 கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளன. எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.
நமது இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல! மேற்கத்திய கலாச்சாரத்தை இங்கும் கடைபிடிக்கின்றனர்,
இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதரண விஷயம் என்பதையும் தாண்டி ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு கவுரவமான விஷயமாக மாறி விட்டது.
உங்க லவ்வரோட பேர டைப் பண்ணி அப்டி எஸ்.எம் எஸ் அனுப்பு இப்டி எஸ்.எம்.எஸ் அனுப்பு ஒரு எஸ்.எம்.எஸ் க்கு 3 ரூபாய் என்று கூறி காதலர் தினம் என்ற பெயரில் இளைஞர்களிடமிருந்து பணத்தை அபகரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
இஸ்லாமிய இளைஞர்களும் இளைஞிகளும் இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் விழுந்து விடுகின்றனர்.
இதற்கெல்லாம் காரணம் காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கள் மற்றும் அசிங்கங்கள் பற்றிய விழிப்புணர்வும் இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற அறிவும் நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும், இல்லாமையே.
“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6243
தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை.
ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.
திருமணத்திற்கு முன்பு பெண்ணைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். முகீரத் இப்னு ஷுஃபா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்” என்று கூறினார்கள். (நூல்: நஸயீ 3183)
மேற்கூரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.
ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.
விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.
பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.
செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.
செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.
தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.
ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.
ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.
பிள்கைளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதை நிறுத்தினால் பிப்வரி 14 உங்கள் பிள்ளையின் கற்பு பறிபோகும் நாளமாக மாறாமல் தடுக்கலாம்.
இந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குலைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.
இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு காதல் விகாரத்தில் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை 217 (தினமணி 8-5-2010).
என்றாவது அம்மா நேசிக்காததால் மகன் தற்கொலை என்ற செய்தியை கேள்வி பட்டுள்ளோமா? கிடையாது!
ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை அல்லது காதலியின் முகத்தில் ஆசி ஊற்றினான் ( திருச்சி சம்பவம்) போன்ற செய்திகளை நிறைய கேள்விபட்டிருப்போம்.
மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர். (உம்: தொழிலதிபர் குடுபத்துடன் தற்கொலை)
பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?
வீட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள்.
ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?
தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.
இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை” அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.
இப்படி உயிர் கொல்லியாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழ்த்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.
இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூடசமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.
இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொண்ண லவ் பண்ணிக்கவா’ என்று கேட்டால் ”டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்ச கொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள்.
ஏன் காதலித்தவர்களே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள்.
அவ்வளவு ஏன்?, ஒரு பெண்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேம் காதலித்தால் முதலில் சண்டைக்கு போவான்.
அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பரவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்கறையோடு நடந்து கொள்ளுங்கள்!
சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14 ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பரிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!
பிப்ரவரி 14 ஆம் தேதியும் டிசம்பர் 1 ஆம் தேதியும் நம்மை பொறுத்வரை ஒன்று தான். எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோய்க்காக டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அறிவிக்கப்பட்டு அதில் எஸ்ட்ஸ் பற்றிய விழிப்புர்ணபு பிரச்சாரம் செய்யப்டுகின்றது(தனி நாள் ஒதுக்காமல் அனைத்து நேரங்களிலும் நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் என்பதே நமது நிலை).
அதே போன்று தான் பிப்ரவரி 14 ல் காதல் கொண்டாட்டங்கள் நடைபெறாமல் தடுக்க காதல் எனும் உயிர் கொல்லி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட வேண்டும். அன்று மட்டும் இல்லாம் எல்லா நேரங்களிலும் இந்த வழிப்புணர் பிரச்சாரங்கள் மக்களிடையே செய்யப்பட வேண்டும்.
Posted by
Unknown
Labels:
இஸ்லாம்
முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!! எச்சரிக்கை – கவனம் – உஷார்
 பிள்ளை பெறுவது பெரிதல்ல! அதைப் பேணி வளர்ப்பது தான் பெரிது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இன்று நாம் நமது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்புகிறோம். காலையில் செல்லும் பிள்ளைகள் மாலையில் திரும்புகின்றனர். தினமும் பள்ளிக்குப் போய் படித்து விட்டு வருகின்றனர் என்று நாம் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம். யாரேனும் ஒரு பள்ளி மாணவி, யாருடனோ ஓடி விட்டாள் என்று தகவல் வரும் போது, நம் பிள்ளை அப்படியெல்லாம் போகாது; நம் பிள்ளை தங்கக் கட்டி என்று ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் மீது தளராத நம்பிக்கை வைத்திருக்கின்றனர். பிள்ளைகள் மீது இப்படி ஒரு நம்பிக்கை வைத்திருப்பதில் தவறில்லை. இருக்க வேண்டியது தான். ஆனால் தன் பிள்ளைகளின் நடவடிக்கை மீது ஒரு கண் வைக்காமல் இருப்பது, கவனிக்காமல் இருப்பது மிகப் பெரிய ஆபத்தை வரவழைத்து விடுகின்றது. குறிப்பாக இன்றைய காலத்து சினிமாக் கலாச்சாரம் மாணவ, மாணவியரைப் பல தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றது. பள்ளி விட்டு வந்ததும் நமது பிள்ளைகள் பாடம் படிப்பதை விட்டு விட்டு, படம் பார்க்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். சீரியல்களின் பிடியில் கட்டுண்டு இருக்கும் நாம் டி.வி.யைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது நமது பிள்ளைகளும் சேர்ந்தே பார்க்கின்றனர். நம்மால் அந்தப் பிள்ளைகளைத் தடுக்க முடிவதில்லை. நம் வீட்டிலோ, வெளியிலோ ஆண், பெண் இருவர் கட்டிப் புரளும் காட்சிகளைப் பார்க்க முடியாது. குளிக்கும் பெண்கள் கூட ஆபாசமாகக் குளிப்பது கிடையாது. ஆனால் இந்த சினிமாக் காட்சிகளில் படுக்கையறைக் காட்சிகள், ஆபாசக் குளியல் காட்சிகள் அப்பட்டமாக அப்படியே காட்டப்படுகின்றன. இந்தக் காட்சிகளைத் தான் டி.வி.களில் பெற்றோர், பிள்ளைகள் என அனைவரும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தையும் டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்றன. இதையும் பெற்றோர் சேர்ந்து கொண்டு தான் பார்க்கின்றனர். விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகின்றனர். உடனே பெற்றோர்கள் பிள்ளைகளைத் திட்டுகின்றனர். அவர்கள் தேர்வில் தோற்றதற்குத் தாங்களும் ஒரு காரணம் என்பதைப் பெற்றோர்கள் வசதியாக மறந்து விடுகின்றனர்.
செல்லப் பிள்ளைக்கு ஒரு செல்போன் பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும். இது பிள்ளைகளின் படிப்பைப் பாழாக்குவதன் காரணத்தால் தான் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் போன்ற இடங்களில் பாட நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதற்குத் தடை செய்துள்ளனர். செல்போன்களால் படிப்பு பாழாகின்றது என்பதற்கு இது சிறந்த சான்றாகும். செல்போன்கள் இவ்வாறு படிப்பை மட்டும் பாழாக்கவில்லை. அவர்களுடைய ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன. செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்களின் பட்டியலில் சிலவற்றை உங்கள் பார்வைக்குத் தந்திருக்கிறோம். 1. நீலப்படங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அவை நம்முடைய பிள்ளைகளின் செல்போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டு, பரிமாறவும் படுகின்றன. 2. அழகான மாணவிகள் அவ்வப்போது நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ படம் எடுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு பல மாணவர்களின் பார்வைக்கு விருந்தாகப் படைக்கப்படுகின்றன. 3. SMS (Short Message Service) என்பது இப்போது Sex Message Service ஆக மாறி விட்டது. அந்த அளவுக்கு ஆபாசச் செய்திகள் இதில் பரிமாறப்படுகின்றன. 4. தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள்: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன. ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன. அண்மையில் நம்முடைய ரகசிய கண்காணிப்புக் குழுக்கள் மூலம், மகளிர் பள்ளிக்கூடங்கள் மற்றும் கோச்சிங் சென்டர்களைக் கண்காணித்ததில் பல அதிர்ச்சி தரும் செய்திகள் கிடைத்துள்ளன.
 பருவமடைந்த பெண் பிள்ளைகள் சர்வ சாதாரணமாக வாலிபர்களுடன் செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாறுகின்றனர். பல சந்து பொந்துகளில் சந்திப்புகளும் நடைபெறுவதை அறிய முடிந்தது.
ஏற்கனவே வீட்டில் இருக்கும் கன்னிப் பெண்களும், திருமணமான பெண்களும் செல்போன் செக்ஸில் பலியாகி அந்நிய ஆடவருடன் ஓடிப் போகும் கொடுமை ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதையே நம்மால் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கும் போது, பள்ளிக்கூடம் செல்லும் பருவ வயதுப் பிள்ளைகள் பற்றிய இந்த அதிர்ச்சித் தகவல் நம்முடைய இரத்தத்தை உறைய வைக்கின்றது. இந்த அதிர்ச்சித் தகவலைத் தெரிந்து கொள்ளும் பெற்றோர்கள் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக் கீழே தருகிறோம். தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன் கொடுக்காமல் இருத்தல். ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர். செல்போன் இல்லாவிட்டாலும் பள்ளி செல்கின்ற ஆண், பெண் பிள்ளைகளின் அனைத்து நடவடிக்கைகளின் மீதும் முழுக் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள். உங்களது பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்’ என்ற ஹதீஸ் எல்லோருக்கும் பொருத்தமானது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு பொறுப்புதாரிகள். ஆண்கள் தமது கட்டுப்பாட்டுக்குக் கீழுள்ள குடும்பத்தினருக்கு பொறுப்பாளர்கள். எனவே, ஒவ்வொருவரும் தமது பொறுப்புக்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.‘நீங்கள் உங்கைளயும், உங்கள் குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ என்று அல்குர்ஆன் கூறுவைத நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். நரக நெருப்பின் விறகுகளாக நாம் மாறிவிடாதிருக்க அல்லாஹ் எமக்கு அருள்பாலிக்க வேண்டும். இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றுகின்ற மக்களாக நாம் மாறுவதற்கு அல்லாஹ்வின் உதவியை வேண்டி நிற்போம்.
இவ்வுலகில் - நாகரிகத்தையும், கவுரவத்தையும், அந்தஸ்தையும் விட. மானம், மரியாதையும். ஈமானும் இறையச்சமும்தான் முக்கியம். அல்லாஹ். அர்ரஹ்மான் நம் அனைவரையும். மானக்கேடான விஷயத்தில் இருந்து பாதுகாத்து, ஈமானோடு வாழவைத்து முஸ்லிமாக மரணிக்க செய்வானாக! ஆமீன். சிந்திப்போம் செயல்படுவோம்.
நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319 3456)
Posted by
Unknown
Labels:
இஸ்லாம்
இந்தியாவிலேயே மிகப் பெரிய பள்ளிவாசல்
 கேரளாவின் கோழிகோட்டில் சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 ஏக்கர் பரப்பளவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.இத்தகவலை அதன் கட்டடக்கலை வடிவமைப்பாளர் ரியாஸ் முகம்மது செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அடுத்த 5 மாத காலத்திற்குள் இதற்கான கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் பள்ளிவாசல் கட்டி முடிக்கப்படவுள்ளதாம் .
 முகலாயர் கால கட்டடப் பாணியில் அமைக்கப்படவிருக்கும் இந்தப் பள்ளிவாசலில் ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் தொழுகை நடத்தலாம் என்றும் அவர் கூறினார்.மேலும், கருத்தரங்கு நடத்துவதற்கான ஆடிட்டோரியம் மற்றும் பெரிய நூலகமும் பள்ளிவாசல் வளாகத்தி்ல் கட்டப்படும் என்றும், 1000 பேர் தங்குவதற்கான வசதிகளும் செய்யப்படும்.
Posted by
Unknown
Labels:
இஸ்லாம்
சூனியம் - ஒரு பார்வை
விஞ்ஞான வளர்ச்சிகள் அதிகரித்துள்ள இன்றைய காலத்திலும் மக்கள் மத்தியில் மூட நம்பிக்கைகள் அதிகமாகவே காணப்படுகின்றன. மக்கள் சிந்திக்கத் தவறியதன் விளைவாக மூட நம்பிக்கைகளில் மூழ்கி ஒவ்வொருவரும் தம்மைத்தாமே அழித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி மக்களை அழித்துக் கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகளில் ஒன்றுதான் 'சூனியம்' என்பதும்.
ஒருவன் மற்றொருவனுக்கு சூனியம் செய்துவிட்டால் போதும், அந்த சூனியத்தின் மூலமாக அவனைக் கொல்லவோ, கை கால்களை முடக்கவோ, தீராத நோய்களை உண்டாக்கவோ முடியும் என்று மக்கள் நம்புகின்றனர். இன்னும் சூனியத்தால் பல அற்புதங்கள் செய்ய முடியும் என்றும் நம்புகின்றனர்.
இவர்கள் நம்புவது போன்று சூனியத்தால் எதையும் செய்ய முடியும் என்றிருப்பின், தமக்குப் பிடிக்காத ஒரு சாரார் மற்றொரு சாராரை சூனியம் செய்து கொன்று விடலாமல்லவா? ஏன் கத்தி களையும், தடிகளையும் பெரும் ஆயுதங்களையும் தூக்கிக் கொண்டு கலவரம் செய்து கச்சேரி செல்ல வேண்டும்? சரி, குறைந்த பட்சம் சூனியம் செய்பவர்கள் அவர்களின் தொழிலிற்கு இடைறாக இருப்போரையாவது கொன்று சூனியத்தின் சக்தியை நிரூபிக்கலா மல்லவா?
பலர் சூனியத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அது ஏன்? எப்படி? என்று நமக்குச் சந்தேகம் எழுவது எதார்த்தமானதே.! இதை நாம் நன்றாக அறிந்து கொண்டால் இவ்வாறு ஏற்படும் சந்தேகங்களைத் தவிர்க்கலாம்.
சூனியம் என்பது மனதைக் குழப்பும் ஒரு கலை, இந்த கலையைச் செய்வதால் அவர்கள் மனக்குழப்பத்திற்கு உள்ளாகி சூனியத்தின் பெயரால் ஒவ்வொருவரும் தமக்குத்தாமே பாதிப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்களே தவிர, உண்மையில் எவ்விதப் பாதிப்பையும் சூனியம் ஏற்படுத்துவதில்லை.
ஒரு மனிதன் நன்றாகவே இருப்பான். அவனுக்கு எந்தக் குறையும் இருக்காது. அவனிடம் எவனாவது உனக்கு இன்ன ஆள் சூனியம் செய்து விட்டான் என்று மட்டும் கூறிவிட்டால் போதும், அவன் தன் மனதில் பல கற்பனைகளை வளர்த்து குழப்பமடைந்து தனக்கு ஏதோ நிகழப்போகிறது என்று எண்ணும் காரணத்தால் இவனாகவே பல பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கிறான்.
உண்மையை அறிய வேண்டுமானால் மூட நம்பிக்கையில் மூழ்கியிருக்கும் ஒருவனைச், சோதிப்பதற்காக உனக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று சொல்லிப் பாருங்களேன்! அன்று முதலே அவன் அதிர்ச்சியில் அலைவதைக் காண்பீர்கள்.
சூனியம் மனிதனுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சுத்தப் பொய். இதைத் தெளிவாக தெரிந்தும் கூட மார்க்க அறிஞர்கள் என்று பெருமையடித்துக் கொள்பவர்கள் தகடு, தாயத்து, முட்டையில் எழுதுதல், அஸ்மா வேலைகள் என்று மக்களை ஏமாற்றுகின்றனர். இறைவனுடைய பாதையைவிட்டும் மக்களை வழிதவறச் செய்கின்றனர். இந்த லெப்பைகள் தங்கள் தொப்பைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக மனித இனத்தை வழிகெடுப்பதைப் பார்க்கும் சிலர் இஸ்லாத்திலும் மூட நம்பிக்கைகள் உண்டு என்று எண்ணுகிறார்கள். அவர்கள் நன்கு தெரிந்து கொள்ளட்டும், இஸ்லாத்தில் மூட நம்பிக்கை என்பது கடுகளவும் கிடையாது. இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் காலத்திற்குப் பின்பு åதர்கள் தங்கள் கைச்சரக்குகளை முஸ்லிம் மக்கள் மத்தியில் புகுத்தியதன் காரணமாகத்தான் முஸ்லிம்கள் மத்தியில் மூட நம்பிக்கைகள் வளர்ந்தன.
