அல்லாஹ்வின் திருப்பெயரால்.... அஸ்ஸலாமு அலைக்கும், அனைத்து முஸ்லிம்கள் கவனத்திற்கு அரசு பணியில் 3.5 சதவிகிதம் முஸ்லிம்களின் கோட்டா நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை. படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவகத்தில் உடனடியாக பதிவு செய்ய சொல்லவும். உங்களுக்கு தெரிந்த அனைத்து படித்த முஸ்லிம்களுக்கு தெரியபடுத்தவும்.
(பத்திரிக்கைகள் மற்றும் செல் மெசேஜ் மற்றும் டிவி மீடியா, இன்டர்நெட், வெப் சைட் மூலம் இந்த செய்தியை தெரியப்படுந்துங்கள்)
மும்பை தாக்குதலுக்கு கசாப் மட்டுமே காரணமா என்ற ரீதியில் வினவு கட்டுரை அமைத்து இருக்கின்றது ..........பழைய ஆறு கட்டுரைகளை மீள் பதிவு செய்துள்ளது .இப்பொழுது அலறும் லதா மங்கேஷ்கர் மற்றும் ஊடகங்கள் 92 இனக்கலவரம் பொழுது அழுக வில்லையே . ஏன் தாஜ் ஹோட்டல் என்றால் ஒரு நீதி சராசரி மக்கள் என்றால் ஊடகங்களுக்கு ஒரு நீதியா. மேலும் குஜராத் கலவரத்திற்கு காரணமான மோடியை ஏன் தூக்கில் போடவில்லை , பாபர் மசூதி இடிப்பை செய்த அத்வானியை என்ன செய்தார்கள் அது எல்லாம் தீவிரவாதம் இல்லையா என்ற கோணத்தில் பல அரசியல் விடயங்களை முன்வைக்கிறது கட்டுரைகள் .சரி தவறு என்று ஒரு புறம் இருந்தாலும் விவாதித்தால் ஆழமாய் போனால் நமக்கே சில விடயங்கள் புரியும் என்பதே உண்மை ஆர்வமுள்ளவர்கள் வினாவில் விவாதியுங்கள் .
என்னை பொறுத்த வரை பக்கத்துக்கு ஊரான விதர்பா என்னும் ஊரில் கடந்த 20 வருடங்களாய் லட்சக்கணக்கான விவசாயிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது எல்லாம் இந்த ஊடகங்கள் என்ன செய்தன . தாஜ் ஹோட்டல் என்ற ஒரே காரணம் முதலாளிகள் கூடும் இடம் என்பதால் இந்த இடத்திற்கு இவ்வளவு மரியாதையா .. கசாப் மட்டுமே இதை செய்திருப்பாரா , மகேஷ் படத் மகனின் பெயர் அடிப்பட்டதே அது என்ன ஆச்சு ????? ஏன் மும்பை குண்டு வெடிப்புகளில் சஞ்சய் தத் பெயர் அடிப்பட்டதே என்ன ஆச்சு ???? கடை நிலையில் இருக்கும் தீவிரவாதி மாட்டுமே கண்ணில் படுவாரா.
சரி இந்தியா இலங்கையில் என்ன பண்ணி கொண்டிருக்கிறது அது தீவிரவாதம் இல்லையா ???? இந்தியாவிற்கு ஏன் இந்த ஜனநாயக வேடம் . சரி மும்பையில் முஸ்லிம்கள் பாதுக்காப்பாய் வாழத்தான் முடிகிறதா???? இதை எல்லாம் ஆராய்ந்து விட்டு தீவிரவாதம் என்னும் விடயத்திற்குள் செல்ல வேண்டும். உண்மையிலேயே தீவிரவாதிகள் யார் , அமெரிக்க ஈராக்கிலும் ஆப்கானிலும் செய்ததே அது தீவிரவாதம் இல்லையா????? ஒசாமாவை ரஷ்யாவை எதிப்பதற்க்காய் வளர்த்தது அமெரிக்க இது உலக வரலாறு...எது தீவிரவாதம் நாமெல்லாம் தேசியம் என்னும் மாயையில் இருக்கிறோமா ??? ஏன் இந்த விடயத்தை மட்டும் பற்றி எழுதும் ஊடகங்கள் விதர்பா என்னும் விடயத்தை விட்டுவிட்டார்கள் ????தாஜ் ஹோடேலில் உயிர் என்றால் அது நாட்டை உலுக்கும் பிரச்சனை என்று சித்தரிக்க படுகிறதா .....
