Friday, June 4
|
0
comments
Posted by
Unknown
|
|
|
||||||||||||||||
|
Wednesday, June 2
|
0
comments
![]() நிராகரிக்கப்பட்ட நேரடி சாட்சியங்கள் அஜ்மல் கஸாபிற்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டு 26/11 மும்பை தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இது இவ்வாறு தான் நடக்கும் என்பதை அனைவரும் அறிவர். ஆனால் மும்பை தாக்குதலுக்கு ஒரு மிகப்பெரிய சங்கிலித்தொடர் காரணமாக இருந்துள்ளது. அவை கண்டுபிடிக்கபடவில்லை. அந்த வழக்கில் சந்தேகத்திற்கிடமாக ஏராளமான முரண்பாடுகள் இருக்கின்றன. தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளல்ல, மாறாக யூதர்களே என்றும் அவர்கள் நரிமன் ஹவுசில் தங்கி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்துள்ளன. 26/11 அன்று லியோபோல்டு கஃபேயில் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட அனாமிகா குப்தா என்பவர் கோர்ட்டில் அளித்த சாட்சியத்தை காவல்துறை கண்டுகொல்லாததேன்?தீவிரவாதிகளின் அடையாள அணிவகுப்பிற்கு நேரடி சாட்சிகளை அழைக்காததேன்? என்று பலவித கேள்விகள் மக்களிடத்தில் எழுந்துள்ளன.கடல் வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் வந்திறங்கினர் என காவல்துறை சொல்ல, அனாமிகா குப்தா, அஜ்மல் கஸாபை தாக்குதல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே யூதர்களின் இருப்பிடத்தில் வைத்து பார்த்தேன் என்று சாட்சி கூறியுள்ளார். ஆனால் அதை போலீசார் கண்டுகொள்ளவே இல்லை. போலிஸ் மட்டுமல்ல, தொலைக்காட்சி சேனல்கள் கூட அவரது பேட்டியை ஒளிபரப்பவில்லை.மும்பையில் பியூட்டிசியனாக இருக்கும் அனாமிகா குப்தா, மும்பை தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக அஜ்மல் கஸாப் உட்பட நான்கு பேரை கொலாபா பகுதியிலுள்ள யூதர்களின் தலைமையகமான நரிமன் ஹவுசில் வைத்து பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார். நரிமன் ஹவுசும் தாக்குதலுக்கு உட்பட்டிருந்தது.தாக்குதலை நடத்தியது நரிமன் ஹவுஸ் தான் என்றும் அதுபற்றிய விசாரணையில் போலிஸ் கண்களை மூடிக்கொள்கிறது என்றும் அந்த விசாரணையில் என்னுடைய சாட்சியத்தை ஏன் ஏற்கவில்லை என்றும் அனாமிகா கேள்வி எழுப்பி உள்ளார். நரிமன் ஹவுசின் அடுத்து இருக்கும் கோளிவாடாவிலுள்ள ஆஸாபாய் கட்டிடத்தில்தான் அனாமிகா வசித்து வந்தார். அவரும் அவரது தோழிகளான ரசிகா உபாத்யாய், மீனாக்ஷி தத்தானி ஆகியோர் லியோபோல்டு கஃபேயின் தினசரி வாடிக்கையாளர்கள்.வழக்கம் போல 2008 நவம்பர் 26ம் தேதி இரவில் அனாமிகாவும் தோழிகளும் அங்கு பேசிக்கொண்டிருந்த வேளையில்தான் வெடிகுண்டு தாக்குதலும் துப்பாக்கிசூடும் நடைபெற்றது. அந்த தாக்குதலில் அனாமிகாவின் வயிற்றில் மூன்று புல்லட்டுகள் துளைத்தன. வெடிகுண்டுகளால் கால்களிலும் காயம் ஏற்ப்பட்டது. ரசிகாவின் இடது கையிலும் குண்டு பாய்ந்தது.வெடிகுண்டுகளால் சரிகாவின் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சைக்குப்பின் மறு வாழ்வு பெற்ற அனாமிகா, தான் மீண்டு வந்தது முதல் சில உண்மைகளை சொல்லி வருகிறார். ஆனால் போலிஸ் அதை சட்டை செய்யவில்லை. அதுமட்டுமல்ல நரிமன் ஹவுசில் தீவிரவாதிகளை கண்டேன் என்று வெளியில் சொல்லாதீர்கள் என்று உபதேசமும் செய்துள்ளது. நடந்த சம்பவத்தை அவரே கூறுவதை கேளுங்கள்... மும்பை தாக்குதல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அதிகாலை 1:30 மணிக்கு கூட்டாளிகளுடன் லியோபோல்டு கஃபேக்கு முன்பிளிருக்கும் பாண், சிகரெட் கடைக்கு போகும்போது நரிமன் ஹவுசில் இருந்து நான்கு பேர் மிகவும் அழகான பைக்கில் வந்தனர். அந்த விலையுயர்ந்த பைக்கின் அழகுதான் அதில் பயணம் செய்தவர்களை பார்க்க தூண்டியது. அவை சிவப்பும் கருப்பும் நிறமுள்ள BMW பைக்குகள்.நான் என்னுடைய கஸின் நடாசாவிடம் இந்த இளைஞர்கள் இங்கேயா தங்குகிறார்கள் என கேட்டபோது அவள் இருக்கலாம், எனக்கு தெரியாது என்றாள். அந்த இளைஞர்கள் பைக்கில் ஒரு ரவுண்டு அடித்து நேராக நரிமன் ஹவுஸ் சென்றார்கள். அதற்கு அடுத்த நாட்களிலும் அந்த பைக்குகளையும் அந்த நால்வரையும் பார்க்க முடிந்தது. அதில் ஒருவன் அஜ்மல் கஸாப். அவனை மிக அருகிலேயே பார்த்தேன். ஐ விட்னஸ் ரசிகா உபாத்யாய் : நாங்கள் அந்த தீவிரவாதிகளை தாக்குதல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே நரிமன் ஹவுசில் பார்த்தோம். 26/11 அன்று நாங்கள் லியோபோல்டு கஃபேயில் இருந்தோம். திடீரென எனக்கு பின்னால் இருந்த ஒருவன் எதையோ எறிந்தபோது அருகிலிருந்த ஒருவரிடம் என்னாச்சு என்று கேட்டேன். அவர் கட்டிடம் தீ பிடித்துவிட்டது என்றார். நான் ஏதோ குரூப் சண்டை நடக்கிறது என நினைத்து கொண்டேன். எனது உடலில் ஏராளமான காயம் ஏற்ப்பட்டது. நரிமன் இல்லத்திற்கு வந்த டிரக் : தாக்குதலுக்கு முந்தைய நாள் நாடு இரவில் லோடு ஏற்றப்பட ஒரு டிரக் யூதர்களின் இருப்பிடமான நரிமன் ஹவூசுக்கு வந்ததாகவும் அதில் ஆயுதங்கள் இருந்ததா என்பது தெரியவில்லை என்றும் அதன் எதிரிலுள்ள ரெக்ஸ் பேக்கரியின் உரிமையாளர் டாக்டர். குரேஷ் பி சொராபி குறிப்பிடுகிறார்.