது உங்கள் நிலைப்பாடா? முதலில் தெளிவான ஒரு நிலைப்பாட்டிட்கு வாருங்கள்.என அழகாக ஜமாலிக்கு உபதேசம் செய்தார் பி.ஜெ
உளரி மாட்டிக் கொண்ட அபூ தலாயில்.(?)
தனது கருத்துக்கு குர்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் ஒரு ஆதாரத்தைக் கூட காட்ட முடியாத இவருக்கு அவருடைய சீடர்கள் வைத்திருக்கும் பெயர் அபூ தலாயிலாம்(ஆதாரத்தின் தந்தை).(சிரிப்பு தாங்க முடியவில்லை)
ஆதாரங்களை அவா்களாக உருவாக்குவதால் இப்படி அழைக்கிறார்களோ தெரியவில்லை.
உண்மையில் இவா்ஆதாரத்தின் தந்தை அல்ல வழிகேட்டின் தந்தை என்பதை சென்னையில் நடந்த இரண்டு விவாதங்களும் அழகாக தெளிவு படுத்திவிட்டது.
இடத்திற்கு ஏற்றது போல் உளரிக் கொண்டு திரிந்த ஜமாலி தான் வலிமார்களை அல்லாஹ்வின் இடத்தில் வைக்கிறேன் வைக்கவில்லை என மாறி மாறி பேசிக் கொண்டிருந்தார் அப்போது நீங்கள் வலிமார்கள் என்று உங்களால் நம்பப்படுபவர்களை அல்லாஹ்வின் இடத்தில் தான் வைக்கிறீர்கள் என்பதற்கு ஆதாரமாக அவர் பேசிய ஒரு வீடியோவின் க்லிப்பிங்கை பி.ஜெ போட்டுக் காட்டினார்.
அந்த க்லிப்பிங்கில் அவ்லியாக்களின் கை அல்லாஹ்வின் கை அவ்லியாக்களின் பார்வை அல்லாஹ்வின் பார்வை அவ்லியாக்களின் கேள்வி அல்லாஹ்வின் கேள்வி என ஜமாலி அவ்லியாக்களை அல்லாஹ்வின் இடத்திற்கு உயர்த்தி பேசும் வீடியோ பதிவாகியிருந்தது.
அதனை பி.ஜெ போட்டுக் காட்டியவுடன் அந்த க்லிப்பிங்கிற்கு பதில் சொல்ல முடியாமல் பந்தியில் குந்திய மந்தியைப் போல் முழித்துக் கொண்டிருந்தார் ஜமாலி பாவம்…….
அடுத்ததாக……
ஒரு கையால் முஸாபஹா செய்தல்,
பெண்கள் ஜும்மாவிற்கு பள்ளிக்கு வருதல்,
அல்லாஹ்வின் திருப்பெயரால் என்று எழுதுவது,
காபிர்களுக்கும் ஸலாம் சொல்வது ,
தற்கொலை செய்து கொண்டவர்களை காபிர்கள் என்று சொல்வது போன்றவைகள் எல்லாம் தவ்ஹீத் ஜமாத்தினரால் மார்க்கத்தில் புதிதாக நுழைவிக்கப்பட்ட பித்அத்துகள்.இவைகள் அணைத்திற்கும் தவ்ஹீத் ஜமாத் சார்பாக பி.ஜெ பதில் தரவேண்டும் என்று ஜமாலி குற்றச் சாட்டை வைத்தார்.
ஆரம்பித்தார் பி.ஜெ அமைதியாகியது அரங்கம்.
ஒவ்வொரு குற்றச் சாட்டுக்கும் பதில் சொல்ல ஆரம்பித்தார் சகோதரர் பி.ஜெ
1.முஸாபஹா விஷயம் :
ஒரு கையால் முஸாபஹா செய்வது பித் அத் கிருத்தவர்களின் செயல் என்றால் முதலில் உங்கள் கருத்தை தெரிவித்து எந்த அடிப்படையில் அதனை பித்அத் என்று கூறுகிறீர்கள் என விளங்கப் படுத்துங்கள் அதன் பின் நாம் அதற்கு பதில் கொடுப்போம் என்றார் பி.ஜெ
அதற்கு பதில் சொன்ன ஜமாலி அவர்கள் முஸாபஹா விஷயத்தில் எங்கள் கருத்து ஒரு கையாலும் முஸாபஹா செய்யலாம் இரண்டு கைகளாலும் செய்யலாம் என்பதாகும்.என்றார்
பி.ஜெ அவர்கள் பதில் சொல்லும் போது அப்படியானால் உங்களுக்குள்ள பிரச்சினை மட்டும் என்ற வார்த்தை தானா? இரண்டு கையால் முடியும் ஒரு கையாலும் முடியும் தவ்ஹீத் ஜமாத் ஒரு கையால் மாத்திரம் தான் முஸாபஹா என்று சொல்கிறது.அதனால் அது பித்அத் கிருத்தவர்களின் செயல்பாடு இதுதான் உங்கள் நிலை என்றால் ஒரு கையாலும் முஸாபஹா செய்யலாம் என்ற உங்கள் கருத்தை ஏற்றுக் கொண்டு யாராவது அதனை நடை முறைப்படுத்தினால் உங்கள் கருத்துப் படி அவரும் கிருத்தவ கலாசாரத்தை பின்பற்றியவராக ஆவாரே இதற்கு உங்கள் பதில் என்ன? என்று கேட்டதுடன் முதலில் ஏதாவது ஒரு நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை மீண்டும் தெளிவு படுத்தினார்.
ஆனால் இந்தக் கேள்விக்கும் கடைசி வரை கோமாலி ஸாஹிப் அவர்கள் பதில் தரவே இல்லை.
2.பெண்கள் ஜும்மாவிற்கு வருவது பெண்களை காட்சிப் பொருளாக்குவதாகும் என்ற ஜமாலியின் குற்றச்சாட்டிற்கு பதில் சொன்ன பி.ஜெ நபியவர்களின் காலத்தில் ஜும்மாத் தொழுகைக்கு பெண்கள் வந்துள்ளார்கள் அதுபோல் யுத்தக் கலத்துக்கே பெண்கள் வந்துள்ளார்கள் அப்படியிருக்க நபியின் வழிமுறையை கையால்வது எப்படி பெண்களை காட்சிப் பொருளாக்குவதாக மாறும் என கேள்வியெழுப்பியதுடன் அப்படியானால் உங்கள் பெண்கள் ஏ.சி போட்ட கடையில் ஒரு ஆண் மாத்திரம் இருக்கும் நேரத்தில் பொருட்கள் வாங்கவே செல்கிறார்களே இதற்கு உங்கள் பதில் என்ன?
உங்கள் வீட்டுப் பெண்களை கடைக்கு பொருள் வாங்கக் கூட செல்ல வேண்டாம் என்று சொல்லுங்கள்.
வெளியிலேயே வர விடாமல் வீட்டிட்குள்ளேயே பூட்டி வையுங்கள் என சொன்னார்.
தர்காக்களில் நடை பெரும் விழாக்களுக்கு ஆண்களும் பெண்களும் சென்று கூட்டமாக வெட்க உணர்வே இல்லாமல் கலந்து கொள்கிறார்கள்.
சில தர்காக்களில் பெண்களின் மறைக்கப் பட வேண்டிய பகுதிகளுக்கு அங்குள்ள ஆலிம்கள் குழந்தைப் கிடைப்பதற்கு என்று n;சால்லி எண்ணைகளைப் பூசி விடுகிறார்கள்.
