நிராகரிக்கப்பட்ட நேரடி சாட்சியங்கள்

அஜ்மல் கஸாபிற்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டு 26/11 மும்பை தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இது இவ்வாறு தான் நடக்கும் என்பதை அனைவரும் அறிவர். ஆனால் மும்பை தாக்குதலுக்கு ஒரு மிகப்பெரிய சங்கிலித்தொடர் காரணமாக இருந்துள்ளது. அவை கண்டுபிடிக்கபடவில்லை. அந்த வழக்கில் சந்தேகத்திற்கிடமாக ஏராளமான முரண்பாடுகள் இருக்கின்றன.

தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளல்ல, மாறாக யூதர்களே என்றும் அவர்கள் நரிமன் ஹவுசில் தங்கி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்துள்ளன. 26/11 அன்று லியோபோல்டு கஃபேயில் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட அனாமிகா குப்தா என்பவர் கோர்ட்டில் அளித்த சாட்சியத்தை காவல்துறை கண்டுகொல்லாததேன்?தீவிரவாதிகளின் அடையாள அணிவகுப்பிற்கு நேரடி சாட்சிகளை அழைக்காததேன்? என்று பலவித கேள்விகள் மக்களிடத்தில் எழுந்துள்ளன.கடல் வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் வந்திறங்கினர் என காவல்துறை சொல்ல, அனாமிகா குப்தா, அஜ்மல் கஸாபை தாக்குதல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே யூதர்களின் இருப்பிடத்தில் வைத்து பார்த்தேன் என்று சாட்சி கூறியுள்ளார். ஆனால் அதை போலீசார் கண்டுகொள்ளவே இல்லை. போலிஸ் மட்டுமல்ல, தொலைக்காட்சி சேனல்கள் கூட அவரது பேட்டியை ஒளிபரப்பவில்லை.மும்பையில் பியூட்டிசியனாக இருக்கும் அனாமிகா குப்தா, மும்பை தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக அஜ்மல் கஸாப் உட்பட நான்கு பேரை கொலாபா பகுதியிலுள்ள யூதர்களின் தலைமையகமான நரிமன் ஹவுசில் வைத்து பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார். நரிமன் ஹவுசும் தாக்குதலுக்கு உட்பட்டிருந்தது.தாக்குதலை நடத்தியது நரிமன் ஹவுஸ் தான் என்றும் அதுபற்றிய விசாரணையில் போலிஸ் கண்களை மூடிக்கொள்கிறது என்றும் அந்த விசாரணையில் என்னுடைய சாட்சியத்தை ஏன் ஏற்கவில்லை என்றும் அனாமிகா கேள்வி எழுப்பி உள்ளார்.

நரிமன் ஹவுசின் அடுத்து இருக்கும் கோளிவாடாவிலுள்ள ஆஸாபாய் கட்டிடத்தில்தான் அனாமிகா வசித்து வந்தார். அவரும் அவரது தோழிகளான ரசிகா உபாத்யாய், மீனாக்ஷி தத்தானி ஆகியோர் லியோபோல்டு கஃபேயின் தினசரி வாடிக்கையாளர்கள்.வழக்கம் போல 2008 நவம்பர் 26ம் தேதி இரவில் அனாமிகாவும் தோழிகளும் அங்கு பேசிக்கொண்டிருந்த வேளையில்தான் வெடிகுண்டு தாக்குதலும் துப்பாக்கிசூடும் நடைபெற்றது. அந்த தாக்குதலில் அனாமிகாவின் வயிற்றில் மூன்று புல்லட்டுகள் துளைத்தன. வெடிகுண்டுகளால் கால்களிலும் காயம் ஏற்ப்பட்டது. ரசிகாவின் இடது கையிலும் குண்டு பாய்ந்தது.வெடிகுண்டுகளால் சரிகாவின் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சைக்குப்பின் மறு வாழ்வு பெற்ற அனாமிகா, தான் மீண்டு வந்தது முதல் சில உண்மைகளை சொல்லி வருகிறார். ஆனால் போலிஸ் அதை சட்டை செய்யவில்லை. அதுமட்டுமல்ல நரிமன் ஹவுசில் தீவிரவாதிகளை கண்டேன் என்று வெளியில் சொல்லாதீர்கள் என்று உபதேசமும் செய்துள்ளது.
நடந்த சம்பவத்தை அவரே கூறுவதை கேளுங்கள்...

