ரியாத் : மக்காவிலிருக்கும் இறையில்லமான மஸ்ஜித்-அல்-ஹராம் பள்ளி மேலதிகமாக 5மில்லியன் பேர் தொழ வசதியாக இருக்கும் படி விரிவாக்கப்படும் எனத் தெரிகிறது .

மக்காவிலுள்ள மஸ்ஜித் -அல்-ஹராம் பள்ளியின் புதிய விரிவாக்கத்திட்டத்திற்கு, இரு புனிதப் பள்ளிகளின் பணியாளரும் சவூதியின் அரசருமான மன்னர் அப்துல்லாஹ் ஆணையிட்டுள்ளார் இதன் மூலம் தற்போது மக்காவில் வழிபடுபவர்களைவிட மேலும் 5மில்லியன்முஸ்லிம்கள் தங்கி வழிபட வசதியானதாக இருக்கும் என்று மக்காவின் நகரத்தந்தை உஸாமா அல் -பர் கருத்துத் தெரிவித்துள்ளார் .

“இது மக்காவின் புனிதப் பள்ளியின் மிகப் பெரும் மேம்பாட்டுத் திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டத்தில் மக்கா பள்ளியின் முகப்புத் தோற்றத்தையும் மாற்றக் கூடிய திட்டமும் அடங்கும் என்று அல்பர் கூறினார். இந்த விரிவாக்கம் மூலம் பள்ளியின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் மேலதிகமான முஸ்லிம்கள் தொழ அதிகமான இடவசதி கிடைக்கும் என்றும் கூறினார் .

மன்னர் அப்துல்லாஹ் இந்த விரிவாக்கப் பணிக்காக ஆணை பிறப்பித்தார் .நகராட்சி மற்றும் ஊரகத்துறை அமைச்சர் இளவரசர் மிதேப், இத்திட்டத்தில் நடைபாதை சுரங்கங்கள் மற்றும் சேவை நிலையங்களும் இருக்கும் என்று கூறினார் .

இந்த அரசாணை மக்கா பெரிய பள்ளியின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதியில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்தும் உத்தரவையும் உள்ளடக்கியுள்ளது. இதற்கென்று அமைக்கப்பட்ட விசேஷ குழுக்கள் இந்த நிலங்களின் விலை மதிப்பீடு செய்யத் துவங்கியுள்ளன என்றும் மிதேப் கூறினார் .

“புதிய சுரங்க நடைபாதைகள் மூலம் பள்ளிவளாகத்தின் வடக்குப் பகுதியை இணைக்கும் கட்டுமானப் பணிகளும் இத்திட்டத்தின் ஓர் அங்கமாக இருக்கும் ” என்றும் அவர் மேலும் கூறினார் .

இப்புனிதப் பள்ளியின் முதல் பெரிய விரிவாக்கப்பணி 1925ல் சவூதி அரேபியாவை நிறுவிய மன்னர் அப்துல் அஜீஸின் உத்தரவின்படி நிறைவேற்றப்பட்டது. 1989ல் அப்போதைய சவூதி மன்னர் ஃபஹத், மஸ்ஜித் அல் ஹராமின் மாபெரும் விரிவாக்கத்தைச் செயல்படுத்தி 1,52,000 சதுர மீட்டர் பரப்பளவிலிருந்த தொழும் இடத்தை 3,56,000 சதுர மீட்டராக அதிகரிக்கச் செய்தார் .

ஷூரா எனும் ஆலோசனைக் குழு மேலதிகமான நிதி ஒதுக்கீடு மூலம் இரு புனிதபள்ளிகளின் தலைமைக்கு உதவி, அதன் மூலம் மேலும் சிறப்பான சேவைகளை புனித உம்ரா மற்றும் ஹஜ் காலத்தில் இப்பள்ளிக்கு வரும் ஹாஜிகளுக்கும் பயணிகளுக்கும் வழங்கவும் மேலும் இவ்வகையில் பயனுள்ள அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளவும் பரிந்துரைத்துள்ளது .

செளதி மன்னர் அப்துல்லாஹ் அவர்களின், புனித மக்காவின் மஸ்ஜித் ஹராம் பள்ளியின் புதிய விரிவாக்கம் மொத்த விரிவாக்கமும் வந்த பின்னர் 5 மில்லியன் மக்கள் ஒரே நேரத்தில் தொழும் வசதி கிடைக்கும் .... மாஷா அல்லாஹ். நினைக்கவே ஆச்சரியம். வீடியோ பார்த்தால் தான் தெரியும்.



நன்றி:www.khair.ws
Posted by Unknown Labels:

0 comments:

Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.