இதுவெல்லாம் பெண்களை காட்சிப் பொருளாக்குவதில்லையாம் நபிவழியைப் பின்பற்றி பெண்கள் பள்ளிக்கு வருவதுதான் பெண்களை காற்சிப் பொருளாக்குவதாம்;.
என்னே தத்துவம் ?
3.தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் விளம்பரங்களிலும் நோட்டீஸ்களிலும் போஸ்டர்களிலும் அல்லாஹ்வின் திருப்பெயரால் என்று போடுகிறார்கள் இது பித்அத்தான வழி முறை என்று ஜமாலி அவர்கள் வாதத்தை முன்வைத்தார்.
அதற்கு பதிலளித்த பி.ஜெ அவர்கள் நபியவர்கள் தனது வாழ்நாளில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்(அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப் பெயரால்) என்றும் பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் திருப்பெயரால்) என்றும் இரண்டு விதங்களிலும் பயண்படுத்தியுள்ளதால் நாமும் இரண்டு விதங்களிலும் பயண்படுத்திக் கொள்ளலாம்.
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்(அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப் பெயரால்) என்றோ பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் திருப்பெயரால்) என்றோ குறிப்பிடுவதில் பிரச்சினை இல்லை என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தார்.
4.காபிர்களுக்கும் ஸலாம் சொல்வது தற்கொலை செய்து கொண்டவனுக்கு தொழுகை இல்லை போன்ற தவ்ஹீத் ஜமாத்தின் நிலைப்பாடு பித் அத் என்று சொன்ன ஜமாலி அவர்கள் அந்த விஷயங்களுக்கும் தன் தரப்பால் எந்த விதமான ஆதாரத்தையும் காட்ட வில்லை.
இருந்தாலும் பி.ஜெ அவர்களோ நாங்கள் செய்வது பித் அத் என்றால் அவற்றை ஆதாரங்களுடன் எடுத்து வையுங்கள் அப்படி நீங்கள் ஆதாரங்களுடன் எடுத்து வைத்தால் நாம் அதற்கு பதில் தரக் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றார் ஆனால் வழமை போல் ஜமாலி அவர்கள் அதற்கும் பதில் ஏதும் சொல்லவில்லை என்பதே நடந்த உண்மை.
ஸஹாபாக்களை பி.ஜெ சுயமாக விமர்சித்தாரா?
நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற பி.ஜெ அவர்களின் புத்தகத்தில் மறுமையில் சில ஸஹாபாக்களின் நிலை எப்படி இருக்கும் என்பது பற்றி பி.ஜெ அவர்கள் புகாரியில் இடம் பெற்ற ஹதீஸை ஆதாரம் காட்டி எழுதியிருந்தார்.
புத்தகத்தின் அந்தப் பகுதியை விமர்சித்த ஜமாலி பி.ஜெ நபித்தோழர்கள் மீது அபாண்டமாக பழி போடுகிறார் என்றார்.
அதற்கு பதில் சொன்ன பி.ஜெ பல தடவைகள் அந்தப் புத்தகத்தில் நான் மேற்கோள் காட்டியிருக்கும் ஹதீஸை மக்களுக்கு வாசித்துக் காட்டி நான் எப்படி தவறு செய்துள்ளேன் என்பதை நிரூபிக்க முடியுமா? என்று பல முறை கேட்டும் ஜமாலி வாசிக்க மறுத்து விட்டார்.
ஆனால் ஹதீஸை வாசித்துக் காட்டினால் தான் சொன்னது பொய்யென்று மக்களுக்கு புரிந்து விடும் என்பதால் அந்த ஹதீஸின் இலக்கத்தை மாத்திரம் மக்கள் மத்தியில் சொன்னார்.
புகாரியில் 3349.3447 இலக்கங்களிலும் பி.ஜெ அவர்களின் நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற புத்தகத்தில் நபியவர்களின் முன்னறிவிப்பு என்ற தலைப்பில் 46ம் பக்கத்திலும் அந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த இலக்க ஹதீஸைப் படிப்பவர்கள் பி.ஜெ தனது சுய விருப்பப்படி ஸஹாபாக்களை விமர்சித்தாரா அல்லது நபியவர்களே அப்படித்தான் கூறியுள்ளார்களா என்பதை தெளிவாக புரிய முடியும்.
பி.ஜெயின் கேள்வியும் பதிலின்றி தினறிய ஜமாலியும்.
விவாதத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை சகோதரர் பி.ஜெ அவர்கள் ஜமாலியிடம் திரும்பத்திரும்ப ஒரு கேள்வியை முன் வைத்தார் அந்தக் கேள்விக்கு ஜமாலி அவர்கள் கடைசி வரை பதிலே சொல்லவில்லை.
அதாவது உலகில் உள்ள அத்தனை கோடி பேரும் ஒரே நேரத்தில் பல மொழிகளில் கேட்டாலும் அல்லாஹ் அதனை பிரித்தறிந்து அதற்கு பதில் சொல்வான் என்பது இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை அப்படியிருக்க அவ்லியாக்களுக்கும் அந்தத் தன்மை இருக்கிறது என்று வாதிடுவது முஷ்ரிக்கின் பண்பு என்பதை பி.ஜெ அவர்கள் எடுத்த சொன்னவுடன் அதற்கு பதில் சொன்ன ஜமாலி அவர்களோ அல்லாஹ்வின் பார்வை கேள்வி ஆகியவற்றுக்கு எல்லை இல்லை ஆனால் அவ்லியாக்களின் பார்வை மற்றும் கேள்விக்கு எல்லை உண்டு என வாதிட்டார்.
அல்லாஹ்வின் கேள்வி மற்றும் பார்வைக்கு எல்லை இல்லை அவ்லியாக்கலுக்க எல்லை உண்டு என்பது உங்கள் வாதம் அப்படியானால் அந்த எல்லை எது?
அப்படி எல்லை பிரிப்பதற்கு உங்களுக்கு அதிகாரம் தந்தது யார்?
அந்த எல்லைகளுக்குறிய குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் என்ன?
அவ்லியாக்களின் கேள்விக்கு எல்லை உண்டு என்றால் ஒரே நேரத்தில் எத்தனை பேர்களின் கோரிக்கைக்கு பதில் தருவார்?
போன்ற கேள்விகளை பி.ஜெ அவர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார் ஆனால் பாவம் இருதிவரை ஜமாலி இந்தக் கேள்விக்கோ வேறு எந்தக் கேள்விக்குமோ பதில் தரவே இல்லை.
சவால் விட்ட பி.ஜெயும் சறுக்கி விழுந்த ஜமாலியும்.
கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது தம்மிடம் தமிழகத்தில் 45 சதவீதம் பள்ளிகள் இருப்பதாக ஜமாலி தரப்பினர் கூறினர்.
அதற்கு பதில் கொடுத்த பி.ஜெ அவர்கள் இந்த விவாதக் கலத்தில் அதிகப் படியாக பில்டப் செய்து சொல்வதற்க்காகத்தான் இப்படி சொல்கிறீர்களே தவிர உண்மையில் உங்கள் கைவசம் தமிழகத்தில் வெரும் இரண்டு சதவீதத்தினர் மாத்திரமே உள்ளனர் என்பதை ஆதாரத்துடன் பி.ஜெ எடுத்து வைத்தார்.
பி.ஜெயின் கருத்துக்கு பதில் சொல்ல தைரியம் இல்லாத ஜமாலியோ உடனே ஜுலை மாநாட்டிற்கு தாவினார்.
