மாபெரும் தீவுத்திடல் போராட்டம், களத்திற்கு தயாராகி விட்டீர்களா? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உங்களை அழைக்கிறது.
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவுமாட்டான்: அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டுவிடவுமாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபடுகிறவரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபடுகிறான். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஆதாரம் புகாரி:6951
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சிந்தியுங்கள் சகோதரர்களே:
வஞ்சிக்கப்பட்ட சமுதாயமாய் அரை நூற்றாண்டுகள் வாழ்ந்ததுப் போதாதா ? நம்முடைய சந்ததிகளும் வாழ்நாள் முழுவதும் வஞ்சிக்கப்பட்ட சமுதாயமாய் வாழ வேண்டுமா ? !தீவிரவாதிகள் என்ற அவப்பெயரை அரை நூற்றாண்டுகள் சுமந்ததுப் போதாதா?நம்முடைய சந்ததிகளும் தீவிரவாதிகள் என்ற அவப்பெயரை சுமக்க வேண்டுமா?
சிந்தியுங்கள் சகோதரர்களே:
இயற்கை வளம் மிக்க ஈர மண்ணில் பிறந்துவிட்டு காசுக்காக கெந்தக மண்ணில் வெந்து மடிந்ததுப் போதாதா? நம்முடைய சந்ததிகளும் காசுக்காக கெந்தக பூமியில் வெந்து மடிய வேண்டுமா?
சிந்தியுங்கள் சகோதரர்களே:
மதச்சார்பின்மை வேடமிடும் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளிடம் இதுவரை ஏமாந்ததுப் போதாதா? நம்முடைய சந்ததிகளும் தொடர்ந்து ஏமாற வேண்டுமா? ஏமாந்ததுப் போதும்! இனியும் ஏமாற மாட்டோம்!ஏமாறுவது இறை நம்பிக்கையாளனுக்கு அழகுமல்ல! இறுதி முடிவெடுக்க குடும்பத்துடன் தீவுத்திடலை நோக்கி அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்!
ஜூலை 4க்கு இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால் தீவுத்திடல் போராட்ட களத்திற்கு உங்களை தயார் படுத்தி விட்டீர்களா? போராட்ட களத்திற்கு செல்வதற்கு முன் நம்முடைய பாட்டன் முப்பாட்டன்கள் சுதந்திரப் போராட்டத்திற்காகவும், இந்திய தேச நலனிற்காகவும் உண்மையாக உழைத்ததற்கு சுதந்திர இந்தியா அவர்களுக்கு வழங்கிய (0) சன்மானத்தையும் நிணைவு கூர்ந்து விட்டு தீவுத்திடல் நோக்கி வீர நடைப் போடுங்கள்.
மும்பை:பிரிட்டனை தொடர்ந்து தற்போது கனடாவிலும் டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.டாக்டர் ஜாகிர் நாயக் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள டாக்டர் ஜாகிர், பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதை தொடர்ந்து, தான் வெளி உறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை இத்தடைகளை அகற்ற உதவுமாறு கேட்டுக்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.
கனடா தேசிய பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள அந்த செய்தியில், பிரபல இந்திய முஸ்லீம் பேச்சாளர் ஒருவர் கடந்த வாரம் பிரிட்டனில் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இனி கனடாவிலும் அவர் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, டாக்டர் ஜாகிர் நாயக் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்தார். தன் வீடியோ கேசட் ஒன்றை செய்தியாளர்களிடம் ஒப்படைத்த நாயக், தன் கருத்துக்கள் திரித்து எடுத்துக் கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனைத் தொடர்ந்து கனடாவிலும் தான் தடை செய்யப்படுள்ளதற்கு அரசியல் பின்னணிகள் தான் காரணம் என்று நாயக் மேலும் விளக்கினார். வரும் வாரங்களில் ஐ.ஆர்.எப். நிகழ்ச்சி ஒன்று கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், டாக்டர் ஜாகிர் நாயக் தடை செய்யப்பட்டுள்ளது கனடா முஸ்லீம்களிற்கு மட்டுமல்லாமல் மற்ற மதத்தார்களையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
லண்டன் : உலக அமைதிக்காக பிரபல இந்திய இஸ்லாமிய பிராசரகர் ஜாகிர் நாயக் வருடந்தோறும் பீஸ் எனும் பெயரில் கருத்தரங்கத்தை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடத்தி வருகிறார். அப்படி ஒரு மாநாடு கடந்த வாரம் லண்டனில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் ஜாகிர் நாயக் மறைமுகமாக தீவிரவாதத்திற்கு துணை போவதாக கூறி இங்கிலாந்து அரசாங்கம் அவருக்கு தடை விதித்திருந்ததை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.
தற்போது அக்கருத்தரங்குக்கு வருகை தரவிருந்த பல இஸ்லாமிய பிராசரகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. குறிப்பாக தென் ஆப்பிரிக்காவிலிருந்து அரீப் இஸ்லாம் எனும் பிரசாரகருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அது போல் கனடாவை சேர்ந்த தற்போது கத்தாரில் வசிக்கும் பிரபல இஸ்லாமிய பிராசரகரான பிலால் பிலிப்ஸூம் லண்டன் விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜாகிர் நாயக்குக்காவது வருவதற்கு முன் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் தான் கடந்த சனிக்கிழமை காலை 8 மணிக்கு விமான நிலையத்தில் இறங்கியதாகவும் பின் காலை 11 மணிக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் கூறினார். மேலும் தங்களின் அமைதிக்கான மாநாட்டை தடை செய்வதன் மூலம் அவ்வெற்றிடத்தை தீவிர போக்குடையவர்கள் ஆக்கிரமிப்பதிற்கு இவர்களே காரணமாக இருக்கிறார்கள்.
தங்கள் கால்களை தாங்களே சுட்டு கொள்வதாக சொன்ன பிலால் பிலிப்ஸ் ஒரு விதத்தில் இதுவும் நன்மைக்கே என்றும் இவர்கள் வெறுத்த போதிலும் இறைவன் தன் ஒளியை பூரணமாக்கி வைப்பான் என்றும் கூறினார். இது குறித்து கருத்து தெரிவித்த ஒரு இணைய தள நிபுணர் கூகுள் தேடலில் ஜாகிர் நாயக் மற்றும் பீஸ் மாநாடு அதிகம் பார்க்கப்படுவதற்கும் இஸ்லாத்தை குறித்த தேடல்கள் இணையத்தில் அதிகரிப்பதற்குமே இது உதவும் என்று கூறினார்.
Saudi Arabia has unveiled its first locally-built car, an all-terrain vehicle called "Ghazal 1," and plans to manufacture 20,000 units a year, its promoters said on Tuesday.
King Abdullah unveiled a carbon fibre prototype of the new car, which was built by the King Saud University (KSU) in Riyadh, on Monday in Jeddah on the Red Sea, project official Abderrahman al-Ahmari told AFP.
The vehicle is designed for the desert climate of Gulf countries and was produced "in collaboration with several major companies, including Motorola, Mercedes-Benz and Magna Canada," Arab News quoted Said Darwish, an industrial engineering professor at KSU, as saying.
Production of 20,000 units a year is planned, Darwish said.
Saudis contributed "90 percent of the design of the Ghazal 1 and 60 percent of its fabrication," Ahmari said.
"Contacts are ongoing with Saudi investors for the mass production of the Ghazal 1," he said, adding that he hoped the project would be achieved within two to three years.
"This is a national strategic product and KSU holds its patent rights and intellectual property rights," university president Abdullah al-Othman said, also quoted in Arab News.
The project for the car, which is named after the Arabic for deer, would require a 500-million-dollar investment, according to unofficial estimates.
Saudi Arabia, the world's largest exporter of crude, seeks to develop local industry, particularly by training its own managers and experts, and by technology transfer.
சவூதியில் தயாராகும் முதல் கார்.
ரியாத் : முழுக்க முழுக்க சவூதியிலேயே தயாராகும் முதல் காரை மன்னர் சவூத் பல்கலைகழக விஞ்ஞானிகளின் உருவாக்கியுள்ளனர். பாலைவன மானான கஜலை நினைவுபடுத்தும் விதத்தில் கஜல்1 என்று பெயரிடப்பட்டுள்ளன காரை மன்னர் அப்துல்லா பார்வையிட்டார்.