ஒவ்வொருவரும் தம் விருப்பத்திற்கு ஏற்பச் சட்டங்களை வளைத்துக் கொள்வது இஸ்லாமியச் சட்டமாகவோ கொள்கையாகவோ ஆகிவிடாது. இறைவனால் கொடுக்கப்பட்ட குர்ஆன் கூறுவதும்; அவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் வாழ்ந்து காண்பித்த வாழ்க்கை முறையும் தான் இஸ்லாம் என்பதைத் தெரிந்து கொள்ளட்டும்.
சூனியம் செய்து மூட நம்பிக்கைகளை உண்டாக்கி வழி கெடுப்பது அழிவை உண்டாக்கும் ஏழு பாவங்களில் ஒன்று என்று இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
சூனியம் என்பது ஒரு கலை தானே, அதை ஏன் இஸ்லாம் தடைசெய்கிறது என்று நமக்குச் சந்தேகம் எழலாம். நன்மையான செயல்களை உண்டாக்கும் கலை என்றால் அதை இஸ்லாம் நிச்சயம் தடை செய்திருக்காது. ஆனால் சூனியக்கலை மக்களை இறை நிராகரிப்பிற்கு இழுத்துச் செல்வதாலும் மக்கள் ஏமாற்றப்படுவதா லும் இஸ்லாம் அதைத் தடை செய்கிறது.
கண்களை ஏமாற்றுவதே சூனியம்
மூஸா(அலை) அவர்களை எதிர்ப்பதற்காக பிர்அவ்ன் சூனியக் காரர்களை ஒன்று திரட்டினான். அவர்கள் செய்த சூனியம் எந்த அளவிற்கு இருந்தது என்பதை இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
(அவர்கள் எறிந்த) கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் சூனியத்தால் (பாம்புகளாகி) நெளிந்தோடுவது போல் அவருக்கு மூஸா(அலை) தோன்றியது. (அல்குர்ஆன் 20.66)
அந்த சூனியக்காரர்கள் எறிந்த கயிறுகளும், தடிகளும் பாம்புகளாக மாறவில்லை; பாம்புகள் போன்று தான் காட்சியளித்தன என்று இறைவன் தெளிவாகக் கூறுகின்றான். இந்த வசனத்தில் இறைவன்''யுகய்யலு'', என்ற வார்த்தையைப் பயன்படுத்தி யுள்ளான். இல்லாத ஒன்றை இருப்பது போன்று காண்பித்தல், மாயையை ஏற்படுத்துதல் என்பது இதன் பொருளாகும்.
சூனியம் (ஸிஹ்ர்) என்ற கலையின் மூலம் இல்லாத ஒன்றை இருப்பது போன்று காண்பிக்க முடியும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அப்படியானால் அதைக் கொண்டு ஏதும் தீங்கு செய்ய முடியுமா என்ற ஐயம் வரலாம்.
சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெறமாட்டான். (அல்குர்ஆன் 20.69)
''கணவன் மனைவி இடையே பிரிவினையை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது.'' (அல்குர்ஆன் 2.102)
என்னதான் சூனியம் செய்தாலும் அல்லாஹ்வின் நாட்டமின்றி யாருக்கும் எவ்விதத் தீங்கும் செய்ய முடியாது என்பது இந்த வசனத்தின் மூலம் தெளிவாகிறது. அப்படியே அது தீங்கு செய்தாலும் மனதில் குழப்பத்தை உண்டாக்கி, கணவன் மனைவிக் கிடையே பிரிவினையைத்தான் உண்டு பண்ண முடியுமே தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என்பதையும் இந்த வசனத்தில் இறைவன் தெளிவாக்கி விட்டான்.
ஷைத்தான் மனிதனை வழிகெடுக்க ஏற்படுத்திய சசூழ்ச்சிகளில் ஒன்றுதான் சூனியம் என்ற உண்மையை விளங்கிக் கொண்டால் குழப்பம் ஏற்படாது.
நீ என்னைக் கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால் (ஆதமின் சந்ததியினரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன். பின்பு நிச்சயமாக நான் அவர்கள் முன்பும், அவர்கள் பின்பும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (வழிகெடுப்பதற்கான அனைத்து முறைகளையும் கையாண்டு அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலானோரை (உனக்கு) நன்றி செலுத்துபவர்களாக காணமாட்டாய் என்று (இப்லீஸ்) கூறினான். (அல்குர்ஆன் 7:16,17)
உன் கண்ணியத்தின் மீது ஆணையாக, அவர்களில் அந்தரங்கச் சுத்தியான உன் அடியார்களைத் தவிர நிச்சயமாக அவர்கள் யாவரையும் நான் வழிகெடுப்பேன் என்றும் (இப்லீஸ்) கூறினான்.
(அதற்கு) அதுவே உண்மை; உண்மையையே நானும் கூறுகிறேன். நிச்சயமாக உன்னைக் கொண்டும், உன்னைப் பின்பற்றுவோர்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நான் நிரப்புவேன் என்று இறைவன் கூறினான். (அல்குர்ஆன் 38:82-85)
மனிதனை வழிகெடுத்து நரகத்தில் சேர்ப்பதற்கான வழிகள் என்னவெல்லாம் இருக்கின்றனவோ அவை அனைத்தையும் ஷைத்தான் கையாண்டு வழிகெடுப்பான் என்பதும் அதற்கு இறைவனும் அவனுக்கு அனுமதி கொடுத்து விட்டான் என்பதும் மேற்காணும் வசனங்களின் மூலம் நமக்குத் தெளிவாகிறது.
இன்று ஷைத்தான் பல வழிகளிலும் மனிதனுடைய உள்ளத்தில் ஊடுருவி வழிகெடுத்துக் கொண்டிருக்கின்றான். அவற்றில் ஒன்று தான் சூனியம் என்பது.
ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள் தாம் மனிதர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்தனர். (அல்குர்ஆன் 2:102)
ஷைத்தான் சூனியத்தைக் கற்றுக் கொடுத்து அந்த சூனியக்காரர்களுக்கு அவன் உதவி செய்யும் காரணத்தால்தான் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி கணவர் மனைவியிடையே பிரிவினையை உண்டாக்க முடிகிறது.
மனதில் குழப்பத்தை உண்டாக்குவதில் ஷைத்தான் மிகத் தீவிரமானவன், திறமையானவன்!
எனினும் (ஆதம், ஹவ்வா ஆகிய) அவ்விருவருக்கும் மறைந்திருக்கும் அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்.
ஆதம்(அலை) அவர்களையே ஆட்டிப் பார்த்த அவனுக்கு, பிற மனிதர்களை வழிகெடுப்பது ஒன்றும் கடினமல்ல. பிறருடைய உள்ளத்தில் ஊசலாட்டம் செய்வது, அவனுக்கு இலகுவான செயல்! அந்த அடிப்படையில் சூனியத்தின் மூலம் மனிதர்களுடைய உள்ளங்களில் ஊசலாட்டத்தை உண்டு பண்ணி அவர்களைக் கோவில், தர்கா, போன்ற இடங்களுக்கோ அல்லது சூனியக்காரன் வசிக்கும் இடத்திற்கோ இழுத்துச் சென்று இறைமறுப்பாளர்களாக ஆக்கி தன் இலட்சியத்தில் வெற்றி காண்கிறான்.
இதை அறியாத மக்கள் அவனுடைய அச்சசூழ்ச்சிக்குள்ளாகி தங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்கின்றனர். ஷைத்தானுடைய சூழ்ச்சி எப்படி இருப்பினும் உண்மையான இறை நல்லடியார்களிடம் அது செல்லாது என்பதையும் 38:33 வது வசனத்தில் இறைவன் தெரிவிக்கின்றான்.
''சூனியம், ஷைத்தானின் சூழ்ச்சிகளில் ஒன்று'' நல்லடியார்களிடம் ஷைத்தானுடைய சூழ்ச்சி செல்லாது என்றால் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு ஏன் சூனியத்தால் பாதிப்பு ஏற்பட்டது என்ற ஐயம் இப்போது நமக்கு வந்திருக்கும்.
ஆம்! இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மை தான். அதன் விளைவாக அவர்கள், தாம் செய்த வேலையைச் செய்யவில்லை என்றும், தாம் செய்யாத ஒன்றைச் செய்தது போன்றும் எண்ணிக்கொண்டு சிறிது காலம் மனத்தடுமாற்றத்தில் இருந்தார்கள். தாம் சூனியம் செய்யப்பட்டிருந்ததும் அவர்களுக்குத் தெரியவில்லை. அல்லாஹ் தான் வானவர்கள் மூலம் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தான். அதற்கு தீர்வையும் கூறினான் என்பதை நாம் புகாரியில் இடம் பெற்றுள்ள ஹதீஸின் வாயிலாக அறிகின்றோம்.
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. அதன் காரணமாக அவர்கள், தாம் செய்யாத ஒரு செயலைச் செய்திருப்பதாக அவர்களுக்கு(குறுகிய காலத்தில்) மாயை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி.
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் தாம் செய்யாத செயலைச் செய்தது போன்று மாயை ஏற்படும் அளவிற்கு அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இறுதியில் ஒருநாள் அவர்கள் பிரார்த்தனை செய்த வாறு இருந்தார்கள். அதன் பிறகு : ''என்(மீது செய்யப்பட்டுள்ள சசூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ, அதை எனக்கு அல்லாஹ் அறிவித்து விட்டதை நீ அறிவாயா? என்னிடம் (கனவில்) இரண்டு நபர் (இருவானவர்களான ஜிப்ரயிலும் மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரயில்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயில்) என் கால்மாட்டில் அமர்ந்தார்.
ஒருவர் மற்றொருவரிடம் ''இந்த மனிதரை பீடித்துள்ள நோய் என்ன'' என்று கேட்டார். மற்றொருவர்(ஜிப்ரீல்) ''இவருக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது'' என்று பதிலளித்தார். அதற்கு அவர் ''இவருக்கு சசூனியம் செய்தது யார்?'' என்று கேட்டார் .அவர்(பதிலுக்கு) ''லபீத் இப்னு அஃஸம் (என்னும் åதன்)'' என்று பதிலளித்தார். ''(அவன் சூனியம் வைத்தது) எதில்?'' என்று அவர்(மீக்காயில்) கேட்க அதற்கு, ''சீப்பிலும், (இவரது) முடியிலும், ஆண்(பேரிச்சம்) பாளையின் உறையிலும்'' என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், ''அது எங்கே இருக்கிறது'' என்று கேட்க, ''(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில் '' என்று பதிலளித்தார்கள் என்று, இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறிவிட்டு அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்த போது என்னிடம், ''அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன'' என்று கூறினார்கள். நான், ''அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்தி விட்டான்.(அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே(சூனியக்கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பிவிடும் என்று நான் அஞ்சினேன்'' என்று பதிலளித்தார்கள். பிறகு அந்தக் கிணறு தூர்க்கப்பட்டு விட்டது. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்ததும் அது நிகழ்ந்ததும் உண்மையென்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவாக்குகின்றன. ஆனால் அது ஏன் நிகழ்ந்தது என்பதைச் சிந்திக்கத் தவறி இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கே சூனியம் பாதித்துவிட்டது என்றால் அது நம்மை விட்டு வைக்குமா என்று மட்டும் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் இச்சம்பவத்தின் மூலம் இறைவன் நமக்கு ஏராளமான படிப்பினைகளைத் தந்துள்ளான். நாம் அவற்றைக் கவனிக்க வேண்டும்.
1. சூனியம் என்பது மனத்தடுமாற்றத்தை ஏற்படுத்துவதைத் தவிர வேறொன்றும் செய்துவிடாது.
2. இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களும் மனிதர்தான். அவர்கள் இறைத்தன்மையைப் பெற்றவரோ, வானவர்களின் பண்புகளைப் பெற்றவரோ இல்லை. இறைத்தூதர் என்பதால் மனிதர்களில் உயர்ந்தவர் என்ற சிறப்புதான் அவர்களுக்கு உண்டு.
3. ஒருவன் மற்றொருவனுக்கு, சூனியம் செய்துவிட்டால், அதை சசூனியம் செய்யப்பட்டவன் அறிந்து கொள்ள முடியாது அல்லது மற்றொரு சூனியக்காரனிடம் சென்று கேட்டாலும் அவனும் அதை அறிந்திருக்க முடியாது. அப்படி யாரும் அறிந்து கொள்ள முடியும் என்றிருப்பின் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள்தான் முதலில் அதை அறிந்திருக்க முடியும். அவர்களுக்கே அல்லாஹ்தான் தன் வானவர்கள் மூலமாக அறிவித்தான். ஒருவன் மற்றொருவனுக்கு சூனியம் செய்துவிட்டான் என்பதை சசூனியம் செய்தவனும் அல்லாஹ்வும் மட்டுமே அறிய முடியும். எனவேதான் சூனியம் செய்யப்பட்டிருப்போமோ என்று எவரும் குழப்பமடைய வேண்டிய அவசியமில்லை.
4. அப்படியே தனக்கு சூனியம் செய்யப்பட்டதை ஒருவன் அறிந்து கொண்டாலும், அதற்கான தீர்வு உலகத்தில் எங்கும் கிடையாது. அல்லாஹ்விடத்தில் மட்டுமே இருக்கிறது. எனவே அவனிடமே பாதுகாப்பு தேட வேண்டும். சூரத்துல் ஃபலக், சூரத்துன்னாஸ் ஆகிய அத்தியாயங்களை அருளி இறைவன் தன்னிடம் மட்டுமே ஒவ்வொரு தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுமாறு இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கும் அவர்கள் சமுதாயத்தினருக்கும் கட்டளை யிட்டுள்ளான்.
இறைவன் காட்டித்தந்துள்ள, தீர்வை விட்டு விட்டு நாம் நமது விருப்பத்திற்கு இணங்கி கோவில், தர்கா போன்ற இடங்கள் சென்று தீர்வைத் தேடினாலோ மற்றொரு சூனியக்காரனிடம் சென்று தீர்வைக் கேட்டாலோ நிச்சயம் வெற்றி பெற முடியாது. மறுமையிலும் இறைவனிடம் தண்டனை கிடைக்கும் என்பதில் ஏதும் ஐயமில்லை.
வானவர்கள்தான் மனிதர்கள் மத்தியில் சூனியத்தை பரப்பினார்கள் என்றும் ஒரு கதை கட்டி விடப்பட்டுள்ளது. இது யூதர்களின் நாச வேலையில் ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வானவர்கள் ஒரு போதும் சூனியத்தைப் பரப்பவில்லை என்ற விஷயத்தை 2:102 வசனத்தின் விளக்கவுரைகளை நன்றாகக் கவனிக்கும் போது நம்மால் கண்டு கொள்ள முடியும். இந்த அளவிற்கு பெரும் குழப்பத்தை உண்டாக்கி மக்களைக் கெடுக்கும் சூனியத்தை எவன் செய்கின்றானோ அவன் தனக்குத்தானே அழிவைத் தேடிக் கொள்கிறான். இப்பெரும் பாவத்திலிருந்து இறைவன் மனித இனத்தைக் காப்பானாக!
ஆக்கம்
M.M.அப்துல் காதிர் உமரி
"அந்த ஏழு பாவங்கள்"
Posted by
Unknown
Labels:
சூனிய சமுதாயம்,
தாஜ்ஜாலிசம்
தமிழக தேர்தலும் கழகங்களும் ஜமாத்களும் ஓர் பார்வை!
 தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வர இருப்பதினால் தேர்தல் வேலைகளும் அரசியல் கட்சிகளின் கூட்டணி அமைக்கும் வேலைகளும் மும்முரமாக உள்ளன. கட்சிகள் சீட்டிற்காக அணிமாறும் காட்சிகளும் அரங்கேற ஆரம்பித்து விட்டன. இஸ்லாமிய இயக்கங்களும், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் தங்களுடைய அரசியல் களத்தின் வேலைகளையும் தொடங்க ஆரம்பித்து விட்டனர். த.மு.மு.க வின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி அ.தி.மு.க வுடனும் முஸ்லிம் லீக் தி.மு.க வுடனும் கூட்டு சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம்களின் தாய் கழகமான முஸ்லிம்லீக் வழக்கம்போல் ஒன்றோ அல்லது இரண்டோ சீட்டுகளை மட்டும் பெற்றுக்கொண்டு திமுகவின் தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நிற்கலாம்!. அல்லது தங்களின் சின்னத்தில் போட்டியிடலாம்!. இது இக்கட்சிக்கு ஆரோக்கியமான வளர்ச்சியல்ல!. முழுகட்சியையும் அது திமுக விடம் அடகு வைத்து பல வருடங்கள் ஆகிவிட்டன!.