மாநாட்டிற்கு கூட்டத்தை வர விடாமல் இருப்பதற்கு நீங்கள் எடுத்த முயற்சிகள் எல்லாம் தவிடு பொடியாகிவிட்டது.அல்ஹம்துலில்லாஹ் நாங்கள் மாநாட்டை சிறப்பாக நடத்திக் காட்டினோம்.என்று பி.ஜெ சொல்ல இல்லை உங்கள் மாநாடு தோழ்வியில் முடிந்து விட்டது எந்தப் பயணும் ஏற்படவில்லை.என்று சிறுபிள்ளைத் தனமாக உளரினார்.
அதே போல் எங்கள் ஜமாத்தின் வீரியம் நாங்கள் சவால் விட்டு ஒரு எஸ்.எம்.எஸ்ஸில் பத்தாயிரம் பேரை உடனே கூட்டிக் காட்டுவோம் உங்களால் முடியுமா? என்றார்.
மக்கள் கூட்டத்தை கூட்டிக்காட்ட திராணியற்ற ஜமாலியோ வாய் மூடி மௌனித்துப் போனார் பாவம்.
அது போல் நீங்கள் ஒரு மாநாடு நடத்தி உங்கள் கூட்டத்தை கூட்டிக் காட்டுங்கள் அதே போல் ஒரு மாநாடு நடத்தி நீங்கள் கூட்டிய கூட்டத்தைப் போல் 100 மடங்க கூட்டத்தை நாங்கள் கூட்டிக் காட்டுவோம் சவாலை ஏற்றுக் கொள்கிறீர்களா? என பகிரங்கமாக அறிவித்தார் பி.ஜெ
இந்த சவாலை நீங்கள் ஏற்றுக் கொண்டால் இந்த விவாதக் கலத்திலேயே நாம் ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம் என்றார் பி.ஜெ ஆனால் கடைசி வரை சவாலையும் ஜமாலி ஏற்றுக் கொள்ளவில்லை.
எங்கள் ஜமாத் காலத்திற்கு காலம் ஒரு மாநாட்டை நடத்திக் கொண்டு தான் இருக்கிறோம் எல்லாப் புகழும் இறைவனுக்கே! ஒவ்வொரு மாநாட்டிலும் ஆட்சியாளர்களையே அதிர வைக்கும் அளவுக்கு எங்கள் வீரியம் அதிகரிக்கிறதே தவர குறையவில்லை.என்று கூறி முடித்தார் சகோதரர் பி.ஜெ
பதிலின்றி வாயடைத்துப் போய் அமைதிகாத்தார் அப்துல்லாஹ் ஜமாலி.
என்றும் வெற்றி ஏகத்துவத்திற்கே என்பது சென்னை விவாதத்தின் மூலம் மீண்டும் உருதியாகியது. அல்ஹம்து லில்லாஹ்.
தொகுப்பு : RASMIN M.I.Sc (India )
Posted by
Unknown
Labels:
TNTJ
தர்ஹாக்கள் கட்டலாம் என்றும், தர்ஹாக்களில் அடங்கி இருப்போர்களை வணங்கலாம் என்றும், மத்ஹப், மவ்லூத்கள் ஹலாலானவை என்றும் கூறும் சுன்னத் ஜமாஅத் !!
குர்ஆன் , ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்று சொல்லும் தவ்ஹீத் ஜமாஅத் !!
இவர்களில், அல்லாஹ்வுக்கு இணைவைப்போர், பித்அத்தான செயல்களில் ஊறி இருப்பவர்கள் யார்??
24 , 25 தேதிகளில் சென்னையில் மாபெரும் விவாதம் நடைபெறுகிறது.
தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வாதிப்பவர் : சகோ. பி.ஜைனுல் ஆபிதீன் சுன்னத் ஜமாஅத் சார்பில் வாதிப்பவர் : சகோ. ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி காலை 10 மணி முதல், onlinepj.com & tntj.net இணையத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு
Posted by
Unknown
Labels:
TNTJ
இந்தியாவில், வங்கிக் கணக்கைத் துவக்குவதிலும், வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதிலும் முஸ்லிம்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக, தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு வரும் புகார்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதாக ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
கடந்த 2007-2008 ஆம் ஆண்டில், இது தொடர்பான புகார்களின் எண்ணிக்கை சுமார் 1500 ஆக இருந்தது. ஆனால், 2009-2010 ஆம் ஆண்டில், ஒன்பது மாதங்களில் மட்டும் இந்த எண்ணி்க்கை 2200 ஐக் கடந்துவிட்டதாக சிறுபான்மையினர் ஆணையம் கூறுகிறது.
குறிப்பாக, தென்னிந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆண்டில் மாத்திரம் முஸ்லிம் மாணவர்கள் 90,000 பேர், தங்களது கல்வி உதவித் தொகைகளை வங்கியில் டெபாசிட் செய்வதற்காக, எந்த ஒரு வங்கியும் அவர்களுக்கு வங்கிக் கணக்கைத் துவக்க மறுத்துவிட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
வங்கிகளில் முஸ்லிம்கள் வைத்திருந்த கணக்குகளும் கணிசமாகக் குறைந்துவிட்டதாக சிறுபான்மையினர் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதி நிலவரப்படி, முஸ்லிம்கள் வைத்திருந்த வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை, அஸ்ஸாம் மாநிலத்தில் 47 சதம் குறைந்திருக்கிறது. அந்த மாநில மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மட்டும் 32 சதம் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலத்தில் 46 சதமும், கேரளத்தில் சுமார் 7 சதமும், மேற்கு வங்கத்தில் 17 சதமும் குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சில பகுதிகளை, சிவப்பு மண்டலங்கள் அல்லது வங்கிக்கணக்குத் துவக்குவது அல்லது கடன் வழங்குவதில் மிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய பகுதிகளாக வங்கிகள் தரம்பிரித்திருப்பதாக ஆணையம் கூறுகிறது.
குற்றங்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகள், சமூக விரோதிகள் அதிகமாக நடமாடுவதால், கடன்களை வசூலிப்பதில் ஏற்படும் சவால்கள், வாடிக்கையாளர்களைக் கண்டுபிடிப்பதில் ஏற்படும் சிக்கல்கள் ஆகிய காரணங்களுக்காக வங்கிகள் அத்தகைய சிவப்பு மண்டலங்களை உருவாக்கியிருப்பதாக, வங்கிகளின் ஆவணங்களை ஆய்வு செய்தபோது தெரியவந்திருப்பதாக சிறுபான்மையினர் ஆணையம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம், பிகார், ஆந்திரம், கர்நாடகம், டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிர மாநில சிறுபான்மையினர் ஆணையங்களுக்கு மட்டும் முஸ்லிம் மக்களிடமிருந்து வரும் புகார்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்திருப்பதாக தேசிய சிறுபான்மையினர் ஆணையம் தெரிவித்துள்ளது.
Posted by
Unknown
Labels:
போராட்டம்
இஸ்தான்புல்:துருக்கி நாட்டில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணையதளங்கள் தடை செய்யப்பட்டு உள்ளன.துருக்கி நாட்டின் மொத்த மக்கள் தொகை 7 கோடி ஆகும். அவர்களில் 3 கோடிப் பேர் இணையதளங்களை பயன்படுத்துகிறார்கள்.ஆபாச இணையதளங்கள் அதிகமாக இருப்பதால்,அப்படிப்பட்ட இணையதளங்களுக்கு துருக்கி தடை விதித்து உள்ளது. இது தவிர இணையதள தணிக்கை முறையையும் அது கடைப்பிடித்து வருகிறது.இணையதள தணிக்கை முறைக்கு இணையதளங்களை பயன்படுத்துபவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கிட்டத்தட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் தணிக்கை முறையை எதிர்த்து இஸ்தான்புல் நகரில் பேரணி நடத்தினார்கள்.அவர்கள் இணையதளப்பக்கங்கள் மீது விதிக்கப்பட்ட தடைகளையும் அகற்ற வேண்டும் என்று கோரினார்கள்.இணையதள தடைக்குக் காரணமான போக்குவரத்து அமைச்சருக்கு எதிராக பேரணியில் குரல் எழுப்பப்பட்டது.கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட அமைப்புகள் சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.இந்த போராட்டத்தில் பிலிகி பல்கலைக்கழகமும் கலந்து கொண்டது.
