தர்ஹாக்கள் கட்டலாம் என்றும், தர்ஹாக்களில் அடங்கி இருப்போர்களை வணங்கலாம் என்றும், மத்ஹப், மவ்லூத்கள் ஹலாலானவை என்றும் கூறும் சுன்னத் ஜமாஅத் !!

குர்ஆன் , ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்று சொல்லும் தவ்ஹீத் ஜமாஅத் !!

இவர்களில், அல்லாஹ்வுக்கு இணைவைப்போர், பித்அத்தான செயல்களில் ஊறி இருப்பவர்கள் யார்??

24 , 25 தேதிகளில் சென்னையில் மாபெரும் விவாதம் நடைபெறுகிறது.

தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வாதிப்பவர் : சகோ. பி.ஜைனுல் ஆபிதீன்
சுன்னத் ஜமாஅத் சார்பில் வாதிப்பவர் : சகோ. ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி

காலை 10 மணி முதல், onlinepj.com & tntj.net இணையத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு
Posted by Unknown Labels:
Thursday, July 22 | 0 comments  


Posted by Unknown

இந்தியாவில், வங்கிக் கணக்கைத் துவக்குவதிலும், வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதிலும் முஸ்லிம்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக, தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு வரும் புகார்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதாக ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

கடந்த 2007-2008 ஆம் ஆண்டில், இது தொடர்பான புகார்களின் எண்ணிக்கை சுமார் 1500 ஆக இருந்தது. ஆனால், 2009-2010 ஆம் ஆண்டில், ஒன்பது மாதங்களில் மட்டும் இந்த எண்ணி்க்கை 2200 ஐக் கடந்துவிட்டதாக சிறுபான்மையினர் ஆணையம் கூறுகிறது.

குறிப்பாக, தென்னிந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆண்டில் மாத்திரம் முஸ்லிம் மாணவர்கள் 90,000 பேர், தங்களது கல்வி உதவித் தொகைகளை வங்கியில் டெபாசிட் செய்வதற்காக, எந்த ஒரு வங்கியும் அவர்களுக்கு வங்கிக் கணக்கைத் துவக்க மறுத்துவிட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வங்கிகளில் முஸ்லிம்கள் வைத்திருந்த கணக்குகளும் கணிசமாகக் குறைந்துவிட்டதாக சிறுபான்மையினர் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதி நிலவரப்படி, முஸ்லிம்கள் வைத்திருந்த வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை, அஸ்ஸாம் மாநிலத்தில் 47 சதம் குறைந்திருக்கிறது. அந்த மாநில மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மட்டும் 32 சதம் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலத்தில் 46 சதமும், கேரளத்தில் சுமார் 7 சதமும், மேற்கு வங்கத்தில் 17 சதமும் குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சில பகுதிகளை, சிவப்பு மண்டலங்கள் அல்லது வங்கிக்கணக்குத் துவக்குவது அல்லது கடன் வழங்குவதில் மிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய பகுதிகளாக வங்கிகள் தரம்பிரித்திருப்பதாக ஆணையம் கூறுகிறது.

குற்றங்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகள், சமூக விரோதிகள் அதிகமாக நடமாடுவதால், கடன்களை வசூலிப்பதில் ஏற்படும் சவால்கள், வாடிக்கையாளர்களைக் கண்டுபிடிப்பதில் ஏற்படும் சிக்கல்கள் ஆகிய காரணங்களுக்காக வங்கிகள் அத்தகைய சிவப்பு மண்டலங்களை உருவாக்கியிருப்பதாக, வங்கிகளின் ஆவணங்களை ஆய்வு செய்தபோது தெரியவந்திருப்பதாக சிறுபான்மையினர் ஆணையம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசம், பிகார், ஆந்திரம், கர்நாடகம், டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிர மாநில சிறுபான்மையினர் ஆணையங்களுக்கு மட்டும் முஸ்லிம் மக்களிடமிருந்து வரும் புகார்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்திருப்பதாக தேசிய சிறுபான்மையினர் ஆணையம் தெரிவித்துள்ளது.
Posted by Unknown Labels:

