மர்ம தேசம்
அமெரிக்காவில் உள்ள (Colorado)கொலராடோ மாநிலத்தில் அமைந்த டென்வர் சர்வதேச விமான நிலையத்தை சாதாரணமாக பார்த்தால் பயணிகள் சுருசுர்ப்பாக பயணத்தில் ஈடுபடும் ஒரு விமான நிலையம் தான் அது. ஆனால் அந்த பயணிகள் எவருக்கும் தெரியாமல் அங்கே அமைதியாக ஒரு விஷயம் நடந்து கொண்டிருக்கிறது அமெரிக்க கண்டத்தின் நடுவே அமைந்தது. இந்த விமான நிலையத்துக்கு கீழே பலமீடர்ஆழத்தில் பலர் தங்கியிருக்க கூடிய இரகசிய கட்டிடங்கள் அமெரிக்க அரசாங்கத்தாலே கட்டபட்டுவருகின்றன.இந்த கட்டிடங்கள் எந்த ஒரு அழிவுகளாலும் பாதிக்கபடாத வாறு அமைக்கபடுகின்றது. இதை பற்றி எந்த தகவலும் வெளியேவராமல் இரகசியமாக பாதுகாக்கபட்டுவருகிறது
இதை ஆராய்ந்து பாத்தால் பலமான பாதுகாப்புடன் கட்டப்படும் இந்த கட்டிடங்கள் உலகம் அழியும்போது பலர் பாதுகாப்பாக வாழும்படி அமைக்கபடுகிறது என தெரிய வருகிறது.கட்டடம் கட்டப்படும் இடத்தில "நியூ வேர்ல்ட் ஏர்போர்ட் கமிஷன்" என்னும் நிறுவனத்தால் கட்டபடுவதாக கல்வெட்டு இருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் அப்படி ஒரு நிறுவனம்செயல்படவே இல்லை.
இந்த டென்வர் விமான நிலையத்தின் நிலத்தடியில் சுரங்க நகரை அமைப்பது போல அமெரிக்காவில் பலஇடங்களில் ராணுவ பாதுகாப்புடன் கட்டப்பட்டுவருகிறது.
மேலே படங்களில் உள்ளவை அமெரிக்காவின் பல இடங்களில் அமைக்கப்படும் நிலகீழ் நகரங்கள் வெளியே எதுவுமே தெரியாத அளவுக்கு அமைதியாக காணப்படும் இவை உள்ளே மிக பிரமாண்டமானவை அமெரிக்க நாட்டில் அனேக ரகசியங்கள் மீடியாகளினால் சுலபமாக வெளிவந்துவிடுகின்றன. ஆனால் அமெரிக்க தவிர்த்து சீனா, ரஷ்யா போன்ற பிற நாடுகளில் அப்படி இல்லை. அங்கு என்ன நடக்கின்றன என்பவை ரகசியமாகவே இருக்கின்றன .
இதை மேலும் அறிய நீங்களே googleல தேடுங்கள் நோர்வே நாட்டுக்கு சொந்தமாக வடதுருவத்தில் ச்வல்பர்ட் (Svalbard)
என்னும் தீவு ஒன்று உண்டு. இந்த இடம் டென்வர் விமான நிலையம் போல மிக முக்கியமானதாக இப்போது இருக்கிறது. அது என்ன தெரியுமா?!!!
உலகில் உள்ள அணைத்து விதமான மரங்கள், செடிகள், கொடிகள் ஆகியவற்றின் விதையும், கிழங்குகளும் , தண்டுகளும் டன் டன்னாக பாதுகாப்பாக சேமித்து வைக்கபடுகிறது.பல மில்லியன் டாலர் செலவில் மலைகளை குடைந்து நிலத்தடி சுரங்கமாக கட்டப்பட்ட கட்டிடத்தில் இவை சேமித்து வைக்கபடுகின்றன. உலகம் அழிந்தாலும் இவற்றிற்கு எந்த பாதிப்பும் வரமுடியாத அமைப்பில் கட்டப்பட்டு இருக்கின்றன
உலகத்தில் அழிவு ஏற்படும் பட்சத்தில், அதன் பின்னர் ஏற்படும் மற்று உலகத்தில் தப்பி பிழைத்தவர்கள் பயன்படுத்த இந்த ஏற்பாடு செய்யபடுகிறது.சரி இப்படிப்பட்ட பாதுகாப்பு ஏன் வட துருவத்தில் செய்யப்பட வேண்டும் பூமியின் வட, தென் துருவதிர்கான ஆச்சு தனது இடத்திலிருந்து மாறினால் (pole shift) தற்சமயம் வெப்ப பிரதேசமாக இருக்கும் இடங்கள் குளிர் பிரதேசமாகவும், குளிர் பிரதேசங்கள் வெப்ப பிரதேசங்களாகவும் மாறும் வாய்ப்புண்டு என விஞ்ஞானிகள் கூறுவதால்.
உலகம் அழியும் நிலை ஏற்படுமாயின் மரங்களை பாதுகாக்கும் இடம் வெப்ப பிரதேசமாக மாறி அங்கு மரங்களை உற்பத்தி செய்யகூடியதாக மாறலாம்
இதுபோன்ற அதிபுத்திசாலி தனமான செயல்களை எல்லாம் செய்வதற்கு கட்டளை இட்டவர் யார்? இவற்றையெல்லாம் யார் ஒருங்கினைக்கிறார்கள்.