ரியாத் : மக்காவிலிருக்கும் இறையில்லமான மஸ்ஜித்-அல்-ஹராம் பள்ளி மேலதிகமாக 5மில்லியன் பேர் தொழ வசதியாக இருக்கும் படி விரிவாக்கப்படும் எனத் தெரிகிறது .
மக்காவிலுள்ள மஸ்ஜித் -அல்-ஹராம் பள்ளியின் புதிய விரிவாக்கத்திட்டத்திற்கு, இரு புனிதப் பள்ளிகளின் பணியாளரும் சவூதியின் அரசருமான மன்னர் அப்துல்லாஹ் ஆணையிட்டுள்ளார் இதன் மூலம் தற்போது மக்காவில் வழிபடுபவர்களைவிட மேலும் 5மில்லியன்முஸ்லிம்கள் தங்கி வழிபட வசதியானதாக இருக்கும் என்று மக்காவின் நகரத்தந்தை உஸாமா அல் -பர் கருத்துத் தெரிவித்துள்ளார் .
“இது மக்காவின் புனிதப் பள்ளியின் மிகப் பெரும் மேம்பாட்டுத் திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டத்தில் மக்கா பள்ளியின் முகப்புத் தோற்றத்தையும் மாற்றக் கூடிய திட்டமும் அடங்கும் என்று அல்பர் கூறினார். இந்த விரிவாக்கம் மூலம் பள்ளியின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் மேலதிகமான முஸ்லிம்கள் தொழ அதிகமான இடவசதி கிடைக்கும் என்றும் கூறினார் .
மன்னர் அப்துல்லாஹ் இந்த விரிவாக்கப் பணிக்காக ஆணை பிறப்பித்தார் .நகராட்சி மற்றும் ஊரகத்துறை அமைச்சர் இளவரசர் மிதேப், இத்திட்டத்தில் நடைபாதை சுரங்கங்கள் மற்றும் சேவை நிலையங்களும் இருக்கும் என்று கூறினார் .
இந்த அரசாணை மக்கா பெரிய பள்ளியின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதியில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்தும் உத்தரவையும் உள்ளடக்கியுள்ளது. இதற்கென்று அமைக்கப்பட்ட விசேஷ குழுக்கள் இந்த நிலங்களின் விலை மதிப்பீடு செய்யத் துவங்கியுள்ளன என்றும் மிதேப் கூறினார் .
“புதிய சுரங்க நடைபாதைகள் மூலம் பள்ளிவளாகத்தின் வடக்குப் பகுதியை இணைக்கும் கட்டுமானப் பணிகளும் இத்திட்டத்தின் ஓர் அங்கமாக இருக்கும் ” என்றும் அவர் மேலும் கூறினார் .
இப்புனிதப் பள்ளியின் முதல் பெரிய விரிவாக்கப்பணி 1925ல் சவூதி அரேபியாவை நிறுவிய மன்னர் அப்துல் அஜீஸின் உத்தரவின்படி நிறைவேற்றப்பட்டது. 1989ல் அப்போதைய சவூதி மன்னர் ஃபஹத், மஸ்ஜித் அல் ஹராமின் மாபெரும் விரிவாக்கத்தைச் செயல்படுத்தி 1,52,000 சதுர மீட்டர் பரப்பளவிலிருந்த தொழும் இடத்தை 3,56,000 சதுர மீட்டராக அதிகரிக்கச் செய்தார் .
ஷூரா எனும் ஆலோசனைக் குழு மேலதிகமான நிதி ஒதுக்கீடு மூலம் இரு புனிதபள்ளிகளின் தலைமைக்கு உதவி, அதன் மூலம் மேலும் சிறப்பான சேவைகளை புனித உம்ரா மற்றும் ஹஜ் காலத்தில் இப்பள்ளிக்கு வரும் ஹாஜிகளுக்கும் பயணிகளுக்கும் வழங்கவும் மேலும் இவ்வகையில் பயனுள்ள அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளவும் பரிந்துரைத்துள்ளது .
செளதி மன்னர் அப்துல்லாஹ் அவர்களின், புனித மக்காவின் மஸ்ஜித் ஹராம் பள்ளியின் புதிய விரிவாக்கம் மொத்த விரிவாக்கமும் வந்த பின்னர் 5 மில்லியன் மக்கள் ஒரே நேரத்தில் தொழும் வசதி கிடைக்கும் .... மாஷா அல்லாஹ். நினைக்கவே ஆச்சரியம். வீடியோ பார்த்தால் தான் தெரியும்.