Posted by
Unknown
Labels:
துருக்கி
டெல்லி:முஸ்லிம்களை கவுரவப்படுத்தும் வகையில் சிறப்பாக அவர்களுக்கு எதுவும் செய்துவிடவில்லை மாறாக சச்சார் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துவதும், முஸ்லிம்களின் இடஒதுக்கீடும் அவர்களின் ஜனநாயக உரிமை' என்பதாக மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராஷ்ட்ரிய முக்தி மோர்ச்சா தொடர்ந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது.மத்திய அரசு அளித்த அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;'முஸ்லிம் சமுதாயம் ஒரு மோசமான இருலுலகில் வாழ்வதை சச்சார் கமிட்டி தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. இடஒதுக்கீடு போன்ற நடைவடிக்கைகளின் மூலம்தான் முஸ்லிம் சமுதாயம் முன்னேற்றம் அடையும்.இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிடில்,அச்சமுதாயம் மீண்டும் பின்னுக்குத் தள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.இந்தியாவின் ஒட்டு மொத்த முன்னேற்றத்திற்கு முஸ்லிம்களின் முன்னேற்றம் அவசியம் என்று கூறியுள்ள மத்திய அரசு,இதன்படி இடஒதுக்கீடு மத்தியில் ஆளும் அரசின் கடமை என்பதாக குறிப்பிட்டுள்ளது.முஸ்லிம் சமுதாயம் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், இது முஸ்லிம்களின் உரிமையே தவிர அவர்களை அரசு கவுரவிக்கவில்லை என்பததாகவும் கூறியுள்ளது.இடஒதுக்கீடு தற்போது நிலவும் சூழலில் நிறைவேற்றப்படவில்லை என்றால், இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் முஸ்லிம்களின் நிலைமைகளுக்கும் இன்று நிலவும் இடைவெளியை என்றைக்கும் பூர்த்தி செய்ய இயலாது என்றும் கூறியுள்ளது.இடஒதுக்கீடு அல்லாமல் முஸ்லிம்கள் அதிகம் வாழும் சுமார் 90 நகரங்களில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன்படி, முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அடிப்படை வசதிக்கூட இல்லாத நகரங்களில் Multi-Sectoral development Program என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் 14 பக்கங்களைக் கொண்ட அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.ராஷ்ட்ரிய முக்தி மோர்ச்சா, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு புறம்பானது என்றும் முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டும் இச்சிறப்பு அளிக்கப்படுவது அரசியல் சட்டங்களுக்கு எதிரானது என்று கூறி மனு ஒன்றை தாக்கல் செய்தது.இதனைத் தொடர்ந்துதான் மத்திய அரசு இப்பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.
Posted by
Unknown
Labels:
இடஒதுக்கீடு
ஈரான் நாட்டை சேர்ந்த அணுசக்தி விஞ்ஞானி ஷாரம் அமிரி (32). கடந்த ஆண்டு மே மாதம் இவர் சவுதி அரேபியாவில் உள்ள மதீனாவுக்கு புனித யாத்திரை சென்று இருந்தார். அதன் பின்னர் அவர் நாடு திரும்பவில்லை.
இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருப்பதாக தகவல் தெரிவித்தார். அப்போது மதீனாவில் இருந்து தன்னை அமெரிக்காவின் "சி.ஐ.ஏ." உளவாளிகளும், சவுதி அரேபியாவின் உளவுத்துறை ஏஜெண்டுகளும் கடத்தி சென்றதாக புகார் தெரிவித்தார்.
இதற்கிடையே ஈரான் அரசின் முயற்சியின் பேரில் அவர் நேற்று தெக்ரான் திரும்பினார். இமாம் கோமெனி விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை குடும்பத்தினரும், உறவினர்களும் கண்ணீருடன் வரவேற்றனர்.
முன்னதாக அவர் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
"என்னை கடத்தி சென்ற அமெரிக்க உளவாளிகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் என்னை துன்புறுத்தினர். ஈரானின் அணுசக்தி ரகசியங்களை வெளியிடும்படி வலியுறுத்தினார்கள். ஆனால் நான் எனது தாய் நாட்டு பற்றின் காரணமாக அவற்றை வெளியிட மறுத்து விட்டேன்.
அணுசக்தி ரகசியங்களை பெற எனக்கு ரூ.25 கோடி வரை லஞ்சம் தர முன்வந்தனர். மேலும், அமெரிக்காவிலேயே தங்கி பணிபுரிந்தால் ரூ.250 கோடி தருவதாக ஆசைவார்த்தை கூறி பேரம் பேசினர். அதற்கும் நான் பணியவில்லை" என்று தெரிவித்து உள்ளார்.
Posted by
Unknown
Labels:
ஈரான்
டெக்ரான், ஜூலை.15-
ஈரான் நாட்டின் அணு விஞ்ஞானி ஷாரம் அமிரி. கடந்த ஆண்டு இவர் ஹஜ் புனித யாத்திரைக்கு சென்று இருந்தார். பின்னர் அவர் திரும்பவில்லை. எங்கு இருக்கிறார் என தெரியாத நிலை இருந்தது.
இந்த நிலையில் இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள பாகிஸ் தான் தூதரகத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. மதீனா வில் இருந்த தன்னை அமெ ரிக்க உளவாளிகள் கடத்தி சென்றதாக இவர் தெரி வித்துள்ளார். ஆனால் அமெரிக்கா இதை மறுத்துள்ளது.
Posted by
Unknown
Labels:
ஈரான்
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இந்த ஆண்டும் 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மருத்துவம், பொறியியல், தொழில் படிப்புகளிலும் வேலைவாய்ப்பிலும் தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த 69 சதவீதம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், அருந்ததியினர், இஸ்லாமியர் என சதவீத வாரியாக பிரித்து தரப்படுகிறது.
இந்நிலையில், தொழில் கல்வியில் குறிப்பாக மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு தரக்கூடாது என்று உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த மூத்த வக்கீல் கே.எம்.விஜயன், உச்ச நீதிமன்றத்தில் கடந்த 1994ல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த 16 ஆண்டுகளாக தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உச்ச நீதிமன்றம் ஒரு இடைக்கால தீர்ப்பை வழங்கும். இடைக்கால உத்தரவில், சம்பந்தப்பட்ட ஆண்டில் மாநில அரசு அமல்படுத்தி வரும் இட ஒதுக்கீட்டை தொடரலாம் என்று கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஸ்வதந்தர்குமார் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு அரசியலமைப்பு சட்ட வழக்காக விசாரிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 50 சதவீதத்துக்கும் மேல் பின்தங்கிய மக்கள் உள்ளனரா என்பதற்கான ஆவணங்களையும், ஆதாரங்களையும் தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திடம் தமிழக அரசு கொடு¢க்க வேண்டும்.
