2012 - ஒலிம்பிக் துவக்க விழாவின் மர்மங்கள் 
இந்த வருடம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த மிக முக்கியமான நிகழ்வுதான் 2102 ஒலிம்பிக், அதன் துவக்க விழா பிரித்தானியாவின் ஒலிம்பிக் கிராமத்தில் மிகப் பிரம்மாண்டமாக நிகழ்ந்தது.இந்த நிகழ்வை உலகின் நாளா பக்கங்களிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்கள் தொலைக்காட்சியில் நேரடியாக பார்த்து ரசித்தனர்.ஆனால் இந்த ஆண்டின் ஒலிம்பிக் நிகவின் துவக்க மற்றும் இறுதி நிகழ்வுகளின் மறைந்த மர்மமான தகவல்கள் என்ன ?

துவக்க விழா

  TRAINSPOTTING SLUMDOG MILLIONAIRE போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கிய பிரித்தானிய திரைப்பட இயக்குனர் Danny Boyle தான் இந்த நிகழ்வினதும் இயக்குனர்." Isle Of Wonder " இதுதான் இந்த நிகழ்வின் சாராம்சம் அல்லது தீம் என்றும் வைத்துக் கொள்ளலாம்.ஆரம்ப விழாவின் நிகழ்வுகள் பிரித்தானிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.ஆரம்ப கால புராணக்கதைகளில் துவங்கி தொழில் புரட்சி மற்றும் நவீன காலம் என செல்கிறது களியாட்டங்கள்.இந்த விடயங்களை அவர்கள் சொல்லப் பயன்படுத்திய சில மர்மமான குறியீடுகளே இங்கு மிகவும் முக்கியமானது.அது பற்றி இப்போது அலசுவோம்.

பச்சைப் பசேலான சந்தோசமான நிலம்.

ஆரம்ப நிகழ்வின் தொடக்கம் பண்டைய நாட்டுபுற இங்கிலாத்தைக் குறிக்கும் விதமாக விவசாயிகளையும் கிரிக்கெட் வீரர்களையும் கொண்டு ஆரம்பிக்கிறது.மேலும் அதன்போது பல மாயமான விசித்திரமான குறியீடுகளும் காட்டப்படுகின்றன.அப்படி காட்டப்பட்ட விசித்திரமான குறியீடுகளின் மிக முக்கியமானதும் ஆரம்ப நிகழ்வின் மையைப் புள்ளியுமானதுமான ஒரு குறியீடே அந்த மலை உச்சி. " Glastonbury Tor " என்று அழைக்கப்படும் இந்த மலை உச்சிக்கு மந்திர சக்திகள் உள்ளதாக இன்றும் அப்பகுதிகளில் நம்பப்படுகிறது.
சுருள் வடிவில் அமைந்த அந்த Glastonbury Tor மலையுச்சி நாட்டுப்புற விவசாயிகளையும் கிரிக்கெட் வீரரகளையும் மேலிருந்து நோக்கும்விதமாக அந்த காட்சி அமைக்கப்பட்டிருந்தது.மேலும் அம் மலையுச்சியில் ஒரு ஓக் மரம் (கருவாலி) நடப்பட்டிருந்தது.ஓக் மரம் ஆங்கிலேயர்களின் மூதாதையர்களான " செல்டிக் " இனத்தவர்களின் மிகப் புனிதமான மரமாகும், இம்மரம் செல்டிக் இனத்தவர்களின் பாதிரிமார்களின் மிகப்புனிதமான மரமாகும்.மேலும் அவர்களின் கருத்துப்படி அது தெய்வத்தன்மையின் உச்ச நிலைப் பிரதிநிதியாகும்.
Glastonbury Tor இங்கிலாந்தின் பழைமையான புனிதத் தளங்களில் ஒன்று.பல விசித்திரமான கற்பனைக் கதைகளுடன் மற்றும் வரலாறுகளுடன் தொடர்புபட்டுள்ளது  இந்த இடம்.உதாரணத்துக்கு இந்த புராணக்கதையைக் கூறலாம், வராலற்று ஆதாரங்கள் கொண்டு நிரூபிக்கப்படாத ஆனால் வரலாற்றில் இருந்ததாக விவாதிக்கப்படும் பிரித்தானிய அரசரே கிங் ஆர்தர் ஆவார்.இவரின் இருப்பு பற்றி வரலாற்றுரீதியாக எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை, ஆனால் இவரைப் பற்றி அப்பகுதிகளில் பரவியிருக்கும் கிராமக்கதைகள் மற்றும் இலக்கிய தொகுப்புகள் மூலமே இவரைப் பற்றி அறியக் கிடைக்கிறது.ஆனால் ஒருசாரார் இவர் வரலாற்றில் வாழ்ந்த ஒருவர் என்று விவாதிக்கின்றனர்.இவரைப் பற்றிய வரலாற்றை எழுதியவர் " Geoffrey Of Monmouth " ஆவார். இவர் எழுதிய வரலாற்றுப் புத்தகத்தின் பெயர் " Historia Regum Britania " என்ற லத்தீன் மொழியில் எழுதப்பட்ட புத்தகத்தில் குறிப்பிடப்படும் " Avalon " என்ற இடமே இந்த Glastonbury Tor ஆகும். கிங் ஆதரின் வரலாற்றில், கிங் ஆதருடன் 12 போர் வீரர்கள் பற்றியும் கூறப்படுகிறது.