இதற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் ஒன்பது அல்லது பத்து என்று சீட்டுகளை பேரம்பேசி வாங்குவதும், பா.ம.க போன்ற கட்சிகள் எல்லாம் முப்பது சீட்டுக்களை பேரம்பேசி (டிமான்ட்வைத்து) வாங்கும் அளவிற்கு குறுகிய காலங்களில் அசூர வளர்ச்சியடைந்து விட்டார்கள்!. ஆனால் சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இருந்து வரும் முஸ்லிம்லீக் கட்சி, தன் பிறை சின்னத்தின் மறுபக்கமான “தேய்பிறையாகவே” இருந்து வருகின்றது!. முன்பு தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சியாக இருந்த ஒரு மாபெரும் கட்சி இன்று, பாராளுமன்றத்திற்கு ஒரே ஒரு சீட்டை மட்டும் பெற்றுக்கொண்டு அதிலும் சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தன்மானத்தை இழந்து நிற்கின்றது. சமீபத்தில் கூட நடைபெற்ற முஸ்லிம்லீக் கட்சி நடத்திய மாநாட்டிற்கு கூடிய கூட்டத்தினை கண்டால், நமக்கே பிரமிப்பாக இருக்கின்றது.! இவ்வளவு செல்வாக்கை வைத்துகொண்டு இக்கட்சி ஏன் மேலும் மேலும் வளர்ச்சிபெற முடியாமல் திணறுகின்றது என்று நம்மால் கணிக்க முடியவில்லை!.
மேலும் மனிதநேய மக்கள் கட்சி சுமார் பதினேழு தொகுதிகளில் தங்களுக்கு வெற்றிபெறும் அளவிற்கு செல்வாக்கு உள்ளதாக கண்டறிந்து பொதுக்குழுவில் அந்த தொகுதியையும் அறிவித்தனர். இருந்தும் இவர்கள் மூன்று முதல் ஐந்து சீட்டுகளை மட்டுமே பெற்றுக்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. எத்தனை எத்தனை இஸ்லாமிய இயக்கங்கள் வந்தாலும் இன்னும் ஒன்றிற்கும் இரண்டிற்கும் அல்லது ஏதோவொரு குறிப்பிட்ட கோரிக்கையை நிறைவேற்றினாலே, “சமுதாய ஓட்டு அத்துனையும் உங்களுக்கே” என்று பேரம் பேசி, சமுதாயத்தினை அடகுவைக்கும் அவலநிலை மாறவேண்டும்!. நம்மின் பலத்தினை நாமே கேவலமாக எடைபோடுவதும் சரியல்ல!.
இந்திய தவ்ஹீது ஜமாத்தும் போட்டியிடப் போவதாக தெரியவில்லை!. ஆனால் ஆதரவை, அல்லது பிரச்சாரத்தினை மட்டும் இவர்கள் செய்வார்கள் என்றே தோன்றுகின்றது. நிச்சயமாக த.த.ஜ அணிக்கு மாற்றமான அணியில் இவர்கள் இடம்பெறுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்!. இப்படியே நாம் இக்கரைக்கு அக்கறை என்று முடிவெடுப்பதிலேயே அணைத்து இயக்கங்களும் தங்களை முன்னிலைப் படுத்துகின்றன.
மேலும் மானம் காக்குமா ம.ம.க?. என்று ஒருபுறம் இக்கட்சியை 18 சீட்டுகள் பெறவேண்டும் என்று தூண்டுவதும், பின் சேலத்தில் நடைபெற்ற த.த.ஜ பொதுக்குழுவில் ம.ம.க எங்கு நின்றாலும் தோற்கடிப்போம் என்று சீண்டுவதும், மாறுவேடம் போடுவதும் சமுதாய இயக்கமான த.த.ஜ விற்கு அழகல்ல!. ஒன்று இவர்கள் போட்டியிடவேண்டும்!. இல்லையென்றால் களத்தில் இருக்கும் இஸ்லாமிய இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அதுவும் இல்லையென்றால் அமைதியாக இருந்துவிட்டு செல்லவேண்டும். த.த.ஜ - தமுமுக விற்க்கு இடையே உள்ள ஈகோ மற்றும் பொறாமை காரணமாக சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை கிடைக்கவிடாமல் செய்வதற்க்கு ஆயிரமாயிரம் காரணம் கூறினாலும், இன்று நமக்கு உள்ள அரசியல் அதிகார தேவைக்கு அது உதவாது!. மாறாக அது நம்மை மேலும் வலுவிழக்கவே செய்யும்!.
முஸ்லிம் லீக் நின்றாலும் பிடிக்காது. ம.ம.க நின்றாலும் பிடிக்காது. ஆனால் நாங்களும் நிற்க மாட்டோம் என்று அடம்பிடிப்பது எந்தவகையில் நியாயம் என்று சமுதாய நலனை முன்னிலைப் படுத்தும் த.த.ஜ சிந்திக்கவேண்டும். உங்களுக்கிடையே உள்ள ஈகோவை எல்லாம் தேர்தலில் காண்பித்து நம் சமுதாயத்தின் பிரதி நிதித்துவத்தினை அடைய விடாமல் தடுப்பதை சிந்திக்கவேண்டும். அல்லது தேர்தலில் நாங்கள் நிற்கமாட்டோம் என்ற நிலைபாட்டில் இருந்து மாறி, தேர்தல் களம் கண்டு, முஸ்லிம்களின் பிரதிநிதியாக சட்டமன்றம் சென்று, நம் சமுதாய தேவைகளை நிறைவேற்றவேண்டும். அதுதான் ஒரு சிறந்த இயக்கத்திற்கு முன்னுதாரணமாக இருக்கும். அரசியல் வேண்டாம் என்றால் தேர்தலில் பிரச்சாரமும் செயக்கூடாது!. எந்த ஓட்டுப்பொறுக்கி அரசியல் வாதிகளையும் சந்திக்கக்கூடாது!.
மேலும் ஜமாத், இயக்கம் போன்ற அடைமொழிகளுடன் சிறிய சிறிய பத்துக்கும் மேற்பட்ட இன்னபிற இஸ்லாமிய இயக்கங்களும் அவர்கள் மனதிற்கு என்ன தோன்றியதோ, அதையே ஆதாரமாக வைத்து பணத்தினை மட்டும் பெற்றுக்கொண்டு தேர்தல் வேலைகள் செய்வதும் ஆரோக்கிய மானதல்ல!.
இந்த இயக்கங்கள் அனைத்தும் ஒன்றினைந்தாலே திமுக. அதிமுக காங்கிரஸ் என்று ஏதாவதொரு பெரிய அரசியல் கட்சியுடன் நாமும் முப்பது அல்லது நாற்பது தொகுதிகள் என்று பேரம்பேசி அதை இஸ்லாமிய இயக்கங்களுக்குள் பகிர்ந்துகொள்ளலாம். இது சாத்தியமா என்றால் ஒரே இறைவனை ஏற்றுக்கொண்ட நம்மால் சாத்தியமே!. இதுபோன்ற ஒரு முடிவை நாம் எட்டாதவரை இன்னும் பத்து தேர்தல்கள் வந்தாலும், இரண்டு மூன்று என்று மட்டுமே முஸ்லிம் சட்டமன்ற உறுபினர்களை சட்டமன்றத்தில் காணலாம். மேலும் தேர்தல் முடிந்தபிறகு ஆஹா பார்த்தீர்களா?. 234 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரே ஒரு முஸ்லிம்!. ஒரு அமைச்சர் கூட இல்லை!. இஸ்லாமியர்களின் நிலையை முன்னேற்ற சச்சார் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தவேண்டும் என்று போராட்டம் செய்து என்ன பயன்?.
 தேசிய அளவிலும் நம்மை வழிநடத்த ஒரு வலிமையான இஸ்லாமிய இயக்கமோ அரசியல் கட்சியோ இல்லை!. அதற்கு முதலில் மாநிலம் தழுவிய அணைத்து இஸ்லாமிய இயக்கங்களும் முதலில் மாநில அளவில் ஒன்றினைய வேண்டும்!. பின் ஒன்றிணைந்த இக்கட்சிகள் தேசிய அளவில் பாராளுமன்ற தேர்தலில் ஒரணியில் நின்றால், எம்பி தொகுதியையும் நம் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் பெறமுடியும். ஆனால் செய்வார்களா?. இதுவே நம் அரசியல் உரிமையை பெற சரியான வழிமுறையாக இருக்க முடியும். முஸ்லிம்களின் ஓரணி என்ற கோட்பாடே நம் அரசியல் தீர்வுக்கு வழிவகையாகும். பின் நமக்கு சச்சார் கமிட்டியும் தேவை இல்லை!. சாச்சா கமிட்டியும் தேவை இல்லை!. நம்மை நாமே மாற்றிக்கொள்ளாத வரை நமக்கு எந்த அரசியல் கட்சியும் உரிமையை வழங்க முன்வராது!.
கடந்த தேர்தலில் கூட அணைத்து இஸ்லாமிய இயக்கங்களும் சென்னையில் ஒன்று கூடி ஒரே கூட்டணியில் நிற்பது என்று முடிவெடுத்து கடைசியில் ஆளுக்கொரு திசையில் வழக்கம்போலவே சென்றுவிட்டனர். ஆக அரசியியலில் நமக்கு எதிரிகள் வேறு யாரும் அல்ல! நமக்கு நாமே எதிரிகள்!!.
முஸ்லிம் சமுதாயத்தின் ஜமாத்/லீக்/கழகம்/பேரவை மற்றும் இத்யாதிகள்: 1. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2. இந்திய தேசியலீக் 3.தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் 4. தமிழ் மாநில தேசிய லீக் (அல்தாப்) 5. தமிழ் மாநில முஸ்லிம் லீக்(ஷேக் தாவூத்) 6. தமிழ்நாடு முஸ்லிம் லீக் (தாவுத் மியக்கான் 7. தமிழ்நாடு மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் (சலிமுத்தீன்) 8. மமக(மனிதநேய மக்கள் கட்சி) என்ற “முஸ்லிம் பாமகா 9. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 10. இஸ்லாமிய இலக்கியக் கழகம் 11. இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம் 12. முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம் 13. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் 14. மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் (பாலை ரபீக்) 15. ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம் (சென்னை ஹமீத்) 16. ஜனநாயக மக்கள் கட்சி 17. இந்திய தேசிய மக்கள் கட்சி 18. இந்திய தேசிய மக்கள் கட்சி (குத்புதீன் ஐபக்) 19. தேசியலீக் கட்சித 20. இந்திய தவ்ஹீது ஜமாத் 21. இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்ட் 22. மறுமலர்ச்சி தவ்ஹீத் ஜமாஅத் (இணையதளம்) 23. ஜமாத் இ இஸ்லாமி 24. ஜமாத்துல் உலமா 25. ஷரியத் பாதுகாப்பு பேரவை 26. இஸ்லாமிய இலக்கிய பேரவை 27. பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா 28. எஸ்.டி.பி.ஐ -சோசியல் டெமோகிராடிக் பார்ட்டி ஆப் இந்தியா 29. பாரதிய முஸ்லிம் பார்ட்டி (சித்தீக்) 30. மில்லி கவுன்ஸில் 31. மஜ்லிஸே முஷாவரத் 32. ஜம்மியத்துல் உலமா இ ஹிந்த் 33. தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன் 34. முஸ்லிம் தனியார் சட்டவாரியம் 35. ஜம்மியத்துல் உலாமா (அர்ஷத் மதனி) 36. தமிழக முஸ்லிம் தொண்டு இயக்கம் 37. சிறுபான்மை புரட்சி இயக்கம் (லியாகத்அலிக்கான்) 38. சென்னை சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் கூட்டமைப்பு 39. தமிழ்நாடு சுன்னத்வல் ஜமாஅத் ஐக்கிய பேரவை (ஷேஹூ அப்துல்லாஹ் ஜமாலி)
 ஏம்பா, இனி நாமதான் மிச்சம்!. நாமளும் பிச்சை எடுப்பதை விட்டுவிட்டு “பக்கீர்ஷா லீக்/ பேரவை/ ஜமாத்/ கழகம்” என்று ஆரம்பிச்சா என்ன?. இயக்கத்திற்கு மட்டும் குறையில்லை!. மற்றும் இங்கு குறிப்பிட மறந்து விட்டது பத்திற்கு மேல் இருக்கும்!. இந்தியா முழுமைக்கும் உள்ள நம் எதிரி இயக்கங்களின் எண்ணிக்கை இதில் பாதி கூட இல்லை!. ஆனால் தமிழ்நாட்டளவில் மட்டும் நாம் கண்ட அமைப்புகளின் என்னிக்கையை கண்டீர்களா?.
இந்திய மக்கள் தொகையைப்போல் எண்ணிக்கையில் அதிகமாகவே உள்ளது நம் இயக்கங்கள்!. ஆனால் ஊட்டச்சத்து இல்லாமல்தான் சவளைப் பிள்ளையாக நாம் இருக்கின்றோம். முதலில் இந்த சமுதாய இயக்கத்திற்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்கும் நிலைதான் தற்போது உள்ளது.சிந்திப்பார்களா!
Posted by
Unknown
Labels:
இஸ்லாம்
 Kashgar or Kashi (Uyghur: قەشقەر, ULY: Qeshqer, UPNY: K̡ǝxk̡ǝr?, Chinese: 喀什 pinyin: Kāshí, Persian, Urdu, Hindustani: کاشغر / कशगार) is an oasis city with approximately 350,000 residents in the western part of the Xinjiang Uyghur Autonomous Region of the People's Republic of China. Kashgar is the administrative centre of Kashgar Prefecture which has an area of 162,000 km² and a population of approximately 3.5 million.[2] The city covers an area of 15 km². The altitude averages 1,289.5 m/4,282 ft. above sea level. The city is located in the western extreme of China.
The Arab Caliphate In the 8th century came the Arab rule from the west, and we find Kashgar and Turkestan lending assistance to the reigning queen of Bokhara, to enable her to repel the enemy. But although the Muslim religion from the very commencement sustained checks, it nevertheless made its weight felt upon the independent states of Turkestan to the north and east, and thus acquired a steadily growing influence. It was not, however, till the 10th century that Islam was established at Kashgar, under the Uyghur kingdom.
The Uyghurs islam

An Uyghur naan baker. Modern Uyghurs are the descendants of ancient Turkic tribes including Uyghurs and ancient Caucasian inhabitants of Tarim basin. Sultan Satuq Bughra Khan, the most celebrated prince of this line, converted to Islam late in the 10th century and the Uyghur kingdom lasted until 1120 but was distracted by complicated dynastic struggles. The Uyghurs employed an alphabet based upon the Syriac and borrowed from the Nestorian missionaries, but after converting to Islam widely used also an Arabic script. They spoke a dialect of Turkish preserved in the Kudatku Bilik, a moral treatise composed in 1065
 The Mongols The Uyghur kingdom was destroyed by an invasion of the Kara-Khitai, another Turkish tribe pressing westwards from the Chinese frontier, who in their turn were swept away in 1219 by Genghis Khan. His invasion gave a decided check to the progress of the Muslim creed, but on his death, and during the rule of the Chagatai Khans, who became converts to that faith, it began to reassert its ascendancy. Marco Polo visited the city, which he calls Cascar, about 1273-4 and recorded the presence of numerous Nestorian Christians, who had their own churches. In 1389–1390 Timur ravaged Kashgar, Andijan and the intervening country. Kashgar endured a troubled time, and in 1514, on the invasion of the Khan Sultan Said, was destroyed by Mirza Ababakar, who with the aid of ten thousand men built a new fort with massive defences higher up on the banks of the Tuman river. The dynasty of the Jagatai Khans collapsed in 1572 with the division of the country among rival factions; soon after, two powerful Khoja factions, the White and Black Mountaineers (Ak Taghliq or Afaqi, and Kara Taghliq or Ishaqi), arose whose differences and war-making gestures, with the intermittent episode of the Oirats of Dzungaria, make up much of recorded history in Kashgar until 1759. Qing Reconquest In 1759, a Qing army from Ili (Kulja) invaded Turkistan and consolidated their authority by settling other ethnics emigrants in the vicinity of a Manchu garrison. The Qing had thoughts of pushing their conquests towards Transoxiana and Samarkand, the chiefs of which sent to ask assistance of the Afghan king Ahmed Shah Abdali. This monarch dispatched an ambassador to Beijing to demand the restitution of the Muslim states of Central Asia, but the representative was not well received, and Ahmed Shah was too busy fighting off the Sikhs to attempt to enforce his demands by arms. The Qing continued to hold Kashgar with occasional interruptions from Muslim-centered groups. One of the most serious of these occurred in 1827, when the city was taken by Jahanghir Khoja; Chang-lung, however, the Qing general of Ili, regained possession of Kashgar and the other rebellious cities in 1828. When Jahangir Khoja, with the support of Tajiks, Kirghiz, and White Mountain fighters seized Kashgar in 1826 he captured several hundred Chinese merchants, who were taken to Kokand. Tajiks bought two Chinese slaves from Shaanxi, they enslaved for a year before being returned by the Tajik Beg Ku-bu-te to China.[35] All Chinese captured, both merchants and the 300 soldiers Janhangir captured in Kashgar had their queues cut off when brought to Kokand and Central Asia as prisoners.[36][37] It was reported that many of the Chinese captives became slaves, accounts of Chinese slaves in Central Asia increased.[38][39] The queues were removed from Chinese prisoners and then sold or given to various owners, one of them, Nian, ended up as a slave to Prince Batur Khan of Bukhara, Omar Khan ended up possessing Liu Qifeng and Wu Erqi, the others, Zhu, Tian Li, and Ma Tianxi ended up in various owners but plotted an escape.[40] The Russians record an incident where they rescued these Chinese merchants who escaped, after they were sold by Jahangir's Army in Central Asia, and sent them back to China.[41] The Kokand Khanate raided Kashgar several times. A revolt in 1829 under Mahommed Ali Khan and Yusuf, brother of Jahanghir resulted in the concession of several important trade privileges to the Muslims of the district of Alty Shahr (the “six cities”), as it was then called. The area then enjoyed relative calm until 1846 under the rule of Zahir-ud-din, the local Uyghur governor, but in that year a new Khoja revolt under Kath Tora led to his accession to rulership of the city as an authoritarian ruler. His reign, however, was brief, for at the end of seventy-five days, on the approach of the Chinese, he fled back to Khokand amid the jeers of the inhabitants. The last of the Khoja revolts (1857) was of about equal duration, and took place under Wali-Khan, who murdered the famous traveler Adolf Schlagintweit.