பாலைவன சூழலுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது இக்கார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலைவனம் உள்ளிட்ட எல்லா சாலைகளிலும் பயன்படுத்த கூடிய வகையிலும் உள்ளே பயணிகளுக்கு எல்லா வித செளகரியங்களும் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாக சவூத் பல்கலைகழக பேராசிரியர் சையத் தார்விஷ் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே சவூதி அரேபியா வழமையான எண்ணைய் உற்பத்தியை சார்ந்திருப்பதிலிருந்து பிற துறைகளில் முதலீடு செய்து வருகிறது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் வளைகுடாவில் சிறப்பான முறையில் பங்களிக்க முயற்சிக்கின்றது. ஆண்டுக்கு 20,000 கார்கள் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
உலகையே இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ள விஷயம் ஆப்கானிஸ்தானில் பெரும் கனிமத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான். அமெரிக்கா வின் முயற்சியால் கண்டறியப்பட்டுள்ள இதன் மதிப்பு மட்டும் 1 ட்ரில்லியன் டாலர்கள் என முதல் நிலைத் தகவல்கள் கூறுகின்றன. முழுமையான விவரங்கள் வந்தால் அதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை நிமிர்த்தும் பெரும் புதையல் இது என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள்.
இரும்பு, தாமிரம், தங்கம், கோபால்ட் மற்றும் லித்தியம் போன்ற கனிமங்களின் தாதுக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதை முதலில் ‘ஸ்மெல் பண்ணவர்கள்’ அமெரிக்காவின் பாதுகாப்பு த்துறையான பெண்டகன் தான்.
இந்தக் கனிமங்கள் தவிர, தொழில்துறையின் அடிப்படையை உருவாக்கத் தேவையான அத்தனை தாதுக்களையும் பேரளவில் கண்டுபிடித்துள்ளனர்.
இப்படியொரு தாதுப் படுகை, பெரும் பொக்கிஷம் தங்கள் நாட்டில் இருப்பதே தெரியாமல் போரிலும் மதத் தீவிரவாதத்திலும் காலத்தைக் கழித்து வந்துள்ளனர் ஆப்கன் ஆட்சியாளர்கள். இப்போதும் கூட தாதுப் புதையலின் ஒரு பகுதிதான் ஆப்கன் அரசுக்கு சொல்லப்பட்டுள்ளது. மீதி விவரங்களை அமெரிக்கா ரகசியமாக வைத்துள்ளது.
ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படுகை கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் கூட ஆப்கன் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கைத் தரமும் எங்கேயோ போய்விட்டிருக்கும்.
‘இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. உலகின் மிகப் பெரிய சுரங்க மையமாக இனி ஆப்கானிஸ்தான் திகழும்’ என்கிறார் ஒரு அதிகாரி. லித்தியம் கனிமத்துக்கு ஒட்டுமொத்த இருப்பிடமாகத் திகழும் அளவுக்கு ஆப்கானிஸ்தானி்ல் இருப்பு காணப்படுகிறதாம்.
இப்போது லித்தியம் உற்பத்தியில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. அதை ஜஸ்ட் லைக் தட் ஓவர்டேக் செய்துவிடும் ஆப்கானிஸ்தான் என்கிறார்கள்.
ஆனால் இந்த கனிமங்களை தோண்டி எடுக்க பெரும் முதலீடு அவசியமாக உள்ளது. தேவையான முதலீடு கிடைத்தால், அடுத்த சில வருடங்களிலேயே ஆப்கன் நாடு உலகின் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் அதிசயத்தைப் பார்க்கத்தான் போகிறீர்கள் என்கிறது அமெரிக்கா.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மத்திய பாதுகாப்பு கமாண்டர் ஜெனரல் டேவிட் எச் பெட்ரோஸ் இதுகுறித்து கூறுகையில்,
"ஆப்கானிஸ்தானில் இப்போது கண்டறிந்துள்ள தாதுக்களின் அளவு, வெரைட்டி, தரம் என்னை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. ஆனால் இதைத் தோண்டி எடுப்பது, பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் புரியாமலில்லை. ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொக்கிஷம் பெரிய விஷயம்.
மாபெரும் தொழிற்சாலைகள் அமைந்து, ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் தருணம் நெருங்கிவிட்டதால், ஆப்கானிஸ்தான் பற்றிய இமேஜே சட்டென்று மாறும் என்றார்.
இந்த கனிமப் புதையலில் மதிப்பு என்ன?:
அதைத் தெரிந்து கொள்ளும் முன், ஆப்கானிஸ்தானின் மொத்த வருவாய் எவ்வளவு என்று பார்க்கலாம்.
இந்த நாட்டின் பொருளாதாரம் பெருமளவு சார்ந்திருப்பது… விவசாயத்தையோ, தொழிற்சாலைகளையோ அல்ல. ஓப்பியம் மற்றும் அபின் தயாரிப்பை!
சர்வதேச அளஷவில் கொடிய போதைப் பொருள்கள் அனைத்துக்கும் தாயகமாகத் திகழ்கிறது ஆப்கானிஸ்தான். மேற்கு ஆசியாவின் போதை மருந்து முக்கோணத்தின் மையப் பகுதி ஆப்கானிஸ்தான். இன்று நேற்றல்ல…பண்டைய காலத்திலிருந்தே ஓப்பியம் தயாரிப்பது ஆப்கானிஸ்தானில் குடிசைத் தொழில் மாதிரி.
இதற்கடுத்த வருவாய் ஆதாரம், முன்பு ரஷ்ய உதவி. இப்போது அமெரிக்கா தரும் நிதியுதவி.
இப்படி சகல வழிகளிலும் ஆப்கானிஸ்தானின் மொத்த வருவாய் அளவே 12 பில்லியன்கள்தான்! அதாவது இந்த 12 பில்லியன் டாலர்தான் ஆப்கானிஸ்தானின் ஜிடிபி (gross domestic production!). ஒரு சர்வதேச நடுத்தர ஐ.டி. நிறுவனத்தின் லாபத்தின் அளவும் இதுதான்.
ஆனால், கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிமத்தின் மதிப்பு 1 ட்ரில்லியன் டாலரைத் தாண்டும் என்கிறது ஆரம்பகட்ட கணக்கு. பில்லியன் கணக்கில் சொன்னால் 1000 பில்லியன் டாலர்கள். இன்றைய தேதிக்கு இந்தியாவின் ஜிடிபியே 1.23 ட்ரில்லியன்தான்!!.
இவ்வளவு பெரிய புதையலை எப்படிப் பயன்படுத்தப் போகிறது ஆப்கானிஸ்தான் என்பதுதான் இப்போது எழுந்துள்ள ‘பில்லியன் டாலர் கேள்வி’!. அல்லது இதை அமெரிக்கா எப்படி மறைமுகமாக சுருட்டப் போகிறது என்பது தான் ‘ட்ரில்லியன் டாலர் கேள்வி!’.
ஆப்கானிஸ்தானில் இன்னமும் அமைதி திரும்பவில்லை. மீண்டும் தலிபான்கள் தலைதூக்கும் நிலை. நாட்டின் ஒரு பகுதியில் இன்னும் தலிபான்களின் ஆதிக்கம் உள்ளது. இன்னொரு பக்கம் லஞ்சமும் நிர்வாகச் சீர்கேடும் ஆப்கானிஸ்தானையே விழுங்கிவிடும் சூழல் உள்ளது.
இந்த கனிமத் தாதின் ஒரு சிறு பகுதியை வெற்றிகரமாக வெளியில் எடுத்துப் பயன்படுத்தினாலே, நாடு பெருமளவு நிமிர்ந்துவிட வாய்ப்புள்ள நிலையில், இயற்கை அளித்துள்ள இந்த நற்கொடையை எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்களோ? என கவலை தெரிவித்துள்ளனர் பொருளியலறிஞர்கள்.
