டெல்லி: மத்​திய,​​ மாநில அர​சு​ வேலை​ வாய்ப்​பு​க​ளில் முஸ்​லீம்​க​ளுக்கு 10 சத​வீத இட ஒதுக்​கீ​டும்,​​ மற்ற சிறு​பான்​மை​யி​ன​ருக்கு 5 சத​வீத ஒதுக்​கீ​டும் வழங்​க​லாம் என முன்​னாள் தலைமை நீதி​பதி ரங்​க​நாத் மிஸ்ரா தலை​மை​யி​லான கமி​ஷன் பரிந்​துரைள்​ளது.

முஸ்​லீம்​கள் உள்​பட அனைத்து சிறு​பான்​மை​யி​னர்​க​ளின் நலன்​களை பாது​காக்​கும் பொருட்​டும்,​​ அவர்​க​ளின் வாழ்​வா​தா​ரத்தை உயர்த்​தும் வகை​யி​லும் அவர்​க​ளுக்கு அரசு வேலை​ வாய்ப்​பு​க​ளில் இடஒதுக்​கீடு வழங்குவது குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய 2004ம் ஆண்​டில் உச்ச நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதி​பதி ​ ரங்​க​நாத் மிஸ்ரா தலை​மை​யில் இந்த கமி​ஷன் அமைக்​கப்​பட்​டது.

இந்த கமி​ஷ​னின் சமீபத்தில் அரசிடம் தனது அறிக்கையை அளித்தது. இந்த அறிக்கையை நேற்று மக்​க​ள​வை​யில் சிறு​பான்​மை​யி​னர் நலத்​துறை அமைச்​சர் சல்​மான் குர்​ஷித் தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்​சங்​கள்:

மத்​திய,​​ மாநில அர​சு​க​ளின் வேலை​வாய்ப்​புகளில் முஸ்​லீம்​க​ளுக்கு 10 சத​வீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்​டும்.

இதர மத மற்​றும் மொழி​ சிறு​பான்​மை​யி​ன​ருக்கு 5 சத​வீத ஒதுக்​கீட்டை அளிக்​க​ வேண்​டும்.

அனைத்து மதங்​க​ளி​லும் உள்ள தலித்​து​களையும் ஷெட்​யூல்டு கேஸ்ட் பட்டியலில்​ சேர்க்க வேண்​டும்.​ (இதன்மூலம் இஸ்லாமிய, கிருஸ்துவ மதத்துக்கு மாறிய தலித்துகளும் தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டைப் பெற முடியும்).

குறிப் ​பிட்ட ஏதா​வது ஒரு பகு​தி​யில் அல்​லது ஏதா​வது ஒரு பணிக்கு முஸ்​லீம் விண்​ணப்​ப​தா​ரர்​கள் போது​மான அள​வில் கிடைக்​க​வில்லை என்​றால்,​​ அந்த பின்​ன​டைவு இடங்​களை மற்ற சிறு​பான்​மை​யி​ன​ருக்கு அளிக்க வேண்​டும்.

இவ்வாறு இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு-கமி​ஷ​னில் கருத்து வேறு​பாடு:

இந் நிலையில் இந்த கமி​ஷ​னின் உறுப்​பி​னரான ஆஷா தாஸ்,​​ கமி​ஷ​னின் பரிந்​து​ரை​க​ளில் மாறு​பட்டு சில பரிந்​து​ரை​களை அளித்​துள்​ளார்.

மதம் மாறிய தலித்​து​க​ளுக்கு எஸ்.சிக​ளுக்​கான சலு​கை​கள் வழங்​கக்​கூ​டாது.​ வேண்டுமானால் பிற்​பட்​டோர் பிரி​வி​ன​ருக்​கு​ரிய சலு​கை​களை வழங்​க​லாம் என்று கூறியுள்ளார்.

காங்​கி​ரஸ் வர​வேற்பு-பாஜக எதி்ர்ப்பு:

இந்த கமிஷன் அறிக்கை குறித்து காங்​கி​ரஸ் கட்​சி​யின் செய்​தித் தொடர்​பா​ளர் அபி​ஷேக் சிங்வி கூறுகையில்,

மிக ​வும் நுட்​ப​மாக ஆய்ந்து நீதி​பதி ரங்​க​நாத் மிஸ்ரா,​​ தனது அறிக்​கையை தாக்​கல் செய்​துள்​ளார்.​ இதில் குறிப்​பிட்​டுள்ள அம்​சங்​கள் வர​வேற்​கத்​தக்​கவை.

இந்த பரிந்​து​ரை​கள் குறித்து விரி​வான விவா​தம் நடத்தி அதை நடை​மு​றைப்​ப​டுத்த முயற்சி மேற்​கொள்​ளப்​ப​டும் என்​றார்.

பாஜக செய்​தித் தொடர்​பா​ளர் ராஜீவ் பிர​தாப் ரூடி கூறுகையில்,

ரங் ​க​நாத் மிஸ்ரா பரிந்​து​ரை​கள்,​​ மத​மாற்​றத்தை ஊக்​கு​விக்​கும் வகை​யில் உள்​ளன.​ மேலும்,​​ தாழ்த்​தப்​பட்​டோர் மற்​றும் பழங்​கு​டி​யி​ன​ருக்கு அளிக்​கப்​பட்​டுள்ள சலு​கை​களை இந்த பரிந்துரைகள் பாதிக்கும். இந்த பரிந்​து​ரை​ நாட்​டுக்கு பய​னற்​றது என்​றார்.

ஜைன மதத்தினர் கோரிக்கை:

இந் நிலையில் நாட்​டில் பல்​வேறு சமூ​கத்​தி​னர் தங்​களை சிறு​பான்​மை​யி​னர் பட்​டிய​லில் சேர்க்​கு​மாறு கோரிக்கை விடுத்​துள்​ள​தா​க​வும்,​​ இது தொடர்​பாக சட்ட நிபு​ணர்​க​ளின் கருத்​து​க​ளைக் கோரி​யுள்​ள​தா​க​வும் மத்​திய அரசு அறி​வித்​துள்​ளது.

சிறு​பான்​மை​யி​னர் பட்​டிய​லில் தற்​போது முஸ்​லிம்​கள்,​​ சீக்​கி​யர்​கள்,​​ பார்​சி​கள்,​​ கிருஸ்​து​வர்​கள் மற்​றும் புத்த மதத்​தி​னர் ஆகிய ஐந்து சமூ​கத்​தி​னர் மட்​டுமே உள்​ள​னர்.

ஆனால், ஜைன மதத்​தி​ன​ரும் (ஜெயின்கள்) தங்களை இதில் சேர்க்குமாறு வலி​யு​றுத்​தி​ வருகின்றனர்.

நன்றி ThatsTamil

Posted by Unknown Labels:

0 comments:

Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.