உங்களுக்கும், குடும்பத்திற்கும் அரசாங்க செலவில் வசதியான வீடும், சமூக கொடுப்பனவுகளும், கூடவே ஒரு துப்பாக்கியும் வேண்டுமா? இஸ்ரேலில் குடியேறினால் அதெல்லாம் கிடைக்கும். ஒரேயொரு நிபந்தனை: யூதராக இருக்க வேண்டும். உலகில் யார் வேண்டுமானாலும் யூதராக மதம் மாறி, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலத்தில் சென்று குடியேறலாம். உலகின் எந்த மூலையில் இருந்து வந்தாலும், ஒரு யூதர் இஸ்ரேலிய பிரஜையாக கருதப்படுவார். ஆனால் ஆயிரம் ஆண்டு காலம், அந்த மண்ணிலேயே வாழும் பாலஸ்தீனருக்கு அந்த உரிமை கிடையாது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் அத்துமீறி குடியேறிய யூதர்களுக்கு சிறந்த பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. யூத குடியேற்றக் கிராமங்களுக்கு அரசாங்கம் பல சலுகைகளை, மானியங்களை வழங்கி வருகின்றது. குடியேறிகளுக்கு கட்டாய இராணுவ சேவையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. யூத குடியேற்றவாசிகள் பெரும்பாலும் யூத மத அடிப்படைவாதிகளாக இருப்பது வியப்புக்குரியதல்ல. "இது யூதரின் நாடு. அரபுக்களுக்கு இங்கே இடமில்லை." என்று சொல்லும் இனவெறியர்கள். ஆதாரம்? "அது தான் பைபிளில் எழுதியிருக்கிறதே." என்பார்கள்.

இஸ்ரேலிய படை (IDF), பாலஸ்தீன கிராமங்கள், நகரங்களுக்கிடையில் சோதனைச் சாவடிகள் அமைத்து மக்களை துன்புறுத்தி வருகின்றது. இதனால் ஒவ்வொரு பாலஸ்தீன கிராமமும், நகரமும் தடுப்பு முகாமாக மாறி வருகின்றது. பாலஸ்தீனம் பிரிட்டிஷாரின் பாதுகாப்ப்புப் பிரதேசமாக இருந்த காலத்தில் இயங்கிய பயங்கரவாத இயக்கமான "ஹகனா", பின்னர் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையாகியது. இஸ்ரேலிய இராணுவம் ஒரு ஆக்கிரமிப்பு இராணுவம் மட்டுமல்ல, உண்மையில் இஸ்ரேல் என்ற தேசத்தை ஆட்சி செய்வதும் அது தான். அரசாங்க பட்ஜெட்டில், ஆண்டு தோறும் 20 % இராணுவ செலவினங்களுக்கு ஒதுக்கப்படுகின்றது. இதைவிட ஒவ்வோர் ஆண்டும் 1.8 பில்லியன் டாலர்களை அமெரிக்கா வழங்குகின்றது. (அமெரிக்காவின் ஆயுத தொழிற்சாலையில் இருந்து இஸ்ரேல் தனக்கு வேண்டிய ஆயுதங்களை நேரடியாக வாங்கலாம்.) இதைவிட இன்னொரு வகை வருமானமும் உண்டு. நாசிகள் செய்த பாவத்திற்கு பரிகாரமாக, ஆண்டுதோறும் மில்லியன் டாலர்களை ஜெர்மன் அரசு நஷ்டஈடாக வழங்குகின்றது. இது தான் இஸ்ரேலிய இராணுவ மேலாதிக்கத்தின் இரகசியம்.

இஸ்ரேல் ஒரு பாராளுமன்ற ஜனநாயக நாடு என கூறப்படுகின்றது. ஆயினும் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதம மந்திரி எல்லோருமே இராணுவத்தில் கடமையாற்றி ஓய்வுபெற்றவர்கள். இதனால் அரசாங்கத்திற்கும், இராணுவத்திற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்புண்டு. இராணுவத்தில் இருந்தவர்களே அரசுப் பதவிகளை அலங்கரிப்பதால், அங்கே உண்மையில் இராணுவ ஆட்சியே நடக்கின்றது. இஸ்ரேலிய ஆட்சியாளர்கள் வெளிநாட்டு பாசிச அமைப்புகளுடனும் நல்லுறவைப் பேணி வந்தனர். தென்னாபிரிக்காவின் முன்னாள் நிறவெறி ஆட்சியாளர்கள், லெபனானில் பலாங்கிஸ்ட், ஆகியோருடனான தொடர்புகள் இங்கே குறிப்பிடத் தக்கவை. இஸ்ரேலிய இனவெறிக் கொள்கையின் உச்சமாக "அரபுக்களை மட்டுமே தேடிப்பிடித்து கொல்லும்", உயிரியல் ஆயுதங்களை தயாரிக்க எத்தனித்தனர். அரபுக்களும், யூதர்களும் ஒரே மரபணுக்களை கொண்டிருப்பதால், அந்த திட்டம் கைவிடப்பட்டது. முன்பு ஹிட்லர் இது போன்ற உயிரியல் ஆயுதம் ஒன்றை தயாரிக்க விரும்பியது நினைவுகூரத்தக்கது. இஸ்ரேலில், உயிரியல், இரசாயன ஆயுதங்கள் மட்டுமல்ல, அணு குண்டுகள் கூட இரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளன.