இந்த தாது விஷயத்தில் அமெரிக்கா எப்படியெல்லாம் ஆப்கானிஸ்தானில் விளையாடப் போகிறது என்பதும் முக்கியமான கேள்வியாக நிற்கிறது.
ஆனால் இந்த விஷயத்தில் அமெரிக்காவும் பயப்படும் சமாச்சாரம் ஒன்று அங்கே நிகழ்ந்து வருகிறது. அதுதான் சீனாவின் எதிர்பாராத தலையீடு. இந்த இயற்கைத் தாது புதையல் விஷயத்தில் உதவிக்கு வருகிறோம் என வரிந்து கொண்டு சீனா நுழைய ஆரம்பித்துவிட்டதை அச்சத்துடனே பார்க்கின்றனர் அமெரிக்க அதிகாரிகள்.
ஆப்கானிஸ்தானில் தாமிர தாது தோண்டியெடுக்கும் முழு உரிமையையும் சீனாவுக்கு தாரைவார்க்க ஆப்கன் அமைச்சர் ஒருவரே 30 மில்லியன் டாலர்கள் லஞ்சம் பெற்றுள்ளார். இன்னும் அவர் அமைச்சராகவே தொடர்வதும் அதை அதிபர் அமீத் கர்ஸாய் அனுமதிப்பதும், அமெரிக்கர்கள் பயத்தை அதிகரித்துள்ளது.
ஆனால், பெரும்பகுதி கனிமங்களை கண்டுபிடித்ததே அமெரிக்காதான் என்பதால் முன்னுரிமை அவர்களுக்கே தரப்படும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.
அமெரிக்காவும் சீனாவும் இந்த கனிமங்கள் மீது ஆசைப் பார்வை பார்ப்பதைப் பார்த்தால், ‘தேனெடுத்தவன் புறங்கையை நக்கிய கதையாகுமா அல்லது தேனையே எடுத்துக் கொண்டு வெறும் புறங்கையை மட்டும் ஆப்கன் மக்களுக்கு காட்டப் போகிறார்களா என்பது தெரியவில்லை.
கடந்த ஓரிரு வாரங்களில் தான் இந்த ஆப்கான் கனிம சமாச்சாரத்தை வெளியில் கசிய விட்டுள்ளது அமெரிக்கா.
‘Unobtanium’ என்ற கற்பனையான கனிமத்தை எடுக்க பண்டோரா கிரகத்தையே அமெரிக்கப் படைகள் ஆக்கிரமித்து, அதன் மக்களை ஒழித்துக் கட்டும் கற்பனைக் கதையைத் தான் ‘அவ்தார்’ என்ற படமாக எடுத்தார் ஜேம்ஸ் கேமரூன். 3 டி சமாச்சாரம், அன்னிய கிரகவாசிகள் என்று கதை போனதால் கேமரூன் சொல்ல வந்த விஷயம் (கதையின் கரு ) பெரிதாகப் பேசப்படவில்லை.
இப்போது ஆப்கானிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிம வளம் கிட்டத்தட்ட பண்டோரா கிரக கதை மாதிரி ஆகிவிடுமோ என்ற அச்சம் இப்போதே பரவ ஆரம்பித்துவிட்டது. நன்றி தட்ஸ்தமிழ்.காம்
அஜ்மல் கஸாபிற்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டு 26/11 மும்பை தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இது இவ்வாறு தான் நடக்கும் என்பதை அனைவரும் அறிவர். ஆனால் மும்பை தாக்குதலுக்கு ஒரு மிகப்பெரிய சங்கிலித்தொடர் காரணமாக இருந்துள்ளது. அவை கண்டுபிடிக்கபடவில்லை. அந்த வழக்கில் சந்தேகத்திற்கிடமாக ஏராளமான முரண்பாடுகள் இருக்கின்றன.
தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளல்ல, மாறாக யூதர்களே என்றும் அவர்கள் நரிமன் ஹவுசில் தங்கி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்துள்ளன. 26/11 அன்று லியோபோல்டு கஃபேயில் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட அனாமிகா குப்தா என்பவர் கோர்ட்டில் அளித்த சாட்சியத்தை காவல்துறை கண்டுகொல்லாததேன்?தீவிரவாதிகளின் அடையாள அணிவகுப்பிற்கு நேரடி சாட்சிகளை அழைக்காததேன்? என்று பலவித கேள்விகள் மக்களிடத்தில் எழுந்துள்ளன.கடல் வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் வந்திறங்கினர் என காவல்துறை சொல்ல, அனாமிகா குப்தா, அஜ்மல் கஸாபை தாக்குதல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே யூதர்களின் இருப்பிடத்தில் வைத்து பார்த்தேன் என்று சாட்சி கூறியுள்ளார். ஆனால் அதை போலீசார் கண்டுகொள்ளவே இல்லை. போலிஸ் மட்டுமல்ல, தொலைக்காட்சி சேனல்கள் கூட அவரது பேட்டியை ஒளிபரப்பவில்லை.மும்பையில் பியூட்டிசியனாக இருக்கும் அனாமிகா குப்தா, மும்பை தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக அஜ்மல் கஸாப் உட்பட நான்கு பேரை கொலாபா பகுதியிலுள்ள யூதர்களின் தலைமையகமான நரிமன் ஹவுசில் வைத்து பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார். நரிமன் ஹவுசும் தாக்குதலுக்கு உட்பட்டிருந்தது.தாக்குதலை நடத்தியது நரிமன் ஹவுஸ் தான் என்றும் அதுபற்றிய விசாரணையில் போலிஸ் கண்களை மூடிக்கொள்கிறது என்றும் அந்த விசாரணையில் என்னுடைய சாட்சியத்தை ஏன் ஏற்கவில்லை என்றும் அனாமிகா கேள்வி எழுப்பி உள்ளார்.
நரிமன் ஹவுசின் அடுத்து இருக்கும் கோளிவாடாவிலுள்ள ஆஸாபாய் கட்டிடத்தில்தான் அனாமிகா வசித்து வந்தார். அவரும் அவரது தோழிகளான ரசிகா உபாத்யாய், மீனாக்ஷி தத்தானி ஆகியோர் லியோபோல்டு கஃபேயின் தினசரி வாடிக்கையாளர்கள்.வழக்கம் போல 2008 நவம்பர் 26ம் தேதி இரவில் அனாமிகாவும் தோழிகளும் அங்கு பேசிக்கொண்டிருந்த வேளையில்தான் வெடிகுண்டு தாக்குதலும் துப்பாக்கிசூடும் நடைபெற்றது. அந்த தாக்குதலில் அனாமிகாவின் வயிற்றில் மூன்று புல்லட்டுகள் துளைத்தன. வெடிகுண்டுகளால் கால்களிலும் காயம் ஏற்ப்பட்டது. ரசிகாவின் இடது கையிலும் குண்டு பாய்ந்தது.வெடிகுண்டுகளால் சரிகாவின் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சைக்குப்பின் மறு வாழ்வு பெற்ற அனாமிகா, தான் மீண்டு வந்தது முதல் சில உண்மைகளை சொல்லி வருகிறார். ஆனால் போலிஸ் அதை சட்டை செய்யவில்லை. அதுமட்டுமல்ல நரிமன் ஹவுசில் தீவிரவாதிகளை கண்டேன் என்று வெளியில் சொல்லாதீர்கள் என்று உபதேசமும் செய்துள்ளது. நடந்த சம்பவத்தை அவரே கூறுவதை கேளுங்கள்...