மும்பை தாக்குதல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அதிகாலை 1:30 மணிக்கு கூட்டாளிகளுடன் லியோபோல்டு கஃபேக்கு முன்பிளிருக்கும் பாண், சிகரெட் கடைக்கு போகும்போது நரிமன் ஹவுசில் இருந்து நான்கு பேர் மிகவும் அழகான பைக்கில் வந்தனர். அந்த விலையுயர்ந்த பைக்கின் அழகுதான் அதில் பயணம் செய்தவர்களை பார்க்க தூண்டியது. அவை சிவப்பும் கருப்பும் நிறமுள்ள BMW பைக்குகள்.நான் என்னுடைய கஸின் நடாசாவிடம் இந்த இளைஞர்கள் இங்கேயா தங்குகிறார்கள் என கேட்டபோது அவள் இருக்கலாம், எனக்கு தெரியாது என்றாள். அந்த இளைஞர்கள் பைக்கில் ஒரு ரவுண்டு அடித்து நேராக நரிமன் ஹவுஸ் சென்றார்கள். அதற்கு அடுத்த நாட்களிலும் அந்த பைக்குகளையும் அந்த நால்வரையும் பார்க்க முடிந்தது. அதில் ஒருவன் அஜ்மல் கஸாப். அவனை மிக அருகிலேயே பார்த்தேன்.
ஐ விட்னஸ் ரசிகா உபாத்யாய் :
நாங்கள் அந்த தீவிரவாதிகளை தாக்குதல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே நரிமன் ஹவுசில் பார்த்தோம். 26/11 அன்று நாங்கள் லியோபோல்டு கஃபேயில் இருந்தோம். திடீரென எனக்கு பின்னால் இருந்த ஒருவன் எதையோ எறிந்தபோது அருகிலிருந்த ஒருவரிடம் என்னாச்சு என்று கேட்டேன். அவர் கட்டிடம் தீ பிடித்துவிட்டது என்றார். நான் ஏதோ குரூப் சண்டை நடக்கிறது என நினைத்து கொண்டேன். எனது உடலில் ஏராளமான காயம் ஏற்ப்பட்டது.


நரிமன் இல்லத்திற்கு வந்த டிரக் :