இஸ்ரேலிய இராணுவத்தில் யூதர்கள் மட்டுமே பணியாற்ற முடியும். இஸ்ரேலிய குடியுரிமை பெற்ற பத்து லட்சம் அரபு மக்களுக்கு அந்த உரிமை இல்லை. 1948 ம் ஆண்டு யுத்தத்தில், வீடிழந்த பாலஸ்தீன அகதிகள் 60 வருடங்களாக அயல்நாட்டு அகதி முகாம்களில் வாழ்கின்றனர். அவர்களது தாயகம் திரும்பும் உரிமையை இஸ்ரேல் அங்கீகரிக்கவில்லை. அதே நேரம் உலகம் முழுவதிலும் இருந்து வந்து குடியேறும் யூதர்களுக்கு, வந்த உடனேயே குடியுரிமை வழங்கப்படுகின்றது. இஸ்ரேலின் அரசியல் யாப்பு, யூதர்கள் மட்டுமே குடியேறலாம் எனக் கூறுகின்றது. இவ்வாறு சட்டம் போட்டு இனப்பாகுபாடு காட்டும் ஒரேயொரு நாடு இஸ்ரேல் மட்டும் தான்.

சிலர் நினைப்பது போல யூதர்கள் ஒரு தனியினம் அல்ல. அது ஒரு மதத்தைக் குறிக்கும் சொல். ஐரோப்பாவில் இருந்து வந்த யூதர்கள் வெள்ளை நிறத்தவராகவும், எத்தியோப்பியாவில் இருந்து வந்த யூதர்கள் கருமை நிறம் கொண்டோராயும், மத்திய கிழக்கில் இருந்து வந்தவர்கள் அரபுக்கள் போன்றும் தோன்றுகின்றனர். வெளிப்படையாக தெரியும் வேறுபாடுகளே, யூதர்கள் ஒரே இனத்தை சேர்ந்தவர்களல்ல என நிரூபிக்க போதுமானவை. அவர்கள் எந்த நாட்டில் இருந்து வந்தார்களோ, அந்த நாட்டு மொழியையே தாய் மொழியாக பேசுகின்றனர். இரண்டாவது தலைமுறை மட்டுமே ஹீபுரு மொழியை தாய்மொழியாக கொண்டுள்ளது.

யூத மதத்தின் படி, ஒரு யூத ஆண் வேற்று மத பெண்ணை மணம் முடிக்கலாம். ஆனால் யூத பெண்ணுக்கு அந்த உரிமை இல்லை. மத ரீதியாக பார்த்தால், யூதத்திற்கும், இஸ்லாமுக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. பைபிளில் முதலாவது தீர்க்கதரிசியாக கருதப்படும் ஆப்பிரகாமுக்கு இரண்டு புதல்வர்கள். ஒன்று, இசாக். மற்றது, இஸ்மாயில். இசாக்கின் வழித்தோன்றல்கள் யூதர்கள் என்றும், இஸ்மாயிலின் வழிதோன்றல்கள் அரபுக்கள் என்றும் நம்பப்படுகின்றது. இரு மதத்தவரும் கண்டிப்பாக தெய்வ உருவங்களை வழிபடுவதில்லை. ஆபிரகாமை சுன்னத்து செய்து கொள்ளுமாறு இறைவன் கட்டளையிட்டதாகவும், அதையே யூதரும், முஸ்லிம்களும் பின்பற்றுவதாக நம்பப்படுகின்றது. இரு மதத்தவரின் உணவுப் பழக்கங்கள் ஒரே மாதிரியானவை. (யூதருக்கு: கோஷர், முஸ்லிம்களுக்கு: ஹலால்) பன்றி இறைச்சியை இரு மதங்களும் தடை செய்கின்றன. ஹீபுரு, அரபி, இரண்டும் செமிட்டிக் மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. யூதரும், அரேபியரும் செமிட்டிக் இன மரபணுக்களைக் கொண்டுள்ளனர்.

அப்படியானால் பிரிவினை எங்கே தோன்றியது? யாரால் தோற்றுவிக்கப்பட்டது?

இஸ்ரேலிய-பாலஸ்தீன பிரச்சினையை தற்காலிகமாக தீர்த்து வைக்க அமெரிக்கா முன்வரலாம். நிரந்தர தீர்வைக் காண்பதற்கு யாரும் இன்னும் மனமொத்து வரவில்லை. அதற்கு காரணம், மத்திய கிழக்கின் அபரிதமான எண்ணெய் வளம். உலகில் தொழில்துறைக்கு எண்ணெய் மிக மிக அவசியம். அத்தகைய எண்ணெய் வளம் கொண்ட அரபு நாடுகள் ஒன்று சேர்ந்தால், உலகில் யாராலும் அசைக்க முடியாத வல்லரசாகும். அவ்வாறான ஒரு வல்லரசு தோன்றுவதை, அமெரிக்காவும், ஐரோப்பாவும் கற்பனை செய்யவும் விரும்பவில்லை. அதைத் தடுக்க உருவானது தான் நவீன இஸ்ரேல். இஸ்ரேலில் அரசியல் ஆதிக்கம் செலுத்துபவர்கள், வெள்ளையின ஐரோப்பிய யூதர்கள். இதனால் இஸ்ரேல் ஒரு ஐரோப்பிய குடியேற்ற நாடாகவே மேற்குலகில் கணிக்கப்படுகின்றது.