மும்பை தாக்குதல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அதிகாலை 1:30 மணிக்கு கூட்டாளிகளுடன் லியோபோல்டு கஃபேக்கு முன்பிளிருக்கும் பாண், சிகரெட் கடைக்கு போகும்போது நரிமன் ஹவுசில் இருந்து நான்கு பேர் மிகவும் அழகான பைக்கில் வந்தனர். அந்த விலையுயர்ந்த பைக்கின் அழகுதான் அதில் பயணம் செய்தவர்களை பார்க்க தூண்டியது. அவை சிவப்பும் கருப்பும் நிறமுள்ள BMW பைக்குகள்.நான் என்னுடைய கஸின் நடாசாவிடம் இந்த இளைஞர்கள் இங்கேயா தங்குகிறார்கள் என கேட்டபோது அவள் இருக்கலாம், எனக்கு தெரியாது என்றாள். அந்த இளைஞர்கள் பைக்கில் ஒரு ரவுண்டு அடித்து நேராக நரிமன் ஹவுஸ் சென்றார்கள். அதற்கு அடுத்த நாட்களிலும் அந்த பைக்குகளையும் அந்த நால்வரையும் பார்க்க முடிந்தது. அதில் ஒருவன் அஜ்மல் கஸாப். அவனை மிக அருகிலேயே பார்த்தேன். ஐ விட்னஸ் ரசிகா உபாத்யாய் : நாங்கள் அந்த தீவிரவாதிகளை தாக்குதல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே நரிமன் ஹவுசில் பார்த்தோம். 26/11 அன்று நாங்கள் லியோபோல்டு கஃபேயில் இருந்தோம். திடீரென எனக்கு பின்னால் இருந்த ஒருவன் எதையோ எறிந்தபோது அருகிலிருந்த ஒருவரிடம் என்னாச்சு என்று கேட்டேன். அவர் கட்டிடம் தீ பிடித்துவிட்டது என்றார். நான் ஏதோ குரூப் சண்டை நடக்கிறது என நினைத்து கொண்டேன். எனது உடலில் ஏராளமான காயம் ஏற்ப்பட்டது.
நரிமன் இல்லத்திற்கு வந்த டிரக் :
தாக்குதலுக்கு முந்தைய நாள் நாடு இரவில் லோடு ஏற்றப்பட ஒரு டிரக் யூதர்களின் இருப்பிடமான நரிமன் ஹவூசுக்கு வந்ததாகவும் அதில் ஆயுதங்கள் இருந்ததா என்பது தெரியவில்லை என்றும் அதன் எதிரிலுள்ள ரெக்ஸ் பேக்கரியின் உரிமையாளர் டாக்டர். குரேஷ் பி சொராபி குறிப்பிடுகிறார்.சம்பவத்தன்று இரவில் நரிமன் ஹவூசுக்கு லோடு கொண்டு வந்த டிரக் ரெக்ஸ் பேக்கரியின் பெயர் பலகையில் இடித்துவிட, பேக்கரி ஊழியர்களுக்கும் டிரக் டிரைவருக்கும் தகராறு ஏற்பட்டது. நரிமன் ஹவுசின் புரோகிதரான (ரப்பி) காபிரியேலின் மனைவி ரவிகா இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியுள்ளார். தாக்குதலுக்கு முந்தைய நாள் இரவில் நரிமன் ஹவூசுக்கு ஏராளமான கோழி இறைச்சி சப்ளை செய்யப்பட்டதாக தாஜ் சிக்கன் ஸ்டால் ஊழியர்கள் கூறியுள்ளனர். படகில் வந்த தீவிரவாதிகள் : தீவிரவாதிகள் படகில் வந்ததை கண்டதாக சொன்ன மீனவ பெண், போலீஸ் ஏற்பாடு செய்த தீவிரவாதிகளின் அடையாள அணிவகுப்பிற்க்குப்பின், படகில் வந்த கூட்டத்தில் கஸாப் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அன்று அவன் முடியை நீளமாக வைத்திருந்தான். கறுத்த டி சர்ட்டும் நீல நிற கார்கோ பேண்ட்டும் ஸ்போர்ட்ஸ் ஷூவும் அணிந்திருந்தான். அவர்களில் மிகவும் அழகான ஒருவன் இருந்தான். இரண்டு பக்கமும் கிராப் செய்து நடுவில் முடி வைத்திருந்தான். அந்த கூட்டத்தில் வயதான வெளிநாட்டினரும் இருந்தனர். சம்பவம் நடந்த அன்று லியோபோல்டு கஃபேயில் நாங்கள் உட்கார்ந்திருந்த மேசைக்கருகில் அந்த அழகிய வாலிபனை நான் பார்த்தேன். எதிரில் இருக்கும் சரிகாவை போட்டோ எடுப்பதுபோல் பாவனை செய்து அவனை போட்டோ எடுத்தேன். அந்த நேரத்தில்தான் எதிர்பாராத அந்த சம்பவம் நடந்தது.அந்த அழகிய வாலிபன் திடீரென கீழே குனிந்து தனது பேக்கிலிருந்து எதையோ எடுத்து அடுத்திருக்கும் பணம் செலுத்தும் கவுண்டரில் வீசினான். அவை வெடிகுண்டுகள். பின்னர் சரமாரியாக புல்லட்கள் பறந்து வந்தன. ஜெஜெ மருத்துவமனையில் மயக்கம் தெளிந்து எழுந்த போதுதான் உயிரோடு பிடிக்கப்பட்டது கஸாப் என்பதை அறிந்தேன். சம்பவம் நடந்த அன்று கடல்வழியாக 10 பேர் வந்தனர் என்று போலீஸ் கூறுவது உண்மையாக இருக்கலாம். ஆனால் அதில் கஸாப் மற்றும் லியோபோல்டு கஃபேயில் தாக்குதல் நடத்தியவனும் உண்டு என்பதை ஒருக்காலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் நரிமன் ஹவுசில் கஸாப் மற்றும் பைக்கில் வந்த மூவர் மட்டுமல்ல இன்னும் பலருண்டு என நான் அடித்துக்கூறுவேன். முப்பதுக்கு மேற்ப்பட்டோர் இதில் உண்டு. 25ம் தேதி காலையில் நரிமன் ஹவுசின் எதிர் வீட்டில் வசிக்கும் நஸ்லி கான் என்ற எனது தோழி வீட்டிற்கு சென்றபோது நரிமன் ஹவுசின் மொட்டை மாடியில் இளைஞர்கள் பலர் உடற்பயிற்சி செய்வதை பார்த்தேன். இஸ்ரேலியர்களை தவிர அங்கு வேறு நாட்டினர் செல்லமாட்டார்கள், ஆதலால் நாடு சுற்றிப்பார்க்க வந்த இஸ்ரேலிய இளைஞர்கள்களாக இருக்கலாம் என்று அப்பகுதியினர் கருதியுள்ளனர்.
