28.1.2012
இன்று நடைபெற இருந்த இறைவேதம் என்ற
விவாதத்திற்கு கலந்துகொள்ளலாமல் ஓட்டம் எடுத்தது ஜெர்ரி மற்றும் கிறிஸ்தவ
பாதிர்மார்கள் கூட்டம்.சென்ற தலைப்பில் நம்முடைய வாதங்கள் பலரை சிந்திக்க வைத்து
அவர்களின் கூட்டம் ஆட்டம் கண்ட்டுவிட்டது என்பதை இன்று விவாதத்திற்கு கலந்துகொள்ளாமல்
ஓட்டம் எடுத்தில் இருந்தும் அவர்கள் கூறிய சால்ஜாப்பு தன்னிலை விளக்கத்தில்
இருந்தும் நிரூபணமானது.இந்த விவாதத்திற்கு வராமல் இருந்தது நேரடி ஓளிபதிவு தான் கரணம் என்றும் ஏன் எனில் காவல்துறை விவாதத்தை
நேரடி ஒளிபதிவு செய்யகூடாது என்று கூறியதன் அடிபடையில் நாங்கள் சட்டத்தை மதித்து
வரவில்லை என்று கூறக்கூடியவர்கள்.உண்மையில் வீரம் உள்ளவர்களாக ஓடி ஒழியாதவர்களாக
இருந்திருந்தால் நிச்சயம் காவல்துறைக்கு இதன் உண்மையை எடுத்துகூறி இன்று
விவாதகளத்தை கண்டிருப்பார்கள் .ஆனால் அவர்களுக்கு இந்த நேரடி ஒளிபரபுதான்
கலங்கவைதுவிட்டது.காரணம் இதில் அவர்களின் சித்து வேலையான கூட்டல் கழிதலை
செய்யமுடியாது என்பது மட்டுமே காரணம் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டுவிட்டார்கள்
அல்ஹம்துல்லிலாஹ்.
இதுவரையிலும் அனைவரையும் தங்களின்
வாதத்திறமையால் வென்ற சான் பாதிரிகூட்டதிற்கு நம்முடைய சத்திய கூட்டத்தின் குரான்
சுன்னாவிற்கு முன்னால் மண்டி இட்டது. எல்லா புகழும் இறைவனுக்கே.
அல் குரான் 17:81.
(நபியே!) இன்னும், “சத்தியம்
வந்தது; அசத்தியம் அழிந்தது.
நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று
கூறுவீராக.
கிறிஸ்துவா சஹோதரர்களுக்கு.
கண்மூடித்தனமாக
பைபிளை பின்பற்றுவதை தொடராதீர்கள்! உங்கள் முன்னோர்கள் செய்த தவறை நீங்களும்
செய்யாதீர்கள்! சிந்தித்து திருந்தி உண்மையின் பக்கம் வாருங்கள்!
நீங்கள்
உங்களது சொந்தமான கருத்துகளை இறைவேதமக்கதீர்கள் உங்கள் பின்னால் உள்ள போலிகளின்
முகத்திரை கிழிக்கப்பட்டு விட்டதை உணருங்கள்.அவர்கள் எதை வைத்து உங்களுடன் கபட
நாடகம் ஆடினார்கள் என்று நீங்கள் இனியாவது தெரிந்து கொள்ளுங்கள்.
“அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு,
அசத்தியத்தின் மீது வீசுகிறோம்;
அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது பின்னர்
(அசத்தியம்) அழிந்ததே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம்
உங்களுக்கு கேடுதான்” [அல்குர்'ஆன் 21 :18 ]
Reference:
tntj.net
onlinepj.com
jesusinvites.com
Posted by
Unknown
Labels:
பாதிர்மார்கள்
தானே’நீ முறிந்ததுவிட்டால்...நிழல் மறையலாம் நினைவுகள் மறையுமா?
நான் பிறந்து வளர்ந்த மேல் பட்டாம் பாக்கதில் பாய் கடைஅருகில் ஒரு புளிய மரம் நிழல் பரப்பி நிற்கும். படிப்பு நாடி இடமும், பிழைப்பு தேடி புலமும் பெயர்ந்தாலும் எத்தனை மன அழுத்தத்திலும் அந்த புளிய மரம் சார்ந்த நினைவுகள் நெஞ்சில் பசுமையாக இன்றும் இருக்கிறது!
சிறு சிறு நினைவுகள் சுகமானவை. 'அது ஒரு காலம்' என்று பெருமூச்சு விடுகயில் மனசு லேசாகும்.
காலம் றெக்கை கட்டி பறக்க நாங்களோ பெட்டி கட்டி பறந்தோம்!
வளைகுடாக்கு.