பழனி பாபா
Posted by Unknown

டெல்லி: மத்​திய,​​ மாநில அர​சு​ வேலை​ வாய்ப்​பு​க​ளில் முஸ்​லீம்​க​ளுக்கு 10 சத​வீத இட ஒதுக்​கீ​டும்,​​ மற்ற சிறு​பான்​மை​யி​ன​ருக்கு 5 சத​வீத ஒதுக்​கீ​டும் வழங்​க​லாம் என முன்​னாள் தலைமை நீதி​பதி ரங்​க​நாத் மிஸ்ரா தலை​மை​யி​லான கமி​ஷன் பரிந்​துரைள்​ளது.

முஸ்​லீம்​கள் உள்​பட அனைத்து சிறு​பான்​மை​யி​னர்​க​ளின் நலன்​களை பாது​காக்​கும் பொருட்​டும்,​​ அவர்​க​ளின் வாழ்​வா​தா​ரத்தை உயர்த்​தும் வகை​யி​லும் அவர்​க​ளுக்கு அரசு வேலை​ வாய்ப்​பு​க​ளில் இடஒதுக்​கீடு வழங்குவது குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய 2004ம் ஆண்​டில் உச்ச நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதி​பதி ​ ரங்​க​நாத் மிஸ்ரா தலை​மை​யில் இந்த கமி​ஷன் அமைக்​கப்​பட்​டது.

இந்த கமி​ஷ​னின் சமீபத்தில் அரசிடம் தனது அறிக்கையை அளித்தது. இந்த அறிக்கையை நேற்று மக்​க​ள​வை​யில் சிறு​பான்​மை​யி​னர் நலத்​துறை அமைச்​சர் சல்​மான் குர்​ஷித் தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்​சங்​கள்:

மத்​திய,​​ மாநில அர​சு​க​ளின் வேலை​வாய்ப்​புகளில் முஸ்​லீம்​க​ளுக்கு 10 சத​வீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்​டும்.

இதர மத மற்​றும் மொழி​ சிறு​பான்​மை​யி​ன​ருக்கு 5 சத​வீத ஒதுக்​கீட்டை அளிக்​க​ வேண்​டும்.

அனைத்து மதங்​க​ளி​லும் உள்ள தலித்​து​களையும் ஷெட்​யூல்டு கேஸ்ட் பட்டியலில்​ சேர்க்க வேண்​டும்.​ (இதன்மூலம் இஸ்லாமிய, கிருஸ்துவ மதத்துக்கு மாறிய தலித்துகளும் தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டைப் பெற முடியும்).

குறிப் ​பிட்ட ஏதா​வது ஒரு பகு​தி​யில் அல்​லது ஏதா​வது ஒரு பணிக்கு முஸ்​லீம் விண்​ணப்​ப​தா​ரர்​கள் போது​மான அள​வில் கிடைக்​க​வில்லை என்​றால்,​​ அந்த பின்​ன​டைவு இடங்​களை மற்ற சிறு​பான்​மை​யி​ன​ருக்கு அளிக்க வேண்​டும்.

இவ்வாறு இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு-கமி​ஷ​னில் கருத்து வேறு​பாடு:

இந் நிலையில் இந்த கமி​ஷ​னின் உறுப்​பி​னரான ஆஷா தாஸ்,​​ கமி​ஷ​னின் பரிந்​து​ரை​க​ளில் மாறு​பட்டு சில பரிந்​து​ரை​களை அளித்​துள்​ளார்.

மதம் மாறிய தலித்​து​க​ளுக்கு எஸ்.சிக​ளுக்​கான சலு​கை​கள் வழங்​கக்​கூ​டாது.​ வேண்டுமானால் பிற்​பட்​டோர் பிரி​வி​ன​ருக்​கு​ரிய சலு​கை​களை வழங்​க​லாம் என்று கூறியுள்ளார்.

காங்​கி​ரஸ் வர​வேற்பு-பாஜக எதி்ர்ப்பு:

இந்த கமிஷன் அறிக்கை குறித்து காங்​கி​ரஸ் கட்​சி​யின் செய்​தித் தொடர்​பா​ளர் அபி​ஷேக் சிங்வி கூறுகையில்,

மிக ​வும் நுட்​ப​மாக ஆய்ந்து நீதி​பதி ரங்​க​நாத் மிஸ்ரா,​​ தனது அறிக்​கையை தாக்​கல் செய்​துள்​ளார்.​ இதில் குறிப்​பிட்​டுள்ள அம்​சங்​கள் வர​வேற்​கத்​தக்​கவை.

இந்த பரிந்​து​ரை​கள் குறித்து விரி​வான விவா​தம் நடத்தி அதை நடை​மு​றைப்​ப​டுத்த முயற்சி மேற்​கொள்​ளப்​ப​டும் என்​றார்.