The 1862 revolt by Chinese Hui(islam)

Night interview with Yakub Beg, King of Kashgaria, 1868 The great Tungani (Dungani) revolt, or insurrection of the Hui people, which broke out in 1862 in Gansu, spread rapidly to Dzungaria and through the line of towns in the Tarim Basin. The Tungani troops in Yarkand rose, and in August 1864 massacred some seven thousand Chinese, while the inhabitants of Kashgar, rising in their turn against their masters, invoked the aid of Sadik Beg, a Kyrgyz chief, who was reinforced by Buzurg Khan, the heir of Jahanghir, and his general Yakub Beg (surnamed the Atalik Ghazi), these being dispatched at Sadik’s request by the ruler of Khokand to raise what troops they could to aid his Muslim friends in Kashgar. Sadik Beg soon repented of having asked for a Khoja, and eventually marched against Kashgar, which by this time had succumbed to Buzurg Khan and Yakub Beg, but was defeated and driven back to Khokand. Buzurg Khan delivered himself up to indolence and debauchery, but Yakub Beg, with singular energy and perseverance, made himself master of Yangi Shahr, Yangi-Hissar, Yarkand and other towns, and eventually became sole master of the country, Buzurg Khan proving himself totally unfit for the post of ruler. With the overthrow of Chinese rule in 1865 by Yakub Beg (1820–1877), the manufacturing industries of Kashgar are supposed to have declined. Kashgar and the other cities of the Tarim Basin remained under Yakub Beg’s rule until May 1877, when he died at Korla and Kashgaria was reconquered by the forces of the Qing general Zuo Zongtang.
First East Turkestan Republic

Kashgar was the scene of continual battles from 1933-1934. Ma Shaowu, a Chinese muslim, was the Tao-yin of Kashgar, and he fought against Uyghur rebels. He was joined by another Chinese muslim general, Ma Zhancang.
Battle of Kashgar (1933)
Uighur and Kirghiz forces, led by the Bughra brothers and Tawfiq Bay, attempted to take the New City of Kashgar from Chinese Muslim troops under General Ma Zhancang. They were defeated. Tawfiq Bey, a Syrian arab traveler, who held the title Sayyid ( descendent of prophet Muhammed) and arrived at Kashgar on August 26, 1933, was shot in the stomach by the Chinese muslim troops in September. Previously Ma Zhancang arranged to have the Uighur leader Timur Beg killed and beheaded on August 9, 1933, displaying his head outside of Id Kah Mosque. Han chinese troops commanded by Brigadier Yang were absorbed into Ma Zhancang's army. A number of Han chinese officers were spotted wearing the green uniforms of Ma Zhancang's unit of the 36th division, presumably they had converted to Islam.[42] ]Battle of Kashgar (1934) 36th division General Ma Fuyuan led a Chinese Muslim army to storm Kashgar on February 6, 1934, and attacked the Uighur and Kirghiz rebels of the First East Turkestan Republic. He freed another 36th division general, Ma Zhancang, who was trapped with his Chinese Muslim and Han chinese troops in Kashgar New City by the Uighurs and Kirghizs since May 22, 1933. In January, 1934, Ma Zhancang's Chinese Muslim troops repulsed six Uighur attacks, launched by Khoja Niyaz, who arrived at the city on January 13, 1934, inflicting massive casualties on the Uighur forces.[43] From 2,000 to 8,000 uighur civilians in Kashgar Old City were massacred by Tungans in February, 1934, in revenge for the Kizil massacre, after retreating of Uighur forces from the city to Yengi Hisar. The chinese Muslim and 36th division Chief General Ma Zhongying, who arrived at Kashgar on April 7, 1934, gave a speech at Idgah mosque in April, reminding the Uighurs to be loyal to the Republic of China government at Nanjing. Several British citizens at the British consulate were killed by the 36th division.[44][45][46][47] Development of Kashgar's Old Town As of 2009, an effort was under way to redevelop the majority of the Old City of Kashgar and construct new buildings in its place. The old town of Kashgar, deemed overcrowded and unsafe for its residents (nearly half of the city's population lives within the old town),[48] will have at least 85% of its structures demolished. Demolitions have already begun, with many of its former denizens moved to newer, safer and modern buildings. The city administration plans to build high-rise apartments, plazas, and reproductions of Islamic architecture.[49] The Chinese government claims that redevelopment is necessary in the interests of earthquake safety; the city’s older buildings, many of which are built from mud and straw, are considered to be vulnerable to collapse in a seismic event.[50] However, Kashgar is considered a "breeding ground" for Uighur separatists who Beijing claims have ties to Islamic terrorism.[50] Non-governmental organizations (NGOs) have criticized the plans, claiming that they will destroy cultural history and eliminate Kashgar’s main tourist attraction.[50][51]
Posted by
Unknown
Labels:
China
Wednesday, September 22
|
ஜமாஅத்தார்களே! சகோதரர்களே!! எச்சரிக்கை!!!
கோவை: நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வந்தாலும் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம கோபாலன் கூறியுள்ளான்.
நிருபர்களிடம் பேசிய அவன் , விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை [^] எங்கும் இஸ்லாமியர்கள் மத மோதல்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.
தென் கொரியாவில் சாலையெங்கும் புத்த சிலைகள் நிறைந்திருந்தது. அப்போது அமெரிக்க பிரதிநிதிகள் தென் கொரிய பிரதிநிதிகளிடம் சாலையெங்கும் இருக்கக்கூடிய புத்தர் சிலையை எடுத்து விடுங்கள் என்று சொல்லியதன் பேரில், தென் கொரிய பிரதிநிதிகள் சிறிய சிலைகளை எடுத்தார்கள்.
சிலைகளை எடுப்பதற்கு முன்னர் பௌத்தர்கள் 60 சதவீதம் இருந்தார்கள். கிருஸ்தவர்கள் 40 சதவீதம் இருந்தார்கள். சிலைகளை எடுத்தப் பின்னர் கிருஸ்தவர்கள் 60 சதவீதமாக மாறிப்போனார்கள். பௌத்தவர்கள் 40 சதவீதமே இருக்கின்றனர்.
அதே போலத்தான், இங்கேயும் சாலைகளில் உள்ள கோவில்களை அகற்றிவிட்டு, சர்ச்சுகளும் மசூதிகளும் நிறைந்துவிட்டன. அயோத்தியில் உள்ள இடம் யாருக்கு சொந்தம் என அலகாபாத் நீதிமன்றம் [^] தீர்ப்பு அறிவிக்க உள்ள இந்த நேரத்தில், நாம் சொல்லிக்கொள்வது என்னவென்றால், என்ன தீர்ப்பு வந்தாலும் கவலையில்லை. ராமர் கோவிலை அங்கே கட்டியே தீருவோம்.
விஸ்வ இந்து பரிஷத் தலைவர் [^] அசோக் சிங்கால் தீர்ப்பை மதிப்போம் என்கிறார். ஆனால், இஸ்லாமியர்கள் யாரும் தீர்ப்பை மதிப்போம் என்று சொல்லவில்லை. இதற்கிடையே தீர்ப்பு வரும் இந்த நேரத்தில் இஸ்லாமியர்களின் மனைவிகளும், குழந்தைகளும் பத்திரமான இடத்திற்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி என்றால், ஏதோ ஒரு பெரிய கலவரத்தை அரங்கேற்ற இவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.
கோயம்பத்தூரில் கல்லூரி மாணவிகளை இஸ்லாம் இளைஞர்கள், பேச்சுக் கொடுத்து மயக்கி 'லவ் ஜிகாத்' என்ற முறையில் அவர்களை இஸ்லாமுக்கு மாற்றுகிறார்கள். மாற்றியதோடு மட்டுமல்லாமல், அவர்களை இந்துகளுக்கு எதிராக பயங்கரவாதிகளாக மாற்றுகிறார்கள்.
முதல்வர் கருணாநிதி [^] திருந்திவிட்டார், அவருக்கு தெய்வ பக்தி வந்துவிட்டது என்று பலர் சொல்லுகிறார்கள். ஆனால் அது சுத்தப் பொய். அவர் எப்போதும் திருந்தவே மாட்டார். அவர் எப்போதும் இந்துகளுக்கு எதிராகத்தான் இருப்பார்.
கல்லூரிகளில் பள்ளிகளில் இஸ்லாமியர்களுக்கும், கிருஸ்துவர்களுக்கும் அளிக்கப்படும் சலுகைகளை இந்து மாணவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றான் ராம கோபாலன். =================== பாப்ரி மஸ்ஜித்:காங்கிரசுக்கு கடைசி வாய்ப்பு
1992 ஆம் ஆண்டு அயோத்தியில் வரலாற்றுச் சிறப்புமிக்க இறையில்லமான பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட இடத்தில் அமைந்திருந்தது மஸ்ஜிதா அல்லது கோயிலா என்பதுக் குறித்த தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றம் வருகிற செப்.24 ஆம் தேதி வழங்கவிருக்கிறது. இந்நிலையில் சுதந்திர இந்தியா கண்ட மிகப்பெரிய மத பயங்கரவாதத்திற்கு காரணமான மஸ்ஜித்-மந்திர் சர்ச்சை மீண்டும் நாடு முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பாப்ரி மஸ்ஜிதின் கம்பீரமான மினாராக்களை தகர்த்தெறிந்து தேசமுழுவதும் மதவெறியைத் தூண்டி கலவரத்தை நடத்திய சங்க்பரிவார் நீதிமன்றத் தீர்ப்பு வரும் முன்னரே தங்களது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்திவிட்டது.
வரலாற்று தொல்பொருள் ஆராய்ச்சி ஆவணங்கள் மஸ்ஜித் அவ்விடத்தில் இருந்ததை நிரூபித்தாலும் கூட எப்பாடுபட்டாவது ராமர்கோயில் கட்டியே தீருவோம் என சங்க்பரிவாரின் தலைவர்கள் கூறிவருகின்றனர்.
நம்பிகையுடன் தொடர்புடைய விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்படமாட்டோம் என அவர்கள் உறுதிபடக் கூறுகின்றனர். நீதிமன்றத் தீர்ப்பு எதுவாயினும் பரவாயில்லை ராமர் கோயிலை கட்டியே தீருவோம் என்ற பிடிவாதம் பிடிக்கும் சங்க்பரிவாரின் நிலைப்பாடு நஷ்டமடைந்த அரசியல் எதிர்காலத்தை மீட்பதற்கான ஆயுதமாக அயோத்திப் பிரச்சனையை பயன்படுத்தும் தீவிர முயற்சியாகும். இதனால் இப்பிரச்சனை மீண்டும் தேசத்தின் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் மத வன்முறையாக வெடித்துவிடுமோ என்ற அச்சத்தில் மத்திய அரசு உள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பு செப்.24 அன்று திட்டமிட்டப்படி கூறப்படும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், இந்த தீர்ப்பைத் தொடர்ந்து நாடுமுழுவதும் ஹிந்து-முஸ்லிம் நல்லிணக்க சூழல் பாதிக்காமலிருக்கவும், சட்டம்-ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்கு உயரிய முன்னுரிமை வழங்கவேண்டும் எனக்கோரி மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பிவிட்டது.
அமைதியை நிலைநாட்டுவதற்காக மத்திய அரசு 458 கம்பெனி துணை ராணுவப் படையை அனுப்பவேண்டும் என உ.பி.அரசும் கோரியிருந்தது.
மத்திய அரசு ஊடகங்கள் மூலமாக மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை விளம்பரப்படுத்தி வருகிறது.
நீதிமன்றத் தீர்ப்பு வரும் முன்னரே தங்களது எதிர்ப்பையும், அச்சுறுத்தலையும் முழக்கியுள்ளனர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.இவ்விவகாரத்தில் ஏற்கனவே சங்க்பரிவார்கள் இந்தியாவின் அரசியல் சட்டத்தையும், நீதி பீடத்தையும் புறக்கணித்தவர்களாவர்.
வார்த்தைகளில் மட்டுமல்ல செயல்கள் மூலமும் இந்தியாவின் தேசிய, ஜனநாயக நலன்களையெல்லாம் கருத்தில் கொள்ள தாங்கள் தயார் அல்ல என்பதை 1992 ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜிதை தகர்த்ததன் மூலம் நிரூபித்துள்ளனர் சங்க்பரிவார்கள்.
நீதிமன்றம் தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தால் ஏற்றுக்கொள்வதும், எதிராக மாறினால் தூக்கி வீசுவதும் சங்க்பரிவாரின் பாணியாகும்.
1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22-23 தேதிகளில் மஸ்ஜிதிற்குள் அத்துமீறி சிலைகளை வைத்ததற்கு ஆதரவாகவும், 1950 மற்றும் 1955 ஆம் ஆண்டுகளில் மஸ்ஜிதிற்குள் வைக்கப்பட்டிருந்த சிலைகளை மாற்றுவதை தடைச்செய்தும், மஸ்ஜிதிற்குள் பூஜையை அனுமதித்தும் உ.பி மாவட்ட நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தீர்ப்புகளை கூறியபொழுது நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டது சங்க்பரிவார்.
பாப்ரிமஸ்ஜித் தகர்க்கப்பட்ட இடத்தில் தற்காலிக கோயிலை அவர்கள் கட்டிய பொழுதும் அவ்விடத்தின் உரிமைத் தொடர்பான விவகாரத்தில் தங்களின் பலகீனத்தை அவர்கள் நன்றாக அறிவார்கள். ஆதலால், மஸ்ஜித் அமைந்திருந்த இடத்தின் உரிமைக் குறித்த வழக்குத் தீர்ப்பில் அவர்களுக்கு சந்தேகம் எழுவது இயல்பானதாகும்.
தீர்ப்பு வரும் முன்னரே, அதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறுவதன் மூலம் தங்களின் நம்பிக்கைக் குறித்த சந்தேகம் அவர்களுக்கு எழுந்துள்ளதே காரணமாகும்.
விவாதத்தைக் கிளப்பி மீண்டும் ஹிந்துப் பயங்கரவாதத்திற்கு உரமூட்டி மக்களிடையே மதவெறியைத் தூண்டிவிடுவதன் மூலம் மத்திய-மாநில அரசுகளையும்,நீதித் துறையையும் நிர்பந்தத்தில் சிக்கவைப்பதும் சங்க்பரிவார்களின் தந்திரங்களில் ஒன்றாகும்.
உண்மையான ஆதாரங்களும், நியாயங்களையும் தாண்டி 'பொதுமனசாட்சி' என்ற பெரும்பான்மையினரின் மனோநிலையை நீதிமன்றத் தீர்ப்பிற்கு ஆதாரமாகக் கொள்ளும் புதிய நடைமுறை உள்ளது.
