தீவுத்திடலை நோக்கி அணி அணியாய்..இந்திய மண்ணை நேசித்து இந்தியாவுடன் தங்கிக் கொண்ட முஸ்லீம்கள் இந்திய அரசாங்கத்தால் கை விடப்பட்டக் காரணத்தால் பொருளாதாரத்தில் நலிவடைந்து வாழ்வதற்கு வழி தெரியாமல் அதிகமானோர் தங்களை கூலி வேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டு தங்களின் பிள்ளைகளையும் (வறுமையின் காரணத்தால் கல்வியைக் கொடுக்க முடியாமல்) பிஞ்சு வயதிலேயே கூலி வேலைகளில் ஈடுபடுத்தினர்.வீடு வாசல்கள், நில புலன்கள், ஆபரணங்கள் போன்றவற்றில் சிறிதை வைத்திருந்தவர்கள் அவற்றை விற்று அரபு நாடுகளுக்கு தங்களுடைய பிள்ளைகளை பயணம் அனுப்பி வைத்தனர். அதற்கும் வசதி பெறாதவர்கள் இஸ்லாம் தடை செய்த வட்டிக்குப் பணம் வாங்கியேனும் பயணம் அனுப்பி வைத்தனர். அவ்வாறு சென்றவர்களில் ( வறுமையின் காரணத்தால் படிக்க முடியாதவர்கள் பிரபல கம்பெனிகளில் உயர் பொறுப்புகளில் அமர முடியாமல் ) அங்கும் குறைவான சம்பளத்தில் இதே கூலி வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இன்னும் ஒப்பந்தப் படிவத்தில் குறிப்பிடப்பட்ட வேலையும், சம்பளமும் கொடுக்காமல் குறைவான சம்பளம் கொடுத்து, தங்குமிட வசதியும் முறையாக செய்து கொடுக்காமல் அலைக்கழிக்கப்பட்டனர். இதனால் பலர் ஒப்பந்த தாரரிடமிருந்து தலைமறைவாகி கூடுதல் சம்பளத்திற்கு கஸ்டமான வேலைகளை செய்து வந்தனர், உரிய அனுமதி இல்லாமல் மறைந்து வேலை செய்து கொண்டிருக்கும்பொழுது லேபர் செக்கிங்கில் மாட்டிக் கொள்பவர்களை அன்று உடுத்திய அழுக்கு உடையுடன் சிறையில் அடைக்கப்பட்டு அதேக் கோலத்தில் விமானத்தில் ஏற்றி ஊருக்கு அனுப்பும் பரிதாப நிலை. இதுப் போன்ற குறைகைளை தீர்க்க திராணியற்ற நிலையில் பாஸ்போர்ட் ரினீவலுக்காக மட்டும் ( அந்நிய செலாவனிக்காக ) வளைகுடாவில் இயங்கும் இந்தியத் தூதரகம். பிறந்த நாட்டிலும் நிம்மதியாக வாழ முடியாமல், பிழைப்பு தேடிச் சென்ற நாட்டிலும் நிம்மதியாகப் பொருளீட்ட முடியாமல் அலைக்கழிக்கப்படும் அவல நிலையை கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும், அன்றைய தவ்ஹீத் அறிஞர்களால் வழிநடத்தப்பட்ட தமுமுகவிற்கு தகவல்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தது இன்னும் அவர்களின் அவல நிலையை வீடியோவில் பதிவு செய்தும் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் அன்றைய தவ்ஹீத் அறிஞர்களால் வழி நடத்தப்பட்ட தமுமுகவின் சமுதாய, மற்றும் மார்க்க விளக்கக் கூட்டங்கள், அதன் அமைப்பாளர் அறிஞர் பிஜே முதல் அனைத்து தவ்ஹீத் அறிஞர்கள் வரை, மாநில, மாவட்ட சிறப்புப் பேச்சாளர்கள் முதல் கிளைகளின் பயிற்சிப் பேச்சாளர்கள் வரை இடைவிடாது இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தினர். மக்கள் சந்திக்கும் அனைத்து வழிகளிலும்.சமுதாயப் பிரச்சனைகளுக்கு பழநிபாபா போன்றவர்களையும், மார்க்க நிகழ்ச்சிகளுக்கு மௌலவிகள் என்றும் தரம் பிரித்து நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில், இரண்டுக்கும் தகுதியானவர்கள் மார்க்க அறிஞர்களே என்ற நிலையை உருவாக்கி அரசியல், மற்றும் ஆன்மீக மேடைகளில் இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தினர். ஜூம்ஆ பள்ளிவாசல்களின் குத்பா உரையில் குர்ஆன் - ஹதீஸ் வசனங்களை மட்டும் எழுதி வைத்து (உரையாக அல்லாமல்) வாசித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தவ்ஹீத் பள்ளிவாசல்களில் ஜூம்ஆ உரையில் வீரியத்துடன் இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசங்கம் நடத்தினர். பாட்டு கச்சேரிகள், கரகாட்டங்கள், போன்ற பொழுது போக்கு அம்சங்களுக்காக மட்டும் மக்கள் சந்திக்கும் தெருமுணைகளை பயன்படுத்தி வந்த காலகட்டத்தில் அதை சமுதாய, மற்றும் மார்க்க உபதேசங்களுக்காக மாற்றியமைத்து அதிலும் இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தினர்.