அரசு தாக்கல் செய்யும் ஆவணங்களின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் ஆய்வு செய்து, எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
தவிர்க்க முடியாத சூழ்நிலையில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம் என்று மண்டல் கமிஷன் வழக்கில் விலக்கு அளிக்கப்பட்டதை, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளலாம்.
அதன் அடிப்படையில் அரசு உரிய முடிவுகளை எடுக்கலாம். அதுவரை, தற்போது தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் இருக்க வேண்டும். இந்த உத்தரவோடு இந்த வழக்கு பைசல் செய்யப்படுகிறது.
தினகரன்-14-7-2010
Posted by
Unknown
Labels:
இடஒதுக்கீடு
அல்லாஹ்வின் மகத்தான அற்புதம் ஒன்று ஜூலை நான்கு அன்று நிகழ்திருக்கிறது என்று சொல்வது மிகையானதல்ல! மாநாட்டில் கலந்துக்கொண்ட லட்சோப லட்சம் மக்களும் இதை உணர்திருப்பார்கள். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு அற்புதத்தை நிகழ்த்திக் காட்டுவதை போல நாம் வாழும் இந்த சமுதாய மக்களுக்கு அல்லாஹ் காட்டித்தந்த ஒரு அற்புதம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!!
மாநாடு என்றால், அதில் நிகழ்த்தப்படும் உரைகளின் முக்கியத்துவம் கருதி மக்கள் குழுமுவார்கள், தலை சிறந்த பேச்சாளர்கள் பேசினால் அதை கேட்க மக்கள் அணி திரள்வார்கள், அறிவுக்கு தீனி போடும் வகையில் இம்மையிலும் மறுமையிலும் நன்மையை ஈட்டித்தரும் வகையில் மார்க்கம் சார்ந்த பயான்கள் இடம் பெற்றால் அதில் முஸ்லிம்கள் அணியணியாக குழுமுவது வழக்கமாக பார்க்கும் ஒன்று.
ஆனால், ஜூலை நான்கு, சென்னையை ஸ்தம்பிக்க வைத்த இந்த மாபெரும் மக்கள் வெள்ளம் குழுமியதன் நோக்கம் தான் என்ன? தஞ்சையில் இரண்டு வருடத்திற்கு முன்பு நடந்ததை போல் தவ்ஹீத் மாநாடு என்றா? பல மார்க்க பயான்கள் நிகழ்த்தப்படும் என்றா? குர்ஆன் வகுப்புக்கள் நிகழ்த்தப்படும் என்றா? இல்லை!!
எந்த தனிநபருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படாமல், எந்த மார்க்க சொர்ப்போழிவுகளும் இல்லாமல், இட ஓதிக்கீட்டுக்கான கோஷம் விளித்து பின் கலைந்து செல்ல வேண்டும என்ற ஒற்றை குறிக்கோளுடனே தவ்ஹீத் ஜமாஅத் மக்களை அழைத்தது..
தமிழகத்தின் பல பாகங்களிலிருந்தும் சாரை சாரையாக மக்கள் அணிதிரண்டதை பார்த்த போது எனது கண்கள் கலங்கின. தவ்ஹீத் ஜமாத்தின் மீது மக்கள் வைத்துள்ள அதீத நம்பிக்கையும் அன்பையும் தவிர வேறு எதையும் அங்கு என்னால் காண முடியவில்லை.
கர்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வந்தவர்கள், நடந்து செல்லவே சிரமப்படக்கூடிய வயதானோர் என்று அந்த திடலை நிரப்பியவர்களை பார்க்கும் போது, "தவ்ஹீத் ஜமாஅத் கூப்பிடுகிறதா?, நாங்கள் வருவோம்! எப்பாடு பட்டாவது வருவோம்!! , என்ற மனக்கண்ணோட்டம் தான் அவர்களிடம் வெளிப்பட்டது.
5 கிலோமீட்டராக முதலில் அறிவிக்கப்பட்ட பேரணி, பின்பு மக்களின் சிரமத்தை குறைப்பதற்காக ஒரூ கிலோமீட்டராக குறைக்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்திலிருந்து துவங்கிய பேரணி, தீவுத்திடலை சென்றடைவதுக்குள் காவல் துறையினரும் தவ்ஹீத் ஜமாஅத் பிரதிநிதிகளும் திக்கு முக்காடி போய் விட்டார்கள்.
கூட்டத்தினிடையே நுழைந்து கொண்டு மக்களை ஒழுங்குப்படுத்தும் வேலையை செய்துக்கொண்டிருந்தார் பிஜே! மிகப்பெரிய அறிஞர், தலைவர் என்ற பகட்டு சிறிதும் இல்லாமல், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் நிலையிலும் இத்தனை வெளிப்படையாக அவர் இயங்கிக்கொண்டிருப்பதை பார்க்கும் போது அவர் மீது நாம் கொண்ட அன்பும் மரியாதையும் இன்னும் அதிகமாகிறது.
பேரணி முடிவுற்றது தீவுதிடலின் வாயிலில். லட்சோப லட்சம் மக்களை எதிர்ப்பார்த்து ஏற்பாடு செய்யப்பட மாநாடு என்ற வகையில் ஜமாத்தார்கள், அவர்களது சக்திக்குட்பட்டு அனைத்து வசதிகளையும் மிகச்சிறப்பாக செய்து வைத்திருந்தார்கள். களைப்புற்று வருபவர்களுக்கு மோர்ப்பந்தல்கள், குடிநீர் பாக்கட்கள், மேடையை காண இயலாதவர்களுக்காக ஆங்காங்கே LED ஸ்க்ரீன்கள், உணவு ஸ்டால்கள், மருத்துவ முகாம்கள், அவசர ஆம்புலன்ஸ் வசதிகள், மொபையில் கழிப்பிடங்கள், தீவு திடலையும் கடந்து சென்னை அண்ணா சாலையில் நின்று கொண்டிருப்பவர்களுக்காக மைக் செட்கள், ராட்சச கேமராக்கள், மின்னொளிகள் (floodlights) என தீவுத்திடலில் அமைக்கப்பட்ட ஏற்பாடுகள் மலைக்க வைத்தன.
ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும் மூன்று மூன்று நிமிடங்கள் பேசிய பிறகு சிறப்புரையாக பிஜே ஒன்றரை மனி நேரம் பேசினார். அவ்வப்போது மழை தூறல் இருந்த போதிலும், அனைவரது துஆவின் காரணமாக பலத்த மழையை அல்லாஹ் அன்றிரவு இறக்கவில்லை.
இறுதியாக உரையாற்றிய ஹாரூன் MP அவர்கள், "லட்சோபலட்சம் மக்கள் குழுமிய இந்த மாநாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உங்கள் கோரிக்கையை நிச்சயம் பிரதமரிடமும் சோனியாவிடமும் எடுத்து சொல்வதாக வாக்களித்தார்.
மாநாட்டின் உரைகளுக்கு நடுவே, காணாமல் போனவர்களை பற்றிய அறிவிப்பு அதிகமாக இருந்தது, கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளத்தினால் ஏற்பட்ட ஒன்று என்பதை புரிய முடிந்தது.
குடும்பத்துடன் பயணப்பட்டது சிரமமாக எனக்கு தோன்றினாலும் , அங்கு நான் கண்ட காட்சிகளை பார்த்த பிறகு அவர்கள் பட்ட கஷ்டங்களுக்கு, எனது கஷ்டங்களெல்லாம் எதுவும் இல்லை என்றானது. குழந்தைகளை தூக்கி சுமந்து வந்த தாய்மார்கள், கட்டுக் கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி, பிள்ளைகளை தொலைத்து விட்டு தவித்துக்கொண்டிருந்தவர்கள், ஒரு சிறு வண்டியில், 30, 40 பேராக திக்கு முக்காடிய பயணங்கள், இயற்க்கை தேவைக்காக அவர்கள் அடைந்த சிரமங்கள் அனைத்துமே கண்களில் நீரை வர செய்பவை!