பாப்ரிமஸ்ஜித் தொடர்பான சில வழக்குகளிலேயே நாம் இதனை காணலாம். ஆகவே, கலவரங்களைத் தூண்டி பெரும்பான்மை சமூகத்தின் எதிர்ப்பு என்ற மாயையை தோற்றுவித்தால் உண்மையான தீர்ப்பையே மாற்றியமைத்துவிடலாம் என்ற மோகம் சங்க்பரிவார்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.
தீர்ப்பு எவ்வாறாயினும், அதனை தங்களது அரசியல் எதிர்காலத்திற்கு பயன்படுத்தும் தீவிர முயற்சியில் சங்க்பரிவார் இறங்கியுள்ளது வெட்ட வெளிச்சமாகும்.
இந்த சூழலில், காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசு எவ்வாறு இப்பிரச்சனையை கையாளப் போகிறது? என்பதுதான் கேள்வி.
ஜவஹர்லால் நேரு முதல் நரசிம்மராவ் வரை மாறி மாறி இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசுகளின் நிலைப்பாடுகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆக்கமும்,ஊக்கமும் ஊட்டக்கூடியதாகவே அமைந்திருந்தன.
இறுதியாக, உ.பி மாநில அரசியலிருந்து துரத்தப்பட்டு தேசிய அரசியலில் பலகீனப்பட்டு நிற்கும் சூழலுக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது. எல்லாவற்றையும் திருத்தியும், மன்னிப்புக் கோரியும் இழந்ததை மீட்டெடுக்க வெற்றிகரமான காய்நகர்த்தல்களை காங்கிரஸ் நடத்திக்கொண்டிருக்கும் சூழலில்தான் மீண்டும் ஒரு சோதனையாக பாப்ரி மஸ்ஜித் வழக்குத் தீர்ப்பு வரவிருக்கிறது.
நீதிமன்றத் தீர்ப்பைக் குறித்த சங்க்பரிவார்களின் கடுமையான பதிலும், நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து தீர்வுகாணலாம் என்று இரு சமூகங்களிலுள்ள சில தலைவர்களின் வேண்டுகோளையும் முன்வைத்து சில முயற்சிகளை காங்கிரஸ் எடுத்துள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பு என்னவாயினும், இரு சமூகங்களிடையே உள்ள நல்லிணக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கருத்தில் கொண்டு நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.
ஒரு தலைபட்சமாக நிர்பந்தம் செலுத்துவது தீர்வு காண்பதற்கு இயலாது எனவும் முஸ்லிம்களின் நம்பிக்கையை பெற்றால்தான் இப்பிரச்சனையை தீர்க்க இயலும் எனவும் பாப்ரி மஸ்ஜித் விவாதம் கிளம்பிய துவக்க நாள்களில் ஒன்றான 1950 ஜனவரி ஒன்பதாம் தேதி உ.பி முதல்வர் கோவிந்த் பல்லபந்திற்கு எழுதிய கடிதத்தில் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், காங்கிரஸ் தொடர்ந்து ஹிந்துத்துவா வாதிகளுக்கு முன்னர் வேண்டுமென்றே தோல்வியை ஒப்புக்கொண்டே வந்துள்ளது.
தங்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சிகளை புரிந்துக்கொண்டு பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் ஜனநாயக மதசார்பற்ற கொள்கைகளோடான மதிப்பை நிரூபிப்பதற்கான காங்கிரஸ் கட்சியின் கடைசி வாய்ப்புதான் அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு என்றுக் கூறலாம்.
தேசத்தின் ஜனநாயக மதசார்பற்ற கட்டமைப்பின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய அளவுகோலாகவும் இது மாறலாம். அத்தகையதொரு மிக்க கவனத்தோடு இப்பிரச்சனையை கையாளும் விதமாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செயல்படும் என எதிர்பார்ப்போம். விமர்சகன் http://paalaivanathoothu.blogspot.com/2010/09/blog-post_18.html
===============================
பாப்ரி மஸ்ஜித் வழக்கு:அமைதிகாக்க மத்திய அரசு வேண்டுகோள்
புது டெல்லி :அயோத்தி பாப்ரி மஸ்ஜித் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வருகிற 24-ஆம் தேதி வெளியாகவிருக்கும் சூழலில் அமைதி காக்கவேண்டும் என மத்திய அரசு நாட்டுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இதுத்தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இதனை மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகாசோனி அறிவித்துள்ளார்.
நீதிமன்றத் தீர்ப்பை அனைவரும் மதிக்கவேண்டும். அதேவேளையில், இந்த தீர்ப்பு நீதிமன்ற நடவடிக்கைகளில் ஒரு சுவடு மட்டும் தான் என்பதையும் புரிந்துக்கொள்ள வேண்டும். இனிமேலும் ஏதேனும் நீதிமன்ற தீர்ப்பு தேவையென்றால் சட்டரீதியான தீர்வு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ் http://paalaivanathoothu.blogspot.com/2010/09/blog-post_6465.html
===================================== பாப்ரி மஸ்ஜித்:இணக்கமான தீர்விற்கு வழி இல்லை என கல்யாண்சிங்
லக்னோ :அயோத்தியாவில் பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் இணக்கமான தீர்விற்கு வழி இல்லை எனவும், ஹிந்துக்களோ, முஸ்லிம்களோ அதனை அங்கீகரிக்கமாட்டார்கள் எனவும் உ.பி.மாநில முன்னாள் பா.ஜ.க முதல்வர் கல்யாண்சிங் தெரிவித்துள்ளார்.
அயோத்திக்கு புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசினார் அவர். மேலும் அவர் கூறியதாவது:"அயோத்தியில் கோயில் கட்டுவதற்கு ஹிந்துக்கள் உறுதிப்பூண்டுள்ளனர். இதற்கிடையே எதனைச் செய்தாலும், அது காலத்தை வீணடிப்பதாகும். அயோத்தியில் நான் சன்னியாசிகளை சந்திப்பேன்." என கல்யாண்சிங் தெரிவித்தார்.
இதற்கிடையே, இவ்வழக்கில் தீர்ப்பை ஒத்திவைப்பதற்கு எதிராக வழக்கின் கட்சிதாரரான ஹிந்துமாகாசபை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சில் மனு தாக்கல் செய்துள்ளது. தீர்ப்பை காலதாமதமாக்க வேண்டும் எனக்கோரும் இரண்டு மனுக்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. இந்த மாதம் 24 ஆம் தேதி பாப்ரி மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு வெளியாகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ் http://paalaivanathoothu.blogspot.com/2010/09/blog-post_784.html =========================================================== பாப்ரி:தீர்ப்பு 24-ஆம் தேதி திட்டமிட்டப்படி வழங்கப்படும்
லக்னோ : வருடக்கால பழமையான பாப்ரி மஸ்ஜித் நில உரிமைத் தொடர்பான வழக்கில் தீர்ப்புக் கூறுவதை ஒத்திவைக்க வேண்டும் என்றக் கோரிக்கையை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது.
ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்திற்கு வெளியே இணக்கமான தீர்விற்கு வழிகாண தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் எனக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவின் மீதான விசாரணையில்தான் 3 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை நேற்றுக் கூறியது. பாப்ரி மஸ்ஜித் நில உரிமை தொடர்பான தீர்ப்பு திட்டமிட்டபடி வருகிற 24-ஆம் தேதி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. வழக்கை ஒத்திவைக்கக் கோரும் மனுவில் முக்கியத்துவம் இல்லை எனக் கருதிய நீதிமன்றம் மனுவை சமர்ப்பித்தவருக்கு பெருந்தொகையை அபாரதமாக விதிக்க தீர்மானித்தது. அபராதத்தொகை எவ்வளவு என்று முடிவாகவில்லை.
நீதிபதி சுதீர் அகர்வால் ஐந்துலட்சம் ரூபாய் அபராதமாக நிர்ணயித்தார். எஸ்.யு.கான், டி.வி.சர்மா ஆகியோர் சிறப்பு பெஞ்சின் இதர நீதிபதிகளாவர். 'இணக்கமான தீர்விற்கு தயாரா?' என நீதிமன்றம் கட்சிதாரர்களிடம் ஆராய்ந்தது. ஆனால், எவரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. தங்களுக்கு அவ்வாறான நம்பிக்கை இல்லையென அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, வழக்கில் முக்கிய கட்சிதாரரான நிர்மோஹி அகாரா, சமரச தீர்விற்கு இந்த மாதம் 27-ஆம் தேதி வரை கால அவகாசம் நிர்ணயிக்கவேண்டும் என்று கோரும் மனுவை சமர்ப்பித்துள்ளார்.
இதற்கிடையே சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கெதிராக உச்சநீதிமன்றத்தை அணுக தனது கட்சிதாரரை உபதேசிப்பேன் என திரிபாதியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
தீர்ப்பு அளிப்பது நீதிமன்றத்தின் கடமையென்றும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது அரசின் கடமை என்றும் பிரபல வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே தெரிவித்துள்ளார்.
வழக்கை ஒத்திவைக்கும் மனுவை தள்ளுபடிச் செய்தது மூலம் உயர்நீதிமன்றம் சரியான காரியத்தை செய்துள்ளது என முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூஷன் தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ் http://paalaivanathoothu.blogspot.com/2010/09/24_18.html
====================================================
பாபரியே பள்ளிவாசல்
பாபரி பள்ளிவாசல் இடிப்பதற்கு முன்பும், இடிப்பிற்குப் பின்பும் என 50 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இந்தப் பிரச்னையில் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள வழிபாட்டு உரிமைகளின் அடிப்படையில், நீதிமன்றங்களையே நம்பியிருந்த முஸ்லிம்களை காவிப் படையினரும், அவர்களுக்கு ஆதரவான அரசியல் மற்றும் அதிகார வர்க்கங்களும் தங்களது மனசாட்சியைப் புதைத்து விட்ட காரணத்தினாலும், தங்களது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்த காரணத்தினாலும் நாம் அந்தப் பள்ளியை இழந்தோம்.
இப்பொழுது ஓரிறைவனைத் துதிக்கக் கூடிய இடமாக விளங்கிய அந்தப் பள்ளியை, பல தெய்வ வணக்க வழிபாட்டுக்கு இட்டுக் கொண்டு செல்லும் பாஸிஸ இந்துத்துவாக்கள், இன்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதித்ததாகத் தெரியவில்லை. அவர்கள் மதிக்கவும் மாட்டார்கள். நீதிமன்றங்களும் அவர்களுக்கே சாதகமாகத் தீர்ப்புக்களை வழங்கி வருகின்றன.
மேலும், மார்ச் 12 லும் அதற்கு இடைப்பட்ட இந்த காலத்தில், வெறுமனே கோயில் கட்டுவதோடு மட்டும் அவர்கள் நின்று விட மாட்டார்கள். அதற்கு முன்பாக முஸ்லிம்களை அச்சுறுத்தக் கூடிய செயல்களிலும் அவர்கள் இறங்கக் கூடும்.
இந்த நிலையில் முஸ்லிம்களின் வாழ்வாதார உரிமைகளையும், வழிபாட்டு உரிமைகளையும், அவர்களுக்குரிய பாதுகாப்பையும் வழங்க வேண்டியது அரசுகளின் பொறுப்பாகும். ஆனால் இன்றைய அரசுகள் தங்களது ஓட்டு வங்கிகளை அடிப்படையாக வைத்துத் தான், தங்களது காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில், முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கு யார் தான் பொறுப்பேற்கப் போகின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது. முஸ்லிம்களாகிய நாங்கள் அந்த வல்ல இறைவனிடமே எங்களது பாதுகாப்பிற்கு கையேந்தி நிற்கின்றோம்.
மேலும், ஏற்கனவே இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்பட்டு வரக் கூடிய இந்திய முஸ்லிம்கள் மேலும் அந்நியப்பட்டுப் போகக் கூடிய நிலையை, வலிய அவர்களின் மீது திணிக்கக் கூடிய சம்பவமாகத் தான் இது அமையும்.
முஸ்லிம்களும் இந்த இந்திய நாட்டுக் குடிமக்கள் தான் என்பதிலும், இந்திய தேச விடுதலைக்கு தன்னுடைய சதவீதத்திற்கும் அதிகமாகவே தியாகங்களை இந்தச் சமூகம் செய்திருக்கின்றது என்பதையும் ஒப்புக் கொள்ளும் அனைவரும், இந்தப் பாஸிஸப் போக்கை தடுத்து நிறுத்த முன் வரவேண்டும். இந்த அராஜகத்திற்குத் துணை போகக் கூடிய அனைவரையும் நீதிமன்றத்தில் - குற்றக் கூண்டில் நிறுத்த வேண்டும்.
இந்திய எல்லையில் இந்திய ராணுவம் சந்திப்பவர்கள் மட்டும் இந்திய எதிரிகள் அல்ல! இந்தியாவின் ஒருமைப்பாட்டை சிதைப்பவர்களும் இந்தியாவின் எதிரிகளே!!! இந்த எதிரிகளை இந்திய தேச மக்களுக்கு அடையாளப்படுத்த வேண்டியதும், அவர்களது தீவிரவாதப் போக்கை தடுத்து நிறுத்த வேண்டியதும் நடுநிலையாளர்கள் மற்றும் இதயமுள்ளவர்களின் கடமையும் கூட!!
பாபரி மஸ்ஜித் : அடிப்படைத் தகவல்கள்
டிசம்பர் 06, 1992 ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் ஷஹீதாக்கப்பட்ட நாள்.
இந்தியா உலக அரங்கில் தலைகுனிந்து நின்ற நாள். அன்று இந்தியாவுக்கு ஏற்பட்ட அவமானத்தை இன்றளவும் துடைக்க முடியவில்லை. இந்த அவமானம் முற்றாக துடைக்கப்படும் அளவுக்கு, இன்று இந்தியா தேச விரோத ஃபாசிஸ சக்திகளின் கைகளில் சிக்கிக் கொண்டது.
இந்தியாவின் கண்ணியம் இன்னும் அதள பாதாளத்தில் வீழ்ந்து விடலாம் இந்தப் பாஸிஸச் சக்திகளால். பாபரி பள்ளிவாசல் ஷஹீதாக்கப்பட்ட அந்த நாள் முதல் இன்று வரை நாட்டில் நடக்கும் அத்தனை விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கும் அதுவே காரணம்.
பள்ளிவாசல் இடிக்கப்பட்டவுடன் தங்கள் அதிருப்தியை வெளியே காட்டிட வந்த அத்தனை முஸ்லிம்களும் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். ஒரு பெரும் பகுதியினர் நரசிம்மராவ் அரசின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானார்கள். எஞ்சியோர் தடா என்ற காட்டுமிராண்டிச் சட்டத்தின் வாயில் சிக்கிச் சிறைச்hலைகளில் தங்கள் வாழ்நாள்களைத் கழித்திட வேண்டியவர்களானார்கள்.
தடா சட்டம் காலாவதியான பின்னரும் அதன் கீழ் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் விடுவிக்கப்படவில்லை.
பாபரி பள்ளி வாசல் இடிக்கப்பட்ட நாள்களைத் தொடர்ந்து பம்பாயில் கலவரங்கள் மூண்டன. நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் காவல் துறையினராலும் ஃபாசிஸ்டுகளாலும் கொலை செய்யப்பட்டார்கள்.
பம்பாய் நிகழ்வுகளை விசாரிப்பாதற்காக அமர்த்தப்பட்ட கிருஷ்ணா கமிஷன் தன் கண்டுபிடிப்புகளை வெளியிட்டிருக்கின்றது. அதில், அத்வானியின் ரத யாத்திரையும், பள்ளிவாசல் இடிப்பும் தான் பம்பாய் நிகழ்வுகளுக்குக் காரணம் என ஆணித்தரமான ஆதாரங்களோடு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையும், பள்ளிவாசல் இடிப்பில் பெருமை கண்ட ஃபாசிஸ்டுகளின் கைகளிலேயே சிக்கிக் கொண்டது. இப்படி இந்த நாட்டையே நட்டாற்றில் தள்ளி விட்ட இந்தப் பிரச்னையில் மிகவும் வேதனையான பகுதிய என்னவெனில், பள்ளிவாசலை இழந்த முஸ்லிம்களே இன்று குற்றவாளியாக்கப்பட்டு வருகின்றார்கள் அனைத்து விவகாரங்களிலும்..
பாபரி மஸ்ஜித் குறித்த அடிப்படை தகவல்கள் வருங்காலத்தில் நிச்சயமாகத் திரிக்கப்படும் இன்று இந்தியாவை ஆளும் இந்தப் ஃபாசிஸ்டுகளால்..