தாக்குதலுக்கு முந்தைய நாள் நாடு இரவில் லோடு ஏற்றப்பட ஒரு டிரக் யூதர்களின் இருப்பிடமான நரிமன் ஹவூசுக்கு வந்ததாகவும் அதில் ஆயுதங்கள் இருந்ததா என்பது தெரியவில்லை என்றும் அதன் எதிரிலுள்ள ரெக்ஸ் பேக்கரியின் உரிமையாளர் டாக்டர். குரேஷ் பி சொராபி குறிப்பிடுகிறார்.சம்பவத்தன்று இரவில் நரிமன் ஹவூசுக்கு லோடு கொண்டு வந்த டிரக் ரெக்ஸ் பேக்கரியின் பெயர் பலகையில் இடித்துவிட, பேக்கரி ஊழியர்களுக்கும் டிரக் டிரைவருக்கும் தகராறு ஏற்பட்டது. நரிமன் ஹவுசின் புரோகிதரான (ரப்பி) காபிரியேலின் மனைவி ரவிகா இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியுள்ளார். தாக்குதலுக்கு முந்தைய நாள் இரவில் நரிமன் ஹவூசுக்கு ஏராளமான கோழி இறைச்சி சப்ளை செய்யப்பட்டதாக தாஜ் சிக்கன் ஸ்டால் ஊழியர்கள் கூறியுள்ளனர்.
படகில் வந்த தீவிரவாதிகள் :
தீவிரவாதிகள் படகில் வந்ததை கண்டதாக சொன்ன மீனவ பெண், போலீஸ் ஏற்பாடு செய்த தீவிரவாதிகளின் அடையாள அணிவகுப்பிற்க்குப்பின், படகில் வந்த கூட்டத்தில் கஸாப் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அன்று அவன் முடியை நீளமாக வைத்திருந்தான். கறுத்த டி சர்ட்டும் நீல நிற கார்கோ பேண்ட்டும் ஸ்போர்ட்ஸ் ஷூவும் அணிந்திருந்தான். அவர்களில் மிகவும் அழகான ஒருவன் இருந்தான். இரண்டு பக்கமும் கிராப் செய்து நடுவில் முடி வைத்திருந்தான். அந்த கூட்டத்தில் வயதான வெளிநாட்டினரும் இருந்தனர். சம்பவம் நடந்த அன்று லியோபோல்டு கஃபேயில் நாங்கள் உட்கார்ந்திருந்த மேசைக்கருகில் அந்த அழகிய வாலிபனை நான் பார்த்தேன். எதிரில் இருக்கும் சரிகாவை போட்டோ எடுப்பதுபோல் பாவனை செய்து அவனை போட்டோ எடுத்தேன். அந்த நேரத்தில்தான் எதிர்பாராத அந்த சம்பவம் நடந்தது.அந்த அழகிய வாலிபன் திடீரென கீழே குனிந்து தனது பேக்கிலிருந்து எதையோ எடுத்து அடுத்திருக்கும் பணம் செலுத்தும் கவுண்டரில் வீசினான். அவை வெடிகுண்டுகள். பின்னர் சரமாரியாக புல்லட்கள் பறந்து வந்தன. ஜெஜெ மருத்துவமனையில் மயக்கம் தெளிந்து எழுந்த போதுதான் உயிரோடு பிடிக்கப்பட்டது கஸாப் என்பதை அறிந்தேன். சம்பவம் நடந்த அன்று கடல்வழியாக 10 பேர் வந்தனர் என்று போலீஸ் கூறுவது உண்மையாக இருக்கலாம். ஆனால் அதில் கஸாப் மற்றும் லியோபோல்டு கஃபேயில் தாக்குதல் நடத்தியவனும் உண்டு என்பதை ஒருக்காலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் நரிமன் ஹவுசில் கஸாப் மற்றும் பைக்கில் வந்த மூவர் மட்டுமல்ல இன்னும் பலருண்டு என நான் அடித்துக்கூறுவேன். முப்பதுக்கு மேற்ப்பட்டோர் இதில் உண்டு. 25ம் தேதி காலையில் நரிமன் ஹவுசின் எதிர் வீட்டில் வசிக்கும் நஸ்லி கான் என்ற எனது தோழி வீட்டிற்கு சென்றபோது நரிமன் ஹவுசின் மொட்டை மாடியில் இளைஞர்கள் பலர் உடற்பயிற்சி செய்வதை பார்த்தேன். இஸ்ரேலியர்களை தவிர அங்கு வேறு நாட்டினர் செல்லமாட்டார்கள், ஆதலால் நாடு சுற்றிப்பார்க்க வந்த இஸ்ரேலிய இளைஞர்கள்களாக இருக்கலாம் என்று அப்பகுதியினர் கருதியுள்ளனர்.