STAR TV, NDTV, ZEE NEWS, TIMES OF INDIA, HINDUSTAN TIMES போன்றவற்றிற்கு இந்த உண்மைகளை நான் கூறியபோதும் அவர்கள் அதை ஒளிபரப்பவில்லை. ஏன் என கேட்டபோது நீங்கள் சொன்னதை நாங்கள் நம்புகிறோம், ஆனால் எங்களுடைய மேலிடம் அதை அனுமதிக்கவில்லை என்று சொன்னார்கள். ONE NEWS தொலைக்காட்சியில் இந்த உண்மைகளை வெளிப்படுத்தியவுடன் போலீஸ் வந்து என்னை விசாரித்தார்கள். எனினும் எதுவும் நடந்திடவில்லை. நவம்பரில் இரண்டாவது விசாரணை என்னிடம் நடந்தது.குற்றப்பிரிவின் அடிஷனல் போலீஸ் கமிஷனர் தேவன் பாரதியின் தலைமையில் நடந்த அந்த விசாரணையில் நான் இவற்றை சொன்னபோது, போலீஸ் ஏற்கனவே இது பாகிஸ்தானியரின் சதி என முடிவுசெய்துவிட்டதால் அதிகபிரசங்கித்தனமாக செய்திகளை சொல்லி போலிசை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று தேவன் பாரதி குறிப்பிட்டார்.பின்னர் எனக்கு மனநிலை சரியில்லை என்றும் இவர் விளம்பரத்திற்காக இவ்வாறு சொல்கிறார் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது. எனது தாய் உட்பட எனது குடும்பத்தினரை மிரட்டுகின்றனர். கஸாப், லியோபோல்டில் தாக்குதல் நடத்தியவன், பைக்கில் வந்தவர்கள் போன்ற தீவிரவாதிகளை எனக்கு தெரியும் என்றபோதும் தீவிரவாதிகளை அடையாளம் கட்டும் அணிவகுப்பிற்கு போலீஸ் என்னை அழைக்கவில்லை” என்றும் அனாமிகா குறிப்பிடுகிறார். அனாமிகா கூறிய செய்திகளிலிருந்து மும்பை தாக்குதல் இந்தியாவிர்க்குள்ளேயே திட்டமிட்டு நடத்தப்பட்டதாக தெரிகின்றது. திடீரென வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால் இத்தகைய தாக்குதலை நடத்த முடியாது. மும்பையை நன்றாக அறிந்தவர்களால்தான் இதை செய்யமுடியும் என்று சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.கஸாப் மற்றும் கூட்டாளிகள் அங்கேயே தங்கியிருந்து தாக்குதலுக்கு இடத்தை தேர்வு செய்துள்ளனர் என்பது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.அமெரிக்க, இஸ்ரேலின் இந்த அராஜகங்களை கண்டுப்பிடித்து உலகுக்கு சொல்ல மத்திய அரசு தயங்குகிறதா, இல்லை மத்திய அரசுக்கு தெரியாமலேயே காவல்துறை இதை செய்கின்றதா என்பதையும் கண்டறிய வேண்டும். இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கும் கார்கரே கொலைக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய பாஜகவின் கூற்றை இச்சம்பவங்கள் பொய்யாக்கி இரண்டும் மிக நெருங்கிய தொடர்பு கொண்டவை என்பதை சொல்கின்றன.உலக மக்களை தயவு தாட்சனியமின்றி கொன்று குவித்து உலகை அச்சுறுத்திவரும் இஸ்ரேலை கண்டு காங்கிரஸ் தொடை நடுங்கினாலும் அதன் மிரட்டலுக்கு பயப்படாமல் உண்மையை வெளிக்கொணருபவர் இருக்கவே செய்கின்றனர். அனாமிகா ஒரு வீரப்பெண்மணி என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் கார்கரே தற்செயலாக தாக்கப்படவில்லை, அவர் திட்டமிட்டு கொல்லப்பட்டதாகவே அறிய முடிகிறது. இந்தியாவில் குண்டு வெடிப்புகளை நடத்தி அப்பாவி மக்களை கொன்ற இந்துத்துவ சக்திகளை கண்டுபிடித்து உலகுக்கு சொன்ன கார்க்கரேயை கொன்று அந்த பயங்கரவாதிகளை காப்பாற்ற யூதக்குழு உதவி செய்ததா? அல்லது யூதக்குழுவுடன் இந்துத்துவ பயங்கரவாதிகளும் கூட்டு சேர்ந்து இந்த தாக்குதலை நடத்தினார்களா என்பது போக போகத்தான் தெரியும். http://www.youtube.com/watch?v=zSWwg-2Jlog செய்தி: தலையங்கம் - உணர்வு வார இதழ் (MAY 21 – 27, 2010) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)
அறிக்கையின் முக்கிய அம்சங்கள் மக்கள் தொகை (பக்கம் 13)முஸ்லீம்கள் – 13.4 % (2001-ஆம் கணக்கெடுப்பு படி) முஸ்லீம்களின் கல்வி அறிவு (பக்கம் 16,17) 1. முஸ்லீம்களில் எழுதபடிக்க தெரிந்தவர்கள் – 59.1 %அதாவது 40.9% முஸ்லீம்களுக்கு எழுதபடிக்க தெரியாது. 2. முஸ்லீம்களில் 5 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் – 65.31% பேர் 3. முஸ்லீம்களில் 8-ஆம் வகுப்புவரை படித்தவர்கள் -15.14% (அதாவது 100-க்கு 85 பேர் 8-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்) 4. 10-ஆம் வகுப்பு வரை – 10.96% (அதாவது 100-க்கு 90 பேர் 10-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்) 5. 12-ஆம் வகுப்புவரை – 4.53% (அதாவது 100-க்கு 95 பேர் 12-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்) 6. பட்டம் (டிகிரி) படித்தவர்கள் – 3.6% பேர் குடி இருப்புகள் : (பக்கம் 23) 1. முஸ்லீம்களில் 34.63% பேர் குடிதண்ணீர், கழிப்பிட வசதி இல்லாத குடிசைகளில் வாழ்கின்றனர். 2. முஸ்லீம்களில் 41.2% பேர் அடிப்படைகட்டமைப்பு இல்லாத வீடுகளில் வாழ்கின்றனர். 3. மீதமுள்ள 23.76% முஸ்லீம்கள் பேர் மட்டுமே வசிக்கதகுந்த வீடுகளில்வாழ்கின்றனர். வறுமை கோட்டிற்க்குகீழ் வாழ்பவர்கள்: (பக்கம் 25) இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரைவிடவும் முஸ்லீம்கள்தான் அதிகம் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர். 1. நகர்புரத்தில் 27.22 % முஸ்லீம்கள் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்2. கிராமபுரத்தில் 36.92% முஸ்லீம்கள் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்அதாவது 100-க்கு 36 முஸ்லீம்கள் உணவு உடை, இருப்பிடம் இல்லாமல் வாழ தகுதி அற்ற நிலையில் வாழ்கின்றனர். வறுமைகோடு என்றால் என்ன ? அரசு 13 காரணிகளை வைத்துள்ளது இதில் மிகவும் பின் தங்கி இருப்பவர்கள் வறுமைகோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களாக கருதபடுவர்.ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையில் பக்கம் 69, 185 முதல் 188 வரை வறுமைகோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களின் தகுதிகள் வரையருக்கப்பட்டுள்ளன. இரண்டு ஆடைகளுக்கும் குறைவாக வைத்துள்ளவர்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு உண்பவர்கள். படிப்பறிவு இல்லாதவர்கள், நிலையான தங்குமிடம் இல்லாதவர்கள், வெட்ட வெளியில் கழிப்பிடம் செல்பவர்கள். வீட்டு உபகரணக்கள் (டிவி, ரேடியோ, மின் விசிறி, குக்கர் போன்றவை) இல்லாதவர்கள், (நிரந்தர வருமானம் இல்லாமல்) கூலி வேலை செய்பவர்கள், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாதவர்கள். இப்படி வாழ்பவர்களை அரசு வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ளவர்கள் என குறிப்பிடுகின்றது. இந்தியாவில் முஸ்லீம்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மேலே குறிப்பிடப்பட்ட நிலையில் (வறுமை கோட்டிற்க்கு கீழ்) வாழ்கின்றன்ர். தமிழகத்தில் 5 -இல் ஒரு முஸ்லீம் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றார் மாதவருமானம் (பக்கம் 30)ஒட்டுமொத்தமாக முஸ்லீம்களின் சராசரி மாத வருமானம் ரூ.1832.20 (ஒரு குடும்பத்திற்கு). பரிந்துரைகளில் சில : 1. இந்திய அரசியல் அமைப்புசட்டம் Article 16 (4) விதி -படி சிறுபாண்மையினருக்கு 15% இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். அதில் 10% முஸ்லீம்களுக்கு கொடுக்கவேண்டும். ஏனெனில் முஸ்லீம்கள் ஒட்டுமொத்த சிறுபான்மை ஜனதொகையில் 73% உள்ளனர். மீதமுள்ள 5 சதவீதம் பிற சிறுபாண்மை சமுதாயத்திற்க்கு கொடுக்கப்படவேண்டும். சில இடங்களில் 10% இடத்திற்க்கு முஸ்லீம்கள் கிடைக்கவில்லை என்றால் பிற சிறுபாண்மை சமுதாயத்திற்க்கு அந்த இடங்களை வழங்கவேண்டும்.