பொழுதுபோக்கு தேவைகளுக்கு காசு தராததால் வீட்டில் கோபித்துக்கொண்டு சாப்பிட மறுத்து ஒளிய இந்தபுளிய மரம். கால ஓட்டத்தில்போதை பார்ட்டிகளின் புனித மரமா இந்த புளிய மரம்...புகைப்பவர்களின் போதிமரம்!பொது ஏழைகளின் புகழிடம்!புது வரவுகளுக்கு நிழலகம்!இதனடியில் நிற்பதுவும்இதன் மடியில் நித்திரையும் வென்றெடுத்த கனவுகளும்அன்றாட அத்தியாவசம்!
இந்த புளியமர அடியில் உட்கார்ந்து, பீடியை இழுத்துக்கொண்டு
ஒருத்தருக்கு ஒருத்தர் சிலேடை பேச்சுக்களில் சளைத்தவரல்லர்
என்பதை காட்டும் பெரிசுகளை கண்கூடாக கண்டிருக்கிறேன்.
சென்ற சில நாட்களுக்கு முன்பு வீசிய ‘தானே’ புயலில் புளிய மரம் முறிந்தது.
‘தானே’நீ முறிந்ததுவிட்டால்...
நிழல் மறையலாம்
நினைவுகள் மறையுமா?
முறிந்த புளியமரத்துக்கு:தலைவர்கள் இரங்கல்.
மேல் பட்டாம் பாக்கம்: புளியமரம் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
.. 'தானே' புயலால்முறிந்தது புளியமரம் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். புளியமரதை இழந்து வாடும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்று முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி. இதுகுறித்து, திமுக வெளியிட்ட செய்தி:
எப்போதும் சிரித்திடும் முகம் எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!இளமை இளமை இதயமோஇமயத்தின் வலிமை! வலிமை!உரமாய் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய உத்தம மரமே -உயிர் அணையான் உடன் பிறப்பணையான் நண்பர்கள் வாழும் நிலமெலாம் தன்புகழ் செதுக்கிய மரம் இன்று எங்கு சென்றாய்? புளியமரதை இழந்து வாடும் நண்பர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்று திமுக தலைவர் கருணாநிதி தனது இரங்கல்செய்தியில் தெரிவித்துள்ளார்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விஜயகாந்த் வெளியிட்ட செய்தி:
மேல் பட்டாம் பாக்கம் :புயலால் முறிந்தது புளியமரம் என்ற செய்தி கேட்டு வேதனையும் அடைந்தேன். நெஞ்சை உருக்கும் செய்தியாகும். பலமான காற்று வீசியதாலும் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. புளியமரதை இழந்து வாடும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் இது போன்ற விபத்துக்கள் நடக்காமலிருக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். என் சார்பிலும், கழகத்தின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர் ரஜினிகாந்த் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,
மேல் பட்டாம் பாக்கம் புயலால் முறிந்தது புளியமரம் என்ற செய்தி கேட்டு கடும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.." நான் புளியமரதின் தீவிர ரசிகன். இது பெரிய இழப்பு. ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். புளியமரதை இழந்து வாடும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்
--akbar ali
Posted by
Unknown
Labels:
புளியமரம்
உலகில் அதிகளவிலான இயற்கை வளங்களை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியா மாமிசத்தை தரும் கால்நடைகளை அதிக அளவில் உற்பத்திச் செய்து உணவுப் பற்றாக் குறையையும், ஊட்டச்சத்து குறைவையும் சமாளிக்க இயலும். இவ்வாறுதான் இரண்டு பிரச்சனைகளையும் எதிர்கொள்ள முடியும். ஆகையால்தான் நமது நாட்டில் மீன் விவசாயம், ஆடு விவசாயம், மாடு வளர்த்தல், கோழி வளர்ப்பு ஆகியவற்றை முடிந்தவரை மேம்படுத்த அரசு முயன்று வருகிறது.
ஊட்டச்சத்து குறைவான உலக நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 2-வது இடம். முதல் இடத்தில் வங்காளதேசம் உள்ளது. இந்தியாவில் 47 சதவீத குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைவினால் அவதியுறுகின்றனர். உலகில் பட்டினி நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 15-வது இடம். பட்டினியையும், ஊட்டச்சத்துக் குறைவையும் போக்குவதில் மாமிசத்தின் பங்கு மறுக்கமுடியாதது ஆகும். வெறும் வெஜிட்டேரியன்(சைவ) உணவுகளால் மட்டும் எந்த நாடும் வாழ முடியாது. அவ்வாறு எந்த நாடும் உலகில் இல்லை என்பதுதான் உண்மை. மாமிச உணவும் கூட உணவுப் பட்டியலில் இடம் பெற்றால்தான் பட்டினியை ஓரளவாவது கட்டுப்படுத்த இயலும்.
புத்தர் பிறந்த நாட்டில் பிராணிகளை இம்சை செய்வது கூட பாவமென கருதினால் அவையெல்லாம் நடைமுறை வாழ்க்கையில் ஒத்துவராது என்பதுதான் நிதர்சனம். சைவ உணவை ஊக்குவிக்கும் ஏராளமான அமைப்புகள் இந்நாட்டில் உள்ளன. பிராணிகளை பாதுகாக்க விரும்பும் மேட்டுக் குடியினரின் ப்ளூ க்ராசும் இந்தியாவில் உள்ளது.