இஸ்தான்புல்:துருக்கி நாட்டில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணையதளங்கள் தடை செய்யப்பட்டு உள்ளன.துருக்கி நாட்டின் மொத்த மக்கள் தொகை 7 கோடி ஆகும். அவர்களில் 3 கோடிப் பேர் இணையதளங்களை பயன்படுத்துகிறார்கள்.ஆபாச இணையதளங்கள் அதிகமாக இருப்பதால்,அப்படிப்பட்ட இணையதளங்களுக்கு துருக்கி தடை விதித்து உள்ளது. இது தவிர இணையதள தணிக்கை முறையையும் அது கடைப்பிடித்து வருகிறது.இணையதள தணிக்கை முறைக்கு இணையதளங்களை பயன்படுத்துபவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கிட்டத்தட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் தணிக்கை முறையை எதிர்த்து இஸ்தான்புல் நகரில் பேரணி நடத்தினார்கள்.அவர்கள் இணையதளப்பக்கங்கள் மீது விதிக்கப்பட்ட தடைகளையும் அகற்ற வேண்டும் என்று கோரினார்கள்.இணையதள தடைக்குக் காரணமான போக்குவரத்து அமைச்சருக்கு எதிராக பேரணியில் குரல் எழுப்பப்பட்டது.கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட அமைப்புகள் சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.இந்த போராட்டத்தில் பிலிகி பல்கலைக்கழகமும் கலந்து கொண்டது.
Posted by Unknown Labels:

டெல்லி:முஸ்லிம்களை கவுரவப்படுத்தும் வகையில் சிறப்பாக அவர்களுக்கு எதுவும் செய்துவிடவில்லை மாறாக சச்சார் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துவதும், முஸ்லிம்களின் இடஒதுக்கீடும் அவர்களின் ஜனநாயக உரிமை' என்பதாக மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராஷ்ட்ரிய முக்தி மோர்ச்சா தொடர்ந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது.மத்திய அரசு அளித்த அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;'முஸ்லிம் சமுதாயம் ஒரு மோசமான இருலுலகில் வாழ்வதை சச்சார் கமிட்டி தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. இடஒதுக்கீடு போன்ற நடைவடிக்கைகளின் மூலம்தான் முஸ்லிம் சமுதாயம் முன்னேற்றம் அடையும்.இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிடில்,அச்சமுதாயம் மீண்டும் பின்னுக்குத் தள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.இந்தியாவின் ஒட்டு மொத்த முன்னேற்றத்திற்கு முஸ்லிம்களின் முன்னேற்றம் அவசியம் என்று கூறியுள்ள மத்திய அரசு,இதன்படி இடஒதுக்கீடு மத்தியில் ஆளும் அரசின் கடமை என்பதாக குறிப்பிட்டுள்ளது.முஸ்லிம் சமுதாயம் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், இது முஸ்லிம்களின் உரிமையே தவிர அவர்களை அரசு கவுரவிக்கவில்லை என்பததாகவும் கூறியுள்ளது.இடஒதுக்கீடு தற்போது நிலவும் சூழலில் நிறைவேற்றப்படவில்லை என்றால், இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் முஸ்லிம்களின் நிலைமைகளுக்கும் இன்று நிலவும் இடைவெளியை என்றைக்கும் பூர்த்தி செய்ய இயலாது என்றும் கூறியுள்ளது.இடஒதுக்கீடு அல்லாமல் முஸ்லிம்கள் அதிகம் வாழும் சுமார் 90 நகரங்களில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன்படி, முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அடிப்படை வசதிக்கூட இல்லாத நகரங்களில் Multi-Sectoral development Program என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் 14 பக்கங்களைக் கொண்ட அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.ராஷ்ட்ரிய முக்தி மோர்ச்சா, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு புறம்பானது என்றும் முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டும் இச்சிறப்பு அளிக்கப்படுவது அரசியல் சட்டங்களுக்கு எதிரானது என்று கூறி மனு ஒன்றை தாக்கல் செய்தது.இதனைத் தொடர்ந்துதான் மத்திய அரசு இப்பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.
Posted by Unknown Labels:

ஈரான் நாட்டை சேர்ந்த அணுசக்தி விஞ்ஞானி ஷாரம் அமிரி (32). கடந்த ஆண்டு மே மாதம் இவர் சவுதி அரேபியாவில் உள்ள மதீனாவுக்கு புனித யாத்திரை சென்று இருந்தார். அதன் பின்னர் அவர் நாடு திரும்பவில்லை.

இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருப்பதாக தகவல் தெரிவித்தார். அப்போது மதீனாவில் இருந்து தன்னை அமெரிக்காவின் "சி.ஐ.ஏ." உளவாளிகளும், சவுதி அரேபியாவின் உளவுத்துறை ஏஜெண்டுகளும் கடத்தி சென்றதாக புகார் தெரிவித்தார்.

இதற்கிடையே ஈரான் அரசின் முயற்சியின் பேரில் அவர் நேற்று தெக்ரான் திரும்பினார். இமாம் கோமெனி விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை குடும்பத்தினரும், உறவினர்களும் கண்ணீருடன் வரவேற்றனர்.

முன்னதாக அவர் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

"என்னை கடத்தி சென்ற அமெரிக்க உளவாளிகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் என்னை துன்புறுத்தினர். ஈரானின் அணுசக்தி ரகசியங்களை வெளியிடும்படி வலியுறுத்தினார்கள். ஆனால் நான் எனது தாய் நாட்டு பற்றின் காரணமாக அவற்றை வெளியிட மறுத்து விட்டேன்.

அணுசக்தி ரகசியங்களை பெற எனக்கு ரூ.25 கோடி வரை லஞ்சம் தர முன்வந்தனர். மேலும், அமெரிக்காவிலேயே தங்கி பணிபுரிந்தால் ரூ.250 கோடி தருவதாக ஆசைவார்த்தை கூறி பேரம் பேசினர். அதற்கும் நான் பணியவில்லை" என்று தெரிவித்து உள்ளார்.
Posted by Unknown Labels:

டெக்ரான், ஜூலை.15-

ஈரான் நாட்டின் அணு விஞ்ஞானி ஷாரம் அமிரி. கடந்த ஆண்டு இவர் ஹஜ் புனித யாத்திரைக்கு சென்று இருந்தார். பின்னர் அவர் திரும்பவில்லை. எங்கு இருக்கிறார் என தெரியாத நிலை இருந்தது.

இந்த நிலையில் இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள பாகிஸ் தான் தூதரகத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. மதீனா வில் இருந்த தன்னை அமெ ரிக்க உளவாளிகள் கடத்தி சென்றதாக இவர் தெரி வித்துள்ளார். ஆனால் அமெரிக்கா இதை மறுத்துள்ளது.
Posted by Unknown Labels:

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இந்த ஆண்டும் 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மருத்துவம், பொறியியல், தொழில் படிப்புகளிலும் வேலைவாய்ப்பிலும் தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த 69 சதவீதம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், அருந்ததியினர், இஸ்லாமியர் என சதவீத வாரியாக பிரித்து தரப்படுகிறது.

இந்நிலையில், தொழில் கல்வியில் குறிப்பாக மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு தரக்கூடாது என்று உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த மூத்த வக்கீல் கே.எம்.விஜயன், உச்ச நீதிமன்றத்தில் கடந்த 1994ல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த 16 ஆண்டுகளாக தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உச்ச நீதிமன்றம் ஒரு இடைக்கால தீர்ப்பை வழங்கும். இடைக்கால உத்தரவில், சம்பந்தப்பட்ட ஆண்டில் மாநில அரசு அமல்படுத்தி வரும் இட ஒதுக்கீட்டை தொடரலாம் என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஸ்வதந்தர்குமார் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு அரசியலமைப்பு சட்ட வழக்காக விசாரிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 50 சதவீதத்துக்கும் மேல் பின்தங்கிய மக்கள் உள்ளனரா என்பதற்கான ஆவணங்களையும், ஆதாரங்களையும் தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திடம் தமிழக அரசு கொடு¢க்க வேண்டும்.

அரசு தாக்கல் செய்யும் ஆவணங்களின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் ஆய்வு செய்து, எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம் என்று மண்டல் கமிஷன் வழக்கில் விலக்கு அளிக்கப்பட்டதை, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளலாம்.

அதன் அடிப்படையில் அரசு உரிய முடிவுகளை எடுக்கலாம். அதுவரை, தற்போது தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் இருக்க வேண்டும். இந்த உத்தரவோடு இந்த வழக்கு பைசல் செய்யப்படுகிறது.