இவ்வாறாக • அரசியல் மேடைகள், • ஆன்மீக மேடைகள்,• தெருமுணைக் கூட்டங்கள், • ஜூம்ஆ உரைகள், என நகர்புறம் முதல், கிராமப் புறம் வரை உள்ள மக்கள் மத்தியில் அரசிடமிருந்து இடஒதுக்கீடு பெறுவதன் அவசியம் குறித்தத் தகவல்கள் தெரிந்து கொள்ளும் அளவுக்கு பிரச்சாரம் சென்றடைந்தப் பின்னர் அவர்களைத் திரட்டி தமிழகம் அதுவரை கண்டிராத வீரியமிக்கப் போராட்டங்களை, பேரணிகளை நடத்தினர். தீவிரவாதிகள் என்ற முத்திரைக் குத்தப்பட்ட முஸ்லீம்கள் பல லட்சத்திற்கு மேல் ஓரிடத்தில் குழுமிய பொழுதும், வாழ்வுரிமை கோரும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திக்கொண்டு சாரை, சாரையாக அணிவகுத்து சென்றுக் கொண்டிருந்த போதிலும் பாதுகாப்புக்காக நிருத்தப்பட்ட போலீஸார்கள் ஓரமாக அமர்ந்து சஞ்சிகைகள் வாசித்துக் கொண்டும், தலைமைக்கு கட்டுப்பட்ட மக்களின் அழகிய வரிசைகளுடன் கூடிய அமைதியான பேரணிகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் நின்றது இந்திய வரலாற்றில் இந்தக் கூட்டங்களில் தான் முதல் முறை.சில சமுதாயத்தவர்கள் நடத்தும் பேரணிகளின் போது இன்னொரு சமுதாயத்தவர்கள் அவ்வழியே நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு பதஸ்டம் நிலவும் இக்கால கட்டத்தில் முஸ்லீம்கள் நடத்தும் இந்தக் கூட்டங்களில், பேரணிகளில் தான் ஹிந்து மக்கள் சாலை ஒரங்களில் தண்ணீர் குடங்களுடன் நின்று நீண்டப் பேரணியில் ஜீவாதார உரிமை கோஷங்களை எழுப்பிக் கொண்டுச் செல்லும் முஸ்லீம்களுக்கு கணிவுடன் நீர் புகட்டி தாகம் தீர்க்கச் செய்து சகோதரத்துவத்திற்கு முத்திரைப் பதித்த சம்பவமும் இந்திய வரலாற்றில் இந்தப் பேரணிகளில் தான் முதன் முறையாக நடந்தது,இன்னும் இதுப் போன்ற அமைதியானப் பேரணிகளை, மாநாடுகளை ஜனநாயக ரீதியில் அதிகமதிகம் நடத்துவதால்,நாங்கள், • மாவேயிஸ்டுகளைப் போல் மறைந்திருந்து அப்பாவிகளைத் தாக்குபவர்கள் அல்ல, • மரங்களை வெட்டி சாய்த்து மக்களுக்கு இடையூறு கொடுப்பவர்கள் அல்ல, • வாகணங்களை அடித்து நொறுக்கி பொதுச் சொத்துக்களுக்;கு சேதம் விளைவிப்பவர்கள் அல்ல, எங்கள் வாழ்வுரிமைக்காக அரசு அனுமதித்த வழியில் அமைதியாகப் போராடும் மக்கள் என்பதை ஆட்சியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் உணர்த்தும் வாய்ப்பு இது, அரசின் மீது விரக்தி அடைந்து ஆயுதமேந்தும் ஒரு சிலரும் கூட இழந்த உரிமைகளை வென்றெடுக்க இது தான் சிறந்த வழி என்று நம்முடன் இணைந்துப் போராடும் நற்குணமுடையவர்களாக மாறுவதற்கும் இது போன்ற கூட்டங்கள், பேரணிகள் வாய்ப்பாக அமைந்து விடும். 3 ½ சதவிகிம்.• 1999ல் முதன் முதலாக மூன்று லட்சம் மக்களைத் திரட்டி வாழ்வுரிமைக் கோரி மெரீனா கடற்கரையில் குழுமச் செய்தனர். அதுவரை முஸ்லீம்களின் இதுப்போன்ற பிரம்மான்டமானக் கூட்டத்தை கண்டிராத முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மக்கள் திரளை நோக்கி கடந்த காலத்தில் பிஜேபியுடன் கூட்டு சேர்ந்து முஸ்லீம்களின் கோரிக்கைகளை புறக்கணித்து துரோகம் இழைத்ததற்காக மன்னிப்புக் கேட்டார்.( அதற்குப் பிறகு வந்த அவரது ஆட்சியில் தான் முதன் முதலாக முஸ்லீம்களின் இடஒதுக்கீட்டிற்காக கமிஷன் அமைக்கப்பட்டது ) • அதற்கடுத்து 2004ல் கூட்டப்பட்ட பிரம்மான்டமானப் பேரணி தஞ்சையைத் திணறடித்து, திலகர் திடலை திக்கு முக்காடச் செய்தது. இதன் பின்னர் தமுமுகவிலிருந்து தனிப்பொழிவுடன் வுNவுது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உருவானப் பின்னர் அதன் மாநிலத் தலைவராகிய அறிஞர் பி.ஜைனுல் ஆப்தீன் உலவி அவர்கள் அமீரகத்திற்கு வரவழைக்கப்பட்டு தமிழர்கள் தங்கி இருக்கக்கூடிய பல கேம்புகளுக்கு அழைத்துச் சென்று மக்கள் படும் அவஸ்தையை நேரடியாகக் கண்டறிந்து பிறந்த நாட்டில் அரசுப் பணிகளில், மற்றும் கல்வியில் இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து கடந்த காலங்களை விட கூடுதல் மக்களைத் திரட்டி இன்னும் வீரியமிக்கப் போராட்டங்களை நடத்த திட்டமிட்டு ததஜ வின் செயல் வீரர்கள் முடுக்கி விடப்பட்டனர்;.''குடந்தை குலுங்கட்டும்'' இடஒதுக்கிடுப் பெறுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மீண்டும் முடுக்கி விடப்பட்டு 2006ல் குடந்தையில் குழுமியது வரலாறுப் படைத்த மக்கள் கூட்டம். இதன் பின்னரே அதிமுக ஆட்சியின் இறுதி கட்டத்தில் முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு குறித்து அறியும் கமிஷன் அமைக்கப்பட்டு, கமிஷனும் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. ''தொடர் முழக்கப் போராட்டங்கள்'' அதிமுக அரசு அஸ்தமித்து திமுக அரசு உதயமானதும் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட கமிஷன் அறிக்கையையும் திமுகவினர் அஸ்தமிக்கச் செய்தனர். அதனால் மீண்டும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இடஒதுக்கீடு கோரும் தொடர் முழக்கப் போராட்டங்களை நடத்த தலைமை அறிவித்தது.தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எத்திசைத் திரும்பினாலும் போராட்டம் இது போராட்டம், TNTJ நடத்தும் போராட்டம், ஓய மாட்டோம் உறங்க மாட்டோம்,இடஒதுக்கீடுப் பெறும் வரை, ஓய மாட்டோம் உறங்க மாட்டோம், எனும் கோஷங்களை பச்சிளம் குழந்தைகளை இடுப்பிலும், தோளிலும் சுமந்த பெண்டிர் முதல் வயோதிகர் வரை எழுப்பிய ஜீவாதாரக் கோஷம் விண்ணைப் பிளந்து சிறுபான்மைக் காவலர் கலைஞரின் செவிப்பறையைக் கிழித்தது. கலைஞரின் கல் நெஞ்சில் கசிவு ஏற்பட்டு மூன்றரை சதவிகிதம் ( குறைவு தான் என்றாலும் ஒன்றுமில்லாமல் இருந்ததற்கு ஓரளவு ஆறுதல் அளிக்கும் ) இடஒதுக்கீட்டை வழங்கினார் அல்லாஹ்விற்கேப் புகழ் அனைத்தும். ஜூலை 4சமீபத்தில் ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் கல்வி, மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் இந்தியாவில் முஸ்லீம்கள் மிகவும் பின் தங்கி இருக்கும் அவல நிலையை ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையில் 10 சதவிகிதம் மத்திய, மாநில அரசுப் பணிகளில், கல்வியில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்திருப்பதை