வேத காலத்தில் பார்ப்பனர்கள் மாமிசத்தை சாப்பிட்டுள்ளார்கள். அவர்களது பிரியமான உணவே பசு மாமிசம் தான். இவற்றிற்கான ஆதாரங்கள்:
இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 40.
திருமணத்துக்கு முதல்நாள் மதுவர்க்கம் என்னும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியின் போது ஒருவன் கூவி வேண்டுகிறான். அவன் இப்படிக் கூவுவதற்கு காரணம் என்ன? அவர்கள் எதை வெட்டுகிறார்கள்.“விவாஹே கௌஹு...க்ருஹே கௌஹு...திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத்தான் வெட்டுகிறார்கள்.....
இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 41
இரண்டு சிறுவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.“என்னடா அங்கே மடமடன்னு சத்தம் கேட்கிறதே?” “உனக்குத் தெரியாதா? பக்கத்து கிரஹத்திலே கல்யாணம் ரிஷிகள் நிறையபேர் போயிருக்கிறார்கள் பாவம்... இன்று கன்றுக் குட்டிகள் தப்பிக்க முடியுமோ? அவைகளை வெட்டும் சத்தம்தான் மடமடயாதே... (அதாவது மடமடன்னு கேட்கிறது)” என்கிறான் மற்றவன்.
அவர்களின் வேதங்களிலும், மனுஸ்மிர்தியிலும் காணக் கிடைக்கின்றன. இன்று மட்டும் அவர்கள் ஏன் தெய்வமாகக் கருதுகிறார்கள்? உயிர்க் கொலையை எதிர்த்த பௌத்தம் செல்வாக்கு பெற்றதால் தாங்களும் செல்வாக்கு பெற வேண்டி மாமிசத்தைக் கைவிட்டு சைவத்துக்கு மாறியவர்கள் பார்ப்பனர்கள். மாமிசத்தைக் கைவிட்ட பிறகு உணவுக்கு என்ன செய்வது? என யோசித்தார்கள். மந்திரம் ஓதுவதை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாத இக்கட்டான நிலையில்தான் அவர்கள் பாலை தேர்வு செய்தார்கள். மற்றொரு பக்கம் அடிமைகளாக நடத்தப்பட்ட மக்கள் வறுமை காரணமாக உணவுக்காக மாடுகளைக் கொன்று அதன் கறியை உட்கொண்டு உயிர் வாழ்ந்தார்கள். பசுக்களெல்லாம் கொல்லப்பட்டுவிட்டால் பார்ப்பனர்களுக்கு பால் பற்றாக்குறை ஏற்படுமே? அதனாலேயே பால் கொடுக்கும் பசுக்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டது. இந்த உண்மையைச் சொன்னால் எடுபடாது என்பதால் பசு புனிதமானது என்கிற கருத்தை பரப்பினார்கள். அன்று பார்ப்பனர்கள் மட்டுமே இந்துக்களாக கருதப்பட்டார்கள். பின்னாளில் மற்றவர்களும் இந்துக்களாக ஏற்கப்பட்டதால் பார்ப்பனர்களுக்கு மட்டுமே தெய்வமாக இருந்த பசு அனைத்து இந்துக்களுக்கும் பொதுவாக்கப்பட்டது. ஆனால் இதனை பெரும்பாலான இந்துக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
பசுவதையை எதிர்க்கும் பாசிச கயவர்கள்தாம் குஜராத், பாகல்பூர், மும்பை, சூரத்,…….. என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களை கொடூரமாக கொன்று குவித்தார்கள். சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீதான காழ்ப்புணர்வே இவர்களின் பசுவின் மீதான நேசத்திற்கு காரணமாகும்.
சரி மாட்டு இறைச்சியில் மட்டும் என்ன அபாயம் உள்ளது?இதனைக் குறித்து விஞ்ஞானமும் எதுவுமே கூறவில்லை. ஆனால், அவற்றை மிதமாக உண்ணுங்கள் என்று மட்டுமே மருத்துவர்கள் போதிக்கின்றனர். அவ்வாறெனில், உலகிலேயே மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் உள்ள 130 கோடி மக்களை கொண்ட இந்தியாவில் பெரும்பாலான மக்களின் ஊட்டச்சத்தை அளிக்கும் உணவான, பிற மாமிச உணவுகளுடன் ஒப்பிடுகையில் விலை குறைவான மாட்டிறைச்சியை மட்டும் சட்டரீதியாக தடைச் செய்வதன் அவசியம் என்ன?
மத்தியபிரதேச மாநிலத்தில் முன்பே அமுலில் இருந்த பசுவதை தடைச்சட்டம் தற்பொழுது மனிதர்களை கொலைச் செய்வதை விட கொடிய குற்றமாக மாறுவதற்கு என்ன காரணம்? என்ற கேள்வி நியாயமானதே! பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் 2010-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பசு வதை தடைச்சட்ட திருத்த மசோதா தான் இத்தகையதொரு கேள்வியை எழுப்புகிறது.