  இன்னொரு புராணக்கதையின் அடிப்படையில், Glastonbury பிரதேசத்தில் காணப்படும் இன்னொரு விசித்திரமான இடம் தான் " Chalice well ".கிறிஸ்தவர்களின் நற்செய்திகளின் அடிப்படையில் ( Gospels ) இயேசு கிறிஸ்துவுக்கு தனது கல்லறையை வழங்கிய Joseph Of Arimathea என்பவர் பிற்காலத்தில் இந்த இடத்துக்கு வந்து இயேசு கிருஸ்துவை சிலுவையில் அறைந்த போது சிந்திய ரத்தம் அடங்கிய மதுக்கோப்பையை அங்கு இருந்த கிணற்றில் விசியதாக கூறப்படுகிறது.அந்த கிணறே இன்று  அங்கு காணப்படும் Chalice Well என ஒரு புராணக்கதையும் உண்டு.அகல்வாராய்ச்சியாலர்களின் கருத்துக்கு அமைய இங்கு காணப்படும் GLASTONBURY ABBEY என்ற ஆலயம் எகிப்தின் பிரமிட்களை கட்டப் பயன்பட்ட கேத்திர கணித முறையே இங்கும் பயன்பட்டுள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர்.
GLASTONBURY ABBEY.
அசல் GLASTONBURY.
இன்று இந்த இடம் கிறிஸ்தவர்களின் புனிதப் பிரதேசமாக இருந்தாலும் இன்றும் இங்கு கிறிஸ்தவத்துக்கு முன் பின்பற்றப்பட்டு வந்த எல்லா விதமான மாய மந்திர சடங்குகள் வருடாவருடம் நடைபெற்றே வருகிறது.
Glastonbury Festival இல் பிரமிட்டின் ஆதிக்கம்.
 ஒலிம்பிக் ஸ்டேடியத்துக்கு முன்னாள் Glastonbury Tor வைக்கப்பட்டதில் நமக்குப் புரியாத விசித்திரமான விஷயங்கள் அடங்கியுள்ளது என்பது உறுதி,ஏனெனில் அந்த இடம் அன்று முதல் இன்று வரை மாய மந்திர சடங்குகளுக்கு பிரசித்திபெற்ற இடம் என்பதால்.

கிராமத்து மக்கள் வேலை செய்துகொண்டு மேபோலை (Maypole) சுற்றி ஓடிக் கொண்டிருக்கும் போது, கூட்டத்தில் இருந்து எழும்பும் ஒரு சிறுவன் ஆங்கிலக் கவிஞ்சன் வில்லியம் ப்ளேக் அவர்களின் கவிதை ஒன்றை படித்தபடி எழுந்து வருகிறான்.இந்த கவிதை அவரின் Jerusalem - The Emanation of the Giant Albion என்ற நூலில் இடம்பெற்ற ஒன்றாகும்.

ஞானமார்க்கம் (Gnosticism), Druid (செல்டிக் மத போதகர்கள் ) மற்றும் பிரீமேசனரி போன்ற விசித்திரக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட கவிஞ்சர் வில்லியம் ப்ளேக் பிரித்தானிய இலக்கிய உலகில் எப்பவும் ஒரு தூரநோக்குள்ள கலைஞ்சராக பார்க்கப்படுகிறார்.அவரது சில படைப்புக்கள் கிறிஸ்தவத்துடன் சம்பந்தப்பட்டிருந்தாலும் பல படைப்புக்கள் புரியாத விசித்திரமான கொள்கைகளை அடிப்படையாக கொண்டிருந்தன.   இவரின்    "ஜெருசலம் " என்ற படைப்பு ஜீசஸ் அவரது மாமாவான ஜோசப்புடன் Glastonbury வந்ததாக கூறப்படும் உறுதிப்படுத்தப்படாத புராணக்கதையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது.