பாஜக செய்​தித் தொடர்​பா​ளர் ராஜீவ் பிர​தாப் ரூடி கூறுகையில்,

ரங் ​க​நாத் மிஸ்ரா பரிந்​து​ரை​கள்,​​ மத​மாற்​றத்தை ஊக்​கு​விக்​கும் வகை​யில் உள்​ளன.​ மேலும்,​​ தாழ்த்​தப்​பட்​டோர் மற்​றும் பழங்​கு​டி​யி​ன​ருக்கு அளிக்​கப்​பட்​டுள்ள சலு​கை​களை இந்த பரிந்துரைகள் பாதிக்கும். இந்த பரிந்​து​ரை​ நாட்​டுக்கு பய​னற்​றது என்​றார்.

ஜைன மதத்தினர் கோரிக்கை:

இந் நிலையில் நாட்​டில் பல்​வேறு சமூ​கத்​தி​னர் தங்​களை சிறு​பான்​மை​யி​னர் பட்​டிய​லில் சேர்க்​கு​மாறு கோரிக்கை விடுத்​துள்​ள​தா​க​வும்,​​ இது தொடர்​பாக சட்ட நிபு​ணர்​க​ளின் கருத்​து​க​ளைக் கோரி​யுள்​ள​தா​க​வும் மத்​திய அரசு அறி​வித்​துள்​ளது.

சிறு​பான்​மை​யி​னர் பட்​டிய​லில் தற்​போது முஸ்​லிம்​கள்,​​ சீக்​கி​யர்​கள்,​​ பார்​சி​கள்,​​ கிருஸ்​து​வர்​கள் மற்​றும் புத்த மதத்​தி​னர் ஆகிய ஐந்து சமூ​கத்​தி​னர் மட்​டுமே உள்​ள​னர்.

ஆனால், ஜைன மதத்​தி​ன​ரும் (ஜெயின்கள்) தங்களை இதில் சேர்க்குமாறு வலி​யு​றுத்​தி​ வருகின்றனர்.

நன்றி ThatsTamil

Posted by Unknown Labels:
Friday, December 18 | 0 comments  

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

குர்ஆன் வசனங்கள்

(பிரார்தனைகள்)

66 : 8. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்விடம் கலப்பற்ற முறையில்பாவ மன்னிப்புத் தேடுங்கள்! உங்கள் இறைவன் உங்கள் தீமைகளைஅழித்து விடக்கூடும். உங்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச்செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இந்த நபியையும்(முஹம்மதையும்) அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும்அல்லாஹ் இழிவு படுத்தாத நாளில் அவர்களது ஒளி அவர்கள்முன்னேயும் வலப்புறமும் விரைந்து செல்லும். எங்கள் இறைவா! எங்கள்ஒளியை எங்களுக்கு முழுமையாக்குவாயாக! எங்களை மன்னிப்பாயாக!நீ ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன் என்று கூறுவர்.

23 : 97. 98. என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும்உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்றும் கூறுவீராக! என் இறைவா!என்னிடம் அவர்கள் வருவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத்தேடுகிறேன்.

28 : 16. என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவேஎன்னை மன்னிப்பாயாக! என்றார். அவன் அவரை மன்னித்தான். அவன்மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையோன்.

7 : 23. எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீஎங்களை மன்னித்து அருள் புரியவில்லையானால்நஷ்டமடைந்தோராவோம் என்று அவ்விருவரும் கூறினர்.

2 : 286. எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்தமாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும்அவருக்குரியதே. எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ தவறுசெய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா!எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள்மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்குவலிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப்பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள்அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீஉதவுவாயாக! (எனவும் கூறுகின்றனர்).

3 : 16. எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள்பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக்காப்பாயாக! என்று அவர்கள் கூறுவார்கள்.

3 : 147. எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில்நாங்கள் வரம்பு மீறியதையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களைஉறுதிப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராகஎங்களுக்கு உதவுவாயாக! என்பதே அவர்களின் வேண்டுதலாக இருந்தது.

26 : 87. (மக்கள்) மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாளில் என்னைஇழிவுபடுத்தி விடாதே!

14 : 40. 41. என் இறைவா! என்னையும் என் சந்ததிகளிலும் தொழுகையைநிலை நாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனதுபிரார்த்தனையை ஏற்பாயாக! எங்கள் இறைவா! என்னையும் எனதுபெற்றோரையும் நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும்நாளில் மன்னிப்பாயாக! (எனவும் இப்ராஹீம் கூறினார்)

3 : 193. உங்கள் இறைவனை நம்புங்கள்! என்ற நம்பிக்கையை நோக்கிஅழைத்தவரின் அழைப்பைச் செவியுற்றோம். எங்கள் இறைவா! உடனேநம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவா! எங்கள் பாவங்களைமன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டு அழிப்பாயாக!நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக!

44 : 12. எங்கள் இறைவா! எங்களை விட்டும் வேதனையை நீக்குவாயாக!நாங்கள் நம்பிக்கை கொள்பவர்கள் (என்று கூறுவார்கள்)

3 : 194. எங்கள் இறைவா! உன் தூதர்கள் வழியாக நீ எங்களுக்குவாக்களித்ததை எங்களுக்கு வழங்குவாயாக! கியாமத் நாளில் எங்களைஇழிவு படுத்தாதே! நீ வாக்கு மீற மாட்டாய் (எனவும் அவர்கள் கூறுவார்கள்.)