ஜனநாயக ரீதியாகவும், மதசார்பற்ற கொள்கையின் அடிப்படையிலும் ஒருபோதும் நியாயப்படுத்த முடியாத இந்த சட்டத்திருத்தம் இதுவரை குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைக்காமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்பொழுது திடீரென ஏற்பட்ட ஞானாதோயத்தில் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் கையெழுத்திட்டதால் ‘மத்தியபிரதேஷ் கோவம்ஸ் வத் பிரதிஷேட்(ஸம்ஸோதன்)’ சட்டத்திருத்த மசோதா அமுலுக்கு வந்துள்ளது.
இச்சட்டத்தின்படி பசுவதைச் செய்யும் நபருக்கு தற்போதைய மூன்று ஆண்டுகளுக்கு பதிலாக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். கூடவே 5 ஆயிரம் ரூபாய் அபராதமும். நீதிபதிகள் தங்கள் விருப்பப்படி இந்த அபராத தொகையை உயர்த்தலாமாம். இந்த சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் யாரும் பசுக்களை கொல்வதோ, கொல்வதற்கு உதவுவதோ, பசுக்களை கொல்வதற்கு வண்டியில் ஏற்றி செல்வதோ, பசுவை கொல்வதற்கு கொடுப்பதோ கூடாது. மாநிலத்திற்கு உள்ளேயோ,வெளியேயோ பசுவை அறுப்பதற்கு வாய்ப்புள்ள இடத்திற்கு கொண்டு செல்வதும், கொண்டு போக தூண்டுவதும், ஏஜண்டிடம் ஒப்படைப்பதும் குற்றமாகும். இதுத்தொடர்பான புகாரின் அடிப்படையில் யாரையும், எவ்விடத்திலும் பரிசோதிக்கவும், கைது செய்யவும் ஹெட் கான்ஸ்டபிள் மற்றும் அதற்கு மேல் ரேங்குடைய போலீஸ் அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதைப் போன்றதொரு சட்டம் பா.ஜ.க ஆளும் குஜராத்திலும், கர்நாடகா மாநிலத்திலும் அமுலில் உள்ளது. குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் மசோதாக்களில் இனி கையெழுத்திட காலதாமதம் ஆகாது என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது. நிச்சயமாக இது ஒரு பயங்கரவாத கறுப்புச் சட்டமாகும்.
சிறுபான்மையினர் மீது கொடுமைகளை இழைப்பதில் பிரசித்திப் பெற்ற அரசுகள் இச்சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சிறியதொரு சதவீத பிராமணர்களை தவிர ஹிந்துக்களில் பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் பசுக்களை பரிசுத்தமாக கருதுவதுமில்லை அவற்றிற்கு ‘கோ’ பூஜை செய்வதுமில்லை. முஸ்லிம், கிறிஸ்தவ சமுதாயத்தினருக்கும் பசு ஒரு சாதாரண மிருகமே. ஆனால், எந்த சமூகத்தின் மத உணர்வுகளையும் புண்படுத்தக் கூடாது என்பதால் அவர்கள் பசுவதை தடைச்சட்டம் அமுலில் இருக்கும் மாநிலங்களில் பசுவதை தடை சட்டத்தை எதிர்ப்பதுமில்லை. அச்சட்டத்தை மீறி செயல்படுவதுமில்லை.
பின்னர் ஏன் இத்தகையதொரு கொடிய சட்டம்? என கேள்வி எழுப்பினால், அதற்கான விடை மிக எளிதானது. இச்சட்டத்தின் பெயரால் சிறுபான்மை மக்களை முடிந்தவரை சித்திரவதை செய்யவும், அவர்களை காலவரையற்று சிறையில் அடைக்கவும் வழி உருவாகும். பொய் வழக்குகளை ஜோடிப்பதிலும், பொய்யான ஆதாரங்களை உருவாக்குவதிலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்பதை நிரூபித்துள்ள போலீசார் இருக்கும் வேளையில் வேலை மிகவும் எளிதாகும்.
தேசத் துரோகத்தையும், தீவிரவாதத்தையும் தடுப்பதற்கான சட்டத்தில் கூட ஹெட்கான்ஸ்டபிளுக்கு இவ்வளவு பெரிய அதிகாரம் வழங்கப்படவில்லை. பசுவை கொன்றதாகவோ, பசுவை கொல்ல ஒப்படைத்ததாகவோ கேள்வி பட்டால் அதன் அடிப்படையில் நிரபராதிகளை கைது செய்ய தாராளமான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நாம் மதசார்பற்ற இந்தியாவிலா வாழ்கிறோம் என்ற கேள்வியை அடிக்கடி எழுப்பும் சூழல்களில் இதுவும் ஒன்று. இச்சட்டத்தின் கடுமையும், துஷ்பிரயோகம் செய்யப்படும் வாய்ப்பும், எதிர்ப்புகளையும் கவனத்தில் கொண்டு இதுவரை பசுவதை தடுப்பு திருத்த மசோதாவில் கையெழுத்திட குடியரசு தலைவருக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பரிந்துரைக்காமல் இருந்தது. ஆனால் தற்பொழுது பாசிஸ்டுகளுக்கு மத்திய அரசு பணிந்தது மர்மமாகவே உள்ளது.