ஆகவே அவற்றை நினைவு கூருவதும், நாட்டு மக்களுக்கும், உலக மக்களுக்கும் அதைப் பாதுகாத்துத் தருவதும் நமது கடமை. ஏனென்றால், வரும் மார்ச் 2002, 2 ஆம் தேதியன்று பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் கோயில் கட்டப் போவதாக விசுவ ஹிந்து பரிஷத் அறிவித்திருக்கின்ற நிலையில், அதற்குத் தடையை ஏற்படுத்தும் அனைத்து வழிகளையும் அடைப்பதற்குண்டான வழிமுறைகளில் ஆளும் பாஜக முயன்று கொண்டிருக்கின்ற இந்த நிலையில், பாபரி பள்ளிவாசல் பற்றிய அனைத்துத் தகவல்களையும் தருவது மிகவும் பொருத்தமெனக் கருதுகின்றோம். இதன் மூலம் நாட்டு மக்களுக்கும், உண்மையை அறிய விளையும் அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம்.
அடிப்படைத் தகவல்கள் :
கி.பி. 1528 ல் பாபரி மஸ்ஜித் கட்டப்பட்ட வரலாறு
இப்பள்ளிவால் உண்மையில் மிர்பக்கி என்பவரால் கட்டப்பட்டது. இந்த மிர்பக்கி பேரரசர் பாபர் அவர்களின் கீழ் பணிபுரிந்த ஓர் படைத்தலைவர். இவரது சொந்த ஊர் தாஷ்கண்ட்.
இப்பள்ளிவாசல் அந்தப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம் (ஷியா-சுன்னி) கள் தங்கள் தொழுகையை நிறைவேற்றிடும் முகத்தான் நிறுவப்பட்டது.
ஆட்சியாளர் ஜஹாங்கீர் அவர்கள் காலம் முதற்கொண்டு தான் இந்தப் பள்ளிவாசல் பாபரி பள்ளிவாசல் என்றழைக்கப்பட்டது. பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்ட அந்த நாள் முதல், முஸ்லிம்கள் இரு தரப்பாரும் தங்கள் தொழுகைகளைக் கூட்டாக இந்தப் பள்ளிவாசலில் நிறைவேற்றி வந்தார்கள்.
1950 ம் ஆண்டு, பைஸாபாத் சிவில் நீதிமன்றம் ஓர் தடை உத்தரவைப் போட்டு முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்குள் நுழைவதைத் தடுத்தது.
அன்று வரை முஸ்லிம்கள் தங்கள் தொழுகையை அந்தப் பள்ளிவாசலில் நிறைவேற்றியே வந்தார்கள்.
1855 ஹனுமன் கார்ஹி வழக்கு
19ம் நூற்றாண்டின் நடுவில் அதாவது 1855 ஆம் ஆண்டில் ஹனுமான்கார்ஹி என்பது குறித்து வழக்கொன்று எழுந்தது. இந்த வழக்கு சுன்னி முஸ்லிம்களுக்கும், நாகா சாதுக்களுக்குமிடையில் எழுந்தது. அப்போது, அப்பகுதி நவாப் வாஜித் அலீ ஷா என்பாரின் ஆட்சியின் கீழிருந்தது.
இந்த ஹனுமான்கார்ஹி அயோத்தியில் இருக்கின்றது. இந்த ஹனுமான்கார்ஹியில் பள்ளிவாசல் ஒன்று இருந்தது எனவும், அது இடிக்கப்பட்டு கோயில் கட்டப்பட்டுள்ளது என்றும் முஸ்லிம்கள் கூறினார்கள்.
இது குறித்து எழுந்த கலவரங்களில் 200 இறந்துள்ளனர். பல முஸ்லிம்கள் உயிரைத் தந்தும் பள்ளிவாசல் இடத்தை மீட்க இயலவில்லை.
முஸ்லிம்கள் ஹனுமன் கார்ஹியிலிருந்த பள்ளிவாசலை மீட்கக முயற்சி செய்தார்கள் என்பதற்காக, இந்துக்கள் எதிர் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டார்கள். பாபரி பள்ளிவாசல் முன்பு ராம் சாபுத்ரா ஒன்றிருந்தது என்பதே அந்த எதிர் நடவடிக்கை.
முஸ்லிம்கள் தங்கள் பள்ளிவாசலை மீட்க நடவடிக்கை எடுக்கின்றார்ள் என்று கோபங் கொண்டெழுந்த அந்தப் பகுதிய பூர்வீக இந்துக்கள் கூட ஜென்மஸ்தான் என்றொரு முழக்கத்தை முன் வைக்கவில்லை.
அவர்கள் ஒரு எதிர் நடவடிக்கையாகத் தான் பள்ளிவாசல் முன்பாக ஒரு இடத்தை இட்டுக் கட்டிப் பேசினார்கள். ஆகவே பாபரி பள்ளிவாசல், இராமர் பிறந்த இடம் என்பது ஆதாரமற்ற அரசியல் பிழைப்புக் கோஷம் என்பதே உண்மை. (ஆதாரம் : பேராசிரியர் க. சம்பக லஷ்மி. வரலாறு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர் மற்றும் டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் தலைவர்)
1857 நாம் சாபுத்ரா
பாபரி பள்ளிவாசல் முன்பாக சற்றுத் தொலைவில் மேடு போன்றிருக்கும் இடம் ராம் சாபுத்ரா என்றும், அதுவே ராம் ஜென்ஸ்தான் என்று சாமியார் ஒருவர் திருவாய் மலர்ந்தார். அத்தோடு அங்கு பூஜா புனஸ்காரங்கள் செய்யும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.
1857 ல் பாபரி பள்ளிவாசல் முன்பாக சற்று தொலைவில் மேடு போன்றிருந்த இடம் ராம் சாபுத்ரா என்ற யெரில் உயர்த்தப்பட்டு இந்துக்கள் பூஜா புனஸ்காரங்களைச் செய்து வந்தார்கள். ஒரே வளாகத்திற்குள், முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தங்கள் தொழுகையை நிறைவேற்றினார்கள். இந்துகள் தங்கள் பூஜா புனஸ்காரங்களை நிறைவேற்றினார்கள்.
இரு வகுப்பரிடையேயும் பிரச்னைகள் எழுந்து விடக் கூடாது என்பதற்காக, ஆங்கிலேயர்கள் இரண்டு வணக்க இடங்களை வேறுபடுத்திடும் அளவில் ஓர் சுவரை எழுப்பிட விரும்பினார்கள். அதன்படி 1859 ல் இந்தப் சுவர் எழுப்பப்பட்டும் விட்டது.
1883 ம் ஆண்டு மே மாதம் ராம் சாபுத்ராவில் இராமர் கோயில் கட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. பின்னர் பைஸாபாத் துணை ஆணையாளரிடம் இந்த இராமர் கோயில் கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பம் தரப்பட்டது.
இந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
பட்டவர்த்தனமான வகுப்ப வெறியேயன்றி வேறு எண்ணங்கள் இதற்குப் பின்னால் இல்லை. இதனால் அனுமதி வழங்கப்படவியலாது எனக் கூறி விட்டார் பைஸாபாத் துணை ஆணையாளர்.
1885 ராம் சாபுத்ராவில் கோயில் கட்ட வழக்கு
ஜனவரி 15 1885 ல் ஜென்ஸ்தான் காப்பாளராகக் காட்டிக் கொண்ட ரகுபீர்தாஸ், பைஸாபாத் கீழ் நீதிமன்றத்தில் ராம் சாபுத்ராவில் இராமர் கோயில் கட்ட அனுமதி கேட்டு வழக்குத் தொடர்ந்தார்.
பள்ளிவாசலுக்கு முன்னால் கோவில் கட்டுவது இரண்டு வகுப்பாருக்குமிடையே கொந்தளிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. மாவட்ட நீதிபதி முன்பு தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் எதிலும் பாபரி பள்ளிவாயில், சர்ச்சையாக்கப்படவில்லை என்பது தெளிவு.
1934 ல் நடந்த வகுப்புக் கலவரங்கள் அயோத்தியைத் தாக்கியது. சில தீவிரவாதிகள் முஸ்லிம்களைத் (தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த முஸ்லிம்களையும்) தாக்கி, பள்ளிவாசலையும் தாக்கினார்கள். எனினும் முஸ்லிம்கள் தொடர்ந்து தொழுகைகளை நிறைவேற்றி வந்தார்கள்.
1940 ல் .. ..
1940 ; இந்தப் பள்ளிவாசல் சுன்னி முஸ்லிம்களுக்குச் சொந்தமா? ஷியா முஸ்லிம்களுக்குச் சொந்தமா? என்றொரு சர்ச்சை எழுந்தது. இது நீதிமன்றம் சென்றது. நீதிமன்றம் பள்ளிவாசல் சுன்னி முஸ்லிம்களுக்கே சொந்தம் எனத் தீர்ப்பு வழங்கிற்று.
இது தான் பாபரி பள்ளிவாசலில் யாருக்குச் சொந்தம் என்பது சம்பந்தமாக வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு.
இராமர் சிலைகள்
1949 டிசம்பர் 23 ல் இராமர் லாலா சிலைகள் மூட நம்பிக்கையின் அடிப்படையில் பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்டன. இது சட்ட விரோதமான செயல் என அப்போதே அறிவிக்கப்பட்டது. இந்தக் கிரிமினல் குற்றம் சம்பந்தமாக ஒரு முதல் குற்றப்பத்தரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
22.12.1949 அன்று சுதந்திர இந்தியாவில் ஒரு பள்ளிவாசல் கோயிலாக மாற்றப்பட்டு விட்டது.
கே.கே.நய்யார்
பாபரி பள்ளிவாசலினுள் சிலை வைக்கப்பட்டது குறித்து தொடரப்பட்ட வழக்கு கே.கே. நய்யார் என்பார் நீதிபதியாக இருந்த நீதிமன்றத்தில் தான் நடந்தது. இவர் பிற்றை நாட்களில் ஜனசங்க அதாவது முன்னாள் பிஜேபி யின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மட்டுமல்ல, அவருடைய மனைவி சகுந்தலா அம்மையாரும் அதே ஜனசங்க நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆக, முஸ்லிம்கள் ஒரு பிஜேபி குடும்பத்திடம் தான் பாபரி மஸ்ஜிதில் சிலை வைக்ப்பட்டது சம்பந்தமாக நியாயம் கேட்டிருக்கின்றார்கள்.
இந்த கே.கே.நய்யார் பைஸாபாத்திலும், உத்திரப் பிரதேசத்திலும் அரசு பொறுப்புகளிலும் பல ஆண்டுக்ள இருந்தார். முஸ்லிம்கள் - இந்துக்கள் இடையே ஏற்பட்ட பல பிரச்னைகளில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன்களின் தலைவராக இருந்தார். கிஞ்சிற்றும் கவலைப்படாத ஓர் இந்து தீவிரவாதி என்பதை யாரும் அறிந்திடவில்லை.
பள்ளிவாசலுக்குள் சிலைகள் வைக்கப்பட்டவுடன், அவற்றை அகற்றி விட்டு தொழுகையை நிறைவேற்றிக் கொண்டே இருந்திருக்க வேண்டும் முஸ்லிம்கள். பாவம்.. அவர்கள் இந்த நாட்டு நீதிமன்றமும் நீதிபதிகளும் நியாயம் வழங்குவார்கள் என எதிர்பார்த்திருக்கின்றார்கள்.
சிலைகள் வைக்கப்பட்டவுடன் வழங்கப்பட்ட (அ)நீதி
சிலைகள் வைக்கப்பட்டவுடன், மாவட்ட நீதிபதி சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்திய தண்டனைச் சட்டம ;பிரிவு 145 ன் கீழ் பள்ளிவாசலைக் கைப்பற்றினார். பள்ளிவாசலை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு நீதிபதியைக் கொண்டு நிர்வாகம் என்ற பெயரில் பள்ளிவாசலுக்குள்ளிலிருந்த சிலைகளுக்குப் பூஜை புனஸ்காரங்களை அனுமதித்தார்.
நீதிபதி கே.கே.நய்யாரின் ராஜ துரோகச் செயல்
பாபரி பள்ளிவாசலுக்குள் சிலை வைக்கப்பட்டு விட்டது. அவற்றை அப்புறப்படுத்திட வேண்டும் என்ற வழக்கு தன் முன்னால் வந்த போது, அதனை சட்டை செய்யாமலிருந்தார் இவர். மாவட்ட நீதிபதி என்ற அளவில், அவர் செய்ததெல்லாம், பள்ளிவாசலுக்குள் பூஐஜகள் நடத்த ஆவன செய்தது தான். தொழுகைகள் முறையாக நடைபெற்று வந்த பள்ளிவாசல் சிலைகளின் இருப்பிடமாக ஆக்கப்பட்டு விட்டது என்பதை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களுக்குத் தெரிவித்தார்கள் முஸ்லிம்கள்.
ஜவஹர்லால் நேரு அவர்கள் 23.12.1949 அன்று உத்திரப்பிரதேச முதலமைச்சர் ஜி.பி.பந்த் அவர்களுக்கு ஒரு தந்தியை அனுப்பினார். அந்தத் தந்தியில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார் : (மிகவும் ஆபத்தான முன்மாதிரி ஒன்று அங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்).
பாபரி பள்ளிவாசல் விவகாரத்தில் அக்கறை காட்டிக் கொண்டதாகக் கண்ணீர் வடித்தவர்கள் யாரும், அங்கிருந்து சிலைகளை அகற்றிடுவதில், ஆர்வம் காட்டவில்லை என்பதை முஸ்லிம்கள் கவனிக்க வேண்டும்.
பிரதமர் நேருவின் தந்தி கிடைத்ததும், உத்திரப்பிரதேச முதல் ஜி.கே.பந்த் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார்.
அவர் பைஸாபாத் நீதிபதி கே.கே. நய்யார் அவர்களிடம இரண்டு கேள்விகளை வைத்து விளக்கம் கேட்டார்:
அந்தக் கேள்விகள் : 1. சிலைகளை பள்ளிவாசலுக்குள் வைத்து விடாமல் தடுத்திட ஏன் முன் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை? 2. சிலைகளை ஏன் இன்னும் அகற்றிடவில்லை?
இந்த வினாக்களுக்கு விளக்கம் கேட்ட கடிதத்தில் அப்போதைய உத்திரப்பிரதேச அரசின் முதன்மை செயலர் பகவான் ஷாகே அவர்கள் கையெழுத்திட்டிருந்தார். இந்தக் கடிதம் டிசம்பர் 27, 1949 அன்று அனுப்பப்பட்டது.
இதற்கு விளக்கம் தந்த கே.கே.நய்யார், முஸ்லிம்களிடம் பேசி, அப்பள்ளிவாசலை இந்துக்களுக்கு விட்டுக் கொடுத்திட செய்திடலாம் என்று கூறி விட்டார்.
அத்துடன் முஸ்லிமக்கள் போல் தோற்றந்தந்த சிலரைத் தனது லட்சியம் நிறைவே;றத் தயாரித்தார். அவர்களில் 15 பேரை ஒன்று திரட்டி ஒரு குழவை அமைத்தார். அந்தக் குழவின் கையில் ஓர் விண்ணப்பத்தை வடிவமைத்துத் தந்தார். அந்த விண்ணப்பத்தில், பள்ளிவாசலுக்குள் சிலைகள் வைக்கப்பட்டு விட்டதால், பள்ளிவாசல் பள்ளிவாசலாகச் செயல்படவில்லை. அது கோயிலாகவே செயல்படுவதால் அதை இந்துக்களுக்கே தந்து விடலாம் என முஸ்லிம்களே முறையிடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
(ஆதாரம் : அயோத்தியா முழு உண்மைகள் பக்கம். 3 வெளியீடு : ருnவைநன யுஉயனநஅiஉள ஐவெநசயெவழையெடஇ ஏனைலயயெபயசஇ ர்லனநசயடியன – 500 044).
பள்ளிவாசலை இந்து அராஜகவாதிகளிடமிருந்து மீட்டே தீர வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்ட முஸ்லிம்கள், கவர்னர் ஜெனரல் இராஜகோபால் ஆச்சாரியார் அவர்களுக்குத் தகவல்கள் தந்தார்கள்.
இராஜகோபால் ஆச்சாரியார் அவர்கள் பிரதமர் நேரு அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், பள்ளிவாசலைச் சுற்றி நடப்பவை தனக்கு அதிர்ச்சியைத் தருகின்றன. முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து நான் கலங்கிப் போயிருப்பதாகவும் குறிப்பிட்டார். கவர்னர் ஜெனரல் கடிதத்திற்கு நேரு அவர்கள் உடனேயே பதில் எழுதினார்.