1 : 4. 5. உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும்தேடுகிறோம். எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக!

3 : 8. எங்கள் இறைவா! எங்களுக்கு நேர் வழி காட்டிய பின் எங்கள்உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளைவழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.


23 : 109. எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எங்களை மன்னித்துஅருள் புரிவாயாக! நீ கருணையாளர்களில் சிறந்தவன் என்று எனதுஅடியார்களில் ஒரு சாரார் கூறி வந்தனர்.

2 : 201. எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையைவழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரகவேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! என்று கூறுவோரும்மனிதர்களில் உள்ளனர்.

28 : 24. அவர்களுக்காக அவர் தண்ணீர் இறைத்துக் கொடுத்தார். பின்னர்நிழலை நோக்கிச் சென்று என் இறைவா! எனக்கு நீ வழங்கும்நன்மையில் தேவையுள்ளவனாக இருக்கிறேன் என்றார்.

3 : 38. அப்போது தான் ஸக்கரிய்யா இறைவா! உன்னிடமிருந்து எனக்கொருதூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்என்று தம் இறைவனிடம் வேண்டினார்.

7 : 143. நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து அவரிடம் அவரது இறைவன்பேசிய போது என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப்பார்க்க வேண்டும் எனக் கூறினார். அதற்கு (இறைவன்) என்னை நீர் பார்க்கவேமுடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில்நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம் என்று கூறினான். அவரதுஇறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸாமூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது நீ தூயவன். உன்னிடம்மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான்முதலாமவனாக இருக்கிறேன் எனக் கூறினார்.

7 : 126. எங்கள் இறைவனின் சான்றுகள் எங்களிடம் வந்த போது அதைநம்பினோம் என்பதற்காகவே எங்களை நீ தண்டிக்கிறாய் (என்று ஃபிர்அவ்னிடம்கூறி விட்டு) எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக!எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக! என்றனர்.

7 : 151. என் இறைவா! என்னையும் என் சகோதரரையும் மன்னிப்பாயாக!எங்களை உனது அருளில் நுழைப்பாயாக! நீ கருணையாளர்களில் மிகவும்கருணையாளன் என்று (மூஸா) கூறினார்.

11 : 47. இறைவா! எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதைவிட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னைமன்னித்து அருள் புரியா விட்டால் நஷ்டமடைந்தவனாக ஆகி விடுவேன்என்று அவர் கூறினார்.

21 : 83 84. எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீகருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன் என அய்யூப் தமதுஇறைவனை அழைத்த போது அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்.அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும்அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்குவழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.

27 : 44. இம்மாளிகையில் நுழைவாயாக! என்று அவளிடம் கூறப்பட்டது. அதைஅவள் கண்ட போது தண்ணீர்த் தடாகம் என நினைத்து தனது கீழாடையைக்கரண்டைக்கு மேல் உயர்த்தினாள். அது பளிங்குகளால் பளபளப்பாக்கப்பட்டமாளிகை என்று அவள் கூறினாள். நான் எனக்கே தீங்கு இழைத்து விட்டேன்.ஸுலைமானுடன் சேர்ந்து அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டுவிட்டேன் என்று அவள் கூறினாள்.

23 : 118. என் இறைவா! மன்னித்து அருள்புரிவாயாக! நீ அருள்புரிவோரில்சிறந்தவன் என கூறுவீராக!

25 : 65. எங்கள் இறைவா! எங்களை விட்டும் நரகத்தின் வேதனையைத்தடுப்பாயாக! அதன் வேதனை நிலையானதாக இருக்கிறது என்று அவர்கள்கூறுகின்றனர்.

18 : 10. சில இளைஞர்கள் குகையில் ஒதுங்கிய போது எங்கள் இறைவா! உன்அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச்சீராக்குவாயாக! என்றனர்.

26 : 83. 84. 85. என் இறைவா! எனக்கு அதிகாரத்தை அளிப்பாயாக! என்னைநல்லோருடன் சேர்ப்பாயாக! பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரைஏற்படுத்துவாயாக! இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும்ஆக்குவாயாக!

20 : 114. உண்மையான அரசனாகிய அல்லாஹ் உயர்ந்து விட்டான்.(முஹம்மதே!) அவனது தூதுச் செய்தி உமக்கு முழுமையாகக் கூறப்படுவதற்குமுன் குர்ஆன் விஷயத்தில் அவசரப்படாதீர்! என் இறைவா! எனக்குக்கல்வியை அதிகப்படுத்து எனக் கூறுவீராக!

25 : 74. எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும்மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!என்று அவர்கள் கூறுகின்றனர்.

27 : 19. அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார். என்இறைவா! என் மீதும் எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்குநான் நன்றி செலுத்தவும் நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும்எனக்கு உதவுவாயாக! உனது நல்லடியார்களில் என்னையும் உனதுஅருளால் சேர்ப்பாயாக! என்றார்.