இட ஒதிக்கீட்டை குறித்து இத்தனை விழிப்புணர்வா? தமிழக மக்களிடையே ஏற்பட்ட இந்த புரட்சி, அதிசயிக்க வைக்கிறது! வேறு வேறு இயக்கங்கள் அழைத்த போது திரளாத இந்த மக்கள், தவ்ஹீத் ஜமாஅத் அழைத்தவுடன் திரண்டு வருகிறார்கள் என்றால், இதில் சிந்திக்க பல விஷயங்கள் உள்ளன!
தவ்ஹீத் ஜமாத்தின் கொள்கையில் கருத்து வேறுபாடு கொண்ட பலர் வந்தார்களே, இவர்கள் அனைவரும் பிற இயக்கங்கள் அழைத்தால் செல்லக்கூடியவர்களா? நிச்சயம் இல்லை! கொள்கையில் முரண்பாடு இருந்தாலும், இவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள், உள தூய்மையுடன் எதையும் போராடுவார்கள் என்று அனைத்து மக்கள் மனதிலும் ஆணித்தரமாக இடம் பிடித்திருக்கிறது தவ்ஹீத் ஜமாஅத்!
இந்த கோரிக்கைக்காக எந்த துரும்பையும் எடுத்துப்போடாத இன்ன பிற ஜமாத்தார்கள், தவ்ஹீத் ஜமாத்தின் இந்த மாநாட்டை விமர்சிக்க மட்டும் தயக்கம் காட்டவே இல்லை. வீடு வீடாக சென்று மக்களை மூளை சலவை செய்தது ஒரு கூட்டம் என்றால், இட ஒதிக்கீடு கேட்பதே ஹராம் என்று மற்றொரு பக்கம். இவர்கள் சுயநலனுக்காக தான் மாநாடு நடத்துகிறார்கள் என்ற விமர்சனம் ஒரு பக்கம் என்றால், பிற இயக்க தலைவர்களை அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு மற்றொரு பக்கம் என இந்த மாநாட்டின் வெற்றியை எப்பாடுபட்டாவது தடுக்க வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சி கொண்ட பெட்டையர்கள் எடுத்துக்கொண்ட முஸ்தீப்கள் அனைத்தையும் அல்லாஹ் தூள் தூளாக்கி விட்டான்.
வசை பாடி திரிந்த கூட்டம் வாய் மூடி மௌனிகளாக ஆகி விட்ட நிலையில் எடுத்துக்கொண்ட குறிக்கோளில் வீறு நடை போட்டு செல்கிறது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் !!!
மாநாடு நடைபெற்ற மறுநாளே, பிரதமரிடமிருந்து அழைப்பு வருகிறதென்றால், தவ்ஹீத் ஜமாத்தின் மக்கள் சக்தி, ஆட்சியாளர்களை எந்த அளவிற்கு அசைத்திருக்கிறது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
நாளைய நமது சந்ததிகள் தலை நிமிர்ந்து வாழ வழி ஏற்படுத்தி தந்த இந்த ஜமாத்திற்க்கும் அதன் நிர்வாகிகளுக்கும் நாம் நன்றி கடன்பட்டிருக்கிறோம். எடுத்துக்கொண்ட செயல்களில் இதே போல், அல்லது இதை விட சிறப்பாக நாம் செயலாற்றிடவும், ஏகத்துவம், நமது நாட்டில் தழைத்தோங்கவும், நமது அனைத்து உரிமைகளும் வென்றெடுக்கப்பட்டு நமது சமுதாயம் தலை நிமிரவும் நாம் இரு கரம் கூப்பி அந்த ஏகனிடம் பிரார்த்திப்போம். மத்தியில் விரைவில் இட ஒதிக்கீடு கிடைத்திடவும் நாம் அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம்.
அன்புடன், நாஷித் அஹமத்
Posted by
Unknown
Labels:
TNTJ
சென்னை:கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்ற ஒடுக்கப்பட்டோர் உரிமை மாநாடு கடந்த ஜூலை 4 அன்று நடைபெற்றது. இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் சென்னையில் அணிவகுத்தனர். இந்த மாநாட்டின் தனிச் சிறப்பை கல்கி வார இதழ் அழகாக வர்ணித்துள்ளது.
Posted by
Unknown
Labels:
TNTJ
முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீட்டை இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் வலியுறுத்தியதன் தொடர்ச்சியாக தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் இன்று 06-07-2010 பகல் 11.00 மணி முதல் 11.15 வரை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தினார்கள். பகல் 12.25 முதல் 12.35 வரை காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களையும் சந்தித்து இட ஒதுக்கீட்டை வலியுதித்தினார்கள். இது குறித்த முழு விபரம் வருமாறு: மாநாட்டுக்கு முதல் நாள் ஜூலை மூன்றாம் தேதியன்று பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவி திருமதி சோனியா காந்திக்கும் முஸ்லிம் சமுதாயத்தின் தனி இட ஒதுக்கீடு குறித்து வலியுறுத்துவதற்காக நேரம் ஒதுக்கித் தருமாறு கோரும் இரு கடிதங்கள் தயார் செய்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம். ஹாரூன் அவர்கள் மூலம் இருவருக்கும் சேர்ப்பிக்கச் செய்தோம். மாநாடு நடத்துவது மட்டும் போதாது. இட ஒதுக்கீடு தரும் இடத்தில் இருப்பவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? இட ஒதுக்கீடு தரும் எண்ணம் அவர்களுக்கு இருக்கிறதா? இலட்சக்கணக்கான மக்களின் உணர்வுப்பூர்வமான மாநாடு மற்றும் பேரணி குறித்த தகவல்கள் அவர்களைச் சென்றடைந்துள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக இந்தச் சந்திப்பை விரும்பினோம். பிரதமரும் சோனியா காந்தி அவர்களும் நேரம் ஒதுக்குவார்கள் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. அப்படியே நேரம் ஒதுக்கினாலும் இவ்வளவு சீக்கிரத்தில் நேரம் ஒதுக்குவார்கள் என்றும் நாம் எதிர்பார்க்கவில்லை. மாநாடு முடிந்த மறுநாளே ஆறாம் தேதி நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. தமிழக வரலாறு காணாத அளவுக்கு இலட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் உணர்ச்சிப் பிளம்பாகக் கலந்து கொண்ட தகவல் உளவுத்துறை மூலமும் மாநாட்டில் கலந்து கொண்ட சகோதரர் ஜெ. எம். ஹாருன் அவர்கள் மூலமும் பிரதமருக்கும் காங்கிரஸ் தலைவருக்கும் செய்திகள் சென்றடைந்ததே இந்தச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கக் காரணமாக இருந்தது. பிரதமரி சந்திப்பின் போது இதைக் கண்டு கொண்டோம். தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் சம்சுல்லுஹா, மேலாண்மைக் குழு உறுப்பினர் பி. ஜைனுல் ஆபிதீன், பொதுச் செயலாளர் எம். அப்துல் ஹமீது, மாநில துணைத் தலைவர் கோவை ரஹ்மத்துல்லா ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம் ஹாரூன், தேசிய லீக் தலைவர் எம்.