சம்பவத்தன்று இரவில் நரிமன் ஹவூசுக்கு லோடு கொண்டு வந்த டிரக் ரெக்ஸ் பேக்கரியின் பெயர் பலகையில் இடித்துவிட, பேக்கரி ஊழியர்களுக்கும் டிரக் டிரைவருக்கும் தகராறு ஏற்பட்டது. நரிமன் ஹவுசின் புரோகிதரான (ரப்பி) காபிரியேலின் மனைவி ரவிகா இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியுள்ளார். தாக்குதலுக்கு முந்தைய நாள் இரவில் நரிமன் ஹவூசுக்கு ஏராளமான கோழி இறைச்சி சப்ளை செய்யப்பட்டதாக தாஜ் சிக்கன் ஸ்டால் ஊழியர்கள் கூறியுள்ளனர். படகில் வந்த தீவிரவாதிகள் : தீவிரவாதிகள் படகில் வந்ததை கண்டதாக சொன்ன மீனவ பெண், போலீஸ் ஏற்பாடு செய்த தீவிரவாதிகளின் அடையாள அணிவகுப்பிற்க்குப்பின், படகில் வந்த கூட்டத்தில் கஸாப் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அன்று அவன் முடியை நீளமாக வைத்திருந்தான். கறுத்த டி சர்ட்டும் நீல நிற கார்கோ பேண்ட்டும் ஸ்போர்ட்ஸ் ஷூவும் அணிந்திருந்தான். அவர்களில் மிகவும் அழகான ஒருவன் இருந்தான். இரண்டு பக்கமும் கிராப் செய்து நடுவில் முடி வைத்திருந்தான். அந்த கூட்டத்தில் வயதான வெளிநாட்டினரும் இருந்தனர். சம்பவம் நடந்த அன்று லியோபோல்டு கஃபேயில் நாங்கள் உட்கார்ந்திருந்த மேசைக்கருகில் அந்த அழகிய வாலிபனை நான் பார்த்தேன். எதிரில் இருக்கும் சரிகாவை போட்டோ எடுப்பதுபோல் பாவனை செய்து அவனை போட்டோ எடுத்தேன். அந்த நேரத்தில்தான் எதிர்பாராத அந்த சம்பவம் நடந்தது.அந்த அழகிய வாலிபன் திடீரென கீழே குனிந்து தனது பேக்கிலிருந்து எதையோ எடுத்து அடுத்திருக்கும் பணம் செலுத்தும் கவுண்டரில் வீசினான். அவை வெடிகுண்டுகள். பின்னர் சரமாரியாக புல்லட்கள் பறந்து வந்தன. ஜெஜெ மருத்துவமனையில் மயக்கம் தெளிந்து எழுந்த போதுதான் உயிரோடு பிடிக்கப்பட்டது கஸாப் என்பதை அறிந்தேன். சம்பவம் நடந்த அன்று கடல்வழியாக 10 பேர் வந்தனர் என்று போலீஸ் கூறுவது உண்மையாக இருக்கலாம். ஆனால் அதில் கஸாப் மற்றும் லியோபோல்டு கஃபேயில் தாக்குதல் நடத்தியவனும் உண்டு என்பதை ஒருக்காலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் நரிமன் ஹவுசில் கஸாப் மற்றும் பைக்கில் வந்த மூவர் மட்டுமல்ல இன்னும் பலருண்டு என நான் அடித்துக்கூறுவேன். முப்பதுக்கு மேற்ப்பட்டோர் இதில் உண்டு. 25ம் தேதி காலையில் நரிமன் ஹவுசின் எதிர் வீட்டில் வசிக்கும் நஸ்லி கான் என்ற எனது தோழி வீட்டிற்கு சென்றபோது நரிமன் ஹவுசின் மொட்டை மாடியில் இளைஞர்கள் பலர் உடற்பயிற்சி செய்வதை பார்த்தேன். இஸ்ரேலியர்களை தவிர அங்கு வேறு நாட்டினர் செல்லமாட்டார்கள், ஆதலால் நாடு சுற்றிப்பார்க்க வந்த இஸ்ரேலிய இளைஞர்கள்களாக இருக்கலாம் என்று அப்பகுதியினர் கருதியுள்ளனர். STAR TV, NDTV, ZEE NEWS, TIMES OF INDIA, HINDUSTAN TIMES போன்றவற்றிற்கு இந்த உண்மைகளை நான் கூறியபோதும் அவர்கள் அதை ஒளிபரப்பவில்லை. ஏன் என கேட்டபோது நீங்கள் சொன்னதை நாங்கள் நம்புகிறோம், ஆனால் எங்களுடைய மேலிடம் அதை அனுமதிக்கவில்லை என்று சொன்னார்கள். ONE NEWS தொலைக்காட்சியில் இந்த உண்மைகளை வெளிப்படுத்தியவுடன் போலீஸ் வந்து என்னை விசாரித்தார்கள். எனினும் எதுவும் நடந்திடவில்லை. நவம்பரில் இரண்டாவது விசாரணை என்னிடம் நடந்தது.குற்றப்பிரிவின் அடிஷனல் போலீஸ் கமிஷனர் தேவன் பாரதியின் தலைமையில் நடந்த அந்த விசாரணையில் நான் இவற்றை சொன்னபோது, போலீஸ் ஏற்கனவே இது பாகிஸ்தானியரின் சதி என முடிவுசெய்துவிட்டதால் அதிகபிரசங்கித்தனமாக செய்திகளை சொல்லி போலிசை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று தேவன் பாரதி குறிப்பிட்டார்.பின்னர் எனக்கு மனநிலை சரியில்லை என்றும் இவர் விளம்பரத்திற்காக இவ்வாறு சொல்கிறார் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது. எனது தாய் உட்பட எனது குடும்பத்தினரை மிரட்டுகின்றனர். கஸாப், லியோபோல்டில் தாக்குதல் நடத்தியவன், பைக்கில் வந்தவர்கள் போன்ற தீவிரவாதிகளை எனக்கு தெரியும் என்றபோதும் தீவிரவாதிகளை அடையாளம் கட்டும் அணிவகுப்பிற்கு போலீஸ் என்னை அழைக்கவில்லை” என்றும் அனாமிகா குறிப்பிடுகிறார். அனாமிகா கூறிய செய்திகளிலிருந்து மும்பை தாக்குதல் இந்தியாவிர்க்குள்ளேயே திட்டமிட்டு நடத்தப்பட்டதாக தெரிகின்றது. திடீரென வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால் இத்தகைய தாக்குதலை நடத்த முடியாது. மும்பையை நன்றாக அறிந்தவர்களால்தான் இதை செய்யமுடியும் என்று சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.கஸாப் மற்றும் கூட்டாளிகள் அங்கேயே தங்கியிருந்து தாக்குதலுக்கு இடத்தை தேர்வு செய்துள்ளனர் என்பது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.அமெரிக்க, இஸ்ரேலின் இந்த அராஜகங்களை கண்டுப்பிடித்து உலகுக்கு சொல்ல மத்திய அரசு தயங்குகிறதா, இல்லை மத்திய அரசுக்கு தெரியாமலேயே காவல்துறை இதை செய்கின்றதா என்பதையும் கண்டறிய வேண்டும். இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கும் கார்கரே கொலைக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய பாஜகவின் கூற்றை இச்சம்பவங்கள் பொய்யாக்கி இரண்டும் மிக நெருங்கிய தொடர்பு கொண்டவை என்பதை சொல்கின்றன.உலக மக்களை தயவு தாட்சனியமின்றி கொன்று குவித்து உலகை அச்சுறுத்திவரும் இஸ்ரேலை கண்டு காங்கிரஸ் தொடை நடுங்கினாலும் அதன் மிரட்டலுக்கு பயப்படாமல் உண்மையை வெளிக்கொணருபவர் இருக்கவே செய்கின்றனர். அனாமிகா ஒரு வீரப்பெண்மணி என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் கார்கரே தற்செயலாக தாக்கப்படவில்லை, அவர் திட்டமிட்டு கொல்லப்பட்டதாகவே அறிய முடிகிறது. இந்தியாவில் குண்டு வெடிப்புகளை நடத்தி அப்பாவி மக்களை கொன்ற இந்துத்துவ சக்திகளை கண்டுபிடித்து உலகுக்கு சொன்ன கார்க்கரேயை கொன்று அந்த பயங்கரவாதிகளை காப்பாற்ற யூதக்குழு உதவி செய்ததா? அல்லது யூதக்குழுவுடன் இந்துத்துவ பயங்கரவாதிகளும் கூட்டு சேர்ந்து இந்த தாக்குதலை நடத்தினார்களா என்பது போக போகத்தான் தெரியும். http://www.youtube.com/watch?v=zSWwg-2Jlog செய்தி: தலையங்கம் - உணர்வு வார இதழ் (MAY 21 – 27, 2010) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)