60 : 4. உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோஅதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம்.அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும்உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டதுஎன்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும்உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. உங்களுக்காக பாவ மன்னிப்புத்தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான்அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத்தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையேசார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமேஉள்ளது.

60 : 5. எங்கள் இறைவா! (உன்னை) மறுப்போருக்குச் சோதனையாகஎங்களை ஆக்கி விடாதே! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் இறைவா!நீயே மிகைத்தவன் ஞானமிக்கவன் (என்றும் பிரார்த்தித்தார்.)

71 : 28. என் இறைவா! என்னையும் எனது பெற்றோரையும் நம்பிக்கைகொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்டஆண்களையும் பெண்களையும் மன்னிப்பாயாக! அநீதி இழைத்தோருக்குஅழிவைத் தவிர வேறு எதையும் அதிகமாக்காதே! (எனவும் பிரார்த்தித்தார்)

23 : 93 94. என் இறைவா! அவர்கள் எச்சரிக்கப்படுவதை எனக்குக்காட்டினால் என் இறைவா! என்னை அநீதி இழைத்த கூட்டத்தில் ஆக்கிவிடாதே! என்று (முஹம்மதே!) கூறுவீராக!


2 : 128. எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும்எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும்சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளைஎங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீமன்னிப்பை ஏற்பவன் நிகரற்ற அன்புடையோன்.

3 : 53. எங்கள் இறைவா! நீ அருளியதை நம்பினோம். இத்தூதரைப்பின்பற்றினோம். எங்களை இதற்கு சாட்சிகளாகப் பதிவு செய்து கொள்!(எனவும் கூறினர்)

5 : 83. இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும்போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர்வடிவதை நீர் காண்பீர். எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம்.எனவே எங்களை சான்று கூறுவோருடன் பதிவு செய்வாயாக! எனஅவர்கள் கூறுகின்றனர்.

12 : 101. என் இறைவா! நீ எனக்கு அதிகாரத்தில் (சிறிது) வழங்கியிருக்கிறாய்.(பல் வேறு) செய்திகளின் விளக்கத்தை எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாய்!வானங்களையும் பூமியையும் படைத்தவனே! நீயே இவ்வுலகிலும்மறுமையிலும் எனது பாதுகாவலன். என்னை முஸ்லிமாகக்கைப்பற்றுவாயாக! நல்லோர்களில் என்னைச் சேர்ப்பாயாக! (என்றும்கூறினார்)

20 : 25. என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து! என்றார்.

17 : 80. என் இறைவா! நல்ல முறையில் என்னை நுழையச் செய்வாயாக!நல்ல முறையில் என்னை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்துஎனக்காக உதவக்கூடிய ஆற்றலை ஏற்படுத்துவாயாக! என கூறுவீராக!

29 : 30. என் இறைவா! சீரழிக்கும் இந்தச் சமுதாயத்துக்கு எதிராக எனக்குஉதவுவாயாக! என்று அவர் கூறினார்.

40 : 7. அர்ஷைச் சுமப்போரும் அதைச் சுற்றியுள்ளோரும் தமது இறைவனைப்போற்றிப் புகழ்கின்றனர். அவனை நம்புகின்றனர். எங்கள் இறைவா!ஒவ்வொரு பொருளையும் அருளாலும் அறிவாலும் நீ சூழ்ந்திருக்கிறாய்.எனவே மன்னிப்புக் கேட்டு உனது பாதையைப் பின்பற்றியோரைமன்னிப்பாயாக! அவர்களை நரகத்தின் வேதனையை விட்டுக்காப்பாயாக! என்று நம்பிக்கை கொண்டோருக்காக பாவமன்னிப்புத்தேடுகின்றனர்.

40 : 8. எங்கள் இறைவா! அவர்களையும் அவர்களது பெற்றோர்கள்வாழ்க்கைத் துணைகள் மற்றும் அவர்களது சந்ததிகளில் நல்லோரை நீவாக்களித்த நிலையான சொர்க்கச் சோலைகளில் நுழையச்செய்வாயாக! நீ மிகைத்தவன் ஞானமிக்கவன்.

46 : 15. தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்குவலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள்.சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும் பால் குடியை மறந்ததும்முப்பது மாதங்கள். அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதைஅடையும் போது என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்தஅருட்கொடைக்கு நன்றி செலுத்தவும் நீ பொருந்திக் கொள்ளும்நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனதுசந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.நான் முஸ்லிம்களில் ஒருவன் என்று கூறுகிறான்.

59 : 10. அவர்களுக்குப் பின் வந்தோர் எங்கள் இறைவா! எங்களையும்நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும்மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீதுவெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன் நிகரற்றஅன்புடையோன் என்று கூறுகின்றனர்.

2 : 250. ஜாலூத்தையும் அவனது படையினரையும் அவர்கள் களத்தில் சந்தித்தபோது எங்கள் இறைவா! எங்கள் மீது சகிப்புத் தன்மையை ஊற்றுவாயாக!எங்கள் பாதங்களை நிலைப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும்கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக! என்றனர்.