அந்த கவிதை வரிகள் ஜீசஸ் அவர்கள் தனது மாமாவுடன் இங்கு வந்து ஜெருசலத்தை இந்த சாத்தானிய இருண்ட ஆலைகளுக்கு மத்தியில் நிறுவியிருந்தால் என கேட்கிறது.இப்படி அந்த கவி வரிகள் ஒலித்துக்கொண்டிருக்கும் போது காட்சிகள் மாறுகின்றன.பசுமை நிறைந்த இங்கிலாந்தின் நிலங்களில் அந்த கவி வரிகள் குறிப்பிடும் சாத்தானிய இருண்ட ஆலைகள் தோன்றுகின்றன.அத்துடன் துவங்குகிறது தொழில்புரட்சி தொடர்பான காட்சிகள்.

தொழில் புரட்சி

அந்த கவிவரிகள் வசிக்கப்பட்டதன் பின், இங்கிலாந்தின் பசுமையான பச்சைப்பசெலான நிலங்களில் காலடி வைக்கின்றனர் நீண்ட தொப்பிகளை அணிந்த ஒரு குழுவினர்.அக்குழுவினர் அந்த நிலங்களில் மிக முக்கியமான ஒரு மாற்றத்தை துவங்குகின்றனர்.
ஒருவருக்கொருவர் கைகளைக் குலுக்கிக் கொள்ளும் அந்த குழுவினர் தொழில் புரட்சியை ஒருங்கிணைக்கின்றனர்.அந்த நீண்ட தொப்பிகளை அணிந்த குழுவினரை Isambard Kingdom Brunel என்றழைக்கப்படும் சிவில் இஞ்சினியர் வழிநடத்துகிறார்.

Isambard Kingdom Brunel போன்று சித்தரிக்கப்பட்ட ஒருவர் Glastanbury Tor அருகிலிருந்து கொண்டு ஷேக்ஸ்பியரின் The Tempest பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு ஓக் மரம் நிலத்திலிருந்து வெளியாகி வருகிறது அதனுடன் சேர்த்து நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் Glastanbury Tor இன் அடியிலிருந்து வெளியாகின்றனர்.

இந்த காட்சியில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய மிக முக்கியமான மூன்று அம்சங்கள் இருக்கின்றன.

    கிங் ஆர்தர் புராணக்கதையில் Annwn என்றழைக்கப்படும் பாதாள உலகுக்கு நுழைவு Glastonbury Tor இன் மேலால் என்பது,

    தொழில் புரட்சி பற்றிய இந்த நிகழ்வுக்கு விழ ஏற்பாட்டுக் குழுவினர் வைத்த அதிகார்வபூர்வமான பெயர் " Pandemonium " ஆகும்.ஆங்கில எழுத்தாளர் John Milton எழுதிய " Paradise Lost " என்ற காவியத்தில் வரும் நரகத்தின் தலைநகரமே இந்த " Pandemonium " ஆகும்.இதன் மூலம் அவர்கள் கூறவரும் தகவல் ஆங்கில கவி வில்லியம் ப்ளேக் குருப்பிட்டது போல் இங்கிலாந்து ஒரு புதிய ஜெருசலம் ஆக மாற்றமடையாது மாறாக அது இந்த பூமியின் நரகமாகவேமாறும் என்றா ?

    உலகில் காணப்பட்ட முடியாட்சிகளை கவிழ்த்துவிட்டு அந்த நாடுகளை தொழில் புரட்சியின் பக்கம் கொண்டு சென்றவர்கள் யாரெனில் உலகின் மிக பலம்வாய்ந்த இரகசிய சமூகங்களான Orient Freemasons மற்றும் Bavarian Illuminati போன்றவையாகும்.18 ஆம் நூற்றாண்டின் தொழில் புரட்சிக்குப் பிற்பாடு உலக அரங்கில் பல சமூக கலாச்சார மற்றும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 இன்னும் சில மர்மங்கள்....
மேலிருந்து பார்க்கும் போது தெரியும் பாரிய ஒற்றைக் கண்.

ARTICLE FROM TAMILKHILAFA.BLOGSPOT.COM  




0 comments:

Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.