ஈரானின் பூகோளவியல் இருப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கடல் மூலமான உலக எரிபொருள் வழங்கலில் 40% ஈரானின் ஹொமஸ் நீரிணையூடாக நடக்கிறது. உலக் மொத்த எண்ணை வழங்கலில் இது 20% ஆகும். ஹோமஸ் நீரிணை ஓமான் வளைகுடாவையும் பாராசீக வளைகுடாவையும் இணைக்கும் 35மைல்கள் அகலமுள்ள நீரிணையாகும். நாளொன்றிற்கு 15 எண்ணை தாங்கிக் கப்பல்கள் இதனூடாக பயணம் செய்கின்றன. 
சவுதி அரேபியா, ஈராக்,குவைத், பாரெய்ன், கட்டார், துபாய், போன்ற நாடுகளில் இருந்தூ ஏற்றுமதியாகும் எரிபொருள் ஹோமஸ் நீரிணையூடாகவே நடக்கின்றது. இந்த நீரிணையை மூடிவிடுவேன் என்று ஈரான் அமெரிக்காவை மிரட்டுகிறது.

அமெரிக்காவின் ஐந்தாவது கடற்பிரிவின் விமானம் தாங்கிக் கப்பல் ஜோன் சி ஸ்ரென்னிஸ்  பாராசீக வளைகுடாவில் உள்ள தளத்தில் இருந்து புறப்பட்டு ஹோமஸ் நீரிணையைத் தாண்டி ஓமான் கடலுக்குள் பிரவேசித்த பின்னர் ஈரானிய படைத் துறைத் தளபதி (மேஜர் ஜெனரல்) அத்துல்லா சாலேஹி அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் மீண்டும் ஹோமஸ் நீரிணைக்கு வரக்கூடாது என்று அமெரிக்காவிற்கு தான் அறிவுரை, பரிந்துரை, எச்சரிக்கை செய்வதாகவும் கூறினார். அத்துடன் தாம் எச்சரிக்கைகளை ஒரு தடவை மட்டுமே விடுப்போம். அதை மீண்டும் மீண்டும் சொல்வதில்லை என்றும் சொன்னார்.

இஸ்ரேலால் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்ய முடியும். இஸ்ரேல் அணு ஆயுத வெடிப்புச் சோதனை செய்யாமல் அமெரிக்கா தடுத்து வைத்துள்ளது. அந்த இஸ்ரேலுக்கு இன்னொரு அரபு நாடு அணு ஆயுதம் உற்பத்தி செய்வதை பொறுக்க முடியாது. அமெரிக்காவாலும் ஒரு இசுலாமிய நாடு அணு ஆயுதம் உற்பத்தி செய்வதைப் பொறுக்க முடியாது. கடந்த சில ஆண்டுகளாக ஈரான் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்வதில் அதிக முனைப்புக் காட்டி வருகிறது. ஈரானின் அணு ஆயுத உற்பத்தியை அமெரிக்கா தனது செய்மதிகளினூடாகவும் ஆளில்லா வேவு விமானங்களூடாகவும் கண்காணித்து வருகிறது. ஈரானின் அணு ஆயுத உற்பதிக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடையை கொண்டுவரத் திட்டமிட்டது. உடன் வெகுண்டெழுந்தது ஈரான். ஈரானின் துணை அதிபர் முஹம்மது ரெஷா ரஹிமி பொருளாதாரத் தடையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கையொப்பமிட்டால் தாம் ஹோமஸ் நீரிணையை மூடி விடுவோம். ஹோமஸ் நீரிணையை மூடுவது எமக்கு காப்பி குடிப்பது போன்றது என்றார். 31-12-2011இலன்று அமெரிக்க அதிபர் பராக ஒபாம ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடையில் ஒப்பமிட்டார்.
 
பிரச்சனைக்குரிய ஹோமஸ் நீரிணை
35
மைல் அகலமான ஹோமஸ் நீரிணை உலகின் கப்பல் போக்குவரத்திற்கு மிகச்சிரம்மான கடல் பகுதிகளில் ஒன்றாகும். 2007-ம் ஆண்டு ஜனாரி 1ஒ-ம் திகதி அமெரிக்க நீர்மூழ்கிக்கப்பலான USS Newport ஒரு ஜப்பானிய நீர் மூழ்கிக் கப்பலுடன் மோதிக் கொண்டது. 2009-ம் ஆண்டு மார்ச் 20-ம் திகதி அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றும்(USS New Orleans) நீர் மூழ்கிக் கப்பல் ஒன்றும்(USS Hartford) மோதிக் கொண்டன. 1988 ஏப்ரில் மாதம் அமெரிக்கப் போர்க்கப்பலான USS Samuel Roberts ஒரு கடற்கண்ணியில் மோதுண்டதைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் ஒரு நாள் கடற்போர் நடந்தது. ஈரான் இதற்கு முன்பும் பலதடவை ஹோமஸ் நீரிணையை மூடிவிடப்போவதாகப் பல தடவை மிரட்டியதுண்டு. அதற்கு அதனை மூடும் படை பலம் இருந்ததில்லை. ஆனால் இம்முறை ஈரான் நீண்ட தூர ஏவுகணைச் சோதனைகளுக்கு மத்தியில் இந்த மிரட்டலை விடுத்துள்ளது. அதுமட்டுமல்ல ஈரான் அண்மையில் ஆயிரக்கணக்கான கடற்கண்ணிகளும் பல சீர்வேக ஏவுகணைகளும் ஆயிரம் ஆயிரம் விசைப்படகுகளும்.
 படைவலிமை 