Posted by
Unknown
Tuesday, June 1
|
0
comments
![]() அறிக்கையின் முக்கிய அம்சங்கள் மக்கள் தொகை (பக்கம் 13)முஸ்லீம்கள் – 13.4 % (2001-ஆம் கணக்கெடுப்பு படி) முஸ்லீம்களின் கல்வி அறிவு (பக்கம் 16,17) 1. முஸ்லீம்களில் எழுதபடிக்க தெரிந்தவர்கள் – 59.1 %அதாவது 40.9% முஸ்லீம்களுக்கு எழுதபடிக்க தெரியாது. 2. முஸ்லீம்களில் 5 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் – 65.31% பேர் 3. முஸ்லீம்களில் 8-ஆம் வகுப்புவரை படித்தவர்கள் -15.14% (அதாவது 100-க்கு 85 பேர் 8-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்) 4. 10-ஆம் வகுப்பு வரை – 10.96% (அதாவது 100-க்கு 90 பேர் 10-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்) 5. 12-ஆம் வகுப்புவரை – 4.53% (அதாவது 100-க்கு 95 பேர் 12-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்) 6. பட்டம் (டிகிரி) படித்தவர்கள் – 3.6% பேர் குடி இருப்புகள் : (பக்கம் 23) 1. முஸ்லீம்களில் 34.63% பேர் குடிதண்ணீர், கழிப்பிட வசதி இல்லாத குடிசைகளில் வாழ்கின்றனர். 2. முஸ்லீம்களில் 41.2% பேர் அடிப்படைகட்டமைப்பு இல்லாத வீடுகளில் வாழ்கின்றனர். 3. மீதமுள்ள 23.76% முஸ்லீம்கள் பேர் மட்டுமே வசிக்கதகுந்த வீடுகளில்வாழ்கின்றனர். வறுமை கோட்டிற்க்குகீழ் வாழ்பவர்கள்: (பக்கம் 25) இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரைவிடவும் முஸ்லீம்கள்தான் அதிகம் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர். 1. நகர்புரத்தில் 27.22 % முஸ்லீம்கள் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்2. கிராமபுரத்தில் 36.92% முஸ்லீம்கள் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்அதாவது 100-க்கு 36 முஸ்லீம்கள் உணவு உடை, இருப்பிடம் இல்லாமல் வாழ தகுதி அற்ற நிலையில் வாழ்கின்றனர். வறுமைகோடு என்றால் என்ன ? அரசு 13 காரணிகளை வைத்துள்ளது இதில் மிகவும் பின் தங்கி இருப்பவர்கள் வறுமைகோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களாக கருதபடுவர்.ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையில் பக்கம் 69, 185 முதல் 188 வரை வறுமைகோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களின் தகுதிகள் வரையருக்கப்பட்டுள்ளன. இரண்டு ஆடைகளுக்கும் குறைவாக வைத்துள்ளவர்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு உண்பவர்கள். படிப்பறிவு இல்லாதவர்கள், நிலையான தங்குமிடம் இல்லாதவர்கள், வெட்ட வெளியில் கழிப்பிடம் செல்பவர்கள். வீட்டு உபகரணக்கள் (டிவி, ரேடியோ, மின் விசிறி, குக்கர் போன்றவை) இல்லாதவர்கள், (நிரந்தர வருமானம் இல்லாமல்) கூலி வேலை செய்பவர்கள், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாதவர்கள். இப்படி வாழ்பவர்களை அரசு வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ளவர்கள் என குறிப்பிடுகின்றது. இந்தியாவில் முஸ்லீம்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மேலே குறிப்பிடப்பட்ட நிலையில் (வறுமை கோட்டிற்க்கு கீழ்) வாழ்கின்றன்ர். தமிழகத்தில் 5 -இல் ஒரு முஸ்லீம் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றார் மாதவருமானம் (பக்கம் 30)ஒட்டுமொத்தமாக முஸ்லீம்களின் சராசரி மாத வருமானம் ரூ.1832.20 (ஒரு குடும்பத்திற்கு). பரிந்துரைகளில் சில : 1. இந்திய அரசியல் அமைப்புசட்டம் Article 16 (4) விதி -படி சிறுபாண்மையினருக்கு 15% இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். அதில் 10% முஸ்லீம்களுக்கு கொடுக்கவேண்டும். ஏனெனில் முஸ்லீம்கள் ஒட்டுமொத்த சிறுபான்மை ஜனதொகையில் 73% உள்ளனர். மீதமுள்ள 5 சதவீதம் பிற சிறுபாண்மை சமுதாயத்திற்க்கு கொடுக்கப்படவேண்டும். சில இடங்களில் 10% இடத்திற்க்கு முஸ்லீம்கள் கிடைக்கவில்லை என்றால் பிற சிறுபாண்மை சமுதாயத்திற்க்கு அந்த இடங்களை வழங்கவேண்டும்.(பெரும்பாண்மை சமுதாயத்திற்க்கு கொடுக்ககூடாது)- (பக்கம் 150,152) 2. கல்வி வேலைவாய்ப்பு மட்டும் அல்லாமல் அரசு அறிவிக்கும் திட்டங்களிலும் முஸ்லீம்களுக்கு 10% இட ஒதுக்கீடும். பிற சிறுபாண்மை மக்களுக்கு 5% இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும். (பக்கம் 152) 3. SC/ST-க்கு இருப்பது போல் முஸ்லீம்களுக்கும் கல்வி கற்பதர்க்கான Eligibility criteria தகுதிகள் (மதிப்பெண்) தளர்ந்தபட வேண்டும். விண்னப்பங்களின் விலையும் குறைக்கப்பட வேண்டும். கல்வி கட்டணமும் குறைக்கப்பட வேண்டும். 4. முஸ்லீம்களுக்காக அனைத்து மாநிலம், யூனியன் பிரதேசங்களிலும் பல்கலை கழங்களை அரசு நிறுவ வேண்டும். மேலும் இந்த பல்கலை கழங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி முஸ்லீம் மாணவர்களின் நலனுக்காக செயல்படும் பல்கலை கழகங்களாக மாற்றப்பட வேண்டும். (பக்கம் 151) 5. அங்கன்வாடிகள், நொவோதியா விதியாலயாஸ் (பள்ளிகள்) போன்றவை முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஏற்படுத்தபட வேண்டும். முஸ்லீம்களின் குழைந்தைகளை இந்த பள்ளிகளுக்கு அனுப்ப முஸ்லீம் குடும்பங்களுக்கு மானியம் வழங்க வேண்டும். (பக்கம் 151) 6. முஸ்லீம்/கிருத்துவர்களாக மதம் மாறும் தலித்துகளுக்கு அவர்களின் சலுகை மீண்டும் கிடைக்கபெற வழிவகை செய்ய வேண்டும் (பக்கம் 153). ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின் இரண்டாவது வால்யூமில் (பகுதி) பிற (அரசு மற்றும் அரசு சார) அமைப்புகள் நடத்திய ஆய்வுகளின் பரிந்துரைகளும் உள்ளது. அதில் தேர்ந்தெடுத சில பரிந்துரைகளில் தனது அறிக்கையில் குறிப்பிடுகின்றார். அந்த பரிந்துரைகளில் சில : 1. கல்வியில் பின் தங்கி உள்ள முஸ்லீம் மாணவர்களுக்கு வட்டி இல்லா கடன் உதவி வழங்க வேண்டும். (பக்கம் 48 வால்யூம் 2) 2. சொந்த வீடு இல்லாத ஏழை முஸ்லீம்களுக்கு இலவசமாக வீடு கட்டி தரவேண்டும். (பக்கம் 49 வால்யூம் 2) 3. (பொருளாதாரத்தில் பின் தங்கிய) முஸ்லீம்களுக்கு சமையல் கேஸ் இனைப்பு மிக குறைந்தவிலையில் வழங்கபட வேண்டும். (பக்கம் 49 வால்யூம் 2) 4. அரசின் நலதிட்ட உதவிகள் பெருவதில் முஸ்லீம்கள் பெருமளவில் பின் தங்கிஉள்ளனர், எனவே அரசின் நலதிட்ட உதவிகள் பற்றி முஸ்லீம்களுக்கு அரசு விளிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நல திட்ட திட்ட உதவிகள் முஸ்லீம்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். (பக்கம் 48 வால்யூம் 2) முஸ்லீம்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்க்கு இந்த பரிந்துரைகள் கட்டாயம் நடைமுறைபடுத்தபடவேண்டும். இந்த அறிக்கை அமல்படுத்தபட்டால் IAS,IPS, IFS , உள்துறை, உளவுதுறை என எல்லா மத்திய அரசு பணிகளிளும் 10-ல் ஒரு முஸ்லீம் இருக்க முடியும். காலத்தே பயிர் செய் எனபதுபோல் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி நாம் நமது குரலை அரசுக்கு உரக்க தெரிவிக்கவேண்டும். இந்திய அளவில் முஸ்லீம்களின் உரிமையை மீட்க நடக்கும் முதல் மாநாடாகவும் முன்னோடி மாநாடாகவும் திகழ தலைநகர் சென்னையை நோக்கி திரண்டு வருங்கள். இட ஒதுக்கீட்டால் பெரிதும் பயன் பெருவது மாணவர்கள் தான், எனவே மாணவர்களே! வருங்காலாத்தை வளமாக்கிட காலம் தாழ்த்தாமல் களப்பணியை ஆற்றிட களம் இறங்குங்கள். இன்றே ஆயத்தமாகுங்கள். மாநாட்டு வரலாற்றில் சரித்திரம் படைக்க மாநாட்டை மக்கள் வெள்ளம் ஆக்குவோம் இன்ஷா அல்லாஹ். தொகுப்பு:TNTJ மாணவர் அணி
Posted by
Unknown
Labels:
இடஒதுக்கீடு
![]() தீவுத்திடலை நோக்கி அணி அணியாய்..இந்திய மண்ணை நேசித்து இந்தியாவுடன் தங்கிக் கொண்ட முஸ்லீம்கள் இந்திய அரசாங்கத்தால் கை விடப்பட்டக் காரணத்தால் பொருளாதாரத்தில் நலிவடைந்து வாழ்வதற்கு வழி தெரியாமல் அதிகமானோர் தங்களை கூலி வேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டு தங்களின் பிள்ளைகளையும் (வறுமையின் காரணத்தால் கல்வியைக் கொடுக்க முடியாமல்) பிஞ்சு வயதிலேயே கூலி வேலைகளில் ஈடுபடுத்தினர்.வீடு வாசல்கள், நில புலன்கள், ஆபரணங்கள் போன்றவற்றில் சிறிதை வைத்திருந்தவர்கள் அவற்றை விற்று அரபு நாடுகளுக்கு தங்களுடைய பிள்ளைகளை பயணம் அனுப்பி வைத்தனர். அதற்கும் வசதி பெறாதவர்கள் இஸ்லாம் தடை செய்த வட்டிக்குப் பணம் வாங்கியேனும் பயணம் அனுப்பி வைத்தனர். அவ்வாறு சென்றவர்களில் ( வறுமையின் காரணத்தால் படிக்க முடியாதவர்கள் பிரபல கம்பெனிகளில் உயர் பொறுப்புகளில் அமர முடியாமல் ) அங்கும் குறைவான சம்பளத்தில் இதே கூலி வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இன்னும் ஒப்பந்தப் படிவத்தில் குறிப்பிடப்பட்ட வேலையும், சம்பளமும் கொடுக்காமல் குறைவான சம்பளம் கொடுத்து, தங்குமிட வசதியும் முறையாக செய்து கொடுக்காமல் அலைக்கழிக்கப்பட்டனர். இதனால் பலர் ஒப்பந்த தாரரிடமிருந்து தலைமறைவாகி கூடுதல் சம்பளத்திற்கு கஸ்டமான வேலைகளை செய்து வந்தனர், உரிய அனுமதி இல்லாமல் மறைந்து வேலை செய்து கொண்டிருக்கும்பொழுது லேபர் செக்கிங்கில் மாட்டிக் கொள்பவர்களை அன்று உடுத்திய அழுக்கு உடையுடன் சிறையில் அடைக்கப்பட்டு அதேக் கோலத்தில் விமானத்தில் ஏற்றி ஊருக்கு அனுப்பும் பரிதாப நிலை. இதுப் போன்ற குறைகைளை தீர்க்க திராணியற்ற நிலையில் பாஸ்போர்ட் ரினீவலுக்காக மட்டும் ( அந்நிய செலாவனிக்காக ) வளைகுடாவில் இயங்கும் இந்தியத் தூதரகம். பிறந்த நாட்டிலும் நிம்மதியாக வாழ முடியாமல், பிழைப்பு தேடிச் சென்ற நாட்டிலும் நிம்மதியாகப் பொருளீட்ட முடியாமல் அலைக்கழிக்கப்படும் அவல நிலையை கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும், அன்றைய தவ்ஹீத் அறிஞர்களால் வழிநடத்தப்பட்ட தமுமுகவிற்கு தகவல்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தது இன்னும் அவர்களின் அவல நிலையை வீடியோவில் பதிவு செய்தும் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் அன்றைய தவ்ஹீத் அறிஞர்களால் வழி நடத்தப்பட்ட தமுமுகவின் சமுதாய, மற்றும் மார்க்க விளக்கக் கூட்டங்கள், அதன் அமைப்பாளர் அறிஞர் பிஜே முதல் அனைத்து தவ்ஹீத் அறிஞர்கள் வரை, மாநில, மாவட்ட சிறப்புப் பேச்சாளர்கள் முதல் கிளைகளின் பயிற்சிப் பேச்சாளர்கள் வரை இடைவிடாது இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தினர். மக்கள் சந்திக்கும் அனைத்து வழிகளிலும்.