பஷீர் அஹமது ஆகியோர் காலை 7.00 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு குறித்த நேரத்தில் பிரதமரை சந்திக்கச் சென்றோம். வழக்கமான பாதுகாப்பு சோதனை முடிந்தபின் பிரதமர் அலுவலகம் அழைத்துச் செல்லப்பட்டோம். அனைவரிடமும் பிரதமர் கைகுலுக்கி வரவேற்றார். திருக்குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆங்கில மொழிபெயர்ப்பையும் பி. ஜே. வழங்கினார்கள். குர்ஆன் மொழிபெயர்ப்பைப் பிரித்துப் பார்த்து கண்களில் ஒற்றிக் கொண்ட பின் நன்றி நன்றி நன்றி எனக் கூறினார். இதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம். ஹாரூன் அவர்கள் பிரதமருக்கு சால்வை வழங்கினார்கள். தேசிய லீக் தலைவார் பஷீர் அஹமது அவர்கள் ஏல்க்காய் மாலை வழங்கினார்கள். இதன் பின்னர் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் லட்டர் பேடில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி எழுதப்பட்ட கோரிக்கை மனுவை வழங்கினோம். பிரதமருக்கு அருகில் பிரதமர் இருக்கை போல் ஒரு இருக்கையும் வலது இடது புறங்களிலும் எதிரிலும் சோபாக்கள் போடப்பட்டு இருந்தன. தனது அருகில் போடப்பட்ட இருக்கையில் பி. ஜே. அவர்களை பிரதமர் அமரச் செய்தார்கள். இந்த இருக்கையில் மத்திய கேபினட் அமைச்சர் தவிர யாரும் அமர வைக்கப்பட மாட்டார்கள். இந்தக் கண்ணியத்தை பிரதமர் தங்களுக்கு மட்டும் வழங்கினார் என்று பின்னர் ஹாரூன் அவர்கள் பீஜேயிடம் கூறினார்கள். ஆனால் இது பீஜேவுக்கு வழங்கப்பட்ட கண்ணியம் அல்ல. மாநாட்டுக்கு வந்த இதற்காக உழைத்த துஆ செய்த அனைவருக்குமான கண்ணியமே இது என்று பீஜே கூறினார். பதினைந்து நிமிட நேரம் முஸ்லிம்களின் அவல நிலையையும், காங்கிரசின் தேர்தல் வாக்குறுதியையும் பி. ஜே. தமிழில் கூற, ஹாரூன் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறினார்கள். மாநாட்டைப் பற்றியும், கட்டுக்கடங்காமல் திரண்ட கூட்டத்தைப் பற்றியும் பி. ஜே. தெரிவித்த போது தெரியும், ரிப்போர்ட் வந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்கள். ஷம்சுல்லுஹா, அப்துல் ஹமீது, ரஹ்மத்துல்லா ஆகியோரும், பஷீர் அஹமது, ஹரூன் பாய் ஆகியோரும் ஆங்கலத்தில் இட ஒதுக்கீடு குறித்து பல வகையிலும் தங்கள் கருத்தைப் பதிவு செய்தார்கள். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட பிரதமர் நீதிபதி மிஸ்ரா அவர்களின் அறிக்கை வந்தது முதல் அது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். இந்த சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு நிச்சயம் தருவோம் என்று நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசினார்கள். தவ்ஹீத் ஜமாஅத்துக்கு பிரதமர் தந்த மரியாதையும் முக்கியத்துவமும் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருந்தன. லட்சக்கணக்கான மக்கள் பட்ட கஷ்டமும் உழைப்பும் துஆக்களுமே இதற்குக் காரணம் என்பதில் சந்தேகம் இல்லை. நின்று கொண்டே மனுவை வாங்கிக் கொண்டு அனுப்பக் கூட நேரமில்லாத பிரதமர் நாங்களாக எழும் வரை கலகலப்பாகப் பேசிக்கொண்டே இருந்தார்கள். காரணம் தீவுத் திடலை நிறைத்த மக்கள் சக்தி தான் என்பதை நாங்கள் எங்களுக்குள் நினைவுபடுத்திக் கொண்டோம். அடுத்ததாக காங்கிரஸ் தலைமை அதிகார மையத்தின் நம்பர் ஒன் ஆகக் கருதப்படும் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களைச் சந்திக்கச் சென்றோம். ட்ராபிக்கில் மாட்டிக் கொண்டதால் குறித்த நேரத்தை விட ஐந்து நிமிடம் தாமதமாகி விட்டது. எத்தனையோ வேலைப் பளுவில் இருக்கும் பெரும் தலைவர்கள் மற்றவர்களுக்காகக் காத்திருக்க மாட்டார்கள். ஒரு விநாடி காலதாமதமானாலும் யாரையும் சந்திக்க மாட்டார்கள். இந்த அடிப்படையில் செக்யூட்டிகள் நமது சந்திப்பை கேன்சல் செய்து விட்டதாகக் கூறினார்கள். ஆனால் ஹாரூன் பாய் அவர்கள் தொடர்பு கொண்டு தாமதத்துக்கான காரணம் பற்றி தெரிவித்தவுடன் எங்கள் காலதாமதத்தைப் பொருட்படுத்தாமல் உடனே எங்களை வரச் சொன்னார்கள். சோனியா காந்தி அவர்களை அவர்களின் அலுவலகத்தில் சந்தித்தோம். அவருக்கும் குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் அந்த மாமனிதா ஆங்கில மொழிபெயர்ப்பும் கொடுத்தோம். கோரிக்கை மனுவையும் அளித்தோம். பிரதமரிடம் எடுத்துச் சொன்னது போல் முழுமையாக கோரிக்கைகளை அவர்களுக்கும் விளக்கினோம். அபுல்கலம் ஆஸாத் அறக்கட்டளை மூலம் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி உள்ளிட்ட திட்டங்களை எடுத்துக் கூறி முஸ்லிம்கள் மீது தமக்கு உள்ள அக்கரையை சோனியா விளக்கிக் கூறினார். இட ஒதுக்கீட்டைப் பொருத்தவரை எத்தனை சதவிகிதம் என்பதில் தான் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்கள். இருபெரும் தலைவர்களின் சந்திப்பும் இட ஒதுக்கீடு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே. சந்திப்பு இனிப்பாக இருந்தாலும், வாக்குறுதி நம்பும்படி இருந்தாலும் இட ஒதுக்கீடு தான் அடுத்த தேர்தலில் மையக் கருத்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இட ஒதுக்கீடு அளித்து சட்டம் இயற்றினால் அதன் பலனக் காங்கிரஸ் அறுவடை செய்யும். இட ஒதுக்கீடு அளிக்கத் தவறினால் இந்தச் சந்திப்பு எந்த வகையிலும் முஸ்லிம்களைத் திருப்திப் படுத்தாது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறோம். புது டில்லியில் இருந்து கோவை ரஹ்மதுல்லாஹ் குறிப்பு ஜேஎம் ஹாரூன் அவார்களுக்கும் நமக்கும் கொள்கையில் வேறுபாடு இருந்தாலும் இந்த மாபெரும் மக்கள் திரளை சமுதாய நன்மைக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதில் அவர் காட்டிய ஆர்வம் எங்கள் ஆர்வத்தை விட குறைந்ததாக இல்லை. மேலும் தேசிய லீக் தலைவர் பஷீர் அவர்கள் மாநாட்டூக் நீங்கள் அழைக்காவிட்டால் கூட நான் உரிமையுடன் வந்து கலந்து கொள்வேன் எனக் கூறி ஹாரூன் அவர்களுடன் சேர்ந்து இந்த சரித்திரம் காணாத மக்கள் சக்தியக் காட்டி மக்களூக்கு நம்மால் ஆன நன்மையைச் செய்ய வேண்டும் என்று முனைப்பு காட்டியது குறிப்பிடத் தக்கது. மேலதிக விபரம் விரைவில் இன்ஷா அல்லாஹ். TNTJ Download As PDF
Posted by
Unknown
Labels:
TNTJ
முஸ்லிம் சமுதாயத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி மத்திய அரசுக்கு சிபாரிசு செய்து இருக்கிறது.