தினகரன்-14-7-2010
Posted by Unknown Labels:
அல்லாஹ்வின் மகத்தான அற்புதம் ஒன்று ஜூலை நான்கு அன்று நிகழ்திருக்கிறது ‎என்று சொல்வது மிகையானதல்ல! மாநாட்டில் கலந்துக்கொண்ட லட்சோப லட்சம் ‎மக்களும் இதை உணர்திருப்பார்கள்.‎ ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு அற்புதத்தை நிகழ்த்திக் காட்டுவதை போல நாம் ‎வாழும் இந்த சமுதாய மக்களுக்கு அல்லாஹ் காட்டித்தந்த ஒரு அற்புதம், ‎தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!!‎

மாநாடு என்றால், அதில் நிகழ்த்தப்படும் உரைகளின் முக்கியத்துவம் கருதி மக்கள் ‎குழுமுவார்கள், தலை சிறந்த பேச்சாளர்கள் பேசினால் அதை கேட்க மக்கள் அணி ‎திரள்வார்கள், அறிவுக்கு தீனி போடும் வகையில் இம்மையிலும் மறுமையிலும் ‎நன்மையை ஈட்டித்தரும் வகையில் மார்க்கம் சார்ந்த பயான்கள் இடம் பெற்றால் ‎அதில் முஸ்லிம்கள் அணியணியாக குழுமுவது வழக்கமாக பார்க்கும் ஒன்று.‎

ஆனால், ஜூலை நான்கு, சென்னையை ஸ்தம்பிக்க வைத்த இந்த மாபெரும் மக்கள் ‎வெள்ளம் குழுமியதன் நோக்கம் தான் என்ன? தஞ்சையில் இரண்டு வருடத்திற்கு ‎முன்பு நடந்ததை போல் தவ்ஹீத் மாநாடு என்றா? பல மார்க்க பயான்கள் ‎நிகழ்த்தப்படும் என்றா? குர்ஆன் வகுப்புக்கள் நிகழ்த்தப்படும் என்றா? இல்லை!!‎

எந்த தனிநபருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படாமல், எந்த மார்க்க ‎சொர்ப்போழிவுகளும் இல்லாமல், இட ஓதிக்கீட்டுக்கான கோஷம் விளித்து பின் ‎கலைந்து செல்ல வேண்டும என்ற ஒற்றை குறிக்கோளுடனே தவ்ஹீத் ஜமாஅத் ‎மக்களை அழைத்தது..‎

தமிழகத்தின் பல பாகங்களிலிருந்தும் சாரை சாரையாக மக்கள் அணிதிரண்டதை ‎பார்த்த போது எனது கண்கள் கலங்கின. தவ்ஹீத் ஜமாத்தின் மீது மக்கள் வைத்துள்ள அதீத நம்பிக்கையும் அன்பையும் ‎தவிர வேறு எதையும் அங்கு என்னால் காண முடியவில்லை.‎

கர்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வந்தவர்கள், நடந்து செல்லவே ‎சிரமப்படக்கூடிய வயதானோர் என்று அந்த திடலை நிரப்பியவர்களை பார்க்கும் ‎போது, "தவ்ஹீத் ஜமாஅத் கூப்பிடுகிறதா?, நாங்கள் வருவோம்! எப்பாடு பட்டாவது ‎வருவோம்!! , என்ற மனக்கண்ணோட்டம் தான் அவர்களிடம் வெளிப்பட்டது.‎

‎5 கிலோமீட்டராக முதலில் அறிவிக்கப்பட்ட பேரணி, பின்பு மக்களின் சிரமத்தை ‎குறைப்பதற்காக ஒரூ கிலோமீட்டராக குறைக்கப்பட்டது. சென்னை தலைமை ‎செயலகத்திலிருந்து துவங்கிய பேரணி, தீவுத்திடலை சென்றடைவதுக்குள் காவல் ‎துறையினரும் தவ்ஹீத் ஜமாஅத் பிரதிநிதிகளும் திக்கு முக்காடி போய் ‎விட்டார்கள்.‎