ஈரானுக்கு எதிரான போர் என்று வரும் போது அமெரிகாவுடன் சில நேட்டோ நாடுகளும் போரில் குதிக்கும். ஈரான் ஆட்சியாளர்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இத்தாலி பிரான்ஸ் போன்ற நாடுகள் போரில் ஈடுபடாது என்று ஒரு கணக்குப் போட்டு வைத்திருந்தது. பிரான்ஸ்,யு.எஸ்., பிரிட்டன், ஜெர்மனி,  ஆகிய மேற்கத்திய நாடுகள், ஈரானிற்கெதிராக இத்தடைகள் போதாது என்று கூறி ஒரு படி மேலே செல்ல, ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் ஆட்சேபம் தெரிவிக்க, சரி! இந்த தடையை நாங்கள் ஏற்கிறோம் என்று மற்ற நாடுகள் முன்மொழிய, ஐ.நா இந்நான்காவது தடையை ஈரானின் மேல் பாய்ச்சியது.
. ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் இந்நான்காவது வர்த்தகத் தடையை உபயோகிக்கப்பட்ட ‘டிஸ்ஸூ’ பேப்பர் என்று வர்ணித்தாலும் சூல்நிலையை சமாளிக்க இது தக்க நடவடிக்கையல்ல! என்று பிரேசில், துருக்கி ஆகிய நாடுகள் கருத்து தெரிவித்துள்ளது.
ஐ.நாவின் இக்கூட்டத்தை புறக்கணித்த லெபனான் ஒரு பக்கம் இருக்க, இந்த தடைகள் மேற்கொள்ளப்பட்டாலும், சமாதானப் பேச்சுவார்த்தையின் கதவுகள் திறந்தே இருக்க வேண்டும் என்று 'பெயருக்கு ஏதோ சொல்ல வேண்டுமே' என்ற அடிப்படையில் பிரான்ஸ் மற்றொரு பக்கம் சூளுரைத்தது.
இத்தடைகள் பற்றி வல்லநர்கள் நம்புவதாவது, இது ஈரானின் அணுஆயுத முயற்சிகளை பெரிதாக ஒன்றும் செய்திடாது மாறாக பொது மக்களைத் தான் பாதிக்கும் என்று கூறியுள்ளார்கள்.
முன்பு இதுபோன்ற வர்த்தகத் தடைகள் சுமத்தப்பட்ட கியூபா, ஈராக், லிபியா போன்ற நாடுகள், இதுபோன்ற தடைகளினால் எள்ளளவும் பாதிக்காதது இவ்வுலகேதிற்கே வெளிச்சம். மேற்கத்திய நாடுகளிடம் ராணுவ முயற்சிகளை விட்டால் இத்தடைகள் யுக்திதான் மிச்சம்.
சரி! இந்நான்காவது தடைகளில் இடம்பெற்றது தான் என்ன?
*40 ஈரானிய நிறுவங்களுக்கு உலகளாவியத் தடை (இதில் பாதுகாப்பு, நிறுவனங்கள், வங்கிகள் என பல சேர்க்கப்பட்டுள்ளன.)
*40 ஈரானியர்களுக்கு உலகளாவியத் தடை (இதில் அணுஆயுத ஈரான் தலைவர் ஜாவித் ரஹீக்யும் சேர்க்கப்பட்டுள்ளார்.)
*யுரேனியத்தில் முதலீடு செய்வதிலிருந்து ஈரான் தடைச் செய்யப்பட்டுள்ளது.
*ஆணுஆயூத ஏவுகணைகளை தாங்கும் ஆயுதங்களை வாங்கவோ, விற்கவோ, தயாரிக்கவோ ஈரானிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
*ஹெலிகாப்டர், ஏவுகணைகள் போன்றவைகளை தாக்கும் ஆயுதங்களும் ஈரான் வாங்குவதிலிருந்து விளக்கி வைக்கப்பட்டுள்ளது.
ஒருவரைத் தாக்கும் முன் திருடர்கள் எப்படி மிளகாய் தூள், மிளகு ஸ்ப்ரே, மயக்க மருந்து போன்றவற்றை உபயோகிப்பார்களோ, அதேபோல் தான் இஸ்ரேலும், அமெரிக்காவும் தன் சூழ்ச்சிகளை கையாண்டுள்ளது. இதில் போர் அறிகுறிகள் தென்படுவதாகவும் சில நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பழைய வர்தகத்தடைகளில் உலக நாடுகளின் வெற்றியை ஈரான் சவாலாக எடுத்துக் கொண்டதுதான், இன்று வளைகுடாவிலேயே அனைத்து துறைகளிலும் ஈரான் சிறந்து விளங்குவதற்கு காரணமென்றால் அது மிகையாகாது.
ஈரானின் அணுவாயுத வளங்களை அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தாக்கலாமென்றஎதிர்பார்ப்பினால் ஈரான் கண்காணிப்பை முடுக்கிவிட்டுள்ளதுடன் தனது பலத்தைவெளிக்காட்டிக்கொள்ள நாடெங்கிலும் இராணுவ நகர்வுகளை மேற்கொண்டவாறும் உள்ளது.வர்த்தகத் தடையை சுமந்துள்ள ஈரான், மீண்டும் ஒரு முறை மேற்கத்திய நாடுகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக நிலவுகிறது
Posted by Unknown Labels:

0 comments:

Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.