இந்த நிலையில், இந்த சிபாரிசுப்படி முதல் முறையாக மேற்கு வங்காள அரசு, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடை அறிவித்து உள்ளது.
முஸ்லிம் மக்களில் சமூக, பொருளாதார மற்றும் கல்விரீதியில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று, மேற்கு வங்காள முதல்-மந்திரி பட்டாச்சார்யா அறிவித்தார்.
மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஏற்கனவே 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய 10 சதவீத ஒதுக்கீடு மூலம் இதர பிற்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீடு 17 சதவீதமாக அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
Posted by
Unknown
Labels:
இடஒதுக்கீடு
சென்னை : ""கல்வி,வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும்,'' என தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் அமைப்பின் நிறுவனர் ஜெய்னூல் ஆபிதீன் பேசினார்.தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் சார்பில், முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பேரணி மற்றும் மாநாடு சென்னை தீவுத்திடலில் நேற்று நடந்தது.மாநாட்டின் முதல்நிகழ்வாக, முஸ்லிம்கள் ஏராளமானோர் பங்கேற்ற பேரணி, சென்னை புதிய தலைமைச் செயலகம் அருகே துவங்கி, தீவுத்திடலில் முடிந்தது.தீவுத்திடலில் நடந்த மாநாட்டில் தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத்தின் நிறுவனர் ஜெய்னூல் ஆபிதீன் பேசியதாவது:
நாட்டு விடுதலைக்காக முஸ்லிம்கள் பாடுபட்டுள்ளதை குஷ்வந்த்சிங் போன்ற சிந்தனையாளர்கள் வெளி உலகிற்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்பதற்காக அதை முஸ்லிம் மதகுருமார்கள் புறக்கணித்தனர்.காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்திற்காக ஆங்கிலேயர் வழங்கிய வேலை வாய்ப்பையும் முஸ்லிம்கள் மறுத்தனர். தாங்கள் வகித்துவந்த உயர் பதவிகள் மற்றும் ஆங்கிலேயர் கொடுத்த சர்., ராவ்பகதூர் போன்ற பட்டங்களையும் புறக்கணித்தனர்.கடந்த 2004ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலின்போது, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என, காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்தது. கடந்த ஆண்டு, ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி, நாட்டில் உள்ள 13 சதவீத முஸ்லிம்களுக்கு, கல்வி,வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பரிந்துரைத்தது.இப்பரிந்துரையை உடனடியாக சட்டமாக்க வேண்டும். இதுதொடர்பாக, தமிழக முதல்வர் கருணாநிதி, தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு ஜெய்னூல் அபிதீன் பேசினார்.இம்மாநாட்டில், தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் மாநில தலைவர் பக்கீர் முகமது அல்சாதி, பொதுச் செயலர் அப்துல் அமீது, நிர்வாகிகள், ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
Posted by
Unknown
Labels:
இடஒதுக்கீடு
முஸ்லிம்களுக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் தீர்மானம்
சென்னை: நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி பரிந்துரைப்படி, மத்திய அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னையில் நடந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் தீர்மானம் நிடைவேற்றப்பட்டது.
தனி இட ஒதுக்கீடு
ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையின்படி, முஸ்லிம்களுக்கு 10 சதவீத தனி இட ஒதுக்கீடு சட்டமாக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சென்னை பல்லவன் இல்லம் அருகில் இருந்து தீவுத்திடலை நோக்கி பேரணி நடைப்பெற்றது.
இந்த பேரணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பக்கீர் முகமத் அல்தாஃபி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் எம்.அப்துல் ஹமீது முன்னிலை வகித்தார். பொருளாளர் முகமத்சாதிக் பேரணியை தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான அமைப்பின் தொண்டர்களும்,இஸ்லாமிய பெண்களும் குழந்தைகளும் கலநது கொண்டனர்.
மாநாடு
அதனை தொடர்ந்து, மாலை 5 மணிக்கு ’ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு என்ற தலைப்பில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநாடு தீவு திடலில் தொடங்கியது.
இரண்டு அமர்வுகளாக நடைபபெற்ற இந்த மாநாட்டிற்கு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் எம்.அப்துல் ஹமீது, மேலான்மை குழு தலைவர் எம்.ஷம்சுல்லுஹா ரஹ்மானி ஆகியோர் தலைமை தாங்கினார். தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் என்.பக்கீர் முகமது அல்தாஃபி முன்னிலை வகித்தார். மாநாட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி தவ்ஹீத் ஜமாஅத் நிறுவனர் பி.ஜைனுல் ஆபிதீன் சிற்ப்புரையாற்றினார்.
தவ்ஹீத் ஜமாஅத் செயலாளர் எம்.முகமது தவ்பீக்,துனை பொதுச்செயலாளர் எஸ்.கலீல் ரசூல், செயலாள்ர் கே.அப்துல் ஜப்பார் ஆகியோர் மாநாட்டு தீர்மானங்கள் வாசித்தனர். முன்னதாக, மாநாட்டு குழு தலைவர் சைபுல்லா ஹாஜா வரவேற்றார். இறுதியில் தவ்ஹீத் ஜமாஅத் துனைத்தலைவர் ஆர்.ரஹ்மத்துல்லா நன்றி கூறினார். இந்த மாநாட்டில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். பெண்களும் குழந்தைகளும் அதிகளவில் வந்திருந்தனர்.
மாநாட்டில் மொத்தம் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கிய தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
கடந்த 60ஆண்டு காலமாக கல்வியிலும்,வேலைவாய்ப்பிலும் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு மத்திய அரசு பணியில் 10 சதவீத தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
ஜ.ஜ.டி., ஜ.ஜ.எம்., ஜ.ஜ.எஸ்சி., உள்பட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீடு கிடைத்திடும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும்.
மத்திய அரசின் ராணுவம்,உளவு உள்பட பாதுகாப்புதுறைகளிலும் இதேபோல் மாநில அரசின் காவல் மற்றும் உளவுத்துறையிலும் முஸ்லிம்களுக்கு 20 சதவீத இடஒடுக்கீடு வழங்க வேண்டும்.
தனித்தொகுதி
தலித் மக்களுக்கு தனிதொகுதிகள் இருப்பதுபோல் உள்ளாட்சி, சட்டமன்றம், பாராளுமன்றம், மாநிலங்களவை, மேல்-சபை அனைத்திலும் 10 சதவீத தொகுதிகளை முஸ்லிம் தனித்தொகுதிகளாக அறிவிக்க வேண்டும்.
உத்தரப் பிரதேசத்தில் இருப்பதைப் போல அனைத்து மாநிலங்களிலும் முஸ்லிம் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும்.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஜூலை 4 மாநாடு புகைப்படங்கள் தொகுப்பு
இவர்களைப் பார்த்தால் ஒருநாள் நிகழ்ச்சி முடிந்தது என்று சோர்ந்து போகும் கூட்டமாக தெரியவில்லை. கொடுக்கவில்லை என்றால் எடுத்துக் கொள்வோம், என்ற உறுதி ஒவ்வொருடைய கண்களில் இருந்து தெரிகிறது.
Posted by
Unknown
Labels:
இடஒதுக்கீடு
|
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.
|