(பெரும்பாண்மை சமுதாயத்திற்க்கு கொடுக்ககூடாது)- (பக்கம் 150,152) 2. கல்வி வேலைவாய்ப்பு மட்டும் அல்லாமல் அரசு அறிவிக்கும் திட்டங்களிலும் முஸ்லீம்களுக்கு 10% இட ஒதுக்கீடும். பிற சிறுபாண்மை மக்களுக்கு 5% இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும். (பக்கம் 152) 3. SC/ST-க்கு இருப்பது போல் முஸ்லீம்களுக்கும் கல்வி கற்பதர்க்கான Eligibility criteria தகுதிகள் (மதிப்பெண்) தளர்ந்தபட வேண்டும். விண்னப்பங்களின் விலையும் குறைக்கப்பட வேண்டும். கல்வி கட்டணமும் குறைக்கப்பட வேண்டும். 4. முஸ்லீம்களுக்காக அனைத்து மாநிலம், யூனியன் பிரதேசங்களிலும் பல்கலை கழங்களை அரசு நிறுவ வேண்டும். மேலும் இந்த பல்கலை கழங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி முஸ்லீம் மாணவர்களின் நலனுக்காக செயல்படும் பல்கலை கழகங்களாக மாற்றப்பட வேண்டும். (பக்கம் 151) 5. அங்கன்வாடிகள், நொவோதியா விதியாலயாஸ் (பள்ளிகள்) போன்றவை முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஏற்படுத்தபட வேண்டும். முஸ்லீம்களின் குழைந்தைகளை இந்த பள்ளிகளுக்கு அனுப்ப முஸ்லீம் குடும்பங்களுக்கு மானியம் வழங்க வேண்டும். (பக்கம் 151) 6. முஸ்லீம்/கிருத்துவர்களாக மதம் மாறும் தலித்துகளுக்கு அவர்களின் சலுகை மீண்டும் கிடைக்கபெற வழிவகை செய்ய வேண்டும் (பக்கம் 153). ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின் இரண்டாவது வால்யூமில் (பகுதி) பிற (அரசு மற்றும் அரசு சார) அமைப்புகள் நடத்திய ஆய்வுகளின் பரிந்துரைகளும் உள்ளது. அதில் தேர்ந்தெடுத சில பரிந்துரைகளில் தனது அறிக்கையில் குறிப்பிடுகின்றார். அந்த பரிந்துரைகளில் சில : 1. கல்வியில் பின் தங்கி உள்ள முஸ்லீம் மாணவர்களுக்கு வட்டி இல்லா கடன் உதவி வழங்க வேண்டும். (பக்கம் 48 வால்யூம் 2) 2. சொந்த வீடு இல்லாத ஏழை முஸ்லீம்களுக்கு இலவசமாக வீடு கட்டி தரவேண்டும். (பக்கம் 49 வால்யூம் 2) 3. (பொருளாதாரத்தில் பின் தங்கிய) முஸ்லீம்களுக்கு சமையல் கேஸ் இனைப்பு மிக குறைந்தவிலையில் வழங்கபட வேண்டும். (பக்கம் 49 வால்யூம் 2) 4. அரசின் நலதிட்ட உதவிகள் பெருவதில் முஸ்லீம்கள் பெருமளவில் பின் தங்கிஉள்ளனர், எனவே அரசின் நலதிட்ட உதவிகள் பற்றி முஸ்லீம்களுக்கு அரசு விளிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நல திட்ட திட்ட உதவிகள் முஸ்லீம்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். (பக்கம் 48 வால்யூம் 2) முஸ்லீம்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்க்கு இந்த பரிந்துரைகள் கட்டாயம் நடைமுறைபடுத்தபடவேண்டும். இந்த அறிக்கை அமல்படுத்தபட்டால் IAS,IPS, IFS , உள்துறை, உளவுதுறை என எல்லா மத்திய அரசு பணிகளிளும் 10-ல் ஒரு முஸ்லீம் இருக்க முடியும். காலத்தே பயிர் செய் எனபதுபோல் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி நாம் நமது குரலை அரசுக்கு உரக்க தெரிவிக்கவேண்டும். இந்திய அளவில் முஸ்லீம்களின் உரிமையை மீட்க நடக்கும் முதல் மாநாடாகவும் முன்னோடி மாநாடாகவும் திகழ தலைநகர் சென்னையை நோக்கி திரண்டு வருங்கள். இட ஒதுக்கீட்டால் பெரிதும் பயன் பெருவது மாணவர்கள் தான், எனவே மாணவர்களே! வருங்காலாத்தை வளமாக்கிட காலம் தாழ்த்தாமல் களப்பணியை ஆற்றிட களம் இறங்குங்கள். இன்றே ஆயத்தமாகுங்கள். மாநாட்டு வரலாற்றில் சரித்திரம் படைக்க மாநாட்டை மக்கள் வெள்ளம் ஆக்குவோம் இன்ஷா அல்லாஹ்.
தீவுத்திடலை நோக்கி அணி அணியாய்..இந்திய மண்ணை நேசித்து இந்தியாவுடன் தங்கிக் கொண்ட முஸ்லீம்கள் இந்திய அரசாங்கத்தால் கை விடப்பட்டக் காரணத்தால் பொருளாதாரத்தில் நலிவடைந்து வாழ்வதற்கு வழி தெரியாமல் அதிகமானோர் தங்களை கூலி வேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டு தங்களின் பிள்ளைகளையும் (வறுமையின் காரணத்தால் கல்வியைக் கொடுக்க முடியாமல்) பிஞ்சு வயதிலேயே கூலி வேலைகளில் ஈடுபடுத்தினர்.வீடு வாசல்கள், நில புலன்கள், ஆபரணங்கள் போன்றவற்றில் சிறிதை வைத்திருந்தவர்கள் அவற்றை விற்று அரபு நாடுகளுக்கு தங்களுடைய பிள்ளைகளை பயணம் அனுப்பி வைத்தனர். அதற்கும் வசதி பெறாதவர்கள் இஸ்லாம் தடை செய்த வட்டிக்குப் பணம் வாங்கியேனும் பயணம் அனுப்பி வைத்தனர். அவ்வாறு சென்றவர்களில் ( வறுமையின் காரணத்தால் படிக்க முடியாதவர்கள் பிரபல கம்பெனிகளில் உயர் பொறுப்புகளில் அமர முடியாமல் ) அங்கும் குறைவான சம்பளத்தில் இதே கூலி வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இன்னும் ஒப்பந்தப் படிவத்தில் குறிப்பிடப்பட்ட வேலையும், சம்பளமும் கொடுக்காமல் குறைவான சம்பளம் கொடுத்து, தங்குமிட வசதியும் முறையாக செய்து கொடுக்காமல் அலைக்கழிக்கப்பட்டனர். இதனால் பலர் ஒப்பந்த தாரரிடமிருந்து தலைமறைவாகி கூடுதல் சம்பளத்திற்கு கஸ்டமான வேலைகளை செய்து வந்தனர், உரிய அனுமதி இல்லாமல் மறைந்து வேலை செய்து கொண்டிருக்கும்பொழுது லேபர் செக்கிங்கில் மாட்டிக் கொள்பவர்களை அன்று உடுத்திய அழுக்கு உடையுடன் சிறையில் அடைக்கப்பட்டு அதேக் கோலத்தில் விமானத்தில் ஏற்றி ஊருக்கு அனுப்பும் பரிதாப நிலை. இதுப் போன்ற குறைகைளை தீர்க்க திராணியற்ற நிலையில் பாஸ்போர்ட் ரினீவலுக்காக மட்டும் ( அந்நிய செலாவனிக்காக ) வளைகுடாவில் இயங்கும் இந்தியத் தூதரகம். பிறந்த நாட்டிலும் நிம்மதியாக வாழ முடியாமல், பிழைப்பு தேடிச் சென்ற நாட்டிலும் நிம்மதியாகப் பொருளீட்ட முடியாமல் அலைக்கழிக்கப்படும் அவல நிலையை கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும், அன்றைய தவ்ஹீத் அறிஞர்களால் வழிநடத்தப்பட்ட தமுமுகவிற்கு தகவல்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தது இன்னும் அவர்களின் அவல நிலையை வீடியோவில் பதிவு செய்தும் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் அன்றைய தவ்ஹீத் அறிஞர்களால் வழி நடத்தப்பட்ட தமுமுகவின் சமுதாய, மற்றும் மார்க்க விளக்கக் கூட்டங்கள், அதன் அமைப்பாளர் அறிஞர் பிஜே முதல் அனைத்து தவ்ஹீத் அறிஞர்கள் வரை, மாநில, மாவட்ட சிறப்புப் பேச்சாளர்கள் முதல் கிளைகளின் பயிற்சிப் பேச்சாளர்கள் வரை இடைவிடாது இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தினர். மக்கள் சந்திக்கும் அனைத்து வழிகளிலும்.சமுதாயப் பிரச்சனைகளுக்கு பழநிபாபா போன்றவர்களையும், மார்க்க நிகழ்ச்சிகளுக்கு மௌலவிகள் என்றும் தரம் பிரித்து நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில், இரண்டுக்கும் தகுதியானவர்கள் மார்க்க அறிஞர்களே என்ற நிலையை உருவாக்கி அரசியல், மற்றும் ஆன்மீக மேடைகளில் இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தினர். ஜூம்ஆ பள்ளிவாசல்களின் குத்பா உரையில் குர்ஆன் - ஹதீஸ் வசனங்களை மட்டும் எழுதி வைத்து (உரையாக அல்லாமல்) வாசித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தவ்ஹீத் பள்ளிவாசல்களில் ஜூம்ஆ உரையில் வீரியத்துடன் இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசங்கம் நடத்தினர். பாட்டு கச்சேரிகள், கரகாட்டங்கள், போன்ற பொழுது போக்கு அம்சங்களுக்காக மட்டும் மக்கள் சந்திக்கும் தெருமுணைகளை பயன்படுத்தி வந்த காலகட்டத்தில் அதை சமுதாய, மற்றும் மார்க்க உபதேசங்களுக்காக மாற்றியமைத்து அதிலும் இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தினர்.