10 : 86. உனது அருளால் (உன்னை) மறுக்கும் கூட்டத்திடமிருந்துஎங்களைக் காப்பாற்றுவாயாக! (என்றும் கூறினர்)

66 : 11. என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டைஎழுப்புவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனது சித்திரவதையிலிருந்தும்என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக்காப்பாயாக! என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கைகொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான்.

17 : 24. அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக!சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல்இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக! என்று கேட்பீராக!

26 : 169. என் இறைவா! என்னையும் என் குடும்பத்தினரையும் அவர்கள்செய்து கொண்டிருப்பவற்றை விட்டு காப்பாற்றுவாயாக! (என்றும்கூறினார்)


10 : 85. அல்லாஹ்வையே சார்ந்து விட்டோம். எங்கள் இறைவா! அநீதிஇழைத்த கூட்டத்தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கி விடாதே! என்றுஅவர்கள் கூறினர்.

28 : 21. பயந்தவராக கவனத்துடன் அங்கிருந்து வெளியேறினார். என் இறைவா!அநீதி இழைக்கும் கூட்டத்தை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக!என்றார்.

3 : 191. அவர்கள் நின்றும் அமர்ந்தும் படுத்த நிலையிலும் அல்லாஹ்வைநினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச்சிந்திப்பார்கள். எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை நீதூயவன் எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! (என்றுஅவர்கள் கூறுவார்கள்)


2 : 285. இத்தூதர் (முஹம்மத்) தமது இறைவனிடமிருந்து தமக்குஅருளப்பட்டதை நம்பினார். நம்பிக்கை கொண்டோரும் (இதை நம்பினார்கள்).அல்லாஹ்வையும் அவனது வானவர்களையும் அவனது வேதங்களையும்அவனது தூதர்களையும் அனைவரும் நம்பினார்கள். அவனது தூதர்களில்எவருக்கிடையேயும் பாரபட்சம் காட்ட மாட்டோம் ெவியுற்றோம்கட்டுப்பட்டோம். எங்கள் இறைவா! உனது மன்னிப்பை (வேண்டுகிறோம்.)உன்னிடமே (எங்கள்) திரும்புதல் உண்டு எனக் கூறுகின்றனர்.

2 : 32. நீ தூயவன் நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்குவேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன் ஞானமிக்கவன் என்று அவர்கள்கூறினர்.

2 : 127. அந்த ஆலயத்தின் அடித்தளத்தை இப்ராஹீமும் இஸ்மாயீலும்உயர்த்திய போது எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை)ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன் அறிந்தவன் (என்றனர்.)


6306. அறிவிப்பாளர். - ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி)

அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட் கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.

6311. அறிவிப்பாளர். - பராஉ இப்னு ஆஸிப்(ரலி)

இறைவா! உனக்கு நான் கீழ்ப்படிந்தேன். காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கிறேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும் தான் (இவற்றை செய்தேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை. நீ அருளிய உன்னுடைய வேதத்தையும், நீ அனுப்பி வைத்த உன்னுடைய நபியையும் நான் நம்பினேன்.

6316. அறிவிப்பாளர். - இப்னு அப்பாஸ்(ரலி)

இறைவா! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் வலப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் இடப்பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குப் பின்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு (எல்லாத் திசையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக.

6317. அறிவிப்பாளர். - இப்னு அப்பாஸ்(ரலி)

இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். நீயே வானங்கள், பூமி மற்றும் அவற்றி உள்ளவர்களின் ஒளி ஆவாய். உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களை நிர்வம்ப்பவன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும், நீ உண்மையானவன். உன் வாக்கு உண்மையானது. உன்னுடைய கூற்று உண்மை. உன்னுடைய தரிசனம் உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. மறுமைநாள் உண்மை நரகம் உண்மை. நபிமார்கள் உண்மையானவர்கள். முஹம்மத்(ஸல்) அவர்கள் உண்மையானவர்கள். இறைவா! உனக்கே அடிபணிந்தேன். உன்னையே சார்ந்துள்ளேன். உன் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன். உன் சான்றுகளைக் கொண்டே வழக்காடுவேன். உன்னிடம் நீதி கேட்பேன். எனவே நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பம்ரங்கமாகச் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக. நீயே (என்னை மறுமையில்) முதலில் எழுப்புகிறவன். நீயே (என்னை இம்மையில்) இறுதியில் அனுப்பியவன். 'உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை' அல்லது 'உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை.

6320. அறிவிப்பாளர். - அபூ ஹுரைரா(ரலி)

என் அதிபதியே! உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால், அதற்கு நீ கருணை புரிவாயாக. அதை நீ (கைப்பற்றாமல்)விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக

6326. அறிவிப்பாளர். - அபூ பக்ர் அஸ்ஸித்தீக்(ரலி)

இறைவா! எனக்கு நானே அதிகமாக அநீதி இழைத்துக் கொண்டேன். உன்னைத் தவிர வேறெவராலும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே, உன்னிடமிருந்து எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக! மேலும், எனக்குக் கருணை புரிவாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பவனும் கருணையாளனுமாவாய்.

