கொரிய மொழியிலான பழமைவாய்ந்த ஒரேயொரு அல்குர்ஆன் |
சர்வதேசப் பிரிவு: தற்போதைய நிலையில் கொரிய மொழிக்குப் பெயர்க்கட்ட மிகப் பழமைவாய்ந்த ஒரேயொரு அல்குர்ஆன் மாத்திரமே உள்ளது. எனவே இதனை மீள்பார்வை செய்து புதுப்பிக்க வேண்டியுள்ளது. கடந்த சனியன்று நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பதிலளித்த வட-கொரியாத் தலைநகர் சுஊலிலுள்ள இஸ்லாமிய மைத்திய நிலைய முகாமையாளர் 'முனீர் அஹ்மத்' அவர்கள், 'வடகொரியாவிலுள்ள மஸ்ஜிதுகள் மற்றும் இஸ்லாமிய நிலையங்களின் எண்ணிக்கை மிகக் குறைவானதாகும். முஸ்லிம்கள் எதிர்நோக்கும் மிகமுக்கியமானப் பிரச்சினை இஸ்லாமியக் கல்லூரிகளில்லை என்பதேயாகும் என்றார். இதுதவிர, பிக்ஹ் மற்றம் ஹதீஸ் போன்ற துறைகளில் இஸ்லாமிய கிரந்தங்கள் கொரிய மொழியில் இல்லாமையும் மற்றொரு பிரச்சினையாகும். இதுவரையில் இவற்றில் எந்தவொரு நூலும் கொரிய மொழிக்கு பெயர்க்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார். இன்று ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் இஸ்லாம் குறித்த ஆய்வுகளை இந்நாட்டில் மேற்கொண்டு வருவதுடன், இவர்களில் பலர் படிப்படியாக இஸ்லாத்தைத் தழுவிவருவதும் குறிப்பிடத்தக்கது என அவர் குறிப்பிட்டார். வட-கொரிய ஊடகங்கள் இஸ்லாம் பற்றிய நல்லெண்ணத்தைக் கொண்டிருப்பதுடன், ஆஃப்கானிஸ்தான், பலஸ்தீன் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் இடம்பெறும் ஆக்கிரமிப்புக் குறித்த தகவல்களை வழங்கிவருதும் குறிப்பிடத் தக்கது என அவர் தெரிவித்தார். |
Posted by
Unknown
0 comments:
Post a Comment