தொழில் நுட்பங்களின் முன்னோடியாக திகழும்சீனாவில் Youtube Facebook blogger போன்ற பல்வேறு பிரபல முன்னனி இணைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் Social Networking தொடர்பான அனைத்து இணையதங்களுக்கும் சீனாவில் தடை தான்.
இதற்கெல்லாம் காரணம் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் எங்கள் நாட்டு இளைஞர்கள் தவறான வழிக்கு சென்றுவிடக்குகூடாது என்பது தான்.
ஆபாச இணையதளங்களையும் சீன அரசு விட்டு வைக்கவில்லை சீனாவில் ஆபாச இணையதளம் வைத்திருப்பவர்களை காட்டிக் கொடுத்தால் ஒரு லட்சம் பரிசு என அறிவித்து சுமார் 5394 பேரை மொத்தமாக கைது செய்து ஒழித்ததுள்ளது சீன அரசு.
ஆபாச இணையதளங்களை வைத்திருப்பவர்கள் பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யக் கூடியவர்கள், எனவே பணத்திற்காக நாட்டை சீர்குழைக்க எதை வேண்டுமானாலும் செய்வார்கள். மேலும் இது போன்றவர்கள் பெரும்பாலும் hackers ஆகத் தான் இருப்பார்கள். எனவே இவர்கள் மூலம் நாட்டின் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படலாம். எனவே தான் இது போன்றவர்களை சீன அரசு பொறி வைத்து பிடித்துள்ளது.
சீன அரசு இதற்கென்று அமைச்சம் அமைத்து இணைதள பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. www.mps.gov.cn
பல துறைகளில் பலே கில்லாடியாக இருக்கும் சீன அரசே தனது நாட்டையும் இளைஞர்களையும் பாதுகாக்க இன்டர்நெட்டில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றது,ஆனால் நமது நாட்டிலோ? சதை விற்று பிழைப்பு நடத்தும் கூத்தாடிகளின் படத்திற்கு தான் இன்டர்நெட்டில் பாதுகாப்பு! வெளியான உடனேயே சம்பந்தபட்டவர்கள் கைது செய்யப்பட்டார்களாம்.
மற்றபடி இணையதளம் மூலம் சீரழக்கப்படும் இளைஞர்கள் மற்றும் இளைஞ்ஞிகள் பற்றிய செய்தி பத்திரிக்கைகளில் தினமும் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றது.
கூத்தாடிகளுக்கு பாதிப்பு என்றவுடன் அடுத்த நமிடமே கலமிறங்கும் காவல்துறையினர். வக்கிர எண்ணங்களையும் ஆபாசத்தையும் கட்டவிழத்து விட்டு இளைஞர்களையும் நாட்டையும் சீரழிக்கும் இணையதளங்களை கண்டுபிடித்து ஏன் தடுப்பதில்லை?
திருட்டு வீசீடி வெளியிட்ட இணையதளங்களை கண்டுபிடித்து காவல்துறைக்கு இவைகளை கண்டுபிடிக்க தெரியவில்லை?
நம் நாட்டிலும் இணையதளங்களின் பயன்பாட்டில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட வேண்டும்.
0 comments:
Post a Comment