அந்தப் பதில் இது தான் : ஊஆ ழக ரு.P. iவெநனெநன வயமiபெ யஉவழைn. (உத்திரப்பிரதேசத்தின் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கும் எண்ணத்திலிருக்கின்றார்.
5.12.1950 அன்று ஜவஹர்லால் நேரு அவர்கள் தான் அயோத்தியாவுக்கு வர விரும்புவதாக கடிதம் எழுதினார். அவரை வரவிடாமற் தடுத்து விட்டார் உ.பி. முதல்வர் ஜி.பி.பந்த்.
முஸ்லிம்களுக்கு நீதி வழங்குவதற்குப் பதில், 1950 ல் நீதிமன்றம் இன்னொரு தீர்ப்பை வழங்கிற்று. அது வேறொன்றுமில்லை. இந்துக்கள் பூஐஜ நடத்தவார்களாம். முஸ்லிம்கள் அதில் எந்த இடையூறுகளையும் செய்து விடக் கூடாதாம்.
உத்திரப்பிரதேச முதல்வர் ஜி.பி. பந்த் அவர்களும் ஓர் இந்து மதவெறியர் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள நீண்ட காலமாகி விட்டது.
1959 ல் அரசு பொறுப்பாளரை அகற்றி விட்டு, பள்ளிவாசலை இந்துக்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்றொரு வழக்கு தொடரப்பட்டது. 1961 ல் சுன்னி வக்ஃப் போர்டு, பள்ளிவாசலையும ;அதைச் சுற்றியுள்ள முஸ்லிம்களின் அடக்கத்தளத்தையும் முஸ்லிம்களிடம் ஒப்படைத்திட வே;டும் என்று கோரி வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கில் இன்று வரை தீர்ப்பு வழங்கப்படவில்லை. பாபரி பள்ளிவாசலைக் கோயிலா மாற்றிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்குகளில், உடனுக்குடன் தீர்ப்புகள் வழங்கப்பட்டு விட்டன. ஆனால் முஸ்லிம்கள் த்கள் நியாயமான உரிமைகளுக்ககாகத் தொடர்ந்த வழக்குகளில், இது வரை தீர்ப்புகள் வழங்க்பபட்வில்லை.
இன்னும் முஸ்லிம்கள் இந்த நீதி மன்றங்களை நம்புகின்றார்கள். இதே போல் தான் 1986 ல் பள்ளிவாசலில் கதவுகளைத் திறந்து, பொதுமக்களின் பூஐஜக்காக அனுமதி வழங்கிட வேண்டும் என்ற தீர்ப்பும் வந்தது!
பள்ளிவாசலைத் திறந்து பொதுமக்களின் பூஐஜயை அனுமதிக்க வேண்டும் என வழக்குத் தொடர்ந்தவர் உமேஷ் சந்திர பாண்டே என்பவர். இவர் பாபரி மஸ்ஜித் சம்பந்தமாகத் தொடரப்பட்ட எந்த வழக்கோடும் சம்பந்தப்படவில்லை.
இவர் 1986 ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் பள்ளிவாசலைப் பொதுமக்கள் பூஐஜக்காகத் திறந்திட வேண்டும் என்றொரு வழக்கைப் பதிவு செய்கின்றார். மூன்றே நாட்களில் அதாவது பிப்ரவரி மாதம் 1 ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் பூட்டு திறக்கப்பட்டு விட்டது. பாபரி மஸ்ஜித் சம்பந்தப்பட்ட அடிப்படை வழக்குகள் பல உயர்நீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது பல ஆண்டுகளாக!
அடிப்படை வழக்குகளை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, தீர்த்து வைக்காத வரை அது தொடர்பான எந்த வழக்குகளிலும் கீழ் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கிடக் கூடாது. இந்த நீதிமன்ற நெறிமுறைகளையெல்லாம் எடுத்தெறிந்து விட்டு, பைஸாபாத் கீழ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. அந்தத் தீர்ப்பு உடனேயே செயல்படுத்தவும்படுகின்றது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்தும் உடனேயே உயர் நீதிமன்றத்திற்குச் சென்றார்கள் முஸ்லிம்கள். உயர்நீதிமன்றம் பிப்ரவரி 3 ம் நாள் (1986) முஸ்லிம்களின் முதகில் குத்தி ஒரு தீர்ப்பை வழங்கியது.
அதாவது, பாபரி மஸ்ஜித் இருக்கும் சொத்தின் அப்போதைய நிலை அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அந்தத் தீர்ப்பு!
இதன் பொருள், பள்ளிவாசலில் தொடர்ந்து பூஐஜ நடத்தலாம் என்பதே.
1985 முதல் அயோத்தியாவை, யைமாகக் கொண்டு சுளுளுஇ ஏர்Pஇ டீதுP முதலிய கட்சிகள் ஒரு பெரும் இயக்கத்தைத் துவங்கின. 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த கும்பமேளா திருவிழாவைப் பயன்படுத்தி கிராமம், கிராமமாக இந்த இயக்கத்தைக் கொண்டு சென்றார்கள். ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஸ்ரீராம் எனப் பொறிக்கப்பட்ட செங்கல்கள் அயோத்தியை நோக்கி அனுப்பப்பட்டன. 1989 ஆம் ஆண்டு இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. நவம்பர் மாதம் 9 ம் நாள் நடைபெற்ற இந்த கால்கோள் விழாவில் இராஜிவ் காந்தி அரசு முஸ்லிம்களின் முதகில் குத்தியது.
நீதிமன்றங்களால் தடை செய்யப்பட்ட ஒரு இடத்தில் கோயில் கட்ட அடித்தளம் அமைக்கப்பட்டது. பண்பாடு, நாகரீகம் இவற்றின் அடிப்படையில் பார்;த்தால், மிகவும் கீழ்த்தரமானதோர் செயல் இது. இந்தக் கீழ்த்தரமான செயலை இந்து வட்டாரங்களில் மிகப் பெரிய சாதனை எனப் பீற்றிக் கொண்டன சங்க் பரிவாரங்கள்.
நவம்பர் 1989 ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம், அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்ற இடம், சர்ச்சைக்குரிய இடம் என்றும், அதன் அந்தஸ்தில் எந்த மாற்றமும் கொண்டு வந்திடக் கூடாது , அதில் ஒரு துரம்பைக் கூட மாற்றிடக் கூடாது என அறிவித்தது. எனினும், அந்த இடம் பாழ்படுத்தப்பட்டது.
இந்த நாட்டின் நீதிமன்றத்தை ஒட்டு மொத்தமாக அவமானப்படுத்தினார்கள் இந்து மத வெறியர்கள். வெறி கொண்ட இந்த நாட்டுத் துரொகத்திற்குப் பெயர் தாய் நாட்டின் மீதுள்ள மாளாத பற்று.
1989 ஆண்டுத் தேர்தல்கள்.
1989 ம் ஆண்டு நடந்த தேர்தல்களில், பாஜக நாடாளுமன்றத்தில் 80 இடங்களைப் பிடித்தது. அதற்கு முந்தைய நாடாளுமன்றத்தில் அது பெற்றிருந்தது வெறும் 2 இடங்களே!
அப்போதைய அரசியல் கதாநாயகனாகவும், சமூக நீதியின் காவலனாகவும் காட்டப்பட்ட வி.பி.சிங் போஃபர்ஸ் ஊழலில் காங்கிரஸ் சிக்கிக் கொண்டது. இவையெல்லாம் இந்தத் தேர்தலை நிர்ணயித்தன.
தேசிய முன்னணி என்ற பெயரில் பிஜேபி வி.பி.சிங்குடன் இணைந்து நின்றது. இவையெல்லாம் பிஜேபி இதில அதிகமான இடங்களைப் பிடித்திட வகை செய்தன. ஆனால் பாஜக வினர் இது கோயிலுக்காகக் கிடைத்த ஓட்டு என்று பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள்.
பிஜேபி கூட்டுடன் பணியாற்றிய தேசிய முன்னணி பல பிரச்னைகளை பிஜேபி பினராலேயே சந்திக்க வேண்டியதாயிற்று. பாபரி பள்ளிவாசல் பிரச்னையை பிஜேபி பெரிதாக்கவே, வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை உடனேயே செயல்படுத்துவதாக அறிவித்தார். இந்நிலையில் பிஜேபி ன் உயர் சாதி வெறி வெளிப்பட்டது.
1990 ல் விஷ்வ இந்து பரிஷத் பாபரி பள்ளிவாசல் இருக்குமிடத்தில் கோயில் கட்டும் பணி ஜனவரி 2 ம் தேதி ஆரம்பமாகும் என அறிவித்தது. வி.பி.சிங் அவர்களின் வேண்டுகோளின் கீழ் இது நான்கு மாதம் தள்ளிப் போடப்பட்டது. 1990 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அத்வானி மண்டல் கமிஷன் பரிந்துரை மூலம் கிடைக்கவிருக்கின்ற சமூக நீதியிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பிடவும், இராமர் கோயில் மீது மக்களின் கவனத்தைக் கொண்டு வந்திடவும் ரத யாத்திரையை மேற்கொண்டார். இந்த ரத யாத்திரையின் பெயரால் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களினால், பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் உயிர் துறந்தார்கள். ரத யாத்திரை நாடு முழவதும் ஏற்படுத்திய கொந்தளிப்புகளின் அடிப்படையில் அதைத் தடை செய்திட வேண்டும் என விண்ணபித்தனர் மக்கள்.
ரத யாத்திரையைத் தடை செய்தால் வி.பி.சிங் அவர்களின் அரசுக்கு அளித்து வரும் ஆதரவைப் பின் வாங்குவோம் என அறிவித்தார்கள் பிஜேபி யினர். அப்போது உத்திரப்பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் அவர்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். பீகார் மாநிலத்தில் லல்லு பிரசாத் யாதவ் அவர்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். அத்வானியும் அவருடைய பரிவாரங்களும் உத்திர பிரதேசத்திற்குள் புகுந்து கலவரங்களை உருவாக்குவதற்கு முன்னால், ரத யாத்திரையைத் தடுத்திட வேண்டும் என முடிவு செய்து, ரத யாத்திரை பீகாரில் சமஸ்திப்பூர் வந்த போது 23.10.1990 அன்று அத்வானி கைது செய்யப்பட்டு, அரசு விருந்தினர் மாளிகையின் காவலில் வைக்கப்பட்டார். அத்வானியைக் கைது செய்ததும், ஒரு பெரும் கூட்டம் அயோத்தியை நோக்கிப் பாய்ந்தது. முலாயம் சிங் யாதவ் அவர்களின் தலைமையிலான உத்திரப்பிரதேச அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டது.
இதே அக்டோபர் மாதம் 30 ம் நாள் (1990) நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் முலாயம் சிங் யாதவ் கண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதனால் பள்ளிவாசல் இடிக்கப்படாமல் தடுக்கப்பட்டது. ஆனாலும், பள்ளிவாசலின் வெளிச்சுவர்கள் சேதப்படுத்தப்பட்டன. சிலர் பள்ளிவாசலின் மேல் காவிக் கொடியையும் ஏற்றினார்கள். இப்படிப் பள்ளிவாசலைத் தகர்ப்பதைத் தடுத்து விட்டது. மண்டல் கமிஷன் பரிந்துரையைச் செயல்படுத்த முனைந்து சமூக நீதி வழங்கிட முனைந்தது - இவற்றை மனதிற் கொண்டு பிஜேபி யினர் விபிசிங் அரசுக்கு தந்த ஆதரவைப் பின் வாங்கினர்.
வி.பி. சிங் பதவி இழந்தார். பாபரி பள்ளிவாசல் விவகாரத்தில் சுமூகமான முடிவு காண்போம் எனத் தொடர்ந்து வந்த காங்கிரஸ் சூளுரைத்தது. பாபரி பள்ளிவாசல் பள்ளிவாசல் தான் என்பதற்கான ஆதாரங்களை முஸ்லிம்கள் தந்திட வேண்டும். அது கோயில் தான் என்பதை நிரூபித்திட ஆதாரங்கள் இருந்தால், இந்துக்கள் தந்திட வேண்டும் என்றொரு அறிவிப்பு இரு தரப்பாரையும் நோக்கி வைக்கப்பட்டது.
பாபரி பள்ளிவாசல் நடவடிக்கைக் குழு என்ற முஸ்லிம்களின் அணி ஆதாரங்களோடு வந்தது. இந்துத் தீவிரவாதிகளோ, இது மத நம்பிக்கை. இதற்கு ஆதாரங்கள் என எதுவும் தரத் தேவை இல்லை என்று அறிவித்தார்கள். அத்தோடு மதுரா, வாரணாசி ஆகிய இடங்களிலிருக்கும் பள்ளிவாசல்களையும் இந்துக்களிடம் ஒப்படைத்திட வேண்டும்எனவும் இந்துத் தீவிரவாதிகள் அறிக்கை விட்டார்கள். இதிலிருந்து இந்துத் தீவிரவாதிகளிடம் ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றும், ஆதாரங்களால் சாதிக்க இயலாதவற்றை அடாவடித்தனங்களால் சாதிக்க முனைகின்றார்கள் என்பதும் தெளிவானது
1991 தேர்தல்களும் பள்ளிவாசல் இடிப்புகளும்
வி.பி.சிங் அவர்களின் அரசு வீழ்ந்தவுடன், சந்திரசேகர் தனது அரசை அமைத்தார். சந்திரசேகரை அரசு அமைக்க பணித்தது காங்கிரஸ் தான். பின்னர் இதே காங்கிரஸ் சந்திரசேகர் அவர்களைப் பதவியிலிருந்து வீழ்த்திற்று. 1991 ம் ஆண்டு ஜுன் மாதம் பொதுத் தேர்தல்கள் நடந்தன. பாரதீய ஜனதா கட்சி இதில் தன்னுடைய எண்ணிக்கையைச் சற்று அதிகப்படுத்திக் கொண்டது. அதாவது 80 அங்கத்தினர்கலிருந்து 117 அங்கத்தினரானார்கள். நாடாளுமன்றத்தில் இடம் பெற்றார்கள்.
அத்தோடு பாரதீய ஜனதா கட்சி உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாச்சலப்பிரதேசம் ஆகிய இடங்களில் ஆட்சிக்கு வந்தது. பி.வி. நரசிம்மராவ் இந்தியாவின் பிரதமரானார். பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் லால் கிருஷ்ண அத்வானி எதிர்க்கட்சித் தலைவரானார்.
உத்திரப்பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சிக்குக் கிடைத்த வாக்குகளின் விகிதம் 32 சதவீதம் மட்டுமே. எனினும் கல்யாண் சிங் என்பவரை முதல்வராககக் கொண்டு அங்கே பாரதீய ஜனதா கட்சி அமைச்சரவையை 24 ஜுன் 1991 ல் அமைத்தது.
பதவி ஏற்ற மறு நாள் பாரதீய ஜனதா கட்சியின் முதல்வர் கல்யாண் சிங் தன்னுடைய அமைச்சரபை; பரிவாரத்துடன் அயோத்தியா சென்று பாபரி பள்ளிவாசலுக்குள் நுழைந்தார். அங்கே ஓர் உறுதி மொழியையும் எடுத்தார். அதில, இதில் (பள்ளிவாசலில்) நிச்சயமாக ஓர் கோயில் கட்டப்படும் என சூளுரைத்தார்.
வழிபாட்டுத் தலங்களின் சட்டம்
1991 ல் நரசிம்ம ராவ் அரசு ஓர் சிறப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அந்தச் சட்டத்தின் பெயர் Pடயஉநள ழக றுழசளாip (ளுpநஉயைட Pசழஎளைழைளெ யுஉவ) 1991. இந்தச் சட்டம் செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் எந்தப் பள்ளிவாசலும் ஆலயமாகவோ, கோயிலாகவோ, மாற்றப்படலாகாது என்றும், எந்தக் கோயிலும் ஆலயமாகவோ, பள்ளிவாசலாகவோ மாற்றப்பட முடியாது என்று பறை சாற்றியது
இந்தச் சட்டம் 15.08.1947 அதாவது இந்தியா விடுதலை அடைந்த நாள் முதற் கொண்டு, வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்தனவோ அப்படியே பாதுகாக்கப்படும் என்றும் அறிவித்தது. அதே நேரத்தில் பாபரி பள்ளிவாசலை, இந்தச் சட்டம் கட்டுப்படுத்தாது என்றும் சொல்லிற்று. அதாவது, பாபரி பள்ளிவாசலை வேண்டுமானால் கோயிலாகக மாற்றிக் கொள்ளலாம் என்பதைச் சொல்லாமல் சொல்லிற்று. இந்தச் சட்டத்தை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் வரை தண்டனைகள் தரப்படுமாம். அதாவது 3 ஆண்டுகள் சிறையிலிருக்க சித்தமாக இருப்போர் தங்கள் விருப்பம் போல் செயல்படலாம். இந்தச் சட்டம் இன்னொரு ஏமாற்று மோசடி வேலை அவ்வளவு தான்.
இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததும், முஸ்லிம்களுக்கு ஒரு சிறு ஆறதல். வாரணாசியிலும் மதுராவிலும் இருக்கும் பள்ளிவாசல்கள் காப்பாற்றப்பட்டு விடும் என்பது தான் அந்த ஆறதல். பள்ளிவாசலலைச் சுற்றியுள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. 1991 ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிஜேபி ன் உத்திரப்பிரதேச அரசு, பாபரி பள்ளிவாசலைச் சுற்றியுள்ள 2774 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியது.
இதற்கு அது கூறிய காரணம், சுற்றுலாவை வளர்ப்பதும், அயோத்தியா வரும் யாத்திரீகர்களுக்கு வசதிகள் செய்து தருவதுமாகும். இந்தப் பிஜேபி அரசு பிறப்பித்த ஆணைகளின் அடிப்படையில், அக்டோபர் மாதம் 12 ம் நாள் 1991 முதல் பாபரி பள்ளிவாசலைச் சுற்றியுள்ள 2774 ஏக்கர் நிலம் அரசுக்குச் சொந்தம்.
இதன் உள்நோக்கம் என்னவெனில், பாபரி பள்ளிவாசலை இடித்து விட்டு இராமர் கோயில் கட்டுவதே! அக்டோபர் 17, 1991 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஓர் ரிட்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ரிட் மனு, உத்திரப் பிரதேச அரசின் ஆணை, அதாவது பாபரி பள்ளிவாசல் உட்பட்ட இடத்தில் 2774 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்திய ஆணை செல்லாது என அறிவிக்கும்படி வேண்டியது.
இதன் அடிப்படையில் அலகாபாத உயர் நீதிமன்றம் 1991 அக்டோபர் 25 ம் நான் அந்த ஆணை செல்லாது என்று சொல்லாமல், கையகப்படுத்திய இடத்தில் நிரந்தரமான கட்டடங்கள் எதையும் கட்டிடக் கூடாது என்றும், இறுதித் தீர்ப்பு வரும் வரை அந்த இடத்தை யாருக்கும் சொந்தமாக்கிப் பெயர் மாற்றம் செய்திடக் கூடாது என்றும், அத்தோடு அந்த இடத்தில் நடக்கும் அத்தனைக் கட்டுமானப் பணிகளையும் உடனேயே நிறுத்தி விட வேண்டும் என்று ஆணையிட்டது.
ஆனால், கல்யாண் சிங் அரசு பாபரி பள்ளிவாசலைச் சுற்றியுள்ள 2774 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியதும் விஹெச்பி தொண்டர்கள் அசோக் சிங்காலின் மேற்பார்வையின் கீழும், பஜ்ரங்தள் தொண்டர்கள் வினய் கட்டியார் தலைமையிலும் இந்த நிலப்பரப்பிலிருந்து சிறு சிறு கோயில்களை எல்லாம் இடித்தார்கள். இந்தச் சிறு கோயில்களை இவர்கள் இடித்தற்குக் காரணம், பெரிய இராமர் கோயிலைக் கட்டுவதேயாகும்.
Posted by
Unknown
Labels:
பாபர் மசூதி
கண்ணியமிக்க ரமளானில் கடைசிப்பத்தில் நாமெல்லாம் இருந்து வருகின்றோம். ரமளான் பிறை 27 என்றாலே சட்டென்று நம் நினைவுக்கு வருவது லைலத்துல் கத்ர் உடைய இரவுதான். பொதுவாகவே மற்ற நாட்களை விட ரமளானில் பள்ளிகளில் கூட்டம் நிரம்பி வழியும். அதிலும் பிறை 27 வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். மக்கள் வெள்ளத்தால் பள்ளிவாசலே திக்குமுக்காடிப் போய்விடும்.
கண்ணியமும் மகத்துவமும் மிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...
(இந்த அல்குர்ஆனை) மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படி தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும்இ ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வெரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)
கண்ணியமிக்க ரமளானில் கடைசிப்பத்தில் நாமெல்லாம் இருந்து வருகின்றோம். ரமளான் பிறை 27 என்றாலே சட்டென்று நம் நினைவுக்கு வருவது லைலத்துல் கத்ர் உடைய இரவுதான். பொதுவாகவே மற்ற நாட்களை விட ரமளானில் பள்ளிகளில் கூட்டம் நிரம்பி வழியும். அதிலும் பிறை 27 வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். மக்கள் வெள்ளத்தால் பள்ளிவாசலே திக்குமுக்காடிப் போய்விடும்.
காரணம் அன்று தான் ஆயிரம் மாதங்களை விட சிறந்த லைலத்துல் கத்ர் உடைய இரவு என்று பரவலாக மக்களிடையே நம்பிக்கை நிலவி வருகின்றது. பல ஹஜ்ரத் மார்களும் பிறை 27 தான் லைலத்துல் கத்ர் என்று சொல்லி வருகின்றனர். சில அறிஞர்கள் பிறை 27 ல் இல்லை என்று மறுத்தாலும்,'பெரும்பாலான சான்றோர்களின் கருத்து' என்று சொல்லி மழுப்பி வருவதை பார்க்கின்றோம்.
லைலத்துல் கத்ர் இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்த கண்ணியமும்,மகத்துவமும் மிக்க இரவு என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. ஆனால் பிறை 27ல் தான் என்று குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ ஆதாரப்பூர்வமாக காட்ட முடியாது. மாறாக ரமளான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் (பிறை 21, 23, 25, 27, 29) ஆகிய இந்த ஐந்து இரவுகளில் அமைந்திருக்கலாம் என்பது தான் ஹதிஸ்களிலிருந்து பெறப்படும் உண்மையாகும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். லைலத்துல் கத்ர் இரவை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் நீங்கள் தேடுங்கள். அறிவிப்பவர் :ஆயிஷh(ரலி) ஆதாரம் : புஹாரி
ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் மக்களிடம் வந்தார்கள். அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடி கொண்டிருந்தனர். அவர்களுடன் iஷத்தான் இருந்தான். எனவேஇ அதை நான் மறந்து விட்டேன். எனவே அதைக் கடைசிப் பத்து நாட்களில் தேடுங்கள். அறிவிப்பவர் : அபுஸயித் (ரலி) ஆதாரம் : முஸ்லிம்,அஹ்மத்
மேற்கண்ட ஹதீஸ் மூலம் இரண்டு சகோதரர்களுக்கு மத்தியில் ஏற்படும் சண்டை ஆயிரம் மாதங்களைவிட சிறந்த அந்த இரவு மறக்கடிக்கப்படும் அளவுக்கு அல்லாஹ்விடம் மிகுந்த கோபத்திற்குறியது என்பதை புரிந்து கொண்டு சண்டை சச்சரவுகளை விட்டும் தவிர்ந்து கொள்ளவேண்டும்.
எனவே இந்த லைலத்துல் கத்ர் இரவை கடைசிப்பத்தில் ஒற்றைப்படை இரவில் தேடுவதே மிகச்சிறந்ததாகும். அதையே நபி(ஸல்) அவர்கள் செய்து காட்டியும்இ வலியுறுத்தியும் உள்ளார்கள்.
இஃதிகாப்
ரமளானின் கடைசிப்பத்து நாட்களும் பள்ளிவாசலிலேயே தங்கியிருக்கும் இஃதிகாப் எனும் வணக்கத்தை நபியவர்கள் செய்து காட்டியுள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப்பத்து நாட்களில் அவர்கள் மரணிக்கும் வரை இஃதிகாப் இருந்துள்ளார்கள். அறிவிப்பவர் : ஆயிஷh(ரலி) ஆதாரம் : புஹாரி, முஸ்லிம், அஹ்மத்
நபி(ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினால் சுப்ஹ் தொழுது விட்டு தமது இஃதிகாப் இருக்குமிடம் சென்றுவிடுவார்கள். அறிவிப்பவர் : ஆயிஷh(ரலி) ஆதாரம் : புஹாரி, முஸ்லிம், அஹ்மத், திர்மிதி, அபுதாவுத், இப்னுமாஜா
ஒற்றை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதை முன்பே நாம் அறிந்தோம். எனவே ஃபஜ்ரு தொழுதவுடன் இஃதிகாப் இருக்கத் துவங்குவார்கள் என்பது 21ம் நாள் ஃபஜ்ராக இருக்க முடியாது. அப்படி இருந்தால் அந்த இரவு அவர்களுக்குத் தவறி போயிருக்கும். 20ம் நாள் ஃபஜ்ரு தொழுது விட்டு இஃதிகாப் இருப்பார்கள் என்று விளங்குவதே பொருத்தமாகத் தெரிகின்றது.
ரமளானின் கடைசிப்பத்து நாட்களில் இஃதிகாப் இருக்க நாடியபோது அதற்கென கூடாரம் அமைக்க உத்தரவிட்டார்கள். அவ்வாறே அமைக்கப்பட்டது. இது முந்தைய ஹதிஸின் தொடராகும். பள்ளிவாசலில் இஃதிகாப் இருப்பதற்காக ஒரு கூடாரம் அமைத்துக் கொள்ளலாம் என்பதை இந்த ஹதிஸ் விளக்குகின்றது. ஆயினும் இது பொதுவான அனுமதியல்ல. அல்லாஹ்வின் தூதருக்கு மட்டுமே உரியதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை இந்த ஹதிஸின் அடுத்தப் பகுதி விளக்குகின்றது.
உடனே ஜைனப்(ரலி) அவர்கள் ஒரு கூடாரம் அமைக்க உத்தரவிட்டார்கள். அது அமைக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் சிலரும் அவ்வாறு உத்தர விட்டனர். அவ்வாறே அமைக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ரு தொழுது விட்டு பார்த்தபோது பல கூடாரங்கள் போடப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது அவர்கள்இ இவர்கள் நன்மையை தான் நாடுகிறார்களா? எனக் கேட்டு விட்டு தமது கூடாரத்தை பிரிக்குமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே பிரிக்கப்பட்டது.
நபி(ஸல்) அவர்கள் தமது கூடாரத்தை பிரித்து இஃதிகாபை விட்டதும் இவ்வாறு கூடாரங்கள் அமைப்பதில் அவர்களுக்கு இருந்த அதிருப்தியைதான் காட்டுகிறது.
நபி(ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்கும் போது மனிதனின் அவசியத் தேவை(மலஜலம் கழித்தல்) க்காக தவிர வெளியில் செல்ல மாட்டார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) ஆதாரம் : புஹாரி, முஸ்லிம், அஹ்மத்
இஃதிகாப் இருப்பவர் நோயாளியை விசாரிக்காமல் இருப்பதும்இ ஜனாஸாவில் பங்கெடுக்காமலிருப்பதும்இ மனைவியை தீண்டாமலும்இ அணைக்காமல் இருப்பதும்இ அவசியத்தேவையை முன்னிட்டே தவிர வெளியே செல்லாமலிருப்பதும் நபிவழியாகும். அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) ஆதாரம் : அபூதாவூத் இவற்றையெல்லாம் பேணி இஃதிகாப் இருக்கவேண்டும்.
லைலத்துல் கத்ரின் அமல்கள்
லைலத்துல் கத்ர் இரவுக்கென்று விசேஷமான தொழுகையோஇ பிரத்தியேகமான வணக்கமோ ஹதிஸ்களில் காணப்படவில்லை. ஆனாலும்இ நம்மில் பலர் நின்று வணங்க வேண்டும் என்பதால் நபி(ஸல்) அவர்கள் கற்று தராதவைகளை மார்க்கம் எனும் பெயரில் செய்து வருகின்றனர். அதில் ஒன்று தான் தஸ்பிஹ் தொழுகை எனும் வணக்கமாகும்.
அதாவது, முதல் ரக்அத்தில் ஸனா ஓதியவுடன் 15 தடவை ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். பின்னர் கிராஅத் ஒதிய பிறகு ருகூவுக்கு முன்னர் நிலையில்இ ருகூவில்இ பின்னர் நிலையில்இ ஸஜ்தாவில்இ இருப்பில் இப்படி 10 தடவையாக 4 ரக்அத்களில் மொத்தம் 300 தடவை ஓதி தொழுவது தான் தஸ்பிஹ் தொழுகை. இத்தொழுகையை வாழ்நாளில் ஒரு முறையாவது தொழ வேண்டும் என வலியுறுத்தியும் உள்ளனர் நம் மௌலவிகள்.
மேலும் இத்தொழுகை தொடர்பாக பல அறிவிப்புகள் இருந்தாலும் அவை அத்தனையும் ஆதாரமற்ற பலவீனமான அறிவிப்புகளாகும். அவற்றின் தரத்தை அறிந்து அதனை விட்டு விடுவது தான் அறிவுடைமையாகும்.
ஆதாரப்பூர்வமாக இல்லாத ஹதீஸ்களின் அடிப்படையில் செய்யும் அமல்கள் எந்த ஒரு நன்மையையும் பெற்றுத்தராது என்பதை கருத்தில் கொண்டு இப்படிப்பட்ட அமல்களை விட்டுவிடுவதே சால சிறந்தது.
மார்க்கத்தில் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளின் அடிப்படையில் செய்பவர்களைப்பற்றி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நம்மால் ஏவப்படாத செயலை மார்க்கம் என்ற பெயரில் எவரேனும் செய்வார்களேயானால் அது நிராகரிப்படும். அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) ஆதாரம் : முஸ்லிம்
மேலும் நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்... வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வார்த்தை. நடைமுறையில் சிறந்தது என்னுடைய நடைமுறை. மார்க்கம் என்ற பெயரில் புதிதாக உருவாகும் ஒவ்வொரு செயல்களும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகில் கொண்டு சேர்க்கும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) ஆதாரம் : புஹாரி
ஒருசிலர், நன்மையான காரியம் தானே. செய்தால் என்ள தவறு. அதை ஏன் தடுக்கிறீர்கள்? என்று கேட்கின்றார்கள். அவர்களுக்கான ஒரே பதில், மார்க்கம் என்ற பெயரில் நபி(ஸல்) அவர்கள் எதைக்கொண்டு வந்தார்களோ, எதை போதித்தார்களோ அவை மட்டும்தான் கியாமத் நாள் வரை வரும் அனைத்து மக்களுக்கும். மாறாக புதிதாக சேர்ந்த அனைத்து பழக்கங்களும் பித்அத் ஆகும். இதை பற்றியே நபி(ஸல்) அவர்கள் தன் இறுதி ஹஜ்-ல் ஹஜ்ஜத்துல் விதாவில் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
அவ்வாறு கூறுபவர்களுக்கு மேற்கண்ட நபி(ஸல்) அவர்களின் பொன்மொழியே போதுமானதாகும். மேலும் இத்தகைய சிறப்புவாய்ந்த லைலத்துல் கத்ர் உடைய இரவுகளில் நின்று வணங்கியும்இ குர்ஆன் ஓதியும்இ திக்ரு செய்தும் நம்முடைய அமல்களை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். வீணான பேச்சுக்கள்இ சண்டை சச்சரவுகள் இவற்றை அறவே தவிர்துக்கொண்டு இறைவனிடம் அதிகமதிகம் பாவமன்னிப்பு கோர வேண்டும். ரமளானுடைய நாட்களில் கேட்கவேண்டிய துஆ ஒன்றை நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள்.
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
அல்லாஹும்ம இன்னக்க அஃப்வன் துஹிப்புல் அஃப்வ பஅஃபு அன்னி
பொருள் : யா அல்லாஹ்! நீயே பாவங்களை மன்னிக்கக்கூடயவன். மன்னிப்பதை விரும்புபவன். (ஆகவே) என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக!!
மேற்கண்ட துஆவை நாம் அதிகமதிகம் ஒதி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடி கண்ணியமிக்க ரமளானின் மகத்துவமிக்க லைலத்துல் கத்ர் உடைய இரவுகளை அடைய முயற்சி செய்யவேண்டும். இந்த வருடம்தான் நம்முடைய கடைசி ரமளான் என்ற உள்ளச்சத்தோடு துஆ செய்வோமேயானால், அதுவே நம்முடைய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பதற்கு போதுமாதாகும். அப்படிப்பட்ட நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக!
Posted by
Unknown
Labels:
இஸ்லாம்
|
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.
|