மத்திய அரசு அலச்சியப்படுத்திடாமலும், காலம் தாழ்த்திடாமலும் அமுல் படுத்துவதற்காகவும் குறைந்த பட்சம் 15 லட்சம் முஸ்லீம்கள் சென்னை தீவுத் திடலில் ஜூலை 4 அன்று குழுமுவதற்காக கடந்த காலங்களில் ஜனநாயக ரீதியில் வரலாறுப் படைத்த கூட்டங்களைல் கூட்டிப் போராடி மூன்றரை சதவிகித இடஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்த தமிழகத்தின் மாபெரும் மக்கள் பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வுNவுது அழைப்பு விடுக்கிறது. • தீவுத்திடலை திணறடிக்க,• தீவுத்திடலில் அலை கடலென ஆர்ப்பரிக்க,• ஜூலை 4 க்கான பயண எற்பாடுகளை இன்றே செய்யத் தயாராகுங்கள். கல்வி, மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் பரிந்துரையை மத்திய அரசு அமுல் படுத்துவதற்கு பயண ஏற்பாடுகளுடன் கருணையாளன் அல்லாஹ்விடம் பிரார்த்தனையை முற்படுத்துங்கள் ...உங்கள் இறைவன் தனது அருளை உங்களுக்குத் தாராளமாக அளிப்பான். உங்கள் பணியை எளிதாக்குவான்....திருக்குர்ஆன் 18:16கல்வி, மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில், இந்திய முஸ்லீம்கள் 10 சதவிகித இடஒதுக்கீட்டையும், அரசின் நலத் திட்டங்களையும் இன்ஷா அல்லாஹ் அடைந்தால் மட்டுமே வறுமைக் கோட்டைத் தாண்ட முடியும். இல்லை என்றால் வேறெந்த வழிகளிலும்,• வெளி நாட்டில் கை ஏந்தும் வேதனையை, • எழுதப் படிக்கத் தெரியாத அவல நிலையை, • ஒரு வேளை உணவையும், இரண்டு ஆடைகளையும் பெற முடியாத தரித்திர நிலையை, • குடி தண்ணீர் மற்றும் கழிப்பிட வசதிப் பெற முடியாத வறிய நிலையை, மாற்ற முடியாது.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَநன்மையை ஏவிஇ தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்.
நன்றி: ஏ.எம்.பாரூக்
Posted by Unknown Labels:
300 years old Mosque reopened After 20 years Jaffna Grand Mosque reopened today Friday with jummah prayer the jaffna Grand Mosque was Built in 1713 during the Dutch period in Jaffna Muslim College Road, this mosque was abandoned in October 1990 as the LTTE drove the Muslims away from the Northern Province. There are more than 20 Mosques in Jaffna
Although the Jaffna Peninsula was recaptured by the security forces in December 1995, the majority of Muslims driven away were reluctant to resettle there as the LTTE was active in other parts of the North and East. After the LTTE leadership was decimated by the security forces last year, Muslims started to resettle in their original places in the city and several mosques about 10 Mosques including the Grand Mosque were renovated Accordingly the Grand Mosque the the Grand Mosque opened today Friday- with a special jummah sermon by As-Sheik M.J. Abdul Halik.
யாழ்ப்பாணம் பெரிய பள்ளி- The Jaffna Grand Mosque மீண்டும் 20வருடங்கலுக்கு பின்னர் திறந்துவைக்கப்பட்டு நிகழ்சிகள் நடைபெறுகின்றது என்று எமது யாழ் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர் இந்தப் பள்ளிவாசல் தற்பொழுது முழுமையாக புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளதுடன் சுமார் 3000 முதல் 4000 வரையிலான முஸ்லிம்கள் தொழக்கூடிய .1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிகள் புலிகளினால் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், இந்த மஸ்ஜிதும் யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஏனைய 20 மஸ்ஜிதுகளும் கைவிடப்பட்டிருந்தது. தற்போது மஸ்ஜிதுகள் ஒன்றன் பின் ஒன்றாக மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது இன்றைய நிகழ்ச்சியில் மௌலவி அப்துல் ஹாலிக் ஜும்மாஹ் குத்பாவை நிகழ்த்தியுள்ளார் , யாழ்ப்பாணம் மற்றும் பிறமாவட்ட ஆலிம்கள் மற்றும் பொது மக்கள் பலர் இதில் கலந்துகொண்டுதுள்ளனர்.போர்த்துகீசர் காலத்தில் போத்துக்கீசர்கள் யாழ்பாணத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க சர்வதேச வியாபாரிகளாக முஸ்லிம்களை கண்டனர் கொழும்பு துறை பகுதியில் இருத்த முஸ்லிம்களில் அணைத்து கட்டிடங்களும் போத்துக்கீசர்களால் தகர்க்கபட்டது அதன் போது முஸ்லிம்களின் குடி இருப்புகள் , மஸ்ஜிதுகள் இறங்கு துறைகள் ,பண்டசாலைகள் , வியாபார கப்பல் என்பனவும் இவர்களால் அழிக்கப்பட்டதுடன் முஸ்லிம்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேற்றபட்டனர் பின்னர் மீண்டும் யாழ்ப்பாண முஸ்லிங்கள் தற்போது இருக்கும் முஸ்லிம் பகுதியில் ஒல்லாந்தர் (ஹாலந்த்) காலத்தில் 1713ல் மஸ்ஜித்தை நிர்மாணித்தனர் என்பது குறிபிடதக்கது பல்லவர் கால சிற்பத்தை ஒத்ததாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் பள்ளி 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததும் மிகப்பெரியதுமாகும்.ஒற்றுமையையும், சமாதானத்தையும் வலியுறுத்தி முதலாவது ஜும்ஆப் பிரசங்கத்தை கொழும்பு பெரிய மர்க்கஸ், ரஷாதிய்யா அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மெளலவி எம். ஜே. அப்துல் ஹாலிக் நிகழ்த்தியுள்ளார். பெண்களுக்கான விசேட பயான் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அஸர் தொழு கையைத் தொடர்ந்து உலமாக்களுடனான ஆலோசனைக் கூட்டமும் நடைபெறவுள்ளது.முஸ்லிம் கல்லூரி வீதியில் அமையப்பட்டுள்ள இந்தப் பள்ளிவாசலுக்குட்பட்ட பகுதியில் முஸ்லிம்கள் மீண்டும் மீளக்குடியமர்ந்ததையடுத்தே இந்த மஸ்ஜித் புனரமைக்கப்பட்டுள்ளது.
நன்றி - lankamuslim
Posted by Unknown Labels:
அல்லாஹ்வின் திருப்பெயரால்....
அஸ்ஸலாமு அலைக்கும்,
அனைத்து முஸ்லிம்கள் கவனத்திற்கு அரசு பணியில் 3.5 சதவிகிதம் முஸ்லிம்களின் கோட்டா நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை. படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவகத்தில் உடனடியாக பதிவு செய்ய சொல்லவும். உங்களுக்கு தெரிந்த அனைத்து படித்த முஸ்லிம்களுக்கு தெரியபடுத்தவும்.