கூட்டத்தினிடையே நுழைந்து கொண்டு மக்களை ஒழுங்குப்படுத்தும் வேலையை ‎செய்துக்கொண்டிருந்தார் பிஜே! மிகப்பெரிய அறிஞர், தலைவர் என்ற பகட்டு ‎சிறிதும் இல்லாமல், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் நிலையிலும் இத்தனை ‎வெளிப்படையாக அவர் இயங்கிக்கொண்டிருப்பதை பார்க்கும் போது அவர் மீது நாம் ‎கொண்ட அன்பும் மரியாதையும் இன்னும் அதிகமாகிறது.‎

பேரணி முடிவுற்றது தீவுதிடலின் வாயிலில். லட்சோப லட்சம் மக்களை ‎எதிர்ப்பார்த்து ஏற்பாடு செய்யப்பட மாநாடு என்ற வகையில் ஜமாத்தார்கள், ‎அவர்களது சக்திக்குட்பட்டு அனைத்து வசதிகளையும் மிகச்சிறப்பாக செய்து ‎வைத்திருந்தார்கள். களைப்புற்று வருபவர்களுக்கு மோர்ப்பந்தல்கள், குடிநீர் ‎பாக்கட்கள், மேடையை காண இயலாதவர்களுக்காக ஆங்காங்கே LED ஸ்க்ரீன்கள், ‎உணவு ஸ்டால்கள், மருத்துவ முகாம்கள், அவசர ஆம்புலன்ஸ் வசதிகள், ‎மொபையில் கழிப்பிடங்கள், தீவு திடலையும் கடந்து சென்னை அண்ணா ‎சாலையில் நின்று கொண்டிருப்பவர்களுக்காக மைக் செட்கள், ராட்சச கேமராக்கள், ‎மின்னொளிகள் (floodlights) என தீவுத்திடலில் அமைக்கப்பட்ட ஏற்பாடுகள் மலைக்க ‎வைத்தன.‎

ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும் மூன்று மூன்று நிமிடங்கள் பேசிய பிறகு ‎சிறப்புரையாக பிஜே ஒன்றரை மனி நேரம் பேசினார்.‎ அவ்வப்போது மழை தூறல் இருந்த போதிலும், அனைவரது துஆவின் காரணமாக ‎பலத்த மழையை அல்லாஹ் அன்றிரவு இறக்கவில்லை. ‎

இறுதியாக உரையாற்றிய ஹாரூன் MP அவர்கள், "லட்சோபலட்சம் மக்கள் குழுமிய ‎இந்த மாநாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உங்கள் கோரிக்கையை நிச்சயம் ‎பிரதமரிடமும் சோனியாவிடமும் எடுத்து சொல்வதாக வாக்களித்தார். ‎

மாநாட்டின் உரைகளுக்கு நடுவே, காணாமல் போனவர்களை பற்றிய அறிவிப்பு ‎அதிகமாக இருந்தது, கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளத்தினால் ஏற்பட்ட ஒன்று ‎என்பதை புரிய முடிந்தது.‎

குடும்பத்துடன் பயணப்பட்டது சிரமமாக எனக்கு தோன்றினாலும் , ‎அங்கு நான் கண்ட காட்சிகளை பார்த்த பிறகு அவர்கள் பட்ட கஷ்டங்களுக்கு, எனது ‎கஷ்டங்களெல்லாம் எதுவும் இல்லை என்றானது. குழந்தைகளை தூக்கி சுமந்து ‎வந்த தாய்மார்கள், கட்டுக் கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி, பிள்ளைகளை ‎தொலைத்து விட்டு தவித்துக்கொண்டிருந்தவர்கள், ஒரு சிறு வண்டியில், 30, 40 ‎பேராக திக்கு முக்காடிய பயணங்கள், இயற்க்கை தேவைக்காக அவர்கள் அடைந்த ‎சிரமங்கள் அனைத்துமே கண்களில் நீரை வர செய்பவை!‎

இட ஒதிக்கீட்டை குறித்து இத்தனை விழிப்புணர்வா? தமிழக மக்களிடையே ‎ஏற்பட்ட இந்த புரட்சி, அதிசயிக்க வைக்கிறது!‎ வேறு வேறு இயக்கங்கள் அழைத்த போது திரளாத இந்த மக்கள், தவ்ஹீத் ஜமாஅத் ‎அழைத்தவுடன் திரண்டு வருகிறார்கள் என்றால், இதில் சிந்திக்க பல விஷயங்கள் ‎உள்ளன!‎