சமுதாயப் பிரச்சனைகளுக்கு பழநிபாபா போன்றவர்களையும், மார்க்க நிகழ்ச்சிகளுக்கு மௌலவிகள் என்றும் தரம் பிரித்து நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில், இரண்டுக்கும் தகுதியானவர்கள் மார்க்க அறிஞர்களே என்ற நிலையை உருவாக்கி அரசியல், மற்றும் ஆன்மீக மேடைகளில் இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தினர். ஜூம்ஆ பள்ளிவாசல்களின் குத்பா உரையில் குர்ஆன் - ஹதீஸ் வசனங்களை மட்டும் எழுதி வைத்து (உரையாக அல்லாமல்) வாசித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தவ்ஹீத் பள்ளிவாசல்களில் ஜூம்ஆ உரையில் வீரியத்துடன் இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசங்கம் நடத்தினர். பாட்டு கச்சேரிகள், கரகாட்டங்கள், போன்ற பொழுது போக்கு அம்சங்களுக்காக மட்டும் மக்கள் சந்திக்கும் தெருமுணைகளை பயன்படுத்தி வந்த காலகட்டத்தில் அதை சமுதாய, மற்றும் மார்க்க உபதேசங்களுக்காக மாற்றியமைத்து அதிலும் இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தினர். ![]() இவ்வாறாக • அரசியல் மேடைகள், • ஆன்மீக மேடைகள்,• தெருமுணைக் கூட்டங்கள், • ஜூம்ஆ உரைகள், என நகர்புறம் முதல், கிராமப் புறம் வரை உள்ள மக்கள் மத்தியில் அரசிடமிருந்து இடஒதுக்கீடு பெறுவதன் அவசியம் குறித்தத் தகவல்கள் தெரிந்து கொள்ளும் அளவுக்கு பிரச்சாரம் சென்றடைந்தப் பின்னர் அவர்களைத் திரட்டி தமிழகம் அதுவரை கண்டிராத வீரியமிக்கப் போராட்டங்களை, பேரணிகளை நடத்தினர். தீவிரவாதிகள் என்ற முத்திரைக் குத்தப்பட்ட முஸ்லீம்கள் பல லட்சத்திற்கு மேல் ஓரிடத்தில் குழுமிய பொழுதும், வாழ்வுரிமை கோரும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திக்கொண்டு சாரை, சாரையாக அணிவகுத்து சென்றுக் கொண்டிருந்த போதிலும் பாதுகாப்புக்காக நிருத்தப்பட்ட போலீஸார்கள் ஓரமாக அமர்ந்து சஞ்சிகைகள் வாசித்துக் கொண்டும், தலைமைக்கு கட்டுப்பட்ட மக்களின் அழகிய வரிசைகளுடன் கூடிய அமைதியான பேரணிகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் நின்றது இந்திய வரலாற்றில் இந்தக் கூட்டங்களில் தான் முதல் முறை.சில சமுதாயத்தவர்கள் நடத்தும் பேரணிகளின் போது இன்னொரு சமுதாயத்தவர்கள் அவ்வழியே நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு பதஸ்டம் நிலவும் இக்கால கட்டத்தில் முஸ்லீம்கள் நடத்தும் இந்தக் கூட்டங்களில், பேரணிகளில் தான் ஹிந்து மக்கள் சாலை ஒரங்களில் தண்ணீர் குடங்களுடன் நின்று நீண்டப் பேரணியில் ஜீவாதார உரிமை கோஷங்களை எழுப்பிக் கொண்டுச் செல்லும் முஸ்லீம்களுக்கு கணிவுடன் நீர் புகட்டி தாகம் தீர்க்கச் செய்து சகோதரத்துவத்திற்கு முத்திரைப் பதித்த சம்பவமும் இந்திய வரலாற்றில் இந்தப் பேரணிகளில் தான் முதன் முறையாக நடந்தது,இன்னும் இதுப் போன்ற அமைதியானப் பேரணிகளை, மாநாடுகளை ஜனநாயக ரீதியில் அதிகமதிகம் நடத்துவதால்,நாங்கள், • மாவேயிஸ்டுகளைப் போல் மறைந்திருந்து அப்பாவிகளைத் தாக்குபவர்கள் அல்ல, • மரங்களை வெட்டி சாய்த்து மக்களுக்கு இடையூறு கொடுப்பவர்கள் அல்ல, • வாகணங்களை அடித்து நொறுக்கி பொதுச் சொத்துக்களுக்;கு சேதம் விளைவிப்பவர்கள் அல்ல, எங்கள் வாழ்வுரிமைக்காக அரசு அனுமதித்த வழியில் அமைதியாகப் போராடும் மக்கள் என்பதை ஆட்சியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் உணர்த்தும் வாய்ப்பு இது, அரசின் மீது விரக்தி அடைந்து ஆயுதமேந்தும் ஒரு சிலரும் கூட இழந்த உரிமைகளை வென்றெடுக்க இது தான் சிறந்த வழி என்று நம்முடன் இணைந்துப் போராடும் நற்குணமுடையவர்களாக மாறுவதற்கும் இது போன்ற கூட்டங்கள், பேரணிகள் வாய்ப்பாக அமைந்து விடும். 3 ½ சதவிகிம்.• 1999ல் முதன் முதலாக மூன்று லட்சம் மக்களைத் திரட்டி வாழ்வுரிமைக் கோரி மெரீனா கடற்கரையில் குழுமச் செய்தனர். அதுவரை முஸ்லீம்களின் இதுப்போன்ற பிரம்மான்டமானக் கூட்டத்தை கண்டிராத முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மக்கள் திரளை நோக்கி கடந்த காலத்தில் பிஜேபியுடன் கூட்டு சேர்ந்து முஸ்லீம்களின் கோரிக்கைகளை புறக்கணித்து துரோகம் இழைத்ததற்காக மன்னிப்புக் கேட்டார்.( அதற்குப் பிறகு வந்த அவரது ஆட்சியில் தான் முதன் முதலாக முஸ்லீம்களின் இடஒதுக்கீட்டிற்காக கமிஷன் அமைக்கப்பட்டது ) • அதற்கடுத்து 2004ல் கூட்டப்பட்ட பிரம்மான்டமானப் பேரணி தஞ்சையைத் திணறடித்து, திலகர் திடலை திக்கு முக்காடச் செய்தது. இதன் பின்னர் தமுமுகவிலிருந்து தனிப்பொழிவுடன் வுNவுது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உருவானப் பின்னர் அதன் மாநிலத் தலைவராகிய அறிஞர் பி.ஜைனுல் ஆப்தீன் உலவி அவர்கள் அமீரகத்திற்கு வரவழைக்கப்பட்டு தமிழர்கள் தங்கி இருக்கக்கூடிய பல கேம்புகளுக்கு அழைத்துச் சென்று மக்கள் படும் அவஸ்தையை நேரடியாகக் கண்டறிந்து பிறந்த நாட்டில் அரசுப் பணிகளில், மற்றும் கல்வியில் இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து கடந்த காலங்களை விட கூடுதல் மக்களைத் திரட்டி இன்னும் வீரியமிக்கப் போராட்டங்களை நடத்த திட்டமிட்டு ததஜ வின் செயல் வீரர்கள் முடுக்கி விடப்பட்டனர்;.''குடந்தை குலுங்கட்டும்'' இடஒதுக்கிடுப் பெறுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மீண்டும் முடுக்கி விடப்பட்டு 2006ல் குடந்தையில் குழுமியது வரலாறுப் படைத்த மக்கள் கூட்டம். இதன் பின்னரே அதிமுக ஆட்சியின் இறுதி கட்டத்தில் முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு குறித்து அறியும் கமிஷன் அமைக்கப்பட்டு, கமிஷனும் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. ''தொடர் முழக்கப் போராட்டங்கள்'' அதிமுக அரசு அஸ்தமித்து திமுக அரசு உதயமானதும் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட கமிஷன் அறிக்கையையும் திமுகவினர் அஸ்தமிக்கச் செய்தனர். அதனால் மீண்டும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இடஒதுக்கீடு கோரும் தொடர் முழக்கப் போராட்டங்களை நடத்த தலைமை அறிவித்தது.தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எத்திசைத் திரும்பினாலும் போராட்டம் இது போராட்டம், TNTJ நடத்தும் போராட்டம், ஓய மாட்டோம் உறங்க மாட்டோம்,இடஒதுக்கீடுப் பெறும் வரை, ஓய மாட்டோம் உறங்க மாட்டோம், எனும் கோஷங்களை பச்சிளம் குழந்தைகளை இடுப்பிலும், தோளிலும் சுமந்த பெண்டிர் முதல் வயோதிகர் வரை எழுப்பிய ஜீவாதாரக் கோஷம் விண்ணைப் பிளந்து சிறுபான்மைக் காவலர் கலைஞரின் செவிப்பறையைக் கிழித்தது. கலைஞரின் கல் நெஞ்சில் கசிவு ஏற்பட்டு மூன்றரை சதவிகிதம் ( குறைவு தான் என்றாலும் ஒன்றுமில்லாமல் இருந்ததற்கு ஓரளவு ஆறுதல் அளிக்கும் ) இடஒதுக்கீட்டை வழங்கினார் அல்லாஹ்விற்கேப் புகழ் அனைத்தும். ஜூலை 4சமீபத்தில் ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் கல்வி, மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் இந்தியாவில் முஸ்லீம்கள் மிகவும் பின் தங்கி இருக்கும் அவல நிலையை ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையில் 10 சதவிகிதம் மத்திய, மாநில அரசுப் பணிகளில், கல்வியில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்திருப்பதை மத்திய அரசு அலச்சியப்படுத்திடாமலும், காலம் தாழ்த்திடாமலும் அமுல் படுத்துவதற்காகவும் குறைந்த பட்சம் 15 லட்சம் முஸ்லீம்கள் சென்னை தீவுத் திடலில் ஜூலை 4 அன்று குழுமுவதற்காக கடந்த காலங்களில் ஜனநாயக ரீதியில் வரலாறுப் படைத்த கூட்டங்களைல் கூட்டிப் போராடி மூன்றரை சதவிகித இடஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்த தமிழகத்தின் மாபெரும் மக்கள் பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வுNவுது அழைப்பு விடுக்கிறது. • தீவுத்திடலை திணறடிக்க,• தீவுத்திடலில் அலை கடலென ஆர்ப்பரிக்க,• ஜூலை 4 க்கான பயண எற்பாடுகளை இன்றே செய்யத் தயாராகுங்கள். கல்வி, மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் பரிந்துரையை மத்திய அரசு அமுல் படுத்துவதற்கு பயண ஏற்பாடுகளுடன் கருணையாளன் அல்லாஹ்விடம் பிரார்த்தனையை முற்படுத்துங்கள் ...உங்கள் இறைவன் தனது அருளை உங்களுக்குத் தாராளமாக அளிப்பான். உங்கள் பணியை எளிதாக்குவான்....திருக்குர்ஆன் 18:16கல்வி, மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில், இந்திய முஸ்லீம்கள் 10 சதவிகித இடஒதுக்கீட்டையும், அரசின் நலத் திட்டங்களையும் இன்ஷா அல்லாஹ் அடைந்தால் மட்டுமே வறுமைக் கோட்டைத் தாண்ட முடியும். இல்லை என்றால் வேறெந்த வழிகளிலும்,• வெளி நாட்டில் கை ஏந்தும் வேதனையை, • எழுதப் படிக்கத் தெரியாத அவல நிலையை, • ஒரு வேளை உணவையும், இரண்டு ஆடைகளையும் பெற முடியாத தரித்திர நிலையை, • குடி தண்ணீர் மற்றும் கழிப்பிட வசதிப் பெற முடியாத வறிய நிலையை, மாற்ற முடியாது. وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَநன்மையை ஏவிஇ தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். நன்றி: ஏ.எம்.பாரூக்
Posted by
Unknown
Labels:
போராட்டம்
300 years old Mosque reopened After 20 years Jaffna Grand Mosque reopened today Friday with jummah prayer the jaffna Grand Mosque was Built in 1713 during the Dutch period in Jaffna Muslim College Road, this mosque was abandoned in October 1990 as the LTTE drove the Muslims away from the Northern Province. There are more than 20 Mosques in Jaffna Although the Jaffna Peninsula was recaptured by the security forces in December 1995, the majority of Muslims driven away were reluctant to resettle there as the LTTE was active in other parts of the North and East. After the LTTE leadership was decimated by the security forces last year, Muslims started to resettle in their original places in the city and several mosques about 10 Mosques including the Grand Mosque were renovated Accordingly the Grand Mosque the the Grand Mosque opened today Friday- with a special jummah sermon by As-Sheik M.J. Abdul Halik. யாழ்ப்பாணம் பெரிய பள்ளி- The Jaffna Grand Mosque மீண்டும் 20வருடங்கலுக்கு பின்னர் திறந்துவைக்கப்பட்டு நிகழ்சிகள் நடைபெறுகின்றது என்று எமது யாழ் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர் இந்தப் பள்ளிவாசல் தற்பொழுது முழுமையாக புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளதுடன் சுமார் 3000 முதல் 4000 வரையிலான முஸ்லிம்கள் தொழக்கூடிய .1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிகள் புலிகளினால் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், இந்த மஸ்ஜிதும் யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஏனைய 20 மஸ்ஜிதுகளும் கைவிடப்பட்டிருந்தது. தற்போது மஸ்ஜிதுகள் ஒன்றன் பின் ஒன்றாக மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது இன்றைய நிகழ்ச்சியில் மௌலவி அப்துல் ஹாலிக் ஜும்மாஹ் குத்பாவை நிகழ்த்தியுள்ளார் , யாழ்ப்பாணம் மற்றும் பிறமாவட்ட ஆலிம்கள் மற்றும் பொது மக்கள் பலர் இதில் கலந்துகொண்டுதுள்ளனர்.போர்த்துகீசர் காலத்தில் போத்துக்கீசர்கள் யாழ்பாணத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க சர்வதேச வியாபாரிகளாக முஸ்லிம்களை கண்டனர் கொழும்பு துறை பகுதியில் இருத்த முஸ்லிம்களில் அணைத்து கட்டிடங்களும் போத்துக்கீசர்களால் தகர்க்கபட்டது அதன் போது முஸ்லிம்களின் குடி இருப்புகள் , மஸ்ஜிதுகள் இறங்கு துறைகள் ,பண்டசாலைகள் , வியாபார கப்பல் என்பனவும் இவர்களால் அழிக்கப்பட்டதுடன் முஸ்லிம்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேற்றபட்டனர் பின்னர் மீண்டும் யாழ்ப்பாண முஸ்லிங்கள் தற்போது இருக்கும் முஸ்லிம் பகுதியில் ஒல்லாந்தர் (ஹாலந்த்) காலத்தில் 1713ல் மஸ்ஜித்தை நிர்மாணித்தனர் என்பது குறிபிடதக்கது பல்லவர் கால சிற்பத்தை ஒத்ததாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் பள்ளி 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததும் மிகப்பெரியதுமாகும்.