(பத்திரிக்கைகள் மற்றும் செல் மெசேஜ் மற்றும் டிவி மீடியா, இன்டர்நெட், வெப் சைட் மூலம் இந்த செய்தியை தெரியப்படுந்துங்கள்)

அல்லாஹ் நாம் அனைவர் மீதும் அருள்புரிவான் !

Posted by Unknown Labels:

அர்த்தமுள்ள இஸ்லாம் - நூல்கள் PDF வடிவில்இங்குள்ள இஸ்லாமிய நூல்களை PDF வடிவில் தரவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.




இஸ்லாத்தை தெரிந்து கொள்ளுங்கள் : download
இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் : download
அடிப்படை கொள்கை : download
ஹஜ்ஜின் சட்டங்கள் : download
துஆக்கள் : download
ஹஜ்ஜ் வும்ரா சட்டங்கள் download
இறுதி நாள் : download
இஸ்லாமிய பெண்ணுக்கு : download
முஸ்லிமின் வழிமுறை : download
ஜக்காத் : download
மன்னிப்பே இல்லாத மாபெரும் பாவம் : download
மரண தொடக்கம் : download
மார்க்கத்தில் வுருதியாக இருப்தற்கான வழிமுறைகள் : download
புனிதபயணம் : download
நபிகள் நாயகம் : download
நோன்பின் சட்டங்கள் : download
திருமணத்தின் சட்டங்கள் : download
தூய்மையும் தொழுகையும் : download
வும்ரவின் சட்டங்கள் : download
வுனவுகளின் சட்டங்கள் : download
நோயாளிகளின் தொழுகை : index part1 , download part2

குறிப்பு : கீழ்காணும் நூல்களுக்கு இந்த font ஐ download செய்யவும் --> Singari font அதை contolpanel->fonts என்ற கோப்பில் சேமிக்கவும் ...


மும்பை தாக்குதலுக்கு கசாப் மட்டுமே காரணமா என்ற ரீதியில் வினவு கட்டுரை அமைத்து இருக்கின்றது ..........பழைய ஆறு கட்டுரைகளை மீள் பதிவு செய்துள்ளது .இப்பொழுது அலறும் லதா மங்கேஷ்கர் மற்றும் ஊடகங்கள் 92 இனக்கலவரம் பொழுது அழுக வில்லையே . ஏன் தாஜ் ஹோட்டல் என்றால் ஒரு நீதி சராசரி மக்கள் என்றால் ஊடகங்களுக்கு ஒரு நீதியா. மேலும் குஜராத் கலவரத்திற்கு காரணமான மோடியை ஏன் தூக்கில் போடவில்லை , பாபர் மசூதி இடிப்பை செய்த அத்வானியை என்ன செய்தார்கள் அது எல்லாம் தீவிரவாதம் இல்லையா என்ற கோணத்தில் பல அரசியல் விடயங்களை முன்வைக்கிறது கட்டுரைகள் .சரி தவறு என்று ஒரு புறம் இருந்தாலும் விவாதித்தால் ஆழமாய் போனால் நமக்கே சில விடயங்கள் புரியும் என்பதே உண்மை ஆர்வமுள்ளவர்கள் வினாவில் விவாதியுங்கள் .

என்னை பொறுத்த வரை பக்கத்துக்கு ஊரான விதர்பா என்னும் ஊரில் கடந்த 20 வருடங்களாய் லட்சக்கணக்கான விவசாயிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது எல்லாம் இந்த ஊடகங்கள் என்ன செய்தன . தாஜ் ஹோட்டல் என்ற ஒரே காரணம் முதலாளிகள் கூடும் இடம் என்பதால் இந்த இடத்திற்கு இவ்வளவு மரியாதையா ..
கசாப் மட்டுமே இதை செய்திருப்பாரா , மகேஷ் படத் மகனின் பெயர் அடிப்பட்டதே அது என்ன ஆச்சு ????? ஏன் மும்பை குண்டு வெடிப்புகளில் சஞ்சய் தத் பெயர் அடிப்பட்டதே என்ன ஆச்சு ???? கடை நிலையில் இருக்கும் தீவிரவாதி மாட்டுமே கண்ணில் படுவாரா.

சரி இந்தியா இலங்கையில் என்ன பண்ணி கொண்டிருக்கிறது அது தீவிரவாதம் இல்லையா ???? இந்தியாவிற்கு ஏன் இந்த ஜனநாயக வேடம் . சரி மும்பையில் முஸ்லிம்கள் பாதுக்காப்பாய் வாழத்தான் முடிகிறதா???? இதை எல்லாம் ஆராய்ந்து விட்டு தீவிரவாதம் என்னும் விடயத்திற்குள் செல்ல வேண்டும். உண்மையிலேயே தீவிரவாதிகள் யார் , அமெரிக்க ஈராக்கிலும் ஆப்கானிலும் செய்ததே அது தீவிரவாதம் இல்லையா????? ஒசாமாவை ரஷ்யாவை எதிப்பதற்க்காய் வளர்த்தது அமெரிக்க இது உலக வரலாறு...எது தீவிரவாதம் நாமெல்லாம் தேசியம் என்னும் மாயையில் இருக்கிறோமா ??? ஏன் இந்த விடயத்தை மட்டும் பற்றி எழுதும் ஊடகங்கள் விதர்பா என்னும் விடயத்தை விட்டுவிட்டார்கள் ????தாஜ் ஹோடேலில் உயிர் என்றால் அது நாட்டை உலுக்கும் பிரச்சனை என்று சித்தரிக்க படுகிறதா .....