Posted by
Unknown
Labels:
பசுவதை சட்டம்
சீனா: சிங்கியாங் (Xinjiang) என்பது மக்கள் சீனக் குடியரசில் உள்ள ஒரு Uyghur (முஸ்லிம்) தன்னாட்சிப் பகுதி ஆகும். இதுவே சீனாவின் மாகாணங்களில் மிகப்பெரியது; இதன் பரப்பளவு 16 லட்சம் சதுர கி.மீ. முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையினோராக உள்ள இப்பகுதிரசியா, மங்கோலியா, இந்தியா, பாகிஸ்தான், கசாக்ஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் பொதுவான எல்லைகளைக் கொண்டுள்ளது.
பொருளாதாரம்
2008 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 60 பில்லியன் டொலராகவும் சராசரி தனிநபர் உற்பத்தி 2864 டொலராகவும் இருந்தது. மேலும் இம்மாகாணம் தாதுக்களும் எண்ணெய் வளமும் நிறைந்ததாகும்.
வரலாறு
1949 இல் 95 சதவீதம் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இப்பிரதேசம் மீது சீனா படையெடுத்து ஆக்கிரமித்து கொண்டது. பின்னரான காலப்பகுதியில் பல நூறு இராணுவ கிராமங்களை அங்கு உருவாக்கி ஹன் இனச் குடும்பங்களை குடியமர்த்தியது, அவை காலபோக்கில் சீனர்களை கொண்ட குடியேற்ற கிராமங்களாக உருவெடுத்தன. இப்போது 2 கோடி மக்கள் தொகை கொண்ட சிங்கியாங்கில் 57 சதவீதம் முஸ்லிம்கள், 41 சதவீதம் ஹன் இனச் சீனர்கள் வாழ்கின்றனர்.
வீகர்(முஸ்லிம்)களின் சுயாட்சிக்கான போராட்டங்களை சீன அரசுகள் தொடர்ந்து ஒடுக்கி வந்திருக்கின்றன. இதனால் பலர் வெளியேறி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள்தான் வெளியில் இருந்து கொண்டு பிரச்சினைகளை தூண்டுவதாக சீனா குற்றம்சாட்டி வருகிறது.
சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் முஸ்-ம்கள். ஆனால் ஜின்ஜியாங்கில் பெரும்பாலான மக்கள் முஸ்லிம்கள் என்றபோதிலும், தலைநகர் உரூம்கிலில் 90 சதவீதம் பேர் சீனாவைச் சேர்ந்த ஹான் இனத்தவர்கள். தலைநகர் ஜனத்தொகை 20,30,000.
தலைநகர் உரூம்கியில் முஸ்லிம் களுக்கும் ஹான்களுக்கும் நடந்த மோத¬ல் 156 பேர் கொல்லப்பட்டனர். 828 பேர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து இரண்டாவதாக காஷ்கர் நகரத்திலும் கலவரத் தீ மூண்டது. வெளிநாடு வாழ் வீகர்களின் தகவல் தொடர்புகளை துண்டிப்பதற்காக அனைத்து மின் தகவல் இணையங்களையும் சீன அரசு துண்டித்தது..
கடந்த ஆண்டு திபெத்தில் தலைநகர் லாசாவில் புத்த பிட்சுகள் அமைதியாக பேரணி நடத்தியபோதும், இதுபோல் ஒரு கலவரம் வெடித்தது. அந்த சம்பவத்திற்கு 22 பேர் பலியானார்கள். தலாய்லாமா தான் வெளியில் இருந்து தூண்டிவிடுகிறார் என்று சீனா குற்றம்சாட்டியது. அதை அவர் மறுத்தார். மத்திய ஆசியாவின் 8 நாடுகளை எல்லையாகக் கொண்ட ஜின்ஜியாங்கில் பெட்ரோல், எரிவாயு உள்ளிட்ட கனிம வளங்கள் மிகுதியாக உள்ளன. எனவே சீன பொருளாதாரத்தின் தூணாகவும் ஜின்ஜியாங் விளங்கு கிறது. தற்போது அங்கு விடுதலை விருப்பம் வீகர் மத்தியில் தலைதூக் கியுள்ளது. சமீபத்திய வருடங்களில் வலுக் கட்டாயமாக குடியமர்த் தப்பட்ட ஹான் இனத்தினர், படிப்படியாக வீகர்களை அவர்களது தாய் மண்ணில் இருந்து விரட்டியதாக குற்றம்சாட்டப்படுகிறது.