ஒற்றுமையையும், சமாதானத்தையும் வலியுறுத்தி முதலாவது ஜும்ஆப் பிரசங்கத்தை கொழும்பு பெரிய மர்க்கஸ், ரஷாதிய்யா அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மெளலவி எம். ஜே. அப்துல் ஹாலிக் நிகழ்த்தியுள்ளார். பெண்களுக்கான விசேட பயான் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அஸர் தொழு கையைத் தொடர்ந்து உலமாக்களுடனான ஆலோசனைக் கூட்டமும் நடைபெறவுள்ளது.முஸ்லிம் கல்லூரி வீதியில் அமையப்பட்டுள்ள இந்தப் பள்ளிவாசலுக்குட்பட்ட பகுதியில் முஸ்லிம்கள் மீண்டும் மீளக்குடியமர்ந்ததையடுத்தே இந்த மஸ்ஜித் புனரமைக்கப்பட்டுள்ளது. நன்றி - lankamuslim
Posted by
Unknown
Labels:
மஸ்ஜித்
அல்லாஹ்வின் திருப்பெயரால்.... அஸ்ஸலாமு அலைக்கும், அனைத்து முஸ்லிம்கள் கவனத்திற்கு அரசு பணியில் 3.5 சதவிகிதம் முஸ்லிம்களின் கோட்டா நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை. படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவகத்தில் உடனடியாக பதிவு செய்ய சொல்லவும். உங்களுக்கு தெரிந்த அனைத்து படித்த முஸ்லிம்களுக்கு தெரியபடுத்தவும். (பத்திரிக்கைகள் மற்றும் செல் மெசேஜ் மற்றும் டிவி மீடியா, இன்டர்நெட், வெப் சைட் மூலம் இந்த செய்தியை தெரியப்படுந்துங்கள்)அல்லாஹ் நாம் அனைவர் மீதும் அருள்புரிவான் !
Posted by
Unknown
Labels:
இடஒதுக்கீடு
Sunday, May 23
|
0
comments
அர்த்தமுள்ள இஸ்லாம் - நூல்கள் PDF வடிவில்இங்குள்ள இஸ்லாமிய நூல்களை PDF வடிவில் தரவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.![]() இஸ்லாத்தை தெரிந்து கொள்ளுங்கள் : download
இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் : download
துஆக்கள் : download
ஹஜ்ஜ் வும்ரா சட்டங்கள் download
இறுதி நாள் : download
இஸ்லாமிய பெண்ணுக்கு : download
முஸ்லிமின் வழிமுறை : download
ஜக்காத் : download
மன்னிப்பே இல்லாத மாபெரும் பாவம் : download
புனிதபயணம் : download
நபிகள் நாயகம் : download
நோன்பின் சட்டங்கள் : download
திருமணத்தின் சட்டங்கள் : download
தூய்மையும் தொழுகையும் : download
வும்ரவின் சட்டங்கள் : download
வுனவுகளின் சட்டங்கள் : download
நோயாளிகளின் தொழுகை : index part1 , download part2
குறிப்பு : கீழ்காணும் நூல்களுக்கு இந்த font ஐ download செய்யவும் --> Singari font அதை contolpanel->fonts என்ற கோப்பில் சேமிக்கவும் ...
Posted by
Unknown
Labels:
இஸ்லாமிய நூல்கள்
Monday, May 17
|
0
comments
![]() மும்பை தாக்குதலுக்கு கசாப் மட்டுமே காரணமா என்ற ரீதியில் வினவு கட்டுரை அமைத்து இருக்கின்றது ..........பழைய ஆறு கட்டுரைகளை மீள் பதிவு செய்துள்ளது .இப்பொழுது அலறும் லதா மங்கேஷ்கர் மற்றும் ஊடகங்கள் 92 இனக்கலவரம் பொழுது அழுக வில்லையே . ஏன் தாஜ் ஹோட்டல் என்றால் ஒரு நீதி சராசரி மக்கள் என்றால் ஊடகங்களுக்கு ஒரு நீதியா. மேலும் குஜராத் கலவரத்திற்கு காரணமான மோடியை ஏன் தூக்கில் போடவில்லை , பாபர் மசூதி இடிப்பை செய்த அத்வானியை என்ன செய்தார்கள் அது எல்லாம் தீவிரவாதம் இல்லையா என்ற கோணத்தில் பல அரசியல் விடயங்களை முன்வைக்கிறது கட்டுரைகள் .சரி தவறு என்று ஒரு புறம் இருந்தாலும் விவாதித்தால் ஆழமாய் போனால் நமக்கே சில விடயங்கள் புரியும் என்பதே உண்மை ஆர்வமுள்ளவர்கள் வினாவில் விவாதியுங்கள் . என்னை பொறுத்த வரை பக்கத்துக்கு ஊரான விதர்பா என்னும் ஊரில் கடந்த 20 வருடங்களாய் லட்சக்கணக்கான விவசாயிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது எல்லாம் இந்த ஊடகங்கள் என்ன செய்தன . தாஜ் ஹோட்டல் என்ற ஒரே காரணம் முதலாளிகள் கூடும் இடம் என்பதால் இந்த இடத்திற்கு இவ்வளவு மரியாதையா .. கசாப் மட்டுமே இதை செய்திருப்பாரா , மகேஷ் படத் மகனின் பெயர் அடிப்பட்டதே அது என்ன ஆச்சு ????? ஏன் மும்பை குண்டு வெடிப்புகளில் சஞ்சய் தத் பெயர் அடிப்பட்டதே என்ன ஆச்சு ???? கடை நிலையில் இருக்கும் தீவிரவாதி மாட்டுமே கண்ணில் படுவாரா. சரி இந்தியா இலங்கையில் என்ன பண்ணி கொண்டிருக்கிறது அது தீவிரவாதம் இல்லையா ???? இந்தியாவிற்கு ஏன் இந்த ஜனநாயக வேடம் . சரி மும்பையில் முஸ்லிம்கள் பாதுக்காப்பாய் வாழத்தான் முடிகிறதா???? இதை எல்லாம் ஆராய்ந்து விட்டு தீவிரவாதம் என்னும் விடயத்திற்குள் செல்ல வேண்டும். உண்மையிலேயே தீவிரவாதிகள் யார் , அமெரிக்க ஈராக்கிலும் ஆப்கானிலும் செய்ததே அது தீவிரவாதம் இல்லையா????? ஒசாமாவை ரஷ்யாவை எதிப்பதற்க்காய் வளர்த்தது அமெரிக்க இது உலக வரலாறு...எது தீவிரவாதம் நாமெல்லாம் தேசியம் என்னும் மாயையில் இருக்கிறோமா ??? ஏன் இந்த விடயத்தை மட்டும் பற்றி எழுதும் ஊடகங்கள் விதர்பா என்னும் விடயத்தை விட்டுவிட்டார்கள் ????தாஜ் ஹோடேலில் உயிர் என்றால் அது நாட்டை உலுக்கும் பிரச்சனை என்று சித்தரிக்க படுகிறதா ..... மேலும்:http://www.vinavu.com/2010/05/06/kasab/
Posted by
Unknown
Saturday, May 15
|
1 comments