டென்வர் விமான நிலைய கட்டுமானத்தின் போது அமைக்கபட்டிருந்த கல்வெட்டு "the new world order" என்னும் அமைப்பு உலகத்தின் தொழிலதிபர்களையும், அரசியல் பெரும் புள்ளிகளையும் தன் அமைப்பின் அங்கத்தவர்களாக கொண்டது என்று சொல்கிறார்கள் பதினைந்துக்கு மேற்பட்ட உலகத்தில் மிக சக்தி வாய்ந்த முக்கியமான நாடுகள் ஒன்றாக சேர்ந்து தனியாக ஒரு பணம் "euro" உருவாக்கியது நம் கண்முன்னாலேயே நடந்தது. ஆசிய நாட்டிலுள்ள அநேகருக்கு "the new world order" பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை..ஆனால் அமெரிக்க ஐரோப்பிய நாட்டு மக்கள் நிறையவே தெரிந்துவைத்திருக்கிறார்கள்.
இதில் மறைந்திருக்கும் இன்னுமொரு செய்தி என்னவென்றால் இந்த அமைப்பை "free mason" என்னும் அமைப்பே கொண்டு நடத்துகிறது. இந்த அமைப்பை masonics என்று அழைப்பார்கள் . இந்த அமைப்புக்கு என பல சின்னங்கள் இருந்தாலும், கீழே கொடுக்கப்பட்டது தான் முக்கிய சின்னமாகும்.
மேலே டென்வர் விமான நிலையத்தில் உள்ள கல்வெட்டு படத்தில் இந்த சின்னத்தை காணலாம்
இன்னும் சில சின்னங்கள் கீழே கொடுக்கபட்டிருக்கின்றன.
masonics அமைப்பின் ஆளுமை மற்றும் அதிகாரம் பற்றி சொல்வதானால் இந்த ஒரு சம்பவத்தை மட்டும் சொன்னால் போதும் உங்களுக்கே தெரியும். அமெரிக்காவின் ஒரு டாலரில் இருக்கும் படம் இது
இங்கு கொடுக்கபட்டிருக்கும் படத்தில் உள்ள "NERVUS ORDO SECLORUM" என்னும் லத்தின் வார்த்தைகள்"secular new order" என ஆங்கிலத்தில் பொருள் தருகிறது. இது மறைமுகமாக "the new world order" என்றே பொருள்படுகிறது என விக்கிபீடியா மற்றும் பல இனைய தளங்கள் கூறுகின்றன. அவற்றை நீங்களே "தி நியூ வேர்ல்ட் ஆர்டர்" என டைப் செய்து காணலாம் அது தவிர அமெரிக்க டாலரில் லத்தின் வார்த்தைகள் ஏன் வரவேண்டும் என்ற கேள்வி எழும். இது ஒருபுறமிருக்க masonகளின் அடையாளமான ஒற்றை கண்ணும் பிரமிட் அடையாளமும் அங்கு வரவேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது
அத்துடன் பிரமிட் களின் அடுக்கு 13 ஏன் வர வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது ஏனெனில் 13 என்பது mason களின் முக்கிய இலக்கம் என்பதை நான் இங்கே குறிபிட்டாக வேண்டும். இந்த படிகள் தற்செயலாக அமைந்தது என கொண்டால்,
டாலரில் இருக்கும் படத்தில் mason ஆறுகோண அடையாளத்தை வரையும் போது என்ன வருகிறது என்று தெரிகிறதா?
MASON
ஆபிரகாம் லிங்கன், கென்னடி ஆகிய இருவர் தவிர்த்து அமெரிக்க ஜனாதிபதிகளில் அனைவரும் இந்த அமைப்பை சேர்ந்தவர்களாக தான் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள் .
Underground US Government Bases Exposed
மேலும் mason களின் மற்றுமொரு சின்னத்தை அமெரிக்காவின் பெருந்தலைகள் எத்தனை பேர் பாவித்திருக்கின்றனர் பாருங்கள். இப்பொழுது புரிந்திருக்கும் இந்த அமைப்பின் வலிமை மற்றும் யார் தலைமையில் இவ்வளவு வேலைகள் நடக்கின்றன என்பது புரியும்.
இங்கு ஒரு விசயத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும். mason என்பது மறைந்து செயல்படும் அமைப்பு கிடையாது, வெளிப்படையாக இயங்கும் ஒரு அமைப்பு தான். நமக்கு இப்பொழுது தான் தெரிந்திருக்கிறது. ஜார்ஜ் வாஷிங்டன் போல ஜார்ஜ் புஷ் கூட mason களுடன் இருக்கும் படம் வெளிப்படையாக கிடைக்கிறது.இப்போது உங்களுக்கு தெளிவாகவே புரிந்திருக்கும் "free mason" என்னும் அமைப்பே கொண்டு நடைபெறுகிறது என்று.
மேலும் இவற்றை கூர்மையாக பார்த்தால்உலக மக்களை சுற்றி சதி வலை பின்னப்பட்டு வருகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது
ARTICLE FROM
ARTICLE FROM
Posted by
Unknown
Labels:
சூனிய சமுதாயம்,
டென்வர் airport.,
தாஜ்ஜாலிசம்,
மர்ம தேசம்
0 comments:
Post a Comment