வீகர்களின் ஆயுதப் புரட்சி சீனாவுக்கு பெரிய தலைவலியாக இருந்து வந்தது. 2001ல் அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டபோது உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளை அமெரிக்கா பட்டியல் போட்டது. அப்போது சீனா கேட்டுக் கொண்டதன் பேரில் ஜின்ஜியாங் கில் இருந்து செயல்படும் கிழக்கு துருக்கி இஸ்லாமிய இயக்கத்தையும் (தீவிரவாத இயக்கமாக) அமெரிக்கா பட்டியலிட்டது.
அமெரிக்கா நடத்திவரும் பயங்கரவாதப் போருக்கு சீனாவின் ஆதரவைப் பெறவேண்டி அமெரிக்கா இதை செய்ததாகக் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் அல்காயிதாவிற்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா இறங்கியபோது, அங்கு நான்கு வீகர் முஸ்லிம்களை அமெரிக்க ராணுவம் கைது செய்தது. பின்னர் வீகர் முஸ்லிம் நான்கு பேரையும் விடுவித்தது. ஜின்ஜியாங்கில் வீகர் முஸ்லிம்கள் நசுக்கப்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைக் குழு குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அடிப்படை ஆதாரமின்றி சீனாவின் வேண்டு கோளை ஏற்று எந்த இயக்கத்தையும் தடை செய்யக் கூடாது என்றும் அறிவுறுத் தியிருக்கிறது. திபெத்தைப் போன்று ஜின்ஜியாங் முஸ்¬ம்களின் சமய வழிபாட்டு உரிமையும் கடின ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்கிறார் மனித உரிமை கண்காணிப்பகத்தின் இயக்குனர் பிராட் ஆடம்ஸ்.
வீகர்களை பலவீனப்படுத்த சீன அரசு சொந்த செலவில் ஹான்களை அதிகப் படியாக குடியேற்றி வருகிறது. ஜின்ஜியாங் மாகாணத்தில் அமைதியான வழியில் இஸ்லாமிய நெறிகளை பரப்பி வருவோரையும் தீவிரவாதிகள் என சீனா கூறுகிறது. அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிந்தைய உலக சூழலை சீனா தோதாகப் பயன்படுத்திக் கொள்கிறது.
ஜின்ஜியாங் முஸ்லிம்கள் வன்முறை, தண்டம், சிறை மற்றும் சித்திரவதைக்கு மத்தி யில்தான் இறைவணக்கத்தில் ஈடுபடுகின்றனர். திபெத்திலும் இதே நிலைதான் கிழக்குப் பகுதிகளான திபெத்தையும் ஜின்ஜியாங்கையும் சீன பகுதியோடு இணைத்துக் கட்ட அதிகப்படியான பொருட்செலவில் ஹானர்களை இரு பகுதிக்குமாக அனுப்பி வைக்கிறது சீன அரசு.
முஸ்லிம் மார்க்க அறிஞர்களை கைது செய்கிறது. குர்ஆனின் வசனங்களையும் தணிக்கை செய்கிறது என்றெல்லாம் மனித உரிமை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த அறிக்கை 114 பக்கங்களைக் கொண்டுள்ளது.
.இதற்கு முன்னரும் இதுபோன்ற வீகர் எழுச்சி ஏற்பட்டு பின்னர் அடக்கப்பட்டிருக்கிறது. சோசலிஸம் பற்றி அதிகம் பேசும் கம்யூனிஸ்டு கள் மனித உரிமைகளுக்கும் சுயாட்சிக்கும் எதிரான அடக்குமுறைகளைக் கையாள் வது வியப்பான விஷயமல்ல. கொள்கை கோட்பாடு எதுவாக இருந்தாலும் அதிகார வர்க்கத்திற்கு ஒரு ஆபத்து ஏற்படும் என்றால் அடக்குமுறை ஏவப்படும்.காஷ்மீர்லும் இதுதான் நடக்கிறது. கிழக்கு சீனாவிலும் இதுதான் நடக்கிறது.
Score: Wikipedia, Britannica & CRI-China
Posted by
Unknown
Labels:
சீனா
ஈரானின் பூகோளவியல் இருப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கடல்
மூலமான உலக எரிபொருள் வழங்கலில் 40% ஈரானின் ஹொமஸ்
நீரிணையூடாக நடக்கிறது. உலக் மொத்த எண்ணை வழங்கலில் இது 20% ஆகும்.
ஹோமஸ் நீரிணை ஓமான் வளைகுடாவையும் பாராசீக வளைகுடாவையும் இணைக்கும் 35மைல்கள்
அகலமுள்ள நீரிணையாகும். நாளொன்றிற்கு 15 எண்ணை தாங்கிக்
கப்பல்கள் இதனூடாக பயணம் செய்கின்றன.
சவுதி அரேபியா, ஈராக்,குவைத், பாரெய்ன், கட்டார், துபாய், போன்ற
நாடுகளில் இருந்தூ ஏற்றுமதியாகும் எரிபொருள் ஹோமஸ் நீரிணையூடாகவே நடக்கின்றது.
இந்த நீரிணையை மூடிவிடுவேன் என்று ஈரான் அமெரிக்காவை மிரட்டுகிறது.
