தானே’நீ முறிந்ததுவிட்டால்...நிழல் மறையலாம் நினைவுகள் மறையுமா?

நான் பிறந்து வளர்ந்த மேல் பட்டாம் பாக்கதில் பாய் கடைஅருகில் ஒரு புளிய மரம் நிழல் பரப்பி நிற்கும். படிப்பு நாடி இடமும், பிழைப்பு தேடி புலமும் பெயர்ந்தாலும் எத்தனை மன அழுத்தத்திலும் அந்த புளிய மரம் சார்ந்த நினைவுகள் நெஞ்சில் பசுமையாக இன்றும் இருக்கிறது!
சிறு சிறு  நினைவுகள் சுகமானவை. 'அது ஒரு காலம்' என்று பெருமூச்சு விடுகயில் மனசு லேசாகும்.

காலம் றெக்கை கட்டி பறக்க நாங்களோ பெட்டி கட்டி பறந்தோம்!
வளைகுடாக்கு.
பொழுதுபோக்கு தேவைகளுக்கு காசு தராததால் வீட்டில் கோபித்துக்கொண்டு சாப்பிட மறுத்து ஒளிய இந்தபுளிய மரம். கால ஓட்டத்தில்போதை பார்ட்டிகளின் புனித மரமா இந்த புளிய மரம்...புகைப்பவர்களின் போதிமரம்!பொது ஏழைகளின் புகழிடம்!புது வரவுகளுக்கு நிழலகம்!இதனடியில் நிற்பதுவும்இதன் மடியில் நித்திரையும் வென்றெடுத்த கனவுகளும்அன்றாட அத்தியாவசம்!
இந்த புளியமர அடியில் உட்கார்ந்து, பீடியை இழுத்துக்கொண்டு
ஒருத்தருக்கு ஒருத்தர் சிலேடை பேச்சுக்களில் சளைத்தவரல்லர்
என்பதை காட்டும் பெரிசுகளை கண்கூடாக கண்டிருக்கிறேன்.
சென்ற சில நாட்களுக்கு முன்பு வீசிய ‘தானே’ புயலில் புளிய மரம் முறிந்தது.
‘தானே’நீ முறிந்ததுவிட்டால்...
நிழல் மறையலாம்
நினைவுகள் மறையுமா?

முறிந்த புளியமரத்துக்கு:தலைவர்கள் இரங்கல்.
மேல் பட்டாம் பாக்கம்: புளியமரம் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
.. 'தானே' புயலால்முறிந்தது புளியமரம் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். புளியமரதை இழந்து வாடும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்று முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி. இதுகுறித்து, திமுக வெளியிட்ட செய்தி:

எப்போதும் சிரித்திடும் முகம் எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!இளமை இளமை இதயமோஇமயத்தின் வலிமை! வலிமை!உரமாய் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய உத்தம மரமே -உயிர் அணையான் உடன் பிறப்பணையான் நண்பர்கள் வாழும் நிலமெலாம் தன்புகழ் செதுக்கிய மரம் இன்று எங்கு சென்றாய்? புளியமரதை இழந்து வாடும் நண்பர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்று திமுக தலைவர் கருணாநிதி தனது இரங்கல்செய்தியில் தெரிவித்துள்ளார்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விஜயகாந்த் வெளியிட்ட செய்தி:

மேல் பட்டாம் பாக்கம் :புயலால் முறிந்தது புளியமரம் என்ற செய்தி கேட்டு வேதனையும் அடைந்தேன். நெஞ்சை உருக்கும் செய்தியாகும். பலமான காற்று வீசியதாலும் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. புளியமரதை இழந்து வாடும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் இது போன்ற விபத்துக்கள் நடக்காமலிருக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். என் சார்பிலும், கழகத்தின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர் ரஜினிகாந்த் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

மேல் பட்டாம் பாக்கம் புயலால் முறிந்தது புளியமரம் என்ற செய்தி கேட்டு கடும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.." நான் புளியமரதின் தீவிர ரசிகன். இது பெரிய இழப்பு. ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். புளியமரதை இழந்து வாடும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்
--akbar ali
Posted by Unknown Labels:

0 comments:

Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.