மேலும்:http://www.vinavu.com/2010/05/06/kasab/
Posted by Unknown
கல்வியை தொடரமுடியாமல் வசதியற்ற நிலையில் உள்ள
மாணவ - மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும்
தொண்டு நிறுவனங்கள்



1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை
அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445

2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 52530

3. சீதக்காதி அறக்கட்டளை 688 , அண்ணா சாலை சென்னை - 06

4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன்
688 , அண்ணா சாலை சென்னை - 06

5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)


6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட் ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை சென்னை - 34

7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை சென்னை - 34

8. மெஜெஸ்டிக் பவுண்டேசன்
117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை சென்னை - 02


9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட்
ஜபார்ஷா தெரு,
திருச்சி.


10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை சென்னை - 03


11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட் டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு அண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564

12. அஸ்மா காசிம் அறக்கட்டளை மாண்டியத் சாலை எழும்பூர் - சென்னை – 08


13. ராஜகிரி பைத்துல்மால்
கீழத் தெரு
ராஜகிரி - 614 207


14. டாம்கோ
807 - அண்ணா சாலை
5 வது சாலை சென்னை


15. ஹாஜி. அஹமது மீரான்
Managing Director
Professional Courier’s 22. மகாராஜா சூர்யா ராவ் ரோடு
ஆழ்வார்பேட்டை - சென்னை – 18


16. மியாசி புதுக் கல்லூரி வளாகம்
பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14



17. S I E T கே.பி. தாசன் சாலை தேனாம்பேட்டை சென்னை - 18


அத்துடன் கடந்த ஆண்டுகளாய் கல்வியை தொடர முடியாமல் வசதியற்ற நிலையில் உள்ள மாணவ - மணவிகளுக்கு ST Courier நிறுவனம் கல்விக்கு உதவி வருகிறது.

முகவரி

ST Courier
199, Hariyan Street, C.Pallavaram,
Chennai - 600 043.
Tamilnadu,
India.

TEL :91 44 22 666 666
TEL: 91 44 305 66 666

கல்வி உதவி சம்பந்தமாக தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் : jaffarkaan@gmail.com

நன்றி : ராஜகிரி கஸ்ஸாலி மற்றும் ஹீஸைன் கனி
Posted by Unknown Labels:
ரியாத் : மக்காவிலிருக்கும் இறையில்லமான மஸ்ஜித்-அல்-ஹராம் பள்ளி மேலதிகமாக 5மில்லியன் பேர் தொழ வசதியாக இருக்கும் படி விரிவாக்கப்படும் எனத் தெரிகிறது .

மக்காவிலுள்ள மஸ்ஜித் -அல்-ஹராம் பள்ளியின் புதிய விரிவாக்கத்திட்டத்திற்கு, இரு புனிதப் பள்ளிகளின் பணியாளரும் சவூதியின் அரசருமான மன்னர் அப்துல்லாஹ் ஆணையிட்டுள்ளார் இதன் மூலம் தற்போது மக்காவில் வழிபடுபவர்களைவிட மேலும் 5மில்லியன்முஸ்லிம்கள் தங்கி வழிபட வசதியானதாக இருக்கும் என்று மக்காவின் நகரத்தந்தை உஸாமா அல் -பர் கருத்துத் தெரிவித்துள்ளார் .

“இது மக்காவின் புனிதப் பள்ளியின் மிகப் பெரும் மேம்பாட்டுத் திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டத்தில் மக்கா பள்ளியின் முகப்புத் தோற்றத்தையும் மாற்றக் கூடிய திட்டமும் அடங்கும் என்று அல்பர் கூறினார். இந்த விரிவாக்கம் மூலம் பள்ளியின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் மேலதிகமான முஸ்லிம்கள் தொழ அதிகமான இடவசதி கிடைக்கும் என்றும் கூறினார் .

மன்னர் அப்துல்லாஹ் இந்த விரிவாக்கப் பணிக்காக ஆணை பிறப்பித்தார் .நகராட்சி மற்றும் ஊரகத்துறை அமைச்சர் இளவரசர் மிதேப், இத்திட்டத்தில் நடைபாதை சுரங்கங்கள் மற்றும் சேவை நிலையங்களும் இருக்கும் என்று கூறினார் .

இந்த அரசாணை மக்கா பெரிய பள்ளியின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதியில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்தும் உத்தரவையும் உள்ளடக்கியுள்ளது. இதற்கென்று அமைக்கப்பட்ட விசேஷ குழுக்கள் இந்த நிலங்களின் விலை மதிப்பீடு செய்யத் துவங்கியுள்ளன என்றும் மிதேப் கூறினார் .

“புதிய சுரங்க நடைபாதைகள் மூலம் பள்ளிவளாகத்தின் வடக்குப் பகுதியை இணைக்கும் கட்டுமானப் பணிகளும் இத்திட்டத்தின் ஓர் அங்கமாக இருக்கும் ” என்றும் அவர் மேலும் கூறினார் .

இப்புனிதப் பள்ளியின் முதல் பெரிய விரிவாக்கப்பணி 1925ல் சவூதி அரேபியாவை நிறுவிய மன்னர் அப்துல் அஜீஸின் உத்தரவின்படி நிறைவேற்றப்பட்டது. 1989ல் அப்போதைய சவூதி மன்னர் ஃபஹத், மஸ்ஜித் அல் ஹராமின் மாபெரும் விரிவாக்கத்தைச் செயல்படுத்தி 1,52,000 சதுர மீட்டர் பரப்பளவிலிருந்த தொழும் இடத்தை 3,56,000 சதுர மீட்டராக அதிகரிக்கச் செய்தார் .

ஷூரா எனும் ஆலோசனைக் குழு மேலதிகமான நிதி ஒதுக்கீடு மூலம் இரு புனிதபள்ளிகளின் தலைமைக்கு உதவி, அதன் மூலம் மேலும் சிறப்பான சேவைகளை புனித உம்ரா மற்றும் ஹஜ் காலத்தில் இப்பள்ளிக்கு வரும் ஹாஜிகளுக்கும் பயணிகளுக்கும் வழங்கவும் மேலும் இவ்வகையில் பயனுள்ள அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளவும் பரிந்துரைத்துள்ளது .