அமெரிக்காவின் ஐந்தாவது கடற்பிரிவின் விமானம் தாங்கிக் கப்பல்
ஜோன் சி ஸ்ரென்னிஸ் பாராசீக
வளைகுடாவில் உள்ள தளத்தில் இருந்து புறப்பட்டு ஹோமஸ் நீரிணையைத் தாண்டி ஓமான்
கடலுக்குள் பிரவேசித்த பின்னர் ஈரானிய படைத் துறைத் தளபதி (மேஜர் ஜெனரல்)
அத்துல்லா சாலேஹி அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் மீண்டும் ஹோமஸ் நீரிணைக்கு
வரக்கூடாது என்று அமெரிக்காவிற்கு தான் அறிவுரை, பரிந்துரை, எச்சரிக்கை
செய்வதாகவும் கூறினார். அத்துடன் தாம் எச்சரிக்கைகளை ஒரு தடவை மட்டுமே விடுப்போம்.
அதை மீண்டும் மீண்டும் சொல்வதில்லை என்றும் சொன்னார்.
இஸ்ரேலால் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்ய முடியும். இஸ்ரேல் அணு
ஆயுத வெடிப்புச் சோதனை செய்யாமல் அமெரிக்கா தடுத்து வைத்துள்ளது. அந்த இஸ்ரேலுக்கு
இன்னொரு அரபு நாடு அணு ஆயுதம் உற்பத்தி செய்வதை பொறுக்க முடியாது. அமெரிக்காவாலும்
ஒரு இசுலாமிய நாடு அணு ஆயுதம் உற்பத்தி செய்வதைப் பொறுக்க முடியாது. கடந்த சில
ஆண்டுகளாக ஈரான் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்வதில் அதிக முனைப்புக் காட்டி
வருகிறது. ஈரானின் அணு ஆயுத உற்பத்தியை அமெரிக்கா தனது செய்மதிகளினூடாகவும்
ஆளில்லா வேவு விமானங்களூடாகவும் கண்காணித்து வருகிறது. ஈரானின் அணு ஆயுத
உற்பதிக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடையை கொண்டுவரத் திட்டமிட்டது. உடன்
வெகுண்டெழுந்தது ஈரான். ஈரானின் துணை அதிபர் முஹம்மது ரெஷா ரஹிமி பொருளாதாரத்
தடையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கையொப்பமிட்டால் தாம் ஹோமஸ் நீரிணையை மூடி
விடுவோம். ஹோமஸ் நீரிணையை மூடுவது எமக்கு காப்பி குடிப்பது போன்றது என்றார். 31-12-2011இலன்று
அமெரிக்க அதிபர் பராக ஒபாம ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடையில் ஒப்பமிட்டார்.
பிரச்சனைக்குரிய
ஹோமஸ் நீரிணை
35மைல் அகலமான ஹோமஸ் நீரிணை உலகின் கப்பல் போக்குவரத்திற்கு
மிகச்சிரம்மான கடல் பகுதிகளில் ஒன்றாகும். 2007-ம் ஆண்டு ஜனாரி 1ஒ-ம்
திகதி அமெரிக்க நீர்மூழ்கிக்கப்பலான USS Newport ஒரு
ஜப்பானிய நீர் மூழ்கிக் கப்பலுடன் மோதிக் கொண்டது. 2009-ம் ஆண்டு மார்ச் 20-ம்
திகதி அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றும்(USS New Orleans) நீர்
மூழ்கிக் கப்பல் ஒன்றும்(USS
Hartford) மோதிக் கொண்டன. 1988 ஏப்ரில்
மாதம் அமெரிக்கப் போர்க்கப்பலான USS Samuel Roberts ஒரு
கடற்கண்ணியில் மோதுண்டதைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் ஒரு
நாள் கடற்போர் நடந்தது. ஈரான் இதற்கு முன்பும் பலதடவை ஹோமஸ் நீரிணையை
மூடிவிடப்போவதாகப் பல தடவை மிரட்டியதுண்டு. அதற்கு அதனை மூடும் படை பலம்
இருந்ததில்லை. ஆனால் இம்முறை ஈரான் நீண்ட தூர ஏவுகணைச் சோதனைகளுக்கு மத்தியில்
இந்த மிரட்டலை விடுத்துள்ளது. அதுமட்டுமல்ல ஈரான் அண்மையில் ஆயிரக்கணக்கான
கடற்கண்ணிகளும் பல சீர்வேக ஏவுகணைகளும் ஆயிரம் ஆயிரம்
விசைப்படகுகளும்.