தவ்ஹீத் ஜமாத்தின் கொள்கையில் கருத்து வேறுபாடு கொண்ட பலர் வந்தார்களே, ‎இவர்கள் அனைவரும் பிற இயக்கங்கள் அழைத்தால் செல்லக்கூடியவர்களா? ‎நிச்சயம் இல்லை! கொள்கையில் முரண்பாடு இருந்தாலும், இவர்கள் ‎நம்பிக்கைக்குரியவர்கள், உள தூய்மையுடன் எதையும் போராடுவார்கள் என்று ‎அனைத்து மக்கள் மனதிலும் ஆணித்தரமாக இடம் பிடித்திருக்கிறது தவ்ஹீத் ‎ஜமாஅத்!‎

இந்த கோரிக்கைக்காக எந்த துரும்பையும் எடுத்துப்போடாத இன்ன பிற ‎ஜமாத்தார்கள், தவ்ஹீத் ஜமாத்தின் இந்த மாநாட்டை விமர்சிக்க மட்டும் தயக்கம் ‎காட்டவே இல்லை.‎ வீடு வீடாக சென்று மக்களை மூளை சலவை செய்தது ஒரு கூட்டம் என்றால், இட ‎ஒதிக்கீடு கேட்பதே ஹராம் என்று மற்றொரு பக்கம். இவர்கள் சுயநலனுக்காக தான் ‎மாநாடு நடத்துகிறார்கள் என்ற விமர்சனம் ஒரு பக்கம் என்றால், பிற இயக்க ‎தலைவர்களை அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு மற்றொரு பக்கம் என இந்த ‎மாநாட்டின் வெற்றியை எப்பாடுபட்டாவது தடுக்க வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சி ‎கொண்ட பெட்டையர்கள் எடுத்துக்கொண்ட முஸ்தீப்கள் அனைத்தையும் ‎அல்லாஹ் தூள் தூளாக்கி விட்டான்.‎

வசை பாடி திரிந்த கூட்டம் வாய் மூடி மௌனிகளாக ஆகி விட்ட நிலையில் ‎எடுத்துக்கொண்ட குறிக்கோளில் வீறு நடை போட்டு செல்கிறது தமிழ் நாடு ‎தவ்ஹீத் ஜமாஅத் !!!‎

மாநாடு நடைபெற்ற மறுநாளே, பிரதமரிடமிருந்து அழைப்பு வருகிறதென்றால், ‎தவ்ஹீத் ஜமாத்தின் மக்கள் சக்தி, ஆட்சியாளர்களை எந்த அளவிற்கு ‎அசைத்திருக்கிறது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.‎

நாளைய நமது சந்ததிகள் தலை நிமிர்ந்து வாழ வழி ஏற்படுத்தி தந்த இந்த ‎ஜமாத்திற்க்கும் அதன் நிர்வாகிகளுக்கும் நாம் நன்றி கடன்பட்டிருக்கிறோம். ‎எடுத்துக்கொண்ட செயல்களில் இதே போல், அல்லது இதை விட சிறப்பாக நாம் ‎செயலாற்றிடவும், ஏகத்துவம், நமது நாட்டில் தழைத்தோங்கவும், நமது அனைத்து ‎உரிமைகளும் வென்றெடுக்கப்பட்டு நமது சமுதாயம் தலை நிமிரவும் நாம் இரு ‎கரம் கூப்பி அந்த ஏகனிடம் பிரார்த்திப்போம். மத்தியில் விரைவில் இட ஒதிக்கீடு ‎கிடைத்திடவும் நாம் அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம்.‎

அன்புடன், நாஷித் அஹமத்
Posted by Unknown Labels:
சென்னை:கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்ற ஒடுக்கப்பட்டோர் உரிமை மாநாடு கடந்த ஜூலை 4 அன்று நடைபெற்றது. இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் சென்னையில் அணிவகுத்தனர். இந்த மாநாட்டின் தனிச் சிறப்பை கல்கி வார இதழ் அழகாக வர்ணித்துள்ளது.



Posted by Unknown Labels:
Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.