செளதி மன்னர் அப்துல்லாஹ் அவர்களின், புனித மக்காவின் மஸ்ஜித் ஹராம் பள்ளியின் புதிய விரிவாக்கம் மொத்த விரிவாக்கமும் வந்த பின்னர் 5 மில்லியன் மக்கள் ஒரே நேரத்தில் தொழும் வசதி கிடைக்கும் .... மாஷா அல்லாஹ். நினைக்கவே ஆச்சரியம். வீடியோ பார்த்தால் தான் தெரியும்.



நன்றி:www.khair.ws
Posted by Unknown Labels:


A diplomat at the Indian High Commission in Pakistan has been arrested on charges of spying for Islamabad.

Madhuri Gupta, second secretary in the press and information wing, is accused of leaking sensitive information to Pakistani authorities.

Home Secretary G.K. Pillai on Tuesday confirmed Gupta's arrest.

Gupta, 54, was arrested in Delhi four days ago. She was brought back from Pakistan on the pretext of preparations for the SAARC Summit.

Gupta is accused of passing strategic information to Pakistani agencies. She has allegedly been on the ISI's payroll for the last three years.

An FIR was lodged against Gupta by the Special Cell of the Delhi Police. She has been booked under the Official Secrets Act.

Intelligence officials have questioned Gupta and will be probing the case. Gupta's call and travel details in India and abroad are under scanner. She had been kept under watch for the last six months.

Gupta is a Grade B Indian Foreign Service officer and rose through the ranks. She has been posted at the Indian High Commission in Pakistan since September 2007. A specialist interpreter in Urdu, she served in Delhi and Kuala Lumpur as well.

The authorities are now looking at the possible involvement of others at the Indian High Commission in Pakistan.



டெல்லி: நாட்டின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு விற்று வந்த இந்திய பெண் தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீடியா பிரிவல் பணியாற்றி வந்த மாதுரி குப்தா (53) என்ற அந்த ஐபிஎஸ் அதிகாரி, பாகிஸ்தான் உளவுப் பிரிவினருக்கு கடந்த 2 வருடஙகளாகவே ரகசியங்களை வி்ற்று வந்துள்ளார். அவரை கண்காணித்து வந்த இந்திய உளவுப் பிரிவினர் இப்போது அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் இஸ்லாமாபாத் தூதரகத்தில் உள்ள இந்திய 'ரா' உளவுப் பிரிவு அதிகாரியான ஆர்.கே.ஷர்மா மீதும் சந்தேகம் எழுந்துள்ளதால் அவரிடமும் இந்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

இது குறித்து உள்துறைச் செயலாளர் ஜி.கே. பிள்ளை கூறுகையில், இஸ்லாபாத்தில் உள்ள ரா பிரிவுத் தலைவரிடமிருந்து தகவல்களைப் பெற்று அதை பாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு மாதுரி குப்தா வழங்கி வந்துள்ளார்.

அவர் எந்த வகையான தகவல்களை பாகிஸ்தானுக்கு அளித்தார் என்பது தெரியவில்லை. ஆனால், பாதுகாப்பு தொடர்பாக ரகசிய தகவல்களை பாகி்ஸ்தானுக்கு விற்று வந்திருக்கலாம் என்று தெரிகிறது.

30 ஆண்டுகள் இந்திய வெளியுறவுத்துறையில் பணியாற்பியுள்ள மாதுரி குப்தா, கோலாலம்பூர் உள்பட சில நாடுகளிலும் பணியில் இருந்துள்ளார்.

மாதுரி குப்தாவை கடந்த 2 வருடமாக கண்காணித்து வந்தனர். அவர் தவறு செய்தது உறுதியானதையடுத்து இரு நாட்களுக்கு முன் பணி நிமித்தமாக என்று கூறி டெல்லிககு வரவழைத்து இந்திய உளவுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
Read: In English
அவரிடம் ரா, ஐபி மற்றும் டெல்லி உளவுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தியபோது தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்டதாக உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து நீதிமன்றத்தில் ரகசியமாக ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரி்க்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Indiatoday
Posted by Unknown
சென்னை: வாழ்க்கைக்குத் தேவையான 64 தந்திரங்களில் 6 வகையான தந்திரங்கள் செக்ஸ் தொடர்பானவை என்றும், அதைக் கற்றுத் தரும்போது நிர்வாணமாக இருப்பது, உடலுறவு போன்றவற்றில் ஈடுபட வேண்டி வரும் என்றும், இதைப் பற்றி வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் தனது ஆசிரமத்துக்கு வந்த பெண்களிடம் ஒரு ஒப்பந்தத்தில் நித்யானந்தா கையெழுத்து வாங்கியுள்ள விவரம வெளியில் வந்துள்ளது.சமீபத்தில் கர்நாடக சிஐடி போலீசார் பெங்களூர் பிடுதியில் உள்ள இவரது தியான பீட ஆசிரமத்தில் ரெய்ட் நடத்தியபோது இந்த ஆவணங்கள் சிக்கியுள்ளன.மேலும் இந்த ரெய்டில் 5 பெண்களுடன் நித்யானந்தா செக்ஸ் லீலைகளில் ஈடுபட்ட 35 சிடிக்களும் சிக்கியுள்ளன.

செக்ஸ் ஒப்பந்தம்:

இந்த தியான பீடத்துக்கு வருவோரிடம், குறிப்பாக பெண்களிடம் ஒரு 10 பக்கம் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கப்படுவதுண்டு.அதில் கடைசி பக்கங்களில் செக்ஸ், உடலுறவு தொடர்பான ஷரத்துக்களை சேர்த்துள்ளனர். இந்த இரு பக்கங்களில் கூறப்பட்டுள்ளதாவது:வாழ்க்கைக்கு 64 வகையான தந்திரங்கள் தேவை. அதில் 6 வகையான தந்திரங்கள் செக்ஸ் தொடர்பானவை. உணர்ச்சியூட்டும் படங்களைப் பார்ப்பது, காம உணர்வுகளை தூண்டும் இசை கேட்பது, நிர்வாணமாக நடமாடுவது ஆத்மாவின் விடுதலைக்கு அவசியம்.