இவ்வாறாக • அரசியல் மேடைகள், • ஆன்மீக மேடைகள்,• தெருமுணைக் கூட்டங்கள், • ஜூம்ஆ உரைகள், என நகர்புறம் முதல், கிராமப் புறம் வரை உள்ள மக்கள் மத்தியில் அரசிடமிருந்து இடஒதுக்கீடு பெறுவதன் அவசியம் குறித்தத் தகவல்கள் தெரிந்து கொள்ளும் அளவுக்கு பிரச்சாரம் சென்றடைந்தப் பின்னர் அவர்களைத் திரட்டி தமிழகம் அதுவரை கண்டிராத வீரியமிக்கப் போராட்டங்களை, பேரணிகளை நடத்தினர். தீவிரவாதிகள் என்ற முத்திரைக் குத்தப்பட்ட முஸ்லீம்கள் பல லட்சத்திற்கு மேல் ஓரிடத்தில் குழுமிய பொழுதும், வாழ்வுரிமை கோரும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திக்கொண்டு சாரை, சாரையாக அணிவகுத்து சென்றுக் கொண்டிருந்த போதிலும் பாதுகாப்புக்காக நிருத்தப்பட்ட போலீஸார்கள் ஓரமாக அமர்ந்து சஞ்சிகைகள் வாசித்துக் கொண்டும், தலைமைக்கு கட்டுப்பட்ட மக்களின் அழகிய வரிசைகளுடன் கூடிய அமைதியான பேரணிகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் நின்றது இந்திய வரலாற்றில் இந்தக் கூட்டங்களில் தான் முதல் முறை.சில சமுதாயத்தவர்கள் நடத்தும் பேரணிகளின் போது இன்னொரு சமுதாயத்தவர்கள் அவ்வழியே நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு பதஸ்டம் நிலவும் இக்கால கட்டத்தில் முஸ்லீம்கள் நடத்தும் இந்தக் கூட்டங்களில், பேரணிகளில் தான் ஹிந்து மக்கள் சாலை ஒரங்களில் தண்ணீர் குடங்களுடன் நின்று நீண்டப் பேரணியில் ஜீவாதார உரிமை கோஷங்களை எழுப்பிக் கொண்டுச் செல்லும் முஸ்லீம்களுக்கு கணிவுடன் நீர் புகட்டி தாகம் தீர்க்கச் செய்து சகோதரத்துவத்திற்கு முத்திரைப் பதித்த சம்பவமும் இந்திய வரலாற்றில் இந்தப் பேரணிகளில் தான் முதன் முறையாக நடந்தது,இன்னும் இதுப் போன்ற அமைதியானப் பேரணிகளை, மாநாடுகளை ஜனநாயக ரீதியில் அதிகமதிகம் நடத்துவதால்,நாங்கள், • மாவேயிஸ்டுகளைப் போல் மறைந்திருந்து அப்பாவிகளைத் தாக்குபவர்கள் அல்ல, • மரங்களை வெட்டி சாய்த்து மக்களுக்கு இடையூறு கொடுப்பவர்கள் அல்ல, • வாகணங்களை அடித்து நொறுக்கி பொதுச் சொத்துக்களுக்;கு சேதம் விளைவிப்பவர்கள் அல்ல, எங்கள் வாழ்வுரிமைக்காக அரசு அனுமதித்த வழியில் அமைதியாகப் போராடும் மக்கள் என்பதை ஆட்சியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் உணர்த்தும் வாய்ப்பு இது, அரசின் மீது விரக்தி அடைந்து ஆயுதமேந்தும் ஒரு சிலரும் கூட இழந்த உரிமைகளை வென்றெடுக்க இது தான் சிறந்த வழி என்று நம்முடன் இணைந்துப் போராடும் நற்குணமுடையவர்களாக மாறுவதற்கும் இது போன்ற கூட்டங்கள், பேரணிகள் வாய்ப்பாக அமைந்து விடும். 3 ½ சதவிகிம்.• 1999ல் முதன் முதலாக மூன்று லட்சம் மக்களைத் திரட்டி வாழ்வுரிமைக் கோரி மெரீனா கடற்கரையில் குழுமச் செய்தனர். அதுவரை முஸ்லீம்களின் இதுப்போன்ற பிரம்மான்டமானக் கூட்டத்தை கண்டிராத முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மக்கள் திரளை நோக்கி கடந்த காலத்தில் பிஜேபியுடன் கூட்டு சேர்ந்து முஸ்லீம்களின் கோரிக்கைகளை புறக்கணித்து துரோகம் இழைத்ததற்காக மன்னிப்புக் கேட்டார்.( அதற்குப் பிறகு வந்த அவரது ஆட்சியில் தான் முதன் முதலாக முஸ்லீம்களின் இடஒதுக்கீட்டிற்காக கமிஷன் அமைக்கப்பட்டது ) • அதற்கடுத்து 2004ல் கூட்டப்பட்ட பிரம்மான்டமானப் பேரணி தஞ்சையைத் திணறடித்து, திலகர் திடலை திக்கு முக்காடச் செய்தது. இதன் பின்னர் தமுமுகவிலிருந்து தனிப்பொழிவுடன் வுNவுது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உருவானப் பின்னர் அதன் மாநிலத் தலைவராகிய அறிஞர் பி.ஜைனுல் ஆப்தீன் உலவி அவர்கள் அமீரகத்திற்கு வரவழைக்கப்பட்டு தமிழர்கள் தங்கி இருக்கக்கூடிய பல கேம்புகளுக்கு அழைத்துச் சென்று மக்கள் படும் அவஸ்தையை நேரடியாகக் கண்டறிந்து பிறந்த நாட்டில் அரசுப் பணிகளில், மற்றும் கல்வியில் இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து கடந்த காலங்களை விட கூடுதல் மக்களைத் திரட்டி இன்னும் வீரியமிக்கப் போராட்டங்களை நடத்த திட்டமிட்டு ததஜ வின் செயல் வீரர்கள் முடுக்கி விடப்பட்டனர்;.''குடந்தை குலுங்கட்டும்'' இடஒதுக்கிடுப் பெறுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மீண்டும் முடுக்கி விடப்பட்டு 2006ல் குடந்தையில் குழுமியது வரலாறுப் படைத்த மக்கள் கூட்டம். இதன் பின்னரே அதிமுக ஆட்சியின் இறுதி கட்டத்தில் முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு குறித்து அறியும் கமிஷன் அமைக்கப்பட்டு, கமிஷனும் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. ''தொடர் முழக்கப் போராட்டங்கள்'' அதிமுக அரசு அஸ்தமித்து திமுக அரசு உதயமானதும் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட கமிஷன் அறிக்கையையும் திமுகவினர் அஸ்தமிக்கச் செய்தனர். அதனால் மீண்டும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இடஒதுக்கீடு கோரும் தொடர் முழக்கப் போராட்டங்களை நடத்த தலைமை அறிவித்தது.தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எத்திசைத் திரும்பினாலும் போராட்டம் இது போராட்டம், TNTJ நடத்தும் போராட்டம், ஓய மாட்டோம் உறங்க மாட்டோம்,இடஒதுக்கீடுப் பெறும் வரை, ஓய மாட்டோம் உறங்க மாட்டோம், எனும் கோஷங்களை பச்சிளம் குழந்தைகளை இடுப்பிலும், தோளிலும் சுமந்த பெண்டிர் முதல் வயோதிகர் வரை எழுப்பிய ஜீவாதாரக் கோஷம் விண்ணைப் பிளந்து சிறுபான்மைக் காவலர் கலைஞரின் செவிப்பறையைக் கிழித்தது. கலைஞரின் கல் நெஞ்சில் கசிவு ஏற்பட்டு மூன்றரை சதவிகிதம் ( குறைவு தான் என்றாலும் ஒன்றுமில்லாமல் இருந்ததற்கு ஓரளவு ஆறுதல் அளிக்கும் ) இடஒதுக்கீட்டை வழங்கினார் அல்லாஹ்விற்கேப் புகழ் அனைத்தும். ஜூலை 4சமீபத்தில் ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் கல்வி, மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் இந்தியாவில் முஸ்லீம்கள் மிகவும் பின் தங்கி