மேற்குச் சீனாவின் சிங்ஹேய் மாநில சியுன் ஹுவா சால இனத் தன்னாட்சி மாவட்டத்தில் சீனாவின் பழமைமிக்க "குரான் திருமறையின்" கையெழுத்துப் பிரதி பாதுகாக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலம், பின்தங்கிய பாதுகாப்புச் சாதனம் ஆகியவற்றால், இந்த "குரான் திருமறையின்" சில பகுதிகள், பாழடைந்து தெளிவற்றுள்ளன. அண்மையில், சீனாவின் சில தொல் பொருள் பாதுகாப்பு நிபுணர்களின் முயற்சியுடன், இத்திருமறை, செவ்வனே செப்பனிடப்பட்டுள்ளது. சிங்ஹேய் மாநில சியுன் ஹுவா சால இனத் தன்னாட்சி மாவட்டம், சீனாவின் சால இனத்தவர்கள் கூடிவாழும் இடமாகும். ஏறக்குறைய 70, 80 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்டது இவ்வினம். சால இன மக்கள், இஸ்லாமிய மத நம்பிக்கை கொண்டவர்கள். 700 ஆண்டுகளுக்கு மேலாக சால இனத்தின் முன்னோடிகள், தொலைவிலிருந்து, அதாவது மத்திய கிழக்கிலிருந்து கிழக்கை நோக்கி குடியேறியபடி, சியுன் ஹுவா மாவட்டத்தின் சுற்றுப்புறத்தை அடைந்த போது, இங்கு சமவெளியையும், இங்கும் அங்குமாக ஓடும் ஆறுகளையும் வளைந்து செல்லும் மலைகள் காடுகளையும் கண்டனர். ஊற்று நீரின் அருகே சென்று, ஊற்று நீரின் சுவை பார்த்து மகிழ்ந்தனர். திடீரென, தம்முடன் வந்த ஒரு ஓட்டகம் ஊற்று நீரின் ஓட்டத்தில் படுத்து, அதன் இரு முதுகு உச்சிகளும் நீர்ப்பரப்பின் மேல் நீடித்து வெள்ளை கல்லாகியுள்ளதை அவர்கள் கண்டார்கள்.

இக்"குரான் திருமறைக்கு"ச் சமமானவை, உலகில் மூன்று உள்ளன. முன்னாள் சோவியத்யூனியன், பிரிட்டன், சீனா ஆகிய நாடுகள் ஒவ்வொன்றிலும் கை எழுத்து பிரதி ஒன்று உள்ளது. 1954ம் ஆண்டில் சிரிய நாட்டில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தொன் நூல் படைப்புகளின் கண்காட்சியில், எங்கள் இந்த "குரான் திருமறையின்" கை எழுத்து பிரதி, சீனாவின் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. உண்மையில், இது சீனாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி காண்பிக்கப்பட்டது. 1962ம் ஆண்டில் ஈரானிலும் இது போன்ற கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டது" என்று அவர் கூறினார். "குரான் திருமறையின்" கை எழுத்து பிரதி, 700 ஆண்டுகளை கடந்து விட்டது. பல இடங்களில் எழுத்துக்கள் தெளிவற்ற நிலையில் உள்ளன. காப்பாற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. நீண்டகாலமாக, சீன அரசின் தொடர்புடைய வாரியங்கள், இக்"குரான் திருமறை" மீது பெரும் கவனம் செலுத்தின. சீனத் தேசிய தொல் பொருள் பணியகமும், இத்திருமறையைப் பாதுகாப்பதற்காக, 15 லட்சம் யுவானை முதலீடு செய்யவுள்ளது. அண்மையில், சீனாவின் தொல் பொருள் பாதுகாப்பு நிபுணர் Xi San Cai, நான் ஜிங் அருங்காட்சியகத்தின் இதர சில நிபுணர்களுக்கு தலைமை தாங்கி, இக்"குரான் திருமறை" பிரதியைப் பாதுகாத்து மேம்படுத்தினார்.


சீராக்கப்பட்டுள்ள இந்த "குரான் திருமறை" சிங்ஹேய் மாநிலத்து சால இனத் தன்னாட்சி மாவட்டத்தில் புதிதாக கட்டியமைக்கப்பட்ட "குரான் திருமறை" அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மக்களுக்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தவிரவும், நிபுணர்கள், நவீன தொழில் நுட்பத்தைக் கொண்டு, மற்றொரு பிரதியை படியாக்கம் செய்யவுள்ளனர்.
நங்கின் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த தொல் பொருள் பாதுகாப்பு நிபுணர் Xi San Cai பேசுகையில், சால இனத்தின் இக்"குரான் திருமறையை" பழுதுபார்த்து செப்பனிடும் பணி பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார். இக்"குரான் திருமறை" சால இனத்தின் தோற்றம், வரலாறு ஆகியவற்றை ஆராய்ச்சி செய்வதற்கு முக்கிய பங்களிக்கும். அன்றி, உலக இஸ்லாமிய மதப் பண்பாட்டின் ஆராய்ச்சிக்கும் இது பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
videolink: cctv
0 comments:
Post a Comment