ஆசிரமத்தில் ஆராய்ச்சிக்கு தேவைப்படும் பட்சத்தில் செக்ஸ் வைத்துக் கொள்ளவும் நேரிடும். அதற்கு யாரும் ஆட்சேபம் தெரிவிக்கக் கூடாது. யாரும் யாருடனும் உறவு வைத்துக் கொள்ளலாம்; இதனால் சிலருக்கு உடல் அளவிலோ, மனதளவிலோ கஷ்டமாக இருந்தால் அதை தாங்கிக் கொள்ள வேண்டும்.செக்ஸ் உறவில் சம்பந்தப்பட்ட நபர் அதை பற்றி வெளியே யாரிடமும் எந்த சூழ்நிலையிலும் சொல்லக்கூடாது.மேலும் இந்த ஒப்பந்தம் பற்றியும் வெளியில் சொல்லக் கூடாது.இவ்வாறு அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த 10 பக்க ஆங்கில ஒப்பந்தத்தை படித்துப் பார்க்க எல்லாம் நேரமே தராமல் நேரடியாக கையெழுத்து வாங்கியுள்ளனர் இந்த ஆசிரமத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆட்கள்.

ஆசிரமம் தானே கேட்கிறது என்பதால் பெரும்பாலானவர்கள் என்ன எழுதியுள்ளது என்பதை படிக்காமலேயே கையெழுத்து போட்டுள்ளனர். நீட்டிய பேப்பர்களில் எதுவும் கேட்காமல் கையெழுத்து போட்டு தந்துள்ளனர்.ஆனால், இப்படி ஒப்பந்தம் போட்டு செக்ஸ் வைத்துக் கொள்ள சட்டத்தில் இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஒப்பந்தத்தில் நடிகை ரஞ்சிதாவும் கையெழுத்து போட்டிருக்கலாம் என்று தெரிகிறது.5 பெண்களுடன் 'குஜால்' சிடிக்கள சி்க்கின.மேலும் சிஐடி போலீசார் நடத்திய ரெய்டில் 35 நித்யானந்தாவின் செக்ஸ் லீலை சிடிக்களும் சிக்கியுள்ளன. இந்த சிடிக்களில் நித்யானந்தா 5 பெண்களுடன் நாள் கணக்கில் செக்ஸ் கும்மாளம் அடிக்கும் காட்சிகள் அடங்கியுள்ளன.
Posted by Unknown Labels:

ஏப்ரல் 1 என்றாலே ஏமாற்றுதல் என்று பொருள் மாறும் அளவிற்கு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் சிலர் சிலரை மதிக்காமல், உரிய கவுரவத்தைக் கொடுக்காமல், அவர்களிடம் பொய் சொல்லி, அதற்குச் சத்தியமும் செய்து நம்ப வைத்து பிறகு ஏமாற்றுவது, ஏளனமாகச் சிரிப்பது, மேலும் அவர்களுக்கு இழிவை ஏற்படுத்துவது போன்ற செயல்களை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள்.
இவர்கள் பிறரை ஏப்ரல் ஃபூல் – முட்டாளாக்கி அற்ப சந்தோஷத்தை அனுபவித்து வருகின்றனர்.

April Fool’s Day அல்லது All Fool’s Day என்ற ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஏப்ரல் ஃபுல் க்கு பல வரலாறுகள் சொல்லப்படுகின்றது

முஸ்லிம்களில் சிலரும் இதை செய்து வருகின்றனர்.

எனவே நாம், நமக்கு வழிகாட்டியாக வந்த குர்ஆனையும், ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீமையைப் பற்றி அறிந்து, அதிலிருந்து விலகவும், நேர்வழி பெறவும் முயற்சிக்க வேண்டும்.

ஹோலி கலாச்சாரம்

பொதுவாக மாணவர்கள் ஏப்ரல் மாதத்தில் பிறருடைய மேலாடைகள் மீது மையைத் தெளித்து அசிங்கப் படுத்துகின்றார்கள். இதை ஏப்ரல் ஃபூலின் ஓர் அடையாளமாக நினைத்து செய்கின்றனர். மையைத் தெளிக்கும் இந்த நடைமுறையானது ஹோலி பண்டிகையின் போது நிறங்களை பரஸ்பரம் வீசிக் கொள்ளும் இந்துக்களின் ஒரு பிரிவினருடைய கலாச்சாரத்துடன் ஒத்துப் போகின்றது. எனவே மாற்று மதக் கலாச்சாரம் என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் இதைக் கைவிட வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பிற சமுதாயத்தின் சம்பிரதாயங்களை (கலாச்சாரத்தை) ஏற்படுத்திக் கொள்கிறானோ அவனும் அவர்களைச் சார்ந்தவனே! (நூல்: அபூதாவூத் 3512)

பொய்க் கலாச்சாரம்

இதைத் தவிர மக்களில் பலர் மற்றவர்களை ஏப்ரல் ஃபூல் (முட்டாள்) ஆக்குவதற்காக பொய் பேசுகின்றார்கள். இது பெருங்குற்றம் ஆகும். பொய் சொல்லி தீமை செய்து கொண்டிருப்பதன் காரணமாக அல்லாஹ்வின் அருளும் அன்பும் இழந்து அவனது கோபத்திற்கு ஆளாகி விடுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழி வகுக்கும். தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டே இருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் பெரும் பொய்யன் என்று பதிவு செய்யப்பட்டு விடுவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 6094

ஆக இந்தப் பொய்யர்கள் அதிகமான தீமைகளைச் செய்து நரகத்தை அடைகின்றனர். எனவே நாம் பொய் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பொய்ச் சத்தியம் செய்தல்

இன்னும் சிலர் பிறரை முட்டாளாக்குவதற்கு முயற்சி செய்யும் போது அவர் நம்ப மறுத்து விட்டால் உடனே பொய்ச் சத்தியம் செய்து நம்ப வைக்கின்றனர்.

இவர்களைப் பற்றி வல்ல அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:

அதிகம் சத்தியம் செய்யும் இழிந்தவன் எவனுக்கும் நீர் கட்டுப்படாதீர்! (அல்குர்ஆன் 68:10)
மேலும் இப்படிப் பொய்ச் சத்தியம் செய்வது யாருடைய குணம் என்றால் அல்லாஹ்விற்குப் பிடிக்காத நயவஞ்சகர்களின் குணமாகும்.
இவர்களுடைய இந்தச் சுபாவத்தைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
அறிந்து கொண்டே பொய் சத்தியம் செய்கின்றனர். துன்புறுத்தும் வேதனையை அல்லாஹ் அவர்களுக் குத் தயாரித்துள்ளான். அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 58:14,15)

எனவே நாம் ஒரு போதும் பொய்ச் சத்தியம் செய்யக் கூடாது.