இருக்கும் அவல நிலையை ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையில் 10 சதவிகிதம் மத்திய, மாநில அரசுப் பணிகளில், கல்வியில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்திருப்பதை மத்திய அரசு அலச்சியப்படுத்திடாமலும், காலம் தாழ்த்திடாமலும் அமுல் படுத்துவதற்காகவும் குறைந்த பட்சம் 15 லட்சம் முஸ்லீம்கள் சென்னை தீவுத் திடலில் ஜூலை 4 அன்று குழுமுவதற்காக கடந்த காலங்களில் ஜனநாயக ரீதியில் வரலாறுப் படைத்த கூட்டங்களைல் கூட்டிப் போராடி மூன்றரை சதவிகித இடஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்த தமிழகத்தின் மாபெரும் மக்கள் பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வுNவுது அழைப்பு விடுக்கிறது. • தீவுத்திடலை திணறடிக்க,• தீவுத்திடலில் அலை கடலென ஆர்ப்பரிக்க,• ஜூலை 4 க்கான பயண எற்பாடுகளை இன்றே செய்யத் தயாராகுங்கள். கல்வி, மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் பரிந்துரையை மத்திய அரசு அமுல் படுத்துவதற்கு பயண ஏற்பாடுகளுடன் கருணையாளன் அல்லாஹ்விடம் பிரார்த்தனையை முற்படுத்துங்கள் ...உங்கள் இறைவன் தனது அருளை உங்களுக்குத் தாராளமாக அளிப்பான். உங்கள் பணியை எளிதாக்குவான்....திருக்குர்ஆன் 18:16கல்வி, மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில், இந்திய முஸ்லீம்கள் 10 சதவிகித இடஒதுக்கீட்டையும், அரசின் நலத் திட்டங்களையும் இன்ஷா அல்லாஹ் அடைந்தால் மட்டுமே வறுமைக் கோட்டைத் தாண்ட முடியும். இல்லை என்றால் வேறெந்த வழிகளிலும்,• வெளி நாட்டில் கை ஏந்தும் வேதனையை, • எழுதப் படிக்கத் தெரியாத அவல நிலையை, • ஒரு வேளை உணவையும், இரண்டு ஆடைகளையும் பெற முடியாத தரித்திர நிலையை, • குடி தண்ணீர் மற்றும் கழிப்பிட வசதிப் பெற முடியாத வறிய நிலையை, மாற்ற முடியாது.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَநன்மையை ஏவிஇ தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்.
300 years old Mosque reopened After 20 years Jaffna Grand Mosque reopened today Friday with jummah prayer the jaffna Grand Mosque was Built in 1713 during the Dutch period in Jaffna Muslim College Road, this mosque was abandoned in October 1990 as the LTTE drove the Muslims away from the Northern Province. There are more than 20 Mosques in Jaffna Although the Jaffna Peninsula was recaptured by the security forces in December 1995, the majority of Muslims driven away were reluctant to resettle there as the LTTE was active in other parts of the North and East. After the LTTE leadership was decimated by the security forces last year, Muslims started to resettle in their original places in the city and several mosques about 10 Mosques including the Grand Mosque were renovated Accordingly the Grand Mosque the the Grand Mosque opened today Friday- with a special jummah sermon by As-Sheik M.J. Abdul Halik. யாழ்ப்பாணம் பெரிய பள்ளி- The Jaffna Grand Mosque மீண்டும் 20வருடங்கலுக்கு பின்னர் திறந்துவைக்கப்பட்டு நிகழ்சிகள் நடைபெறுகின்றது என்று எமது யாழ் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர் இந்தப் பள்ளிவாசல் தற்பொழுது முழுமையாக புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளதுடன் சுமார் 3000 முதல் 4000 வரையிலான முஸ்லிம்கள் தொழக்கூடிய .1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிகள் புலிகளினால் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், இந்த மஸ்ஜிதும் யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஏனைய 20 மஸ்ஜிதுகளும் கைவிடப்பட்டிருந்தது. தற்போது மஸ்ஜிதுகள் ஒன்றன் பின் ஒன்றாக மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது இன்றைய நிகழ்ச்சியில் மௌலவி அப்துல் ஹாலிக் ஜும்மாஹ் குத்பாவை நிகழ்த்தியுள்ளார் , யாழ்ப்பாணம் மற்றும் பிறமாவட்ட ஆலிம்கள் மற்றும் பொது மக்கள் பலர் இதில் கலந்துகொண்டுதுள்ளனர்.போர்த்துகீசர் காலத்தில் போத்துக்கீசர்கள் யாழ்பாணத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க சர்வதேச வியாபாரிகளாக முஸ்லிம்களை கண்டனர் கொழும்பு துறை பகுதியில் இருத்த முஸ்லிம்களில் அணைத்து கட்டிடங்களும் போத்துக்கீசர்களால் தகர்க்கபட்டது அதன் போது முஸ்லிம்களின் குடி இருப்புகள் , மஸ்ஜிதுகள் இறங்கு துறைகள் ,பண்டசாலைகள் , வியாபார கப்பல் என்பனவும் இவர்களால் அழிக்கப்பட்டதுடன் முஸ்லிம்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேற்றபட்டனர் பின்னர் மீண்டும் யாழ்ப்பாண முஸ்லிங்கள் தற்போது இருக்கும் முஸ்லிம் பகுதியில் ஒல்லாந்தர் (ஹாலந்த்) காலத்தில் 1713ல் மஸ்ஜித்தை நிர்மாணித்தனர் என்பது குறிபிடதக்கது பல்லவர் கால சிற்பத்தை ஒத்ததாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் பள்ளி 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததும் மிகப்பெரியதுமாகும்.ஒற்றுமையையும், சமாதானத்தையும் வலியுறுத்தி முதலாவது ஜும்ஆப் பிரசங்கத்தை கொழும்பு பெரிய மர்க்கஸ், ரஷாதிய்யா அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மெளலவி எம். ஜே. அப்துல் ஹாலிக் நிகழ்த்தியுள்ளார். பெண்களுக்கான விசேட பயான் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அஸர் தொழு கையைத் தொடர்ந்து உலமாக்களுடனான ஆலோசனைக் கூட்டமும் நடைபெறவுள்ளது.முஸ்லிம் கல்லூரி வீதியில் அமையப்பட்டுள்ள இந்தப் பள்ளிவாசலுக்குட்பட்ட பகுதியில் முஸ்லிம்கள் மீண்டும் மீளக்குடியமர்ந்ததையடுத்தே இந்த மஸ்ஜித் புனரமைக்கப்பட்டுள்ளது.