STAR TV, NDTV, ZEE NEWS, TIMES OF INDIA, HINDUSTAN TIMES போன்றவற்றிற்கு இந்த உண்மைகளை நான் கூறியபோதும் அவர்கள் அதை ஒளிபரப்பவில்லை. ஏன் என கேட்டபோது நீங்கள் சொன்னதை நாங்கள் நம்புகிறோம், ஆனால் எங்களுடைய மேலிடம் அதை அனுமதிக்கவில்லை என்று சொன்னார்கள். ONE NEWS தொலைக்காட்சியில் இந்த உண்மைகளை வெளிப்படுத்தியவுடன் போலீஸ் வந்து என்னை விசாரித்தார்கள். எனினும் எதுவும் நடந்திடவில்லை. நவம்பரில் இரண்டாவது விசாரணை என்னிடம் நடந்தது.குற்றப்பிரிவின் அடிஷனல் போலீஸ் கமிஷனர் தேவன் பாரதியின் தலைமையில் நடந்த அந்த விசாரணையில் நான் இவற்றை சொன்னபோது, போலீஸ் ஏற்கனவே இது பாகிஸ்தானியரின் சதி என முடிவுசெய்துவிட்டதால் அதிகபிரசங்கித்தனமாக செய்திகளை சொல்லி போலிசை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று தேவன் பாரதி குறிப்பிட்டார்.பின்னர் எனக்கு மனநிலை சரியில்லை என்றும் இவர் விளம்பரத்திற்காக இவ்வாறு சொல்கிறார் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது. எனது தாய் உட்பட எனது குடும்பத்தினரை மிரட்டுகின்றனர். கஸாப், லியோபோல்டில் தாக்குதல் நடத்தியவன், பைக்கில் வந்தவர்கள் போன்ற தீவிரவாதிகளை எனக்கு தெரியும் என்றபோதும் தீவிரவாதிகளை அடையாளம் கட்டும் அணிவகுப்பிற்கு போலீஸ் என்னை அழைக்கவில்லை” என்றும் அனாமிகா குறிப்பிடுகிறார்.
அனாமிகா கூறிய செய்திகளிலிருந்து மும்பை தாக்குதல் இந்தியாவிர்க்குள்ளேயே திட்டமிட்டு நடத்தப்பட்டதாக தெரிகின்றது. திடீரென வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால் இத்தகைய தாக்குதலை நடத்த முடியாது. மும்பையை நன்றாக அறிந்தவர்களால்தான் இதை செய்யமுடியும் என்று சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.கஸாப் மற்றும் கூட்டாளிகள் அங்கேயே தங்கியிருந்து தாக்குதலுக்கு இடத்தை தேர்வு செய்துள்ளனர் என்பது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.அமெரிக்க, இஸ்ரேலின் இந்த அராஜகங்களை கண்டுப்பிடித்து உலகுக்கு சொல்ல மத்திய அரசு தயங்குகிறதா, இல்லை மத்திய அரசுக்கு தெரியாமலேயே காவல்துறை இதை செய்கின்றதா என்பதையும் கண்டறிய வேண்டும். இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கும் கார்கரே கொலைக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய பாஜகவின் கூற்றை இச்சம்பவங்கள் பொய்யாக்கி இரண்டும் மிக நெருங்கிய தொடர்பு கொண்டவை என்பதை சொல்கின்றன.உலக மக்களை தயவு தாட்சனியமின்றி கொன்று குவித்து உலகை அச்சுறுத்திவரும் இஸ்ரேலை கண்டு காங்கிரஸ் தொடை நடுங்கினாலும் அதன் மிரட்டலுக்கு பயப்படாமல் உண்மையை வெளிக்கொணருபவர் இருக்கவே செய்கின்றனர். அனாமிகா ஒரு வீரப்பெண்மணி என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் கார்கரே தற்செயலாக தாக்கப்படவில்லை, அவர் திட்டமிட்டு கொல்லப்பட்டதாகவே அறிய முடிகிறது. இந்தியாவில் குண்டு வெடிப்புகளை நடத்தி அப்பாவி மக்களை கொன்ற இந்துத்துவ சக்திகளை கண்டுபிடித்து உலகுக்கு சொன்ன கார்க்கரேயை கொன்று அந்த பயங்கரவாதிகளை காப்பாற்ற யூதக்குழு உதவி செய்ததா? அல்லது யூதக்குழுவுடன் இந்துத்துவ பயங்கரவாதிகளும் கூட்டு சேர்ந்து இந்த தாக்குதலை நடத்தினார்களா என்பது போக போகத்தான் தெரியும்.
http://www.youtube.com/watch?v=zSWwg-2Jlog
செய்தி: தலையங்கம் - உணர்வு வார இதழ் (MAY 21 – 27, 2010)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)
Posted by Unknown

0 comments:

Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.