பொய் சாட்சி கூறல்

ஏப்ரல் மாதத்தில் பிற மக்களை முட்டாளாக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் போது அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் சிலர் அந்தப் பொய்யர்களுக்கு ஆதரவு அளித்து, உதவி செய்யும் முகமாக பொய் சாட்சி பகர்கின்றனர். இதுவும் பெரும் பாவமான காரியமாகும்.
அபூபக்ரா (ரலி) கூறியதாவது: “பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். “ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள்” என்று நபித் தோழர்கள் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்விற்கு இணை வைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் தான்” என்று கூறினார்கள். சாய்ந்து கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் பிறகு எழுந்து அமர்ந்து, “அறிந்து கொள்ளுங்கள். பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்). பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்)” என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே இருந்தார்கள். (நூல்: புகாரி 5976, முஸ்லிம் 126)

ஏமாற்றுதல்

இன்னும் சிலர் உண்மையுடன் பொய்யும் புரட்டும் சேர்த்துப் பேசுவார்கள். இதற்குப் பெயர் ஏமாற்றுதல், மோசடி ஆகும். உதாரணமாக ஏப்ரல் மாதத்தில் ஏமாற்றுவதற்காக, விபத்து நடந்து விட்டது என்றோ, இன்னார் அபாயகரமான (சீரியஸான) நிலையில் இருக்கிறார் என்றோ, மரணித்து விட்டார் என்றோ தொலைபேசி அல்லது தந்தி மூலமாகத் தகவல் அனுப்பி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஏமாற்றுகின்றானோ அவன் என்னைச் சார்ந்தவன் அல்ல. (நூல்கள்: முஸ்லிம் 147, திர்மிதீ 1236)

“மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக் கொடி ஒன்று நட்டப்படும். இது இன்னாரின் மகன் இன்னாரின் மோசடி’ என்று கூறப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 6178)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: மோசடி செய்யும் ஒவ்வொருவனுக்கும் ஒரு அடையாளக் கொடி உண்டு. அது மறுமையில் அவனது புட்டத்திடம் நட்டப்படும். (நூல்: முஸ்லிம் 3271)

முஸ்லிமின் அடுத்த அறிவிப்பில் அவனுடைய மோசடிகளுக்குத் தக்கவாறு அது உயர்த்தப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

எனவே வல்ல அல்லாஹ்வுக்குப் பயந்து ஏமாற்றுதல், மோசடி செய்தல் ஆகியவற்றிலிருந்து முழுவதுமாக விலகி உண்மையாளராக நாம் திகழ வேண்டும்.

கேலி செய்தல்

மக்களில் சிலர் சிலரை ஏப்ரல் ஃபூல் ஆக்கிய பிறகு ஏளனமாகச் சிரிப்பது, கிண்டல் செய்வது, ஆர்ப்பரிப்பது என்று எப்படியெல்லாம் அவமரியாதை செய்ய முடியுமோ அனைத்தையும் கையாளுகின்றனர். இந்தக் கெட்ட குணத்திற்குச் சொந்தக்காரர்கள் யார் என்றால் இறை நிராகரிப்பாளர்கள் தாம். (ஏக இறைவனை) மறுப்போருக்கு இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப் பட்டுள்ளது. அவர்கள் நம்பிக்கை கொண்டோரைக் கேலி செய்கின்றனர். (இறைவனை) அஞ்சியோர் கியாமத் நாளில் அவர்களுக்கு மேலே இருப்பார்கள். அல்லாஹ், நாடியோருக்கு கணக்கின்றி வழங்குகிறான். (அல்குர்ஆன் 2:212)

தாராளமாக (நல் வழியில்) செலவிடும் நம்பிக்கை கொண் டோரையும், தமது உழைப்பைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளாதவர்களையும் அவர்கள் குறை கூறி கேலி செய்கின்றனர். அல்லாஹ் அவர்களைக் கேலி செய்கிறான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 9:79)

இந்த வசனங்களில் அல்லாஹ், நயவஞ்சகர்களின் பண்பைப் பற்றிக் கூறி விட்டு அவர்களுக்குரிய தண்டனையைப் பற்றியும் கூறுகின்றான். எனவே நாம் இந்தத் தீய பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

இழிவாகக் கருதுவது

இறுதியாக ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறரை ஏப்ரல் ஃபூல் (முட்டாள்) ஆக்கியவர்கள் ஏன் அவர்களைப் பார்த்து, கை கொட்டி ஏளனமாகச் சிரிக்கின்றார்கள்? ஏன் கேலி, கிண்டல் செய்து அற்ப சந்தோஷம் அடைகின்றார்கள்? என்று சிந்தித்தால் ஓர் உண்மை விளங்கும்.
அதாவது அவர்கள் தம்மைப் புத்திசாலியாகவும், உயர்ந்தவர்களாகவும் கற்பனை செய்து கொள்கின்றார்கள். எனவே ஆணவம் தலைக்கேறிய பிறகு மற்றவர்களை, தம்மை விட அறிவில் குறைந்தவர்கள், இழிவானவர்கள் என்று முடிவு செய்வதன் காரணத்தால் தான் அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தாமல், அனாவசியமாகக் கருதி, கேவலமாக நடத்தி இழிவு படுத்துகின்றனர்.

இதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பரிபூரண முஸ்லிம் யாரென்றால், எவரது நாவிலிருந்தும், கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்று இருக்கின்றார்களோ அவர் தான். (நூல்: புகாரி 10, 6484)

இதல்லாம் ஜாலிக்காக செய்திகன்றோம் இதில் என்ன தவறு என்று சிலர் போலி வியாக்கியானம் கொடுப்பார்கள். உண்மையில் அவர்கள் தான் தன்னை யாரும் ஏப்ரல் ஃபுல் ஆக்கி விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பார்கள்.

தன்னை யாரேனும் ஏப்ரல் ஃபுல் ஆக்கி விட்டால்அது நமக்கு அசிங்கம் இழிவு என்று நினைக்கும் இவர்கள் பிறரை ஏப்ரல் ஃபுல் ஆக்கும் போது அதை மறந்து விடுவது ஏன்?

ஏமாற்றாதீர்கள்! ஏமாறாதீர்கள்!!
நன்றி: தவ்ஹீத் ஜமாஅத்
Posted by Unknown
Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.