படைவலிமை
ஈரானுக்கு எதிரான போர் என்று வரும் போது அமெரிகாவுடன் சில நேட்டோ நாடுகளும் போரில் குதிக்கும். ஈரான் ஆட்சியாளர்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இத்தாலி பிரான்ஸ் போன்ற நாடுகள் போரில் ஈடுபடாது என்று ஒரு கணக்குப் போட்டு வைத்திருந்தது. பிரான்ஸ்,யு.எஸ்., பிரிட்டன், ஜெர்மனி, ஆகிய மேற்கத்திய நாடுகள், ஈரானிற்கெதிராக இத்தடைகள் போதாது என்று கூறி ஒரு படி மேலே செல்ல, ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் ஆட்சேபம் தெரிவிக்க, சரி! இந்த தடையை நாங்கள் ஏற்கிறோம் என்று மற்ற நாடுகள் முன்மொழிய, ஐ.நா இந்நான்காவது தடையை ஈரானின் மேல் பாய்ச்சியது.
. ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் இந்நான்காவது வர்த்தகத் தடையை உபயோகிக்கப்பட்ட ‘டிஸ்ஸூ’ பேப்பர் என்று வர்ணித்தாலும் சூல்நிலையை சமாளிக்க இது தக்க நடவடிக்கையல்ல! என்று பிரேசில், துருக்கி ஆகிய நாடுகள் கருத்து தெரிவித்துள்ளது.
ஐ.நாவின் இக்கூட்டத்தை புறக்கணித்த லெபனான் ஒரு பக்கம் இருக்க, இந்த தடைகள் மேற்கொள்ளப்பட்டாலும், சமாதானப் பேச்சுவார்த்தையின் கதவுகள் திறந்தே இருக்க வேண்டும் என்று 'பெயருக்கு ஏதோ சொல்ல வேண்டுமே' என்ற அடிப்படையில் பிரான்ஸ் மற்றொரு பக்கம் சூளுரைத்தது.
இத்தடைகள் பற்றி வல்லநர்கள் நம்புவதாவது, இது ஈரானின் அணுஆயுத முயற்சிகளை பெரிதாக ஒன்றும் செய்திடாது மாறாக பொது மக்களைத் தான் பாதிக்கும் என்று கூறியுள்ளார்கள்.
முன்பு இதுபோன்ற வர்த்தகத் தடைகள் சுமத்தப்பட்ட கியூபா, ஈராக், லிபியா போன்ற நாடுகள், இதுபோன்ற தடைகளினால் எள்ளளவும் பாதிக்காதது இவ்வுலகேதிற்கே வெளிச்சம். மேற்கத்திய நாடுகளிடம் ராணுவ முயற்சிகளை விட்டால் இத்தடைகள் யுக்திதான் மிச்சம்.
சரி! இந்நான்காவது தடைகளில் இடம்பெற்றது தான் என்ன?
*40 ஈரானிய நிறுவங்களுக்கு உலகளாவியத் தடை (இதில் பாதுகாப்பு, நிறுவனங்கள், வங்கிகள் என பல சேர்க்கப்பட்டுள்ளன.)
*40 ஈரானியர்களுக்கு உலகளாவியத் தடை (இதில் அணுஆயுத ஈரான் தலைவர் ஜாவித் ரஹீக்யும் சேர்க்கப்பட்டுள்ளார்.)
*யுரேனியத்தில் முதலீடு செய்வதிலிருந்து ஈரான் தடைச் செய்யப்பட்டுள்ளது.
*ஆணுஆயூத ஏவுகணைகளை தாங்கும் ஆயுதங்களை வாங்கவோ, விற்கவோ, தயாரிக்கவோ ஈரானிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
*ஹெலிகாப்டர், ஏவுகணைகள் போன்றவைகளை தாக்கும் ஆயுதங்களும் ஈரான் வாங்குவதிலிருந்து விளக்கி வைக்கப்பட்டுள்ளது.
ஒருவரைத் தாக்கும் முன் திருடர்கள் எப்படி மிளகாய் தூள், மிளகு ஸ்ப்ரே, மயக்க மருந்து போன்றவற்றை உபயோகிப்பார்களோ, அதேபோல் தான் இஸ்ரேலும், அமெரிக்காவும் தன் சூழ்ச்சிகளை கையாண்டுள்ளது. இதில் போர் அறிகுறிகள் தென்படுவதாகவும் சில நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பழைய வர்தகத்தடைகளில் உலக நாடுகளின் வெற்றியை ஈரான் சவாலாக எடுத்துக் கொண்டதுதான், இன்று வளைகுடாவிலேயே அனைத்து துறைகளிலும் ஈரான் சிறந்து விளங்குவதற்கு காரணமென்றால் அது மிகையாகாது.
ஈரானின் அணுவாயுத வளங்களை அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தாக்கலாமென்றஎதிர்பார்ப்பினால் ஈரான் கண்காணிப்பை முடுக்கிவிட்டுள்ளதுடன் தனது பலத்தைவெளிக்காட்டிக்கொள்ள நாடெங்கிலும் இராணுவ நகர்வுகளை மேற்கொண்டவாறும் உள்ளது.வர்த்தகத் தடையை சுமந்துள்ள ஈரான், மீண்டும் ஒரு முறை மேற்கத்திய நாடுகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக நிலவுகிறது
Posted by
Unknown
Labels:
ஈரான்
|
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.
|