கல்வியை தொடரமுடியாமல் வசதியற்ற நிலையில் உள்ள மாணவ - மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் ![]() 1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445 2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 52530 3. சீதக்காதி அறக்கட்டளை 688 , அண்ணா சாலை சென்னை - 06 4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன் 688 , அண்ணா சாலை சென்னை - 06 5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்) 6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட் ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை சென்னை - 34 7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை சென்னை - 34 8. மெஜெஸ்டிக் பவுண்டேசன் 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை சென்னை - 02 9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட் ஜபார்ஷா தெரு, திருச்சி. 10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை சென்னை - 03 11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட் டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு அண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564 12. அஸ்மா காசிம் அறக்கட்டளை மாண்டியத் சாலை எழும்பூர் - சென்னை – 08 13. ராஜகிரி பைத்துல்மால் கீழத் தெரு ராஜகிரி - 614 207 14. டாம்கோ 807 - அண்ணா சாலை 5 வது சாலை சென்னை 15. ஹாஜி. அஹமது மீரான் Managing Director Professional Courier’s 22. மகாராஜா சூர்யா ராவ் ரோடு ஆழ்வார்பேட்டை - சென்னை – 18 16. மியாசி புதுக் கல்லூரி வளாகம் பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14 17. S I E T கே.பி. தாசன் சாலை தேனாம்பேட்டை சென்னை - 18 அத்துடன் கடந்த ஆண்டுகளாய் கல்வியை தொடர முடியாமல் வசதியற்ற நிலையில் உள்ள மாணவ - மணவிகளுக்கு ST Courier நிறுவனம் கல்விக்கு உதவி வருகிறது. முகவரி ST Courier 199, Hariyan Street, C.Pallavaram, Chennai - 600 043. Tamilnadu, India. TEL :91 44 22 666 666 TEL: 91 44 305 66 666 கல்வி உதவி சம்பந்தமாக தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் : jaffarkaan@gmail.com நன்றி : ராஜகிரி கஸ்ஸாலி மற்றும் ஹீஸைன் கனி
Posted by
Unknown
Labels:
உதவி
Wednesday, May 12
|
0
comments
ரியாத் : மக்காவிலிருக்கும் இறையில்லமான மஸ்ஜித்-அல்-ஹராம் பள்ளி மேலதிகமாக 5மில்லியன் பேர் தொழ வசதியாக இருக்கும் படி விரிவாக்கப்படும் எனத் தெரிகிறது . மக்காவிலுள்ள மஸ்ஜித் -அல்-ஹராம் பள்ளியின் புதிய விரிவாக்கத்திட்டத்திற்கு, இரு புனிதப் பள்ளிகளின் பணியாளரும் சவூதியின் அரசருமான மன்னர் அப்துல்லாஹ் ஆணையிட்டுள்ளார் இதன் மூலம் தற்போது மக்காவில் வழிபடுபவர்களைவிட மேலும் 5மில்லியன்முஸ்லிம்கள் தங்கி வழிபட வசதியானதாக இருக்கும் என்று மக்காவின் நகரத்தந்தை உஸாமா அல் -பர் கருத்துத் தெரிவித்துள்ளார் . “இது மக்காவின் புனிதப் பள்ளியின் மிகப் பெரும் மேம்பாட்டுத் திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டத்தில் மக்கா பள்ளியின் முகப்புத் தோற்றத்தையும் மாற்றக் கூடிய திட்டமும் அடங்கும் என்று அல்பர் கூறினார். இந்த விரிவாக்கம் மூலம் பள்ளியின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் மேலதிகமான முஸ்லிம்கள் தொழ அதிகமான இடவசதி கிடைக்கும் என்றும் கூறினார் . மன்னர் அப்துல்லாஹ் இந்த விரிவாக்கப் பணிக்காக ஆணை பிறப்பித்தார் .நகராட்சி மற்றும் ஊரகத்துறை அமைச்சர் இளவரசர் மிதேப், இத்திட்டத்தில் நடைபாதை சுரங்கங்கள் மற்றும் சேவை நிலையங்களும் இருக்கும் என்று கூறினார் . இந்த அரசாணை மக்கா பெரிய பள்ளியின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதியில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்தும் உத்தரவையும் உள்ளடக்கியுள்ளது. இதற்கென்று அமைக்கப்பட்ட விசேஷ குழுக்கள் இந்த நிலங்களின் விலை மதிப்பீடு செய்யத் துவங்கியுள்ளன என்றும் மிதேப் கூறினார் . “புதிய சுரங்க நடைபாதைகள் மூலம் பள்ளிவளாகத்தின் வடக்குப் பகுதியை இணைக்கும் கட்டுமானப் பணிகளும் இத்திட்டத்தின் ஓர் அங்கமாக இருக்கும் ” என்றும் அவர் மேலும் கூறினார் . இப்புனிதப் பள்ளியின் முதல் பெரிய விரிவாக்கப்பணி 1925ல் சவூதி அரேபியாவை நிறுவிய மன்னர் அப்துல் அஜீஸின் உத்தரவின்படி நிறைவேற்றப்பட்டது. 1989ல் அப்போதைய சவூதி மன்னர் ஃபஹத், மஸ்ஜித் அல் ஹராமின் மாபெரும் விரிவாக்கத்தைச் செயல்படுத்தி 1,52,000 சதுர மீட்டர் பரப்பளவிலிருந்த தொழும் இடத்தை 3,56,000 சதுர மீட்டராக அதிகரிக்கச் செய்தார் . ஷூரா எனும் ஆலோசனைக் குழு மேலதிகமான நிதி ஒதுக்கீடு மூலம் இரு புனிதபள்ளிகளின் தலைமைக்கு உதவி, அதன் மூலம் மேலும் சிறப்பான சேவைகளை புனித உம்ரா மற்றும் ஹஜ் காலத்தில் இப்பள்ளிக்கு வரும் ஹாஜிகளுக்கும் பயணிகளுக்கும் வழங்கவும் மேலும் இவ்வகையில் பயனுள்ள அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளவும் பரிந்துரைத்துள்ளது . செளதி மன்னர் அப்துல்லாஹ் அவர்களின், புனித மக்காவின் மஸ்ஜித் ஹராம் பள்ளியின் புதிய விரிவாக்கம் மொத்த விரிவாக்கமும் வந்த பின்னர் 5 மில்லியன் மக்கள் ஒரே நேரத்தில் தொழும் வசதி கிடைக்கும் .... மாஷா அல்லாஹ். நினைக்கவே ஆச்சரியம். வீடியோ பார்த்தால் தான் தெரியும். நன்றி:www.khair.ws
Posted by
Unknown
Labels:
சவூதி அரேபியா
|
Labels
FollowersLabels
Email Subscription
பிரபலம்
Popular Posts
பதிவிறக்கம்
.
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.
|
||||||||||||||||