6365. அறிவிப்பாளர். - முஸ்அப் இப்னு ஸஅத்(ரஹ்)
இறைவா! உன்னிடம் நான் கருமித்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். கோழைத் தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். தள்ளாத வயதுக்கு நான் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக்கோருகிறேன். இம்மையின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், மண்ணறையின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்)'' இம்மையின் சோதனையென்பது தஜ்ஜாலின் சோதனையைக் குறிக்கிறது.
6322. அறிவிப்பாளர். - அனஸ் இப்னு மாலிக்(ரலி)
இறைவா! ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்கிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்
6367. அறிவிப்பாளர். - அனஸ் இப்னு மாலிக்(ரலி)

இறைவா! இயலாமையிலிருந்தும் சோம்பலிருந்தும் கோழைத் தனத்திலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இன்னும் வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

6368. அறிவிப்பாளர். - ஆயிஷா(ரலி)

இறைவா! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும் பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும், மண்ணறையின் சோதனையிலிருந்தும், அதன் வேதனையிலிருந்தும், நரகத்தின் சோதனையிலிருந்தும், அதன் வேதனையிலிருந்தும், செல்வத்தின் தீமைகளிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், நான் உன்னிடம் வறுமையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். (பெருங்குழப்பவாதியான) மªஹுத் தஜ்ஜாலின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளை என்னிலிருந்து கழுவுவாயாக! மேலும், அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப் படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக

6369. அறிவிப்பாளர். - அனஸ்(ரலி)

இறைவா! கவலையிலிருந்தும் துக்கத்திலிருந்தும் இயலாமையிலிருந்தும் சோம்பலிருந்தும் கோழைத் தனத்திலிருந்தும் கருமித்தனத்திலிருந்தும் கடன் சுமையிலிருந்தும் மனிதர்களின் அடக்குமுறைகளிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.

6370. அறிவிப்பாளர். - முஸ்அப் இப்னு ஸஅத்(ரஹ்)

இறைவா! உன்னிடம் நான் கருமித் தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். கோழைத்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். தள்ளாத வயதுக்கு நான் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இம்மையின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்

6382. அறிவிப்பாளர். - ஜாபிர்(ரலி)

நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை) குர்ஆனின் அத்தியாயங்களைக் கற்றுத் தருவதைப் போன்று கற்றுத் தருபவர்களாய் இருந்தார்கள்.

இறைவா! நீ அறிந்துள்ள படி (எது எனக்கு) நன்மை(யோ அ)தனை ஆற்றலால் எனக்கு ஆற்றல் உண்டாக வேண்டுமென உன்னிடம் கோருகிறேன். உன்னுடைய மாபெரும் அருளைக் கோருகிறேன். ஏனெனில், 'நீயே ஆற்றல் மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும் கிடையாது. நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன். இறைவா! இந்தக் காரியம் எனக்கு 'என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்' அல்லது 'என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்' நன்மையானதாக இருக்குமென நீ அறிந்திருந்தால் அதைச் சாதிப்பதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! இந்தக் காரியம் எனக்கு 'என் மார்க்கத்திலும் வாழ்க்கையிலும் தீமையானதென நீ அறிந்திருந்தால் இக்காரியத்தை என்னைவிட்டுத் திருப்பிவிடுவாயாக! என்னையும் இக்காரியத்தைவிட்டுத் திருப்பிவிடுவாயாக. நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! பிறகு அதில் எனக்குத் திருப்தியை அளித்திடுவாயாக.

6389. அறிவிப்பாளர். - அனஸ்(ரலி)
எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் நன்மை அருள்வாயாக் மறுமையிலும் நன்மை அருள்வாயாக. நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக

6398. அறிவிப்பாளர். - அபூ மூஸா(ரலி)

என் இறைவா! என் குற்றங்களையும், என் அறியாமையையும், என் செயல்கள் அனைத்திலும் நான் மேற்கொண்ட விரயத்தையும் மன்னித்திடுவாயாக. மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக. இறைவா! நான் தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றே செய்ததையும், அறியாமல் செய்ததையும், அறிந்து செய்ததையும் மன்னித்திடுவாயாக. இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை. இறைவா! நான் முன்னால் செய்ததையும், பின்னால் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும் பம்ரங்கமாகச் செய்ததையும் மன்னித்திடுவாயாக. நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். பின்னடைவு ஏற்படச் செய்பவனும் நீயே! நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன்.
6399. அறிவிப்பாளர். - அபூ மூஸா அல் அஷ்அரீ(ரஹ்)

இறைவா! என் குற்றங்களையும் என் அறியாமையையும், என் செயல்களில் நான் மேற்கண்ட விரயத்iயும், மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக! இறைவா! நான் விளையாட்டாகச் செய்ததையும், வினையாகச் செய்ததையும், தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றேச் செய்ததையும் மன்னித்திடுவாயாக! இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை.

6405 அறிவிப்பாளர். - அபூ ஹுரைரா(ரலி)

'சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே!

6406 .

இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப்படும். தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளின் பிரியத்திற்குரியவையுமாகும். (அவை:) சுப்ஹானல்லாஹில் அழீம், சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி.

(பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்; அவனைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்.)
Posted by Unknown Labels:
Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.